Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Loan-fe.webp?resize=600,320

வட்டியில்லாக் கடன்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை!

விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் வட்டியில்லாக் கடன்களை வழங்கும் செயல்முறைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறிப்பாக, தொழில் முயற்சியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் ஊடாக வட்டியில்லாக் கடன்கள் வழங்கப்படவுள்ளன.

 

இதற்கு இலங்கை வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகியவை பங்களிப்பை வழங்குகின்றன. மேலும் எதிர்காலத்தில் மக்கள் வங்கியுடனும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு 650 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரண்டாம் கட்டமாக 10 மில்லியன் ரூபா பெறுமதியான விவசாய நவீனமயமாக்கல் திட்டங்களை நடைமுறைப்படுத்த 75 பிரதேச செயலகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

விவசாய நவீனமயமாக்கல் கடன் திட்டத்தின் கீழ் வட்டியில்லாக் கடன் பொறிமுறைமையொன்றைத் தயாரித்து நடைமுறைப்படுத்த, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

கடன் சலுகைக் காலம் அதிகபட்சம் 06 மாதங்களாக வரையறுக்கப்பட்டுள்ளது.
மேலும் கடன் சலுகைக் காலம் உட்பட கடன் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டிய அதிகபட்ச காலம் 05 வருடங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1393258

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தமிழ் சிறி said:

இந்த வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு 650 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரண்டாம் கட்டமாக 10 மில்லியன்

மில்லியன் அல்லது பில்லியன்  எது சரி.  650.  மில்லியன் கைதடிக்கு கூட. காணாது   ..........😂🤣🙏   ரணில்  தீர்வு விடயத்தில் சுத்தாலம்.  ஆனால்   கடன்  விடயத்தில்   ஏமாற்றுவதை  அல்லது பணம் விடயத்தில் ஏமாற்றுவதை  தமிழ் தலைவர்கள் பார்த்து கொண்டிருக்க போவதில்லை  😂🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

மில்லியன் அல்லது பில்லியன்  எது சரி.  650.  மில்லியன் கைதடிக்கு கூட. காணாது   ..........😂🤣🙏   ரணில்  தீர்வு விடயத்தில் சுத்தாலம்.  ஆனால்   கடன்  விடயத்தில்   ஏமாற்றுவதை  அல்லது பணம் விடயத்தில் ஏமாற்றுவதை  தமிழ் தலைவர்கள் பார்த்து கொண்டிருக்க போவதில்லை  😂🤣

68747470733a2f2f73332e616d617a6f6e617773

கந்தையா அண்ணை... சிலவேளை 650 மில்லியன் டொலர் என்று வரவேண்டியதை,
ஆதவன் செய்தித்தளம் 650 மில்லியன் ரூபாய் என்று போட்டு விட்டதோ தெரியவில்லை. 😂

நீங்கள் சொன்ன மாதிரி... நாடு முழுக்க உள்ள திட்டத்துக்கு 650 ரூபாய் காணவே, காணாது.
ஆனால்... இதுகள் எல்லாம் நடைமுறைப் படுத்துகின்ற செயல் திட்டங்கள் இல்லை என்று அரசாங்கத்துக்கே தெரியும்.  ஒவ்வொரு நாளும் அறிக்கை விடுகின்றது என்ற பெயரில்.. தமது இருப்பையும் காட்டி, வெறும் வாயை  மென்று கொண்டு இருக்கின்றார்கள். அது மக்களுக்கும் நன்றாகவே புரியும்.  🤣

Edited by தமிழ் சிறி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.