Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
டெலிகிராம் சிஇஓ பிரான்சில் கைது

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், வில் வெர்னோன்
  • பதவி, பிபிசி செய்திகள்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

பிரபலமான குறுஞ்செய்தி செயலியான டெலிகிராமின் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ், பிரான்சில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டெலிகிராம் நிறுவனம், அவரிடம் மறைத்து வைக்க எதுவும் இல்லை என்று கூறியுள்ளது.

டெலிகிராம் செயலி மீதான விதிமுறை மீறல் குற்றச்சாட்டு தொடர்பாக வடக்கு பாரிஸ் விமான நிலையத்தில் துரோவ் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெலிகிராம் செயலி குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்படுவதை கட்டுப்படுத்தவில்லை என்று துரோவ் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தல், குழந்தைகளை மையப்படுத்திய பாலியல் சார்ந்த தகவல்கள், மோசடி ஆகிய விவகாரங்களில் சட்ட அமலாக்கத்துடன் ஒத்துழைக்க தவறியதாகவும் டெலிகிராம் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

 

டெலிகிராம் தன்னுடைய அறிக்கையில், "அதன் கட்டுப்பாடு அம்சங்கள் தொழில்துறை தர நிர்ணயத்திற்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது என்றும் தொடர்ந்து அதனை மேம்படுத்தி வருவதாகவும்" தெரிவித்துள்ளது.

"ஒரு செயலியை தவறாக பயன்படுத்துவதற்கு அந்த செயலியோ அல்லது அதன் உரிமையாளரோ காரணம் என்று கூறுவது அபத்தமானது," என்றும் டெலிகிராம் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

துரோவ் அடிக்கடி ஐரோப்பாவுக்கு பயணம் செய்வதாகவும், பாதுகாப்பான மற்றும் பொறுப்பான இணைய சூழலை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட டிஜிட்டல் சேவைகள் சட்டம் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து சட்டங்களுக்கும் கட்டுப்பட்டு செயல்படுவதாகவும் டெலிகிராம் தெரிவித்துள்ளது.

செய்தி பரிமாற்றம், தொலைத் தொடர்பு தேவைகளுக்காக டெலிகிராம் செயலியை கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. "இந்த சூழலுக்கு கூடிய விரைவில் தீர்வு காணப்படும். டெலிகிராம் உங்களுடன் துணை நிற்கிறது," என்றும் அது கூறியுள்ளது.

ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், நீதித்துறையை சேர்ந்தவர்கள், துரோவின் தடுப்புக் காவல் ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டிக்கப்படும் என்றும் 96 மணி நேரம் வரை இது தொடரலாம் என்றும் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

டெலிகிராம் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ்

பட மூலாதாரம்,AOP.PRESS/CORBIS

படக்குறிப்பு, டெலிகிராம் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ் பாரிஸில் கைது செய்யப்பட்டார்

38 வயதான பாவெல் துரோவ் ரஷ்யாவில் பிறந்தவர். 2014ம் ஆண்டு ரஷ்யாவில் இருந்து வெளியேறிய அவர் தற்போது துபாயில் வசித்து வருகிறார். டெலிகிராம் நிறுவனமும் துபாயை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அமீரகம் மற்றும் பிரான்ஸ் நாட்டின் குடியுரிமையை அவர் பெற்றுள்ளார்.

ரஷ்யா, யுக்ரேன், மற்றும் முன்னாள் சோவியத் நாடுகளில் டெலிகிராம் மிகவும் பிரபலமாக உள்ளது.

பயனர்களின் தரவுகளை வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்ததன் விளைவாக டெலிகிராம் செயலி 2018ம் ஆண்டு ரஷ்யாவில் தடை செய்யப்பட்டது. 2021ம் ஆண்டு அந்த தடை நீக்கப்பட்டது.

பேஸ்புக், யூடியூப், வாட்ஸ்ஆப், இன்ஸ்டகிராம், டிக்டாக் மற்றும் வீ-சாட் போன்ற சமூக வலைதளங்களுக்கு அடுத்தபடியாக டெலிகிராம் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலியாக பட்டியலிடப்பட்டுள்ளது.

2013ம் ஆண்டு டெலிகிராம் செயலியை துரோவ் உருவாக்கினார். அதற்கு முன்பு அவர் விகோன்டக்டே (VKontakte) என்ற சமூக வலைதள பக்கத்தையும் உருவாக்கினார். அதில் எதிர்க்கட்சியினரின் பயன்பாட்டை முடக்க வேண்டும் என்ற ரஷ்ய அரசின் கோரிக்கையை நிராகரித்த பின்னர் 2014ம் ஆண்டு ரஷ்யாவில் இருந்து வெளியேறினார் துரோவ். விகோன்டக்டே சமூக வலைதளத்தை அவர் விற்றுவிட்டார்.

