Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Deshabandu Tennakoon assumes duties as IGP

பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோன் செயற்படுவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை வலுவற்றதாக்கி உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று மீள பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கர்தினால் மெல்கம் ரஞ்சித் உள்ளிட்ட 8 தரப்பினரால் 9 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

https://thinakkural.lk/article/306697

  • கருத்துக்கள உறவுகள்

452633142_889159876582319_70335271985990

 

452878121_889124929919147_71624475901698

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை போலீஸ் மாஅதிபர் பணியாற்ற உயர்நீதிமன்றம் தடை - ஜனாதிபதி தேர்தல் நடப்பதில் சிக்கலா?

இலங்கையில் போலீஸ் மாஅதிபருக்கு பணியாற்ற உயர்நீதிமன்றம் இடைகால தடை - போலீஸ் மாஅதிபரின்றி ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியுமா?

பட மூலாதாரம்,DESABANTHU THEENAKON FB

படக்குறிப்பு,தேசபந்து தென்னக்கோன் கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 53 நிமிடங்களுக்கு முன்னர்

இலங்கையில் 9-வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் காலம் நெருங்கியுள்ள நிலையில், தேர்தல் நடத்துவது தொடர்பில் மாறுப்பட்ட கருத்துக்கள் தொடர்ந்து நிலவி வருகின்றன.

தேர்தலைத் தாமதப்படுத்துவதற்கான சூழ்ச்சிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வருவதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்ற பின்னணியில், உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

இவ்வாறான பின்னணியில், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.

போலீஸ் திணைக்களம், அரச அச்சகத் திணைக்களம் மற்றும் தபால் திணைக்களம் உள்ளிட்ட தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் தரப்பினருடன் தேர்தல் ஆணைக்குழு அண்மையில் விசேஷ சந்திப்புக்களை நடத்தியிருந்தது.

 

இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலுக்கான தேதி நாளை (ஜூலை 26) அறிவிக்கப்பட்டு, அதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

இவ்வாறான நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ ஆகியோர் அதிகாரபூர்வமாக இன்று (ஜூலை 25) அறிவித்தனர்.

அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் ஒன்றிணைந்து, தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் அண்மையில் கையொப்பமிட்டிருந்தனர்.

இலங்கையில் போலீஸ் மாஅதிபருக்கு பணியாற்ற உயர்நீதிமன்றம் இடைகால தடை - போலீஸ் மாஅதிபரின்றி ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியுமா?

பட மூலாதாரம்,DESABANTHU THEENAKON FB

படக்குறிப்பு,தேசபந்து தென்னக்கோன்

போலீஸ் மாஅதிபருக்கு இடைக்காலத் தடை

தேசபந்து தென்னக்கோன், போலீஸ் மாஅதிபராகக் கடமையாற்றுவதற்கு உயர்நீதிமன்றம் நேற்று (ஜூலை 24) இடைக்காலத் தடையுத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.

இதன்படி, போலீஸ் மாஅதிபராகக் கடமையாற்றிய தேசபந்து தென்னக்கோனுக்கான இடைகாலத் தடையுத்தரவு அமலிலுள்ள காலப் பகுதியில், அந்தப் பதவிக்குச் சட்ட ரீதியாகத் தகுதியான ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்றம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளது.

முன்னாள் போலீஸ் மாஅதிபர் சி.டி.விக்ரமரத்னவின் ஓய்வையடுத்து, பிரதி போலீஸ் மாஅதிபராக கடமையாற்றிய தேசபந்து தென்னக்கோன் பதில் போலீஸ் மாஅதிபராக 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.

எனினும், இலங்கையில் 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாமை தொடர்பில் தேசபந்து தென்னக்கோனிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தமை மற்றும் அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றில் உயர்நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்திருந்தமை ஆகிய காரணங்களை முன்னிலைப்படுத்தி பல்வேறு தரப்பினர் அவரது நியமனத்திற்கு எதிராக குரல் எழுப்பியிருந்தனர்.

இந்த நிலையில், போலீஸ் மாஅதிபர் பதவிக்கு தேசபந்து தென்னக்கோனின் பெயர் அரசியலமைப்புச் சபைக்குப் பரிந்துரை செய்யப்பட்ட போதிலும், அவரது பெயர் தெரிவு செய்யப்பட்ட விதம் பாரிய சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.

