Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3    29 SEP, 2024 | 06:00 AM

image
 

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இணையவழி ஊடாக உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

452,979 விண்ணப்பதாரர்கள் பங்குபற்றிய இந்த ஆண்டுக்கான சாதாரணதரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,527 நிலையங்களில் நடைபெற்றது.

387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெறுபேறுகளை doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அனைத்து அதிபர்களுக்கும் விண்ணப்பங்களை அனுப்புவதற்கு வழங்கப்பட்ட பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி பரீட்சைப் பெறுபேறுகளின் அச்சிடப்பட்ட நகலை பெற்றுக்கொள்ளும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் வினவ வேண்டுமாயின் 1911 அல்லது 011 2 785 922, 0112 786 616, 011 2 784 208 அல்லது 011 2 784 537 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்கலாம் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/195019

  • கருத்துக்கள உறவுகள்

461397551_954340113372708_53420409205601

நல்ல வேளை 9 Fonseka வரேல்லை. 😂

 

May be an image of 4 people and text

 

461544811_1010535207750889_6236653252650

 

461398566_954487180024668_87538863984783

 

May be an image of 3 people and text

😂 🤣 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள்! நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்றவர்களின் விபரம்

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள்  வெளியாகியுள்ள நிலையில், அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட மாணவர்களின் விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, காலி சங்கமித்தா மகளிர் கல்லூரி மாணவி ஹிருணி மல்ஷா குமாரதுங்க, நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

ஏனைய இடங்கள் 

இரண்டாம் இடத்தை கொழும்பு மியூசியஸ் கல்லூரியின் குலுனி மெட்சரா மற்றும் குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியின் விமன்சா ஜயனதி ரத்னவீர ஆகியோர் பெற்றுக்கொண்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும்,  வெளியாகியுள்ள பெறுபேறுகளின்படி மூன்று மாணவிகள் நான்காம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள்! நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்றவர்களின் விபரம் | Gce Ol Results 2024

கொழும்பு விஷாகா மகளிர் கல்லூரியின் செஷானி செஹங்சா ஜயவர்தன, நுகேகொட அனுலா கல்லூரியின் மெதுகி சமோதி பெரேரா மற்றும் காலி சங்கமித்த மகளிர் கல்லூரியின் நதுன் பமுதிதா ரணவக்க ஆகியோர் நான்காம் இடத்தை பெற்றுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏழாவது இடத்திற்கு நான்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நுகேகொட அனுலா வித்தியாலயத்தைச் சேர்ந்த நெமதினி வொனாரா அதிகாரி, கம்பஹா ரத்னாவலி மகளிர் கல்லூரியின் தத்சரா கவிந்தி, பாணந்துறை ஸ்ரீ சுமங்கல மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த தமாஷி தனஞ்சனா விக்ரமகே மற்றும் மாத்தறை ராகுல வித்தியாலயத்தைச் சேர்ந்த சகுண சதீஷான் சமரவிக்ரம ஆகியோர் ஏழாவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

https://tamilwin.com/article/gce-ol-results-2024-1727593773

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள்! நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்றவர்களின் விபரம்

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள்  வெளியாகியுள்ள நிலையில், அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட மாணவர்களின் விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, காலி சங்கமித்தா மகளிர் கல்லூரி மாணவி ஹிருணி மல்ஷா குமாரதுங்க, நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

ஏனைய இடங்கள் 

இரண்டாம் இடத்தை கொழும்பு மியூசியஸ் கல்லூரியின் குலுனி மெட்சரா மற்றும் குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியின் விமன்சா ஜயனதி ரத்னவீர ஆகியோர் பெற்றுக்கொண்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும்,  வெளியாகியுள்ள பெறுபேறுகளின்படி மூன்று மாணவிகள் நான்காம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள்! நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்றவர்களின் விபரம் | Gce Ol Results 2024

கொழும்பு விஷாகா மகளிர் கல்லூரியின் செஷானி செஹங்சா ஜயவர்தன, நுகேகொட அனுலா கல்லூரியின் மெதுகி சமோதி பெரேரா மற்றும் காலி சங்கமித்த மகளிர் கல்லூரியின் நதுன் பமுதிதா ரணவக்க ஆகியோர் நான்காம் இடத்தை பெற்றுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏழாவது இடத்திற்கு நான்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நுகேகொட அனுலா வித்தியாலயத்தைச் சேர்ந்த நெமதினி வொனாரா அதிகாரி, கம்பஹா ரத்னாவலி மகளிர் கல்லூரியின் தத்சரா கவிந்தி, பாணந்துறை ஸ்ரீ சுமங்கல மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த தமாஷி தனஞ்சனா விக்ரமகே மற்றும் மாத்தறை ராகுல வித்தியாலயத்தைச் சேர்ந்த சகுண சதீஷான் சமரவிக்ரம ஆகியோர் ஏழாவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

https://tamilwin.com/article/gce-ol-results-2024-1727593773

இதில் ஒரு தமிழரும் இல்லைப் போலுள்ளது. 😥
பிரேமதாசவையும், பியதாசவையும் வாசித்து வோட்டு போடத் தெரியாத ஆட்கள் உள்ள இனம் அல்லவா நாம். 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் : வவுனியாவில் சாதனை படைத்த மாணவர்கள்

