Jump to content

குறுங்கதை 7 -- மண்சோறு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
மண்சோறு
-----------------
ஜெயலலிதா இறந்து விட்டாராம் என்று செய்தி பரவி ஊரே கதவுகளை அடித்து மூடிக் கொண்டிருந்தது. வெளியில் எங்கும் போகாதே என்றும், தான் இப்பொழுது என் வீட்டிற்கு வந்து கொண்டிருப்பதாகவும் மாமி தொலைபேசியில் கூப்பிட்டுச் சொல்லியிருந்தார். மாமியின் வீடு திருச்சியின் மாநகரப் பகுதியில் ஒரு எல்லையில் இருந்தது. நான் தங்கி நிற்கும் வீடு, போன வாரம் வரை அங்கு உயிருடன் இருந்த என் தந்தையின் வீடு அது, நகரின் இன்னொரு எல்லைப் பகுதியில் இருந்தது. மாமி என் தந்தையின் கடைசி தங்கை. ஊர் இருக்கும் இந்தப் பதட்டத்தில், ஏன் இந்தப் பதட்டம் என்றும் எனக்கு விளங்கவில்லை, இவர் ஏன் நகரின் குறுக்காக வருகின்றார் என்றும் எனக்கு தெரியவில்லை.
 
'உனக்கு என்ன தெரியும்......... இவங்கள் கொளுத்திப் போடுவாங்கள்......' என்று விளக்கம் சொன்னார் மாமி. கடையை, வாகனத்தை, ஆட்களைக் கூட கொளுத்துவார்களாம். ஒரு பஸ்ஸுடன் சில பிள்ளைகளுக்கு நடந்தது எனக்குத் தெரியாது என்றார். தெரியும் என்று சொல்வதை விட, தெரியாது என்று சொல்லி, அவர் சொல்வதைக் கேட்பது ஒப்பீட்டளவில் இலகுவான ஒரு விடயம்.
 
பின்னர் சிறிது நேரத்தில் ஜெயலலிதா இன்னும் இறக்கவில்லை என்ற செய்தி வந்தது. முதல் வந்தது வதந்தி என்றனர். அப்பலோவில் அன்று அவர் இட்லி சாப்பிட்டதாகவும் செய்தி வந்து கொண்டிருந்தது. மாமி அதை நம்பவில்லை. இவங்கள் பொய் சொல்கின்றனர் என்றார் அவர். என்னை விமானச் சீட்டை மாற்றிக் கொண்டு உடனேயே அங்கிருந்து கிளம்பச் சொன்னார். எந்த நேரத்திலும் எதுவும் நடக்கும், நான் அங்கு நின்று செய்வதற்கு ஒரு காரியமும் இல்லை என்பதும் அவரின் இன்னொரு நியாயம்.
 
அடுத்த நாள் வீட்டிற்கு ஒருவர் வந்தார். அந்த நபரை முன்னர் எங்கேயோ பார்த்திருக்கின்றேன் என்று தோன்றியது. அவரே ஞாபகப்படுத்தினார், சில வருடங்களின் முன் அவர் என் அம்மாவின் இறப்பு சான்றிதழ் எடுத்து தந்த உதவியை. நல விசாரிப்புகளின் பின், சும்மாவா வந்தீர்கள் என்று கேட்டேன். இல்லை, மாமி தான் வரச் சொல்லியிருந்தார் என்றார். என் விமானச் சீட்டை மாற்றுவதற்கு மாமி ஏற்பாடு செய்கின்றார் போல என்று மெல்லிய சிரிப்பு வந்தது.
 
வந்த மாமி, இவர் என் தந்தையின் மரண சான்றிதழ் எடுத்து தருவார் என்றார். அது எனக்கு தேவையே இல்லை, அதை வைத்து நான் என்ன செய்ய என்று வேண்டாம் என்று சொன்னேன். இங்கு எல்லோரும் அதை எடுப்பார்கள், எடுத்துக் கொண்டு போவார்கள், கட்டாயம் எடுக்கத்தான் வேண்டும் என்றார் மாமி. அம்மாவின் சான்றிதழை எடுத்ததை நினவு கூர்ந்தார். அது இப்பொழுது எங்கே இருக்குதோ. சரி, ஏதோ உங்களின் விருப்பம் என்று ஒதுங்கினேன்.
 
