Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)
ஒரே ஒரு மன்னிப்பு
------------------------------
அவர் எனக்கு ஒரு ஒன்று விட்ட தாத்தா முறை. மூன்று அல்லது நான்கு தலைமுறைகள் பின்னோக்கி போய்ப் பார்த்தால், ஒரு குடும்பத்தில் இருந்து நாங்கள் இன்று பல கிளைகளாக, பல குடும்பங்களாக வந்தது தெளிவாகவே தெரிந்தது. அவரின் பதிவுப் பெயர் எனக்கும், ஊரில் பலருக்கும் தெரியாது. எல்லோரும் அவரை கூப்பிடும் பெயர் கொஞ்சம் விநோதமானது. ஒரு காலத்தில் நீண்ட தலைமுடி வைத்து, அதை சிலுப்பிக் கொண்டு ஊருக்குள்ளே சுற்றித் திரிந்திருக்கின்றார் போல.  அதனால் அப்படியே அந்தப் பட்டப் பெயர் அவருடன் ஒட்டிவிட்டது. ஊரில் அநேகமாக எல்லோருக்கும் பட்டப் பெயர்கள் இருந்தன, பெரும்பாலும் அந்தப் பெயர்களே பாவனைகளிலும் இருந்தன.
 
ஒன்று விட்ட தாத்தாவின் விநோதமான பெயரைப் போலவே அவரின் வீடும் கொஞ்சம் விநோதமானது. இரண்டு ஒழுங்கைகள் முடிகின்ற, அல்லது  அவை தொடங்குகின்ற இடத்தில் அவரின் வீடு இருந்தது. இரண்டு பக்கங்களிலும் கதவுகள் இருந்தன. ஊரவர்கள் அவரின் வீட்டு வளவினூடு மிகச் சாதாரணமாகப் போய் வருவார்கள். ஒன்று விட்ட தாத்தாவின் மனைவியான அந்த அப்பாச்சி மிகவும் அன்பானவர். அந்த அன்பே ஊரவர்களை அந்த வீட்டை பாதையின் ஒரு பகுதியாக பயமின்றி நினைக்க வைத்துக் கொண்டிருந்தது. அவர் வீட்டில் ஒரு பெரிய கொய்யா மரம் நின்றது. எல்லோரும் காய்களும், பழங்களும் பிடுங்குவார்கள். அப்பாச்சி பார்த்தால் சிரித்துக் கொண்டு போய்விடுவார். ஒன்று விட்ட தாத்தா வெளியே வந்தால் எவரென்றாலும் ஓடிவிடுவார்கள்.
 
ஒரு சமயம் ஒன்று விட்ட தாத்தா சில நாட்கள் எங்கள் வீட்டில் தங்க வேண்டி வந்தது. அவர்களின் குடும்பத்தில், தாத்தாவின் இளைய மகனுக்கு, தமிழ்நாட்டில் திருமணம் நடப்பதாக முடிவாகியிருந்தது. அந்த மகன் இலங்கைக்கு வர முடியாத சூழ்நிலையால், திருமணச் சடங்கை தமிழ்நாட்டில் வைப்பதாக முடிவெடுத்திருந்தார்கள். அந்த நேரத்தில் ஒன்று விட்ட தாத்தாவால் பயணம் போக முடியாது என்று  அவரை எங்கள் வீட்டில் விட்டுப் போயிருந்தனர் அப்பாச்சியும், அவரின் குடும்பமும்.
 
ஒன்று விட்ட தாத்தா வந்த நாளிலிருந்தே ஆரம்பித்துவிட்டார். வீட்டில் இருப்பவர்களுக்கு அவருடன் காலம் தள்ளும் ஒவ்வொரு பொழுதும் போதும் போதும் என்றாகியது. என் தந்தை வீட்டிலே நிற்கும் நேரம் வெகு குறைவு. அவருக்கு இப்படி ஒரு விடயம் வீட்டில் நடந்து கொண்டிருக்கின்றது என்பதே தெரியாது. தெரிந்திருந்தாலும், அவர் பிரச்சனையை தீர்த்து வைத்திருப்பார் என்றும் இல்லை. முக்கியமாக இந்தப் பிரச்சனைக்கு தீர்வு என்று ஒன்றும் இல்லை. என்ன ஆனாலும் ஒன்று விட்ட தாத்தாவின் குடும்பம் திரும்பி வரும் வரை அவர் எங்கள் வீட்டில் இருந்து தான் ஆகவேண்டும்.
 
இரண்டு வாரங்கள் ஓடியது. அம்மாதான் மிகவும் கஷ்டப்பட்டு போனார். விருப்புகளையும், வெறுப்புகளையும் அடக்கி அடக்கி வெளிக் காட்டாமல் வாழும் அன்றிருந்த எல்லா குடும்ப தலைவிகளையும் போன்றவர் தான் அவரும். ஒன்று விட்ட தாத்தாவின் வீட்டார்கள் இந்தியாவிலிருந்து திரும்பி வந்து, அப்பாச்சியும் அவரின் மூத்த மகனும் ஒன்று விட்ட தாத்தாவை கூட்டிப் போவதற்கு எங்கள் வீட்டிற்கு வந்திருந்தனர். 
 
வாசல் வரை போன ஒன்று விட்ட தாத்தா, நாங்களும் ஒரு இடைவெளி விட்டு பின்னால் போய்க் கொண்டிருந்தோம், திடீரென்று நின்று அம்மாவை கையெடுத்துக் கும்பிட்டார். 'நான் ஏதும் பிழைகள் செய்திருந்தால் என்னை மன்னித்து விடு, பிள்ளை............' என்று கலங்கி நின்றார். அம்மா அழுதேவிட்டார். ' என்ன இப்படி சொல்லிறியள், நீங்க எனக்கு அப்பா மாதிரி......... எப்ப வேணுமென்றாலும் வாங்கோ.........' என்று வழிந்த கண்ணீரை துடைத்தார் அம்மா.
 
