Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

06.jpg?resize=750,375&ssl=1

குவைத்தில் தீ விபத்து – இந்தியர்கள் உட்பட 35 பேர் உயிரிழப்பு!

குவைத் நாட்டில் கட்டிடமொன்றில் ஏற்பட்ட பயங்க தீ விபத்தில் சிக்கி, குறைந்தது 35 பேர் வரை உயிரிழந்ததாக அந்நாட்டு அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தெற்கு குவைத்தில் மங்காப்(Mangaf) நகரிலுள்ள தொழிலாளர்கள் குடியிருப்பொன்றில், அந்நாட்டு நேரப்படி, இன்று அதிகாலை 6.00 மணிக்கு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்தில் உயரிழந்தவர்களில் 4 இந்தியர்களும் அடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், தீ விபத்துக்குள்ளான குறித்த கட்டடத் தொகுதியில் அதிகளவில் மலையால மக்களே வசிப்பதாகவும் தெரியவருகின்றது.

இந்நிலையில், விபத்தில் காயமடைந்துவர்களை உடனடியாக மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதித்துள்ளதாகவும், அவர்களுக்கான உரிய சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ள குவைத் பொலிஸார், தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

https://athavannews.com/2024/1387458

  • கருத்துக்கள உறவுகள்

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் பலர் இந்தியர்கள் - இந்திய தொழிலதிபருக்கு சொந்தமான கட்டிடத்திலேயே அனர்த்தம்

12 JUN, 2024 | 06:00 PM
image
 

குவைத்தில் கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் பலர் இந்திய தொழிலாளர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குவைத்தின் தெற்கு மங்காஃப் மாவட்டத்தில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 41 பேர் பலியாகினர். உயிரிழந்தவர்களின் பலர் இந்தியர்கள் என்று அஞ்சப்படுகிறது. 43 பேர் காயமடைந்துள்ள நிலையில் இவர்களில் 30 பேர் இந்தியர்கள் என தகவல் கிடைத்துள்ளது.

kuwait_fire_2.jpg

தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்ததை குவைத் துணைப் பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கட்டிடம் மலையாள தொழிலதிபர் கேஜி ஆபிரகாமுக்கு சொந்தமான குழுமத்திற்கு சொந்தமானது. இன்று அதிகாலை கட்டிடத்தின் கீழ் தளத்தில் உள்ள சமையலறையில் ஏற்பட்டதீ  மற்ற தளங்களுக்கும் வேகமாக பரவியுள்ளது. இந்தக் கட்டிடத்தில் கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் உட்பட சுமார் 195 தொழிலாளர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. முதல்கட்ட தகவல்படி உயிரிழந்தவர்களில் ஐந்து பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தொழிலாளர்கள் குறித்த உதவி எண்ணாக 965-65505246 தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தீ விபத்து குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் “குவைத் தீ விபத்து குறித்த செய்தியால் அதிர்ச்சி அடைந்தேன். 40 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எங்கள் தூதர் முகாமுக்குச் சென்றுள்ளார். அடுத்தகட்ட தகவலுக்காக காத்திருக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தூதரகம் முழுமையான உதவிகளை வழங்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையேஇ குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு இந்திய தூதரகத்தைச் சேர்ந்த ஆதர்ஷ் ஸ்வைகா நேரில் சென்று அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள 30 இந்தியர்களை நேரில் சந்தித்தார். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தூதரகம் வழங்கம் என உறுதி அளித்துள்ளார். அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருமே விரைவில் குணமடைவார்கள் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/185942

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

01-1.jpg?resize=750,375&ssl=1

குவைத் தீ விபத்து : UPDATE

குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வசிக்கும் தொடர்மாடி குடியிருப்பொன்றில் ஏற்பிட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.

