Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

VideoCapture_20240810-160345.jpg?resize=

நல்லுார் ஆலய வளாகத்திற்குள் நுழைந்த பிக்குமார்களின் வாகனங்களால் பரபரப்பு.

நல்லூர் கந்தசுவாமி கோயில் ஆலய சுற்று வீதியில் வாகனங்கள் நுழைய தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சில பிக்குகள் வாகனத்துடன் நுழைந்தமையால் சர்ச்சை எழுந்துள்ளது.

நல்லூர் கந்தசாமி கோவில் பெருந்திருவிழா காரணமாக வாகன போக்குவரத்துகளை தடை செய்யும் வீதி தடைகளையும் மீறி நல்லூர் கந்தசாமி ஆலய முன்பக்கம் வரை பௌத்த பிக்குகளின் வாகனம் உள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளது.

சாதாரண பொது மக்களின் வாகனங்களை திருப்பி அனுப்புகின்ற பொலிஸார், பிக்குகளின் வாகனத்தை உள்நுழைய அனுமதித்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

https://athavannews.com/2024/1395312

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். நல்லூரில் வெடித்தது புதிய சர்ச்சை

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 15.09.2023 திகதிய வர்த்தமான பத்திரிகையின்படியான  அறிவுறுத்தல்களில் 9ம் பிரிவையும், 16ம் பிரிவையும் நடைமுறைப்படுத்த படத்திலுள்ள வாகனம் நுழைந்த சந்தர்ப்பத்தில் அங்கே வீதித்தடை பணியில் இருந்தவர்கள் தவறியுள்ளார்கள்.

ஆகையால் மேற்குறித்த வர்த்தமான பத்திரிகைக்கமைய குறித்த இரு வாகனத்தார் மீதும், கடமையிலிருந்தோர் மீதும் யாழ் மாநகரசபை சட்ட நடவடிக்கை எடுக்கமுடியும்.

அல்லது, 9ம் பிரிவில் சொல்லப்பட்டுள்ளபடி, மாநகரசபை நீர் விநியோக வண்டி முன்னே செல்வதால் பின்னே நிற்கும் வாகனங்களை கழிவகற்றும் வாகனங்களாக கருதி உள்நுழைய அனுமதி கொடுத்தார்களா என்பதை மாநகரசபை விளக்க வேண்டும்.
செய்வார்களா?

பாரத பிரதமராயினும் உரிய நேரத்துக்கு மேலங்கியின்றி வா என திருப்பியனுப்பிய நல்லூரானிடம் கடந்தாண்டை போல இந்தாண்டும் நடந்த விதிமீறல்

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0JnTZxxivwVMBwreYkt2yeJ28qXxtuV9v8h1xUcYk6XsihficgQTeFYE8UMvNtCD6l&id=100089311781779&mibextid=cr9u03

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

454748670_1727252307681007_2004077393908

நல்லூரில்... பிக்குவுக்கு என்ன அலுவல்?
இவர்களை அங்கு வரச் சொல்லி... யாரும் வெத்திலை, பாக்கு வைத்து அழைத்தார்களா.
விகாரையில் இருந்து பிரித்து ஓதுறதை விட்டுட்டு...
தேவையில்லாத இடங்களில் என்ன இழவுக்கு மூக்கை நீட்டுகிறார்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

தேவையில்லாத இடங்களில் என்ன இழவுக்கு மூக்கை நீட்டுகிறார்கள்.

இதுதான் இவர்களின் இப்போதைய பணி! தங்கள் எஜமானன் காலில் தமிழரை விழ வைத்து வாக்கு அள்ளும் தேர்தல் தந்திரம். புலிகளை விட்டு எடுத்த அடுத்த தேர்தல் பிரச்சாரம். முன்பு, பாராளுமன்றத்தேர்தலின்போது மட்டக்களப்பில் தூஷண பிக்கர் வந்து இறங்கிய காணொளியை தேடிப்பிடித்து பாருங்கள் விளங்கும். பயமுறுத்தி அடிபணிய வைப்பது. முன்பு இராணுவத்தை வைத்து செய்ததை இப்போ, பிக்குகள்வழியாக செய்கின்றனர். அன்று பயங்கரவாதம் இன்று தொல்பொருள். நாளை யாரோ, காரணம் என்னவோ யாரறிவார்? நானறியேன். தமிழருக்கு எங்கே அடித்தால் வலிக்கும், எதை எடுத்தால் இரண்டுபடும் சமூகம் என்று நன்றாக தெரிந்து, தெரிவித்து வைத்து செய்கிறார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, satan said:

கனக்க ரென்சன் ஆக வேணாம் இதற்குத்தான் யாழ்பாணி மேட்டுகுடிகள் பார்த்து கொள்வினம் விட்டு விடுங்க 😃அநேகமா மறவன் புலவு  தனது ak47 துடைத்து ரெடியாகி இருப்பார் 😂

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, பெருமாள் said:

கனக்க ரென்சன் ஆக வேணாம் இதற்குத்தான் யாழ்பாணி மேட்டுகுடிகள் பார்த்து கொள்வினம் விட்டு விடுங்க 😃அநேகமா மறவன் புலவு  தனது ak47 துடைத்து ரெடியாகி இருப்பார் 😂

யாருக்கெதிராக?  இவர்களுக்கு காவலாக, காரணமில்லாமல் கிறிஸ்தவர்களை குறி வைத்து மறைந்து காத்திருந்திருப்பார். 

ஆமா AK 47 ஐ எதனால் துடைத்து வைத்திருந்திருப்பார்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.