Jump to content

புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டை பிளவுபடுத்த சூழ்ச்சி - மஹிந்த ராஜபக்ஷ!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
15 SEP, 2024 | 09:38 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தேசியம், பௌத்தம் பற்றி நாமல் ராஜபக்ஷ மாத்திரமே பேசுகிறார். ஏனைய வேட்பாளர்கள் புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டை பிளவுப்படுத்துவது பற்றி பேசுகிறார்கள். எக்காரணிகளுக்காவும் நாட்டை பிளவுபடுத்த நாங்கள் இடமளிக்க போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

அம்பாறையில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது, 

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டின் தேசிய பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் நான் உறுதிப்படுத்தினேன். அபிவிருத்திகளை துரிதமான மேற்கொண்டு  தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தினேன். 

2005 ஆம் ஆண்டு அரசாங்கத்தை பொறுப்பேற்கும் போது  பொருளாதார நிலைமை 15 பில்லியன் டொலர்களாக காணப்பட்டது. 2014 ஆம் ஆண்டு 85 பில்லியன் டொலர் கையிறுப்புடன் அரசாங்கத்தை ஒப்படைத்தேன்.  

ஊழலை முடிவுக்கு கொண்டு வருவதாக குறிப்பிட்டுக் கொண்டு 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் தேசிய பொருளாதாரத்தையும், தேசிய பாதுகாப்பையும் பலவீனப்படுத்தியது. 

 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எம்மை ஊழல்வாதிகளாக சித்தரித்து அதிகாரத்தை கோரியவர்கள் இம்முறையும் அதிகாரத்தை கோருகிறார்கள்.  

வெறுப்பினை முன்னிலைப்படுத்தி செயற்படும் இவர்களால் பொருளாதாரத்தை ஒருபோதும் மேம்படுத்த முடியாது. சூழ்ச்சிகளினால் தான் நாங்கள் 2015 ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டோம். அந்த சூழ்ச்சி இன்றும் தொடர்கிறது. 

ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார மேடைகளில் நாமல் ராஜபக்ஷவை தவிர்த்து எவரும் தேசியம் மற்றும் பௌத்தம் பற்றி பேசுவதில்லை. நாட்டை பிளவுப்படுத்தும் புதிய அரசியலமைப்பு பற்றி பேசுகிறார்கள். எக்காரணிகளுக்காகவும் நாட்டை பிளவுபடுத்த நாங்கள் இடமளிக்கமாட்டோம்.

தேசியத்தை பாதுகாப்பதற்கு அனைவரும் எம்முடன் கைகோர்க்க வேண்டும். பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் நிச்சயம் தோற்றம் பெறும் என்பதை உறுதியாக குறிப்பிடுகிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/193789

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, ஏராளன் said:

நாட்டை பிளவுப்படுத்தும் புதிய அரசியலமைப்பு பற்றி பேசுகிறார்கள். எக்காரணிகளுக்காகவும் நாட்டை பிளவுபடுத்த நாங்கள் இடமளிக்கமாட்டோம்.

நாட்டை பல்வேறு டிசைனில் கொள்ளையடித்த கொள்ளைகாரர்கள் கடைசி தஞ்சம் தமிழ் எதிர்ப்பு இனவாதம் நாட்டை பிரிக்கபோரான்கள் என்று சாதாரண சிங்கள மக்களை வெருட்டி அவர்களின் தமிழர் எதிர்ப்பு இனவாதத்தை வளர்த்து விடுவது .

கடைசியில் முழு தீவும் ஒவ்வொரு நாட்டுக்கு அடிமையாக போகுது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா சோற்றுப்

பொருக்குலர்ந்த வாயா புலையா- திருக்குடந்தைக் கோட்டானே நாயே குரங்கே

யுனையொருத்தி போட்டாளே வேலையற்றுப் போய்.

(நன்றி: காளமேகப் புலவர்)
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா சோற்றுப்

பொருக்குலர்ந்த வாயா புலையா- திருக்குடந்தைக் கோட்டானே நாயே குரங்கே

யுனையொருத்தி போட்டாளே வேலையற்றுப் போய்.

(நன்றி: காளமேகப் புலவர்)
 

kmpoiet.jpg

page140-800px-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf.jpg

சம்பவமும் பொருளும்...

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.