Jump to content

ஆளும் கட்சி எம்.பிக்களுக்கான கூட்டத்தில் மோதல்: நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வைத்தியசாலையில்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே மேற்கொண்ட தாக்குதலில் சக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கயாமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்சவே இவ்வாறு காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மாலை நடைபெற்ற ஆளும் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்  கூட்டத்தில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதி

சம்பவத்தில் காயமடைந்த நாடாளுமன்ற உறப்பினர் குணதிலக்க ராஜபக்ச  கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆளும் கட்சி எம்.பிக்களுக்கான கூட்டத்தில் மோதல்: நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வைத்தியசாலையில் | Governing Party Members Fight

இந்த மோதலை தடுப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ச முயற்சித்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://tamilwin.com/article/governing-party-members-fight-1717432658

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, பெருமாள் said:

கிரிக்கெட்டில் எங்களுக்கு விழுகிற அடியை எப்படி தடுக்கலாம் என்ற யோசனையில் முழு நாடும் இருக்க, இவர்கள் இடையில் வருகின்றார்கள். எங்காவது ஓரமாக ஒதுங்கி நின்று சண்டையை போடுங்கோ........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ரசோதரன் said:

கிரிக்கெட்டில் எங்களுக்கு விழுகிற அடியை எப்படி தடுக்கலாம் என்ற யோசனையில் முழு நாடும் இருக்க, இவர்கள் இடையில் வருகின்றார்கள். எங்காவது ஓரமாக ஒதுங்கி நின்று சண்டையை போடுங்கோ........

கிரிக்கெட்டில் நாலு தமிழன் விளையாடியானால்  உங்கள் மன  நிலையில் நான் இருப்பேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

கிரிக்கெட்டில் நாலு தமிழன் விளையாடியானால்  உங்கள் மன  நிலையில் நான் இருப்பேன் .

உங்களின் ஆதங்கம் புரிகின்றது. பாகுபாடு மட்டும் தான் இதற்கான ஒரு காரணம் இல்லை என்று நான் நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ரசோதரன் said:

உங்களின் ஆதங்கம் புரிகின்றது. பாகுபாடு மட்டும் தான் இதற்கான ஒரு காரணம் இல்லை என்று நான் நினைக்கின்றேன்.

அப்ப  நம்மாட்களுக்கு விளையாட தெரியாதா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

அப்ப  நம்மாட்களுக்கு விளையாட தெரியாதா ?

அப்படி நான் சொல்ல வரவில்லை. எங்களின் கவனம் அதில் இருக்கவில்லை என்று சொல்ல வந்தேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Gunethilaka-Rajapaksa-500x375-1-750x375-

ஜனாதிபதி செயலகத்தில் மோதல்: ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ காயமடைந்த  நிலையில், இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது.

இதன்போது, கண்டி மாவட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான குணதிலக்க ராஜபக்ஷவுக்கும் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தை, பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் சமரவிக்ரம தலையிட்டு சமரசம் செய்து வைத்துள்ள நிலையில், ஆளுங்கட்சிக் கூட்டமும் முடிவடைந்துள்ளது.

இதையடுத்து, கூட்டம் நடைபெற்ற அறையிலிருந்து வெளியேறிய போது நாடாளுமன்ற உறுப்பினர்களான குணதிலக்க ராஜபக்ஷ மற்றும் மஹிந்தானந்த அளுத்கமவுக்கும் இடையில் மீண்டும் வாக்குவாதம் வலுப் பெற்றுள்ளது.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமவினால் குணதிலக்க ராஜபக்ஷ தள்ளப்பட்ட நிலையில், அவர தவறி படியிலிருந்து கீழே விழுந்துள்ளதாகக்  கூறப்படுகிறது.

இதனால், நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஸவின் கால் எலும்பில் முறிவொன்று ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து அவர் உடனடியாக இராணுவ வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஆனால், தனக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட போதிலும், தான் அவரை தள்ளிவிடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இருவருக்கும் இடையில் வாக்குவாதம் வலுப்பெற்றதை அவதானித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் சமரவிக்ரம, நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷவை அழைத்து செல்ல முற்பட்ட போது, அவர் தவறி வீழ்ந்துள்ளதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1385859

#################    ##################    ############

ஆதவன் போட்ட தலைப்பை பார்க்க... மகிந்த ராஜபக்சவுக்கு, செம அடி விழுந்தது போலை இருக்கு.  animiertes-gefuehl-smilies-bild-0048.gif

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.