Jump to content

குறுங்கதை 26 - ஆகஸ்ட் இரண்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ஆகஸ்ட் இரண்டு
--------------------------
சந்தியில் நண்பன் ஒருவன் பலசரக்கு கடை  வைத்திருந்தான். அந்த நாட்களில் ஒரு நாளின் சில பகுதிகளை அங்கே செலவிடுவதும் எங்களின் வழக்கமாக இருந்தது.  பல சமயங்களில் நண்பனின் இரு சகோதர்களும் கூட அங்கே வியாபாரத்தில் நிற்பார்கள். எங்களுக்குள் ஒரு சில வயதுகளே இடைவெளி. கடை ஒரு அமைவான இடத்தில் இருந்தது. புதிய சந்தைக் கட்டிடத்தில் சந்தியை நோக்கிய திசையில் கடை இருந்தது. கடையில் இருந்து பார்த்தால் சந்தி முழுவதும் தெரியும்.
 
அப்பொழுது நான் சில தனியார் கல்வி நிலையங்களில் படிப்பித்துக் கொண்டிருந்தேன். மிகுதி நேரங்களில் இந்தக் கடை, பந்தடி, கடற்கரை, கோவில் வீதி, சந்தியில் மற்றும் ஊரில் இருக்கும் திண்ணைகள், கல்யாண வீட்டுச் சோடனைகள் என்று காலம் கஷ்டம் அறியாமல் போய்க் கொண்டிருந்தது. நண்பர்கள் ஒவ்வொருவராகச் கொழும்பு சென்று, அங்கிருந்து வெளிநாடுகளுக்கு செல்லவும் ஆரம்பித்திருந்தனர். சிலர் இந்தியா போய் அங்கேயே தங்க ஆரம்பித்திருந்தனர்.
 
ஊர் எல்லோரிடமும் அடிவாங்கிக் கொண்டிருந்தது காலம் அது. இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை, அதை விட இலங்கை இராணுவத்தின் ஆபரேசன்கள் என்று விடாமல் எரிந்து கொண்டிருந்தது ஊர். 87 ஆம் ஆண்டில் நடந்த லிபரேஷன் ஆபரேஷன் தான் ஊரின் முதுகை முறித்த கடைசித் துரும்பானது. அந்த நிகழ்வுடன் கிளம்ப வழி இருந்தவர்கள் பலரும் ஊரிலிருந்து வெளியேற வழி தேடினர். சிலர் எப்பாடு பட்டாவது ஏ லெவல் பரீட்சையை எடுத்து முடித்து விட்டு பின்னர் வெளியே போகலாம் என்று 87 ஆம் ஆண்டைத் தாண்டியும் ஊரில் நின்றனர்.
 
பின்னர் வந்த இந்திய இராணுவம் முதலில் முழுக் குழப்பத்தில் இருந்தது. சமாதானமா, சண்டையா, யாருடன் சண்டை, யாருடன் சமாதானம் என்று அவர்களுக்கு பெரும் குழப்பமாகவே இருந்திருக்கும். எங்களுக்கும் அப்படியே இருந்தது. ஆரம்பத்தில் நாங்கள் அவர்களை எந்த விதமான பயத்துடனும் அணுகவில்லை. ஊரைச் சுற்றி அவர்களின் பல முகாம்கள், ஆனாலும் நாங்கள் அவர்களைப் பொருட்படுத்தவில்லை.
 
பின்னர் தகராறாகி, நண்பர்கள் எதிரிகள் என்று உருவாகினர், தலையாட்டிகள் வந்தனர். அடிக்கடி சுற்றி வளத்து, கூட்டிக்கொண்டு போவார்கள். ஒரு பாடசாலையில் வைத்திருப்பார்கள். அம்மாக்கள் பாடசாலைக்கு வெளியே காத்திருப்பார்கள். தலையாட்டி தலையாட்டாமல் விட்டால், உடனேயே விட்டு விடுவார்கள். தலையாட்டி தலையை ஆட்டி விட்டால், அது வேற கணக்கு, ஆனாலும் வெளியில் வந்துவிடலாம்.
 
