Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது (edited)

Distress signal

 

வணக்கம் உறவுகளே,

இந்த மாதம் தொடக்கத்தோடு "ஈழப்பறவைகள்" (https://eelapparavaikal.com) என்ற வலைத்தளம் முற்றாக அதனை நடத்தி வந்தவர்களால் கைவிடப்பட்டுவிட்டது. இதனால் இதற்குள் இருந்த த.வி.பு. இன் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் (WTCC) வெளியிடப்பட்ட இரு இறுவட்டுகளான "எம் வானம் விடியும்" மற்றும் "தேசக் காதல் " ஆகியனவும் அழிந்து போயின. 

வேறு பல இயக்கப்பாடல் வலைத்தளங்களில் தேடிய போதும் இவ்விரு இறுவட்டுக்களும் கிடைக்கவில்லை.

இவற்றை இணைய ஆவணகத்தின் 'வந்தவழிப் பொறி' மூலமும் கண்டுபிடிக்க முடியவில்லை!

இரண்டு நாட்களாக பல இடங்களில் தேடியும் என்னால் இவை இரண்டையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

  • இவர்களின் மின்னஞ்சல் முகவரி: eelapparavai@gmail.com

இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்ட எந்த மின்னஞ்சலுக்கும் மறுமொழி கிடைக்கப்பெறவில்லை. இந்த வலைத்தளம் செயற்பாட்டில் இருந்த போது அனுப்பிய மின்னஞ்சல்களுக்கும் எந்தவொரு மறுமொழியும் கிடைக்கவில்லை என்பது வேதனையானது.

எனவே இவ்வலைத்தளத்தை சேர்ந்தவர்களை யாரேனும் அறிந்திருந்தால் தயவு கூர்ந்து இவர்களை தொடர்பு கொண்டு இவ்விரு அரிய இறுவட்டுகளை எனக்குப் பெற்றுத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 

அல்லது வேறு யாரிடமேனும் இவை இருந்தால் அவற்றில் ஒரு படியை எனக்கு கொடுத்துதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

எம் கண்முன்னால் அழிந்து போனதை ஏதேனும் வழி இருக்க வேண்டும். ஆகையால் இவற்றை நாம் மீட்டெடுக்க முடியும் என்று நம்புகிறேன்.

 

-----------------------------------------------------------------------

எம் வானம் விடியும்: (https://eelapparavaikal.com/ms_song/em-vanam-vediyum/)

 

இதற்குள் :

01 அறிமுகம் 1:13
02 படைவருது படைவருது பகையழித்து 6:13
03 தங்கமே ஆடிவரும் தங்கரதம் நானே 5:25
04 ஒரு நாளும் மறவேன் என் தமிழீழ 4:25
05 கண் கண்ட எங்கள் தெய்வங்களே, நீர் வாழும் திசை நோக்கி கரம் கூப்பினோம் 4:42
06 ஊசி பாசி விற்கும் நாங்கள் 6:18
07 புலம்பெயர் இளையவர்கள் நாங்கள் 4:10
08 கனவுகளில் வாழும் தமிழீழம் என்ற 3:15
09 படைவருது படைவருது (தனி இசை) 6:14

ஆகிய பாடல்கள் இருந்தன.

-----------------------------------------------------------------------

 

தேசக் காதல் (https://eelapparavaikal.com/ms_song/thesakkathal/?_msr=1719871526)

 

இதற்குள் :

01 அறிமுகம் 
02 என்மனதில் கோவில் கொண்ட மாவீர தெய்வங்களே 
03 ஆனையிறவிலே வீரப்புலிகளின் வெற்றிகளின்

06 காதலே வாழுமே என் தேசக்காதல் வாழும்

என்பன இதிலிருந்த சில அறியப்பட்ட பாடல்களாகும்.

-----------------------------------------------------------------------

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதில் இருக்கும் தகவல்களை வைத்து முயற்சி செய்து பாருங்கள்

https://www.whois.com/whois/eelapparavaikal.com

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
21 minutes ago, vaasi said:

இதில் இருக்கும் தகவல்களை வைத்து முயற்சி செய்து பாருங்கள்

https://www.whois.com/whois/eelapparavaikal.com

உதவிக்கு நன்றி,

ஆனால், நான் அணுகிப் பார்த்ததில், இதில் இருக்கும் தகவல்களால் எனக்கு ஏதேனும் பயன் உள்ளது போன்று தெரியவில்லை. 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.