Jump to content

குளிர்சாதனப் பெட்டிகளால் ஏற்படும் விபத்துகளை தடுப்பது எப்படி? - பராமரிக்கும் வழிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
தொடர் கதையாகும் குளிர்சாதனப் பெட்டிகளால் ஏற்படும் விபத்துகள்... தவிர்ப்பது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

7 மணி நேரங்களுக்கு முன்னர்

குளிர்சாதனப் பெட்டி வெடித்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி இரண்டு பெண்கள் பலியாகியுள்ளனர். மதுரை மாவட்டம், பெரியார் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தனியார் பெண்கள் விடுதி ஒன்றில் செப்டம்பர் 12, வியாழன், காலை 4.30 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பலியானோர் பிரமிளா சௌத்திரி (50), சரண்யா (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குளிர்சாதனப் பெட்டி வெடித்து ஏற்பட்ட புகையில் மூச்சுத் திணறிய பெண்களை பத்திரமாக மீட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2022ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் ஏற்பட்ட இதேபோன்ற விபத்து ஒன்றில் சிக்கி இரண்டு பெண்கள் உட்பட மூன்று நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

குளிர்சாதனப் பெட்டிகள் உட்பட மின்னணு இயந்திரங்கள் அனைத்துமே முறையாகப் பராமரிக்கப்படுகின்ற போது இத்தகைய விபத்துகள் பெருமளவில் தவிர்க்கப்படலாம். அதற்கு உங்கள் வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளை எப்படிப் பராமரிப்பது எனத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

இதுபோன்ற விபத்துகளை தவிர்ப்பது எப்படி? குளிர்சாதனப் பெட்டியை புதிதாக வாங்கும்போது கவனிக்க வேண்டியது என்ன? ஏற்கெனவே பயன்படுத்திய ஒரு குளிர்சாதனப் பெட்டியை மற்றொருவர் வாங்கும்போது எதையெல்லாம் செய்ய வேண்டும்? இங்கு விரிவாகக் காண்போம்.

தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுவது என்ன?

கோவை மாவட்டத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக குளிர்சாதனப் பெட்டிகள் தொடர்பான தொழில்நுட்ப பிரச்னைகளைக் கவனித்து வரும் ராஜேஷ், பெரும்பாலான சூழல்களில் முறையான பராமரிப்பு இல்லாமல் இருப்பதே இத்தகைய விபத்துகளுக்குக் காரணம் என்று குறிப்பிடுகிறார்.

தனியார் நிறுவனம் ஒன்றின் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றி வரும் அவர், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை குளிர்சாதன பெட்டியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

"பொதுவாக நம் வீடுகளில் குளிர்சாதனப் பெட்டிகளை குளிர்சாதனப் பெட்டிகளாக, மின்னணு கருவியாகப் பார்ப்பதில்லை. மேலே துணியைப் போட்டு மூடி வைத்திருப்பது. சரியாக சுத்தம் செய்யாமல் வைத்திருப்பது, அதன் அருகிலேயே பழைய துணிகள், குப்பைகள், அட்டைப் பெட்டிகள் போன்று எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களைப் போட்டு வைத்திருப்பது போன்றவற்றை நாம் பார்த்திருப்போம். முதலில் இவற்றைத் தவிர்க்க வேண்டும்," என்கிறார் ராஜேஷ்.

"திடீரென மின் இணைப்பில் ஒரு பிரச்னை ஏற்பட்டு 'ஷார்ட் சர்க்யூட்' ஆகும் பட்சத்தில் வயரில் இருந்து தீப்பற்றிக் கொள்வது இத்தகைய பொருட்கள்தான். ஆனால் பொதுமக்கள், குளிர்சாதனப் பெட்டிதான் வெடித்து விபத்து ஏற்படுத்திவிட்டதாகக் கூறுவார்கள்," என்று மேற்கோள் காட்டினார்.

 

செய்யக் கூடாதவை என்ன?

குளிர்சாதனப் பெட்டிகளை பராமரிப்பது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. மக்களுக்குத் தேவையான அனைத்து செய்திகளும் அவர்கள் கைகளுக்கே வந்துவிடுகிறது. அதனால்தான் பெரும்பாலான நேரங்களில் வீட்டில் மின்னணு கருவிகளில் ஏற்படும் பிரச்னைகளை பொதுமக்கள் தாங்களே சரி செய்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் 'ரிப்பேர்' பணிகளை மேற்கொள்வதாகவும் கூறுகிறார் ராஜேஷ்.

"யூடியூப் போன்ற தளங்களுக்குச் சென்று அங்கே கிடைக்கும் லட்சக்கணக்கான வீடியோக்களில் ஒன்றைத் தேர்வு செய்து அதில் கூறியிருப்பது போன்றே, உதிரி பாகங்களை வாங்கி வைத்து ரிப்பேர் பார்க்கின்றனர். ஆனால் இவை பாதுகாப்பான முடிவுகளைத் தருவதில்லை," என்கிறார் அவர்.

