Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனப்படுகொலையின் குருதியால் நனைந்தது நம் நாட்காட்டி. ஓராண்டின் பெரும்பலான நாட்களில் நமது மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதும் ஒரு நாளில் ஈழத்தின் பல பகுதிகளில் இனப்படுகொலைகள் நடந்துள்ளன என்பதும் நாம் எத்தகைய இனப்படுகொலையை இலங்கைத் தீவில் எதிர்கொண்டுள்ளோம் என்பதையே காட்டி நிற்கின்றது.

ஈழத்தின் சில ஊர்களை சொல்லும் போது நமக்கு அங்கு நடந்த இனப்படுகொலைகள் தான் நினைவுக்கு வருமளவில் ஒரு இனத்தின் கூட்டு நினைவுகளை பேரினவாத்தின் இனவழிப்பு பாதித்திருக்கிறது.

ஒரு இனப்படுகொலை நிகழ்ந்த காலத்தில் மாத்திரமின்றி அது வரலாறு முழுவதும் பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. குறிப்பாக அதனால் எழும் உளவியல் பாதிப்புக்கள் நின்று கொல்லும் விசமாக ஒரு இனத்தை சூறையாடுகிறது என்பதே உண்மை.

கிழக்கின் இனப்படுகொலைகள்

கிழக்கின் இனப்படுகொலைகள் ஈழத்தின் கிழக்கில் பல இனப்படுகொலைகள் நடந்தேறி உள்ளன. சிறிலங்கா அரசின் இனவழிப்புச் செயற்பாடுகளால் அதிக பாதிப்புக்களை சுமந்த இடமாக கிழக்கு இருக்கிறது.

அம்பாறையை உலுக்கிய திராய்க்கேணி இனப்படுகொலை… | Ampara Tamil Massacre Details

கொக்கட்டிச்சோலை, சத்துருக்கொண்டான், வந்தாறுமூலை எனப் பல இடங்கள் இனப்படுகொலையின் குருதியால் நனைந்த இடங்களாகவே வரலாற்றின் பக்கங்களில் நிலைத்துள்ளன. ஆகஸ்ட் மாத்தில் கிழக்கு மாகாணத்தில் நடந்த சில இனப்படுகொலைகள் தமிழ் இனத்தின் நினைவுகளில் இருந்து அகல மறுகின்றன.

இதில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை (Ampara) மாவட்டத்தில் உள்ள திராய்க்கேணி என்ற கிராமத்தில் 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத்தின் 6ஆம் திகதி நன்கு திட்டமிட்ட வகையில் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலை இன்றும் அந்த மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கியே வருகிறது.

மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்காக 70 கிலோ மீற்றர் தூரத்தில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு தமிழ் கிராமமே திராய்க்கேணி. தமிழ்ப் பண்பாடு முகிழ்ந்த இக் கிராமம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதுமாகும். இக் கிராமம் எங்கும் பரவியிருக்கும் சைவ ஆலயங்கள் இந்தக் கிராமத்தின் தொன்மைக்கு ஆதாரமாயிருக்கும் சான்றுகளாகும்.

பேரினவாத ஆக்கிரமிப்பு

இந்தக் கிராமத்தை ஆக்கிரமிக்க வேண்டும் என்றும் அதனைப் போன்றே அம்பாறையின் பல பகுதிகளையும் ஆக்கிரமித்துவிட வேண்டும் என்றும் கொண்டிருந்த பேரினவாத ஆக்கிரமிப்பின் வெளிப்பாடாக திராய்க்கேணி மீதான இனப்படுகொலை அரங்கேற்றப்பட்டது.

அம்பாறையை உலுக்கிய திராய்க்கேணி இனப்படுகொலை… | Ampara Tamil Massacre Details

தீயில் எரிக்கப்பட்ட முதியவர்கள்

இந்த நிலையில் 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் நாளன்று சிறப்பு இராணுவத்தினரின் உதவியுடன் திராய்க்கேணி கிராமத்தினுள் நுழைந்த இனவழிப்பாளர்கள், அங்குள்ள கோயிலில் தஞ்சமடைந்திருந்த 54 தமிழர்களைப் படுகொலை செய்துள்ளனர்.

