Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் துயரங்கள் எண்ணிலடங்காதவை. அண்ணா இருந்திருந்தால் இப்படியெல்லாம் நாங்கள் ஏன் கஷ்டப்படப் போகின்றோம் என முன்னாள் பெண் போராளியொருவார் தனது துயரங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

சோதியா படையணியின் திறமைமிக்க போராளியாக இருந்த இவர் திருமணமாகி மூன்று பிள்ளைகளின் தாயாக இப்போது இருக்கின்றார்.

குடிபோதையில் நித்தம் சண்டை போடும் கணவரோடு அவரது வாழ்க்கை தொடர்ந்து சொல்கின்றதை அவருடனான உரையாடலின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது.

புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தோடு இணைந்து வாழ வாய்ப்பளிக்கப்பட்டதாக  இலங்கை அரசாங்கத்தினால் சொல்லப்பட்ட போதும் அவர்களது புனர்வாழ்வு விடுதலைப்புலிகளின் அமைப்பின் கொள்கைப் பிடிப்புக்களில் இருந்து அவர்களை விடுவிப்பதை மட்டுமே நோக்காக கொண்டு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதனை முன்னாள் போராளிகள் இன்று எதிர்நோக்கும் சவால்களில் இருந்து நாம் புரிந்து கொள்ள முடியும் என சமூக விட ஆய்வாளர் வரதன் இது தொடர்பில் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

முன்னாள் போராளிகளின் தியாகங்களைச் மதித்து செயற்பட்டு வருவோர் அவர்களது உளவியல் சார் விடயங்களில் தங்களின் கவனத்தினைச் செலுத்துவதில் உள்ள அவசியத்தை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

திசைமாறிய வாழ்வு

சோதியா படையணியில் இருந்தவாறு தேச விடுதலைக்காக போராடி விழுப்புண்களைச் சுமந்து விட்ட முன்னாள் போராளியான இவரை திருமணம் செய்து கொண்டவர் ஒரு சிங்களவர் என்பது ஆச்சரியமான விடயமாகும் என ஈழ விடுதலைப்போராட்ட வரலாற்றை கொண்டு ஈழத் தமிழருக்கான தீர்வுகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டு வரும் எழுத்தாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

தமிழர்களின் நியாயமான சுயநிர்ணய உரிமைகளை மதித்து நடந்து கொள்ள முடியாத போதே ஆயுதம் ஏந்தி போராட தலைப்பட்டனர் தமிழர்கள்.

ex-combatant-s-grief-

அப்படியான சூழலில் அன்று யாருக்கு எதிராக போராடினார்களோ அவர்களின் சமூகத்தில் இருந்து ஒருவரை திருமணம் செய்து தன்னுடைய வாழ்க்கைத் துணையாக கொள்ள முடிந்தது எப்படி என்ற கேள்வியின் போதுதான் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

நீண்ட நெடிய விடுதலைப் போராட்டத்தில் தோல்விகளும் வெற்றிகளும் மாறி மாறி வந்து போவது ஆச்சரியமானதல்ல.

ஆனாலும் ஏன் நாம் போராடினோம். யாரோடு போராடினோம். அவர்கள் எப்படி எங்களுக்கு நல்லது செய்வார்கள் என்று நம்பி நடப்பதற்கான ஏதுக்கள் என்ன இருக்கின்றன என்றவாறான பல கேள்விகளுக்கு விடைகளைக் தேடிக்கொள்ள முயன்றவாறு நாம் நம் அன்றாட வாழ்வியலை முன்னகர்த்திச் செல்ல தவறிப் போகின்றோம்.

இதனை அந்த முன்னாள் போராளியின் இன்றைய வாழ்வு நிலை உணர்த்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்களவரான கணவரின் வார்த்தைப் பிரயோகங்கள் அந்த முன்னாள் போராளியினை சொல்லால் கொன்று விடுவதாக இருக்கின்றது. மனதால் ஒரு முன்னாள் போராளி அனுபவித்து வரும் சித்திரவதைகளை தடுப்பதற்கு எத்தகைய நடவடிக்கைகளையும் இதுவரை யாரும் முன்னெடுக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயம்.

போதையின் தாக்கம்

குடும்ப வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் நன்றாகவே இருந்தார். நாளடைவில் பொருளாதார கஷ்டம் ஏற்பட்ட போது அவர் குடிக்கத் தொடங்கி விட்டார். ஆரம்பத்தில் கள்ளு மற்றும் சாராயத்தை குடித்தவர் நாளடைவில் கசிப்புக்கு பழக்கப்பட்டு விட்டார்.

