Jump to content

சோழர், பாண்டியர் ஆட்சிக் காலத்தில் தவறு செய்தவர்களுக்கு தண்டனை என்ன தெரியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாண்டியர் ஆட்சியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகரின் மனைவி, மருமகளுக்கு என்ன தண்டனை தெரியுமா?

அண்டகால பைரவர் திருத்தலம், ஆறகளூர், ஆத்தூர்,சேலம்
படக்குறிப்பு, அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ காமநாத ஈஸ்வரர் திருக்கோவில் கட்டுரை தகவல்
  • எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 11 ஆகஸ்ட் 2024, 03:12 GMT
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

அரசுகள் உருவான காலத்தில் இருந்தே சிறைச்சாலைகளும் கடும் தண்டனைகளும் இருந்து வருகின்றன.

சங்க காலத்திலும் அதற்குப் பின்பும் சிறை தண்டனைகள் எந்தக் காரணங்களுக்காக வழங்கப்பட்டன என்பதை பாடல்களும் கல்வெட்டுகளும் உணர்த்துகின்றன.

பல மத இலக்கியங்களிலும், சங்க இலக்கியங்களிலும் சிறைகளைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன.

சங்க இலக்கியங்களில் சிறைச்சாலை

சிறைச்சாலை என்பது இலக்கியங்களில் சிறைக்களம், சிறைக் காவல், சிறைக் கூடம், சிறைப் பள்ளி எனக் குறிப்பிடப்படுகிறது. தவறு செய்யும் குற்றவாளியைக் கைது செய்வதற்கு 'சிறை கொள்ளுதல், சிறை செய்தல், சிறை பிடித்தல்' ஆகிய சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

தண்டனைக்கு உள்ளான கைதி, சிறைச்சாலையில் அனுபவிக்கும் துன்பங்களை 'சிறை நோய்' என்ற சொற்களின் மூலம் மணிமேகலை குறிப்பிடுகிறது.

கோவில் கல்வெட்டு
படக்குறிப்பு,அக்காலத்தில் ஆண்கள், பெண்கள் பாகுபாடின்றி சிறை தண்டனை வழங்கப்பட்டது என்கிறார் பன்னீர்செல்வம்

சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழ மன்னரான செங்கணானோடு போரிட்டுத் தோல்வியடைந்ததால் சிறையில் அடைக்கப்பட்டதை புறநானூற்று பாடல் ஒன்று குறிப்பிடுகிறது.

கணைக்கால் இரும்பொறை சிறையில் இருந்தபோது, அவர் ஒருமுறை தாகத்துக்குத் தண்ணீர் கேட்கிறார். அப்போது சிறைக் காவலர் அந்தத் தண்ணீரை காலம் தாழ்த்திக் கொடுக்கிறார். அதைக் குடிக்க மறுக்கும் இரும்பொறை "குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்" என்ற பாடலைப் பாடிவிட்டு உயிரிழந்ததாக புறநானூறு குறிப்பிடுகிறது. அந்தப் பாடல் புறநானூறில் 74வது பாடலாக இடம் பெற்றிருக்கிறது.

தமிழ்நாட்டில் மன்னராட்சிக் காலத்தில் சிறைகள் எப்படியிருந்தன என்பது குறித்த தகவல்கள், கல்வெட்டுகள் மூலம் நமக்குக் கிடைக்கின்றன.

சோழர் மற்றும் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த சுமார் 25 கல்வெட்டுகளில் சிறைச்சாலைகள் பற்றிய செய்திகள் வந்துள்ளதாகக் குறிப்பிடும் இந்திய தொல்லியல் துறையின் தமிழ் கல்வெட்டுகள் துறைத் தலைவரும் துணை கண்காணிப்பாளருமான க. பன்னீர்செல்வம், அந்தக் கல்வெட்டுகளில் இருந்து அக்காலகட்டத்தில் விதிக்கப்பட்ட தண்டனைகள் பற்றிய விவரங்களும் கிடைப்பதாகத் தெரிவிக்கிறார்.

இந்தக் கல்வெட்டுகள் பல சுவாரஸ்யமான தகவல்களைத் தருகின்றன. உதாரணமாக, கோவில் நகைகளைத் திருடியதால் இரண்டு பெண்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சேலம் மாவட்டத்தில் கிடைக்கும் ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.

கோவில் நகையைத் திருடிய அர்ச்சகரின் மனைவிக்கு தண்டனை

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகளூர் கிராமத்தில் இருக்கிறது காமேஸ்வரர் ஆலயம். இதுவொரு சிவன் கோவில். இந்தக் கோவிலின் இரண்டாம் பிரகாரத்தின் தெற்குச் சுவரில் இரண்டாம் ஜடவர்மன் சுந்தரபாண்டியனின் 18ஆம் ஆட்சியாண்டு (கி.பி.1289) கல்வெட்டு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கல்வெட்டில் "தேவாண்டார் சானி உள்ளிட்டார் பக்கலே களவாக நிரப்பி இவளையும் இவள் மருமகளையும் சிறையிலே வைத்து" என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.

