Jump to content

மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

இலங்கை பெண்கள் அணியுமா......... இலங்கை ஆண்கள் அணி உலக கோப்பையில் விளையாடின போது, நாங்கள் தான் சூனியம் வைத்தோம், அப்படியே ஆண்கள் அணி மிக மோசமாய் விளையாடி தோற்றது.

வைத்ததை எடுக்க மறந்து போனோம்........😜

ஜ‌க்க‌ம்மாவிட‌ம் சொல்லி உங்க‌ட‌ சூனிய‌த்தை எடுப்ப‌து தான் என் ல‌ச்சிய‌ம் லொள்😁😛.............................

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

வீரப் பையன்26

அன்மைக் கால‌மாய் உட‌ல் நிலை ச‌ரி இல்லை ஓய்வு எடுக்கிறேன் கூட‌ தூக்க‌ம்  காலையில் எழுந்த‌தும் இஸ்கோர் பார்ப்பேன்  ஆம் நீங்க‌ள் சொல்லும் அணி நேற்று ப‌டு தோல்வி....................NFL ச‌ம‌ ப‌ல‌

ரசோதரன்

🤣............ பையன் சார், ஒன்றுக்கு இரண்டு தடவை மனசுக்ககுள் சொல்லிப் பார்த்துப் போட்டுத்தான், இதை எழுதுகின்றேன். 'இந்த வயசில என்னத்தையாம் ரசிக்கப் போகிறாய்............' என்று யாராவது வம்புக்கு வந

வீரப் பையன்26

இங்கை பார‌டா இவ‌ருக்கு வாழ்க்கை வாழ‌ ப‌ழ‌த்தை வைச்சாலும் க‌டிக்க‌ தெரியாது😁 ச‌சிக‌லா அன்ரின்ட‌ அழ‌கை ர‌சிக்க‌ தெரியுது😁   நான் அழ‌கை ர‌சித்தால் ந‌க்க‌ல் அடிக்கிறார் ளொள்😁😛..............

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, வீரப் பையன்26 said:

ஜ‌க்க‌ம்மாவிட‌ம் சொல்லி உங்க‌ட‌ சூனிய‌த்தை எடுப்ப‌து தான் என் ல‌ச்சிய‌ம் லொள்😁😛.............................

🤣.........

பையன் சார், நீங்கள் அமெரிக்கன் புட்பால் பார்ப்பீங்களா.......... நேற்று Dallas Cowboys அணியை வைத்துச் செய்தார்கள் Detroit Lions. கொடுமையாகவும், பாவமாகவும் இருந்தது.

அரைநேர இடைவெளியில் போனவர்கள் அப்படியே  தலைமறைவாகி இருக்கவேண்டும், ஆனால் திரும்ப வந்து திரும்பவும் மிதிபட்டார்கள்............

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ரசோதரன் said:

🤣.........

பையன் சார், நீங்கள் அமெரிக்கன் புட்பால் பார்ப்பீங்களா.......... நேற்று Dallas Cowboys அணியை வைத்துச் செய்தார்கள் Detroit Lions. கொடுமையாகவும், பாவமாகவும் இருந்தது.

அரைநேர இடைவெளியில் போனவர்கள் அப்படியே  தலைமறைவாகி இருக்கவேண்டும், ஆனால் திரும்ப வந்து திரும்பவும் மிதிபட்டார்கள்............

அன்மைக் கால‌மாய் உட‌ல் நிலை ச‌ரி இல்லை ஓய்வு எடுக்கிறேன் கூட‌ தூக்க‌ம் 

காலையில் எழுந்த‌தும் இஸ்கோர் பார்ப்பேன் 

ஆம் நீங்க‌ள் சொல்லும் அணி நேற்று ப‌டு தோல்வி....................NFL ச‌ம‌ ப‌ல‌மான‌ இரு அணிக‌ள் விளையாடும் போது பெரிய‌ புள்ளி வித்தியாச‌த்தில் தோப்ப‌து சில‌ ச‌மைய‌ம் ஏற்று கொள்ள‌ முடியாது 😒

 

 

அதே போல் NBAயில‌ இதே போல்  நிறைய‌ வாட்டி ந‌ட‌ந்து இருக்கு😁.........................

 

என‌க்கு NFLவிட‌  NBAதான் அதிக‌ம் பிடிக்கும் கிரிக்கேட்டுக்கு அடுத்த‌ ப‌டியா நான் விரும்பி  பார்க்கும் விளையாட்டு அது வாஸ்கேட்வோல் தான்🙏😍......................

