Jump to content

விடுதலைப் புலிகள் படுகொலை செய்த சிங்களவர்களை சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் அக்னெஸ் ஏன் நினைவுகூரவில்லை ? - சரத் வீரசேகர கேள்வி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: DIGITAL DESK 7   22 MAY, 2024 | 03:43 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

விடுதலை புலிகள் போராளிகளை நினைவுகூர்ந்த  சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் அக்னெஸ் கலமார்ட் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட சிங்களவர்களையும், இராணுவத்தினரையும் ஏன் நினைவுகூரவில்லை.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வியன்னா ஒப்பந்தத்துக்கு அப்பாற்பட்டு செயற்படுகிறார் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற எதிர்க்கட்சியினர் கொண்டு வந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

விடுதலை புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்து 15 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்துக்கு எதிரான செயற்பாடுகளும் தீவிரமடைந்துள்ளன.

இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக  அமெரிக்கா கொண்டு வந்த 30/1 பிரேரணைக்கு நல்லாட்சி அரசாங்கம் இணையனுசரனை வழங்கியது. இதன் பின்னரே இராணுவத்துக்கு எதிராக நெருக்கடிகள்  அதிகரித்தன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் 30/1 பிரேரணையில் இருந்து விலகிய போதும்  அப்பிரேரணையின் உள்ளடக்கங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கை இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாடியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் காரியாலயம் குறிப்பிட்டுள்ளமை அவதானத்துக்குரியது. இவ்விடயம் குறித்து எதிர்க்கட்சியின் நிலைப்பாடு என்ன?

விடுதலை புலிகள் போராளிகள் தற்போது பகிரங்கமாக அனுஷ்டிக்கப்படுகிறார்கள். கடந்த வாரம் இடம்பெற்ற நினைவேந்தலில் பலர் பங்குப்பற்றியிருந்தார்கள்.

வெள்ளையர்களும் கலந்துக் கொண்டார்கள். சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் விடுதலை புலிகள்  போராளிகளை நினைவு கூர்ந்தார்.

இந்த யுத்தத்தில் சிங்களவர்களும், இராணுவத்தினரும் விடுதலை புலிகளால் படுகொலை செய்யப்பட்டார்கள். சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் ஏன் இவர்களை நினைவுகூரவில்லை?

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடுகிறார். வியன்னா ஒப்பந்தத்துக்கு அப்பாற்பட்டு செயற்படுகிறார்.

யாழ்ப்பாணத்துக்கு சென்று விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை சந்தித்து சுயநிர்ணயம் பற்றி பேசியுள்ளார். ஆகவே இவரது செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/184234

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகிலே இனவாதம் கக்கி அழிந்த இனம் என்றால் இந்த மோட்டு சிங்கள கூட்டம் தான் .

Whats-App-Image-2024-05-22-at-7-48-30-PM

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விடுதலைப் புலிகள் (சிங்கள) மக்களை குறிப்பிட்ட இடத்துக்கு செல்லுங்கள், அங்கு பாதுகாப்பு உள்ளது, தாம் தாக்குதல் நடத்தமாட்டோம் என்று அறிவித்து, சிங்கள  மக்கள் அந்த இடத்தில கூடிய பின் ஒரு போதும் தாக்கவில்லை.

விடுதலைப் புலிகள் தாக்கிய இடத்தில சிங்கள  மக்கள் இருந்து கொல்லப்பட்டு இருந்தால், அது யுத்தத்தின் இயற்கையான இழப்பு. திட்டமிட்ட (இனப்) படுகொலை இல்லை.

ஆனாலும், சிங்கள அரசு நடத்திய வழிந்த ஆயுத இனப்படுகொலையையும், நடத்தி வரும் கட்டமைப்பு இனப்படுகொலையையும் , சிங்கள மக்களின் இழப்புக்கும் ஒப்பீடு இல்லை 

முதலில் சிங்கள மக்களின் இழப்பை சிங்கள அரசோ, எந்த பொது அமைப்போ  நினைவு கூரவில்லை - ஏனெனில் சிங்கள அரசுக்கோ, சிங்கள இனத்துக்கோ சிங்கள மக்களின் இழப்பு எந்த வித (சமூகம், குழுமம், இனம், மக்கள் போன்ற )  பரிமாணமும், பரிணாமும்  இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த கிறுக்கனுக்கு சொல்லுங்கோ பச்சை கொலையாளிகள் உங்கட கோழை சிங்கள ஆமிதான் . புலிகள் எப்பவுமே கொன்றது சிங்கள ஆமியை மட்டும் தான் , அது போர் தர்மம் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விடுதலைப்புலிகள் சும்மா சிங்களவர்களைக் கொல்லவில்லை. ஒன்றில் ஊர்காவல் படை என்ற பெயரில் ஆக்கிரமித்து நின்ற சிங்களவர்களை தாக்கினார்கள். நில ஆக்கிரமிப்போடு வந்த சிங்களவர்களை தாக்கினார்கள்.. சிங்கள முப்படை பொலிஸ் ஆக்கிரமிப்பை எதிர்த்து அவர்களை தாக்கினார்கள்.

தென்னிலங்கை தாக்குதல் சம்பவங்கள் வடக்குக் கிழக்கில் சிங்களப் படைகளும் ஊர்காவற்படையும் செய்த படுகொலைகளின் பழிவாங்கல் மட்டுமே.

சிங்களப் படைகள் 2 இலட்சம் தமிழர்களைக் கொன்றிருந்தால்.. புலிகள் ஒரு 2000 சிங்களவர்களை தான் கொன்றிருப்பார்கள். அதிலும் பல சிங்கள பெளத்த ஆக்கிரமிப்புக்கு எதிரான தாக்குதல்களில்.. தவிர்க்க முடியாமல் நிகழ்ந்த இழப்புக்கள். 

இதற்கும் திட்டமிட்டு இன அழிப்பு நோக்கில் சிங்கள பெளத்த பேரினவாத அரசுகளும் படைகளும் கொன்ற தமிழர்கள்..ஈடாக மாட்டார்கள். 

  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.