Jump to content

"தளிராடும் தூறலில்"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"தளிராடும் தூறலில்"

 

"தளிராடும் தூறலில் தாங்காத மோகத்தில் 
துளிர்விடும் இன்பக் காதல் நினைவில் 
ஒளிவீசும் உன் ஈர்ப்பு விழிகளில் 
எளிமை கொண்ட வீரநடை காண்கிறேன்!   
குளிர் காய்கிறேன் ஈரமாய் நனைகிறேன்!"

 

"எண்ண முடியா உடல் கவர்ச்சியும் 
எண்ணம் புரியா மௌனத்தின் அழகும்
வண்ணம் போடும் ஆகாயத்தின் எழிலும் 
மண்ணில் விழும் துளிகள் சொல்கின்றனவே! 
விண்ணில் உன் முகம் தெரிகிறதே!" 


  
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]  

441317470_10225131057846343_6425866561417554245_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Cnzxg7FgshAQ7kNvgGEDXMZ&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBSK6JnzwWQeSrT_i-OQ0oI8awgZ6fS4QYbwoIN0vBjoA&oe=66404D5E 441404982_10225131057966346_3503881566058659489_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=PBLzmW0y3qwQ7kNvgGDmend&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDCFgZbu0goTc_1Mlu39c28Z4n6-be3iOSmzKA0tzZsog&oe=66405F4D 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, kandiah Thillaivinayagalingam said:

தளிராடும் தூறலில்"

வயதானாலும் இன்னும் வாலிபனாகவே இருக்கிறீர்கள் தில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி   


"எளிமையான வாழ்வில் தூய்மை கண்டு
எதிலும் பற்றற்ற தனிமை கண்டு
எனக்குள் நானே எதையும் அலசி
என்போக்கில் வாழ பழகி விட்டேன்!”


"எழுதத் தொடங்கினேன் மனதில் பட்டதை 
உற்சாகம் தந்தனர் மகிழ்வும் வந்தது
பேரப் பிள்ளைகள் தனிமை போக்க 
ஆறுதல் அடைந்து ஆனந்தம் கண்டேன்!”


"உறங்கி கிடைக்கா மனது ஒருபக்கம் 
உலகம் துறக்கா ஆசை ஒருபக்கம்
பிறந்தநாள் கூட்டுது வயதை ஒருபக்கம்
பிரிந்த உறவுகளை எண்ணுது ஒருபக்கம்!”


"என்னை நினைக்க சிரிப்பு வருகுது
அவளை நினைக்க அழுகை வருகுது
வாழ்வை  நினைக்க ஆத்திரம் வருகுது   
மரணத்தை  நினைக்க மகிழ்ச்சி வருகுது!!”

May be an image of 1 person

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ
நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ

நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ
நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ
கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ
கொண்ட குறியும் தவறி போனவர்கள் எத்தனையோ

நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ
நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ
கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ

சுரை விதைத்த நிலத்தில்
வேறு செடி முளைத்தது
காதல் கதையில் பாதி நடக்கும் போது
திரை விழுந்தது

சுரை விதைத்த நிலத்தில்
வேறு செடி முளைத்தது
காதல் கதையில் பாதி நடக்கும் போது
திரை விழுந்தது
தங்கை உயிர் தானிருந்த இடத்தில் நின்றது
கண்டு அங்கும் இங்கும் இன்றி ஒன்று
மயங்குகின்றது
கண்டு அங்கும் இங்கும் இன்றி ஒன்று
மயங்குகின்றது

நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ
நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ
கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ


இளமை துள்ளி எழுந்து நின்று
காதல் என்றது
குடும்ப நிலமை எதிரில் வந்து நின்று
கடமை என்றது

இளமை துள்ளி எழுந்து நின்று
காதல் என்றது
குடும்ப நிலமை எதிரில் வந்து நின்று
கடமை என்றது
காதல் என்னும் பூ உலர்ந்து கடமை வென்றது
என்றும் மேடு பள்ளம் உள்ளதுதான்
வாழ்க்கை என்பது
என்றும் மேடு பள்ளம் உள்ளதுதான்
வாழ்க்கை என்பது

நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ
நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ
கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ

தனிக் கொடியாய் நடை இழந்து
தவித்தது ஒன்று
அதன் துணைக்கு வந்து துயர் துடைக்க
நின்றது ஒன்று
இதற்க்கிதுதான் என்று முன்பு யார் நினைத்தது
வழி இங்கு வந்து முடியும் என்றால்
யார் தடுப்பது
வழி இங்கு வந்து முடியும் என்றால்
யார் தடுப்பது

நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ
நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ
நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ

10 minutes ago, kandiah Thillaivinayagalingam said:

என்னை நினைக்க சிரிப்பு வருகுது
அவளை நினைக்க அழுகை வருகுது
வாழ்வை  நினைக்க ஆத்திரம் வருகுது   
மரணத்தை  நினைக்க மகிழ்ச்சி வருகுது!!”

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பந்தபாசத்தில் சீர்காழி பாடிய, மாயவநாதனின்  ‘நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ’ என்ற பொருத்தமான பாடலை தேடி எடுத்து பதிந்ததுக்கு மிக்க நன்றி ! 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES 55 நிமிடங்களுக்கு முன்னர் இரான் அதிபரின் வாகனத் தொகுதியில் இடம் பெற்றிருந்த 3 ஹெலிகாப்டர்களில் ஒன்று விபத்தில் சிக்கிவிட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. தரையில் மோதியதாக இரான் அரசு ஊடகம் கூறும் அந்த ஹெலிகாப்டரில் இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி இருந்தாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை. மீட்புக்குழுவினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்திருப்பதாகவும், மோசமான வானிலை காரணமாக அந்த இடத்தை அடைவதில் சிரமம் இருப்பதாகவும் இரான் உள்துறை அமைச்சர் அஹ்மத் வாஹிதி தெரிவித்துள்ளார். கடும் பனிமூட்டம் காரணமாக மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினருடன் இருந்த ஃபார்ஸ் நியூஸ் ஊடகத்தின் செய்தியாளர் தெரிவித்தார்.   அவரது கூற்றுப்படி, மலை மற்றும் மரங்கள் நிறைந்த அந்த பகுதியில் 5 மீட்டர் தொலைவு வரை மட்டுமே வெறும் கண்களால் பார்க்க முடிகிறது. உள்ளது. ஹெலிகாப்டர் தரையில் மோதிய இடம், தப்ரிஸ் நகரத்திலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள வர்செகான் நகருக்கு அருகில் உள்ளது. தப்ரிஸ் நகரம் இரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். உள்ளூர் ஊடக செய்திகளின்படி, அஜர்பைஜானில் கிஸ் கலாசி மற்றும் கோடாஃபரின் அணைகளைத் திறந்து வைத்த பிறகு, தப்ரிஸ் நகரத்தை நோக்கி அதிபர் ரைசி சென்று கொண்டிருந்தார். கடும் மூடுபனி காரணமாக விமானம் தரையிறங்கியிருக்கலாம் அல்லது விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என கருதப்படும் பகுதியில் வெறுங்கண்ணால் மிகக் குறைந்த தொலைவையே பார்க்க முடிவதாக குறைந்துள்ளதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அவசரகால மீட்புக் குழுவினருடன் இருக்கும் ஃபார்ஸ் செய்தி நிறுவனத்தின் நிருபர், தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் விமானத்தை கண்டுபிடிப்பது கடினம் என்று கூறுகிறார். முரண்பட்ட தகவல்கள் என்ன நடந்தது என்பது குறித்து முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், இந்த சம்பவம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக யாரும் உறுதிப்படுத்தவில்லை. இரண்டு ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பாக தங்கள் இலக்கை சென்றடைந்ததாக ஈரானிய செய்தி நிறுவனமான தஸ்னிம் கூறுகிறது. மற்றொரு ஹெலிகாப்டரில் ரைசி மட்டுமல்ல, இரானின் வெளியுறவு அமைச்சரும் பயணித்தார் என்று தஸ்னிம் செய்தி கூறுகிறது. விபத்து நடந்ததாக கூறப்படும் பகுதியில் பனிமூட்டம் நிலவுவதாக ஈரானிய செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. யார் இந்த இப்ராஹிம் ரைசி? இரான் இப்ராஹிம் ரைசி தீவிர பழமைவாத அரசியல் கருத்துகளைக் கொண்ட கடுமையான மத குருவாகக் கருதப்படுகிறார். 