மேலும் மின்னணு சாதனங்களைப் பொறுத்தவரை, என்னவெல்லாம் செய்யக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்துகிறார்:

  • சுயமாக குளிர்சாதனப் பெட்டிகளை ரிப்பேர் செய்யும் முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.
  • விலை குறைவாகக் கிடைக்கிறது என்று போலியான உதிரிபாகங்களை வாங்கி அதை குளிர் சாதனப் பெட்டிகளில் பொருத்த வேண்டாம்.
  • கம்பிரஷர் அருகே இருக்கும் பகுதிகளில் உள்ள வயர்களின் இணைப்பைத் துண்டித்தல் அல்லது துண்டித்திருக்கும் இணைப்பை இணைத்தல் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
  • ஸ்டெபிலைசர்களை பொறுத்தவரை ஐ.எஸ்.ஓ தரச்சான்று இல்லாத தயாரிப்புகளை வாங்க வேண்டாம்.
  • துணி, அட்டைப் பெட்டிகள் உள்ளிட்ட பொருட்களை குளிர்சாதன பெட்டிகளுக்கு அருகே வைக்க வேண்டாம்.
 

என்ன செய்ய வேண்டும்?

தொடர் கதையாகும் குளிர்சாதனப் பெட்டிகளால் ஏற்படும் விபத்துகள்... தவிர்ப்பது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கம்பிரஷர் அருகே இருக்கும் பகுதிகளில் உள்ள வயர்களின் இணைப்பைத் துண்டித்தல் அல்லது துண்டித்திருக்கும் இணைப்பை இணைத்தல் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்

வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் பழுது ஏற்பட்டுவிட்டால் உடனே அதை வாங்கிய ஏஜென்ஸிக்கு அழைப்பு விடுத்து புகாரைப் பதிவு செய்ய வேண்டும் என்கிறார் ராஜேஷ்.

தொழில்நுட்பப் பிரிவினர் பழுதைச் சரிபார்க்கும் வரை குளிர்சாதனப் பெட்டியைப் பயன்படுத்த வேண்டாம் என்று கூறிய ராஜேஷ் ஸ்டெபிலைசர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறும் வலியுறுத்துகிறார்.

"கூடுதலாகச் சிறிதளவு தொகை செலவானாலும், தரமான ஸ்டெபிலைசர்களை பயன்படுத்துவதே நல்லது. விலையைக் கருத்தில் கொண்டு சிலர் ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் இல்லாமல் மலிவு விலையில் கிடைக்கும் ஸ்டெபிலைசர்களை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். சில நாட்களில் அது குளிர்சாதன பெட்டிக்குத் தேவையான பாதுகாப்பை வழங்காமல் போகும்போது விபத்தில் வந்து முடிகிறது," என்றும் அவர் விவரித்தார். ராஜேஷின் அறிவுறுத்தல்களின்படி,

  • ஒற்றைக் கதவு கொண்ட குளிர்சாதன பெட்டிக்கு பொதுவாக 500 வாட் இருக்கும் ஸ்டெபிலைசர்களை பயன்படுத்துவது நல்லது
  • இரட்டைக் கதவு கொண்ட குளிர்சாதன பெட்டிகளுக்கு ஒரு கிலோ வாட் வரை உள்ள ஸ்டெபிலைசர்களை பயன்படுத்தலாம்
  • உணவகங்கள், தங்கும் விடுதிகள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் குளிர்சாதனப் பெட்டிகளுக்கு தேவைகளுக்கு ஏற்ப ஸ்டெபிலைசர்களை தொழில்நுட்பப் பிரிவினரே பரிந்துரை செய்வார்கள்
 

தூய்மையாக வைத்திருங்கள்

குளிர்சாதனப் பெட்டிகள் விபத்து தவிர்ப்பது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

விபத்துக்கும் குளிர்சாதனப் பெட்டியின் தூய்மைத்தன்மைக்கும் தொடர்பு இல்லை என்றாலும், அதைத் தூய்மையாக வைத்திருப்பது அவசியம் என்று வலியுறுத்துகிறார் ராஜேஷ்.

அமெரிக்காவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஆய்வுச் சேவை வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி குளிர்சாதனப் பெட்டியை 40 டிகிரி ஃபாரன்ஹீட்டில் வைத்திருக்க வேண்டும்.

சமைத்த உணவுப் பொருட்களை நான்கு நாட்கள் வரை மட்டுமே வைத்திருக்க வேண்டும். சமைக்கப்படாத பச்சை இறைச்சியை இரண்டு நாட்களுக்கு மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

வெளிப்புறத்தைத் துணி மற்றும் சோப் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கண்டென்சரில் காற்று எந்தத் தடையும் இன்றிச் செல்லும் வகையில் 'ஃபிரண்ட் கிரில்லை' தூசி படியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஆண்டுக்கு சில முறையாவது கண்டென்சர் சுருளைச் சுத்தம் செய்வது அவசியம் என்றும் அறிவுறுத்துகிறது அமெரிக்காவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஆய்வுச் சேவை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.