Jump to content

மணலாற்றில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தை தடுத்து நிறுத்திய விடுதலைப்புலிகளின் தாக்குதலொன்று.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழத்தின் இதயபூமியான மணலாற்றில் காலம்காலமாக அங்கு வாழ்ந்து வந்த தமிழ்மக்களை மிருகத்தனமாக தாக்கி விரட்டி விட்டு அங்கே சிங்கள அரசின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்திற்கான ஏற்பாடுகளை இலங்கை இராணுவம் துரிதகதியில் மேற்கொண்டு வந்தது.அதே நேரம் இத்திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திற்க்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இலங்கை இராணுவத்தின் காவலரன்களும் துரிதமாக அமைக்கப்பட்டன.


இத்தகவல்களை மணலாற்று வேவுஅணிகள் தளபதிகளான அன்பு அவர்கள் மற்றும் வீமன் அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்கள்.இத்தளபதிகளோ எமது தலைவர் அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்கள்.வடக்கு கிழக்கு தமிழர்களின் மாகாணங்களைப் பிரிப்பதற்காகவும் தமிழர்களின் தொடர் நிலப்பரப்பினைச் சிதைப்பதற்காகவுமே இத்திட்டமிட்ட சிங்களக்குடியேற்றத்திட்டம் அமைக்கப்படுவதாகவும் இவைகளுக்குப்பாதுகாப்பு வழங்கும் காவலரன்களைத் தாக்கி அழிக்க உத்தரவிட்டதோடு அதற்கான ஆலோசனைகளையும் வழங்கி இத்தாக்குதலில் குடியேற்றப்பட்ட சிங்களமக்களுக்கு எந்தவித சேதமும் ஏற்படக்கூடாது என்று கூறி தளபதிகளை வழியனுப்பி வைத்தார். தலைவர் அவர்கள்.வேவு அணிகள் கொடுத்ததரவுகளின் அடிப்படையில் தலைவர் அவர்கள் நல்லதொரு தாக்குதற்த்திட்டத்தைக் கொடுத்தார்.அதற்கமைவாக இருநூறுபேர்கொண்ட ஆண் பெண் போராளிகளைக் கொண்ட அணிகள் பிரிக்கப்பட்டு கடுமையான பயிற்சிகள் வழங்கப்பட்டன பயிற்சிகள் நிறைவுபெற்று தாக்குதல் திட்டம் கமல் முகாமில் சிறப்புத் தளபதி அன்பு அவர்களால் விளங்கப்படுத்தப்பட்டது.

(அத்துடன் களத்தை வழிநடத்துகிற தளபதி வீமன் அவர்களுக்கு சிறப்புத்தளபதி அன்பு அவர்கள் தெளிவான ஒருவிடயத்தைக் கூறினார்.தமிழர்தாயகப்பிரதேசத்தின் மணலாற்றின் முக்கியத்துவத்தை ஆழமாகவிளங்கப்படுத்தி அதனைப் பாதுகாக்கும் பொறுப்பை எமது தலைவர் அவர்கள் எங்களிடம் ஒப்படைத்திருக்கிறார்.எனவே எமது மக்களின் தாயகப்பரப்பு துண்டாடப்படாமல் இருக்க என்ன விலைகொடுத்தாலும் இக்காவலரன்களை அழிக்கவேண்டும். ஏனெனில் இக்காவலரன்களை அழிக்காமல் விட்டால் திட்டமிட்ட சிங்களக்குடியேற்றத்தை தடுக்கவும் முடியாது என்பதற்காகவே அவர் கடும்தொணியில் இவ்விடயத்தைக்கூறினார்.ஒவ்வொருபோராளியும் இவ்விடயத்திலிலுள்ள அர்த்தத்தைப் புரிந்து கொண்டு இக்காவலரன்களை அழிக்கவேண்டுமென மனதில் உறுதிபூண்டார்கள்.) திட்டத்தின்படி திட்டமிட்ட சிங்களக்குடியேற்றத்திட்டத்திற்க்கு பாதுகாப்பாக அமைக்கப்பட்ட அனைத்துக் காவலரன்களை அதாவது இருபத்திஐந்திற்க்கும் மேற்பட்டகாவலரண்கள். தாக்கியழிப்பதே திட்டமாகும். திட்டத்திற்கமைவாக 02.03.1992 அன்று இரவு வேவு அணிகள் பெருஙகாடுகளுக்கூடாக மிகவும் தாக்குதல் அணிகளை மிகவும இரகசியமாக நகர்த்தி 03.03.1992 அன்று அதிகாலை சுமார் ஒருமணியளவில் எதிரியின் தாக்கவேண்டிய காவலரன்களுக்கு அண்மையாகக் கூட்டிச்சென்று விட்டனர். தாக்குல் அன்றைய தினம் அதிகாலை இரண்டு மணியளவில் ஆரம்பாமானது தாக்குதல் ஆரம்பித்த குறுகிய நேரத்தில் அனைத்துக் காவலரன்களும் விடுதலைப்புலிவீரர்களின் பூரணகட்டுப்பாட்டிற்க்குள் வந்தது.கைப்பற்றப்பட்ட அனைத்துக் காவலரன்களையும் அழித்துவிட்டு கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் புலிகள் தளம் திரும்பினர்.