அத்தோடு அந்த இனவழிப்பு அட்டகாசத்தை அவர்கள் நிறுத்தியிருக்கவில்லை. திராய்க்கேணி கிராமத்தின் வீடுகளினுள் நுழைந்த இனப்படுகொலையாளிகள் முதியவர்கள் பலரை உயிருடன் தீவைத்துக் கொளுத்தினர். அந்த முதியவர்கள் தீயில் துடிதுடித்து இறந்து போயினர்.

அத்தோடு பதின்மூன்று வயதான சிறுமி ஒருத்தி கடத்தப்பட்டு தகாத முறைக்கு உள்ளாக்கப்பட்டு பெரும் சித்திரவதைகளினால் இனப்படுகொலை செய்யப்பட்ட நிகழ்வும் இதன்போது நிகழ்த்தப்பட்டது. கிராமம் எங்கும் இனப்படுகொலையின் வேட்டை பரவியது.

நீதி

கிராமம் எங்கும் உலவிய இனப்படுகொலையாளிகள் தமிழ் மக்களின் வீடுகள் மீது தீயை பற்ற வைத்து வீடுகளை அழித்தனர். இதனால் 350 வீடுகள் குண்டர்களால் தீக்கிரையாக்கப்பட்டன. அன்றைய நாளில் காலை ஏழு மணிக்கு ஆரம்பமான இப்படுகொலை நிகழ்வுகள் மத்தியானம் வரை நீடித்திருந்தது. நாள் முழுவதும் படுகொலையின் ஓலம் பரவிக் கொண்டிருந்தது.

அம்பாறையை உலுக்கிய திராய்க்கேணி இனப்படுகொலை… | Ampara Tamil Massacre Details

இப்படுகொலைகளைத் தொடர்ந்த அக்கிராமத்தில் இருந்து சனங்கள் வெளியேறினார்கள். மக்கள் வெளியேறினார்கள் என்பதைவிட துரத்தப்பட்டார்கள் என்பதே பொருத்தமானது. அன்றைக்கு ஊரைவிட்டுச் சென்ற மக்கள் காரைதீவில் அகதி முகாங்களில் தஞ்சம் புகுந்தார்கள். அந்தப் படுகொலைக்குப் பின்னர் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னரே ஊர் திரும்பினர்.

அந்தளவுக்கு அந்தப் படுகொலை திராய்க்கேணி மக்களை பாதித்திருந்தது. இந்தப் படுகொலைக்கான நீதியை மக்கள் கோரி நின்றார்கள். 90களில் நடந்த இப் படுகொலைக்கான நீதியை மக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், திராய்க்கேணி இனப்படுகொலை குறித்து முழுமையான விசாரணைகள் வேண்டும் எனக் குரல் கொடுத்த திராய்க்கேணி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஈ. மயிலைப்போடி என்பவர் 1997 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றொரு பேரிடியாக நிகழ்த்தப்பட்டது.

இதற்குப் பிறகு 2003ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் நாள் திராய்க்கேணி பெரியதம்பிரான் கோயில் பகுதியில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அங்குள்ள குழி ஒன்றில் மனித எச்சங்கள் பலவற்றைக் கண்டுபிடித்தனர்.

திராய்க்கேணி இனப்படுகொலை

இவ்வெச்சங்கள் திராய்க்கேணிப் படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களினதாய் இருக்கலாம் என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் தொடர்ந்த வலியுறுத்திய போதும் அரசினால் அது கண்டுகொள்ளப்படவில்லை.

அம்பாறையை உலுக்கிய திராய்க்கேணி இனப்படுகொலை… | Ampara Tamil Massacre Details

அந்த எச்சங்களும் அந்த சாட்சியங்களும்கூட திட்டமிட்டு அழிக்கப்பட்டன. இந்தப் படுகொலையினால் சுமார் 40 பெண்கள் விதவைகளாக்கப்பட்ட கொடூரமும் நிகழ்ந்தது. திராய்க்கேணி இனப்படுகொலைக்கான அஞ்சலி நிகழ்வு ஆண்டு தோறும் அந்தக் கிராமத்தில் நடந்து வருகின்றது.

