Jump to content

போர்க் குற்றவாளிகளை நீதிமன்றங்கள் தண்டிக்கும் - அநுரகுமார


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

06 Sep, 2024 | 05:24 PM

போரின்போது என்ன நடந்தது என்பதை கண்டறிந்து வெளிப்படுத்துவதில் நான் அப்போதும் இப்போதும் உறுதியாகவுள்ளேன். ஆனால், போர்க்குற்றவாளிகளுக்கான தண்டனைகள் நீதிமன்றங்களுடன் தொடர்புடைய விடயம் என்று அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அநுரகுமார அண்மையில் வழங்கிய செவ்வியொன்றில், போரின்போது என்ன நடந்தது என்பதைக் கண்டறிய வேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாக உள்ளது. அவர்கள் எவரையும் தண்டிக்கவேண்டும் என்று கோரவில்லை. எனவே, போரில் என்ன நடந்தது என்று வெளிப்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். 

அவரின் இந்த செவ்வியை மேற்கோள் காட்டி, 'இறுதிப் போரின்போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கும் நிலைப்பாட்டில் நீங்கள் இல்லையா?' என்று யாழில் இடம்பெற்ற கூட்டத்தின்போது ஊடகவியலாளர்கள் வினவினார்கள். 

இதற்குப் பதிலளிக்கும்போதே, 'இறுதிப்போரின்போது என்ன நடந்தது என்பதை கண்டறிவதும் வெளிப்படுத்துவதும்தான் என் வேலை. தண்டனை வழங்குவது நீதிமன்ற சுயாதீனத்துடன் தொடர்புடைய விடயம். நான் போர்க்குற்றவாளிகளைக் கண்டறிவேன். நீதிமன்றங்கள் அவர்களைத் தண்டிக்கும்' என்று அநுர தெரிவித்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பிழம்பு said:

'இறுதிப்போரின்போது என்ன நடந்தது என்பதை கண்டறிவதும் வெளிப்படுத்துவதும்தான் என் வேலை. தண்டனை வழங்குவது நீதிமன்ற சுயாதீனத்துடன் தொடர்புடைய விடயம்.

ஆமா, இவர் என்ன புதுசா கண்டறிந்து வெளிப்படுத்தப்போறார்? இவ்வளவு காலமாய் நாட்டில் என்ன நடந்தது என்று தெரியாதவர், நாட்டின் ஜனாதிபதியாகப்போறாராம். இது எங்களுக்கு தெரியாதாக்கும், இவர்  விளக்குகிறார், உடனே நீதிமன்றம் அவர்களை தண்டித்து விடுமாம். நாங்களும் பாத்துக்கொண்டுதானே இருக்கிறோம். சிங்களம் எல்லாமே ஒன்று கூடி ஆலோசித்து, தமிழர் பிரச்சனையை எப்படி கையாண்டு வாக்குகளை பெறுவது, அதற்கு எந்த தரகரை நாடுவது  என்று பேசி முடிவெடுத்த பின்னே பேசுவார்த்தைக்கு வருகின்றன. வேட்பாளர் ஒவ்வொருவருக்கும் தெரியும் யாம் ஒருவரும் பிரச்சனைக்கு தீர்வு வழங்கப்போவதில்லை என்கிற முடிவோடேயே தங்களுக்குள் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பது. எப்படியும் தங்களில் ஒருவருக்குத்தானே தமிழர் வாக்களிக்க வேண்டும் வேறு தெரிவு அவர்களுக்கில்லை ஆகவே எதை வேண்டுமானாலும் கூறுவோம் ஆனால் தீர்வை மட்டும் வாய்தவறியும் பேச மாட்டார்கள். இதுதான் சிங்களம் என்பது புரியாமல் நாங்களும் ஒவ்வொரு தேர்தலுக்கு ஒவ்வொருவரை நம்பி அவர் பின்னால் சுத்துறோம்.

11 hours ago, பிழம்பு said:

போரின்போது என்ன நடந்தது என்பதைக் கண்டறிய வேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாக உள்ளது. அவர்கள் எவரையும் தண்டிக்கவேண்டும் என்று கோரவில்லை.

