Jump to content

விக்னேஸ்வரனின் வீட்டில் ரணில் இரகசிய கலந்துரையாடல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரனின் வீட்டில் ரணில் இரகசிய கலந்துரையாடல்!

 (இனியபாரதி)

நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனின் வீடு தேடிச் சென்று, அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க (25)இன்று மாலை சந்தித்தார். இதன்போது எதிர்வரும் அரச தலைவர் தேர்தல் தொடர்பில் அவருடன் ஆராய்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.(ப)
 

விக்னேஸ்வரனின் வீட்டில் ரணில் இரகசிய கலந்துரையாடல்! (newuthayan.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனின் வீடு தேடிச் சென்று, அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க (25)இன்று மாலை சந்தித்தார். இதன்போது எதிர்வரும் அரச தலைவர் தேர்தல் தொடர்பில் அவருடன் ஆராய்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.(ப)

கொழும்பில வைத்து அடுத்த ஜனாதிபதி நான் தான் என்றாய்.

யாழ்ப்பாணம் வந்ததும் பொது வேட்பாளர் என்கிறாயே

என கேட்க வந்திருப்பாரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

கொழும்பில வைத்து அடுத்த ஜனாதிபதி நான் தான் என்றாய்.

யாழ்ப்பாணம் வந்ததும் பொது வேட்பாளர் என்கிறாயே

என கேட்க வந்திருப்பாரோ?

இரண்டாம் வாக்கை எனக்குத்தான் போடுவினமோ என்று..கன்பார்ம் பண்ணப்போயிருப்பார்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் வேட்பாளரை நிறுத்தும் ஒற்றுமை தமிழ் மக்களிடம் இல்லை : விக்கியிடம் ஜனாதிபதி ரணில் நேரில் தெரிவிப்பு

26 MAY, 2024 | 08:01 AM
image
 

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் தகுதி அல்லது ஒற்றுமை தமிழ் மக்களிடமோ அல்லது  தமிழ் கட்சிகளிடமோ இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தாக பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

சனிக்கிழமை (25) யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரன்  இல்லத்தில் அவரை நேரில் சென்று சந்தித்தபோதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தாக தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

ஜனாதிபதி என்னை சந்திக்க வரப்போகிறார் என அறிந்த அரசியல் நீ(ரீ)தியான தீர்மானம் எடுக்கப்படும் என  சிந்தித்தார்கள். அவர் என்னை சுகம் விசாரிப்பதற்காகவே வந்தார் அரசியல் நீ(ரீ)தியான தீர்மானங்களுககான சந்திப்பாக அமையவில்லை.

சந்திப்பில் பொது வேட்பாளர், ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாட்டின் பொருளாதார முன்னேற்றம் தொடர்பிலும் கலந்துரையாடிய நிலையில் அவரது அநேகமான கருத்துக்கள் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக  நாடு பூராக நடைமுறைப்படுத்தும் நடைமுறைப்படுத்தவுள்ள அபிவிருத்தி   திட்டங்கள் தொடர்பிலேயே  பேசினார்.

இதன் போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போகிறீர்கள் அது சாத்தியப்படாது என கூறினார்.

ஜனாதிபதி வேட்பாளருக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் தேவை என்பதை ஜனாதிபதி ரணில் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்ய மாட்டார்கள்   என்றார்.

நான் சிரித்தவாறே பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டியதன் அவசியத்தை கூறினேன். அத்தோடு இரண்டாம் மூன்றாம் வாக்குகளை வழங்குவது தொடர்பிலும் அவரிடம் கூறினேன்.

இரண்டாம் மூன்றாம் வாக்கு வழங்கும் நடைமுறையை அவர் ஏற்றுக் கொண்டார். பொது வேட்பாளர் தெரிவு அதற்கான கட்டமைப்பினர் மேற்கொள்வார்கள் அதன் தெரிவை பார்ப்போம் என்றேன் என்றார்.

https://www.virakesari.lk/article/184485

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.