கசிப்பு குடித்து விட்டு வரும் நாளெல்லாம் வீட்டில் கடுமையாக சண்டையிட்டுக் கொள்வார் என்று அந்த முன்னாள் போராளியுடனான உரையாடலில்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

ex-combatant-s-grief-

அந்த முன்னாள் போராளி தன் மூன்று பிள்ளைகளுக்கும் சிங்களத்தில் பெயரிட்ட இருக்கின்றார். 2009ஆம் ஆண்டு ஓமந்தையில் படையினரிடம் சரணடைந்த பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்ட இவர் சிங்களவரான தன் கணவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒரு முன்னாள் போராளியான உங்களால் எப்படி ஒரு சிங்களவரைக் காதலிக்க முடிந்தது என்ற கேள்விக்கு மௌனமாக ஒரு புன்னகையை உதிர்ந்து கொண்டார்.

போதையில் இருக்கும் சந்தர்ப்பங்களில் தன் கணவரின் செயற்பாடுகள் தொடர்பில் அவர் குறிப்பிடும்போது குடும்ப வாழ்வை வெறுத்து விட்டதான தன் உணர்வையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

கணவனை குறிப்பிடும் போது மரியாதைக் குறைவான சொல்லாடலைப் பயன்படுத்தி இருந்ததோடு தனக்கேதும் உதவிகளை செய்ய யாரேனும் முன்வந்தால் தன் கணவனிடமிருந்து விவகாரத்து வாங்கித் தந்தாலே அது பெரிய உதவியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

ஈழ விடுதலைப் போரின் போது விழுப்புண் பட்டு உடலில் அதன் தழும்புகளைப் கொண்டுள்ள இந்த முன்னாள் பெண் போராளியினை விழுப்புண்ணால் ஏற்பட்ட மாற்றங்களை குறிப்பிட்டு அவரது கணவர் போதையில் உள்ள போது அவரை தரக்குறைவான வார்த்தைப் பிரயோகத்தினால் இழிவுபடுத்தி பேசுவதாகவும் தன்னை திருமணம் செய்து கொண்டதாலேயே தான் கஷ்டப்படுவதாக அவர் திட்டிக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தன் அயலவர்கள் மற்றும் உறவினர்களை சண்டைக்கு இழுத்துக் கொள்வார். அவர்கள் இவரது சுபாவத்தைப் புரிந்து கொண்டு நடப்பதால் முரண்பாடுகளைத் தவிர்த்துக்கொள்ள முடிவதாக முன்னாள் போராளி கூறியுள்ளார்.

மன உளைச்சல்

விழுப்புண் பட்டு இயல்பு நிலையில் வாழ முடியாதவர்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டிய சூழலில் அவர்களது அசாதாரண நிலையைச் சுட்டிக்காட்டி அவர்களை இழிவுபடுத்தல் என்பது அவர்களுக்கு பெரும் மனவுளைச்சலை ஏற்படுத்தும் என உளவள ஆலோசகர் ஒருவருடன் உரையாடும் போது இது தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாதாரணமாக வாழ்பவர்களிடையே ஏற்படும் மனவுளைச்சலை இலகுவில் மாற்றியமைத்து அதிலிருந்து அவர்களை விடுவிக்க முடியும். ஆனாலும் கொள்கைப் பிடிப்போடு உயிர்த்தியாகம் செய்து விடத் துணிந்த முன்னாள் போராளிகளிடையே ஏற்பட்டு விடும் மனவுளைச்சலை மாற்றியமைத்து அவர்களை விரக்தியில் இருந்து விடுவித்துக் கொள்வது கடினமானது.

ex-combatant-s-grief-

 இலங்கை அரசினால் அவர்களுக்கு வழங்கப்பட்ட புனர் வாழ்வளிப்புக் கூட யதார்த்த சூழலை விளக்கி வன்முறையற்ற வாழ்வு ஒன்று உங்களுக்கு உறுதிப்படுத்தப்படுவதாக மட்டுமே அமைந்துள்ளது.

முன்னாள் போராளிகளினால் அந்த யதார்த்தத்தினை இலகுவாக ஏற்றுக்கொண்டு செயற்பட முடியும். ஏனெனில் அவர்களால் நேர்த்தியான முறையில் சிந்திக்க முடியும். சிங்கள தேசத்தினால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட இன்னல்களைப் புரிந்து கொண்டு தங்கள் வாழ்வை தியாகிக்கும் படி வாழ்ந்தவர்கள் முன்னாள் போராளிகள் ஆகும்.

ஆயினும் நாட்கள் கடந்து போகும் போது ஏற்படும் சூழல் மாற்றங்கள் அவர்களை வெகுவாகப் பாதிக்கின்றன. அந்தப் பாதிப்பில் இருந்து அவர்களை காத்துக்கொள்ள வேண்டும்.

முன்னாள் போராளிகளின் நலன்களில் அக்கறை காட்டுவோர் அவர்களது அன்றாட வாழ்வியலை எதிர்கொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அவர்கள் மனவுளைச்சலுக்கு உள்ளாகும் வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றன என்பதை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.