 
டெலிகிராம் செயலி ரஷ்யா மற்றும் முன்னாள் சோவியத் நாடுகளில் பிரபலமாக உள்ளது

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டெலிகிராம் செயலி ரஷ்யா மற்றும் முன்னாள் சோவியத் நாடுகளில் பிரபலமாக உள்ளது

இன்றளவும் ரஷ்யா, துரோவை தன் நாட்டு பிரஜையாகவே அடையாளப்படுத்துகிறது. "இது போன்ற சூழலை எதிர்கொள்ளும் ரஷ்ய குடிமகனுக்கு தேவையான அனைத்து உதவி நடவடிக்கைகளும் இந்த விவகாரத்தில் பிரான்சுக்கான ரஷ்ய தூதரகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. துரோவின் பிரதிநிதிகளிடம் இருந்து எந்த விதமான கோரிக்கையும் பெறப்படவில்லை. இருப்பினும், இந்த உதவிகள் வழங்கப்பட்டன," என்று ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

இந்த தடுப்புக் காவலுக்கான காரணங்களை தெரிந்து கொள்ளவும், துரோவின் உரிமைகளை பாதுகாக்கவும், வழக்கறிஞரை அணுகவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் அதிகாரிகள் ரஷ்யாவுடன் ஒத்துழைக்க மறுக்கின்றனர் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மரியா ஸகரோவா, 2018ம் ஆண்டு ரஷ்யாவில் டெலிகிராம் செயல்பாட்டை முடக்க ரஷ்யா முயற்சிப்பதாக விமர்சித்த மேற்கத்திய நாடுகளின் மனித உரிமை அமைப்புகள், தற்போது துரோவ் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து அமைதியாக இருப்பது ஏன் என்று தனது டெலிகிராம் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெலிகிராம் செயலியில் ஒரு குழுவில் 2 லட்சம் பேர் வரை இணைய முடியும். துறை சார் நிபுணர்கள், இதன் மூலம் எளிமையாக தவறான செய்திகளை பரப்ப இயலும் என்றும், சதி, நவீன நாஜி மற்றும் குழந்தைகளை மையப்படுத்திய பாலியல் ரீதியான தகவல்கள் அல்லது பயங்கரவாதம் தொடர்பான தகவல்களை பரப்ப முடியும் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

இம்மாத தொடக்கத்தில் பிரிட்டனில் ஏற்பட்ட கலவரங்களுக்கு முக்கிய காரணமான தீவிர வலதுசாரி குழுக்களின் டெலிகிராம் சேனல்களுக்கு இடம் அளித்ததாக டெலிகிராம் செயலி தீவிர ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.

டெலிகிராம் சில குழுக்களை அதில் இருந்து நீக்கினாலும், மற்ற சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்தி பரிமாற்ற செயலிகளைக் காட்டிலும் டெலிகிராம் மிகவும் பலவீனமாக உள்ளது என்று சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெலிகிராம் செயலி தலைமை நிர்வாக அதிகாரியுடன் கைது செய்யப்பட்ட இளம்பெண் ஜூலி - மொசாட் உளவாளியா?

28 AUG, 2024 | 11:45 AM
image
 

டெலிகிராம் செயலியின் தலைமைநிர்வாக அதிகாரி பவெல் துரோவ் உடன் இளம்பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஜூலி வவிலோவா என்ற அந்தப் பெண் இஸ்ரேலின் மொசாட் உளவாளி என்று குற்றம் சாட்டப் பட்டுள்ளது.

டெலிகிராம் செயலி மூலம் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக குற்றம்சாட்டப்பட்டது. குற்றவியல் நடவடிக்கைகளை கண்காணிக்க தவறியது, பயனாளர்களின் தரவுகளை அரசிடமிருந்து மறைத்து பாதுகாத்தது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் டெலிகிராம் சிஇஓ பவெல் துரோவ் பிரான்ஸ் நாட்டு விமான நிலையத்தில் சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டார். 90 கோடி பயனாளர்களைக் கொண்ட டெலிகிராமின் சிஇஓ கைது செய்யப்பட்டது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பவெலுடன் ஜூலி வவிலோவா என்ற இளம்பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பவெலின் காதலிஎன்று நம்பப்படுகிறது.

24 வயதான ஜூலி வவிலோவா துபாயைச் சேர்ந்த கிரிப்டோ பயிற்சியாளர் மற்றும் சமூக ஊடக பங்கேற்பாளர் என்பது தெரியவந்துள்ளது. கேமிங், கிரிப்டோ, மொழி ஆகியவற்றை தனது ஆர்வப் பட்டியலில் தெரிவித்துள்ள அவர் ஆங்கிலம், ரஷ்யன், ஸ்பானிஷ், அரபு ஆகிய நான்கு மொழிகளிலும் சரளமாக பேசக்கூடியவர். இவர் மொசாட் ஏஜென்ட்டாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

வவிலோவாவும், டெலிகிராம் சிஇஓவும் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், அஜர்பைஜான் போன்ற பல்வேறு நாடுகளில் ஒன்றாக சுற்றித்திரிந்துள்ளனர். அவர்களது வீடியோ இன்ஸ்டாகிராமில் தற் போது வைரலாகியுள்ளது.

https://www.virakesari.lk/article/192208

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெலிகிராமின் பிரதமநிறைவேற்று அதிகாரி பவெல் துரோவ் பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற தடை

29 AUG, 2024 | 10:47 AM
image
 

பாரிஸ்: கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட  டெலிகிராமின் பிரதமநிறைவேற்று அதிகாரி பவெல் துரோவ் விடுவிக்கப்பட்டார். இருப்பினும் அவர் மீதான குற்றச்சாட்டு காரணமாக அவர் பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டெலிகிராம் மூலம் நடைபெறும் சட்டவிரோத குற்றச் செயல்களுக்கு அந்நிறுவனம் துணை போகிறது, குற்றவியல் நடவடிக்கையை கண்காணிக்க தவறியது, மற்றும் பயனாளர்களின் தரவுகளை அரசிடமிருந்து மறைத்து பாதுகாத்தது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை (ஆக. 24) பவெல் துரோவை பிரான்ஸ் அரசு கைது செய்தது.