 

 

56புள்ளி NFL அதிக‌ம் என்று தான் சொல்லுவேன்..................

Edited by வீரப் பையன்26
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானை வீழ்த்தி மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்குள் 2ஆவது அணியாக நுழைந்தது நியூஸிலாந்து

image

(நெவில் அன்தனி)

துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (14) இரவு நடைபெற்ற ஏ குழுவுக்கான கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தானை 54 ஓட்டங்களால் வெற்றிகொண்ட நியூஸிலாந்து 2ஆவது அணியாக மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

1410_nz_into_the_semis.jpg

இக் குழுவிலிருந்து அவுஸ்திரேலியா ஏற்கனவே அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்துகொண்டிருந்தது.

1410_player_of_the_match.jpg

இதேவேளை, அரை இறுதி வாய்ப்பை இழந்த இந்தியா முதல் சுற்றுடன் நாடு திரும்புகிறது.

பாகிஸ்தானுடனான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்றது.

பாகிஸ்தானின் மோசமான களத்தடுப்பு காரணமாகவே நியூஸிலாந்து 100 ஓட்டங்களுக்கு மேல் பெற்றது.

ஜோர்ஜியா ப்ளிமர் (28), சுஸி பேட்ஸ் (17) ஆகிய இருவரும் 39 பந்துகளில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து ஓரளவு நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

அவர்கள் இருவரைத் தொடர்ந்து அமேலியா கேர் (9) குறைந்த எண்ணிக்கையுடன் ஆட்டம் இழக்க நியூஸிலாந்தின் ஓட்ட வேகம் சற்று குறைந்தது.

எனினும் அணித் தலைவி சொஃபி டிவைன் (19), ப்றூக் ஹாலிடே (22) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஒரளவு நல்ல நிலையில் இட்டனர். ஆனால், மொத்த எண்ணிக்கை 96 ஓட்டங்களாக இருந்தபோது அவர்கள் இருவரும் ஆட்டம் இழந்தனர்.

தொடர்நது மெடி க்றீன் (9), இஸபெல்லா கேஸ் (5 ஆ.இ.) ஆகிய இருவரும் மொத்த எண்ணிக்கையை 110 ஓட்டங்களாக உயர்த்தினர்.

பந்துவீச்சில் நஷ்ரா சாந்து 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

111 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 11.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 56 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

முனீபா அலி 15 ஓட்டங்களையும் அணித் தலைவி பாத்திமா சானா 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையைத் தொடவில்லை. நால்வர் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தனர்.

பந்துவீச்சில் அமேலியா கேர் 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஈடன் காசன் 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: ஈடன் காசன்

கடைசி லீக் போட்டி

இங்கிலாந்துக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை (15) நடைபெறவுள்ள கடைசி லீக் போட்டி பி குழுவிலிருந்து எந்த இரண்டு அணிகள் மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும் என்பதைத் தீர்மானிக்கும்.

இக் குழுவில் இங்கிலாந்தும் தென் ஆபிரிக்காவும் 6 புள்ளிகளைப் பெற்று நிகர ஓட்ட வேக அடிப்படையில் முதலிரண்டு இடங்களில் இருக்கின்றன.

மேற்கிந்தியத் தீவுகள் 4 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் இருக்கிறது.

https://www.virakesari.lk/article/196305

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்லாந் ம‌க‌ளிர் அணி சிமி பின‌லுக்கு போவ‌து ச‌ந்தேக‌ம்

 

வெஸ்சின்டீஸ் ம‌க‌ளிர் அணி ந‌ல்லா விளையாடுகின‌ம்.................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்லாந் ம‌க‌ளிர் அணி க‌ப்ட‌ன்

காய‌ம் அடைந்து விளையாட‌ முடியாம‌ல் போய் விட்ட‌து

ந‌ல்ல‌ இஸ்கோர் அடிச்சும் தோல்வி அடைந்து விட்டின‌ம்

 

இங்லாந் ம‌க‌ளிர் அணி ராசி இல்லாத‌ அணி.....................20ஓவ‌ர் உல‌க‌ கோப்பை இங்லாந் ம‌க‌ளிர் அணி தூக்கி 15வ‌ருட‌த்துக்கு மேல் ஆகி விட்ட‌து