63 வயதான ரைசி, 25 வயதில் இரான் தலைநகர் தெஹ்ரானில் துணை வழக்கறிஞரானார். 2014ம் ஆண்டில் இரானின் வழக்கறிஞர் ஜெனரலாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, அவர் அரசு வழக்கறிஞராகவும், பின்னர் மாநில இன்ஸ்பெக்டரேட் அமைப்பின் தலைவராகவும், நீதித்துறையின் முதல் துணைத் தலைவராகவும் பணியாற்றினார். ரைசி 2017ம் ஆண்டில் முதல் முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட்டு அரசியல் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார். அந்த தேர்தலில் அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். 2019 ஆம் ஆண்டில், அயதுல்லா கமேனி அவரை நீதித்துறையின் சக்தி வாய்ந்த பதவிக்கு நியமித்தார். அவர் ஜூன் 2021 இல் இரான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். https://www.bbc.com/tamil/articles/c722ney0e5zo
    • மலையகத்திலும் வாழும் கலை அமைப்பின் செயற்பாட்டை ஆரம்பிக்க உதவுவேன் - நுவரெலியாவில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்  19 MAY, 2024 | 04:03 PM   இலங்கையில் மலையகத்திலும் வாழும் கலை அறக்கட்டளை நிறுவக செயற்பாடுகளை ஆரம்பிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்த வேண்டுகோளுக்கு உதவுவேன் என ஆன்மிக குருவும் அமைதி தலைவரும், வாழும் கலை பயிற்சி அறக்கட்டளை நிலையத்தின் தாபகருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நுவரெலியாவில் இன்று (19) ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவித்தார். இலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்க நுவரெலியா - சீத்தாஎலிய பிரதேசத்தில் அமைந்துள்ள சீதையம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா இன்று (19) ஞாயிற்றுக்கிழமை காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த மஹா கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இந்தியாவில் இருந்து ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு நேற்று சனிக்கிழமை (18) வருகைதந்தார். அவர் இன்று நுவரெலியாவுக்கு விஜயம் செய்து, நுவரெலியா சீதையம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக சாந்தியில் கலந்து சிறப்பித்து ஆசியும் வழங்கினார். அதன் பின் நுவரெலியா “கிறேன்ட் ஹோட்டல்" சுற்றுலா விடுதிக்கு விஜயம் செய்த ரவிசங்கர், அங்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி நீர் வளங்கள் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விசேட சந்திப்பிலும் கலந்துகொண்டார். இந்த சந்திப்பில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸின் தவிசாளருமான மருதபாண்டி ராமேஷ்வரன், பி.இராஜதுரை பாரத் அருள்சாமி உள்ளிட்ட இ.தொ.