இந்நிலையில் இது குறித்து பாரிஸ் நீதிமன்ற அமர்வு விசாரித்தது. அப்போது தீவிரவாத மற்றும் சட்ட விரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போவது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.

இந்நிலையில் அவர் விடுவிக்கப்பட்டார். மேலும் அவர் வாரம் இரண்டு முறை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டுமென்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த ஐரோப்பிய யூனியனின் விதிகளுக்கு டெலிகிராம் அனைத்து வகையிலும் இணங்க செயல்படுகிறது. இந்த சூழலில் டெலிகிராம் செயலியில் அரங்கேறும் குற்றத்தில் அவர் சிக்கக்கூடும் என்ற அபாயம் உள்ளதாக பவெல் துரோவின் வழக்கறிஞர் டேவிட் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் விசாரணை அதிகாரிகளின் கேட்டிருந்த விவரங்களுக்கு டெலிகிராம் தரப்பில் இருந்து பதில் எதுவும் வராத காரணத்தால் கடந்த பிப்ரவரி மாதம் முதல் அது தொடர்பாக விசாரணை நடந்து வந்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் விளக்கம் தந்துள்ளார்.

இந்த வழக்கு மட்டுமல்லாது தனது மகனை துன்புறுத்திய குற்றச்சாட்டும் பவெல் துரோவ் மீது உள்ளது. அது தொடர்பாகவும் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து சுவிட்சர்லாந்து நாட்டிலும் அவரது முன்னாள் வாழ்க்கை துணை புகார் அளித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/192273

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகள் பாதுகாப்புத் திட்டங்களில் சேர டெலிகிராம் நிறுவனம் தொடர்ந்து மறுப்பது ஏன்?

டெலிகிராம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜோ டைடி
  • பதவி, சைபர் செய்தியாளர், பிபிசி உலக சேவை
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஆன்லைனில் குழந்தை வன்கொடுமை உள்ளடக்கத்தை கண்டறிந்து அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட சர்வதேச திட்டங்களில் சேர்வதற்கு டெலிகிராம் செயலி தொடர்ந்து மறுக்கிறது என்பதை பிபிசி கண்டறிந்துள்ளது. டெலிகிராமின் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ் சமீபத்தில் பிரான்ஸில் கைது செய்யப்பட்டார்.

அத்தகைய உள்ளடக்கத்தைக் கண்டறியவும் புகாரளிக்கவும் மற்றும் அகற்றவும் செயல்படும், காணாமல் போன மற்றும் சுரண்டலுக்கு உள்ளான குழந்தைகளுக்கான தேசிய மையம் (NCMEC) மற்றும் இணைய கண்காணிப்பு அறக்கட்டளை (IWF) ஆகியவற்றுடன் டெலிகிராம் ஒத்துழைப்பதில்லை.

கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்களைக் கொண்ட டெலிகிராம் செயலியில் போதுமான அளவிற்கு கட்டுப்பாடுகள் இல்லை என்ற குற்றசாட்டின் பேரில் துரோவ் கைது செய்யப்பட்டார்.

39 வயதான அவர் மீது போதைப்பொருள் கடத்தல், குழந்தை பாலியல் உள்ளடக்கம் மற்றும் மோசடி ஆகியவற்றில் சட்ட அமலாக்க அமைப்புடன் ஒத்துழைக்கத் தவறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
 

"கட்டுப்பாடுகள்,தொழில்துறை தரங்களுக்கு ஏற்ப உள்ளதாகவும், அவை தொடர்ந்து மேம்பட்டு வருவதாகவும்" டெலிகிராம் வலியுறுத்தி வந்தது.

மேலும் "ஒரு தளம் தவறாக பயன்படுத்தப்படுவதற்கு அந்த தளம் அல்லது அதன் உரிமையாளர்தான் பொறுப்பு என்று கூறுவது அபத்தமானது" என்றும் அது கூறியது.

குழந்தைகள் பாதுகாப்பு திட்டங்களில் சேர மறுப்பது குறித்து கருத்து கேட்பதற்காக டெலிகிராம் நிறுவனத்தை பிபிசி தொடர்பு கொண்டது.

பிற சமூக வலைதளங்களை போல அல்லாமல், காணாமல் போன மற்றும் சுரண்டலுக்கு உள்ளான குழந்தைகளுக்கான தேசிய மையத்தின் ’சைபர் டிப்லைன்’ போன்ற திட்டங்களில் சேர டெலிகிராம் மறுக்கிறது. 1,600 க்கும் மேற்பட்ட இணைய நிறுவனங்கள் இந்த திட்டத்தில் பதிவுசெய்துள்ளன.