திற‌மையான‌ ம‌க‌ளிர் அதிக‌ம் அவுஸ்ரேலியா ம‌ற்றும் இங்லாந்திட‌ம்

அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் 6 த‌ட‌வை கோப்பை வென்று விட்டின‌ம் . இங்லாந் ம‌க‌ளிர் 1முறை தான்.......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தை வெளியேற்றி அரை இறுதிக்குள் நுழைந்தது மே.தீவுகள்: தென் ஆபிரிக்காவும் அரை இறுதி வாய்ப்பைப் பெற்றது

image

(நெவில் அன்தனி)

துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில்  செவ்வாய்க்கிழமை (15) இரவு நடைபெற்ற ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண பி குழுவுக்கான கடைசிப் போட்டியில் இங்கிலாந்தை 6 விக்கெட்களால் வெற்றிகொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

1510_eng_player_disappointed.png

இப் போட்டியில் இங்கிலாந்து தொல்வி அடைந்ததால் பி குழுவிலிருந்து இரண்டாவது அணியாக தென் ஆபிரிக்கா அரை இறுதி வாய்ப்பை பெற்றுக் கொண்டது. தென் ஆபிரிக்காவும் இங்கிலாந்தும் தலா 6 புள்ளிகளைப் பெற்றிருந்தன. ஆனால், நிகர ஓட்ட வேக அடிப்படையில் அணிகள் நிலையில் தென் ஆபிரிக்கா 2ஆம் இடத்தைப பெற்றது.

1510_windies_celebrate_victory.png

அணித் தலைவி ஹெய்லி மெத்யூஸ், கியானா ஜோசப் ஆகிய இருவரும் அதிரடியாக அரைச் சதங்களைக் குவித்ததுடன் ஆரம்ப விக்கெட்டில் 74 பந்துகளில் பகிர்ந்த 102 ஓட்டங்கள் மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றியை இலகுபடுத்தியது.

1510_quiana_joseph_windies_vs_eng.png

அத்துடன் இங்கிலாந்து 5 பிடிகளைத் தவறவிட்டது அதன் தோல்விக்கு பிரதான காரணமாக அமைந்தது.

1510_sara_glenn_engladn_disgusted_vs_win

பி குழுவில் தோல்வி அடையாத அணியாக இருந்த இங்கிலாந்து கடைசிப்  போட்டியில் வெற்றிபெற்று அரை இறுதிக்கு முன்னேற முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தது.

1510_hayley_mathews_windies_vs_eng.png

ஆனால், இங்கிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 142 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்து 18 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

1510_windies_through_to_semis.jpg

ஹெய்லி மெத்யூஸ், கியானா ஜோசப் ஆகிய இருவரும் பவர் ப்ளேயில் 67 ஓட்டங்களை விளாசியதன் பலனாக மேற்கிந்தியத் தீவுகளின் ஆரம்பம் அமோகமாக இருந்தது.

1510_sa_too_qualify_to_play_in_semis.jpg

மொத்த எண்ணிக்கை 102 ஒட்டங்களாக இருந்தபோது கியானா ஜோசப் முதலாவதாக ஆட்டம் இழந்தார். அவர் 38 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 52 ஓட்டங்களைப் பெற்றார்.

1510_nat_sciver_brunt_eng_vs_wi.png

சொற்ப நேரத்தில் ஹெய்லி மெத்யூஸ் 38 பந்துகளில் 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 50 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். (104 - 2 விக்.)

மொத்த எண்ணிக்கை 136 ஓட்டங்களாக இருந்தபோது ஷேர்மெய்ன் கெம்பல் (5), டியேந்த்ரா டொட்டின் (27) ஆகிய இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

ஆனால் அது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

வெற்றிக்கு மேலும் தேவைப்பட்ட 5 ஓட்டங்களை ஆலியா அலின் (8 ஆ.இ.) 2 பவுண்டறிகளை விளாசி பெற்றுக்கொடுத்தார்.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் களத்தடுப்பை தெரிவு செய்ய, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 141 ஓட்டங்களைப் பெற்றது.

இங்கிலாந்தின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

ஏழாவது ஓவரின் முதல் பந்தில் அதன் மொத்த எண்ணிக்கை 3 விக்கெட் இழப்புக்கு 34 ஓட்டங்களாக இருந்தது.