இதில் 3 தமிழர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதனால், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தெற்கு குவைத்திலுள்ள மங்காப் (Mangaf) மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் வசிக்கும் கட்டிடத்திலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தீவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றம் தமிழகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1387597

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

குவைத் தீ விபத்து : "இந்தியர்கள் 43 பேர் இறந்திருக்கலாம்" - தற்போதைய தகவல்கள்

குவைத்தில், இந்தியர்கள் வசித்த கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

12 ஜூன் 2024
புதுப்பிக்கப்பட்டது 43 நிமிடங்களுக்கு முன்னர்

(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

குவைத் தீ விபத்தில் 42 அல்லது 43 இந்தியர்கள் இறந்திருக்கலாம் என்று மத்திய இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று காலை டெல்லியிலிருந்து குவைத் புறப்பட்டு சென்றார். அதற்கு முன், ஏ.என்.ஐ. செய்தி முகமைக்கு பேசிய அவர்,"உயிரிழந்தவர்கள் பலரது உடல்கள் முழுவதும் கருகியுள்ளன. எனவே டி என் ஏ சோதனை நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உடல்கள் அடையாளம் காணப்பட்ட உடன், உடல்களை இந்தியா கொண்டு வர இந்திய விமானப்படை தயாராக இருக்கிறது. இந்த தீ விபத்தில் 48 அல்லது 49 பேர் மொத்தம் உயிரிழந்திருக்கலாம், அதில் 42 அல்லது 43 பேர் இந்தியர்கள் என்று நம்பப்படுகிறது" என்று தெரிவித்தார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

குவைத்தின் மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான பெரும்பாலானோர் இந்தியர்கள் என இந்தியாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த விபத்து குறித்து, குவைத் அரசிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இறந்தவர்களின் உடல்களை விரைவாக இந்தியா கொண்டு வர வலியுறுத்தியுள்ளார். இது குறித்து, தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், " குவைத் நிதி அமைச்சர் அப்துல்லா அலி அல் யாஹ்யாவிடம் தீ விபத்து குறித்து பேசினேன். குவைத் அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொண்டேன். தீ விபத்து குறித்து முழுமையாக விசாரிக்கப்பட்டு, இதற்கு பொறுப்பு யார் என்பது கண்டறியப்படும் என உறுதி அளித்தார்.

உயிர் இழந்தவர்களின் உடல்களை விரைவாக அனுப்பி வைக்க கோரினேன். காயமடைந்தவர்கள் உரிய மருத்துவ சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் தெரிவித்தார். மத்திய இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் நேரில் சென்ற பிறகு நிலைமை குறித்து மீண்டும் விசாரிக்கப்படும்" என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்ட இந்தியர்கள் காயமடைந்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை செய்தி கூறுகிறது. அவர்கள் குவைத்தின் அல்-அதான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குவைத்துக்கான இந்தியத் தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா, மருத்துவமனைகளுக்குச் சென்று காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்கான ஹெல்ப்லைன் எண்ணையும் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.

+965-65505246 என்ற எண்ணை, பாதிக்கப்பட்டவர்கள் குறித்து தெரிந்து கொள்ளவும், உதவிக்காகவும் மக்கள் அழைக்கலாம். தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய  இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

உயிர் பிழைத்த நபர் தகவல்

குவைத் தீ விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த நபர் ஒருவர் பேசுகையில், "நான் 5வது மாடியில் தூங்கிக் கொண்டிருந்தேன், திடீரென அருகில் இருந்தவர்கள் கதவை தட்டி அழைத்தார்கள். நான் வெளியே வந்து பார்த்த போது வெறும் கரும்புகையாக இருந்தது. என் பார்வைக்கு ஏதும் தெரியவில்லை, என்னால் எதையும் பார்க்க முடியவில்லை.

ஆனால், என் அறையின் கதவை தட்டியவர்கள் உயிர் பிழைக்க வேறு பகுதிக்கு ஓடிவிட்டார்கள். அதனால், அருகே இருந்த அறையில் இருந்தவர்களது கதவை நாங்கள் தட்டவில்லை. எங்கள் வீட்டின் சன்னல் சற்று பெரிதாக இருந்ததால் அதன் வழியாக எங்கள் அறையில் தங்கியிருந்த 4 பேரும் தப்பித்துவிட்டோம். ஆனால், எங்கள் அறையின் அருகே இருந்தவர்களின் அறையில் உள்ள ஜன்னல் மிகச்சிறியது, அதனால் அவர்களால் தப்பிக்க முடியவில்லை." என்று கூறினார்.