புதிய இணைப்பு 

2023ஆம் கல்வியாண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகிய நிலையில் வவுனியா மாவட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களின் விபரங்கள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

அந்த வகையில், அதிகஸ்ட பாடசாலையான வவுனியா - சின்னடம்பன் வித்தியாலய மாணவர்கள் இம்முறை வரலாற்றில் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். 

சிறந்த பெறுபேறு 

இதன்படி, குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் செந்தில்குமரன் தமிழருவி என்ற மாணவி 7A, B, C என்ற பெறுபேற்றைப் பெற்று பாடசாலை சமூகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். அத்துடன், இந்த பாடசாலையின் ஏனைய மாணவர்களின் பெறுபேறுகளும் வெளியாகியுள்ளன.

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் : வவுனியாவில் சாதனை படைத்த மாணவர்கள் | O Level Exam Results 2024 In Vavuniya District

இந்த நிலையில், நவரத்தினம் அகலியா - 3A, 3B, 2C, S பெறுபேற்றையும், விவேகானந்தராசா பாவரசன் - A, 3B, 3C, 2S பெறுபேற்றினையும், சிவகுமார் சாருஜன் - A, 3B, 4C, S பெறுபேற்றினையும், வசந்தகுமார் கிந்துஷா - B, 4C, 4S பெறுபேற்றையும்,  திருச்செல்வம் நிலாயினி - 3B, 2C, 3S பெறுபேற்றையும் அன்ரன் செல்வகுமார் சன்சிகா - 2B, 3C, 3S பெறுபேற்றையும் பெற்றுக் கொண்டுள்ளனர். 

முதலாம் இணைப்பு 

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.

அந்தவகையில் வவுனியா (Vavuniya) தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 28 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் விசேட சித்தி பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் ஆ.லோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய (Vavuniya Tamil Madhya Maha Vidyalayam) வரலாற்றில் முதல் தடவையாக இந்த சாதனை நிலை நாட்டப்பட்டுள்ளதாக அதிபர் மேலும் சுட்டிக்காட்டினார்.

சாதனை படைத்த மாணவர்கள் 

இந்தப் பாடசாலை மாணவர்கள் கடந்த காலங்களிலும் அதிகளவான பெறுபேறுகளைப் பெற்று மாவட்டத்தில் முன்னிலை வகித்து வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் : வவுனியாவில் சாதனை படைத்த மாணவர்கள் | O Level Exam Results 2024 In Vavuniya District

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள சாதாரண சாதாரண தர பரீட்சை பெறுபேற்றிலும் 28 மாணவர்கள் விசேட சித்திகளையும் 18 மாணவர்கள் எட்டுப்பாடங்களில் விசேட சித்தியையும் ஒரு பாடத்தில் திறமைச் சித்தியையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அத்துடன் இம்முறை அதிகளவான மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் சித்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/o-level-exam-results-2024-in-vavuniya-district-1727588633#google_vignette

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13,309 பரீட்சார்த்திகள் ஒன்பது ஏ சித்தி; முதல் 10 நிலைகளில் மாணவிகள் முன்னிலையில் - பரீட்சைகள் திணைக்களம்

29 SEP, 2024 | 05:41 PM
image

(இராஜதுரை ஹஷான்) 

13,309 பரீட்சார்த்திகள் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர். 2.12 சதவீதமானோர் ஒன்பது பாடங்களிலும் சித்திகளை பெறவில்லை. முதல் 10 நிலை பெறுபேற்றில் மாணவிகள் முன்னிலையில் உள்ளனர். ஒக்டோபர் 1 முதல் 14 வரை மீள் திருத்தங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். 

பரீட்சை திணைக்களத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது, 

2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரன தரப் பரீட்சை 2024.05.06ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை 3527 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெற்றது. பரீட்சை பெறுபேறுகளை நேற்று (28) நள்ளிரவு வெளியிட்டோம். 

452,979 பேர் பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், 415,454 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றியிருந்தார்கள். முதல் தடவையாக பரீட்சைக்கு தோற்றிய 322,537 பரீட்சார்த்திகளில் 244,228 பரீட்சார்த்திகள் உயர்தர கல்விக்கு தகுதிப் பெற்றுள்ளனர். 

