Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் தொடர்பில் அரச நிறுவன பிரதானிகளுக்கு அழைப்பு!

அரச அச்சகமா அதிபர், பொலிஸ்மா அதிபர் மற்றும் அஞ்சல் மா அதிபர் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் பிரதானிகள் சிலர் இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விடயங்கள் குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடும் அதிகாரம் எதிர்வரும் 17 ஆம் திகதியின் பின்னர், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குக் கிடைக்கப் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/305538

  • Replies 185
  • Views 9.8k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • நிச்சயமாக இல்லை ஏராளன். கிடைக்காத பதவி என்பதால் வெற்று கோசங்களை வைத்து ஒற்றுமையை காட்டுவதாக நடிக்கிறார்கள். அடுத்துவரும் பாராளுமன்ற தேர்தலில் ஒற்றுமையாக தகுதியான வேட்பாளர்களை ஒற்றுமையுடன் நிறுத்தி தற்

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    22 திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் 22ஆவது அரசியலமைப்பு திருத்தம், வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில் ஜனாதிப

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பு – ஜூலை மாத இறுதியில் – தேர்தல் ஆணையாளர்

ஜூலை மாத இறுதியில் ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானால் செப்டம்பர் 17 ம் திகதிக்கும் ஒக்டோபர் 17ம் திகதிக்கும் இடையில் தேர்தல்களை நடத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

16 முதல் 21நாட்களிற்குள் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ள அவர் அதன் பின்னர் தேர்தல் வாக்களிப்பு நான்கு வாரங்களிற்கு பின்னரும் ஆறு வாரங்களிற்கு முன்னதாகவும் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

தேர்தல்களிற்கு தயாராவதற்காக தேர்தல் ஆணைக்குழு பொலிஸ்மா அதிபரை சந்திக்கவுள்ளது என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையாளர் அரசாங்க அச்சகத்தின் அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/305563

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

5 தேர்தல்களுக்கு போதுமான எழுதுபொருட்கள் கைவசம் உள்ளது – அரச அச்சகர்

elections-300x200.jpg

ஐந்து தேர்தல்களுக்கு போதுமான எழுதுபொருட்கள் அரச அச்சகத்தின் வசமிருப்பதாக அரச அச்சகர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் நேற்று(09) நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பொலிஸ்மா அதிபர் மற்றும் தபால்மா அதிபர் ஆகியோரும் இதில் கலந்துகொண்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த தேர்தல்களை விட இம்முறை அச்சிடும் செலவு 4 மடங்கு அதிகரிக்கும் என அரசாங்க அச்சகர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து தேர்தல் முடியும் வரை அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என பொலிஸ்மா அதிபர் இந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு விநியோகம் உட்பட ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சகல நடவடிக்கைகளையும் தடையின்றி மேற்கொள்வதாக தபால்மா அதிபர் உறுதியளித்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க கூறியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் உள்ளிட்ட ஆவணங்களை அச்சிடும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகர் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை அறிவிப்பதற்கான அதிகாரம் எதிர்வரும் 17ஆம் திகதிக்கு பின்னர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கும். அதற்கமைய, இம்மாத இறுதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் திகதியை அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/305710

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தல் : கட்சித் தலைவர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்!

Published By: DIGITAL DESK 7   10 JUL, 2024 | 04:26 PM

image
 

ஜனாதிபதி தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதன் அவசியம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தை நாளை வியாழக்கிழமை (11 ) நடத்த கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/188137

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தல் உரிய காலத்தில் நடந்தே ஆகும்; அமைச்சர் அலி சப்ரி சபையில் உறுதி

Published By: VISHNU   12 JUL, 2024 | 01:41 AM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

தேர்தலுக்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். அரசியலமைப்பின் பிரகாரம் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடந்தே ஆகும் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கையில் எந்த குறைபாடுகள் இருந்தாலும் 1931ஆம் ஆண்டில் இருந்து சர்வஜன வாக்குரிமையை தொடர்ச்சியாக பயன்படுத்தி வரும் நாடாகும். உரிய காலத்தில் நாட்டில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. ஒரு தடவை மட்டுமே உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்படவில்லை. 1981ஆம் ஆண்டிலேயே தேர்தல் நடத்தப்படாது சர்வஜன வாக்கெடுப்பு மூலம் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தலை நடத்தாமல் இருக்க முடியாது. 