ஒன்று விட்ட தாத்தாவின் எந்த ஒரு சொல் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றியது என்ற கேள்வி பல நாட்களாக என்னுள்ளே வந்து வந்து போனது.
Edited by ரசோதரன்
  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
58 minutes ago, ரசோதரன் said:

வாசல் வரை போன ஒன்று விட்ட தாத்தா, நாங்களும் ஒரு இடைவெளி விட்டு பின்னால் போய்க் கொண்டிருந்தோம், திடீரென்று நின்று அம்மாவை கையெடுத்துக் கும்பிட்டார். 'நான் ஏதும் பிழைகள் செய்திருந்தால் என்னை மன்னித்து விடு, பிள்ளை............' என்று கலங்கி நின்றார். அம்மா அழுதேவிட்டார். ' என்ன இப்படி சொல்லிறியள், நீங்க எனக்கு அப்பா மாதிரி......... எப்ப வேணுமென்றாலும் வாங்கோ.........' எ

ஆகா இருவரும் பெரிய நடிகர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆகா இருவரும் பெரிய நடிகர்கள்.

🤣.........

அண்ணை, இப்ப எங்களின் ஒரு அரசியல் தாத்தா இறந்து போனார் தானே........ அவரும் கடைசி நாளன்று 'மன்னித்து விடுங்கப்பா.......... என்னாலே எதுவும் முடியல்ல........' என்ற மாதிரி ஒன்றைச் சொல்லியிருந்தால்,  அவரின் மறைவிற்கு பின் நிலைமை கொஞ்சம் சுமுகமாக இருந்திருக்குமோ........  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரசோதரன் said:

ஒன்று விட்ட தாத்தாவின் எந்த ஒரு சொல் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றியது என்ற கேள்வி பல நாட்களாக என்னுள்ளே வந்து வந்து போனது.

‘மன்னிப்பு’ என்ற சொல்  ஒன்றை விட்டிருக்கிறார் ஒன்று விட்ட தாத்தா. இது குடும்பத்துக்குச் சரி. அரசியலுக்குச் சரிவராது. கல்லெடுத்து அடிச்சிருபாங்கள். சம்பந்தருக்கும் அது தெரிஞ்சிருக்கும்.

‘சம்பந்தர் காலமானார்’ திரி உள்ள பக்கமே இப்ப நான் போவதில்லை. பயமாயிருக்கு.

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, Kavi arunasalam said:

‘மன்னிப்பு’ என்ற சொல்  ஒன்றை விட்டிருக்கிறார் ஒன்று விட்ட தாத்தா. இது குடும்பத்துக்குச் சரி. அரசியலுக்குச் சரிவராது. கல்லெடுத்து அடிச்சிருபாங்கள். சம்பந்தருக்கும் அது தெரிஞ்சிருக்கும்.

‘சம்பந்தர் காலமானார்’ திரி உள்ள பக்கமே இப்ப நான் போவதில்லை. பயமாயிருக்கு.

🤣..........

களத்தில் சில திரிகள் ஒரு மாதிரித்தான்.............. தலையில் மண் எண்ணையை ஊத்தி வைத்துக் கொண்டு நெருப்பு பெட்டி இருக்குதா என்று கேட்கிற மாதிரி இருக்கும்......... கிட்டப் போனால் நாங்களும் வெந்து போடுவோமே என்று சுத்தி சுத்தி ஓடிக் கொண்டிருக்கின்றோம்.........🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடவுளே எனக்கு மண்டை வெடித்து விடும் போல் இருக்கு.........இந்தக் கதையை மூன்றுதரம் படித்து விட்டேன் அந்தத் தாத்தாவின் வினோதமான பட்டப் பெயரை நீங்கள் குறிப்பிடவே இல்லை.........!   😴 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, suvy said:

கடவுளே எனக்கு மண்டை வெடித்து விடும் போல் இருக்கு.........இந்தக் கதையை மூன்றுதரம் படித்து விட்டேன் அந்தத் தாத்தாவின் வினோதமான பட்டப் பெயரை நீங்கள் குறிப்பிடவே இல்லை.........! 

கனக்க யோசிக்காதையுங்கோ Suvy. நாங்கள்  அவரை ‘சடையர்’ என்று அழைப்போமா?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, suvy said:

கடவுளே எனக்கு மண்டை வெடித்து விடும் போல் இருக்கு.........இந்தக் கதையை மூன்றுதரம் படித்து விட்டேன் அந்தத் தாத்தாவின் வினோதமான பட்டப் பெயரை நீங்கள் குறிப்பிடவே இல்லை.........!   😴 

 

1 hour ago, Kavi arunasalam said:

கனக்க யோசிக்காதையுங்கோ Suvy. நாங்கள்  அவரை ‘சடையர்’ என்று அழைப்போமா?

🤣..........

கிட்டக் கிட்ட வந்திட்டீர்கள்........... 'சிலுப்பா ராயர்' என்று தான் எல்லோரும் சொல்லுவார்கள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சம்பந்த சம்பந்தமே இல்லாலமல்....சாமர்த்தியமாய் கதை  நகர்த்தி...சம்பந்தரின்  திரிக்குப் போகாமலே..சம்பந்தரோடை சேர்த்து கதையை முடித்திருக்கிறியள்....நல்லாயிருக்கு தொடருங்கோ..

  • Thanks 1
  • Haha 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.