Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3   19 AUG, 2024 | 10:28 AM

image
 

யாழ்ப்பாண கடலில் சுமார் 100 அடி ஆழத்தில் கடலட்டை பிடித்துக்கொண்டிருந்த நபர் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். 

புத்தளம் பகுதியைச் சேர்ந்த சேவுதாதின் முகமதுதாவீன் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார். 

வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் கடற்பகுதியில் சிலிண்டரை பயன்படுத்தி சுமார் 100 அடி ஆழத்தில் கடலட்டை பிடித்துக்கொண்டிருந்த வேளை, நெஞ்சு வலிப்பதாக கூறி, கடலின் மேல் பகுதிக்கு வந்துள்ளார். 

அதனை அடுத்து சக தொழிலாளிகள் அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் உயிரிழந்துள்ளார். 

https://www.virakesari.lk/article/191410

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்தவர் உயிரிழப்பு!

28 AUG, 2024 | 03:19 PM
image

யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த இளம் கடற்தொழிலாளி திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.  

வடமராட்சி கிழக்கு, நாகர் கோவில் கடற்பகுதியில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த வேளை திடீர் சுகவீனம் ஏற்பட்ட நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.  

உயிரிழந்தவர் புத்தளம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய  இளைஞனே உயிரிழந்துள்ளார்.

https://www.virakesari.lk/article/192219

  • கருத்துக்கள உறவுகள்

நீரில்… 30 அடி ஆழத்திற்கு மேல் செல்லும் போதே,
நீரின் அமுக்கம்.. இதயத்தையும் இரத்த ஓட்டத்தையும் பாதிக்கும் என்று கூறுவார்கள் என நினைக்கின்றேன். 100 அடி என்பது மிக மிக அதிகம்.

யாழ்ப்பாண கடல் 100 அடி ஆழம் உள்ளதா? அல்லது பத்திரிகை மிகைப்படுத்தி… தங்கள் பாட்டுக்கு குத்து மதிப்பாக அடித்து விடுகிறார்களா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

நீரில்… 30 அடி ஆழத்திற்கு மேல் செல்லும் போதே,
நீரின் அமுக்கம்.. இதயத்தையும் இரத்த ஓட்டத்தையும் பாதிக்கும் என்று கூறுவார்கள் என நினைக்கின்றேன். 100 அடி என்பது மிக மிக அதிகம்.

யாழ்ப்பாண கடல் 100 அடி ஆழம் உள்ளதா? அல்லது பத்திரிகை மிகைப்படுத்தி… தங்கள் பாட்டுக்கு குத்து மதிப்பாக அடித்து விடுகிறார்களா.

அண்ணை பத்து நாட்கள் இடைவெளியில் இருவர் இறந்தது அதிக ஆழத்தில் தொழிலில் ஈடுபட்டதால் ஏற்பட்ட பாதிப்போ என எண்ணத் தோன்றுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

average human diving depth? என்று கூகிளைக் கேட்க கீழுள்ள பதிலை தந்தது.

Most recreational free divers can only dive to a depth of around 12-18 metres without scuba gear. Diving to this depth requires a certain level of physical fitness and training, and divers must be aware of the risks involved. It's essential to listen to your body and avoid pushing yourself too hard.

கூகிளில் மொழிமாற்றம் செய்தபோது!

பெரும்பாலான பொழுதுபோக்கு இலவச டைவர்ஸ் ஸ்கூபா கியர் இல்லாமல் சுமார் 12-18 மீட்டர் ஆழத்திற்கு மட்டுமே டைவ் செய்ய முடியும். இந்த ஆழத்திற்கு டைவிங் செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான உடல் தகுதி மற்றும் பயிற்சி தேவைப்படுகிறது, மேலும் டைவர்ஸ் இதில் உள்ள அபாயங்கள் குறித்து அறிந்திருக்க வேண்டும். உங்கள் உடலைக் கேட்பது மற்றும் உங்களை மிகவும் கடினமாகத் தள்ளுவதைத் தவிர்ப்பது அவசியம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, ஏராளன் said:

அண்ணை பத்து நாட்கள் இடைவெளியில் இருவர் இறந்தது அதிக ஆழத்தில் தொழிலில் ஈடுபட்டதால் ஏற்பட்ட பாதிப்போ என எண்ணத் தோன்றுகிறது.

இருவருக்கும் வயதும் அதிகம் இல்லை.
கடலின் ஆழத்திற்கு செல்லும் போது, ஏற்படும் ஆபத்தை அவர்கள் அறிந்திருக்கவில்லைப் போலுள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.