அரசியலமைப்பின் 19ஆம் திருத்தத்தில் ஜனாதிபதியின் பதவிக் காலம் 5ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. எனினும் 83  (ஆ) சரத்தில் அது தொடர்பில் குறிப்பிடப்படவில்லை. அதனை மாற்றுவதற்காகவே அமைச்சரவையில் யோசனை கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடக்கும்.

தற்போதைய ஜனாதிபதிக்கு முன்னால் செல்ல முடியும். அதற்கான தகுதி அவருக்கு இருக்கிறது. அவர் கடந்த இரண்டு வருடங்களில் முன்னெடுத்த வேலைத்திட்டங்களை முன்வைப்போம். அவர் வேண்டுமா என்று மக்கள் தீர்மானிப்பர். இல்லாவிட்டால் பதவியில் இருக்க மாட்டார். நாங்கள் தேர்தலுக்கு தயாராகவே இருக்கிறோம்.

நாங்கள் தேர்தலுக்கு பயப்பட வேண்டிய எந்தக் காரணமும் கிடையாது. வரிசை யுகத்தை இல்லாது செய்துள்ளோம். 24 மணிநேரமும் மின் விநியோகத்தை வழங்குகிறோம். சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்துள்ளோம். அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளோம். டொலர் இருப்பை அதிகரித்துள்ளோம். இதனால் தேர்தலுக்கு அஞ்சவில்லை. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்தில் நடக்கும் என்றார்.

https://www.virakesari.lk/article/188261

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தல்; நிதி சட்டரீதியான தடங்கல் எதுவும் இல்லை என்கின்றார் தேர்தல் ஆணையாளர்

12 JUL, 2024 | 03:20 PM
image

ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு சட்டரீதியான நீதிரீதியான தடங்கல்களை எதிர்கொள்ளவில்லை என தேர்தல்கள் ஆணையாளர் ஆர்எம்ஏஎல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சட்டரீதியான மற்றும் நிதி ரீதியான தடைகள் காணப்படுகின்றமையினால் ஜனாதிபதி தேர்தலை தேர்தல் ஆணைக்குழுவினால் நடத்த முடியுமா என பலதரப்பினர் கேள்வி எழுப்பியுள்ள நிலையிலேயே தேர்தல்கள் ஆணையாளர் இதனை தெரிவித்துள்ளார்.

தேவையான நிதிகள் எங்களிடம் உள்ளன மேலும் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எங்களிற்கு சட்டபூர்வமான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலை சுமூகமாக நடத்துவது குறித்து சட்ட அமுலாக்கல் தரப்பின் அதிகாரிகள் மற்றும் தொடர்புபட்ட ஏனைய தரப்புடன் நாங்கள் கலந்துரையாடியுள்ளோம் என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ஜூலை 17 ம் திகதி நிதியமைச்சின் அதிகாரிகளை சந்திக்கவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜூலை 14 ம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தல் குறித்து அறிவிப்பதற்கான அதிகாரம் கிடைக்கும் என தெரிவித்துள்ள அவர் மாத இறுதியில் அறிவிப்பு வெளியாகலாம் என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/188303

 

  • கருத்துக்கள உறவுகள்

450611582_881223680709272_54944753445299

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதிர்கட்சி உறுப்பினர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் விடுத்துள்ள எழுத்து மூல கோரிக்கை

Published By: DIGITAL DESK 3   12 JUL, 2024 | 04:18 PM

image
 

அரசியலமைப்பு சதிகளின் ஊடாக ஜனாதிபதித் தேர்தலுக்கு விடுக்கப்படும் அழுத்தங்களை தடுக்குமாறும் உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்பட  வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி உட்பட சுயாதீன எதிர்கட்சியின் உறுப்பினர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் எழுத்து மூலமாக கூட்டாக  கோரிக்கை விடுத்துள்ளனர்.

எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்கள் 30 பேரின் கையொப்பத்துடனான கடிதத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இன்று வெள்ளிக்கிழமை (12) கையளித்தார்.

https://www.virakesari.lk/article/188311

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கு 600 மில்லியன் ரூபா செலவு

department-of-government-printing-300x20

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்காக 600 மில்லியன் ரூபா செலவாகும் என அரச அச்சகத் திணைக்களம் மதிப்பீடு செய்துள்ளது.

எதிர்காலத்தில் இடம்பெறும் எந்தவொரு தேர்தலுக்கும் அரச அச்சகத் திணைக்களம் தயாராக உள்ளதாக அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இந்தமுறை ஜனாதிபதித் தேர்தலுக்காக ஒரு கோடி 70 இலட்சம் வாக்குச் சீட்டுக்களை அச்சிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்புக்கமைய, எதிர்கால நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

https://thinakkural.lk/article/305942

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தல் 2024 : செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

Published By: DIGITAL DESK 7   14 JUL, 2024 | 10:10 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

ஜனாதிபதி தேர்தல் 2024 தொடர்பான விசேட அறிவிப்பினை எதிர்வரும் 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிடவுள்ளது. இந்த அறிவிப்பு அன்றைய தினம் முற்பகல் 10.30க்கு வெளியிடப்படவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்தது.

அரசியமைப்புக்கு அமைய செவ்வாய்கிழமை (16) நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான தினத்தை அறிவிப்பதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கபெறுகிறது. அதே போன்று அரசியலமைப்புக்கு அமைய ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வுகளும் நிறைவடைந்திருக்க வேண்டும்.

அத்தோடு ஒக்டோபர் மாதத்தில் நாட்டில் இயற்கை அனர்த்தம் அல்லது ஏதேனும் திடீர் அனர்த்தங்கள் ஏற்பட்டால் மாத்திரம் ஒரு வாரத்துக்கு தேர்தலை ஒத்திவைப்பதற்கான அதிகாரம் ஆணைக்குழுவுக்கு உண்டு. அவ்வாறில்லை எனில் ஒக்டோபர் 12ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று முடிந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் செப்டெம்பர் மாத்துக்குள் தேர்தல் நடத்தப்பட்டால் சிறந்தது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளது. ஆனால், ஜனாதிபதி தேர்தல் குறித்து எந்த அறிவிப்பையும் ஜனாதிபதி ரணில் வெளியிட மாட்டார். அது முற்றுமுழுதாக தேர்தல் ஆணைக்குழுவுக்குரிய அதிகாரம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

மேலும், தேர்தலில் களமிறங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வற்புறுத்திக் கொண்டிருக்கின்றோம். இதுவரையில் அவர் போட்டியிடுவதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அவர் அவ்வாறு அறிவித்தாலும் தற்போது ஜனாதிபதிக்குரிய வரப்பிரசாதங்களுக்கமைய உபயோகித்துக் கொண்டிருக்கும் உலங்கு வானூர்தி உள்ளிட்ட அனைத்தையும் கையளிக்கவும் நேரிடும். எனவே 16ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு பின்னரே எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவித்தலும் வெளியிடப்படும். அதுவரை அனைவரும் காத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.

https://www.virakesari.lk/article/188399

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் தேர்தல் செலவுகளை அறிவிக்க வேண்டும்: முதல் தடவையாக அறிமுகம்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி இம்மாத இறுதிக்குள் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

முதன்முறையாக, 2023 ஆம் ஆண்டின் தேர்தல் செலவுச் சட்டத்தின்படி, வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் செலவை அறிவிக்க வேண்டும்.

