Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இலங்கை: கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி பற்றி இதுவரை தெரிய வந்த தகவல்கள்

இலங்கை மனித புதைக்குழி
படக்குறிப்பு, கொழும்பின் பிரதான பகுதியில் தற்போது மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையில் பல பத்தாண்டுகளாக அவ்வப்போது மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படுவது தொடரும் நிலையில், தற்போது தலைநகரத்தின் முக்கிய வளாகம் ஒன்றிலும் மனிதப் புதைகுழியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பின் பிரதான பகுதியும், அதிவுயர் பாதுகாப்பு வளையமுமான பகுதி ஒன்றிலிருந்தே இந்த மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்திற்குள் செல்லும் இங்குறுகடை சந்தியிலிருந்து நிர்மாணிக்கப்படும் வீதி அபிவிருத்தி பணிகளுக்காக இடம்பெற்ற அகழ்வு நடவடிக்கைகளின் போதே இந்த மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகப் பகுதியிலுள்ள பழைய மாவட்டச் செயலக வளாகத்தில் கடந்த ஜுலை மாதம் 13ஆம் தேதி இடம்பெற்ற அகழ்வுப் பணிகளின் போதே இந்த மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த விடயம் தொடர்பில் கொழும்பு புதுக்கடை பிரதம நீதவான் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, பிரதம நீதவான் பண்டார இலங்கசிங்க முன்னிலையில் கடந்த 5ஆம் தேதி அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கையில் கடந்த காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான ஆய்வுகளை நடத்திய தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் இந்த மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

மனிதப் புதைகுழி எந்த காலப் பகுதிக்குச் சொந்தமானது?

இந்த மனிதப் புதைகுழி எந்த காலப் பகுதிக்குச் சொந்தமானது என்பது தொடர்பில் இதுவரை சரியாக அனுமானிக்க முடியவில்லை என பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவிக்கிறார்.

''இங்குள்ள குழப்பகரமான நிலைமையால், இந்த இடம் மிகவும் சிக்கலான பகுதியாக உள்ளது. இங்கு வீதிகள் இரண்டு முறை அமைக்கப்பட்டுள்ளன. கால்வாய்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்ற பகுதியாகவும் இது இருக்கிறது. அதனால், இந்த விவகாரம் மிகவும் சிக்கலான ஒன்றாகியுள்ளது," என்று அவர் தெரிவித்தார்.

 
இலங்கை மனித புதைக்குழி
படக்குறிப்பு, இந்தப் புதைகுழி எந்த காலப் பகுதி சேர்ந்தது எனத் தெரிய வரவில்லை

''காலப் பகுதி தொடர்பில் ஏதேனும் தடயங்கள் கிடைக்கும் வரை, காலப் பகுதி குறித்து எதையும் எம்மால் கூற முடியாது. நாங்கள் இன்னும் எலும்புக் கூடுகளை முழமையாகக் காணக்கூடிய அளவிற்குக்கூட வரவில்லை.

மேல் பகுதியை மாத்திரமே அகழ்ந்து கொண்டிருக்கின்றோம். எலும்புக் கூடுகளை முழுமையாக எடுப்பதற்கு இன்னும் ஓரிரு தினங்கள் எடுக்கும்," என அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளும் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவிக்கிறார்.

காணாமல் ஆக்கப்பட்டுள்ளோர் புதைந்துள்ளனரா?

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை இந்தப் புதைகுழியில் புதைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தை அடுத்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும் இந்த மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளில் தலையீடு செய்துள்ளனர்.

''இந்த இடத்தில் கடற்படை முகாமொன்று இருந்தது. துறைமுக போலீஸ் என்பது 1988 மற்றும் 1989ஆம் ஆண்டு காலப் பகுதி மற்றும் போர் இடம்பெற்ற காலப் பகுதியில் சந்தேக நபர்களைத் தடுத்து வைக்கும் ஒரு இடமாகப் பிரபல்யமடைந்து காணப்பட்டது.

இதனாலேயே, இந்த மனிதப் புதைக்குழி 1988 மற்றும் 1989ஆம் ஆண்டு காலப் பகுதிக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம்" என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்.

 
இலங்கை புதைக்குழிகள்
படக்குறிப்பு, இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் மனிதப் புதைகுழிகளில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தையடுத்து, இவ்விவகாரத்தில் அவர்களின் உறவினர்கள் தலையிட்டுள்ளனர்

அரசாங்கத்திற்கு உண்மையைக் கண்டறியும் அரசியல் தேவை இல்லாமை காரணமாகவே, கடந்த காலங்களில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பான எதிர்கால விசாரணைகள் நடத்தப்பட்டவில்லை என அவர் குற்றம் சாட்டுகிறார்.

