Jump to content

புதிய ஜனாதிபதி நல்லெண்ண சமிக்கையை காட்டினால் மட்டுமே உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவார் என நம்பலாம் - காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஒரு சமிக்கை காட்டினால் மட்டுமே ஜனாதிபதி உண்மையான மாற்றத்தை கொண்டுவந்ததாக கூற முடியும் - வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம்

28 SEP, 2024 | 03:37 PM
image

ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஒரு சமிக்கையை காட்டினால் மட்டுமே உண்மையான மாற்றத்தை கொண்டுவந்தார் என எங்களால் கூற முடியும் என்று வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி சி.ஜெனிற்றா தெரிவித்தார்.

இன்று (28) தனது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், 

யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ளது. இறுதி யுத்தத்தின்போது சிறுவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் செல்வீச்சுக்களினாலும் விமான குண்டு தாக்குதலாலும் உடல் சிதறி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. 

மேலும், இறுதி யுத்தம் முடிவடைந்த  நிலையில் குடும்பம் குடும்பமாக இடம்பெயரும்போது  தங்களது பிள்ளைகளை கையிலே ஒப்படைத்தனர். இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பள்ளி மாணவர்களும் பச்சிளங்குழந்தைகளும் ஆயுதம் ஏந்தி போராடியவர்களா? இவர்களுக்கு என்ன நடந்தது?

கடந்த எட்டு தசாப்த காலமாக பதவி வகித்த எட்டு ஜனாதிபதிகளுக்கே யுத்தத்தை நடாத்திய பொறுப்பு இருக்கிறது. இந்நிலையிலே கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நிகழ்ந்தது என்று தெரியாமல் வீதியிலே போராடிக் கொண்டிருக்கிறோம். ஆட்சியாளர்கள் மாறுகின்றார்கள், ஆட்சியும் மாறுகின்றது. தற்போது மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது என்றாலும் கூட அது எந்த வகையில் எமக்கான மாற்றத்தை தரும் என்பது தெரியாது.

சர்வதேச நீதி நெறிமுறைமையை மட்டுமே நாம் இன்று வரை நம்பியிருக்கின்றோம். குறிப்பாக உள்ளக முறையில் எந்தவித நம்பிக்கையும் இல்லாத காரணத்தினால் நாங்கள் சர்வதேச நீதிப் நெறிமுறைக்காகவே இதுவரை போராடிக்கொண்டிருக்கின்றோம். 

300க்கு மேற்பட்ட தங்களது பிள்ளைகள் எங்கே என்று தெரியாமல் போராடிக்கொண்டிருந்த தாய், தந்தையரை இழந்த நிலையிலும் அவர்களின் ஏக்கத்துக்காகவும் நாம் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கின்றோம்.

இலங்கையில் சர்வதேச சிறுவர் தினத்தை கொண்டாடுபவர்களுக்கு ஒரு வேண்டுகோளினை விடுக்கின்றோம். எமது உறவுகள் எத்தனை பச்சிளம் குழந்தைகளையும், பாடசாலை மாணவர்களையும் இழந்து அவர்கள் மீண்டும் வருவார்களா என்ற ஏக்கத்துடனும் தவிப்புடனும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை  உங்கள் பிள்ளைகளாக நேசியுங்கள்.

எனவே, சர்வதேச சிறுவர் தினமான ஒக்டோபர் முதலாம் திகதியன்று வடக்கு, கிழக்கு தழுவிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க உள்ளோம். 

அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக காலை 10 மணிக்கு இந்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம். எனவே இப்போராட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இலங்கை அரசானது 75 வருடகாலமாக தமிழ் மக்களை ஏமாற்றி இருந்தது. பரம்பரை பரம்பரையாக 08 ஜனாதிபதிகள் மாறி மாறி ஆட்சி செய்திருந்த நிலையிலே எங்களுக்கு எந்தவித மாற்றங்களும் நிகழவில்லை. எனவே, எந்த நிலையிலும் எந்த ஒரு அரசையும் நம்பவில்லை.  காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக  ஜனாதிபதியாக பதவியேற்க முன்னர் குறிப்பிட்டிருந்தார். 

குறிப்பாக, சர்வதேச பொறிமுறையின் ஊடாக உண்மைகளை கண்டறிந்து, குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுக்கொடுத்து மீள் நிகழாமையை உறுதிப்படுத்தும் நிலையில் புதிய ஜனாதிபதியை பற்றி யோசிக்க முடியும்.

எந்த ஜனாதிபதி வந்தாலும் எமக்கான தீர்வு கிடைக்கப் பெற வேண்டும் என்பதையே சர்வதேசத்திடம் கேட்டுக்கொள்கிறோம். எனவே, புதிய ஜனாதிபதி ஏதாவது ஒரு சமிக்கையை காட்டினால் மட்டுமே உண்மையான மாற்றத்தை கொண்டுவந்தார் என எங்களால் கூற முடியும் என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/194991



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.