கடந்த ஒத்திவைக்கப்பட்ட தேர்தலில் பயன்படுத்தப்படாத விதிமுறைகள், பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கும் நெறிமுறையற்ற நிதி சேகரிப்பு நடைமுறைகளைக் குறைப்பதற்கும் இம்முறை முழுமையாக அமுல்படுத்தப்படும்.

இந்த ஆண்டு செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 17 வரை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் ஆணையத்தின் தலைவர் ரத்நாயக்க, அரசாங்க அச்சுப்பொறியாளர், பொலிஸ் மா அதிபர், போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மற்றும் பிற தொடர்புடைய தரப்பினர் தேர்தலுக்குத் தயாராக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

https://thinakkural.lk/article/306004

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தல்: வேட்புமனுக்களை கோரும் திகதியை அறிவிக்க தயாராகும் தேர்தல் ஆணைக்குழு

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் திகதியை இம்மாத இறுதியில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கும் என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் திகதியை நாளை மறுதினம் (17) அரசியலமைப்பின் பிரகாரம் அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடைக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இம்மாத இறுதியில் வேட்புமனு தாக்கல் செய்யும் திகதியை அறிவிப்பதன் மூலம் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு போதிய அவகாசம் கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் திகதியை விரைவில் அறிவிக்குமாறு எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளும் தேர்தல் கண்காணிப்புக் குழுவும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வந்து ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் திகதியை விரைவில் அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்தகூடிய வாக்காளர் பட்டியலை தேர்தல்கள் ஆணைக்குழு உறுதிப்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த வருடத்தின் முதல் காலாண்டில் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி 17 மில்லியன் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 17 வரை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் ஆணையத்தின் தலைவர் ரத்நாயக்க, அரசாங்க அச்சுப்பொறியாளர், பொலிஸ் மா அதிபர், போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மற்றும் பிற தொடர்புடைய தரப்பினர் தேர்தலுக்குத் தயாராக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

https://thinakkural.lk/article/306031

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடவில்லை சுயாதீனமாக செயற்பட்டு தீர்மானங்களை எடுக்கிறோம் - தேர்தல்கள்  ஆணைக்குழு

Published By: VISHNU   17 JUL, 2024 | 02:09 AM

image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி தேர்தல் குறித்து ஜனாதிபதியுடன் எவ்வித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை. சுயாதீனமான முறையில் தேர்தல் பணிகளை முன்னெடுத்துள்ளோம்.தேர்தல் செலவுகளுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சுடன் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தேர்தல் பணிகளுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை கொண்டு ஆரம்பக்கட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அரச அச்சக திணைக்களம், பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர் மற்றும் தபால் மா அதிபர் ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். அரச அச்சகத் திணைக்களத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது அச்சகத் தலைவர் '2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் செலவுகளை காட்டிலும் இம்முறை செலவுகள் நான்கு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. அச்சிடல் பணிகளுக்கு தேவையான கடதாசிகள் உள்ளன என்று குறிப்பிட்டு தமது தேவைகளுக்கான செலவுகளை மதிப்பட்டு ஆணைக்குழுவுக்கு குறிப்பிடுவதாக குறிப்பிட்டார்.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு 2.7 பில்லியன் ரூபாவும், 2019 ஆம் ஆண்டு 4.5 பில்லியன் ரூபாவும் செலவாகியுள்ளது. பணவீக்கம் மற்றும் மூல பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகிய காரணிளை கருத்திற் கொண்டு இம்முறை தேர்தல் செலவுகளுக்கு 10 பில்லியன் ரூபா செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. தேர்தல் பணிகளுக்கு அனைத்து அரச நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலுக்கு எவ்வித தடையும் கிடையாது. ஜனாதிபதியின் பதவி காலம் மற்றும் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட விதம் குறித்து உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போது சட்டமா அதிபர் ஊடாக ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்தோம்.

