Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"கனிந்த காதலி இறந்தாலும் நினைப்பில் வாழலாம்! முறிந்த காதலியை நினைக்கவும் முடியாது! மறக்கவும் முடியாது!"
 
 
பழத்தின் சதைகளுக்குள்ளே விதைகள் இருப்பது போலே, கனிந்த இதயத்தின் உள்ளே காதல் தூங்குவதுண்டு, அதுவாய் கனிந்து மெதுவாய் நிமிர்ந்து, சதையை தாண்டி விதியை காண்பது காதல் ....
 
அப்படி காதல் கொண்ட கனிந்த காதலிக்காக ஷாஜகான் [Shah Jahan], மும்தாஜ் மஹால் [Mumtaz Mahal] இறந்த பின் .....
 
கண்களை கலந்து, இதயங்களை ஒன்றாக்கி, மௌனத்தை மொழியாக்கி, சிந்தனையை சீராக்கி, வாழ்வை வசந்தமாக்கி, இன்பத்தை இரட்டிப்பாக்கி
கொடுத்து வாழ்ந்த அவள் நினைவாக தாஜ்மகாலை கட்டி அவள் நினைப்பில் வாழ்ந்தான்!
 
வேறு பல மனைவிகள் இருந்தும்??, அவள் 14 பிள்ளைகள் பெற்றப் பின்பும், அவள் மீதான அன்பு தனியாமல் இருந்ததால், அது காதலின் சின்னம் என்று சொல்லப்படுகிறது!!
 
.........................
 
உன்னை ஒரு பார்வை கேட்டேன், கண்கள் பேசும் சில வார்த்தை கேட்டேன். கன்னத்தில் வந்த ஈரமும் இதயத்தில் நொந்த காயமும்தான் எனக்காக நீ கொடுத்தது!
 
இந்த முறிந்த காதலியை இனி நினைக்க முடியாது! என் என்றால் அவள் எங்கோ யாருடனோ இப்ப வாழ்கிறாள்!! அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே என மறக்கவும் முடியாது! என் என்றால், என் நெஞ்சுக்கு [வேறு] நினைவில்லை என் நிழலுக்கு [இப்ப] உறக்கமில்லை ...
 
தன் சிறு பருவத்திலிருந்தே லைலா [Laila] என்னும் தன் தோழியின்மீது ஆழமான அன்பு கொண்டு வளர்கிறான் 'கைஸ்' [Qays]. அன்பு முற்றிக் காதலாகிறது. காதலின் சக்திக்குத் தன்னை முழுவதுமாகக் கொடுத்து விட்ட கைஸ் அலங்கோலமாக ஒரு பக்கிரியைப் போல் ஆகிவிட்டான்.
மக்கள் அவனை "மஜ்னூன்" [Majnun] என்று அழைக்க ஆரம்பித்து அதுவே அவனுக்குப் பெயராகி விடுகிறது.
 
மஜ்னூன் என்றால் பித்தன் என்று பொருள். மஜ்னூனின் தந்தை தன் மகனுக்கு லைலாவை மனம் முடித்து வைக்க அவளின் தந்தையிடம் பெண் கேட்கிறார். ஒரு கிறுக்கனுக்கு என் மகளைக் கொடுக்க மாட்டேன் என்று சொல்லி லைலாவின் தந்தை மறுத்து விடுகிறார். அவளை வேறு ஒருவனுக்குத் திருமணம் செய்து கொடுத்து விடுகிறார். இதனால் மனமுடைந்த மஜ்னூன் வனாந்தரங்களில் திரிகிறான்.
 
ஒரு முறை,லைலாவின் தெருவில் அலைந்து கொண்டிருந்த மஜ்னூன், அவள் வீட்டின் சுவர்களை முத்தமிட்டுக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்துப் பரிகாசம் செய்தவர்களின் காதுகளில் விழுமாறு ஒரு கவிதை பாடினான்!
 
 
"லைலாவின் தெருவில்
அவள் வீட்டின் சுவர்களை
முத்தமிடுகிறேன் நான்.
 
இந்தச் சுவற்றின் மீதோ
அல்லது அந்தச் சுவற்றின் மீதோ
காதல் கொண்டவனல்ல நான்.
 
என் மனதில் பொங்கி வழிவது
அந்த வீட்டுக்குள் இருப்பவளின் காதலே!"
 
 
"I pass by these walls, the walls of Layla
And I kiss this wall and that wall
It’s not Love of the walls that has enraptured my heart
But of the One who dwells within them"
 
 
அதே மஜ்னூன், முறிந்த காதலியை பற்றி ஒரு முறை இப்படி சொல்கிறான் :
 
 
"ரோஜா
காதலின் சின்னம்
என்பது சரிதான்.
 
காலையில் இருக்கிறது
அவளைப் போல்.
மாலையில் ஆகிறது
என்னைப் போல்."
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
329152065_1252486635617321_2641833114755884495_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Fa9ZA1uMM_wQ7kNvgGy8GcR&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYApnqg0ELDzNdgvcZwBuanFIrf-1ViI6c2NGEC8r9DtdA&oe=665554EB 328830626_758947801848590_948048043700222537_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=qTcyfI-bJnUQ7kNvgF0PbWg&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYCL2loZePXtwP0RWHHB37kqkwB8LJWLdIihQiHldFeI7g&oe=66556779
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.