Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

👆 Thank God, I have not been so ruthless as the guy above in dealing with relatives. I seem to be fair enough 👇

 

 

Edited by சுப.சோமசுந்தரம்
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்களின் 'நட்பென்ன உறவென்ன!' என்னும் அந்தப் பதிவை வாசித்தேன். மிகவும் அருமை, 'வாழுங்கள்...', அவர்களால், இவர்களால் உங்களின் வாழ்க்கைகளை தொலைத்துவிடாதீர்கள்...........👍.   

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

சென்ற சனிக்கிழமை நான் மேற்கொண்ட அந்தப் பதிவுக்குப் பின் இன்றுதான் (புதன்கிழமை) 'மெய்யழகன்' படம் எங்கள் ஊர் அரங்கில் பார்த்தேன். படம் பற்றிய எனது சுருக்கமான பார்வை (சுருங்கிய பார்வையல்ல என்று நினைக்கிறேன்) :

        இயக்குநர் பிரேம்குமார் திறமையானவர் என்பதில் ஐயமில்லை. நான் பெரிய முக்கியத்துவம் தராத, என்னால் புரிந்து கொள்ள முடியாத ஒரு உணர்ச்சிப் பெருக்கை நானே ரசித்துப் பார்க்க வைப்பதில் வல்லவர். மசாலாப் படங்களைத் தவிர்த்து ஓரளவு நல்ல படத்தைத் தருகிறார். தமிழில் இப்போதெல்லாம் இவர் போல் சில திறமையான இயக்குநர்கள் தமிழ் ரசிகர்களின் ரசனையைப் பக்குவப்படுத்தித் திருப்ப முயல்வது வரவேற்கத்தக்க ஒன்று.

            நான் படம் பார்க்கச் சென்ற இன்று முதல் சுமார் பதினெட்டு நிமிடங்கள் படத்தைக் கத்திரித்து விட்டார்கள். படத்தின் நீளம் கருதிக் குறைத்ததாகப் பத்திரிக்கைச் செய்தி கூறுகிறது. ஆனால் நேற்று அரங்கில் (வடக்குக் கரோலினாவில்) படம் பார்த்த என் மகள் சொன்ன தகவல் - படத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம், ஈழப்போரில் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் மற்றும் ஆட்சியாளர்களின் அலட்சியம்/துரோகம் இவை பற்றிய உரையாடல்களில் கத்திரி வைக்கப்பட்டுள்ளது என்பது. அப்படியானால் படத்தின் நீளம் கருதியா குறைத்திருப்பார்கள் ? இவை பெரும்பாலும் இந்திய ஒன்றிய அரசின் நெருக்குதலால் நிகழ்ந்திருக்க வேண்டும். ஈழத்தில் இறுதிப் போர் நிகழும் போது கலைஞர் ஆட்சியின் நிகழ்வுகளையும், தற்போது சாம்சங் தொழிலாளர் போராட்டத்தில் இன்றைய மாநில அரசு சாம்சங் நிர்வாகத்திற்கு வக்காலத்து வாங்குவதையும் பார்த்தால், இவர்களும் நெருக்கடி தந்திருக்கலாம். எல்லாம் முதலாளித்துவ அரசுகள்தாமே ! எது எப்படியோ, அனைத்து அடக்குமுறைக்கும் உள்ளாகி மீண்டும் மீண்டும் ஃபீனிக்ஸ் போல் எழுந்து நிற்பதே தமிழினம் என்பதை வரலாறு மட்டுமல்ல, 'மெய்யழகன்' படம் கூட நினைவுறுத்துகிறது.

Edited by சுப.சோமசுந்தரம்
  • Thanks 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.