Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3    30 AUG, 2024 | 05:12 PM

image

மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் இரண்டாம் கட்டை பகுதியில் புதிதாக திறக்கப்பட இருக்கும் மதுபானசாலையை தடுத்து நிறுத்தக்கோரி பொது மக்கள் பதாதைகள் ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று வெள்ளிக்கிழமை (30) காலை மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

இப் போராட்டத்தின்போது இவர்கள் தங்கள் கரங்களில் ஏந்தியிருந்த பதாதைகளில்

'வர்த்தகம் முக்கியத்துவம் கொண்ட மன்னார் தலைமன்னார் சர்வதேச நெடுஞ்சாலையில் மதுக்கடையா?', 'மது விற்பனைக்கு அனுமதி வழங்கி குடும்ப வன்முறைக்கு வழி சமைக்காதே', 'மக்கள் வாழ்விடத்தில் மதுபானசாலையா? ஏழை மக்களின் வாழ்க்கையில் விலையாடாதே', 'பாடசாலை மாணவர்களை போதைக்குள் தள்ளாதே', 'அதிகாரிகளே மதுபானக் கடைக்கு அனுமதி வழங்காதே' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை எந்தியிருந்த நிலையில் போராட்டக்காரர்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டத்தின் கோரிக்கைகள் கொண்ட மகஜர்கள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மன்னார் பிரதேச செயலாளரிடமும் நேரில் சென்று கையளிக்கப்பட்டன.

WhatsApp_Image_2024-08-30_at_12.40.07_PM

WhatsApp_Image_2024-08-30_at_12.34.03_PM

WhatsApp_Image_2024-08-30_at_12.34.00_PM

DSC_0242.JPG

DSC_0239.JPG

WhatsApp_Image_2024-08-30_at_1.02.51_PM.

https://www.virakesari.lk/article/192417

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மதுபான சாலையை உடனடியாக இடம் மாற்றக் கோரி மன்னாரில் மக்கள் போராட்டம்

30 SEP, 2024 | 03:58 PM
image

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையை உடனடியாக இடம் மாற்றக் கோரி பல நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இந்த போராட்டம் இன்று  திங்கட்கிழமை (30) காலை  மதுபானசாலைக்கு முன் முன்னெடுக்கப்பட்டது.  

குறித்த மதுபானசாலை அமைந்துள்ள பகுதியில் மக்களின் குடியேற்றம், இளைஞர் பயிற்சி நிலையம், ஆடைதொழிற்சாலை, பள்ளிவாசல் ஆகியவை காணப்படுகின்ற நிலையில் மக்களின் எதிர்ப்பையும் மீறி குறித்த மது விற்பனை நிலையம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். 

கடந்த மாதம் குறித்த பகுதியை சேர்ந்த மக்கள் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெமுத்ததோடு, குறித்த மதுபானசாலையை திறக்க அனுமதிக்க வேண்டாம் என கோரி மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கை அளித்ததாகவும், தாங்கள் தொடர்ந்து பல்வேறு எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த நிலையிலும் குறித்த மது விற்பனை நிலையம் கடந்த வாரம் திறக்கப்பட்டதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.  

பிரேத பெட்டியுடன் குறித்த பகுதிக்கு வந்த நூற்றுக்கணக்கான மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.   

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் மக்களுடன் கலந்துரையாடினார். எனினும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் குறித்த பகுதிக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.  

மக்களின் கோரிக்கைக்கு அமைவாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் குறித்த பகுதிக்கு வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடினார்.  

இதன் போது, மக்கள் தமது பிரச்சினைகளை அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் குறித்த மதுபானசாலையை பிரதேச செயலாளர் அல்லது அரசாங்க அதிபரின் உடனடியாக மூட முடியாது என்றும் மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் ஊடாகவே நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.   

மேலும், இவ்விடயம் குறித்து உடனடியாக மதுவரி திணைக்கள ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும், குறிப்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்து  மதுபானசாலையை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், குறிப்பாக தொடர்ச்சியாக மக்களின் எதிர்ப்பு காணப்படுகின்ற நிலையில் குறித்த மதுபானசாலை திறக்கப்பட்டுள்ள விடையத்தை உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.  