அமெரிக்காவில் இருந்து செயல்படும் நிறுவனங்கள் இதில் சட்டப்படி கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். ஆனால் பதிவு செய்துள்ள நிறுவனங்களில் 16% அமெரிக்காவை சேராதவை ஆகும்.

டெலிகிராம் ரஷ்யாவில் நிறுவப்பட்டது. ஆனால் துரோவ் தற்போது வசிக்கும் துபாயில் இருந்து அந்த நிறுவனம் இப்போது செயல்படுகிறது.

குழந்தை பாலியல் துன்புறுத்தல் உள்ளடக்கம் தொடர்பான புகார்கள், ஃபேஸ்புக், கூகுள், இன்ஸ்டாகிராம், டிக்டாக், எக்ஸ், ஸ்நாப்சாட் மற்றும் வாட்ஸ்ஆப் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து வருகின்றன.

 
டெலிகிராம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

குழந்தை பாலியல் துன்புறுத்தல் உள்ளடக்கம் பிரச்னையை சமாளிக்க தன்னுடன் சேருமாறு காணாமல் போன மற்றும் சுரண்டலுக்கு உள்ளான குழந்தைகளுக்கான தேசிய மையம்( NCMEC) பலமுறை டெலிகிராமை கேட்டுக் கொண்டது. ஆனால் இந்தக்கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதை பிபிசி கண்டறிந்தது.

இணைய கண்காணிப்பு அறக்கட்டளை(IWF) உடன் பணிபுரியவும் டெலிகிராம் மறுக்கிறது.

"கடந்த ஓராண்டாக டெலிகிராமுடன் பேச்சு நடத்த நாங்களே முயற்சித்த போதிலும் அந்த நிறுவனம் இணைய கண்காணிப்பு அறக்கட்டளையில் உறுப்பினராக ஆகவில்லை. மேலும் குழந்தை பாலியல் துன்புறுத்தல் படங்கள் பகிர்வை தடுக்க, எங்கள் சேவைகள் எதையும் அது பயன்படுத்துவதில்லை,” என்று இணைய கண்காணிப்பு அறக்கட்டளையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

IWF அல்லது NCMEC உடன் இணைந்து செயல்படாத காரணத்தால், குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் உள்ளடக்கம் என்று இந்த அமைப்புகளால் வரையறுக்கப்பட்டு தொகுக்கப்பட்ட பட்டியல்களை முன்கூட்டியே அறியவோ, அகற்றவோ அல்லது தடுக்கவோ டெலிகிராம் செயலியால் முடியாது.

 
டெலிகிராம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

’டேக்இட்டவுன்’ திட்டத்தின் ஒரு பகுதியாகவும் டெலிகிராம் இல்லை. வன்முறையுடன் கூடிய பழிவாங்கும் ஆபாச படங்களை அகற்றும் பணியை இந்தத்திட்டம் மேற்கொள்கிறது.

ஸ்நாப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ், டிக்டாக், பார்ன்ஹப், ஒன்லிஃபேன்ஸ் ஆகிய அனைத்துமே, தங்கள் பொது அல்லது குறியீட்டு சொற்களால் மறைக்கப்படாத தளங்களில் படங்கள் மற்றும் வீடியோக்களை ஸ்கேன் செய்ய 'ஹாஷ் பட்டியலை'ப் பயன்படுத்தும் இந்தத்திட்டத்தின் உறுப்பினர்கள்.

டெலிகிராம் இணங்காத மற்றொரு விதிமுறை ’வெளிப்படைத்தன்மை அறிக்கை’.

ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சமூக வலைதளங்கள் காவல்துறையின் கோரிக்கைக்கு இணங்க, அகற்றப்பட்ட அனைத்து உள்ளடக்கங்களின் பட்டியலையும் வெளியிடுகின்றன.

மெட்டாவின் செயலிகள், ஸ்நாப்சாட் மற்றும் டிக்டாக் உள்ளிட்ட பிற சமூக வலைதளங்கள் ஆன்லைனில் தங்கள் அறிக்கைகளை வெளியிடுகின்றன. முந்தைய ஆண்டுகளின் அறிக்கைகளையும் லைப்ரரியில் பார்க்கமுடியும்.

டெலிகிராமில் அத்தகைய இணையதளம் எதுவும் இல்லை. ஒரு சேனல் மட்டுமே செயலியில் உள்ளது. ஆனால், அதில் வெளிப்படைத்தன்மை அறிக்கைகள் இல்லை. வெளிப்படைத்தன்மை அறிக்கைகளுக்கான தனது அணுகுமுறையை "ஆண்டிற்கு இருமுறை" என்றும் அது விவரிக்கிறது.

முந்தைய அறிக்கைகளைப் பார்ப்பதற்கான கோரிக்கைக்கு ’டெலிகிராம் வெளிப்படைத்தன்மை சேனல்’ பதிலளிக்கவில்லை. மேலும் "உங்கள் பிராந்தியத்திற்கு எந்த அறிக்கையும் கிடைப்பதற்கு இல்லை" என்று அது கூறியது.

ஊடகங்கள் தொடர்புகொள்வதற்கு டெலிகிராமில் ஒரு அசாதாரண அமைப்பு உள்ளது. தானியங்கி பாட் உடன் தொடர்பு கொள்ளும் முறை செயலியில் உள்ளது. ஆனால் இந்த செய்தியாளர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலைப் பெற பல மாதங்கள் முயற்சி செய்த பிறகும் பலன் ஏதும் இல்லை.

