Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தியாகி திலீபனின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல்

Vhg செப்டம்பர் 26, 2024
1000340022.jpg

தியாக தீபம் திலீபனின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (26-09-2024) வியாழக்கிழமை தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கிலும், புலம்பெயர் தேசங்களிலும் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

பிரதான நினைவேந்தல் நிகழ்வு யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவுத்தூபியில் இன்று (26-09-2024) முற்பகல் 10.48 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, தொடர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறும்.

1000340023.jpg

இதேநேரம், யாழ். பல்கலைக்கழகம், தீவகம், கிழக்கு மாகாணம் உட்பட வடக்கு, கிழக்கின் பல இடங்களிலும் புலம்பெயர் தேசங்களிலும் திலீபனை நினைவேந்தும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இராசையா பார்த்தீபன் என்ற இயற்பெயரை கொண்ட திலீபன் 1963ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி யாழ்ப்பாணம் - ஊரெழுவில் பிறந்தவர். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் தீவிரமடைந்தபோது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த அவர், இந்திய அமைதிப் படை நாட்டில் நிலைகொண்டிருந்தபோது, 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தார்.

5 அம்சக் கோரிக்கைகள்

மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும், கிழக்கிலும் புதிதாகத் திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிறைக் கூடங்களிலும் இராணுவ - பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட வேண்டும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும், தமிழர் பிரதேசங்களில் புதிதாகப் பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும் என 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி உணவு - நீரைத் தவிர்த்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி முற்பகல் 10.48 மணிக்கு அவர் உயிர்நீத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

https://www.battinatham.com/2024/09/37.html

யாழ். ஊரெழுவில் ஆரம்பித்த தியாக தீபம் ஊர்தி நடைப் பயணம் நல்லூரை அடைந்தது!

AdminSeptember 26, 2024

தியாகதீபம் திலீபன் அவர்களின் 37ஆவது ஆண்டின் இறுதி வணக்க நிகழ்வுகள் இன்றையதினம் 26/09/2024(வியாழக்கிழமை) நல்லூர் நினைவிடத்தில் நடைபெறுகின்றது. முன்னதாக ஊரெழுவில் தியாக தீபம் அவருடைய வீட்டு முற்றத்திலிருந்து இன்று காலை 7.00மணிக்கு நடைபயணம் தியாகதீபத்தின் ஊர்தி பவனியுடன் ஆரம்பமாகியது. 

தொடர்ந்து பல்வேறு பகுதிகளின் ஊடாக சங்கிலியன் சந்தியை அடைந்து நல்லூரான் முன்றிலில் தேங்காய் உடைத்து தீபம் ஏற்றியபின் நல்லூர் தியாக தீபம் நினைவிடத்தைச் சென்றடைந்து அங்கு வணக்க நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

FB_IMG_1727329297459-1024x768.jpg FB_IMG_1727329292682-1024x768.jpg FB_IMG_1727328567046-1024x768.jpg FB_IMG_1727328561123-1024x768.jpg FB_IMG_1727323442868-1-1024x576.jpg FB_IMG_1727323413254-1-1024x576.jpg

FB_IMG_1727323358699-1.jpg
 

https://www.errimalai.com/?p=97124

  • கருத்துக்கள உறவுகள்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் காவடி எடுத்த இளைஞர்கள் (படங்கள் இணைப்பு)

யாழ்.நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், இரு இளைஞர்கள் தூக்கு காவடி எடுத்து, நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து தியாக தீபத்தின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை, சம நேரத்தில் நல்லூர் வடக்கு வீதியில் திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்திலும் அஞ்சலி செலுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2-2.jpg
4.jpg
6.jpg
5.jpg
1-3.jpg
3.jpg
  • கருத்துக்கள உறவுகள்

தியாகி திலீபனின் 37ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள்   

26 SEP, 2024 | 06:28 PM
image
 

தியாக தீபம் திலீபனின் 37ஆவது நினைவேந்தல் இன்று (26) நாட்டின் தமிழர் பகுதிகளில் நடைபெற்றது. 