எங்கள் பகுதியில் தலையாட்டியாக இருந்தவரை எங்கள் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். அவருக்கும் எங்கள் எல்லோரையும் நன்றாகவே தெரியும். அவர் சிலரை வேண்டும் என்றே 'போட்டுக்' கொடுத்தார். அவர் உண்மையான ஆபத்துள்ள எவரையும் போட்டுக் கொடுத்ததாக எனக்கு ஞாபகமில்லை. ஆனாலும் இவர் ஏன் அவர்களுடன், தலையாட்டியாக, போய்ச் சேர்ந்தார் என்று தெரியவில்லை.
 
ஆகஸ்ட் இரண்டு, 1989ம் ஆண்டு. காலையில் கடையில் நின்று கொண்டிருந்தேன். நண்பனும், அவனின் தம்பியும் கூட நின்றனர். அருகில் சிவபுர வீதியில் இருக்கும் தனியார் கல்வி நிலையத்தில் எனக்கு ஒரு வகுப்பு இருந்தது. வகுப்பை முடித்து விட்டு வருவதாக நண்பனிடம் சொல்லி விட்டு சென்றேன். 
 
அந்த நேரத்தில் அங்கு ஒரே ஒரு வகுப்பு மட்டுமே, என்னுடைய வகுப்பு மட்டும், நடந்து கொண்டிருந்தது. திடும்மென்று முன்கதவால் இந்திய இராணுவத்தினர் சிலர் உள்ளே வந்தனர். என்ன, ஏது என்று கேட்டு விட்டு, முன் கதவாலேயே வெளியில் போனார்கள். ஒரு நிமிடம் கூட ஆகியிருக்காது. எங்கும் துப்பாக்கிச் சத்தம். தலைக்கு மேலால் சன்னங்கள் பறந்தன போல் இருந்தன.
 
மாணவர்களும், நானும் பின்பக்கம் இரண்டு சுவர்கள் ஏறி குதித்தோம். அப்படியே தீருவில் வயல்கள் கடந்து, பனங்கூடல்களுக்குள்ளால் ஓடிக் கொண்டே இருந்தோம். பனங்கூடல்கள் தாண்டி கொம்மந்தறை பகுதியை அடையும் போது, எதிரே இந்திய இராணுவத்தினர் அவசரம் அவசரமாக வாகனங்களில் ஊரை நோக்கி போய்க் கொண்டிருந்தனர். 
 
ஊருக்கு திரும்பிப் போக இரண்டு நாட்கள் எடுத்தது. ஊரையே இரண்டு நாட்கள் மூடி வைத்திருந்தனர் இந்தியா இராணுவத்தினர். ஊருக்குள் வந்தவுடன், ஓடிப் போனேன் கடைக்கு. கடை முழுவதுமாக எரிக்கப்பட்டிருந்தது. நண்பனும், அவனின் தம்பியும் காணாமல் போய்விட்டனர்.
  • Like 1
  • Sad 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


அண்மையில் இந்திய இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்ட ஒருவர் தனது கதையை கூறினார் ..அவருக்கு இப்ப வயது 60 க்கு மேல்...
இந்திய இராணுவம் இவரை சுற்றிவளைப்பின் பொழுது கைது செய்து கோவிலுக்கு அழைத்து சென்று விட்டனர் .அணிந்திருந்த அரைகாற்சட்டையுடன் .

தமிழ் தெரிந்த ,தமிழ்படங்கள் படங்கள் பார்க்கின்ற  மேலதிகாரி போல் இருக்க வேணும் 
இவரை கண்டவுடன் டேய் இவனை பார்த்தால் கமலஹாசன் போல இருக்கிறது இவனை வீட்டை கொண்டு போய் விடுங்கோடா என கூறி அனுப்பியுள்ளார் இவர் போக பயத்தில் மறுப்பு தெரிவித்து  அங்கயே நின்றாராம் .(போக சொல்லி பின்னால் சுட்டு விடுவார்கள் என்ற பயத்தில்)
பின்பு அதிகாரி தனது ஜீப்பில் அழைத்து சென்று வீட்டில் இறக்கி விட்டாராம்...