அப்போது ஜோடி சேர்ந்த நெட் சிவர் ப்ரன்ட், அணித் தலைவி ஹீதர் ப்ரன்ட் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 46 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது துரதிர்ஷ்டவசமாக உபாதைக்குள்ளான ஹீதர் நைட் 21 ஓட்டங்களுடன் ஓய்வுபெற நேர்ந்தது.

அது இங்கிலாந்துக்கு பெரும் தாக்கத்தைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில் அதன் பின்னர் சீரான இடைவெளியில் 4 விக்கெட்கள் சரிந்தன.

ஒரு பக்கத்தில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய நெட் சிவர் ப்ரன்ட் 57 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் அஃபி ஃப்ளெச்சர் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹெய்லி மெத்யூஸ் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகி: கியானா ஜோசப்.

https://www.virakesari.lk/article/196393

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.சி.சி. மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதி : தென் ஆபிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா அவுஸ்திரேலியா?

image

(நெவில் அன்தனி)

துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (17) இரவு நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண முதலாவது அரை இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்காவை நடப்பு உலக சம்பியன் அவுஸ்திரேலியா எதிர்த்தாடுகிறது.

இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு அனுகூலமான அணியாக அவுஸ்திரேலியா  காணப்படுகி ன்   றபோதிலும் தென் ஆபிரிக்கா இப் போட்டியை இலகுவில் நழுவ விடப்போவதில்லை.

ஒன்பதாவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் தோல்வி அடையாமல் இருக்கும் ஒரே ஒரு அணியான அவுஸ்திரேலியா 8ஆவது தடவையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு கடுமையாக முயற்சிக்கவுள்ளது.

 உலகக் கிண்ண இறுதிச் சுற்றில்தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக தென் ஆபிரிக்காவை அவுஸ்திரேலியா சந்திக்கிறது.

கேப் டவுன், நியூலண்ட்ஸ் கிரிக்கெட் விளையாட்டரங்கில் கடந்த வருடம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்காவை 19 ஓட்டங்களால் வெற்றி கொண்ட அவுஸ்திரேலியா 6ஆவது தடவையாக மகளிர் ரி20 உலக கிண்ண சம்பியனானது.

மகளிர் சர்வதேச ரி20 போட்டிகளில் 9 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில்   அவுஸ்திரேலியா முன்னிலையில் இருக்கிறது.

உலகக் கிண்ணத்தில் விளையாடப்பட்ட அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 7 போட்டிகளிலும் தென் ஆபிரிக்கா தோல்விகளையே தழுவியுள்ளது. 

இதேவேளை, அவுஸ்திரேலிய அணித் தலைவி அலிசா ஹீலி இன்றைய போட்டியில் விளையாடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.

லீக் சுற்று போட்டியின்போது காயமடைந்த அவர் இதுவரை பூரண குணமடையவில்லை எனவும் பயிற்சிளில் ஈடுபடவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அவர் விளையாடாத பட்சத்தில் அணியின் தலைவியாக தஹிலா மெக்ரா செயற்படுவார். இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் மெக்ராதான் தலைவியாக விளையாடினார்.

download.png

அணிகள்

அவுஸ்திரேலியா மகளிர்: அலிஸா ஹீலி (தலைவி), பெத் மூனி, எலிஸ் பெரி, ஏஷ்லி கார்ட்னர், க்றேஸ் ஹெரிஸ், அல்லது ஃபோப் லிச்ஃபீல்ட், தஹிலா மெக்ரா, ஜோர்ஜியா வெயாஹாம், அனாபெல் சதர்லண்ட், சொஃபி மொலினொக்ஸ், மெகான் சூட், தய்லா விலேமின்க்.

தென் ஆபிரிக்கா மகளிர்: லோரா வுல்வார்ட் (தலைவி), தஸ்மின் ப்ரிட்ஸ், ஆனேக் பொஷ், மாரிஸ்ஆன் கெப், க்ளோ ட்ரையொன், ஆன்எரி டேர்க்சன், சுனே லுஸ், நாடின் டி கேர்க், சினாலோ ஜஃப்டா, நொன்குலுலேக்கோ மிலாபா, அயாபொங்கா காக்கா.

download__1_.png

https://www.virakesari.lk/article/196513

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத‌ல் முறை தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர் அணி அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் அணிய‌ வென்று பின‌லுக்கு போய் இருக்கு🙏😍

வாழ்த்துக்க‌ள் தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர் அணிக்கு..........................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவை வெளியேற்றி இறுதியில் நுழைந்தது தென் ஆபிரிக்கா

image

(நெவில் அன்தனி)

துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (17) இரவு நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் நடப்பு உலக சம்பியன் அவுஸ்திரேலியாவை நொக் - அவட் செய்து ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட  தென் ஆபிரிக்கா தகுதிபெற்றது.