நிர்வாக இயக்கம் 

விடுதலைப் புலிகளின் நிர்வாக இயக்கத்தில் இருந்து இன்றைய சமூகத்தின் நிர்வாக இயக்கம் பாரியளவிலான வேறுபாடுகளைக் கொண்டுள்ளது.

அவர்களது நிர்வாக இயக்கத்தில் சாதாரண குடிமக்களின் இயல்பு வாழ்வை பாதுகாத்துக் கொடுக்கும் கட்டமைப்புக்கள் இருந்தன. அதனால் இயல்பு வாழ்வுக்கு நல்ல பண்புகள் மட்டும் போதுமாக இருந்தது.

எனினும் இன்றைய நாட்களில் உள்ள நிர்வாக இயக்கத்தில் ஊழல், ஏமாற்று போன்ற நற்பண்பியலுக்கு முரணான பல விடயங்களை எதிர் கொண்டு வாழ வேண்டும். அதனை எதிர்கொள்ளும் போது இவர்கள் மனவுளைச்சலுக்கு உள்ளாகி வருவதனை ஈழத்தில் அவதானிக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களின் பாதுகாப்பை அரசாங்க நிர்வாகம் உறுதிப்படுத்தும் வகையில் கட்டமைப்புக்களை கொண்டுள்ள போதும் அவை முழு நிறைவாக செயற்படாத போக்கு இருப்பதை நாம் உணர்ந்தாக வேண்டும்.

முதியோர்களை அவர்களது வயதனுபவம் மற்றும் பெரியோர் என்ற அடிப்படையில் அவர்களை மதித்து நடத்தாத அரச அலுவலகங்களில் உள்ள அதிகாரிகள், ஊழியர்களை நம் அன்றாட வாழ்வில் அவதானிக்க முடிவதை இங்கே சுட்டிக்காட்டலாம்.

முன்னாள் போராளிகளின் மனநிலை

ஆயினும் விடுதலைப்புலிகளின் காலத்தில் முதியவர்களுக்கு மற்றும் பொது மக்களுக்கும் உரியளவிலான மரியாதைகள் வழங்கப்பட்டிருந்தன என்பதை உள்ளூர் மக்களோடு மேற்கொள்ளும் நீண்ட கலந்துரையாடல்கள் மூலம் அறிய முடியும் என்பது இங்கே நோக்கத்தக்கது.

ஒவ்வொரு முன்னாள் போராளியும் ஏதோவொரு மனவுளைச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என்பதை மறுதலிக்க முடியாது.

முன்னாள் போராளியின் துயரம் : புதிய கோணத்தில் உதவிகள் தேவைப்படுவதை உணராத ஈழத்தமிழ்ச் சமூகம் | Ex Combatant S Grief

உலகளவில் உள்ள புலம்பெயர் தமிழ்ச் சமூகம் மற்றும் தாயக வாழ் ஈழத்தமிழ்ச் சமூகம் போன்றன முன்னாள் போராளிகளை அவர்களது மனவுளைச்சலில் இருந்து விடுபட்டு இயல்பு நிலைகளைப் புரிந்து கொண்டு தங்கள் வாழ்வை திட்டமிட்டு முன்கொண்டு செல்ல வழிகாட்ட ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க வேண்டும்.

அது ஒன்றே அவர்களது இன்னல்களுக்கான குறைந்தபட்ச மருந்தாக இருக்கும். அவர்கள் கொண்ட ஈழத் தாகத்தின்பால் அவர்களின் தியாகத்திற்கான கைமாறாக அமையும் என்பதும் திண்ணம்.

https://tamilwin.com/article/ex-combatant-s-grief-1717049562?itm_source=parsely-detail

  • Thanks 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
    • தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு!     தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து  பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில், தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜமம் மேற்கொண்ட நிலையில் அங்கு 25க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தறிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் கனகர இயந்திரங்கள் குறித்த பகுதியில் கொண்டுவரப்பட்டமையும் நேரடியாக அவதானிக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இள வயது பனைகள் பல தறிக்கப்பட்டும் அடிப்பாகங்கள் எயியூட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெல்லியடியைச் சேர்ந்த காணி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்வதாக உறுதியளித்தனர். பனை மரங்களை வெட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட கனகர இயந்திரங்களை முறைப்பாட்டில் பதிவு செய்யுமாறு எமது உத்தியோகத்தர்கள் வலியுறுத்திய நிலையில் சாவகச்சேரி பொலிசார் ஏற்க மறுத்துள்ளனர். இந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் சாவகச்சேரி பொலிசாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகன இலக்கங்களை முறைப்பாட்டில் பதியாவிட்டால் மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் எனக் கூறிய நிலையில் முறைப்பாட்டை ஏற்பதாக தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.  சட்ட விரோத பனை மரங்கள் தறிக்கப்பட்டால்  0779273042 பண்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தர முடியும் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201922  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.