Jump to content

முன்னேறிப்பாய்ச்சலும் புலிப்பாய்ச்சலும் இது ஒருபகுதிக்கான பதிவு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

மண்டைதீவுச் சமரின் பின் அச்சமரில் பங்கு பற்றிய போராளிகளைச் சந்தித்த தலைவர் அவர்கள் எதிரி ஒரு பெரும் தாக்குதலுக்குத் தயாராகுகிறான்.அதற்க்குத் தயாராக இருக்கும்படியும் அதற்கான ஆலோசனைகள் பலவற்றை போராளிகளிடத்தில் கூறினார்.

அதற்கமைவாக வலிகாமம் பகுதியிலுள்ள மாதகல் திருவடிநிலையில் பதினைந்துபேர் கொண்ட சிறு அணி நிலை கொள்ள வேவு அணிகள் முன்னே தமது வேவுத்தகவல்களைச் சேகரித்தன .09.07.1995 அன்று காலை எதிரி பலத்த எறிகணைத்தாக்குதல் மற்றும் விமானத்தாக்குதல்களை நடாத்தியவாறு பாரியதொரு முன்னேற்ற நடவடிக்கையை திருவடிநிலை கடற்கரையோரப் பிரதேசம் நோக்கி ஆரம்பித்தான் .

அங்குநின்ற அணிகள் சிறுசிறு தாக்குதல்களை நடாத்தி பின்வாங்கின. இவ் அணிகளுடன் மேலதிகமாக மூத்த தளபதி பானு அவர்களின் தலைமையில் மேஐர் பசிலன் அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரி அணிகளும் இன்னும் பல அணிகளும் அராலியில் ஒரு அரண் அமைத்து எதிரியின் முன்னேற்றத்தை தடுத்தனர்.ஆனால் 12.07.1995 அன்று அணிகள் பின்னால் எடுக்கப்பட்டதுடன் அனைத்து அணிகளும் மருதனார்மடப் பாடசாலையில் ஒருங்கினைத்து மூத்த தளபதி பொட்டு அவர்கள் தலைமையில் ஒரு பெரும் தாக்குதலுக்கான திட்டம் விளங்கப்படுத்தப்பட்டதுடன்

  • http://irruppu.com/wp-content/uploads/2021/07/IMG-7d8d9dc474fd390ee1a25386a8036ea6-V.jpg

எதிரியின் முன்னேறிப்பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையால் மக்கள் படுகின்ற இன்னல்களைப் பற்றி குறிப்பிட்ட மூத்த தளபதி பொட்டு அவர்கள் இராணுவம் கைப்பற்றிய பிரதேசங்களை பலப்படுத்துவதற்க்கு முன் தாக்குதல் நடாத்த வேண்டுமெனவும்.அணிகள் பிரிக்கப்பட்டு அளவெட்டி பகுதிக்கு மூத்த தளபதி பானு அவர்களும் உதவியாக( 18.10.1995 அன்று சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவடைந்த லெப் கேணல் சங்கர் அவர்களும் நியமிக்கப்பட்டனர்)

.14.07.1995 அன்று அதிகாலை சண்டை ஆரம்பமாகிய சில நிமிடங்களில் முன்னரன்கள் கைப்பற்றப்பட்டு அணிகள் முன்னேறிச் சென்று அருணோதயாப் பாடசாலை உட்பட்ட பெரும்பிரதேசம் எமது பூரண கட்டுப்பாட்டிற்குள் வந்தன.அன்றைய தினம் மதியம் எமதணிகளுடன் மேலதிகமாக மட்டு.அம்பாறைப் படையணிகள் இணைக்கப்பட்டு மாசியப்பிட்டி பகுதியில் தொடர்ந்து சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்த பகுதிக்கு இவ் அணிகள் அனுப்ப்பட்டு அங்கு நின்ற அணிகளுடன் இணைந்து சண்டையிட்டு அவ்விடங்களும் கைப்பற்றப்பட்டன.

http://irruppu.com/wp-content/uploads/2021/07/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D1.jpg

இவ் வெற்றிகர இராணுவ நடவடிக்கையை தலைவர் அவர்களின் ஆலோசனையுடன் மூத்த தளபதி பொட்டு அவர்கள் வழி நடாத்தினார்.இந் நடவடிக்கையில் பெருமளவு படையினர் கொல்லப்பட்டு பெருமளவு ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டு ஒரு புக்காரா விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது.படையினரால் வன்வளைப்புச் செய்யப்பட்ட பிரதேசங்களும் வெற்றிகரமாக மீட்கப்பட்டது்.இந் நடவடிக்கையில் எழுபது போராளிகள் வீரச்சாவடைந்தனர்.

