Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
கார்வெல்லாக் தீவுகள்

பட மூலாதாரம்,UCL

படக்குறிப்பு, பனியுகம் குறித்த மர்மத்தை கார்வெல்லாக் தீவுகள் அவிழ்க்கலாம் என நம்பப்படுகிறது கட்டுரை தகவல்
  • எழுதியவர், பல்லப் கோஷ்
  • பதவி, அறிவியல் செய்தியாளர்
  • 7 செப்டெம்பர் 2024, 09:06 GMT
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு தீவுக் கூட்டம், பூமியின் மிகப் பெரும் மர்மத்தைக் கட்டவிழ்க்க உதவும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஸ்காட்லாந்தின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள கார்வெல்லாக் தீவுகள், சுமார் 720 மில்லியன் (72 கோடி ஆண்டுகள்) ஆண்டுகளுக்கு முன்பு பூமி மிகப் பெரிய பனியுகத்தில் நுழைந்தது என்பதற்கான மிகச் சிறந்த சான்றுகளைக் கொண்டுள்ளதாக, ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

முதல் விலங்கு இந்தப் பூமியில் தோன்றிய பின்னர், 80 மில்லியன் ஆண்டுகளுக்கு (8 கோடி ஆண்டுகள்) முன்பு கிட்டத்தட்ட முழு உலகையும் இரு தொகுதிகளாக உறைபனி சூழ்ந்திருந்தது. அது பூமியை “பனிப்பந்து” (snowball earth) என அழைக்கக் கூடிய வகையில் இருந்துள்ளது.

பாறைகளில் மறைந்திருக்கும் உறைபனி குறித்த தடயங்கள், கார்வெல்லாக் தீவுகளைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் அழிந்துவிட்டன. பூமி நீண்டகாலமாக ஏன் அத்தகைய உச்சகட்ட உறைபனி நிலையை அடைந்தது, சிக்கலான உயிரினங்களின் தோற்றத்திற்கு அந்த நிலை ஏன் முக்கியம் என்பதற்கான விடைகளை இந்தத் தீவுகள் தரும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

 
பூமி பனிப்பந்தாக இருந்ததாக கருதப்படுகிறது

பட மூலாதாரம்,SPL

படக்குறிப்பு, வரலாற்றிலேயே மிகத் தீவிரமான பனியுகத்தில் பூமி நீண்டகாலத்திற்கு உறைபனியால் சூழப்பட்டிருந்தது

பாறையின் அடுக்குகளை வரலாற்றுப் புத்தகத்தின் பக்கங்களாகக் கருதலாம். ஒவ்வோர் அடுக்கும் வெகு காலத்திற்கு முன்பு பூமியின் சூழல் குறித்த விவரங்களைக் கொண்டிருக்கும்.

பாறை அடுக்குகள் மிகப்பெரும் உறைபனியால் அரித்துச் செல்லப்பட்டதால், பூமி ஒரு பனிப்பந்தாக மாறுவதற்கு வழிவகுத்த முக்கியமான காலகட்டம் குறித்த தகவல்களே இல்லாமல் இருந்தது.

திருப்பத்தை ஏற்படுத்திய ஆய்வு

லண்டனில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட புதிய ஆய்வின்படி, உறைபனி அரிப்பிலிருந்து கார்வெல்லாக் தீவுகள் தப்பித்ததாகத் தெரிய வந்துள்ளது.

வரலாற்றில் பூமி எப்படி மிகவும் அழிவுகரமான ஒரு காலகட்டத்திற்குள் நுழைந்தது? நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பனிப்பந்து உருகியபோது, முதல் உயிரினம் தோன்றியபோது என்ன நடந்தது என்பதற்கான விரிவான சான்றுகளை பூமியில் கொண்டுள்ள ஒரேயொரு இடமாக கார்வெல்லாக் தீவுக் கூட்டம் இருக்கக்கூடும்.

கண்டங்கள் காலப்போக்கில் நகர்ந்ததால், ஸ்காட்லாந்து அந்தக் காலகட்டத்தில் முற்றிலும் மாறுபட்ட இடத்தில் இருந்திருக்கும். ஸ்காட்லாந்து பூமியின் பூமத்திய ரேகைக்குத் தெற்கே இருந்தது. மேலும், ஸ்காட்லாந்து உட்பட பூமி முழுவதும் உறைபனியால் சூழப்படுவதற்கு முன்புவரை வெப்பமண்டல காலநிலையைக் கொண்டிருந்தது.

 

“உலகம் முழுவதும் இல்லாத, பனியுகத்தில் நுழைந்த தருணத்தை நாங்கள் ஸ்காட்லாந்தில் கண்டறிந்துள்ளோம்,” என லண்டன் யுனிவர்சிட்டி காலேஜின் பேராசிரியரும் இந்த ஆய்வை வழிநடத்தியவருமான கிரஹாம் ஷீல்ட்ஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.