ஒரு பிரபல நடிகர் அரசியலில் இறங்கியிருந்த காலமும் அது. அவர் இந்த பிறப்பு, இறப்பு மற்றும் பல சான்றிதழ்களைப் பெற எவ்வளவு இலஞ்சம், எப்படி கொடுக்கப்படுகின்றது என்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்லியிருந்தார். ஆதாரங்கள் தன்னிடம் இருக்கின்றது என்றார். ஆதாரங்கள் இருந்தால், அதை எடுத்துக் கொண்டு கவர்னரிடம் போகலாம் தானே என்று சில பத்திரிகையாளர்கள் அங்கேயே கேட்டு இருந்தனர். மக்கள் தான் என்னுடைய கவர்னர் என்று சொல்லியிருந்தார் அந்த நடிகர். அவர் என்ன சொன்னாலும் எவருக்கும் எதுவுமே புரியாது என்பது அவரின் தனித்துவம்.
 
நடிகர்கள் மட்டுமே புது அரசியல் கட்சிகள் தொடங்கும் தேசம் அது. அதுவே ஒரே  விதமான கொள்கை மற்றும் அறிக்கைகளுடனேயே ஆரம்பிப்பார்கள். ஊழலற்ற, இலஞ்சமற்ற, சமத்துவ சமுதாயம்.........என்று அந்த அறிக்கை போகும்.
 
அந்த நபரை எவ்வளவு காசு என்று கேட்டார் மாமி. என்ன காசு, அது தான் அந்த பிரபல நடிகர் இதிலிருக்கும் இலஞ்சம் எல்லாவற்றையும் வெளிக் கொண்டு வந்து விட்டாரே, இனிமேல் என்ன காசு என்றேன் நான். மாமி அருகில் நின்றபடியால் சில வார்த்தைகளை முழுதாகச் சொல்லாமல் விழுங்கிய அந்த நபர், இப்பொழுது ஒவ்வொரு சான்றிதழுக்கும் முன்பிருந்த இலஞ்சத்தை விட இரண்டு மடங்குகள் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்.
Edited by ரசோதரன்
  • Like 5
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரசோதரன் said:

என்ன காசு, அது தான் அந்த பிரபல நடிகர் இதிலிருக்கும் இலஞ்சம் எல்லாவற்றையும் வெளிக் கொண்டு வந்து விட்டாரே, இனிமேல் என்ன காசு என்றேன் நான்.

ரொம்ப அப்பாவியாக இருக்கிறீங்களே? வீட்டில் எப்படி காலம் தள்ளுகிறீர்கள்?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கெல்லாம் ஒருவர் இறந்தால் அவரது மரணச்சான்றிதழ் தபாலில் வீட்டுக்கே வந்து விடும்.......அதனுள் நாலு கொப்பியும் சேர்ந்திருக்கும்.......ஊழலில் திளைத்திருக்கும் இந்த நாடுகள் எல்லாம் ஒரு யுகமானாலும் திருந்த சந்தர்ப்பமே இல்லை......!  😴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kavi arunasalam said:

ரொம்ப அப்பாவியாக இருக்கிறீங்களே? வீட்டில் எப்படி காலம் தள்ளுகிறீர்கள்?

🤣..........

என்னைப் போலவே பல பேர், இலட்சக் கணக்கில், இங்கே சுத்தித் திரிகின்றார்கள்.......🤣.

ஊழலையும், இலஞ்சத்தையும் ஒழிக்க தங்கள தல, தளபதி வந்து விட்டார் என்று இன்னும் நம்புகின்றார்கள்....... இவர்கள் ஏதாவது ஒரு அரச அலுவலகத்திற்கு போய்ப் பார்த்தால் உண்மை விளங்கும், திரையில் தெரிவது வெறும் மாய விம்பம் என்று.

சிறு பிள்ளைகளின் மண்சோறு விளையாட்டுகள் போன்றது இந்தக் கோஷங்கள்........ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரசோதரன் said:

இப்பொழுது ஒவ்வொரு சான்றிதழுக்கும் முன்பிருந்த இலஞ்சத்தை விட இரண்டு மடங்குகள் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்.

ஓ இதுதான் பிரபல நடிகர் செய்த வேலையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

இங்கெல்லாம் ஒருவர் இறந்தால் அவரது மரணச்சான்றிதழ் தபாலில் வீட்டுக்கே வந்து விடும்.......அதனுள் நாலு கொப்பியும் சேர்ந்திருக்கும்.......ஊழலில் திளைத்திருக்கும் இந்த நாடுகள் எல்லாம் ஒரு யுகமானாலும் திருந்த சந்தர்ப்பமே இல்லை......!  😴

தாங்கள் இலஞ்சம் வாங்குகின்றோம் என்று கூட அவர்களுக்கு தெரிவதில்லை. செய்யும் வேலைக்கு சம்பளம் வாங்குவது போல வாங்கி விட்டுப் போய்க் கொண்டிருக்கின்றார்கள்......... சமீபத்தில் அங்கு அடுத்தடுத்து மூன்று விமான நிலையங்களில் தூண்களும், கூரைகளும் விழுந்து விட்டன.... காரணம் தேடினால் கடைசியில் எவ்வளவு இலஞ்சம் கைமாறியது என்று தெரிய வரும்..........🫣   

5 hours ago, ஈழப்பிரியன் said:

ஓ இதுதான் பிரபல நடிகர் செய்த வேலையோ?

