Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Harris-Trump-.webp?resize=750,375

கமலா ஹாரிஸ் இந்தியரா? கறுப்பினத்தவரா? ட்ரம்ப் சர்ச்சை பேச்சு.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் களம் இறங்கவுள்ள, கமலா ஹாரிஸ் இந்தியரா? இல்லை கறுப்பினத்தவரா? என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எழுப்பியுள்ள கேள்வி உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலானது எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் சிகாகோவில் அண்மையில் இடம்பெற்ற குடியரசு கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த ட்ரம்ப் ” கமலா ஹாரிஸ் ஆரம்பத்தில் இந்திய பாரம்பரியத்தை மட்டுமே ஊக்குவித்து வந்ததாகவும், தற்போது தன்னை கறுப்பினத்தவராக அடையாளப்படுத்தி வருவதாகவும் விமர்சித்திருந்தார்.

 

அத்துடன் ” கமலா ஹாரிஸ் இந்தியரா? இல்லை கறுப்பினத்தவரா? என்பது தெரியவில்லை எனவும் அவர் வெளிப்படையாக இல்லை எனவும்” குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கருத்தானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் ”வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன் பியர், குறித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”கமலா தன்னை எப்படி அடையாளப்படுத்துகிறார் என்பது குறித்து பேச யாருக்கும் உரிமை இல்லை எனவும், அது அவரது சொந்த முடிவு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ”கமலா ஹாரிஸ் மட்டுமே அவரது இனம் குறித்து பேச முடியும் எனவும், அவர்  அமெரிக்காவின் துணை ஜனாதிபதி என்பதால் அவருக்கு உரிய மரியாதை கொடுக்க  வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1394362

  • கருத்துக்கள உறவுகள்

"திருமதி ஹாரிஸ், இந்திய மற்றும் ஜமைக்காவில் பிறந்த பெற்றோருடன், முதல் கறுப்பின மற்றும் ஆசிய-அமெரிக்க துணைத் தலைவர் ஆவார். அவர் வரலாற்று ரீதியாக கறுப்பினப் பல்கலைக்கழகமான ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றார், மேலும் கறுப்பினத்தவர்களான ஆல்பா கப்பா ஆல்பா சமூகத்தில் சேர்ந்தார்.
அவர் 2017 இல் செனட்டில் நுழைந்த பிறகு காங்கிரஸின் பிளாக் காகஸ் உறுப்பினரானார்.
டிரம்பின் கூற்றுகள் சிகாகோ நிகழ்வின் மதிப்பீட்டாளர்களில் ஒருவரான ஏபிசி நியூஸின் நிருபர் ரேச்சல் ஸ்காட்டுடன் சூடான பரிமாற்றத்தைத் தூண்டியது.
ஹாரிஸின் இன அடையாளத்தைக் குறிப்பிடும் வகையில் குடியரசுக் கட்சியினர், "(அவர் யாராக இருந்தாலும்) நான் அவரை மதிக்கிறேன்" என்றார். "ஆனால் அவள் வெளிப்படையாக இல்லை, ஏனென்றால் அவள் எல்லா வழிகளிலும் இந்தியராக இருந்தாள், பின்னர் திடீரென்று அவள் (தனது அடையாளத்தை) தன்னை ஒரு கறுப்பினத்தவளாக மாற்றிக்கொண்டாள்"

Ms Harris is the first black and Asian-American vice-president, with Indian and Jamaican-born parents. She attended Howard University, a historically black university, and joined the predominantly black Alpha Kappa Alpha sorority.
She became a member of Congressional Black Caucus after entering the Senate in 2017.
Trump's claims prompted a heated exchange with ABC News' correspondent Rachel Scott, one of the moderators of the Chicago event.


"I respect either one," the Republican said in reference to Harris' racial identity. "But she obviously doesn't because she was Indian all the way and then all of a sudden she made a turn and she became a black person."

https://www.bbc.com/news/articles/c06k07dn1zjo.amp

மொழிபெயர்ப்பு உதவி Google 

ஆன்மீகவாதியாகவும் முன்னாள் நீதியரசராகவும் இருந்த விக்கியர்ஒரு இரவில் தீவிர தமிழ்த் தேசியவாதியாக மாறியது போன்று கமலா மாமியும்  இதுவரை இந்திய வம்சாவளியாக தன்னை அடையாளப்படுத்தி வந்தவர். ஆனால் ஒரே இரவில் தன்னை கறுப்பினத்தவராக அடையாளப்படுத்தினால் Trump க்குக் குழப்பம் வரும்தானே? 

🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.