இது, இரண்டு பெண்கள் திருக்கோவிலில் வைத்திருந்த ஆபரணங்களைத் திருடியதால் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வை விவரிப்பதாகச் சொல்கிறார் பன்னீர்செல்வம்.

"அதாவது, அந்தக் கோவிலில் பணிபுரிந்த அர்ச்சகர் ஒருவரின் மனைவியான தேவாண்டான் சானி என்பவரும் அவருடைய மருமகளும் கோவில் நகைகளைத் திருடியுள்ளனர். இவர்களை சபையோர் திருமண்டபத்தில் கூடியிருந்து விசாரித்ததில் உண்மையாகவே இவர்கள் திருக்கோவிலின் நகைகளைத் திருடியவர்கள் என்பது கண்டறியப்பட்டது. பின்னர் அவர்கள் செய்த குற்றத்திற்காகச் சிறை தண்டனையும் விதித்துள்ளனர்.

மேலும் அவர்களுடைய பணி செய்யும் உரிமையையும் அவர்களது உறவினர்கள் உள்ளிட்டவர்களின் பணி உரிமைகளையும் விட்டுக்கொடுக்குமாறு வலுயுறுத்தியுள்ளனர். அக்காலத்தில் குற்றம் செய்தவர்கள் ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடு இல்லாமல் செய்த தவறுக்கு ஏற்ப சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பதற்கு இந்தக் கல்வெட்டு மிகச்சிறந்த உதாரணம்" என்கிறார் பன்னீர்செல்வம்.

ஜாமீன்தாரர்களின் பொறுப்பு

தமிழ் கல்வெட்டுகள் துறைத் தலைவர் க . பன்னீர்செல்வம்
படக்குறிப்பு,இந்திய தொல்லியல் துறையின் தமிழ் கல்வெட்டுகள் துறைத் தலைவரும் துணை கண்காணிப்பாளருமான க. பன்னீர்செல்வம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கத்தில் உள்ள ரங்கநாதர் திருக்கோவிலில் கி.பி. 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் சிறைச்சாலை பற்றிய குறிப்பு இடம்பெற்றிருக்கிறது. இந்தக் கல்வெட்டில், திருவரங்க நாராயணன் ஸ்ரீ கிருஷ்ணன் ஆழ்வார் பண்டாரத்தில் (கருவூலம்) 940 காசுகளைப் பெற்றுக்கொண்டு திருப்பித் தராமல் இருந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதற்காக அவரிடம் ராஜேந்திர சோழ மூவேந்த வேளார் கணக்கு கேட்டுள்ளார். அவர் 600 கலம் நெல் கொடுப்பதற்கும் ஒப்புக்கொண்டிருந்திருக்கிறார். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் தாம் ஒப்புக்கொண்டபடி 940 காசையும் 600 கலம் நெல்லையும் தராததால், சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அந்தக் கல்வெட்டு தெரிவிக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் ஆழப்பிறந்தான் என்ற ஊரில் அமைந்துள்ள பூமீஸ்வரர் திருக்கோவிலின் கர்ப்பகிரகத்தின் வடக்கு சுவற்றில் கி.பி. 1480ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டிலும் சிறைச்சாலை பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது .

அதில், "அறந்தாங்கிப்பற்று, விளை மாணிக்கப்பற்று, அரையகுளப்பற்று நாட்டவர்கள், பிள்ளைபேறும் ஒத்துக்கொண்டு செய்து கொடுத்துள்ள ஒப்பந்தத்தில் தேவராயர் தொண்டைமானார் நாளில் நடந்து வருகிற முறைப்படி நடத்திக் கொள்ளவும், ஒருவர் குற்றம் செய்தால் அவரை ராஜ குற்றம் கேட்கும் அளவில் அவரது உற்பத்தியில் ஒரு பாதியை பண்டாரத்தில் (கருவூலத்தில்) முதலாக இடவும், பிரிதொரு பாதிக்கு அவரைச் சிறையிட்டு வாங்கவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அவரது பேரில் நியமித்த முதலைச் செலுத்துவதற்கு முடியாமல் ஓடிப் போனால் அவருக்குப் பிணை நின்றோர் (ஜாமீன்தாரர்) உத்தரவாதம் சொல்லக் கடமைப்பட வேண்டும்" என்ற செய்திகள் இடம்பெற்றுள்ளன.

சோழர், பாண்டியர் ஆட்சிக் காலத்தில் தவறு செய்தவர்கள் மட்டுமல்லாமல் பிணை அளித்தவர்களுக்கும் சிறை தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது என்கிறார் க. பன்னீர்செல்வம்

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.