தேர்தலை நடத்துவதற்கு சாதகமான வகையில் தான் நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியுள்ளது. நீதிமன்ற உத்தரவை தவிர வேறு எந்த வழிகளாலும் ஜனாதிபதி தேர்தலை பிற்போட முடியாது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்வதாயின் அது குறித்து ஆணைக்குழு உரிய தீர்மானத்தை எடுக்கும் என்றார்.

https://www.virakesari.lk/article/188642

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தலுக்கான நிதியை தாமதமின்றி வழங்க இணக்கம்

Ministry-of-Finance-300x200.jpg

ஜனாதிபதி தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட 10 பில்லியன் ரூபா நிதியை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேவைக்கேற்ப தாமதமின்றி வழங்குவதாக நிதியமைச்சின் செயலாளர் உறுதியளித்துள்ளார்.

நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் கடுமையான நிதி முகாமைத்துவத்துடன் செயற்படுவதால் குறித்த நிதியை வழங்குவதில் எவ்வித தடையும் இல்லை எனவும் தபால் சேவைகள், அச்சிடும் பணிகள் மற்றும் பாதுகாப்பிற்கான செலவுகளை வழங்க தயாராக உள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/306348

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தல் : நிச்சயமற்ற தன்மையை நீக்கும் நோக்கில் நடவடிக்கை

Published By: VISHNU   18 JUL, 2024 | 08:41 PM

image

அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்ற 22 வது அரசியலமைப்பு திருத்தத்தை ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை வர்த்தமானியில் வெளியிடுவதை தவிர்க்குமாறு நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, நீதி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பில் நிலவும் நிச்சயமற்ற தன்மையை நீக்கும் நோக்கில் இவ்வாறான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/188797

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு!

vote.jpg

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பார்வையற்றோர் மற்றும் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு வாக்களிக்கும் வசதியை முதன்முறையாக ஏற்படுத்தத் தேர்தல்கள் ஆணையம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, பார்வையற்றோர் தங்கள் வாக்குச் சீட்டில் உள்ள அடையாளங்களை பிரெய்லி எழுத்து முறையிலும், செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் சைகை மொழியிலும் அடையாளம் காணும் வகையில் சிறப்பு அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

https://thinakkural.lk/article/306396

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பு அடுத்த வாரம்- தேர்தல் ஆணையாளர்

Published By: RAJEEBAN   19 JUL, 2024 | 12:11 PM

image
 

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என தேர்தல்கள் ஆணையாளர்  ஆர்எம்ஏஎல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜூலை 17ம் திகதி தேர்தலை அறிவிக்கும் நிலையில் தான் இருக்கவில்லை என தெரிவித்துள்ள அவர் செப்டம்பர் 17ம் திகதி அதாவது அதிகாரம் வழங்கப்பட்ட முதல்நாள் அன்று நான் தேர்தலிற்கான அறிவிப்பை வழங்கியிருந்தால்  செப்டம்பர் 17 ம் திகதி தேர்தலை நடத்தியிருக்கவேண்டும், அன்றைய தினம் போயா என்பதால் அது சாத்தியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கலாச்சார காரணங்களிற்காக தேர்தலை போயா தினத்தன்று நடத்த முடியாது என தெரிவித்துள்ள அவர் மறுநாள் அதனை நடத்துவது சாத்தியம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்..

இதன்காரணமாக வேட்புமனுதாக்கல் செய்யும்  தினத்தை அடுத்தவாரம் அறிவிப்பதன் மூலம் ஜனாதிபதி தேர்தலை அடுத்தவாரம் அறிவிக்கவுள்ளதாக எனஅவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/188839

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரச உத்தியோகத்தர்களை உன்னிப்பாக கண்காணிக்கவுள்ள HRCSL

HRCSL-300x200.jpg

ஜனாதிபதி தேர்தலின் போது அரச உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளை உன்னிப்பாக கண்காணிப்பதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் குறித்து அறிவிப்பு வௌியான பின்னர் நாட்டில் நடைமுறையிலுள்ள தேர்தல் சட்டத்தின் பிரகாரம் ஒவ்வொரு அரச உத்தியோகத்தரும் செயற்பட வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அரச உத்தியோகத்தர்கள் சட்டத்தை பாரபட்சமின்றி அனைவருக்கும் பொதுவாக செயற்படுத்த வேண்டும் என மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.

