Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

'சினிமா பார்த்ததே இல்லை' - விடுதலை புலிகள் கொள்கையை இன்றும் பின்பற்றும் இலங்கை நபர்

வாழ்க்கையில் ஒரு சினிமா படத்தை கூட பார்த்ததில்லை - விடுதலைப் புலிகளின் கொள்கையில் வாழும் சத்தியசீலன்
கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 22 ஜூன் 2024
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மௌனிக்கப்பட்டு 15 வருடங்கள் கடந்தாலும், அந்த அமைப்பின் கொள்கைகளைப் பின்பற்றும் பலர் இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள். அவ்வாறு வாழும் ஒருவரின் இன்றைய வாழ்க்கை தொடர்பாக பிபிசி தமிழ் ஆராய்கின்றது.

''தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டக் கொள்கையைத் தவிர, ஏனைய அனைத்து கொள்கைகளையும் நான் இன்றும் பின்தொடர்ந்து வருகின்றேன்," என, முல்லைத்தீவைச் சேர்ந்த இராமலிங்கம் சத்தியசீலன் தெரிவிக்கின்றார்.

முல்லைத்தீவு - ஒட்டுச்சுட்டான் பகுதியில் வாழும் ராமலிங்கம் சத்தியசீலன், அந்தப் பகுதியில் பிரபல வர்த்தகராக விளங்கி வருகின்றார்.

இரும்பு வியாபாரம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது வர்த்தகத்தை வியாபித்துள்ள சத்தியசீலன், உள்நாட்டுப் போரில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட ஒருவராவார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முழுமையான கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சத்தியசீலன் வாழ்ந்தாலும், ஆயுதப் போராட்டத்தில் தான் ஈடுபடவில்லை எனக் கூறுகின்றார்.

''போர் முடிவடைந்து முகாமிலிருந்து வெளியில் வரும் போது 300 ரூபாயுடன் வந்தேன். ஆனால் இன்று வியாபாரத்தில் சிறந்து விளங்குகின்றேன்," என அவர் பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார்.

அதேபோன்று, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு முன்னெடுக்க முயன்ற தன்னிறைவுப் பொருளாதாரக் கொள்கையைத் தனது வாழ்க்கையில் இன்றும் பின்பற்றி வருவதாகக் கூறுகிறார் சத்தியசீலன்.

தமது குடும்பத்திற்கான உணவு வகைகளை தானே விவசாயம் செய்வதுடன், அதனூடாகத் தனது அன்றாட உணவுத் தேவையை சத்தியசீலன் நிறைவு செய்கின்றார்.

வாட்ஸ் ஆப்

உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் அமைப்பு

''1992 அல்லது 93-ஆம் ஆண்டு காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளில், தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் இயங்கி வந்தது. அந்நிறுவனமானது, 90-களுக்குப் பின்னர் என நினைக்கின்றேன், இலங்கை அரசாங்கத்தினால் வடக்குப் பகுதிக்கு அனைத்து விதமான பொருட்களும் மட்டுப்படுத்தப்பட்டு தான் விடுவித்துக் கொண்டிருந்தார்கள்,” என்கிறார் சத்தியசீலன்.

"அதனுடைய தடைகளை உடைக்க வேண்டும் என்று சொல்லி தமிழீழ விடுதலைப் புலிகளில், தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தினால் பொருண்மியம் சார்ந்த உள்ளுர் உற்பத்திகளை எப்படி ஊக்குவிக்க வேண்டும் என்று சொல்லி ஒரு கட்டமைப்பொன்று உருவாக்கப்பட்டிருந்தது,” என்கிறார்.

"அந்தக் கட்டமைப்பின் ஊடாக வீடு வீடாக ஏழை மக்களுக்கு உதவிகள் செய்யப்பட்டன. அதன்போது, நான் அவர்களுடன் சேர்ந்த இந்தப் பிரதேசத்தில் நான் வேலை செய்தேன். இதில் எங்களுடைய காணியொன்று இருக்கின்றது. அதில் நானும் அம்மாவும் சேர்ந்து காணியை துப்பரவு செய்தோம்," என்றார்.

 

வாசிப்பில் ஈடுபாடு

எங்களுக்கு அப்போது சரியான கஷ்டம். இந்த திட்டத்தில் ஊக்கமளிக்கப்பட்டவன் என்ற விதத்தில் அம்மாவை ஊக்கப்படுத்தி,அந்தட காணியில் உளுந்து விதைத்தோம். உளுந்து மட்டுமல்ல எல்லா விதமான தானியங்களையும் விதைத்தோம். அந்த வருடத்தின் பின்னர் தான் மூன்று நேரமும் தானியங்களை அவித்து சாப்பிட்டோம். போஷாக்காத மனிதர்களாக 95ம் ஆண்டுக்கு பிறகு தான் எங்களால் உருவெடுக்க முடிந்தது." என அவர் குறிப்பிடுகின்றார். அன்று முதல் தொடர்ந்து இன்று வரை தமிழீழ விடுதலைப் புலிகளில், தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு கொள்கைகளில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறுகின்றார். விடுதலைப் புலிகள் அமைப்பினால் வெளியிடப்பட்ட சுதந்திர பறவைகள், விடுதலைப் புலிகள், ஈழநாதம் போன்ற பத்திரிகைகளில் பொருண்மியம் சார்ந்த கட்டுரைகள் வெளியிடப்படுவதாகவும், அந்த கட்டுரைகளை தான் தேடிச் சென்று வாசித்து வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

மேலும் பேசிய சத்தியசீலன், "எங்களுக்கு அப்போது சரியான கஷ்டம். இந்த திட்டத்தில் ஊக்கமளிக்கப்பட்டவன் என்ற விதத்தில் அம்மாவை ஊக்கப்படுத்தி, அந்தக் காணியில் உளுந்து விதைத்தோம். உளுந்து மட்டுமல்ல எல்லா விதமான தானியங்களையும் விதைத்தோம். அந்த வருடத்தின் பின்னர் தான் மூன்று நேரமும் தானியங்களை அவித்துச் சாப்பிட்டோம். 1995-ஆம் ஆண்டுக்கு பிறகு தான் எங்களால் போஷாக்கான மனிதர்களாக உருவெடுக்க முடிந்தது," என அவர் குறிப்பிடுகின்றார்.