அரசியலமைப்பு சபையில் ஒன்பது அங்கத்தவர்கள் அங்கம் வகிப்பதுடன், தீர்மானமொன்று நிறைவேற்றப்படும் போது அவர்களில் ஐந்து பேரின் அனுமதி அவசியம் என கூறப்படுகின்றது.

அரசியலமைப்புச் சபையின் தலைவராகச் சபாநாயகர் செயற்படுவதுடன், தீர்மானமொன்று நிறைவேற்றப்படும் போது வாக்குகள் சமமாகும் பட்சத்தில் மாத்திரமே சபாநாயகரினால் தனது வாக்கை அளிக்க முடியும்.

இந்த நிலையில், போலீஸ் மாஅதிபர் தெரிவின் போது அரசியலமைப்பு சபையின் 4 பேர் தேசபந்து தென்னக்கோனுக்கு ஆதரவாகவும், இருவர் எதிராகவும் வாக்களித்திருந்ததுடன், எஞ்சிய இருவர் வாக்களிக்காதிருந்தனர்.

வாக்களிக்காத இருவரது வாக்குகளும் எதிராக அளிக்கப்பட்ட வாக்கு எனக் கருதி, சபாநாயகர் தனது வாக்கை ஆதரவாக அளித்த நிலையில், தேசபந்து தென்னக்கோனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போலீஸ் மாஅதிபராக நியமித்தார்.

இந்தச் செயற்பாடானது, அரசியலமைப்பை மீறிய செயற்பாடு என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இலங்கையில் போலீஸ் மாஅதிபருக்கு பணியாற்ற உயர்நீதிமன்றம் இடைகால தடை - போலீஸ் மாஅதிபரின்றி ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியுமா?

பட மூலாதாரம்,ELECTION COMMISSION

படக்குறிப்பு,ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது

'தேசபந்து தென்னக்கோனின் நியமனம் தவறானது'

தேசபந்து தென்னக்கோனை போலீஸ் மாஅதிபராக நியமிப்பதற்காக ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தைச் செலுப்படியற்றதாகுமாறு கோரி, கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை உள்ளிட்டோரினால் 9 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.

இதன்படி, யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி, மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஜனாதிபதி சார்பில் சட்ட மாஅதிபர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் தேசபந்து தென்னக்கோன் ஆகியோரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இதன்படி, பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள தேசபந்து தென்னக்கோன், போலீஸ் மாஅதிபராகச் செயற்படுகின்றமை, அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றமை மற்றும் கடமைகளில் ஈடுபடுகின்றமையை இடைநிறுத்தும் வகையில் உயர்நீதிமன்றத்தினால் இடைகாலத் தடை விதிக்கப்பட்டது.

இந்த இடைகாலத் தடையுத்தரவு அமலிலுள்ள காலப் பகுதியில் பதில் போலீஸ் மாஅதிபராக ஒருவரை, சட்டத்திற்குட்டவாறு நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 11-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அவசர அமைச்சரவைக் கூட்டம்

இலங்கையில் போலீஸ் மாஅதிபருக்கு பணியாற்ற உயர்நீதிமன்றம் இடைகால தடை - போலீஸ் மாஅதிபரின்றி ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியுமா?

பட மூலாதாரம்,DESABANTHU THEENAKON FB

படக்குறிப்பு,இவ்வாறு போலீஸ் மாஅதிபர் இன்றி, இதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பையடுத்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் அவசர அமைச்சரவை கூட்டமொன்றை கூட்டியிருந்தார்.