கா உயர்பீட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். இந்த சந்திப்பில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரிடம் இலங்கையில் மலையக மக்களின் நலத்திட்டத்துக்காக பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. இவ்வாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ரவிசங்கர், வாழும் கலை அறக்கட்டளை அமைப்பின் செயற்பாட்டை மலையகத்திலும் பலப்படுத்த ஒத்துழைப்பு வழங்குவதாகவும், பயிற்சி நிலையங்களை ஆரம்பிக்க இடங்கள் உள்ளிட்ட வசதிகளை எதிர்பார்ப்பதாகவும் இதற்கான உதவிகளை தனது அறக்கட்டளை நிறுவகம் ஊடாக வழங்குவதாகவும் தெரிவித்தார். அத்துடன், ஆன்மிக கற்கை நெறி பாடசாலைகளை ஆரம்பித்தல், வாழும் கலை பயிற்சிகள், பெண்களுக்கான சுய தொழில் ஊக்குவிப்புகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை தனது அறக்கட்டளை ஊடாக செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.  https://www.virakesari.lk/article/183963
    • படக்குறிப்பு,ஆலத்தூர் கல்வெட்டு கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் வணிகத்தில் லாபமே குறிக்கோள் என்றாலும் கூட, அதில் ஈட்டும் செல்வத்தைக் கொண்டு நற்காரியங்கள் பல செய்பவர்கள் உண்டு. அந்த வகையில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் வாழ்ந்த வணிகர்கள் அல்லது வணிகர்கள் சேர்ந்த குழுக்கள் பல இடங்களில் ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளை உருவாக்கியிருப்பதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. வருமானத்தில் ஒரு பகுதியை அறப்பணிகள் செய்ய தனியே கணக்கு எழுதி, சேமித்து வைக்கும் வழக்கம் அன்றைய தமிழக வணிகர்களிடம் இருந்துள்ளதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். சோழர்கள் ஆட்சியில் வணிகர்கள் செய்த அறச் செயல்கள் குறித்து இக்கட்டுரையில் விரிவாக காண்போம். ‘மடைத்தூண் சரி செய்தல் மற்றும் ஏரிக் கரையை உயர்த்துதல்’ படக்குறிப்பு,பரிகம் கிராமக் கல்வெட்டு. வணிகர்களால் உருவாக்கப்பட்ட, பராமரிக்கப்பட்ட நீர்நிலைகள் குறித்து பிபிசி தமிழிடம் இந்திய தொல்லியல் துறையின் தமிழ் கல்வெட்டுகள் துறைத் தலைவரும், துணை கண்காணிப்பாளருமான முனைவர் வஞ்சியூர்.க.பன்னீர்செல்வம் விவரித்தார் . புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டத்தில் உள்ள பிலிப்பட்டி ஊரில் முதலாம் இராஜராஜ சோழர் கால (கி.பி. 984) கல்வெட்டில் ஐநூற்றுவர்கள் மற்றும் வளஞ்சியர் முதலிய வணிகக் குழுவினர் ஊரணி மடைத் தூணில் பழுதை சரி செய்து கொடுத்தது பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார். “முதலாம் இராஜராஜ சோழன் ஆட்சியின் நான்காம் ஆண்டில் (கி.பி. 989) குளித்தலை வட்டத்தில் உள்ள நங்கவரம் என்ற ஊரில் உள்ள குளத்தில் ஓடம் பயன்படுத்துவதற்கும், ஏரியில் மண்ணெடுத்து கரையை பலப்படுத்துவதற்கும் வணிகர்கள் உதவி செய்துள்ளதை கல்வெட்டு வாசகங்கள் தெரிவிக்கின்றன” என்று கூறியதுடன் அதனை அவர் விளக்கவும் செய்தார். “‘உறையூர் கூற்றத்தில் உள்ள அறிஞ்சிகை சதிர்வேதி மங்கலத்து சபையோர்கள் குளத்தில் ஓடம் இயங்கவும், ஏரியில் 140 கூடை மண் வீதம் நான்கு நடை வண்டியில் நாள்தோறும் கரையில் கொட்டவும், ஓடத்திலிருந்து மண்ணை எடுத்து ஏரிக்கரையில் கொட்டும் வேலைக்கு 6 நபர்களுக்கும், ஓடம் பழுதாகாமல் பார்த்துக் கொள்கின்ற தச்சனுக்கும் நிலத்தை விற்று கொடுத்து ஊரின் நீர் நிலைகளையும் பாதுகாத்துள்ளனர் என்று கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது” என்கிறார் பன்னீர்செல்வம்.   ‘குளங்களை உருவாக்கிய வணிகர்கள்’ படக்குறிப்பு,இந்திய தொல்லியல் துறையின் தமிழ் கல்வெட்டுகள் துறைத் தலைவரும், துணை கண்காணிப்பாளருமான முனைவர் வஞ்சியூர்.க.பன்னீர்செல்வம். வணிகர்கள், ஏரிகள் மட்டுமல்லாது பல குளங்களையும் வெட்டி, சீரமைத்து கொடுத்துள்ளனர் என்று கூறுகிறார் துணை கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம். “அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள விக்கிரமங்கலம் என்ற ஊரில் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சியின் 23ஆம் ஆண்டு (கி.பி.1201) கல்வெட்டில் 'விக்கிரம சோழபுரத்து நகரத்தார்கள் கிடாரங் கொண்ட சோழப் பெருந்தெருவில் முன்னர் வெட்டி வைத்துள்ள இரண்டு குளங்களையும் ஊர் பொதுவானதாக மாற்றி அமைத்து கொடுத்தார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது. மூன்றாம் ராஜேந்திர சோழரின் 7ஆம் ஆண்டு ஆட்சி காலத்தில் காணப்படும் கல்வெட்டு (கி.பி. 1253), இராஜராஜ வளநாட்டில் உள்ள மீமலை நாட்டு உடையார் திருவிங்கோயிலுடைய நாயனார் கோவில் சிவ தொண்டர்கள் திருநீற்றுச் சோழபுரத்து வியாபாரி திட்டைச்சேரி உடையான் தேவன் பொன்னம்பல சிலைச்செட்டி என்பவர் தேவதான நிலத்தை சிவனின் கணக்கர் பெற்றுக் கொண்டுள்ளதைக் குறிப்பிடுகிறது” என்று கூறினார். மேலும், “‘திருவிங்கோயிலுடைய ஊரில் உள்ள வெட்டி பெருவழியில் குளம் மற்றும் கிணற்றையும் வெட்டி வைத்து பொது காரியம் செய்து கொடுத்துள்ளதையும் இவற்றை பாதுகாப்பவர்களுக்கும் ஜீவனத்திற்காக இறையிலி நிலம் ஒரு வேலி மற்றும் காசு 2100ஆம் கொடுத்துள்ளதாகவும் கல்வெட்டு செய்தி உள்ளது” என்று கூறினார் துணை கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம். பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம் அருகே நன்னை என்ற ஊரின் ஏரியில் காணப்படும் தனிக் கல்லில் பொறிக்கப்பட்டுள்ள மூன்றாம் ஜடா வர்மர் சுந்தரபாண்டியன் 18ஆம் ஆட்சியாண்டு (கி.பி.1321) கல்வெட்டில் வணிகர்கள் குளம் வெட்டி கொடுத்துள்ளது பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். “விருத்தாசலத்தில் கி.பி‌ 1714ஆம் ஆண்டு கல்வெட்டில் சென்னப்பட்டணம் பற்றிய செய்தி வந்துள்ளது. சென்னப்பட்டணம் ஆயிரம் நகரத்தாரில் பெரியந்தி மகரிஷி கோத்திரத்தைச் சார்ந்த ராகவ செட்டியார், இவருடைய குமாரர் தியாகப்ப செட்டியார், இவருடைய குமாரர் தியாகம், வெங்கப்படி செட்டியார் இவருடைய தம்பி காளத்திச் செட்டியார் ஆகியோர் திரவியம் (பொருள்) கொடுத்து மணிமுத்தா நதியில் படித்துறை ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளனர். இது இப்போதும் உபயோகத்தில் உள்ளது. இது பிற்காலத்தை சேர்ந்தது என்றாலும் வணிகர்கள் செய்த நற்பணிகளில் இதுவும் முக்கியமானது. இதுபோன்று வணிகர்களின் நற்பணிகள் குறித்த பல்வேறு கல்வெட்டுகள் தமிழக முழுவதும் இருக்கிறது” என்று கூறினார் முனைவர் வஞ்சியூர்.க.பன்னீர்செல்வம்.   