ஊடகங்கள் தொடர்புகொண்டு விசாரிக்க விளம்பரப்படுத்தப்படாத மின்னஞ்சல் முகவரி ஒன்று உள்ளது. நாங்கள் மின்னஞ்சல் அனுப்பியும் இன்னும் பதில் கிடைக்கவில்லை.

ஜூன் மாதத்தில் பவெல் துரோவ், செய்தியாளர் டக்கர் கார்ல்சனிடம், "சுமார் 30 பொறியாளர்களை" மட்டுமே தனது தளத்தை இயக்குவதற்குப் பயன்படுத்துவதாகக் கூறினார்.

டெலிகிராமை நிறுவிய துரோவ் ரஷ்யாவில் பிறந்தவர். அவர் இப்போது துபாயில் வசிக்கிறார். அவரிடம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் இரட்டை குடியுரிமை உள்ளது.

டெலிகிராம் குறிப்பாக ரஷ்யா, யுக்ரேன் மற்றும் முன்னாள் சோவியத் யூனியன் நாடுகள் மற்றும் இரானில் பிரபலமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 
 

உக்ரைன், காசாவில்.. அமெரிக்காவுக்கு ஆப்பு வைத்த டெலிகிராம்! பாவெல் துரோவ் கைதுக்கான காரணமே இதுதான் 

பாரிஸ்: டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டது உலகம் முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பி இருக்கிறது. இந்நிலையில் இவரது கைதுக்கு காரணம், உக்ரைன் மற்றும் காசா போரில் அமெரிக்காவுக்கு எதிராக பரப்பப்பட்ட தகவல்கள்தான் என்று சொல்லப்படுகிறது.

பாவெல் துரோவ் அடிப்படையில் ரஷ்ய நாட்டை சேர்ந்தவராவார். ஆனால் ரஷ்யாவுக்கும் இவருக்குமே பெரிய அளவில் செட் ஆகாது. காரணம் டெலிகிராம்தான். ஊருக்குள்ள பத்து பதினஞ்சு ஆப் வெச்சிருக்கிற கூகுள் கூட நிம்மதியா இருக்கான்.. ஒரே ஒரு ஆப் வெச்சிக்கிட்டு.. என துரோவ் புலம்புவதற்கு முதல் காரணம் ரஷ்யாதான்.

 

 

டெலிகிராம் சிஇஓ கைது.. பிரான்ஸின் ரஃபேல் விமானத்தை வாங்கும் திட்டத்தை நிறுத்தி வைத்தது UAE!

 

அதாவது கடந்த 2010ம் ஆண்டு, உக்ரைனில் டெலிகிராம் பயன்படுத்துபவர்கள், எந்த செய்திகளை பகிர்ந்துக்கொள்கிறார்கள்? என்கிற விவரங்களை ரஷ்யா கேட்டு ஏழரையை கூட்டியது. ஆனால், பயனாளர்களின் பிரைவசி ரொம்ப முக்கியம். எனவே, எங்களால் தகவல்களை தர முடியாது.. என துரோவ் வெளிப்படையாக மறுத்துவிட்டார். மட்டுமல்லாது, உள்ளூரில் இனி கடையை வைத்திருந்தால் நம்மை காலி செய்துவிடுவார்கள் என்று உணர்ந்த அவர், அமெரிக்காவுக்கு ஜம்ப்பாகிவிட்டார்.

அமெரிக்கா மட்டும் என்ன உத்தம புத்திரரா? கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி, டிரம்ப் ஆதரவாளர்கள் கேப்பிட்டல் ஹாலுக்குள் நடத்திய கலவரம் டெலிகிராமில்தான் திட்டமிட்டதாக கூறி, குற்றம் சாட்டப்பட்ட அந்த தனிநபர் தகவல்களை தங்களுக்கு தருமாறு கேட்டது ஜோ பைடன் நிர்வாகம். ஒருமுறை தகவல்களை கொடுத்துவிட்டால், எல்லா முறையும் இதையே மேற்கோள் காட்டி தகவல்களை பெற, பல்வேறு நாடுகளின் அரசுகள் முயற்சிக்கும் என்பதை உணர்ந்த துரோவ், அமெரிக்க அரசின் கோரிக்கையை நிராகரித்து அங்கிருந்து வெளியேறிவிட்டார். தற்போது துபாயில் டெலிகிராம் தலைமை அலுவலகத்தை வைத்து நடத்தி வருகிறார்.

இதுதான் அவருடைய பின்னணி. இப்படி இருக்கையில் சமீபத்தில் பிரான்ஸ் வந்திருந்த அவர், அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். பண மோசடி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆபாச பதிவுகள் போன்றவற்றிற்கு டெலிகிராம் செயலி காரணமாக இருக்கிறது என, ஏற்கெனவே பிரான்ஸ் அரசு அவர் மீது குற்றம் சுமத்தி இருந்தது. இதையடுத்து கடந்த 24ம் தேதி அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இருப்பினும் துரோவ் கைது செய்யப்படுவதற்கு இது உண்மையான காரணம் இல்லை என்று சொல்லப்படுகிறது.