குவைத் தீ விபத்து

மணமான 9 மாதங்களில் உயிரிழந்த நபர்

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த உமருதீன் ஷமீரின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அவர்களது தொலைபேசிக்கு அழைத்து போது, பக்கத்து வீட்டுக்காரர் பதிலளித்தார்.

29 வயதான அவர் ஓட்டுநர் ஆவார். குவைத்தில் இந்தியருக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவர், இந்த தீவிபத்தில் உயிரிழந்தார்.

"அவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். சில மணி நேரங்களுக்கு முன்பு குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. 9 மாதங்களுக்கு முன்பு இங்கு வந்த அவருக்கு திருமணம் நடந்தது. அவரது பெற்றோர் பேசும் நிலையில் இல்லை,'' என பிபிசி ஹிந்தியிடம் அவரது அண்டை வீட்டுக்காரர் கூறினார். அவர் தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை.

குவைத்தில் உமருதீனின் நண்பர் நௌஃபல் பிபிசி ஹிந்தியிடம் பேசுகையில், ``அவரது குடும்பத்தைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. நான் மூன்று கட்டிடங்கள் தள்ளி தங்கியுள்ளேன். நாங்கள் அனைவரும் ஒரே எண்ணெய் நிறுவனத்தில் வேலை செய்கிறோம். உமருதீனும் அங்கே ஒரு தொழிலாளி. கட்டிடத்தில் யார் இருந்தார்கள், யார் இல்லை என்று சொல்வது கடினம்’’ என்றார்.

"எண்ணெய் நிறுவனத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஷிப்ட் முறையில் வேலை செய்கிறார்கள். அதிகாலை 0130 மணியளவில் வேலைக்குச் சென்ற ஏழு பேர் கொண்ட குழு உள்ளது. அவர்கள் திரும்பி வந்துவிட்டார்கள், அவர்கள் முழு அதிர்ச்சியில் உள்ளனர்,'' என்று நௌஃபல் கூறினார்.

நௌஃபலின் கூற்றுப்படி, கட்டடத்தில் இருந்த பெரும்பாலானோர் இந்தியர்கள். குறிப்பாக கேரளா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் இருந்துள்ளனர்.

ஆனால், பிபிசி ஹிந்தியிடம் பேசிய கேரள முஸ்லிம் கலாசார மையத்தின் (கேஎம்சிசி) குவைத் பிரிவுத் தலைவர் ஷர்புதீன் கோனெட்டு, ``தீயில் இறந்த அல்லது காயமடைந்தவர்களின் உடல்களை நாங்கள் இன்னும் தேடி வருகிறோம். அடித்தளத்தில் இருந்து ஆறு மாடி கட்டிடம் முழுவதும் தீ பரவியதால் பல உடல்களை அடையாளம் காண முடியவில்லை. தற்போதைய நிலவரப்படி, குறைந்தது 11 இந்தியர்கள் இறந்துள்ளனர் மற்றும் இருவர் மோசமான நிலையில் உள்ளனர். உடல்களை அடையாளம் காண சிலருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டியிருக்கலாம், ”என்று கூறினார். அவர் அப்போது, தீ விபத்து நடந்த இடத்தில் இருந்தார்.

விபத்திற்கான காரணம் என்ன?

குவைத்துக்கான இந்தியத் தூதர்

பட மூலாதாரம்,@INDEMBKWT/X

படக்குறிப்பு,குவைத்துக்கான இந்தியத் தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா, மருத்துவமனைகளுக்குச் சென்று காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்தார்.

இந்த சம்பவத்தை குவைத் உள்துறை அமைச்சரும் உறுதி செய்துள்ளார். புதன்கிழமை காலை அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் ஜன்னல்களில் இருந்து அடர்ந்த கரும் புகை வெளியேறியதை காண முடிந்தது.

குவைத்தின் மங்காப் பகுதியில் உள்ள இந்த 6 மாடி குடியிருப்பின் ஒரு சமையலறையில் இருந்து தீப்பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது கட்டடத்தில் 160 தொழிலாளர்கள் இருந்தனர். அனைத்து தொழிலாளர்களும் ஒரே நிறுவனத்தில்தான் வேலை செய்கிறார்கள்.

