Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13 MAY, 2024 | 10:28 AM
image

சஷி தரூர் 

இந்திய பொதுத்தேர்தல் அதன் இரண்டாவது மாதத்தில் பிரவேசித்திருக்கும் நிலையில், மிகவும் சம்பிரதாயபூர்வமான எதிர்பார்ப்புகள் தலைகீழாகப் போய்விட்டன. பெரிய மாறுதல் எதுவும் சாத்தியமில்லை என்று நம்புகின்ற அறிஞர்கள் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் வசதியான வெற்றியைப் பெறுவார் என்று நீண்ட நாட்களுக்கு முன்னரே முடிவெடுத்துவிட்டார்கள். ஆனால், ஏழு கட்ட தேர்தலில் ஏற்கெனவே இரு கட்டங்கள் நிறைவடைந்து, சுமார் 190 தொகுதிகளில் மக்கள் தங்கள் வாக்குகளை ஏற்கெனவே பதிவுசெய்துவிட்ட நிலையில் இனிமேலும் நிலைவரம் அவ்வளவு சுலபமானதாக தோன்றவில்லை.

வாக்களித்துவிட்டு வாக்குச்சாவடிகளில் இருந்து வெளியே வருகின்ற மக்களிடம் கருத்துக்கேட்டு அதன் அடிப்படையில் வெளியிடப்படுகின்ற கணிப்புகளை (Exit Polls) சகல ஏழு கட்ட வாக்குப்பதிவுகளும் நிறைவடையும் வரை வெளியிடக்கூடாது என்று இந்தியாவின் சுயாதீனமான தேர்தல்கள் ஆணைக்குழு தடைசெய்திருக்கிறது. (இறுதிக்கட்ட  வாக்கெடுப்பு ஜூன் முதலாம் திகதி நடைபெறவிருக்கிறது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4 வெளியாகும்) ஆனால், பாரதிய ஜனதா கட்சி நினைக்கின்ற மாதிரி நிலைவரம் இருக்கப் போவதில்லை என்பதை வாக்காளர்களின் உணர்வுகள் பற்றிய உத்தியோகபூர்வமற்ற மதிப்பீடுகள் உறுதியாக வெளிப்படுத்துகின்றன. மூன்றாவது தடவையாகவும் பாரதிய ஜனாதாவுக்கு வாக்களிப்பதற்கான போதுமான காரணங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை என்றே தோன்றுகிறது.

தொழில் வாய்ப்புக்களைப் பெருக்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் 2014ஆம் ஆண்டில் மோடியைப்  பதவிக்கு கொண்டு வந்தவர்களுக்கு மீண்டும் அவருககு வாக்களிப்பதற்கு காரணம் இல்லை. மோடியின் தலைமைத்துவத்தின் கீழ் வேலையில்லாத் திண்டாட்டம் கணிசமான அளவுக்கு அதிகரித்திருக்கிறது. மிகவும் அண்மையில் வேலையில்லாத் திண்டாட்டத்தில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்தாக தோன்றுகின்ற போதிலும், உண்மையான வேலையில்லாத் திண்டாட்ட வீதம் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் காட்டுகின்றதையும் விட மிகவும் அதிகம் என்று நம்புவதற்கு போதிய காரணங்கள் இருக்கின்றன.

மேலும், 2014ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியர்களில் 80 சதவீதமானவர்களின் வருமானங்கள் வீழ்ச்சியடைந்திருப்பதுடன் குடும்பங்களின் கொள்வனவுச் சக்தியும் சேமிப்புகளும் தகர்ந்து போயிருக்கின்றன. தங்களது நல்வாழ்வை அரசாங்கம் போதுமானளவுக்கு பாதுகாக்கவில்லை என்று பலர் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

கடுமுயற்சி எடுத்து தன்னைச் சுற்றி கட்டியெழுப்பியிருககும் தனிநபர் வழிபாடு காரணமாக மோடி மிகுந்த செல்வாக்கு கொண்டவராக விளங்குகிறார் என்பது உண்மையே. ஆனால், அவரது வேட்பாளர்களை ஆதரிப்பதில் மக்கள் அதிகளவு ஆர்வம் காட்டுவதாக இல்லை. மோடியின் நடத்தை அவரின் அச்சவுணர்வு அதிகரிப்பதை காட்டுகிறது. முஸ்லிம்களுக்கு எதிரான அவரின் எச்சரிக்கைகள் இப்போது நேரடித் தாக்குதல்களாக தீவிரமடைந்திருக்கின்றன.