இந்நிலையில் மக்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்ட நிலையில் அரச அதிபரின் வாக்குறுதிக்கு அமைய மக்கள் ஆர்ப்பாட்டத்தை கை விட்டுச் சென்றனர்.

DSC_0566.JPG

WhatsApp_Image_2024-09-30_at_12.02.56_PM

DSC_0478.JPG

DSC_0502.JPG

DSC_0500__1_.JPG

DSC_0518.JPG

https://www.virakesari.lk/article/195146

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாடு மாதிரி…. சாராயக் கடைகளை எல்லா இடமும் திறந்து,
மக்களுக்கு சிந்திக்கும் ஆற்றலை இல்லாது செய்யப் போகின்றார்கள். 
சாராயம், கசிப்பு, கஞ்சா… என்று எதிர்கால சந்ததியே பாழாய்ப் போகப் போகுது.
ஓரு சிலர் பணம் சம்பாதிப்பற்காக, ஒரு இனத்தையே அழிக்கப் போகின்றார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் பலத்த எதிர்ப்பையடுத்து மன்னாரில் மதுபானசாலையை உடன் மூடுமாறு உத்தரவு

Published By: DIGITAL DESK 7   01 OCT, 2024 | 10:04 AM

image

மன்னார், தலைமன்னார் பிரதான வீதி, எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையை மக்களின் எதிர்ப்பு காரணமாக உடனடியாக தற்காலிகமாக மூடுமாறு மதுவரித் திணைக்கள ஆணையாளர் எழுத்தில் உத்தரவிட்டுள்ளார்.

மன்னார், தலைமன்னார் பிரதான வீதி, எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள     மதுபானசாலை தொடர்பில் நேற்று திங்கட்கிழமை (30) ஒன்றுகூடிய மக்கள் பிரேதப் பெட்டி சகிதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் புதிதாக திறக்கப்பட்ட மதுபானசாலைக்கு முன்பாக இடம்பெற்றது.

இந்த மதுபானசாலை அமைந்துள்ள பகுதியில் மக்களின் குடியேற்றம், இளைஞர் பயிற்சி நிலையம், காமன்ஸ், பள்ளிவாசல் ஆகியவை காணப்படுகின்றன. இந்நிலையில் மக்களின் எதிர்ப்பையும் மீறி இங்கு மது விற்பனை நிலையம் திறக்கப்பட்டுள்ளது என்று மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதேபோன்று கடந்த மாதம் இந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்ததோடு, இந்த மதுபானசாலையை திறக்க அனுமதிக்க வேண்டாம் எனக் கோரி மன்னார் மாவட்ட அரச அதிபரிடம் மகஜர் ஒன்றையும் கை அளித்திருந்தனர்.தொடர்ந்து பல்வேறு எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த நிலையிலும் மதுபான விற்பனை நிலையம் கடந்த வாரம் திறக்கப்பட்டது என்று மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை (30) பிரேதப் பெட்டியுடன் திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சம்பவ இடத்துக்கு மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப், மன்னார் மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரன் சென்று மக்களுடன் கலந்துரையாடினார்.

இந்தப் பிரச்சினையை அரச அதிபர் உடனடியாக மதுவரி திணைக்களத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்ற நிலையில் குறித்த மதுபானசாலையை தற்காலிகமாக மூடுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் நிரந்தர தீர்வு கோரி ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு சென்று மதுபானசாலையை நிரந்தரமாக மூடுவதற்கு முயற்சிக்கப்படுகிறது.

WhatsApp_Image_2024-09-30_at_8.41.29_PM.

WhatsApp_Image_2024-09-30_at_12.03.01_PM

WhatsApp_Image_2024-09-30_at_12.03.01_PM

WhatsApp_Image_2024-09-30_at_12.02.56_PM

https://www.virakesari.lk/article/195191

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஏராளன் said:

மன்னார் மக்களுக்கு வாழ்த்துக்கள்.
இதே முன் மாதிரியை மற்றைய மாவட்ட மக்களும் பின் பின்பற்ற வேண்டும். 

Edited by தமிழ் சிறி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.