1710_anneke_bosch_sa_player_of_the_match

கடந்த வருடம் மகளிர் ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தனது சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்த தென் ஆபிரிக்கா, ஐக்கிய அரபு இராச்சியத்தில் 8 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிபெற்று பதிலடி கொடுத்தது.

1710_sa_into_final.jpg

அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 135 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 17.2 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 135 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி இரண்டாவது நேரடித் தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றது.

தென் ஆபிரிக்காவின் வெற்றியில் அயாபொங்கா காக்காவின் துல்லிய பந்துவீச்சு, ஆன்எக் பொஷ் குவித்த அரைச் சதம், லோரா வுல்வார்டின் சிறந்த துடுப்பாட்டம் என்பன முக்கிய பங்காற்றின.

தென் ஆபிரிக்கா பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய போது தஸ்மின் ப்றிட்ஸ் 15 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (25 - 1 விக்.)

ஆனால், லோரா வுல்வார்ட் ஆன்எக் பொஷ் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 65 பந்துகளில் 96 ஓட்டங்களைப் பகிர்ந்து தமது அணிக்கு வெற்றி இலக்கை அண்மிக்க உதவினர்.

லோரா வுல்வார்ட் 37 பந்துகளில் 42 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். (121 - 2 விக்.)

வெற்றிக்கு மேலும் தேவைப்பட்ட 14 ஓட்டங்களை ஆன்எக் பொஷ், க்ளோ ட்ரையொன் ஆகிய இருவரும் பெற்றுக்கொடுத்தனர்.

இப் போட்டியில் அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய   ஆன்எக் பொஷ் 48 பந்துகளில் 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 74 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். க்ளோ ட்ரையொன் ஆட்டம் இழக்காமல் ஒரு ஓட்டத்தைப் பெற்றார்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அவுஸ்திரேலியா 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றது.

க்றேஸ் ஹெரிஸ் (3), ஜோர்ஜியா வெயாஹாம் (5) ஆகிய இருவரினது விக்கெட்கள் குறைந்த எண்ணிக்கைக்கு வீழ்ந்ததால் அவுஸ்திரேலியா ஆட்டம் கண்டது.

பெத் மூனியும் பதில் அணித் தலைவி தஹிலா மெக்ராவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்து வீழ்ச்சியை சீர் செய்தனர்.

தஹிலா மெக்ரா 27 ஓட்டங்களைப் பெற்றார்.

16.5 ஓவர்களில் மொத்த எண்ணிக்கை 99 ஓட்டங்களாக இருந்தபோது பெத் மூனி 44 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னரே அவுஸ்திரேலியாவின் ஓட்ட வேகம் சற்று அதிகரிக்கத் தொடங்கியது.

எலிஸ் பெரி 23 பந்துகளில் 31 ஓட்டங்களைப் பெற்று கடைசிப் பந்தில் ஆட்டம் இழந்தார்.

ஃபோப் லிச்ஃபீல்ட் 9 பந்துகளில் 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் அயாபொங்கா  காக்கா 4 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மாரிஸ்ஆன் கெப் 4 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் நொன்குலுலென்கோ 31 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: ஆன்எக் பொஷ்