எதிர்க்கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் மீதான தாக்குதல்களையும் மோடி கடுமையாக தீவிரப்படுத்தியிருக்கிறார். காங்கிரஸின் தேர்தல் விஞ்ஞாபனம் முஸ்லிம் லீக்கின் முத்திரையைக் கொண்டிக்கிறது என்று அவர் கூறுகிறார். இந்துக்களின் தனிப்பட்ட சொத்துக்களை காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் முஸ்லிமக்களுக்கு பிரித்துக்கொடுத்துவிடும் என்று கூட கடந்தமாதம் தேர்தல் பிரசாரக்கூட்டம் ஒன்றில் அவர் கூறினார். 

காங்கிரஸின் தேர்தல் விஞ்ஞாபனத்தை மோடி முழுவதுமான தவறான முறையில் வியாக்கியானம் செய்கின்றபோதிலும், உண்மையில் அந்த விஞ்ஞாபனத்தில் முஸ்லிம் என்ற சொல்லே கிடையாது. சொத்துப்பகிர்வு என்று அதில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவும் இல்லை. முஸ்லிம்களை இந்தியர்கள் அல்ல ஊடுருவல்காரர்கள் என்றும் அதிகமாகப் பிள்ளைகளைப் பெறுபவர்கள் என்றும் அவர் இகழ்ச்சி செய்கிறார். ஆத்திரமூட்டும் வகையிலான மோடியின் பேச்சக்கள் அவரின் பதவிக்கு இழிவை ஏற்படுத்துகின்றன. ஒரு பிரதமர் நாட்டின் சகல குடிமக்களுக்கும் சேவை செய்பவராக இருக்கவேண்டும். ஆனால் அவர் இந்தியாவின் 20 கோடி முஸ்லிம்களையும் வெள்ப்படையாக அவமதிக்கிறார். 

பாரதிய ஜனதாவின் வேறு தலைவர்களும் மக்கள் மத்தியில் அச்சமூட்டும் பிரசாரங்களையே செய்கிறார்கள். இது அந்த கட்சியினர் மத்தியில் அதிரித்துவரும் நம்பிக்கையின்மையை வெளிக்காட்டுகிறது. பாரதிய ஜனதா தோற்கடிக்கப்பட்டால் ஷரியா சட்டம் இந்தியாவுக்கு  வரும் என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சை உதாரணமாகக் கூறலாம்.

மத அடிப்படையில் வாக்காளர்களை துருவமயப்படுத்தும் முயற்சி பாரதிய ஜனதாவினால் ஏற்கெனவே பரீட்சித்துப் பார்க்கப்பட்ட ஒன்றுதான். அதன் தர்க்கம் எளிதானது. அதாவது முஸ்லிம்களை பிசாசுகளாகக் காட்டினால் இந்திய சனத்தொகையில் 80 சதவீதத்தினராக இருக்கும் இந்துக்களில் அரைவாசிப் பேரையாவது அவர்களின் மற்றைய வேறுபாடுகளை  மறக்கச்செய்து பாரதிய ஜனதாவுக்கு  வாக்களிக்கச் செய்து இன்னொரு தேர்தல் வெற்றியைப் பெறலாம் என்பதே.

ஆனால் இந்த தந்திரோபாயம் முற்றுமுழுதாகப் பயன்தரக்கூடியதல்ல. அதனால் பாரதிய ஜனதா  பெரும் எண்ணிக்கையான எதிரணி அரசியல்வாதிகளை தனது அணியில் சேர்த்துக்கொள்கிறது. ஊழல் குற்ச்சாட்டுகளுக்கு உள்ளான எதிரணி அரசியல்வாதிகளை மிரட்டி தன்பக்கம் பாரதிய ஜனதா பலவந்தமாக இழுக்கிறது. அவர்களும் வளக்குகளில் சிக்குவதை தவிர்ப்பதற்காக  பக்கம் மாறிவிடுகிறார்கள். பாரதிய ஜனதா கறைபடிந்த அரசியல்வாதிகளை சுத்தப்படுத்தும் ஒரு சலவை இயந்திரம் என்பது இப்போது தேசிய அளவில் ஒரு பகிடியாக மாறிவிட்டது.

பல்வேறு எதிர்ககட்சிகளுடன் கூட்டணிகளை அமைத்துக் கொள்வதிலும் பாரதிய ஜனதா முனைப்புக் காட்டுகிறது. அவற்றில் ஒன்று ஆந்திரப் பிரதேசத்தின் தெலுங்கு தேசம் கட்சி. அந்த கட்சி சில வருடங்களுக்கு முன்னர் மோடி அரசாங்கத்துக்கு எதிராக ரோக்சபாவில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவந்தது. அதன் தலைவர்கள் மோடியை மிகவும் கடுமையாகத் தாக்கிப் பேசினார்கள். இப்போது திடீரென்று அதுவெல்லாம்  மறக்கப்பட்டுவிட்டது. 