அந்த வகையில் நடந்த ஆண்டு நடந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றி அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் முக்கிய விடயம் ஒன்றைக் கூறியிருந்தார். அதாவது, ‘திராய்க்கேணி தமிழ் மக்கள் அன்றைய காலத்தில் உயிராபத்துக்கு முகம்கொடுத்தனர்.

அவர்கள் இப்போது கூட பல சவால்களுக்கும் நெருங்குவாரங்களுக்கும் மத்தியிலேயே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு 33 வருடங்களுக்கு முன்பு இழைக்கப்பட்ட அநீதிக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. நிவாரணம் கிடைக்கவில்லை.

ரணத்தின் நீட்சி

அதற்காக நாங்கள் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றோம்…” என்று அவர் கூறியிருப்பது இப்படுகொலையின் ஆறாத ரணத்தின் நீட்சியாகும். இதுவேளை திராய்க்கேணி மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அவர்களது இருப்பை இல்லாமல் செய்யும் காரியங்கள் தொடர்வதாகவும் கலையரசன் குற்றம் சுமத்தியிருந்தார்.

அம்பாறையை உலுக்கிய திராய்க்கேணி இனப்படுகொலை… | Ampara Tamil Massacre Details

அன்று திராய்க்கேணி மக்கள் கொல்லப்பட்டது அவர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கவே என்பதும் இன்றும் அதுவே அங்கு தொடர்கின்றது என்பதையும் கலையரசனின் கருத்து எடுத்துரைக்கின்றது. அத்துடன் தமிழ் மக்களை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும் என்று தந்தை செல்வா கூறியது போன்று துர்ப்பாக்கிய நிலைக்கு திராய்க்கேணி மக்கள் தள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கவலையுடன் கூறிய விடயம், வடக்கு கிழக்கின் பெரும்பாலான கிராமங்கள் எதிர்கொள்ளும் அவலத்தையே காட்டுகிறது.

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 09 August, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.

இந்த இனப்படுகொலைகளை எமது அரசியல்வாதிகள் என்றுமே நினைவுகூருவதில்லையா?

  • 11 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திராய்க்கேணி படுகொலை; 35 வது ஆண்டுகளாகியும் நீதி கிடைக்கவில்லை - கண்ணீருடன் மக்கள்

07 AUG, 2025 | 03:51 PM

image

அம்பாறை மாவட்டத்தின் திராய்க்கேணியில் 54 அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 35 ஆண்டுகளாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என 35 வது வருட திராய்க்கேணி படுகொலை தினத்தில் சம்பவத்தை பார்த்து இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்கள் கருத்துக்களை கண்ணீருடன் தெரிவித்தார்கள்.

1990 ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி இடம்பெற்ற திராய்க்கேணி படுகொலை சம்பவத்தின் 35 வது ஆண்டு நினைவேந்தல் திராய்க்கேணி  எழுச்சி ஒன்றியம் ஏற்பாட்டில் சம்பவம் இடம்பெற்ற  திராய்க்கேணி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில்  முன்றலில் புதன்கிழமை (6) மாலை இடம்பெற்றபோது அங்கு இவ்வாறு குறிப்பிட்டனர்.

மேலும் அங்கு தெரிவித்த அவர்கள், 

செம்மணி போன்று  திராய்க்கேணியிலும் மனிதப்புதைகுழி உள்ளது. அதுவும் தோண்டப்படவேண்டும். அட்டாளச்சேனை கிழக்கு மாகாணம் பிரதேச கிராமத்தில் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் ஆறாம் திகதி நன்கு திட்டமிடப்பட்ட வகையில் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலை இன்றும் அந்த மக்களினுடைய இருப்பை கேள்விக்கு உள்ளாக்கி வருகிறது அம்பாறை மாவட்டத்தின் அட்டாளச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்திருக்கின்ற ஒரே ஒரு தமிழ் கிராமம் திராய்கேணியாகும். தமிழர் பண்பாடு மிகுந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கிராமமாகும்.