ஒருவேளை சுமந்திரன் அப்படி சொல்லியிருப்பாரோ, அல்லது இவரின் கற்பனையோ?  எங்களுக்கு தெரியாது என்ன நடந்தது என்று, இவர் விளக்குகிறார். அப்படியான நிலையில் நீதிமன்றம் தண்டிக்குமென்று கூறி யார் காதில் பூ சுற்றுகிறார் இவர்?  விழுந்து போன இனத்தை கெஞ்சத்தேவையில்லை வெருட்டி பயமுறுத்தி வாக்கு வாங்கலாமென இவர் நினைக்கிறார். இவரது கட்சிதானே நீதிமன்றம் போய் வடக்கு கிழக்கை பிரித்தது?

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதை மட்டும் தான்  தமிழ் நாட்டைச்சேர்ந்த மீனவர்கள் செய்கிறார்கள்  அடிபடுங்கள்.  மொட்டையுமடியுங்கள.  சிங்களவருடன். சேர்த்து  ஒற்றை ஆட்சி உறுதியானது   தமிழ் ஈழத்தை கைவிடுங்கள். வடக்கு கிழக்கு இலும். கடலிலும். இலங்கை படையணிக்கள். நிலைகொண்டிருக்கட்டும். 🙏   இவை சிங்களவர்கள். செய்வது   எனவே பிரச்சனை இல்லை   இலங்கை தமிழருக்கு புலிகள் காலத்தில் ஒரு. கொள்கை அதாவது  தமிழ் நாட்டையும்  தமிழக மீனவர்களையும். நன்கு பயன்படுத்தி கொண்டார்கள்    2009 பிற்பாடு. அவர்கள் தேவையில்லை   ஒற்றை ஆட்சியை நடைமுறையில்  ஏற்றுக்கொண்டார்கள்   ஆகவே  அத்து மீறும் ஒவ்வொரு தமிழக மீனவர்களையும். பிடித்து மொட்டை அடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அனுப்பி வைக்கவும்.  குறிப்பு,.....கருணாநிதி உண்ணாவிரதத்தின் போது நடந்து கொண்ட முறை சரி தான்   ஏனெனில் அது அவரது வாழ்க்கை 🙏🙏🙏
    • இந்த ஜனாதிபதி வேட்பாளர்கள் எல்லோருடைய (பொதுவேட்பாளர் அரியநேத்திரனை தவிர்த்து ஏனென்றால் அவர் தான் ஜனாதிபதியாக வர முடியாது, வர மாட்டேன் என்று சொல்லிவிட்டார்) பேட்டிகளையும், காணொளிகளையும் பார்த்ததில் இருந்து தெரிவது என்னவென்றால்............. இவர்களில் எவர் ஜனாதிபதியாக வந்தாலும் பிதுருதலாகலை மலையிலிருந்து தேனும் பாலும் ஓடி நாட்டை நிரப்பப் போகின்றது என்பதே......🤣. சனம் பாலிலும் தேனிலும் முக்குளிக்கப் போகுது..........😀.    
    • வடக்கு கிழக்கில் எங்களின் சுயாட்சி இல்லை, அதனால் எங்கள்:  கடலில் எவர் மீன் பிடித்தால் என்ன வயலில் எவர் உழுது விதைத்தால் என்ன மேய்ச்சல்தரைகளில் எவர் மாடுகள் மேய்ந்தால் என்ன இதையும் தாண்டி, எங்கள் வீடுகளில் கூட எவர் குடியேறினால் தான் என்ன என்று அடுத்தடுத்து வரிசையாகச் சொல்லப் போகிறீர்களோ என்று பயமாக இருக்கின்றது.........🤣. கந்தையா அண்ணை, எங்களின் கரையோர மக்கள் பாவம், என்ன பாவம் செய்தார்களோ என்றுமே தீராத நெருக்கடி அவர்களின் வாழ்க்கைகள்...........    
    • காணொளிக்கு நன்றி, அந்த சிங்கள ஊடகவியலாளர் நந்தன வீரரத்ன எழுதிய யாழ்ப்பாணம் எரியூடல் -1981 எனற புத்தகத்தில் யாழ் நூலகத்தை எரித்த சூத்திரதாரிகளை ஆவணப்படுத்தியுள்ளார், அதனை மனோரஞ்சன் தமிழாக்கம் செய்துள்ளார். குறிப்பாக ரணில் எப்படி முன்னின்று செய்யப்பட்டார் என்று விலாவரியாக கண்கண்ட சாட்சிகளுடன் தந்துள்ளார்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.