Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
                  - சுப.சோமசுந்தரம்

நேற்றைய (23-06-2024) ஒரு அனுபவப் பகிர்வு :
உறவினர் மகளின் திருமண வரவேற்புக்குச் சென்றிருந்தேன். கல்லூரியொன்றில் கணிதப் பேராசிரியையாய்ப் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்த நண்பரின் கணவர் வந்திருந்தார். "சார், மேடம் வரவில்லையா ?" என்று கேட்டேன். "அவளுக்கு சுமார் ஒரு வருடமாக சுயநினைவு இல்லை. அல்சீமர் (Alzheimer) ஆட்கொண்டுள்ளது" என்றார். "பலரை நினைவில்லை. ஆனால் உங்கள் mathematics மீது அவளுக்குப் பெரிய அபிமானம் உண்டு. உங்களைப் பார்த்தால், epsilon delta எல்லாம் நினைவு வரலாம். ஒருநாள் வீட்டிற்கு வாருங்கள்" என்றார்.
        மேடத்திற்கு பக்தி நெறியில் ஈடுபாடு உண்டு. ஒரு முறை அவரிடம் பெரியாழ்வார் பாசுரம் ஒன்றைப் பேசிய நினைவு. "கடைசிக் காலத்தில் உடலும் உள்ளமும் நலிந்து  உன்னை நினைக்கும் ஆற்றலை நான் இழந்தாலும் என்னைக் காத்து நிற்க வேண்டும். அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்" என்று திருவரங்கப் பெருமானிடம் பெரியாழ்வார் இறைஞ்சும் பாடல் அது. அப்பாடல் அந்த மேடத்துக்கே பொருந்தும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. 
         ஒருநாள் அவர்களைப் போய்ப் பார்க்க வேண்டும். Let me see whether Epsilon,Delta or connectedness (a topological concept in mathematics) gets us connected. பெரியாழ்வார் போன்ற பக்தி இலக்கியத்தையும் முயற்சி பண்ணலாம். Before that I should check with my friend, a psychologist, if it's okay to try with the 'memory card' of someone under Alzheimer. 
        இனி அந்த பெரியாழ்வார் பாசுரம் :
" துப்புடையாரை அடைவது எல்லாம் சோர்விடத்துத் துணை ஆவர் என்றே!
ஒப்பு இலேன் ஆகிலும் நின்னடைந்தேன்! ஆனைக்கு நீ அருள் செய்தமையால்!
எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்!அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே!
     - பெரியாழ்வார்; பாடல் 422; பத்தாவது திருமொழி

https://www.facebook.com/share/p/Smb17pYeYzZ6uLg6/?mibextid=oFDknk

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, சுப.சோமசுந்தரம் said:

எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்!அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே!
     - பெரியாழ்வார்; பாடல் 422; பத்தாவது திருமொழி

போய் விட்டு வந்து என்னவானது என்று சொல்லக் கூடியவற்றை சொல்லுங்கள். நலமே நடக்கும் என்பது என் நம்பிக்கை.....🙏.

இங்கும் சிலரை இந்த நிலையில் பார்த்து இருக்கின்றேன். இது போகப் போக மிகவும் கொடிய நிலையாக மாறும். நினைவுகளுடன், உடல் உறுப்புகளும் அவற்றின் வழமையான தொழிற்பாடுகளை, இயங்கங்களை படிப்படியாக மறந்து விடும்........😔.

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஐயா ....... உங்களைப் பார்த்தால் ஏதாகிலும் சிறு ஞாபகங்கள் வரக்கூடும் ........!  

  • கருத்துக்கள உறவுகள்
எய்ப்பு சாதாரணமாக ஒருவரை நலிக்கும்.
 
கவிஞர்,  எய்ப்பு தன்னை "நலியும்"  போது என்று குறிப்பிடுவது , தன்னை நலிக்கையில்  அதுவாக தானும் நலிந்து போகின்றது என்பதாலா ..
 
வேறுவகையில் சொல்வதானால் , எய்ப்பு தன்னை ஒன்றும் செய்து விட முடியாது என்று சொல்ல வருகிறாரா ..
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, சாமானியன் said:
எய்ப்பு சாதாரணமாக ஒருவரை நலிக்கும்.
 
கவிஞர்,  எய்ப்பு தன்னை "நலியும்"  போது என்று குறிப்பிடுவது , தன்னை நலிக்கையில்  அதுவாக தானும் நலிந்து போகின்றது என்பதாலா ..
 
வேறுவகையில் சொல்வதானால் , எய்ப்பு தன்னை ஒன்றும் செய்து விட முடியாது என்று சொல்ல வருகிறாரா ..

அவ்வாறு எனக்குத் தோன்றவில்லை, தோழர் ! "அப்போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்" என்கிறாரே ! "அதாவது என்னால் நினைக்க இயலாது" என்பதுதானே பொருள். எய்ப்பு தம்மை வந்து நலியும் போது தாம் நலிந்து போவதாகத்தான் குறிப்பிடுகிறார் எனக் கொள்கிறேன். 

Edited by சுப.சோமசுந்தரம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.