முல்லைத்தீவு 

முல்லைத்தீவு - கள்ளப்பாடு வடக்கு பகுதியில் அமைந்துள்ள முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் இன்று (26) உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.

மௌன அஞ்சலியுடன் தொடங்கிய இந்நினைவேந்தலில், தியாகி திலீபனின் உருவப்படத்துக்கு மலர் தூவி சுடரேற்றப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்,  சமூக செயற்பாட்டாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோருடன் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். 

IMG-20240926-WA0043.jpg

IMG-20240926-WA0080.jpg

IMG-20240926-WA0136.jpg

IMG-20240926-WA0056.jpg

IMG-20240926-WA0037.jpg

கிளிநொச்சி 

தியாக தீபம் திலீபனின் 37வது நினைவேந்தல்  இன்று (26) காலை 10 மணிக்கு கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்றது. 

இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்  கலந்துகொண்டார். 

IMG_20240926_103855.jpg

IMG_20240926_104058.jpg

IMG_20240926_104324.jpg

IMG_20240926_104822.jpg

வவுனியா 

தியாகி திலீபனின் 37வது நினைவுதினம் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்று (26) அனுஷ்டிக்கபட்டது.  

அவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்திவரும் வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாக அமைந்துள்ள கொட்டகையில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது. 

இதன்போது திலீபனின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி, ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.    

இதன்போது காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் கருத்து தெரிவிக்கையில், 

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கும், தமிழர்களுக்குமான தீர்வு கிடைக்கும் என்பதில் எமக்கு நம்பிக்கை இல்லை. சர்வதேச வழிமுறையூடாகவே எமது பிள்ளைகளை கண்டுபிடிக்க முடியும். நாம் அமெரிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்புக்களை நாடியே எமது போராட்டங்களை முன்னெடுத்து நிற்கிறோம் என்றனர்.

unnamed.jpg

unnamed__2_.jpg

unnamed__1_.jpg

யாழ்ப்பாணம் 

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம் இன்று (26) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

 யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இன்று, தியாகி தீலிபன் உயிர்நீத்த நேரமான காலை 10.48 மணிக்கு அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாயின.

மாவீரர்களின் சகோதரி, முன்னாள் போராளி பொதுச் சுடர் ஏற்றியதை தொடர்ந்து, மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

 1) மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கை தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

 2) சிறைக்கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

 3) அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

 4) ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாக களையப்படவேண்டும்.

 5) தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களை திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

இந்த ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து திலீபன் உயிர்நீத்தார்.

DSC_0945.jpg

DSC_1020.jpg

DSC_0892.jpg

DSC_1003.jpg

மன்னார் 

தியாக தீபம் திலீபனின் 37வது நினைவேந்தல் இன்றைய தினம் வியாழக்கிழமை (26) காலை மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இன்று காலை 10.30 மணியளவில் நினைவேந்தல் இடம்பெற்றது.

இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நினைவேந்தலில் மத தலைவர்கள், சமூக செயற்பாட்டளர்கள் என பலர் கலந்துகொண்டனர். 

DSC_0354.JPG

DSC_0349.JPG

 

DSC_0358.JPG

DSC_0364.JPG

DSC_0368.JPG

DSC_0371.JPG

DSC_0360.JPG

DSC_0374.JPG

அம்பாறை 

தியாக தீபம் திலீபனின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (26) மாலை 5.30 மணியளவில் அம்பாறை மாவட்டத்தில்  அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு  இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் காரைதீவு அலுவலகத்தில்  நடைபெற்றது.

இதன்போது திலீபனின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

தமிழ் அரசு கட்சியின் உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலரும் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டனர்.

thil__3_.jpeg

thil__1_.jpeg

thil__2_.jpeg

https://www.virakesari.lk/article/194825

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலையில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்

Published By: VISHNU   26 SEP, 2024 | 08:17 PM

image

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

a9af412c-b4c9-4766-b621-e38e8d324074.jpg

6129d33f-5fa2-4555-be3a-6a5569252e0b.jpg

703924dc-fb70-4ed4-9deb-71e84afb5d5e.jpg

https://www.virakesari.lk/article/194872

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.