May be an image of 1 person and text

இவ்வெற்றிகரத்தாக்குதலை களத்தில் தளபதி வீமன் அவர்களும் உதவியாக லெப்.கேணல்.கஐந்திரன் அவர்களும்(வீரச்சாவு..30.12.2006) வழிநடாத்த அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கினைத்து முல்லை மணலாறு மாவட்டச் சிறப்புத் தளபதி லெப்.கேணல். அன்பு அவர்கள் வீரச்சாவு.(12.11.1993) செவ்வனவே வழிநடாத்தியிருந்தார்.

இத்தாக்குதலுக்கான வேவுத்தகவல்களை சேகரித்துத் தந்ததுடன் தாக்குதல் அணிகளையும் களத்திற்க்குள் குறிப்பிட்டநேரத்திற்க்குள் நகர்த்தி சண்டையிலும் பங்காற்றி பின்னாளில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் .இளம்புலி அவர்களையும் நினைவுகூருகின்றோம்.

May be an image of 1 person and text

இவ்வெற்றிகரத்தாக்குதலில் களத்தை வழிநடாத்திய தளபதி மேஐர்.வீமன் அவர்கள் வீரச்சாவடைந்தார்.

எழுத்துருவாக்கம்..சு.குணா.

http://irruppu.com/2021/08/15/திட்டமிட்ட-சிங்களக்-குடி/

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • குறிப்பாக அடிமை வரலாறு, காலனித்துவம் போன்றவற்றை மீள கிளறுவது. மன்னிப்புகேள், நட்டைஈடு கொடு என்பது. எதுவரைக்கும் இது நீளும்? எகிப்தியர்? கலிபாக்கள்? தைமூர்? சோழர்? ஜிஞிஸ்கான்?   
    • மேற்கு நாடுகளில் வலதுசாரிகளின் எழுச்சிக்கான காரணம்களில் இதுவும் ஒன்று.. 
    • இந்த ஆய்வை வேறு எந்த அமரிக்க ஜனாதிபதிக்கு என்றால் நானும் ஏற்பேன். ஆனால் டிரம்ப் வேறு வகை. உண்மையில் அவர் ஒரு சூழ்நிலைக்கைதி. மிகவும் தெளிவான அவதானிப்பு, விளக்கம். பெனிபிட்டில் இருந்து ஆட்கள் செய்யும் களவுகளை பார்க்க முற்போக்கான சிந்தனை உள்ளவர்க்கே மண்டை வேர்க்கும் போது, சராசரி குடிமகன் வலது பக்கம் சாய்வதில் வியப்பேதும் இல்லை.
    • அமெரிக்கவை பற்றி தெரியவில்லை. ஆனால் பொதுவாகவே மேற்கில் இடது மிதவாதிகள் கூட கொஞ்சம் ஓவராக போய்விட்டார்கள் என்ற எண்ணம் எனக்குள்ளது. பொருளாதார அணுகுமுறை அல்ல, பண்பாட்டு யுத்தங்களை (cultural wars) சொல்கிறேன்.  2000ம்களில் பெண்ணியம், எதிர்பாலின ஈர்ப்பு உள்ளோர் போன்ற விடயங்களில் வழங்கப்பட்டிருந்த சட்ட அங்கீராம் - பெரும்பான்மை மக்களுக்கு பிரச்சனையாக இருக்கவில்லை. ஆனால் - தொடர்ந்து ஒரு பாலின உறவை civil partnership என திருமண நிகர் உறவாக்கி, இப்போ இரு பாலினத்தவர் திருமணமே செய்யலாம் எனும் நிலை உருவாகியுள்ளது. இது மட்டும் அல்ல, பல நகரங்களில் குடியேற்றம் அதன் இனப்பரம்பலை முழுவதுமாக மாற்றி சில இடங்களில் வெள்ளையினத்தவரே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இதே போல் ஆணுக்குரிய அத்தனை அம்சங்களை வைத்துக்கொண்டு, நான் பெண்ணாக உணர்கிறேன் என்பவரும் தமக்கு பென்னுரிமை வேணும் என்கிறார்கள். இவற்றில் பல உங்களுக்கு, எனக்கு, நம் போன்றோருக்கு, dare I say முற்போக்கு சிந்தனை உள்ளோருக்கு பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் மேற்கில் பலருக்கு இது திகட்டி விட்டது. இதை அதி வலதுசாரிகள் நன்றாக பயன்படுத்துகிறார்கள். டிரம்ப் வெல்ல பிரதான காரணம் பொருளாதாரம்தான். இரெண்டாவது கமலா பெண் என்பது. ஆனால் இந்த பண்பாட்டு யுத்த கூறுகளும் பங்காற்றின. குறிப்பாக குடிவரவு. குடிவரவை கட்டுப்படுத்தாத எந்த அரசும் இனிமேல் மேற்கில் தூக்கி எறியப்படும். இதுதான் யதார்த்தம். மேற்கின் இடதுசாரிகள் கட்டிலாம் எழும்பி கோப்பியை மணக்க வேண்டிய தருணம் இது.   இல்லை…வாசிப்பதாயும் இல்லை. கொஞ்சம் காசு கொடுத்தால் கோஷான் தான் அடுத்த உலக ஜனாதிபதி என எழுதக்கூடிய ஆள். குருமூர்த்தி ஆள் கறார் பேர்வழி, ஜோன்சனை துரத்தியது சரியே.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.