போலீஸ் மாஅதிபர் தொடர்பில் உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து, சட்ட விடயங்களை ஆழமாக ஆராய்ந்து, எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் அமைச்சரவையில் பதிலை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பதில் போலீஸ் மாஅதிபரின் கீழ் ஜனாதிபதித் தேர்தலை நடத்த அரசியலமைப்பில் இடமில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்து வெளியிட்டுள்ளதாக இலங்கை பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவ்வாறு போலீஸ் மாஅதிபர் இன்றி, இதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தலொன்றை நடத்தும்போது பொதுமக்களின் பாதுகாப்பு போலீஸார் வசமுள்ளது எனவும், போலீஸ் மாஅதிபர் இன்றி தேர்தலை அறிவிக்க முடியாது எனவும் ஜனாதிபதி அமைச்சரவையில் கூறியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன்படி, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமித்து இந்த விடயங்கள் குறித்து ஆராய வேண்டும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி, தெரிவுக்குழு விஷயங்களை ஆராய்ந்து முடிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட முடியாது என கூறியுள்ளதாக இலங்கை பத்திரிகை செய்திகள் குறிப்பிடுகின்றன.

இந்த நிலையில், குறித்த விஷயம் தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அரசியலமைப்புச் சபை நாளை (ஜூலை 26) அவசரமாகக் கூடுகின்றது.

தேர்தல் ஆணைக்குழு சொல்வது என்ன?

இலங்கையில் போலீஸ் மாஅதிபருக்கு பணியாற்ற உயர்நீதிமன்றம் இடைகால தடை - போலீஸ் மாஅதிபரின்றி ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியுமா?

பட மூலாதாரம்,ELECTION COMMISSION

படக்குறிப்பு,தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க

பதில் போலீஸ் மாஅதிபரின் கீழ் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

''பதில் போலீஸ் மாஅதிபர் ஒருவர் எதிர்வரும் நாட்களில் நியமிக்கப்படுவார். அவ்வாறு நியமிக்கப்படும் பதில் போலீஸ் மாஅதிபருடன் இணைந்து கடமைகளை முன்னெடுப்போம்," என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போலீஸ் மாஅதிபருக்கு பணியாற்ற உயர்நீதிமன்றம் இடைகால தடை - போலீஸ் மாஅதிபரின்றி ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியுமா?

பட மூலாதாரம்,U.R.DE.SILVA

படக்குறிப்பு,இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் யூ.ஆர்.டி.சில்வா

வழக்கறிஞர்கள் சொல்வது என்ன?

போலீஸ் மாஅதிபர் இன்றி, பதில் போலீஸ் மாஅதிபரின் கீழ் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியும் என இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜனாதிபதி வழக்கறிஞர் யூ.ஆர்.டி.சில்வா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

"போலீஸ் மாஅதிபர் இன்றி தேர்தலை நடத்த முடியாது எனக் கூற முடியாது. பதில் போலீஸ் மாஅதிபர் ஒருவரை நியமிக்குமாறு உயர்நீதிமன்றம், ஜனாதிபதிக்கு தெளிவாக கூறியுள்ளது. தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளமைக்கு அமைய, தகுதியான ஒருவரை நியமிக்குமாறு நீதிமன்றம் கூறியுள்ளது. தேர்தலை வழமை போன்று கட்டாயம் நடத்த வேண்டும்," என இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜனாதிபதி வழக்கறிஞர் யூ.ஆர்.டி.சில்வா குறிப்பிட்டார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொலிஸ்மா அதிபர் விவகாரம் : இடைக்கால தடையுத்தரவே பதவி நீக்கம் அல்ல - அரசாங்க தகவல்கள் தெரிவிப்பு

Published By: DIGITAL DESK 3   25 JUL, 2024 | 04:55 PM

image

(எம்.மனோசித்ரா)

பொலிஸ்மா அதிபருக்கு இடைக்கால தடையுத்தரவு மாத்திரமே பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாறாக அப் பதவி வெற்றிடமாகவில்லை. எனவே ஜனாதிபதியால் பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்க முடியாது என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது உயர் நீதிமன்ற உத்தரவில் பொலிஸ் மா அதிபருக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த பதவி வெற்றிடமாகவில்லை. அரசியலமைப்பில் 21ஆவது திருத்தத்துக்கமைய பொலிஸ்மா அதிபர் பதவி வெற்றிடமாகதா நிலையில் ஜனாதிபதிக்கு பதில் பொலிஸ்மா அதிபரை நியமிப்பதற்கு அதிகாரமில்லை என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சரொருவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக இந்த சட்ட சிக்கல் தீர்க்கப்படும் வரை பொலிஸ்மா அதிபர் பதவி வெற்றிடமாகவில்லை என்றே கருதப்படும். எனவே நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கமைய பொலிஸ்மா அதிபரால் அவரது கடமைகளை செய்வதற்கு மாத்திரமே தடை ஏற்பட்டுள்ளதாக அந்த அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/189370

  • கருத்துக்கள உறவுகள்

dinesh.jpg?resize=720,375

பொலிஸ் மா அதிபா் விவகாரம் – நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை அவசியம் – பிரதமா் தினேஸ்!