சட்டத்தை உரிய முறையில் கடைப்பிடிக்காது சில அதிகாரிகள் செயற்படுவதால் அங்கு மக்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாக நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ஜனாதிபதி தேர்தலின் போது அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அரச நிறுவனங்கள் மக்களின் மனித உரிமைகளை மீறும் வகையில் செயற்படக்கூடாது என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

https://thinakkural.lk/article/306442

  • கருத்துக்கள உறவுகள்
On 18/7/2024 at 08:58, ஏராளன் said:

அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்ற 22 வது அரசியலமைப்பு திருத்தத்தை

இந்த 22வது அரசியலமைப்பு திருத்த விபரம் பற்றி யாருக்காவது தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இந்த 22வது அரசியலமைப்பு திருத்த விபரம் பற்றி யாருக்காவது தெரியுமா?

election.jpg?resize=300,300

22 திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் 22ஆவது அரசியலமைப்பு திருத்தம், வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பான அரசியலமைப்பின் 83 (ஆ) சரத்தில் ‘6 வருடங்களுக்கு மேல்’ என்ற சொற் தொடருக்கு பதிலாக ‘5 ஆண்டுகளுக்கு மேல்’ என்ற வார்த்தை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியிருந்த நிலையில் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி தேர்தல் நிறைவடையும் வரை வெளியிட வேண்டாம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அமைச்சின் செயலாளருக்கு நேற்றைய தினம் பணிப்புரை விடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று ஜனாதிபதியினால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1392818

  • கருத்துக்கள உறவுகள்

Human-Rights-Watch.jpg?resize=650,375

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலின் போது அரச உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளை உன்னிப்பாக கண்காணிப்பதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியான பின்னர் நாட்டில் நடைமுறையிலுள்ள தேர்தல் சட்டத்தின் பிரகாரம் ஒவ்வொரு அரச உத்தியோகத்தரும் செயற்பட வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அரச உத்தியோகத்தர்கள் சட்டத்தை பாரபட்சமின்றி அனைவருக்கும் பொதுவாக செயற்படுத்த வேண்டும் என மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.

 

சட்டத்தை உரிய முறையில் கடைப்பிடிக்காது சில அதிகாரிகள் செயற்படுவதால் அங்கு மக்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாக நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ஜனாதிபதித் தேர்தலின் போது அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அரச நிறுவனங்கள் மக்களின் மனித உரிமைகளை மீறும் வகையில் செயற்படக்கூடாது என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

https://athavannews.com/2024/1392853

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது

mahinda-deshapriya.jpg

22ஆம் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள போதிலும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் இருக்க முடியாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/306498

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தல் : செப்டம்பர் 21இல் வாக்களிப்பு?

Published By: RAJEEBAN   21 JUL, 2024 | 11:16 AM

image
 

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு  செப்டம்பர் 21ம் திகதி நடைபெறலாம் என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலிற்கான வேட்பு மனுக்கள் ஆகஸ்ட்மாத நடுப்பகுதியில் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ள சண்டேடைம்ஸ் உறுதியான திகதி இந்த வாரம் வெளியாகும் என தேர்தல் ஆணையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னர் ஒக்டோபர் 5ம் திகதிமுதல் 12ம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடைபெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் தேர்தல்கள் செப்டம்பர் மாதம் நடைபெறலாம் என தெரியவருவதாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு 16 முதல் 21நாட்களிற்குள் வேட்புமனுக்கள் பெறப்படவேண்டும்,28 முதல் 42 நாட்களிற்குள்தேர்தல் நடைபெறவேண்டும் என இதன் மூலம் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையகத்திற்கு 63 நாட்களை வழங்க முடியும் என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை அரசியல் கட்சிகள் முன்கூட்டியே தேர்தலைநடத்துமாறு வேண்டுகோள் விடுக்ககூடாது இது தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடும் செயலாக பார்க்கப்படலாம் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கதெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/188988

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ஏராளன் said:

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு  செப்டம்பர் 21ம் திகதி நடைபெறலாம் என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் ஒரு வருடத்துக்கு ஒத்திவைப்பது தான் நல்லதென்று பழைய உயர்நீதிமன்ற நீதிபதி சொல்லியிருந்தாரே?

