Jump to content

சட்டமொழுங்கை பேணுவதற்கும் பொலிஸார் மீது பொதுமக்களிற்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் துரித நடவடிக்கைகள் - விஜித ஹேரத்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
25 SEP, 2024 | 02:09 PM
image
 
சட்டமொழுங்கை பேணுவதற்கும் பொலிஸார் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொதுமக்க்ள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் உறுதியளித்துள்ளார்.

பொலிஸார் அரசியல் தலையீடுகள் இன்றி சுதந்திரமாக செயற்படுவதற்கான சூழல் உடனடியாக உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கடமைகளை இன்று உத்தியோகபூர்வமாக பதவியேற்ற பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டினை வழங்குவதே தனது அமைச்சு எதிர்கொண்டுள்ள முக்கியமான பிரச்சினை என தெரிவித்துள்ள  அவர் கடவுச்சீட்டு விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என  தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டிற்காக மக்கள் நீண்டவரிசையில் காத்திருக்கவேண்டிய நிலைக்கு முடிவு காண்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன,ஒக்டோபர் 15 முதல் 20 திகதிக்குள் புதிய கடவுச்சீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும்,அந்த காலத்திற்குள் இந்த விடயத்திற்கு தீர்வை காண விரும்புகின்றேன்,என அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் மீதான பொதுமக்கள் நம்பிக்கை குறைவடைந்துள்ளதை ஏற்றுக்கொண்டுள்ள அவர் நம்பிக்கையை மீள கட்டியெழுப்பவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

சட்டமொழுங்கை நடைமுறைப்படுத்தும்போது செய்த தவறுகளை சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் திருத்திக்கொள்ளவேண்டும், என விஜித ஹேரத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சட்டமொழுங்கை நடைமுறைப்படுத்துவதில் பொலிஸாருக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்குவேன் எந்த அரசியல் தலையீடும் இருக்ககூடாது அரசாங்க அமைச்சர்கள்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பொலிஸ் உயர் அதிகாரிகளை தொடர்புகொள்ள மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/194762

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஏராளன் said:

நல்ல விடயம்    வரவேற்கப்படுகின்றன… வாழ்த்துக்கள்    🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவல்துறை நியமனங்கள் தொடர்பில் அநுர அரசாங்கத்தின் தீர்மானம்

காவல் நிலைய கட்டளைத் தளபதிகள் நியமனத்தில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் தலையிட மாட்டார்கள் என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொது பாதுகாப்பு அமைச்சில் இன்று (25) காலை பொறுப்பேற்ற பின்னர் விஜித ஹேரத் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, கடந்த ஆட்சியாளர்கள் பின்பற்றிய அரசியல் கலாசாரத்தை அவர்கள் மாற்றுவார்கள் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

காவல்துறையினரின் பொறுப்பு

தற்போதைய அரசாங்கத்தில் அவ்வாறானதொன்று இல்லை என்பதால் பழைய கலாசாரத்தை மாற்றி புதிய கலாசாரம் உருவாக்கப்பட வேண்டும் எனவும், தேசிய மக்கள் சக்திக்கு அரசியல் ரீதியாக நட்பாக உள்ளவர் எவரேனும் தவறாக செயற்பட்டாலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காவல்துறை நியமனங்கள் தொடர்பில் அநுர அரசாங்கத்தின் தீர்மானம் | Anura Govt S Resolution On Police Appointments

”இவ்வாறானதொரு மாற்றத்தை இந்நாட்டு மக்கள் எதிர்பார்த்திருந்தனர், நாட்டு மக்கள் கடந்த காலங்களில் காவல்துறை மீது நம்பிக்கை இழந்திருந்தனர்.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு காவல்துறையினரின் பொறுப்பு என்பதால் அதற்கு இடம் கொடுத்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாகவும் தவறான வழிமுறைகளை அகற்றி அரசியல் தலையீடு இல்லாத காவல்துறை சேவையை உருவாக்க வேண்டும்” எனவும் விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார். 

https://ibctamil.com/article/anura-govt-s-resolution-on-police-appointments-1727256331

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.