 

 

 டெலிகிராம் சி.இ.ஓ பாவெல் துரோவ் பிரான்ஸில் கைது.. பரபரப்பைக் கிளப்பிய சம்பவம்! என்ன காரணம்?

அப்படியெனில் உண்மை காரணம் என்ன? இதற்கு மூன்று விடைகள் சொல்லப்படுகிறது. முதல் விடை பாலஸ்தீனம்-இஸ்ரேல் போர். இந்த போரின் பின்னணி பொதுவாக எல்லோருக்கும் தெரியும். ஆக்கிரமிப்பு நோக்கத்துடன் செயல்படும் இஸ்ரேல், அதற்கு அமெரிக்கா முழு உதவி அளித்து வருகிறது என்றும், காசாவில் அப்பாவி பொதுமக்கள் தாக்குதல் நடத்தப்படுகிறது எனவும் உலகம் முழுவதும் விமர்சனம் கிளம்பியுள்ளது. இதற்கு டெலிகிராம் முக்கிய காரணம்.

அதாவது காசாவில் அப்பாவி மக்கள் மீதும், பத்திரிகையாளர்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு ஆதாரங்களாக வீடியோ இருக்கிறது. இந்த வீடியோக்கள் மேற்கத்திய நாட்டு ஊடகங்களில் அடிக்கடி வெளியாகி உலக நாடுகள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த வீடியோக்கள் முழுக்க முழுக்க டெலிகிராம் மூலமாகவே லீக் செய்யப்படுகின்றன. இதை அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இரண்டாவது காரணம் உக்ரைன்-ரஷ்யா போர். இந்த போரில் உக்ரைனுக்கு, அமெரிக்கா ஆயுத உதவியை செய்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும், இந்த போரில் அமெரிக்கா நேரடியாக பங்கேற்கவில்லை என்று கூறி வருகிறது. ஆனால்.. உக்ரைன் போர் முனையில் உயிரிழந்த நேட்டோ வீரர்களின் படங்கள் டெலிகிராமில் பகிரப்பட்டு வருகிறது.

 

 

உக்ரைன், காசாவில்.. அமெரிக்காவுக்கு ஆப்பு வைத்த டெலிகிராம்! பாவெல் துரோவ் கைதுக்கான காரணமே இதுதான்

 

அதாவது உக்ரைன் போரில் எங்கள் பங்களிப்பில்லை என்று அமெரிக்கா கூறிக்கொண்டே, எல்லைக்கு தொடர்ந்து வீரர்களை அனுப்புகிறது என ரஷ்யா, டெலிகிராம் உதவியுடன் ஆதாரப்பூர்வமாக நிரூபித்து வருகிறது. இதனால், போர் குறித்து ரஷ்யாவுககு எதிரான கருத்தாக்கங்களை அமெரிக்காவால் உருவாக்க முடியவில்லை. இது சிஐஏவுக்கு பெரிய தோல்வி.

மூன்றாவது காரணம் ஆப்பிரிக்காவில் பிரான்ஸ் படைகள் செய்த அட்டூழியம். இது தொடர்பான அனைத்து தகவல்களும் களத்திலிருந்து, எடுத்து டெலிகிராம் வழியாக உலக மக்களிடையே, ஆப்பிரிக்கா மக்கள் அம்பலப்படுத்தினர். இது பிரான்ஸுக்கு பேரடி. இதெல்லாம்தான், துரோவை கைது செய்ய காரணமாக அமைந்துள்ளது என்று சொல்லப்படுகிறது.
 

https://tamil.oneindia.com/news/paris/real-reason-behind-the-arrest-of-telegram-founder-pavel-durov-was-the-wars-in-ukraine-and-israel-633245.html

  • கருத்துக்கள உறவுகள்

 

டெலிகிராம் செயலியும் உலக அரசியல் நிகழ்வுகளும் - சேது சிவன்

spacer.png

டெலிகிராமின் தலைமை நிர்வாக அதிகாரி யும் நிறுவனருமான பாவெல் துரோவ் ஒரு சர்வதேச குற்றவாளி போல பிரான்ஸ்  அரசாங்கத்தால் தடுத்து, கைது செய்யப்பட்டுள் ளார்.இந்த கைதுக்கு எலான் மஸ்க் உள்ளிட்ட தொழில்நுட்பத்துறையில் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்த னர்.  தற்போது அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எனினும் பிரான்சை விட்டு வெளியே செல்லக்கூடாது என உத்தரவிடப் பட்டுள்ளது. 

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஆணைக்கு இணங்க இவரை பிரான்ஸ் அரசு கைது செய்ததன்  பின்னணியில் என்ன உள்ளது? முதலாளிகளுக்காக மட்டுமே ஆட்சி செய்யும் இந்த நாடுகள் ஏன் உலகின் மிகப்பெரிய  முதலாளிகளில் ஒருவரைக் கைது செய்ய வேண்டும்?

காரணம் வேறொன்றுமல்ல; காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலைகள்  பற்றிய தகவல்களை, வீடியோக்களை பதிவு செய்து  உலகின் கண் முன் கொண்டு சேர்த்து வருகிற முதன்மை செயலியாக ‘டெலிகிராம்’ உள்ளது என்பது தான்.