ரணிலுக்கு வெற்றிவாய்ப்பு இல்லாமல் போனால் பிற்போடலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சர்வஜன வாக்கெடுப்புக்கு இடமில்லை - ராேஹன ஹெட்டியாரச்சி 

Published By: VISHNU   21 JUL, 2024 | 08:05 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

அரசியலமைப்பின் 22ஆம் திருத்தத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. என்றாலும் அரசியலமைப்பு திருத்தம் மூலம் ஜனாதிபதி தேர்தலை பிற்படுத்துவதற்கோ ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வதற்கோ எந்த இடமும் இல்லை என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ராேஹன ஹெட்டிஆரச்சி தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 22ஆம் திருத்தம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை (21) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் அவரசமாக அரசியலமைப்பின் 22ஆம் திருத்தத்தை வர்த்தமானியில் வெளியிட்டுள்ளதன் மூலம் மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது, அரசியலமைப்பின் 22ஆம் திருத்தம் காரணமாக ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. என்றாலும் 22ஆம் திருத்தம் மூலம் ஜனாதிபதி தேர்தலை பிற்படுத்துவதற்கோ ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வதற்கோ எந்த இடமும் இல்லை என்பதை தெளிவாக கூறமுடியும்.

சர்வஜன வாக்கெடுப்பு சட்டத்தின் பிரகாரம் சர்வஜன வாக்கெடுப்பொன்று நீதிமன்றம் ஊடாக வந்தாலும் ஜனாதிபதி அதுதொடர்பான கட்டளையை தேர்தல் ஆணைக்குழுவுக்கு தெரிவிக்க வேண்டும். அதேபோன்று சர்வஜன வாக்கெடுப்புக்கு ஜனாதிபதி கட்டளை பிரப்பித்து ஒரு மாதத்துக்கு பின்னரே சர்வஜன வாக்கெடுப்புக்கு திகதி அறிவிக்கப்பட வேண்டும். அதனால் ஜனாதிபதி தேர்தலுக்கு திகதி அறிவிக்க தேர்தல் ஆணைக்குழு தற்போது நடவடிக்கை எடுத்திருக்கிறது. இந்த வாரத்துக்குள் திகதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். செப்டம்பர் மாதம் முடிவடைவதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும். 

அதனால் 22ஆம் திருத்தம் இந்த காலப்பகுதியில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டாலும், அதனை அனுமதித்துக்கொள்ள இருக்கும் கால இடைவெளியை பார்க்கும்போது, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு செல்ல எந்த இடம்பாடும் இல்லை என்பது தெளிவாகிறது.அதனால் 22ஆம் திருத்தம் ஜனாதிபதி தேர்தலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப்போவதில்லை. இது தொடர்பாக மக்கள் எந்த சந்தேகமும் கொள்ளத்தேவையில்லை. 

அதேநேரம் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் தெளிவாக இரண்டு தடவைகள் தீர்ப்பளித்திருக்கிறது. அதனால் ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்பது உறுதியாக இருக்கிறது. அதன் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அரசியலமைப்பு திருத்தம் பாதிப்பாக அமையாது. அவ்வாறான நிலையில் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் தற்போதைய சூழலில் 22ஆம் திருத்தத்தை கொண்டுவராமல் இருந்திருக்க வேண்டும். இதனை அடுத்துவரும் புதிய அரசாங்கத்துக்கு இடமளித்திருக்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/189034

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.