இலஞ்சத்தையும், ஊழலையும் எப்படி கட்டுப்படுத்துவது, இல்லாமல் ஆக்குவது என்பதிற்கு இயக்குனர் ஷங்கர் தான் அவர்களின் வழிகாட்டி...........🫣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரசோதரன் said:

ஊழலையும், இலஞ்சத்தையும் ஒழிக்க தங்கள தல, தளபதி வந்து விட்டார் என்று இன்னும் நம்புகின்றார்கள்....... இவர்கள் ஏதாவது ஒரு அரச அலுவலகத்திற்கு போய்ப் பார்த்தால் உண்மை விளங்கும், திரையில் தெரிவது வெறும் மாய விம்பம் என்று.

சிறு பிள்ளைகளின் மண்சோறு விளையாட்டுகள் போன்றது இந்தக் கோஷங்கள்........ 

எம்ஜிஆர், அதிமுக தொடங்கிய காலம், “இலங்கையில் தமிழ் மக்கள் சிங்களவர்களால் தாக்கப்படுகிறார்களே, இது பற்றி உங்கள் கருத்து என்ன?” என்ற ஒரு நிருபரின் கேள்விக்கு எம்ஜிஆர் சொன்ன பதில், “எனக்கு இலங்கையில் தமிழ் இரசிகர்கள் மட்டுமல்ல சிங்கள இரசிகர்களும் இருக்கிறார்கள்என்பதே. கருணாநிதி சும்மா இருப்பாரா? ‘மலையாளிஎன எம்ஜிஆரை வறுத்தெடுக்க ஆரம்பித்து விட்டார்.

ஆட்சிக்கு வந்த பின்னர் மெது மெதுவாக நகர்ந்து தமிழ் விடுதலை இயக்கத்தை தேடி வரவழைத்து பேசி புகைப்படம் எடுத்து, தமிழீழப் போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு நாலு கோடி கொடுக்கிறது என அறிவித்தார். “யோவ், இருக்கிற பிரச்சினைகள் காணாது என்று நீ வேறை.. இது வெளிநாட்டு விவகாரம். மத்திய அரசின் வேலை. மானில அரசின் வேலையை மட்டும் நீ பார் எனமத்திய அரசு கோபத்துடன் எச்சரிக்க, தனது கட்சிப் பணத்தில் நாலு கோடியை எடுத்துக் கொடுத்து, “இது புனர் வாழ்வுக்கு, போராட்டத்துக்கு அல்லஎன்று சொல்லி தனது அறியாமையைகளை மறைத்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டார்.

இப்பொழுது தளபதி, ‘நீட்விவகாரம்ஒன்றிய அரசுஎன மேடையில் அவிழ்த்து விட வைச்சுக் காய்ச்சிக் கொண்டிருக்கிறாங்கள். நடிகர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்றில்லை, குறைந்த பட்சம் அரசியல் பற்றிஅனா, ஆவண்ணாஆவது தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டாமா? “ஸ்ஸபா இப்பவே கண்ணைக் கட்டுதேஎன்ற நிலைதான் தளபதிக்கு இப்ப வந்திருக்கும். இன்னும் நிறைய வரும். பார்ப்போம்

ஊழலை தமிழ்நாட்டில் இருந்து பிரிக்க முடியாது. செந்தமிழன் வந்தாலும் சரி, தளபதி வந்தாலும் சரி இதுதான் நிலமை. நீங்கள் சொன்னது போல் ‘சிறு பிள்ளைகளின் மண்சோறு விளையாட்டு’

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kavi arunasalam said:

அரசியலுக்கு வரக் கூடாது என்றில்லை, குறைந்த பட்சம் அரசியல் பற்றிஅனா, ஆவண்ணாஆவது தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டாமா?

👍.......

முன் அனுபவம் தேவையில்லை என்று சில வேலைக்கான விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படித்தான் இங்கேயும் நினைத்து உள்ளே வருகின்றார்கள்.

ஒரு துறையில் சிறப்புத் தேர்ச்சியும், திறமையும், ஆளுமையும் இருப்பவர்கள் எல்லா துறைகளிலும் அப்படியே சிறப்பாக வருவார்கள், செய்வார்கள் என்று கருதுவது முதிர்ச்சி அடையாத ஜனநாயகத்தின் ஒரு இயல்பு என்று சமீபத்தில் ஒரு இடத்தில் வாசித்திருந்தேன். அப்படியே பொருந்துகின்றது.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.