அரசாங்கத்திற்கு எதிராக வன்முறைகள் அல்லது எதிர்ப்புகள் எழும் பட்சத்தில், அதைத் தடுத்து நிறுத்துவதற்கான சிறந்த அடக்குமுறையாக இந்தக் காணாமல் ஆக்குதலைப் பயன்படுத்த முடியும் என அவர் கூறுகிறார்.

இலங்கையில் இதுவரை 22 மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் ஒன்றியம் தெரிவிக்கின்றது.

'கார்பன் ஆய்வுகள் தொடர்பில் நம்பிக்கை இல்லை'

இலங்கையில் இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் நடத்தப்பட்ட கார்பன் ஆய்வுகள் குறித்து நம்பிக்கை இல்லை என காணாமல் போனோர் குடும்பங்கள் ஒன்றியத்தின் தலைவர் குறிப்பிடுகின்றார்.

''குறிப்பாக அண்மைக் காலத்தில் கார்பன் ஆய்வுகளுக்காக அனுப்பப்பட்ட மனித எச்சங்கள் சரியாக ஆய்வு நடத்தப்பட்டது என நம்ப முடியவில்லை. அரசாங்கத்தின் தேவைகளுக்கு அமைய தீர்மானங்களை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையே எமக்குள்ளது" என அவர் கூறுகின்றார்.

கடந்த ஆண்டு ஜூலை 6ஆம் தேதி முல்லைத்தீவில் தோண்டப்பட்ட மனிதப் புதைகுழி
படக்குறிப்பு, கடந்த ஆண்டு ஜூலை 6ஆம் தேதி முல்லைத்தீவில் தோண்டப்பட்ட மனிதப் புதைகுழி

''இந்த மனித எச்சங்களிலுள்ள டி.என்.ஏவுடன், ஒப்பிட்டுப் பார்க்கும் வகையிலான உறவினர்களின் டி.என்.ஏ வங்கியொன்று கிடையாது. அதனால், இந்த மனித எச்சங்கள் யாருடையது என்பதை அடையாளம் காணும் வகையிலான உபாயங்கள் இல்லை. அத்துடன், அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் ஊக்கமளிப்பதில்லை. அந்தந்த குடும்பங்களின் உறவினர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் தலையீடு செய்வதற்கான ஊக்குவிப்பு இல்லை. அதனால், இந்த விடயம் வெற்றியளிக்கவில்லை," என அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 20க்கும் அதிகமான மனிதப் புதைகுழிகள்

இலங்கையில் கடந்த 30 ஆண்டு காலத்தில் மாத்திரம் சுமார் 20க்கும் அதிகமான மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நான்கு சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து அண்மையில் வெளியிட்ட அறிக்கையொன்றின் பிரகாரம், 20 மனிதப் புதைகுழிகள் இதுவரை நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த அறிக்கை வெளியிடப்பட்டதை அடுத்து, முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி மற்றும் கொழும்பு துறைமுக மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

'மனிதப் புதைகுழிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது'

இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்து மனிதப் புதைகுழிகள் தொடர்பிலும் தாம் கவனம் செலுத்தியுள்ளதாக மனிதப் புதைகுழிகள் தொடர்பான வழக்குகளில் முன்னிலையாகும் வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, கொழும்பு துறைமுக மனிதப் புதைகுழி தொடர்பிலும் தாம் கவனம் செலுத்தியுள்ளதாக வழக்கறிஞர் கே.வி.நிறஞ்சன் தெரிவிக்கின்றார்.

 
இலங்கை மனித புதைக்குழிகள்
படக்குறிப்பு, இதுவரை சுமார் 20க்கும் மேற்பட்ட புதைக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன (கோப்புப்படம்)

''கொழும்பு துறைமுக மனிதப் புதைகுழிக்கு முன்னதாக கண்டுபிடிக்கப்பட்ட கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி தொடர்பான அகழ்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த மனிதப் புதைக்குழியிலிருந்து எடுக்கப்பட்ட எலும்புப் கூடுகள் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என அவர் குறிப்பிடுகிறார்.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான இடைக்கால அறிக்கையை, தொல்லியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ முல்லைத்தீவு நீதிமன்றத்தில் சில மாதங்களுக்கு முன்னர் சமர்ப்பித்திருந்தார்.

இந்த இடைக்கால அறிக்கையின் பிரகாரம், குறித்த மனிதப் புதைகுழி 1994ஆம் ஆண்டுக்கு முற்படாததும், 1996ஆம் ஆண்டுக்கு பிற்படாததுமான காலப்பகுதியைக் கொண்டிருக்கலாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே கொழும்பிலும் தற்போது மனிதப் புதைகுழியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொழும்பு துறைமுக மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

கொழும்பில் கண்டறியப்பட்ட பாரிய மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு துறைமுகத்தில் இந்த மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அதன் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

https://thinakkural.lk/article/310019



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.