உலகிற்கு டெலிகிராம் காட்டும் உண்மைகள் 

இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனக்   குழந்தை கள், பெண்களைக்  கொடூரமாக படுகொலை செய்யும் காட்சிகளையும், ஐ.நா. நிவாரண முகாம்கள் மீது நடத்தும் தாக்குதல்களையும் காசாவில் உள்ள பத்திரிகையாளர்கள் வீடியோ வாகவும் புகைப்படங்களாகவும் எடுத்து உட னுக்குடன் உலகம் முழுவதும் கொண்டு செல்ல  டெலிகிராம் செயலியையே பயன்படுத்து கிறார்கள்.

தங்களது இனப்படுகொலையை வெளிக் கொண்டுவரும் 100க்கும் மேற்பட்ட ஊடகவிய லாளர்களை இதுவரை இஸ்ரேல் படு கொலை செய்துள்ளது. 

காசா மட்டுமின்றி உக்ரைனிலும் என்ன  நடக்கிறது என்ற உண்மை  நிலையை  தெரிவிக்கும் நம்பிக்கையான ஊடகமும் டெலிகிராம் தான்.

நியூயார்க் டைம்ஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் போன்ற பிரபலமான பல பத்திரிகைகள் அமெரிக்கா, உக்ரைன், இஸ்ரேலுக்கு ஆதரவாக மட்டும் செய்திகளை திரித்து வெளி யிடும் நிலையில், உலகிற்கு உண்மையை காட்டும் ஊடகங்களில்  ஒன்றாக டெலிகிராம் உள்ளது.குறிப்பாக இந்த டெலிகிராம் அமெரிக்கா மற்றும் கூட்டாளிகளின் படையான  நேட்டோவின் சைபர் டீம் கட்டுப்பாட்டில் இல்லை. 

உண்மையைக்  கண்டறிய உதவுகிறது 

அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள்  பரப்பும் செய்திகளுக்குப்  பின்னே உள்ள போலி பிரச்சாரத்தை டெலிகிராம் செயலி மூலம் நாம் கண்டறிந்து விடலாம்.

உதாரணமாக ரஷ்யா - உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ வீரர்கள்  போரில் ஈடுபடுத்தப்படவில்லை என அமெரிக்க ஆதரவு ஊடகங்கள் சொன்னாலும், சில  இடங்களில் நேட்டோ வீரர்கள் போரில் ஈடுபட்டது டெலிகிராம் வாயிலாக அம்பலப்படுத்தப் பட்டுள்ளது.

பிரான்ஸ் ஆதிக்கத்தை உடைக்க உதவியது 

மாலி,புர்கினோ பசோ,நைஜர் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில்  பிரான்ஸ் ராணுவத்தை வெளியேற்றும் போராட்டத்தில் டெலிகிராம் முக்கியப்  பங்கு வகித்துள்ளது என்றால் மிகை யல்ல. ஆப்பிரிக்கர்கள் பிரான்ஸ் படைகளின் ஆதிக்கத்துக்கு எதிரான தங்களின்  அனைத்து போராட்ட நடவடிக்கைகளையும் டெலிகிராம் வாயிலாகவே ஒருங்கிணைத்தனர். இந்த போராட்டங்கள் ஆப்பிரிக்காவில் பிரான்ஸ் ஆதிக்கத்துக்கு பெரிய அடியாக எழுந்தன.

அமெரிக்காவின் கட்டளைக்கு சிறிதும் தயங்காமல் பிரான்ஸ் உடனடியாக டெலிகிராம் நிறுவனர் பாவெல்லை  சர்வதேச குற்றவாளி போல  தடுத்து கைது செய்ததற்கு இது ஒரு முக்கியமான காரணமாகும்.

மாபியா கும்பல்கள் இடமாகவும் 

அதே வேளையில் டெலிகிராம் செயலியில் பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல், பணமோசடி, குழந்தைகள் கடத்தல்   தொடர்பான மிகப்பெரிய மாபியா கும்பல்களின் சேனல்களும் இயங்கி வருகின்றன என்பது  ‘ஆபத்தானது’. இதன் மூலம்  ‘ஒழுங்கமைக்கப் பட்ட  குற்றங்களை’ அந்த கும்பல்கள்  செய்து வருகின்றன. இதனை டெலிகிராம் நிறுவனரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற காரணத்தை மேற்கு நாடுகள்  தற்போது பிரதானமாக குறிப்பிடு கின்றன. 