https://www.virakesari.lk/article/196539

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சில கருத்துக்கள் வேறு வேறு பெயரில், வசனநடை, பொருள் எல்லாம் ஒன்றாகவே இருக்கின்றன, பதியப்படுகின்றன. ஒரே கருத்து பலபெயரிலா? அல்லது பல பெயரில் ஒருவரா?
    • 15 பிளாஸ்ரிக் கதிரைகளுடன் ஒரு மேசையும் இலவசமாக கிடைக்கும். 😂 “ஆ”வெண்டு பார்த்துக் கொண்டு இருங்கோ… சுமந்திரன். 🤣 நீங்கள் செய்யிற வேலைக்கு 15 🩴செருப்படிதான் கிடைக்கும்.    வாங்க ரெடியாய் இருங்கோ. 😂
    • இத்தாலிக்குள் வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை அல்பேனியாவில் வைத்து பராமரிப்பு கடந்த சில வருடங்களாக பெருமளவு புகலிடக் கோரிக்கையாளர்கள் ஆபிரிக்காவிலிருந்து மத்தியதரைக் கடல் வழியாக ஐரோப்பாவிற்குள் வருவதால் இத்தாலி மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி இருக்கின்றது. 2023 ம் ஆண்டில் ஏறக்குறைய 160,000 புகலிடக் கோரிக்கையாளர்கள் படகுகளில் மட்டும் பயணித்து இத்தாலிக்குள் நுளைந்திருக்கிறார்கள். இவர்களது கடல் பயணம் மிக மிக ஆபத்தானதாக இருந்த போதிலும் பல ஆயிரக் கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்கள் இத்தாலி நோக்கி தொடர்ந்தும் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்தச் சிக்கலைத் தீர்க்க, பல மாதங்களாக  ஒத்தி வைக்கப் பட்டுக் கொண்டிருந்த  புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான திட்டம் ஒன்றை இத்தாலி இப்பொழுது நடைமுறைப் படுத்தத் தொடங்கியிருக்கிறது. மத்தியதரைக் கடல் ஊடாக வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை, அல்பேனியா நாட்டில் அமைக்கப் பட்டிருக்கும் ஒரு சிறப்பு முகாமுக்கு அனுப்பி அங்கே வைத்துப் பராமரிப்பது என்பதே அந்தத் திட்டம். கடந்த திங்கட்கிழமை படகொன்றின் மூலம் இத்தாலிக்குள் நுளைய முயன்ற எகிப்து, பங்களாதேஷைச் சேர்ந்த பதினாறு ஆண்கள் இப்பொழுது அல்பேனியா நாட்டில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட அந்த முகாமுக்குக் கொண்டு செல்லப் பட்டுள்ளார்கள். இந்த முகாமில் ஆண்கள் மட்டுமே பராமரிக்கப்படுவார்கள். பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளானவர்கள் இத்தாலியிலேயிலேயே தங்க வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாவார்கள். அல்பேனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் அந்த முகாமுக்குக் கொண்டு வரப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களது விண்ணப்பங்கள் ஒரு மாதத்துக்குள் பரிசீலிக்கப்பட்டு, புகலிடம் பெறத் தகுதியுடையவர்கள் இத்தாலிக்கு அனுப்பப் படுவார்கள். நிராகரிக்கப்பட்டவர்கள் அவர்களது சொந்த நாடுகளுக்கு அல்பேனியாவில் இருந்து உடனடியாகத் திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள். இந்த வருடம் மே  மாதத்தில். இரண்டு முகாம்களை அல்பேர்னியாவில் அமைப்பது என்று இத்தாலி முடிவெடுத்திருந்தது. ஆனால் தொழில்நுட்பப்  பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பு போன்ற சிக்கல்கள் காரணமாக முதலில் ஒரு முகாமை மட்டும் அமைப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.  அல்பேனிய நாட்டில் அமைக்கப்பட்டாலும் இந்த முகாமை இத்தாலியே நிர்வகிக்கிறது. இதற்கான செலவாக, தொடரும் ஐந்து ஆண்டுகளுக்கு 670 மில்லியன் யூரோக்கள் தேவைப்படும் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. மத்தியதரைக் கடல் வழியாக ஐரோப்பாவிற்குள் வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள நாடொன்றின் முகாமுக்குக் கொண்டு சென்று, அங்கு வைத்துப் பராமரிக்கும் முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடாக இத்தாலி மிளிர்கிறது. இத்தாலியைத் தொடர்ந்து யேர்மனி, பிரான்ஸ் நாடுகளும் புகலிடக் கோரிக்கையாளர்களை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே வைத்து பராமரிக்க முன்வரலாம்.   (செய்தியின் பிழிவு இங்கே இருந்து எடுக்கப்பட்ட்டது) https://www.zdf.de/nachrichten/politik/ausland/eu-migration-italien-albanien-lager-100.html    
    • இந்திய றோ மற்றும் RSS வழி நடத்தலில் கோமிய கூட்டில் பக்கா தாயக தமிழ் தேசிய வியாபாரி சுமந்திரன் என்பது தெளிவாக தெரிந்து விட்டது…  
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.