சைவ ஆலயங்கள் இந்த கிராமத்தின் தன்மைக்கு ஆதாரமாய் இருக்கும் சான்றுகளாகும். இந்த கிராமத்தை ஆக்கிரமிக்க வேண்டும் என்றும் அதேபோன்று அம்பாறையில் பல பகுதிகளையும் ஆக்கிரமித்து விட வேண்டும் என்றும் எண்ணம் கொண்டிருந்த பேரினவாத ஆக்கிரமிப்பின் வெளிப்பாடாகவே திராய்க்கேணி மீதான இனப்படுகொலை அரங்கேற்ப்பட்டது.

இராணுவத்தினரின் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆறாம் திகதியில் உதவியுடன் திராய்கேணி கிராமத்தில் நுழைந்த முஸ்லீம் ஊர்காவல்ப்படையினர். முஸ்லீம்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில காடையர்கள் போன்ற இனவழிப்பாளர்கள் அங்குள்ள மக்களை கோயில்களில் ஒன்று சேரும்படி அழைத்திருந்தனர். அதன் அடிப்படையிலேயே அங்கு மக்கள் கூட அங்கிருந்த பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், ஆண்கள் 54 தமிழர்களை வெட்டியும் சுட்டும் வெறித்தனமாகக் காவு கொண்டனர்.

முதியவர்களை தங்களுடைய வீடுகளுக்குள்ளேயே வைத்து தீயிட்டு கொளுத்திய சம்பவங்களும் இன்றும் அங்கு நேரடியாக பார்த்த உறவுகளினுடைய கண்களில் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

தீக்கிரையாக்கப்பட்டதுடன் அன்றைய நாள் காலை 7.00 மணிக்கு ஆரம்பமான இந்த வெறியாட்டமானது பிற்பகல் வரை தொடர்ச்சியாக நீடித்திருந்தது. அம்பாறை மாவட்டத்திலுள்ள செயலகத்திற்குட்பட்ட திராய்க்கேணி எனும் 350க்கு மேலான வீடுகள் அழிக்கப்பட்டன.

இந்த திட்டமிடப்பட்ட கொலையிலே சுமார் 40 பெண்கள் விதவை ஆக்கப்பட்டிருந்தார்கள் பலர் அங்கவீனப்பட்டிருந்தார்கள். இவ்வாறாக ஆண்டுகள் கடந்தும் இன்றும் அந்த உயிரிழந்த ஆன்மாக்களுக்கான பிரார்த்தனைகளையும் அஞ்சலிகளையும் செய்து நீதியினை எதிர்பார்த்து வலியோடு  திராய்க்கேணி கிராம மக்கள் காத்திருக்கின்றார்கள்.

மற்றுமொருவர் உரையாற்றும் போது

அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் காரைதீவிலே அகதி முகாம்களில் தங்கி யிருந்து நான்கு ஆண்டுகளின் பின்னர் மீண்டும் தங்களுடைய மண்ணுக்கு திரும்பியிருந்தனர். அதனை தொடர்ந்து அக்கிராமத்தினுடைய அபிவிருத்தி சங்கத் தலைவர் மயிலிப்போடி அவர்கள் 1997 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றிருந்தது. காரணம் அவர் 1990 ஆம் ஆண்டு தங்களுடைய கிராமத்திலே இடம்பெற்ற படுகொலைக்கான நீதியினைக்கோரியிருந்ததோடு அங்கு தொடர்ந்து இடம்பெற்ற காணி அபுகரிப்புக்களையும் தடுத்து வந்ததாலும் நீதி மன்றத்தை நாடியதாலும் அவர் அந்த கொலைகளை செய்த கும்பலினரால் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இலங்கையில் 1956, 1985, 1990, 2009 வரை தமிழ் மக்கள் திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டு வந்திருக்கின்றார்கள். ஆனால் இதுவரை அப் படுகொலைகளுக்கு நீதியோ நஷ்ட ஈடோ கிடைக்கவில்லை. எந்த இனமாக இருந்தாலும் ஆலயம் என்பது புனித ஸ்தலமாக இருக்கும்.