உளவு நிறுவனங்களுக்கு உதவ மறுப்பு 

இந்த உண்மை ஒருபுறமிருக்க உண்மை யில் டெலிகிராம் நிறுவனமானது பாலஸ்தீன, ரஷ்யா ஆதரவு சேனல்களை முடக்கவும் அதில் உள்ள சாட் தகவல்களை நேட்டோ, மொசாட், சிஐஏ உள்ளிட்ட உளவு அமைப்பு களுக்கு கொடுக்கவும் மறுத்துவிட்டது. மறைகுறியாக்கப்பட்ட (encrypted ) செய்தியை கண்டறிய முடியாமல் அமெரிக்க, ஐரோப்பிய உளவு அமைப்புகள்   பல தோல்விகளை அடைந்துள்ளன.( ரகசிய சாட் எனப்படும் மறைகுறியாக்கப்பட்ட அம்சம் மூலம் பேசும் போது  அந்த உரையாடல்களை யாராலும் இடையில் புகுந்து தெரிந்து கொள்ள முடியாது )

டெலிகிராம் மீதான குற்றச்சாட்டுகள் பிற ஊடகங்களுக்கும் பொருந்தும் 

இதே வேளையில் எலான் மஸ்க், மார்க்  ஸுக்கர்பெர்க் ஆகியோரின் ட்விட்டர், முகநூல், இன்ஸ்டா ஆகிய சமூக வலைத்தளங்களுக்கும், டெலிகிராம் நிறுவனத்தின் மீது,அதன் நிறு வனரைக் கைது செய்வதற்காக வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் பொருந்தும். 

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றிய பிறகு அதில் அதிதீவிர வலதுசாரி களுக்கு ஆதரவாகவும், சிறுபான்மை யினருக்கு எதிராகவும், இனவாதத்தை தூண்டும் கருத்துக்களும் அதிகரித்துள்ளன. உதாரணமாக வெனிசுலா தேர்தலுக்குப் பிறகு அந்நாட்டில் கலவரத்தை தூண்டிவிடும் வகையில் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக உள்நாட்டு அரசியலில் தலையீடு செய்து கருத்து தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவிற்கு வாலாட்டும்  நிறுவனங்கள் 

இந்தியாவிலும் மதவெறி கருத்துக்களை பதிவிடும் பாஜக தலைவர்களின் கணக்குகளை முடக்காமல் சமூக செயற்பாட்டாளர்கள், மதவாதத்திற்கு எதிராக இயங்கும் செய்தி நிறுவனங்களின் கணக்குகளை எலான் மஸ்க்கும், ஸுக்கர்பெர்க்கும்  முடக்கியுள்ளனர். 

மேலும் அவர்களின் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் பயனர்களின் தனி விவரங் களை எந்த ஒரு நாட்டின் அரசாங்கமும், மேற்கு லக நாடுகளின் உளவு அமைப்புகளும்   கேட்கும் போதெல்லாம் அள்ளிக்கொடுத்து வருகின்றன.

இந்தியாவிலும் பாஜகவின் ஆணைக்கு இணங்க பலரது கணக்குகளை இந்நிறுவனங் கள் முடக்கியுள்ளன. மேலும் இந்த இரு நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளும் அமெரிக்கா வின் அரசியலுக்கு வாலாட்டக் கூடியவர்கள் என்பதாலும் அவர்களது நிறுவனத்தின் மீது மட்டும் எந்த நடவடிக்கையும் பாயவில்லை.

ரஷ்யாவின் உத்தரவுகளையும் உதாசீனப்படுத்திய பாவெல் 

2011 ஆம் ஆண்டில் பாவெல் தனது சமூக ஊடககணக்கில் அரசாங்கத்திற்கு எதிரான நபர்களின் கணக்குகளை நீக்குமாறு ரஷ்ய அரசாங்கம் தன்னிடம் கூறியதாகவும் ஆனால் தான் அதனை செய்யவில்லை எனவும் தெரிவித்திருந்தார். அது மட்டுமின்றி தனது நடுவிரலை உயர்த்தி ஒரு  புகைப்படத்தையும் வெளியிட்டார்.  ரஷ்ய ஜனாதிபதியின் கட்ட ளைக்கு அடிபணியாத பாவெல்லை அன்று மேற்கு நாடுகள் கொண்டாடின என்பது கவனிக்கத்தக்கது.

உக்ரைன் ஆட்சிக் கவிழ்ப்பில் டெலிகிராம் 

2014 ஆம் ஆண்டு நேட்டோ,சிஐஏ அமைப்பு களால் உக்ரைனில் ஆட்சிக்கவிழ்ப்பு நடத்தப் பட்டது. இந்த ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்ட நபர்கள்  டெலிகிராம் செயலியையும் தகவல் பரி மாற்றத்திற்கு பயன்படுத்தியுள்ளனர். அப்போ தும் மேற்கு நாடுகள் அவரை பாராட்டிக் கொண்டிருந்தன. ஆனால் அப்போது அந்த  பயனர்கள் பற்றிய தகவல்களை ரஷ்ய அரசாங்கத்திற்கு வழங்க பாவெல் தயாராக இருந்தார் எனவும் பிறகு அந்த  ஆண்டே அவர் ரஷ்யாவை விட்டு வெளியேறினார் என்றும் கூறப்படுகிறது. பிறகு அவர் பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் குடியுரிமையைப் பெற்றுக் கொண்டார். ரஷ்யாவுக்குத் திரும்ப தான் விரும்பவில்லை என்றும் அறிவித்தார்.

டெலிகிராமின் கடந்தகால செயல்களை பார்க்கும் போது, தற்போது அமெரிக்கா மற்றும்  இஸ்ரேலின் கட்டளைகளுக்கு அடிபணிய மறுத்ததாலேயே பாவெல் கைது செய்யப்பட்டுள் ளார் என்பதை உணர்த்துகிறது. 

- சேது சிவன்  

 

https://theekkathir.in/News/articles/உலகம்/telegram-app-and-world-political-events

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.