குவைத் உள்துறை அமைச்சர் ஃபஹத் யூசுப் அல் சபா சம்பவ இடத்தை பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர், “கட்டட உரிமையாளர்களின் பேராசையே இந்த சம்பவத்திற்கு காரணம்” என்றார்.

குவைத் ஊடக அறிக்கையின்படி, இந்த கட்டடத்தில் அளவுக்கு அதிகமான மக்கள், கடும் நெருக்கடியில் வசித்து வந்துள்ளனர். குடியிருப்பில் உள்ள சட்ட மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குவைத் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவர். குறிப்பாக கட்டுமானம் மற்றும் உள் கட்டமைப்புத் துறைகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களையே குவைத் சார்ந்துள்ளது.

குவைத்தில் உள்ள புலம்பெயர்ந்தோரின் வாழ்க்கைத் தரம் குறித்து மனித உரிமை அமைப்புகள் பலமுறை கேள்வி எழுப்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்திய அரசு கூறியது என்ன?

குவைத்துக்கான இந்தியத் தூதர்

பட மூலாதாரம்,@INDEMBKWT/X

இந்திய பிரதமர் மோதி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அங்குள்ள அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது." என்று கூறியுள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தீ விபத்து குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “குவைத் தீ விபத்து குறித்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். 40க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் தூதர் முகாமுக்குச் சென்றுள்ளார். அடுத்தக் கட்ட தகவலுக்காக காத்திருக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தூதரகம் முழுமையான உதவிகளை வழங்கும்” என்று தெரிவித்துள்ளார்.

குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா காயமடைந்த 30க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள குவைத்தின் அல்-அதான் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.

அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தூதரகம் வழங்கும் எனவும் உறுதி அளித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருமே விரைவில் குணமடைவார்கள் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

குவைத்தில் பணிபுரியும் தமிழர் கூறியது என்ன?

தீ விபத்து நடந்த இடத்தில்

பட மூலாதாரம்,UGC

படக்குறிப்பு,தீ விபத்து நடந்த இடத்தில் குவிந்துள்ள குவைத் காவல் துறையினர்

குவைத்தில், தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் வசிக்கிறார் மணிகண்டன். இவர் தமிழ்நாட்டின் விருதுநகரைச் சேர்ந்தவர். பணிக்காக குவைத் சென்றுள்ள இவர், நடந்த சம்பவம் குறித்து விவரித்தார்.

"குவைத்தில் பகல் நேரத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால், பெரும்பாலானோர் இரவு நேரப் பணிக்கு செல்வார்கள். வேலையை முடித்துவிட்டு அதிகாலை குடியிருப்புக்கு திரும்பி வந்தவர்களில் சிலர் உணவு சமைத்துள்ளனர். கட்டிடத்தின் அடித்தளத்தில் சமையலறை உள்ளது. அப்போது சமையலறையில் பற்றிய தீ, கட்டுக்கடங்காமல் மற்ற தளங்களுக்கும் பரவியுள்ளது." என்று கூறினார்.

அதிகாலை நேரம் என்பதால் அறைகளில் உறங்கிக் கொண்டிருந்த பலர் மூச்சுத்திணறி இறந்ததாகவும், சிலர் தப்பிக்க நினைத்து மாடிகளில் இருந்து குதித்ததால் உயிரிழந்ததாகவும் கூறினார் மணிகண்டன்.

"இங்குள்ள அறைகளில் தங்கியிருந்தவர்கள் பெரும்பாலும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். தமிழர்களும் தங்கி இருந்தனர். அவர்களுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை." என்று கூறுகிறார் அவர்.

அயலக தமிழர் நலத்துறை உதவி எண்கள்

குவைத் விபத்தில் சிக்கிய தமிழர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

குவைத் தீ விபத்து தொடர்பான விவரங்களைப் பெற அயலக தமிழர் நலத்துறையை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:

இந்தியாவிற்குள் எனில்

+91 1800 3093793

வெளிநாடு எனில்

+91 80 69009900

+91 8069009901

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.