Jump to content

துன்கிந்த கப்பல் மீதான தாக்குதலில் காவியமான கடற்கரும்புலிகள் வீரவணக்க நாள் இன்றாகும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

30.10.2001 அன்று யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையின் எரிபொருள் வழங்கற் கப்பல்மீதான (துன்கிந்த) தாக்குதல் .

ஐனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில் 22.04.2000 ஆம் ஆண்டு ஆனையிறவுப் படைத்தளம் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்ட பிற்பாடு மாவீரர்களின் தியாகத்தால் சிங்களப்படைகளால் கைப்பற்றப்பட்ட பெருமளவு தமிழர்களின் பாரம்பரிய நிலப்பரப்புக்கள் மீட்க்ப்பட்டன .(சுமார் இருபது கடல்மைல் கரையோரப் பிரதேசங்களும் உள்ளடக்கம். ) அந்தவகையில் விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் ராடர் நிலையமும் யாழ் குடாரப்புக்கரையோரத்தில் அமைக்கப்பட்டு கடற்கண்கானிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாமல் கடற்புலிகளும் யாழ்குடாவில் நிலைகொண்டிருந்த சிங்களப்டைகளுக்காக திருகோணமலையிலிருந்து செல்லும் விநியோகக் கப்பல்கள் மீதும் அவ்வப்போது தாக்குதல்களை மேற்கொண்டனர்.


இவ் சிங்களக் கடற்படையின் விநியோகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் கடற்படையின் பெரும்பாலான டோறாப்படகுகள் கூட திருகோணமலை சிங்களக் கடற்படைத் தளத்திலிருந்து வந்து பாதுகாப்பு வழங்கி விட்டு திரும்பவும் திருகோணமலைக்குச் சென்றுவிடுவர்.
ஆனால் பெருமளவு கரையோரப்பிரதேசங்களும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வந்ததால் விடுதலைப்புலிகளின் தாக்குதலைச் சமாளிக்கவேண்டுமாயின் காங்கேசந்துறை சிங்களக்கடற்படைத்தளத்தில் பலடோறாக்களை நிறுத்தவேண்டிய கட்டாயம் சிங்களக்கடற்படைக்கு ஏற்பட்டது.

ஆகவே இச்சிங்களக்கடற்படைக்கு எரிபொருள் வழங்கள் மேற்கொள்வதற்கென துன்கிந்த என்கிற எரிபொருள்தாங்கிக் கப்பல் பயண்படுத்தப்பட்டது. இத்தகவல் விடுதலைப்புலிகளின் இலங்கை அரசபடையினரின் தகவல்களை இடைமறித்து ஒட்டுக்கேட்கும் லெப்.கேணல். ஐஸ்ரின்.அணியினரால் சிறப்புத்தளபதி சூசை அவர்களிடம் கொடுக்கப்பட்டது.

அதற்கமைவாக இத்தகவல்களை தேசியத்தலைவர் அவர்களிடம் கொடுத்தார் சிறப்புத்தளபதி சூசை அவர்கள். இக்கப்பலைத் தாக்குவதற்கான முக்கியத்துவத்தையும் அனுமதியையும் கொடுத்ததோடு மட்டுமல்லாமால் அதற்கான நல்லதொரு திட்டத்தையும் கொடுத்து ஒரு தாக்குதல் ஒரு தடவைதான் பிழைவரவேணடும் இரண்டாம் முறையும் பிழைவரக்கூடாது என்று தெளிவாகக்கூறினார் தேசியத்தலைவர் அவர்கள்.(முதலில் விட்ட சில தவறுகளால் .)

அதற்கமைவாக 30.10.2001 அன்று திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை துறைமுகம் நோக்கி சென்றுகொண்டிருந்த துன்கிந்த என்கிற எரிபொருள் தாங்கிக்கப்பலுக்குப் பாதுகாப்பு வழங்கிய சிங்களக்கடற்படையின் டோறாப்படகுகள் மற்றும் பீரங்கிப்படகுகள் மீது லெப். கேணல் . சலீம், லெப்.கேணல். சுடர்ணன். மற்றும் தளபதி.சிறீராம் ஆகியோர் தலைமையிலான சண்டைப்படகுகள் வழிமறிக்க யாழ் .பருத்தித்துறைக் கரையிலிருந்து உயர சுமார் முப்பத்தியெட்டுக்கடல்மைலில் சென்றுகொண்டிருந்த துன்கிந்த எரிபொருள் கப்பல்மீது அதிகாலை ஒருமணியளவில் கடற்கரும்புலிகள் தமது படகிலிருந்த ஆயுதங்காளால் தாக்கி நிற்பாட்டினார்கள்.

தொடர்ந்து கப்பலின் பின்பகுதியில் கடற்கரும்புலி மேஐர். கஸ்தூரி மற்றும் கடற்கரும்புலி கப்டன் கனியின்பன் ஆகியோர் தமது கரும்புலிப் படகால் மோதி வெடித்தனர். தொடர்ந்து கடற்கரும்புலி மேஐர் . கடலரசன். மற்றும் கடற்கரும்புலி கப்டன்.கேசவி ஆகியோர் தமது கரும்புலிப்படகால் கப்பலின் முன்பக்கத்தில் மோதி கப்பலை மூழ்கடித்து கடலிலே காவியமானார்கள். இத்தீரமிகுத்தாக்குதலை கடற்புலிகளின் பிரதான தளமான சாளைத் தளத்தின் ராடர் நிலையப் பொறுப்பாளர் சிறப்புத்தளபதி சூசை அவர்களின் ஆலோசனையுடன் குடாரப்பு ராடர் நிலையத்திலிருந்து செவ்வனவே வழிநடாத்தியிருந்தார்.

ஒருதடவை விட்ட பிழையை அடுத்த தடவை விடக்கூடாது என்ற தேசியத்தலைவர் அவர்களின் சிந்தனையையும் செவ்வனவே செய்த திருப்தியுடன் கடற்கரும்புலிகள் கடலிலே காவியமானார்கள்.

இவ் வெற்றிகரத் தாக்குதலில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகளான..
மேஐர் . கடலரசன்.
மேஐர்.கஸ்தூரி.
கப்டன். அன்புமலர்.
கப்டன். கனியின்பன்.

இக்களத்தை கடலிலே கடற்சண்டைப்படகை வழிநடாத்தி பின்னர் வீரச்சாவடைந்த..
லெப். கேணல். சலீம்.( கலாத்தன்.)வீரச்சாவு. 10.03.2009.
லெப்.கேணல். சுடர்ணன்.வீரச்சாவு.10.03.2003.
தளபதி. சிறிராம். வீரச்சாவு.முள்ளிவாய்க்கால் இறுதிச்சமரில்.

ஆகியோரையும் இந்நாளில் நினைவுகூருகின்றோம்.
அன்று இக்களத்தில் களமாடியவர்களின் உள்ளத்திலிருந்து….

எழுத்துருவாக்கம்… சு.குணா.
திகதி.30.11.2022.

http://irruppu.com/2022/11/30/துன்கிந்த-கப்பல்-மீதான-த/

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.