கருப்பர்களுக்கு மத்தியில் ஒருவன் சிவலையாகவும் அழகாகவும் இருந்தவுடன் அவன் போராளி அல்ல என இந்திய இராணுவ அதிகாரி முடிவெடுத்துள்ளார்...

இந்தியன்2 படத்தில் வரும் கமல் போலத்தான்  அவர் இப்ப இருக்கின்றார் 

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:


அண்மையில் இந்திய இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்ட ஒருவர் தனது கதையை கூறினார் ..அவருக்கு இப்ப வயது 60 க்கு மேல்...
இந்திய இராணுவம் இவரை சுற்றிவளைப்பின் பொழுது கைது செய்து கோவிலுக்கு அழைத்து சென்று விட்டனர் .அணிந்திருந்த அரைகாற்சட்டையுடன் .

தமிழ் தெரிந்த ,தமிழ்படங்கள் படங்கள் பார்க்கின்ற  மேலதிகாரி போல் இருக்க வேணும் 
இவரை கண்டவுடன் டேய் இவனை பார்த்தால் கமலஹாசன் போல இருக்கிறது இவனை வீட்டை கொண்டு போய் விடுங்கோடா என கூறி அனுப்பியுள்ளார் இவர் போக பயத்தில் மறுப்பு தெரிவித்து  அங்கயே நின்றாராம் .(போக சொல்லி பின்னால் சுட்டு விடுவார்கள் என்ற பயத்தில்)
பின்பு அதிகாரி தனது ஜீப்பில் அழைத்து சென்று வீட்டில் இறக்கி விட்டாராம்...

கருப்பர்களுக்கு மத்தியில் ஒருவன் சிவலையாகவும் அழகாகவும் இருந்தவுடன் அவன் போராளி அல்ல என இந்திய இராணுவ அதிகாரி முடிவெடுத்துள்ளார்...

இந்தியன்2 படத்தில் வரும் கமல் போலத்தான்  அவர் இப்ப இருக்கின்றார் 

இப்படித்தான் ஒருநாள்  நாய் மாதிரி இழுத்துக்கொண்டு போனாங்கள்.. அம்மாளாத்தை கோவிலில்வைத்து முட்டுக்காலில் இருக்கவைத்திட்டு..காட்லி போடியள் போககலாம் ..மற்றவையை மறித்துவைத்துமுட்கிளுவைகதியால் முறித்து அடி அடி என்று அடித்துவிட்டுகாம்புக்கு  கொண்டுபோய் சுடுமணலும் ரொட்டித்தட்டு ..தண்டனையும் தந்தவை...விளங்காத ஒன்று காட்லி காரரை ஏன் விட்டவங்கள்..ற்ஸோ  நல்லாயிருக்கு தொடருங்கள்..

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, putthan said:

கருப்பர்களுக்கு மத்தியில் ஒருவன் சிவலையாகவும் அழகாகவும் இருந்தவுடன் அவன் போராளி அல்ல என இந்திய இராணுவ அதிகாரி முடிவெடுத்துள்ளார்...

ஒரு நாள் பின் வளவுக்குள் போட்டிருந்த பனம் பாத்தியை சுற்றி நின்று கொண்டனர். இது என்ன, இதை தோண்டிப் பார்க்கப் போகின்றோம் என்று அவர்கள் ஒரே ஆரவாரம். அப்ப தான் பனங்கிழங்கே பிடிக்க ஆரம்பித்திருக்கும். 

இது பனம் பாத்தி, இதற்குள்ள பனங்கொட்டைகளை தாட்டிருக்கின்றோம், அவை முளைத்து கிழங்காக வரும், இன்னும் இரண்டு மாதங்கள் போக வேணும்............ இதையெல்லாம் அவர்களுக்கு இங்கிலீசில் சொல் என்று என் வீட்டார் எனக்குச் சொன்னார்கள். 

இதை இப்ப இங்கிலீசில் சொல்லச் சொன்னாலே அது ஒரு நல்ல முடிவைக் கொடுக்கும் என்று எனக்கு நம்பிகையில்லை.............. 🤣.