படக்குறிப்பு,பரிகம் கிராமத்தில் உள்ள கோவில். சோழர்கள் ஆட்சியில் வணிகர்கள் சோழர்கள் ஆட்சியில் வாழ்ந்த வணிகர்கள் செய்த சமூக பணிகள் குறித்து விளக்கினார் விழுப்புரம் பேரறிஞர் அண்ணா கலைக்கல்லூரி பேராசிரியர் ரமேஷ். “கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள பரிகம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் முன்பாக உள்ள பலகை கல்லில் முதலாம் இராஜ ராஜ சோழனின் கல்வெட்டு காணப்படுகிறது. இந்த கல்வெட்டின் முன்புறம் சிதைந்து உள்ளது என்ற போதிலும் பின்புற கல்வெட்டில் வார்த்தைகள் மிகத் தெளிவாக உள்ளன” என்று கூறிய அவர் அதைப் படித்துக் காட்டி அதன் பொருளை நமக்கு விளக்கினார். படக்குறிப்பு,பரிகம் கிராமக் கல்வெட்டு. “‘ஸ்வஸ்தி ஸ்ரீ தாமபாடியான நரசிங்க பேரில்…’ எனத் தொடங்கும் அந்த கல்வெட்டு ராஜ ராஜ சோழன் ஆட்சியின் 17ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்டது. கல்வெட்டின் பின்புறம் உள்ள செய்தியானது தாமப்படி என்ற பூர்வீக பெயரைக் கொண்ட நரசிங்க பேரிளமை நல்லூரில் (அதாவது தற்போதைய பரிகம் கிராமத்தில்) ஒலோக விடங்கன் கருணாகரன் என்று அழைக்கப்படும் திருவையோத்தி மயிலாட்டி என்ற வணிகன் ‘வீர சோழன் ஏரி’ என்று அழைக்கப்படும் சீலக பேரேரியை வெட்டி தந்துள்ளது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. (தற்போது பரிகம் கிராமத்தில் வடக்கே உள்ள ஏரி) கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆலத்தூர் கிராமத்தின் உள்ள ஏரியின் ஓடிப் பகுதிக்கு அருகில் உள்ள 1294ஆம் ஆண்டு விஜய நகர மன்னர் இரண்டாம் தேவ மஹாராயரின் கட்டளைப்படி ஆலத்துரை சேர்ந்த அகமுடையான் மகன் பள்ள கரையான் என்பவர் ஆலத்தூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர பாப்பு கால் ஓடை ஒன்றை வெட்டி சீரமைத்து தானமாக தந்ததை பற்றியும் இந்தக் கல்வெட்டு தெளிவாக விளக்குகின்றது. தற்பொழுதும் இந்த ஓடை வழியாகத் தான் தண்ணீர் வருகின்றது” என்று கூறினார் பேராசிரியர் ரமேஷ். தொடர்ந்து பேசிய அவர், “திருவிடைமருதூர் கோவிலில் 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, ‘திருப்பாதாள கவறைசெட்டி.. திருநாவுக்கரையன் குளங்கல்ல…’ எனத் தொடங்கும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள திருநாவுக்கரசர் என்ற வணிகர் தான் குளம் தூர்வாரும் பணியைச் செய்துள்ளார்” என்று தெரிவித்தார்.   வணிகர்கள் குறித்த புறநானூற்றுப் பாடல்கள் படக்குறிப்பு,விழுப்புரம் பேரறிஞர் அண்ணா கலைக்கல்லூரி பேராசிரியர் ரமேஷ். சங்க காலத்தில் இருந்தே வணிகர்கள் ஏரி, குளங்களை வெட்டி சமூகத்திற்கு அர்ப்பணித்ததை பல்வேறு தமிழ் இலக்கியப் பாடல்கள் தெரிவிக்கின்றன என்று கூறிய பேராசிரியர் ரமேஷ், அதைப் பற்றி விவரித்தார். “அதில் புறநானூற்றில் 134வது பாடல் புலவர் உறையூர் ஏணிச்சேரி முட மோசியார் என்பவரால் எழுதப்பட்டதாகும். இது கிமு மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த பாடலாகும். ‘இம்மை செய்தது மறுமைக்கும் ஆம் எனும், அறவிலை வணிகன். ஆ அய் அல்லன்…’ எனத் தொடங்கும் அப்பாடல் வணிகர்களின் அறச்செயலை பற்றி தெரிவிக்கின்றது. அதாவது 'இந்தப் பிறவியில் பிறருக்கு நலன் செய்தால் மேல் உலகில் அல்லது அடுத்த பிறப்பில் நன்மை கிடைக்கும் என எதிர்பார்த்து நன்மை செய்யும் வணிகன் அல்ல நான். நன்மை செய்வதே எமது அறம்’ என்று அந்தப் பாடலில் கூறப்பட்டுள்ளது. அக்காலத்தில் வணிகர்கள் நன்மை செய்வதை அறமாகவே உணர்ந்து வாழ்ந்ததையும் இந்த புறநானூற்று பாடல் தெரிவிக்கிறது. சோழர், பாண்டியர் காலத்தில் வணிகர்கள் அறம் சார்ந்த பல்வேறு பணிகளையும் செய்துள்ளனர் என்பது இதிலிருந்து தெரிகிறது” என்கிறார் பேராசிரியர் ரமேஷ். https://www.bbc.com/tamil/articles/cqqq3rvl0r1o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.