Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது

முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை செல்லும் வழியில் கொக்கிளாய் எனும் ஊர் உள்ளது.தமிழீழத்தின் இதயபூமியென்றழைக்கப்படும் மணலாற்றுப்பிரதேசத்தில் இவ்வூரும் ஒன்று. 1984ம் ஆண்டின் பிற்பகுதியில் மணலாற்றுப்பிரதேசத்தின் பல ஊர்களில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த தமிழர்கள் இலங்கை இராணுவத்தாற் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள்.

முன்னரும் அடிக்கடி இராணுவத்தாற்பல இன்னல்களை இம்மக்கள் கண்டிருந்தாலும் தமிழீழவிடுதலைப்போராட்டத்திற்குத் தம்மாலான எல்லா ஒத்துழைப்பையும் வழங்கி வந்தனர். இது இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு இடையூறு அளிக்கவே தென்னைமரவடி,கொக்கிளாய்,கருநாட்டுக்கேணி,கொக்குத்தொடுவாய்,நாயாறு,செம்மலை, இன்னும் சில ஊர் மக்கள் விரட்டப்பட்டனர். இதன்போது சிலகுடும்பங்கள் அளம்பில் ஐந்தாங்கட்டையிலிருந்த தெரிந்தவர்களின் தென்னந்தோப்புகளில் குடியேறினர்.அத்தோடு முல்லைத்தீவு ,முள்ளியவளை, புதுக்குடியிருப்பு,இன்னும் எங்கெங்கெல்லாமோ சென்று வாழ முற்பட்டனர் அகதிகளான மக்கள்.

வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இதயபூமியை சிங்களமயமாக்கும் திட்டத்தை விரைவுபடுத்த எண்ணி இராணுவம் கொக்கிளாய்ப்பாடசாலையை இராணுவமுகாமாகமாற்றி முல்லை திருகோணமலை இராணுவப்போக்குவரத்திற்கும் சிங்களக்குடியேற்றத்திற்கும் பெரும் பலத்தை ஏற்படுத்தியது. கொக்கிளாய் இராணுவமுகாம் அகற்றப்படவேண்டிய அவசியத்தை உணர்ந்தவிடுதலைப்புலிகள் அதனைத்தாக்கியழிக்க முடிவெடுத்தனர்.இத்தாக்குதலுக்கு மக்களும் பலவழிகளில் புலிகளுக்கு உதவினர். 1985.2.13 அன்று அதிகாலைநேரம் கொக்கிளாய் முகாமின்மீது விடுதலைப்புலிகள் தாக்குதலை மேற்கொண்டனர். நேர்த்தியான வேவின் பின் மணலாற்றுக்காட்டின்வழியே சென்ற தாக்குதலணி துணிச்சலுடன் முகாமைப் பலமாகத்தாக்கியது.இத்தாக்குதலை எதிர்பார்த்திராத இராணுவம் நிலைகுலைந்துபோனது.இத்தாக்குதலே தமிழீழ விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவமுகாம்மீதான முதலாவது தாக்குதலாகும்.இதன்போது 16 போராளிகள் வீரச்சாவைத்தழுவிக்கொண்டார்கள்.அவர்களிற் பலரின் வித்துடல்களை மீட்கமுடியவில்லை.அக்காலப்பகுதியில் இவ்வீரச்சாவுகள் விடிவுக்கு முந்திய மரணங்களாக மக்களால் நினைவுகொள்ளப்பட்டன.இத்தாக்குதலால் இலங்கை இராணுவம் இக்கட்டான சூழ்நிலைக்குத்தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

லெப்டினன்ட் சைமன்
கனகரத்தினம் ரஞ்சன்
பொத்துவில், அம்பாறை
வீரப்பிறப்பு:20.09.1956

லெப்டினன்ட் பழசு
முதுங்கொடுவ உடுகமகே கேமசிறி
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரப்பிறப்பு:10.10.1963

வீரவேங்கை கெனடி
கனகசபை வில்வராசா
கிரான், வாழைச்சேனை, மட்டக்களப்பு.
வீரப்பிறப்பு:19.04.1961

வீரவேங்கை காந்தரூபன்
பொன்னையா சந்திரகுமார்
கல்லடி, மட்டக்கள்ப்பு.
வீரப்பிறப்பு:30.07.1964

வீரவேங்கை ஜெகன் (இடிஅமீன்)
சண்முகராசா பிரபாகரன்
லிங்கநகர், திருகோணமலை.
வீரப்பிறப்பு:26.01.1963

வீரவேங்கை காந்தி
கந்தையா பரமேஸ்வரன்
தம்பலகாமம், திருகோணமலை
வீரப்பிறப்பு:17.08.1956

வீரவேங்கை ரவி
நமசிவாயம் தர்மராஜா
செம்மலை, அளம்பில், மணலாறு.
வீரப்பிறப்பு:02.10.1964

வீரவேங்கை வேதா
கனகு இராசநாயகம்
சங்கத்தடி, கண்டாவனை, பரந்தன், கிளிநொச்சி
வீரப்பிறப்பு:30.10.1959

வீரவேங்கை ரஞ்சன்மாமா
பொன்னையா சண்முகநாதன்
கண்டாவளை, பரந்தன், கிளிநொச்சி.
வீரப்பிறப்பு:16.10.1951

வீரவேங்கை காத்தான்
துரைச்சாமி சிறீமுருகன்
குமரபுரம், பரந்தன், கிளிநொச்சி.
வீரப்பிறப்பு:05.03.1961

வீரவேங்கை மயூரன்
குணசிங்கராசா துவாரகன்
மீசாலை தெற்கு, யாழ்ப்பாணம்.
வீரப்பிறப்பு:02.02.1967

வீரவேங்கை சொனி
சதாசிவம் அன்ரனி
நுணாவில் மேற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரப்பிறப்பு:03.01.1964

வீரவேங்கை தனபாலன்
தியாகராசா வரேந்திரன்
காரைநகர், யாழ்ப்பாணம்.
வீரப்பிறப்பு:30.09.1965

வீரவேங்கை சங்கரி
செல்லமாணிக்கம் பாலசுந்தரம் பாலகணேஸ்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரப்பிறப்பு:01.06.1962

வீரவேங்கை மகான்
கதிரவேலு செல்வராசா
கம்பர்மலை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரப்பிறப்பு:22.05.1962

வீரவேங்கை நிமால்
கந்தையா ஜெயந்தன்
தும்பளை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரப்பிறப்பு:22.03.1966

 

http://irruppu.com/2021/02/13/கொக்கிளாய்-இராணுவமுகாம்/



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.