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, alvayan said:

இப்படித்தான் ஒருநாள்  நாய் மாதிரி இழுத்துக்கொண்டு போனாங்கள்.. அம்மாளாத்தை கோவிலில்வைத்து முட்டுக்காலில் இருக்கவைத்திட்டு..காட்லி போடியள் போககலாம் ..மற்றவையை மறித்துவைத்துமுட்கிளுவைகதியால் முறித்து அடி அடி என்று அடித்துவிட்டுகாம்புக்கு  கொண்டுபோய் சுடுமணலும் ரொட்டித்தட்டு ..தண்டனையும் தந்தவை...விளங்காத ஒன்று காட்லி காரரை ஏன் விட்டவங்கள்..

🤣..........

87ம் ஆண்டில் காலி பூஸா முகாமுக்கு போகாமல் சில பேர் தப்பினதிற்கும் ஹாட்லியில் படித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பது தான் காரணம்.......... ஆனால், பாடசாலை அதிபர் (பாலசிங்கம் மாஸ்டர்) அங்கு வர முன்னரே கப்பலில் ஏற்றப்பட்டவர்களை இராணுவம் திரும்ப இறக்கி விடவில்லை, காலியில் போய் தான் கப்பல் நின்றது............... 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/8/2024 at 00:32, ரசோதரன் said:

கிளம்ப வழி இருந்தவர்கள் பலரும் ஊரிலிருந்து வெளியேற வழி தேடினர். சிலர் எப்பாடு பட்டாவது ஏ லெவல் பரீட்சையை எடுத்து முடித்து விட்டு பின்னர் வெளியே போகலாம் என்று 87 ஆம் ஆண்டைத் தாண்டியும் ஊரில் நின்றனர்

அப்போ, நீங்கள் எதற்காக ஏ லெவல் எடுத்துவிட்டு tuition கொடுத்துக் கொண்டிருந்தீர்கள்? வித்தியாசமான ஆளா இருக்கிறீங்கள்

 

On 3/8/2024 at 00:32, ரசோதரன் said:

ஊருக்குள் வந்தவுடன், ஓடிப் போனேன் கடைக்கு. கடை முழுவதுமாக எரிக்கப்பட்டிருந்தது. நண்பனும், அவனின் தம்பியும் காணாமல் போய்விட்டனர்.

தலையாட்டிக்கு கடன் தர  மறுத்திருக்கலாம்

ஓகஸ்ட் 2 வலி நிறைந்த நாள்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kavi arunasalam said:

அப்போ, நீங்கள் எதற்காக ஏ லெவல் எடுத்துவிட்டு tuition கொடுத்துக் கொண்டிருந்தீர்கள்? வித்தியாசமான ஆளா இருக்கிறீங்கள்

ஒரு வித்தியாசமும் இல்லை, கவிஞர் அவர்களே. 

ஏ லெவல் எடுத்து பாஸ் ஆகினால் பிரச்சனையில்லை, ஃபெயில் ஆனாலும் பரவாயில்லை. ஆனால் பல்கலை அனுமதி கிடைத்தால் அங்கே ஒரு சிக்கல் இருந்தது. மருத்துவம், பொறியியல் போன்றவற்றுக்கு அனுமதி கிடைத்தால், வெளிநாடுகளுக்கு போகாமல், பல்கலை போய் படித்து முடிப்போமே என்ற நிலை தான் அன்று பொதுவாக இருந்தது. ஆனால், ஜேவிபி யாழ் பல்கலையைத் தவிர மற்ற எல்லாப் பல்கலைகளையும் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் மூடி வைத்திருந்தது, 87ம் ஆண்டில் இருந்து 90ம் ஆண்டு வரை.

மீண்டும் சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர். உடுகம்பொல என்னும் பெயர் பிரபலமானது. வடக்கு, கிழக்கில் ஒரு பிரச்சனை, தெற்கில் இன்னொரு பிரச்சனை. அவர்களை பிரேமதாசா அழித்தார்.

அந்த மூன்று வருடங்களும் நாங்கள் ஊரில் ஏதாவது செய்தாக வேண்டுமே............😃.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.