Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"இலங்கை தமிழ் தலைமையின் கூத்து" [முரண்படும் தமிழ்த் தலைமைகள்]

 

விவிலியத்தின் படி, வெள்ளப் பெருக்கிற்குப் பின் உலகம் முழுவதிலும் ஒரே மொழியும் ஒரே விதமான சொற்களும் இருந்தன. மனிதர்கள் கிழக்கிலிருந்து வந்து, சினயார் [Shinar]  சமவெளியில் குடியேறினர். 

 

அப்பொழுது அவர்கள்,


″வாருங்கள், உலகம் முழுவதும் நாம் சிதறுண்டு போகாத படி வானளாவிய கோபுரம் கொண்ட நகர் ஒன்றை நமக்காகக் கட்டி எழுப்பி [build a city and a tower tall enough to reach heaven], நமது பெயரை நிலை நாட்டுவோம்″


என்றனர். மானிடர் கட்டிக் கொண்டிருந்த நகரையும் கோபுரத்தையும் காண்பதற்கு ஆண்டவர் கீழே இறங்கி வந்தார். 


அப்பொழுது ஆண்டவர்,


″இதோ! மக்கள் ஒன்றாக இருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் ஒரே மொழி பேசுகின்றனர். எனவே அவர்களின் இந்த செயலை நிறுத்த [அல்ல விட்டால் அவர்கள் எல்லோரும் சொர்க்கம் வந்து விடுவார்கள்?]  நாம் கீழே போய் அங்கே ஒருவர் மற்றவரின் பேச்சைப் புரிந்து கொள்ள முடியாத படி, அவர்கள் மொழியில் குழப்பத்தை உண்டாக்குவோம்″


என்றார். [ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஆண்டவனுக்கே பொறுக்கவில்லை ?, ஏன் ??, இதைத்தான் அரசும் சிறுபான்மை மக்களை ஆள கையாளும் தந்திரம் கூட இன்று, ஆண்டவன் போதித்த பாடம் அல்லவா ???]  


அப்படியாயின் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள மாட்டார்கள். எனவே ஒன்றாக வேலை செய்ய முடியாது. அவர்கள் கட்டுவதைக் கைவிட்டு சிதறுண்டு போவார்கள் என்றார். 


ஆகவே அது ″பாபேல்″ [“தாறுமாறு” என்பது அதன் பொருள் / Babel] என்று வழங்கப் பட்டது. ஏனெனில் அங்கே ஆண்டவர் உலகெங்கும் வழங்கி வந்த மொழியில் குழப்பத்தை உண்டாக்கினார். அங்கிருந்து அவர்களை ஆண்டவர் உலகம் முழுவதிலும் சிதறுண்டு போகச் செய்தார். (Genesis 11:5–8  / தொடக்க நூல் 11:5-8). 


இதில் இந்த ஆண்டவர் யார் ??


தனது முதலாவது வாக்கினை தமிழரசுக்கட்சியின் தீர்மானத்திற்கமைவாகவும் 

இரண்டாவது வாக்கை பொது வேட்பாளருக்கு 

மூன்றாவது வாக்கினை ரணில் விக்ரமசிங்கவிற்கும் அளித்துள்ளதாக

தமிழரசுக்கட்சி (ITAK) கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) வாக்களித்தபின் கூத்தாடினார் ??


சுமந்திரனோ 


இப்போதைய ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எம்மால் பரிசீலிக்கப்பட்ட மூன்று பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் எதுவும் எமது அடிப்படை அரசியல் கோரிக்கைகளை முழுமையாக உள்ளடக்கவில்லை என்பதைக் கருத்தில் கொள்கிறோம்.

 

இந்த விஞ்ஞாபனங்களின் அடிப்படையில் எமது தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயம் என்ற எமது அடிப்படைக் கோட்பாடுகளில் எந்தவித விட்டுக்கொடுப்பும் இல்லாத வகையில் ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் விஞ்ஞாபனம் ஒப்பீட்டு ரீதியில் ஓரளவு திருப்தியாகக் காணப்படுகின்றது.


அது என்ன ஒப்பீட்டு ரீதி?


வெள்ளம் மூக்குக்கு மேலே கொஞ்சம் போனால் என்ன? கூட போனால் என்ன ? இரண்டும் ஒரே விளைவுதானே?? பிறகு ஏன் இந்த கூத்து ???


கஜேந்திரகுமார் தேர்தல் பதவியை கையில் வைத்துக்கொண்டு 
தேர்தல் பகிஷ்கரிப்பு என்ற ஒரு கூத்து ??


முடிவில் 


இன்று சிதைந்தது போனது  தான் மிச்சம் !!


இதில் இந்த ஆண்டவர் யார் ??

 

இதில் இவர்களா ? இல்லை வேறு யாராவதா ??

ஒற்றுமை காணா இந்த தருணத்தில் பொது வேட்ப்பாளர் தேவையானதா ???

அல்லது வேறு நோக்கமா ???? 

 

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]

460862727_10226311325192289_8893359889061951851_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=fCd1kNOmVRMQ7kNvgEapcPw&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=Au4vH1XP82jwXu__0A9nzPN&oh=00_AYCHRoVHxk6IarlopZSHnT-5srS6cSLGibSfy8l1NL_ysg&oe=66F5BFA8 460927166_10226311325072286_876620121368093055_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=7KL3Q0EdTjQQ7kNvgGQr3BI&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=Au4vH1XP82jwXu__0A9nzPN&oh=00_AYDp28MsNG4Av8vA5LDmF3tj1nRy4y55sZDLZEhqwlFeBw&oe=66F5BAB2 

460960383_10226311325392294_4506421656385152419_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=hOUIvT9qX5EQ7kNvgF6_Q-u&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=Au4vH1XP82jwXu__0A9nzPN&oh=00_AYALmY_3t9g8RJ5joriM58Uu0IFq23171YXm2OADb3N-OA&oe=66F5BEFF


 

Edited by kandiah Thillaivinayagalingam

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.