Jump to content

ஆழ்கடல் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரப் பாதிப்பை நிவர்த்திசெய்த கடற்கரும்புலி வீரர்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

நீண்டகாலமாக மன்னாரிலிருந்து ஆழ்கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழ்மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படயினர் தொடர்ச்சியான தாக்குதலை மேற்கொண்டுவந்தனர்.

அதுமட்டுமல்லாது கடற்புலிகளின் இந்திய விநியோகத்திற்க்கும் இக்கடற்படையினர் பெரும் அச்சுறுத்தலாகவும் இருந்தனர்.

இருந்தாலும் கடற்புலிகளும் இக்கடற்படையினர் மீது பல தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டனர்.ஆனாலும் அவைகளும் வெற்றியளிக்கவில்லை.மாற்றுத்திட்டமொன்றின் மூலம் தான் தாக்குதல் நடத்தலாம் அதுவென்ன என்கிற எண்ணமே போராளிகளிடமும் தளபதிகளிடமும் இருந்தது.

இப்பிரச்சனைகள் அனைத்தும் எமது தலைவர் அவர்களின் கவனத்திற்க்கு கொண்டுவந்தனர் தளபதிகளான சூசை அவர்களும் தளபதி பிருந்தன் மாஸ்ரர் அவர்களும் இவ் அனைத்து விடயங்களையும் அக்களநிலவரங்களையும கேட்டறிந்து தீவிரமாக ஆராய்ந்த எமது தலைவர் அவர்கள். மீனவர்கள மீதுதானே தாக்குதல் நடத்துகிறார்கள் என்றால் அதற்கேற்றாற்போல ஒரு நல்லதொரு தாக்குதற்திட்டம் எமது தலைவர் அவர்களால் கொடுக்கப்பட்டது.அதற்கமைவாக ஒரு ரோலர் கொள்வனவு செய்து அவ்ரோலரில் வெடிமருந்துகள் பொருத்தப்பட்டு மூன்று கடற்கரும்புலிகள் செல்வார்கள் .

அவர்கள் சாதரண மீன்பிடி ரோலரைப்போல மீன்பிடியில் ஈடுபடுவார்கள் .இலங்கைக்கடற்படையினர் தமது வழமையான தாக்குதலை அப்பாவி மீனவர்கள் மீது நடாத்தலாம் என எண்ணி ரோலருக்கு மிக அண்மையாக வரும்போது இக்கடற்கரும்புலிகள் மீன்களைக் கொடுப்பது போல பாவனைசெய்து வரும் இலங்கைக் கடற்படையின் டோறாப்பீரங்கிக்கலம் மீது தாக்குதல் நடாத்துவார்கள் இதுவே அத்தாக்குதற் திட்டமாகும். திட்டத்திற்கமைவாக நீண்ட கடலனுபவம் கொண்ட கடற்கரும்புலிவீரர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். தாக்குதற் திட்டத்திற்கமைவாக 2000 ஆண்டு.

மூன்றாம் மாதம் முற்பகுதியில் இக்கடற்கரும்புலிவீரர்கள் தமது இலக்கை அதாவது மக்களுக்கு பாரிய அழிவுகளை கொடுத்துககொண்டிருந்த இலங்கைக்கடற்படையினரின் கலத்தை அழிப்பதற்கான தங்களது பயணத்தை ஆரம்பித்தார்கள்.கடுமையான காற்று
சீரற்ற காலநிலை இவைகளுக்கும் மத்தியில் தங்களது இலக்கை நோக்கி இக்கடற்கரும்புலிவீரர்கள் சென்றார்கள்.கிட்டத்தட்ட ஒருவாரமாக அக்கடலில் தங்களது இலக்கிற்க்காக அலைந்து திரிந்தார்கள் .

இறுதியாக 12.03.2000 அன்று அதிகாலை இவர்களது ரோலரை அண்மித்த இலங்கைக்கடற்படையினர் இவர்களை விரட்டி மீன்களைப்பறித்து இவர்களை தாக்கமுற்பட்டபோது அவ் அதிவேகடோறாப்படகுமீது தாக்குதல் நடாத்தி மன்னார் கடலிலே தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக ஒரு புதியவரலாற்றை எழுதிச்சென்றார்கள் இக்கடற்கரும்புலிவீரர்கள்.

http://irruppu.com/wp-content/uploads/2021/08/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E2%80%A6%E0%AE%AE%E0%AF%87%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-840x473.jpg

அதுவரை தமிழ் மீனவர்களுக்கு இலங்கைக் கடற்படையினரால் இருந்த தொந்தரவும் நீங்கியது.மீண்டும் தமிழ்மீனவர்கள் மீது கைவைத்தால் இப்படியான தாக்குதல் நடக்குமென்பதால் இலங்கைக்கடற்படையினரும் தமிழ்மீனவர்கள் மீது தாக்குதலை நடத்தாமல் ஒதுங்கிக்கொண்டனர். இத்தீரமிகு தாக்குதலில் ஒரு டோறாப்படகு பாரியசேதமடைந்ததுடன் பலகடற்படைபடையினர் கொல்லப்பட்டதுடன் பலகடற்படையினர் படுகாயமடைந்தனர்.

இத்தீரமிகு தாக்குதலை எமது தலைவர் அவர்களின் திட்டத்திற்கமைவாக கடற்புலிகளின் அப்போதைய தளபதி பிருந்தன் மாஸ்ரர் அவர்கள் செவ்வனவே வழிநடாத்தியிருந்தார்.

இவ்வீரமிகு தாக்குதலில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகளான…

  1. கடற்கரும்புலி …மேஐர்.பரதன்.
  2. கடறகரும்புலி…மேஐர்.மதன்.
  3. கடற்கரும்புலி..கப்டன்.தினேஸ்.

எழுத்துருவாக்கம்…சு.குணா

http://irruppu.com/2021/08/10/ஆழ்கடல்-தமிழ்-மீனவர்களின/

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.