“கார்வெல்லாக் தீவுகளில் உள்ள பாறைகளின் அடுக்குகளில், உலகின் மற்ற பகுதிகளில் பனிப்பாறை அரிப்பு காரணமாகக் காண முடியாத முக்கியமான பல மில்லியன் ஆண்டுகள் குறித்த தகவல்கள் உள்ளன.”

இங்கு முக்கியத் தீவு ஒன்றில் தனியாக அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு தவிர, ஸ்காட்லாந்தின் இன்னர் ஹெப்ரைடுகள் (தீவுக் கூட்டம்) மக்கள் வாழாத இடமாகும். மேலும், செல்டிக் இனக் குழுவின் 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மடாலயத்தின் இடிபாடுகளும் அங்குள்ளன.

இந்த முக்கியமான கண்டுபிடிப்பை பேராசிரியர் ஷீல்டின் பிஹெச்.டி ஆய்வு மாணவர் எலியாஸ் ரூகென் நிகழ்த்தினார். அவருடைய ஆய்வு முடிவுகள், ஜியோலாஜிக்கல் சொசைட்டி ஆஃப் லண்டன் எனும் ஆய்விதழில் வெளியாகியுள்ளது.

அந்தப் பாறைகளுடைய அடுக்குகளின் காலத்தை முதன்முதலில் கண்டறிந்து, அவை உலகின் எந்தப் பகுதியிலுள்ள பாறை அடுக்குகளிலும் காணக் கிடைக்காத முக்கியமான காலகட்டத்தைச் சேர்ந்தவை என்பதை எலியாஸ் முதன்முதலில் கண்டறிந்தார்.

அறிவியல் உலகில் முக்கிய இடம்

அவருடைய கண்டுபிடிப்பால் கார்வெல்லாக் தீவுகளுக்கு அறிவியல் உலகில் முக்கியமான இடம் கிடைக்கவுள்ளது.

பூமியையே மாற்றக்கூடிய புவியியல் ரீதியிலான தருணங்களுக்கான முக்கியமான சான்றுகளைக் கொண்டிருப்பதாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் பொருத்தப்படும் பெரிய தங்க ஆணி (golden spike) இங்கு பொருத்தப்பட வாய்ப்புள்ளது. திருடர்களைத் தடுக்கும் விதமாக பொருத்தப்படும் இந்த ஆணி, உண்மையில் தங்கத்தால் ஆனது அல்ல.

 
எலியாஸ் ரூகென்

பட மூலாதாரம்,UCL

படக்குறிப்பு, இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்திய எலியாஸ், கேரட்டை வைத்து ஆணி அடிப்பது போன்று செய்கிறார்

இதைப் பொருத்துவதற்காக, தன் கண்டுபிடிப்பைக் காட்டுவதற்கு “கிரையோஜெனியன் துணை ஆணைய” உறுப்பினர்களை அவ்விடத்திற்கு எலியாஸ் அழைத்துச் சென்றுள்ளார்.

அடுத்த கட்டமாக, பரவலான புவியியல் சமூகத்தில் இதற்கு ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது இதைவிட சிறப்பான சான்றுகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை வெளிப்படுத்த அனுமதிப்பார்கள். ஏதும் இல்லையென்றால், அவ்விடத்தில் தங்க ஆணி அடுத்த ஆண்டு பொருத்தப்படும்.

இதனால் அவ்விடத்தின் அறிவியல் தரம் உயர்த்தப்பட்டு, ஆய்வுக்கு மேலும் நிதி கிடைக்கும்.

அப்படி நிகழ்ந்தால், இளம் ஆராய்ச்சியாளராக 60 ஆண்டுகளுக்கு முன்பு இதன் முக்கியத்துவத்தை முதன்முதலாக அடையாளப்படுத்திய டாக்டர் டோனி ஸ்பென்சருக்கு அது மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

“தங்க ஆணியைப் பொருத்துவதற்காகத் தேர்ந்தெடுக்க சுமார் 50 இடங்கள் உள்ளன,” என பிபிசியிடம் தெரிவித்த அவர், “ஆனால் இங்குதான் பாறைகள் தடிமனாகவும், வண்டல் மிகவும் தொடர்ச்சியாகவும் இருக்கும்," என்றார்.

எனவே "குறிப்பிட்ட பனி யுகத்தின்போது அறியப்பட்ட காலத்தின் ஆரம்பப் புள்ளியை அந்த இடம் பாதுகாத்ததாகத் தெரிகிறது."

- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.