கிழக்கு இந்திய மாநிலமான ஒடிசாவில் பிஜு ஜனதாதள் கட்சியையும் மேற்கு இந்திய மாநிலமான பஞ்சாபில் அகாலி தள் கட்சியையும் தன்பக்கம் இழுக்க பாரதிய ஜனதா மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. அந்த இரு கட்சிகளும் முன்னைய கூட்டரசாங்கத்தில் பாரதிய ஜனாவை கைவிட்டு வெளியேறியவை. பாரதிய ஜனதாவின் அழைப்பை அவை உதாசீனம் செய்துவிட்டன.

கட்சிகளை தன்பக்கம் இழுக்கும் முயற்சிகள் பயனளிக்காத பட்சத்தில் அவற்றை வெளிப்படையாக அங்சுறுத்தும் காரியங்களில் பாரதிய ஜனதா இறங்கிவிடுகிறது. டில்லியிலும் பசஞ்சாபிலும் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போதைய விசாரணை ஒன்றின் அங்கமாக  நள்ளிரவில் கைதுசெய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார்.  கெஜ்ரிவாலுக்கு அடுத்தபடியாக உள்ள தலைவர் ஒரு வருடத்துக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். ஆனால், அவருக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் இதுவரை சுமத்தப்படவில்லை. 

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, தேர்தல் பிரசாரங்களின் தொடக்கக் கட்டத்தில் அதன் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. ராகுல் காந்தியின் ஹெலிகொப்டரில் சட்டவிரோத  பொருட்கள் இருப்பதாகக் கூறி அதை சோதனை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இவையெல்லாம்  பரந்தளவு மக்கள் ஆதரவுடன் வெற்றிபெறும் நம்பிக்கையைக் கொண்டிருக்கும் ஒரு கட்சி செய்கின்ற காரியங்கள் அல்ல. மாறாக, வெற்றி தனது கையைவிட்டு நழுவுகிறது என்று அஞ்சுகின்ற கட்சி செய்யக்கூடிய காரியங்கள்.

2019 பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா ஆறு மாநிலங்களில் சகல லோக்சபா தொகுதிகளிலும் மூன்று மாநிலங்களில் ஒரு  தொகுதியைத் தவிர ஏனைய தொகுதிகளிலும் இரு மாநிலங்களில் இரு தொகுதிகளைத் தவிர எனைய தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. இந்த மாநிலங்கள் சகலவற்றிலும் அந்த கட்சி பின்னடைவைக் காணக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இந்த ஒவ்வொரு மாநிலத்திலும் சொற்ப எண்ணிக்கையான தெ்குதிகளில் தோல்வியடைந்தாலும் கூட, ஒட்டுமொத்தத்தில் பெரும்பான்மையை இழக்கவேண்டிவரும்.  அதற்கான நல்ல வாய்ப்பு இருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, 2019ஆம் ஆண்டில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு ஓரிரு மாதங்கள் முன்னதாக இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் இராணுவத்தின்  வாகனத் தொடரணி மீது ஜாய்ஷ் ஈ முஹமட்  என்ற பாகிஸ்தானில் இருந்து இயங்கும் இஸ்லாமியத்  இயக்கம் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல் பாரதிய ஜனதாவுக்கு கைகொடுத்தது.

இந்த தடவை இந்திய வாக்காளர்களை திசைதிருப்பக்கூடிய எந்தவொரு இல்லாத நிலையில் கடந்த தேர்தலில் பெற்றதைப் போன்ற ஒரு வெற்றியை மீண்டும் சாதிக்கமுடியும் என்று பாரதிய ஜனதா நம்பிக்கை வைக்கமுடியாது.

பாரதிய ஜனதா வழங்கிய வாக்குறுதிகளைக் காப்பாற்றாததால் மக்கள் பெரும் விரக்தியில் இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையை எதிர்க்கட்சிகள் வாய்ப்பாகப் பயன்படுத்துகின்றன. மாற்றத்துக்கான அறிகுறிகள் தெரிகின்றன.

https://www.virakesari.lk/article/183377

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் மோடிஜிதான். வட இந்திய மோட்டுக்குடிமக்கள் மோடிஜிக்குத்தான் வாக்காளிப்பார்கள். இம்முறை அதிகப் பெரும்பான்மை இருக்காது!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.