Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் நியமனத்துக்கு எதிராக மேன்முறையீடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
08 MAY, 2024 | 11:30 AM
image

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் நியமனத்தை எதிர்த்து ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக கனிஷ்க விஜேரத்ன நியமிக்கப்பட்டமை ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் விதிகளை மீறும் செயல் என அடிப்படை உரிமைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நியமனம் தன்னிச்சையானது என்றும், நடைமுறை உத்தரவுக்கு எதிரானது என்றும் மேன்முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த நியமனத்தை நீதிமன்றம் செல்லுபடியற்றது என அறிவிக்க வேண்டும் எனவும் விஜேரத்னவை பணிப்பாளர் நாயகம் பதவியில் இருந்து நீக்கி, விசாரணை முடியும் வரை அவருக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. 

தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள், கூட்டத்தின் நிமிடங்கள், தேர்வுக்கான காரணங்கள் ஆகியவற்றை அரசியலமைப்புப் பேரவை வெளியிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக கனிஷ்க விஜேரத்னவை நியமித்தமையை எதிர்த்து ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவை (SC FR 110/2024) தாக்கல் செய்துள்ளது.

2020 ஜனவரி முதல் அதன் பணிப்பாளர் நாயகமாக முன்னர் பணியாற்றிய விஜேரத்ன, புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டம் இயற்றப்பட்ட பின்னர் கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி மீண்டும் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

விஜேரத்னவின் நியமனம் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை மீறுவதாகவும், நடைமுறை நியாயம்  மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததாகவும் TISLஇன் மனு வாதிடுகிறது.

இந்த நியமனத்தை இரத்து செய்யுமாறும் அல்லது விஜேரத்னவை நீக்கிவிட்டு சட்டத்துக்கு  உட்பட்டு புதிய பணிப்பாளர் நாயகம் ஒருவரை நியமிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும் TISL உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

மேலும், விஜேரத்ன இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாவதற்குரிய அனைத்து சட்ட ரீதியான நிபந்தனைகளையும் தகுதிகளையும் பூர்த்தி செய்யவில்லை என்றும் இம்மனு வாதிடுகிறது.

மனுவில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள், அரசியலமைப்புப் பேரவையின் பொதுச் செயலாளர், தலைவர், ஆணையாளர்கள், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பணிப்பாளர் நாயகம் பதவிக்குப் பட்டியலிடப்பட்ட வேட்பாளர்கள் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

பொதுநலன் கருதி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, நமது நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

இந்த மனுவின் விசாரணை மற்றும் இறுதித் தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், பணிப்பாளர் நாயகமாக விஜேரத்ன செயற்படுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு TISL உயர் நீதிமன்றத்திடம் கோருகிறது.

இவ்வாறான முறையற்ற நியமனங்களைத் தொடர அனுமதிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் நற்பெயருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை TISL நிறுவனமானது சுட்டிக்காட்டியுள்ளது.

நடைமுறைச் சீர்கேடுகள் தடையின்றி நீடிக்க அனுமதிப்பதன் மூலம் சாத்தியமான பொருளாதார மற்றும் நற்பெயர் சார் விளைவுகளை குறிப்பிடுகிறது. இந்தப் பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பதற்கும், தவறுகளை ஒழுங்குபடுத்துவதற்கும், திருத்துவதற்கும் தவறினால், ஊழல் எதிர்ப்பு முயற்சிகளின் நம்பகத்தன்மை, பொருளாதாரம் மற்றும் சர்வதேச நற்பெயரை எதிர்மறையாக பாதிக்கும் என்று மனு வலியுறுத்துகிறது.

ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனமானது சட்டப்பூர்வ தீர்வுகளை தேடுவதோடு, பணிப்பாளர் நாயகம் பதவிக்குரிய எதிர்கால நியமனங்களுக்கான, தெளிவான மற்றும் வெளிப்படையான வழிகாட்டுதல்களை நிறுவுமாறு அரசியலமைப்புப் பேரவை மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவை கோருகிறது.

https://www.virakesari.lk/article/182948

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.