தற்போது பதவியிலிருக்கும் பொலிஸ் மா அதிபரை பதவியிலிருந்து விலக்க, நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்றை கொண்டுவந்து பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும் என பிரதமர் தினேஸ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளாா்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவா் இதனைத் தொிவித்தாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

பொலிஸ் மா அதிபராக கடமையாற்றியவர், பாதுகாப்பு மற்றும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கி வந்தார்.

இந்தநிலையில், கடந்த 25 ஆம் திகதி உயர்நீதிமன்றமானது, பொலிஸ் மா அதிபருக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பான அடுத்த அமர்வு நவம்பர் 11 ஆம் திகதி நடைபெறும் என்றும் திகதி குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஆனால், நவம்பர் மாதம் என்பது ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து ஒருமாதம் கடந்து இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.
புதிய ஜனாதிபதி பதவியேற்கும் காலத்தில்தான் இந்த வழக்கு விசாரணை அடுத்ததாக இடம்பெறும்.

பொலிஸ் மா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்பட வேண்டிய இந்தத் தருணத்தில் தான் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது நாடாளுமன்றுக்குள்ளும் தற்போது குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அரசமைப்புச் சட்டத்தின் 4 ஆவது உறுப்புரையில் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்துவதற்காக நீதியான தேர்தலை நடத்த வேண்டும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், உயர்நீதிமன்றமானது இந்தத் தடையை விதிக்கும் முன்னர், தேர்தல் ஆணைக்குழுவின் கருத்தைக் கேட்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

அரசமைப்பின் 44 (அ) 2 ஆம் உறுப்புறுமையின் கீழ், 14 நாட்களுக்குள் பொலிஸ் மா அதிபரை நியமிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவானது, ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் திகதியை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், அரசமைப்புச் சபையின் அனுமதியுடன் பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.

இதற்காக தற்போது பதவியிலிருக்கும் பொலிஸ் மா அதிபரை பதவியிலிருந்து விலக்க, நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்றை கொண்டுவந்து பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும்.

இப்போதும் பொலிஸ் மா அதிபராக இடைக்கால தடை விதிக்கப்பட்ட பொலிஸ் மா அதிபரே இருக்கிறார் என பிரதமர் தினேஸ் குணவர்த்தன மேலும் குறிப்பிட்டுள்ளாா்.

https://athavannews.com/2024/1393654

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேசபந்து தென்னகோன் பதவியை இராஜினாமா செய்ய கோரி பொலிஸ் தலைமையகத்தில் மகஜர்

Published By: VISHNU   29 JUL, 2024 | 07:19 PM

image
 

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடையுத்தரவுக்கு அமைய பொது மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி தொடர்ந்தும் அவரை பொலிஸ் திணைக்களத்தில் வைத்து போசிப்பதால் எந்த பயனும் கிடையாது எனவும் உடனடியாக அவர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் மக்கள் போராட்ட இயக்கத்தின் ஊடக ஒருங்கிணைப்பாளர் சந்துன் எஸ்.ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் திங்கட்கிழமை (29) பொலிஸ் தலைமையகத்தில் மகஜர் ஒன்றை கையளிக்க சென்றிருந்தனர்.

அத்துடன் அப்பகுதியில் அவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க முற்பட்ட போது பொலிஸார் அதற்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன் அவரிடமிருந்த மகஜரையும் பொலிஸார் பலவந்தமாக பறித்தெடுத்தனர்.

DSC05394.jpg

DSC05388.jpg

DSC05346.jpg

DSC05342.jpg

(படப்பிடிப்பு-ஜே.சுஜீவ குமார்)

https://www.virakesari.lk/article/189735

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.