எழுத்துருவாக்கம்..சு.குணா. 

http://irruppu.com/2021/07/14/முன்னேறிப்பாய்ச்சலும்-ப/

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • குறிப்பாக அடிமை வரலாறு, காலனித்துவம் போன்றவற்றை மீள கிளறுவது. மன்னிப்புகேள், நட்டைஈடு கொடு என்பது. எதுவரைக்கும் இது நீளும்? எகிப்தியர்? கலிபாக்கள்? தைமூர்? சோழர்? ஜிஞிஸ்கான்?   
    • மேற்கு நாடுகளில் வலதுசாரிகளின் எழுச்சிக்கான காரணம்களில் இதுவும் ஒன்று.. 
    • இந்த ஆய்வை வேறு எந்த அமரிக்க ஜனாதிபதிக்கு என்றால் நானும் ஏற்பேன். ஆனால் டிரம்ப் வேறு வகை. உண்மையில் அவர் ஒரு சூழ்நிலைக்கைதி. மிகவும் தெளிவான அவதானிப்பு, விளக்கம். பெனிபிட்டில் இருந்து ஆட்கள் செய்யும் களவுகளை பார்க்க முற்போக்கான சிந்தனை உள்ளவர்க்கே மண்டை வேர்க்கும் போது, சராசரி குடிமகன் வலது பக்கம் சாய்வதில் வியப்பேதும் இல்லை.
    • அமெரிக்கவை பற்றி தெரியவில்லை. ஆனால் பொதுவாகவே மேற்கில் இடது மிதவாதிகள் கூட கொஞ்சம் ஓவராக போய்விட்டார்கள் என்ற எண்ணம் எனக்குள்ளது. பொருளாதார அணுகுமுறை அல்ல, பண்பாட்டு யுத்தங்களை (cultural wars) சொல்கிறேன்.  2000ம்களில் பெண்ணியம், எதிர்பாலின ஈர்ப்பு உள்ளோர் போன்ற விடயங்களில் வழங்கப்பட்டிருந்த சட்ட அங்கீராம் - பெரும்பான்மை மக்களுக்கு பிரச்சனையாக இருக்கவில்லை. ஆனால் - தொடர்ந்து ஒரு பாலின உறவை civil partnership என திருமண நிகர் உறவாக்கி, இப்போ இரு பாலினத்தவர் திருமணமே செய்யலாம் எனும் நிலை உருவாகியுள்ளது. இது மட்டும் அல்ல, பல நகரங்களில் குடியேற்றம் அதன் இனப்பரம்பலை முழுவதுமாக மாற்றி சில இடங்களில் வெள்ளையினத்தவரே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இதே போல் ஆணுக்குரிய அத்தனை அம்சங்களை வைத்துக்கொண்டு, நான் பெண்ணாக உணர்கிறேன் என்பவரும் தமக்கு பென்னுரிமை வேணும் என்கிறார்கள். இவற்றில் பல உங்களுக்கு, எனக்கு, நம் போன்றோருக்கு, dare I say முற்போக்கு சிந்தனை உள்ளோருக்கு பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் மேற்கில் பலருக்கு இது திகட்டி விட்டது. இதை அதி வலதுசாரிகள் நன்றாக பயன்படுத்துகிறார்கள். டிரம்ப் வெல்ல பிரதான காரணம் பொருளாதாரம்தான். இரெண்டாவது கமலா பெண் என்பது. ஆனால் இந்த பண்பாட்டு யுத்த கூறுகளும் பங்காற்றின. குறிப்பாக குடிவரவு. குடிவரவை கட்டுப்படுத்தாத எந்த அரசும் இனிமேல் மேற்கில் தூக்கி எறியப்படும். இதுதான் யதார்த்தம். மேற்கின் இடதுசாரிகள் கட்டிலாம் எழும்பி கோப்பியை மணக்க வேண்டிய தருணம் இது.   இல்லை…வாசிப்பதாயும் இல்லை. கொஞ்சம் காசு கொடுத்தால் கோஷான் தான் அடுத்த உலக ஜனாதிபதி என எழுதக்கூடிய ஆள். குருமூர்த்தி ஆள் கறார் பேர்வழி, ஜோன்சனை துரத்தியது சரியே.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.