ஆனால் துரதிஷ்டவசமாக இலங்கையில் இந்து ஆலயங்களில் தான் அதிகமான படுகொலைகள் இடம் பெற்று இருக்கின்றன.  ராணுவமும் முஸ்லீம் காடையர்கள் என கூறப்பட்டோரும்  இந்த திட்டமிட்ட படுகொலையை செய்தனர். ஆனால் சில முஸ்லீம் மக்கள் அப்படுகொலை இடம்பெறும் போது எம்மை காப்பாற்றினர். அதை நாம் நன்றியுடன் நினைவு படுத்துகின்றோம். வீரமுனையிலும் ஆலயத்தில் வைத்து நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

அம்பாறை மாவட்டத்திலேயே 58 தமிழ்கிராமங்களை இலக்கு வைத்து இன அழிப்பு நடத்தப்பட்டது. ஆலங்குளம், மீனோடைக்கட்டு போன்ற கிராமங்கள் ஒரு தமிழர்களும் இல்லாமல் முற்றாக கபளீகரம் செய்யப்பட்டிருக்கின்றன.

இவற்றையெல்லாம் இராணுவமும் முஸ்லிம் காடையர்களும்  இணைந்து செய்தார்கள் என்பது மாற்றுக் கருத்துக்களுக்கு இடம் இல்லை. அம்பாறை மாவட்ட தமிழர்களின் அடையாளத்தை இல்லா தொழிக்கவேண்டும் என்பதற்காக 1983 களிலிருந்து தொடர்ச்சியாக திட்டமிட்டு பல படுகொலைகளை செய்துள்ளார்கள். உண்மையில் அது நில ஆக்கிரமிப்பின் மறுவடிவமே. அந்த வகையில் குரூரமாக ஈவிரக்கமின்றி மேற்கொள்ளப்பட்ட திராய்க்கேணி படுகொலைக்கு இன்று 35 வருடங்களாகின்றன.

1990களில் ராணுவம் சில முஸ்லிம் இளைஞர்களின் உதவியோடு இங்கு செய்த இந்த குரூர கொலையானது பரம்பரை பரம்பரையாக தமிழ்மக்களின் மனங்களிலே நினைவு கூறப்படுகின்றது.  முஸ்லிம் மக்கள் அனைவரும் இதில் சம்பந்தப்பட்டார்கள் என்று கூறவில்லை. ஆனால் ஒரு சில முஸ்லிம் இனவாதிகள் முன்னணியில் இருந்து செயற்பட்டதை நேரடியாக கண்ணால் கண்ட திராய்க்கேணி மக்கள் கூறுகின்றனர்.

இதுபோல் வீரமுனை, உடும்பன் குளம், நாவிதன்வெளி, காரைதீவு, பாண்டிருப்பு போன்ற பல இடங்களிலும் இவ்வாறு சம்பவங்கள் நடைபெற்றன. இன்னும் இந்த கொலைகளுக்கு நீதி கிடைக்கவில்லை என கண்ணீர் மல்க குறிப்பிட்டார்.

படுகொலை செய்யப்பட்ட 54 பேருக்காக ஆலயத்தில் விசேட பூசை இடம்பெற்றது.  ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு  மலர் அஞ்சலி செலுத்தி  அக வணக்கம் செலுத்தப்பட்டது.

படுகொலை சம்பவத்தில் கணவர்மாரை இழந்து விதவைகளான 40 பேரில்  நேரிலே கண்முன்னே சம்பவத்தை பார்த்து இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற   தாய்மார்கள்  மற்றும் கிராம தலைவர் உட்பட திராய்க்கேணி  எழுச்சி ஒன்றியம்  அங்கத்தவர்கள் ஆகியோர் துயர் பகிர்ந்துகொண்டனர்.

fs-f__1_.jpeg

fs-f__38___1_.jpeg

fs-f__36_.jpeg

fs-f__36_.jpeg

fs-f__33_.jpeg

fs-f__32_.jpeg

fs-f__25_.jpeg

fs-f__24_.jpeg

fs-f__10_.jpeg

fs-f__8_.jpeg

fs-f__9_.jpeg

fs-f__3_.jpeg

https://www.virakesari.lk/article/222050

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.