அன்று முதல் தொடர்ந்து இன்று வரை பொருண்மிய மேம்பாட்டுக் கொள்கைகளில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறுகின்றார்.

விடுதலைப் புலிகள் அமைப்பினால் வெளியிடப்பட்ட சுதந்திரப் பறவைகள், விடுதலைப் புலிகள், ஈழநாதம் போன்ற பத்திரிகைகளில் பொருண்மியம் சார்ந்த கட்டுரைகள் வெளியிடப்பட்டதாகவும், அந்தக் கட்டுரைகளை தான் தேடிச் சென்று வாசித்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

 

'ஆயுதப் போராட்டத்தைப் பின்பற்றவில்லை'

வாழ்க்கையில் ஒரு சினிமா படத்தை கூட பார்த்ததில்லை - விடுதலைப் புலிகளின் கொள்கையில் வாழும் சத்தியசீலன்

தொடர்ந்து பேசிய சத்தியசீலன், ''விடுதலைப் புலிகள் அமைப்பில் பல கட்டமைப்புக்கள் இருந்தன. நீதி நிர்வாகத்துறை, தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம், தமிழீழ நிர்வாகச் சேவை, என எத்தனையோ சேவைகள் இருந்தன. அந்த அனைத்துக் கட்டமைப்புக்களும் எனது மனதில் பதியப்பட்டிருக்கின்றது. விடுதலைப் புலிகளின் வனவளப் பாதுகாப்புப் பிரிவு என்று ஒன்று விளங்கியது. அதன்மூலம் இந்தப் பிரதேசம் முழுவதும் தேக்கு மரங்களை நட்டார்கள். அப்போது எங்களுக்கு 100 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. அந்தத் தேக்கு மரங்களை தான் இன்று அறுவடை செய்து கொண்டிருக்கின்றார்கள்,” என்றார் அவர்.

அதேபோன்று, கடந்த ஆண்டு தான் 1,500 தேக்கு மரங்களை நட்டதாகக் கூறும் அவர், இப்போது ஒரு மரத்தை நடுவதற்கு 100 ரூபாய் ஆகும் என்றும் கூறினார்.

“20 வருடம் அந்த தேக்கு மரம் ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியாகும். அப்படியென்றால், 1,500 மரங்களுக்கு எவ்வளவு வருமானம். அதேபோன்று, எங்களுடைய காணிகள் சோலைகளாகக் காட்சியளிக்கும். பனை மரங்களை நட்டுள்ளேன். 400 தென்னை நட்டுள்ளேன். வாழை நட்டுள்ளேன்,” என்கிறார், சத்தியசீலன்.

மேலும் பேசிய அவர், “தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தில் பசுப்பால் உற்பத்தி என்று சொல்லி ஒரு பிரிவு இருந்தது. அதை மனதில் கொண்டு மூன்று மாடுகளை 9,000 ரூபாய்க்கு வாங்கினேன். 12 வருடங்களில் இன்று என்னிடம் 65 மாடுகள் வைத்திருக்கின்றேன். சகக் கட்டமைப்புகளையும் நான் சமநேரத்தில் உருவாக்கி வருகின்றேன்," என அவர் கூறுகின்றார்.

 

'இதுவரை ஒரு சினிமா படம் கூட பார்த்ததில்லை'

வாழ்க்கையில் ஒரு சினிமா படத்தை கூட பார்த்ததில்லை - விடுதலைப் புலிகளின் கொள்கையில் வாழும் சத்தியசீலன்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி, தனது வாழ்க்கையில் ஒரு சினிமா படத்தைக்கூட இன்று வரை பார்த்ததில்லை என முல்லைத்தீவைச் சேர்ந்த சத்தியசீலன் தெரிவிக்கின்றார்.

''நான் பிறந்ததில் இருந்து ஒரு படம் கூடப் பார்த்ததில்லை. நீண்ட காலமாக அந்த நிர்வாகத்திற்குள்ளே பின்னிப் பிணைந்திருந்தோம். அவர்களது நிர்வாகத்தைப் பார்த்துப் பார்த்து, இதுவரை நான் ஒரு சினிமா படம் கூட பார்த்ததில்லை. இனியும் பார்க்கப் போவதும் இல்லை,” என்கிறார்.

மேலும், “எங்களுடைய வீட்டில் ஒரு தொலைக்காட்சி கூட இல்லை. நான் பிள்ளைகளுக்குச் போனில் செய்திகளை மாத்திரம் பார்க்கச் சொல்வேன். வரலாறுகளை போனில் காட்டுவேன்," என சத்தியசீலன் குறிப்பிடுகின்றார்.

தான் இறுதி வரை இதே கொள்கையைப் பின்பற்றி வாழப் போவதாக ராமலிங்கம் சத்தியசீலன் குறிப்பிடுகின்றார்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.