உயர்தர கல்விக்கான சுற்றறிக்கைக்கு அமைய  மொத்த பரீட்சார்த்திகளில் உயர்தர கல்வியை தொடர்வதற்கான அடிப்படை தகைமையை  75.72  சதவீதமானோர் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இம்முறை முன்னேற்றகரமான தன்மை காணப்படுகிறது. 2021ஆம் ஆண்டு உயர்தரத்துக்கான அடிப்படை தகைமையை பெற்றுள்ளவர்களின் வீதம் 74.52 ஆகவும், 2022ஆம் ஆண்டு 74.38 ஆகவும் காணப்பட்டது.   

முதற் தடவையாக பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகளில் 13,309 பேர் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.

2.12 சதவீதமான பரீட்சார்த்திகள் 9 பாடங்களிலும் சித்திபெறவில்லை. ஆகவே 2022ஆம் ஆண்டை காட்டிலும் 2023ஆம் ஆண்டு பெறுபேறுகளின் வீதம் உயர்வடைந்துள்ளது. 

மாகாண மட்டத்திலான முன்னேற்றம் 

உயர்தரத்துக்கு தகுதி பெற்றுள்ள 75.72 சதவீதத்தை காட்டிலும் உயர்வான பெறுபேற்றினை 4 மாகாணங்கள் பெற்றுக்கொண்டுள்ளன. தென் மாகாணம் 78.21 சதவீதத்தை பெற்றுக்கொண்டு முன்னிலையில் உள்ளது. கிழக்கு மாகாணம் 77.36 சதவீதத்தையும், மேல் மாகாணம் 77.11 சதவீதத்தையும், சப்ரகமுவ மாகாணம் 76.54 சதவீதத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.

மாவட்ட மட்டத்திலான முன்னேற்றம் 

75.72 சதவீத பெறுபேற்றை காட்டிலும் உயரளவிளவான பெறுபேற்றை 11 மாவட்டங்கள் பெற்றுக்கொண்டுள்ளன. இதற்கமைய அம்பாறை மாவட்டம்  81.13 சதவீதத்தையும், மாத்தறை மாவட்டம் 80.57 சதவீதத்தையும், கொழும்பு மாவட்டம் 79.68 சதவீதத்தையும், மட்டக்களப்பு மாவட்டம் 78.86 சதவீதத்தையும், ஹம்பாந்தோட்டை மாவட்டம் 77.92 சதவீதத்தையும், கண்டி மாவட்டம் 76.91 சதவீதத்தையும், கேகாலை மாவட்டம் 76.87 சதவீதத்தையும், காலி மாவட்டம் 76.54 சதவீத்தையும், இரத்தினபுரி மாவட்டம் 76.24 சதவீதத்தையும், மன்னார் மாவட்டம் 76.24 சதவீதத்தையும், கம்பஹா மாவட்டம் 75.81 சதவீதத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது. 

முதல் 10 நிலைகள்  

ஒன்பது பாடங்களில் 6 கட்டாய பாடங்களில் பெற்றுக்கொண்ட புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு முதல் 10 நிலைகள் தீர்மானிக்கப்படும். இதற்கமைய இம்முறை முதல் நிலை ஒன்றும், 2 ஆம் நிலைகள் இரண்டும், 4ஆம் நிலைகள் மூன்றும், 7ஆம் நிலைகள் நான்கும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 

இதற்கமைய காலி சங்கமித்தை மகளிர் கல்லூரி மாணவியான ஹிருணி மல்ஷா குமாதுங்க முதல் நிலையை பெற்றுக்கொண்டுள்ளார். கொழும்பு மியுசியஸ் வித்தியாலத்தின் மாணவி மெத்சலா, குருநாகல் மலியதேவி மகளிர் வித்தியாலய மாணவி விமங்ஸா ஜயநதி ரத்னவீர முறையே இரண்டாம் நிலைகளை பெற்றுக்கொண்டுள்ளனர். 

நான்காம் நிலையை கொழும்பு விசாகா பாடசாலை மாணவி செஸ்யானி ஜயவர்தன, நுகேகொட அனுலாதேவி வித்தியாலய மாணவி சமோதி பெரேரா, காலி சங்கமித்தை மகளிர் கல்லூரி மாணவி நதுனி பமுதிதா ஆகியோர் பெற்றுக்கொண்டுள்ளனர். 

ஏழாம் நிலையை நுகேகொட அனுலாதேவி பாடசாலை மாணவி நிமநதி வனசரா அதிகாரி, கம்பஹா ரத்னதேவி மகளிர் கல்லூரி மாணவி தக்சரா காவிந்தி, பாணந்துறை ஸ்ரீ சுமங்கல மகளிர் கல்லூரி மாணவி தனஞ்சனா விக்கிரமகே ஆகியோர் பெற்றுக்கொண்டுள்ளனர். 

அதேபோல் 7ஆம் நிலையை மாத்தறை ராஹூல வித்தியாலயத்தின் மாணவன் சஷிரான் சமரவிக்கிரம பெற்றுக்கொண்டுள்ளார். முதல் 10 நிலைகளில் 9 நிலைகளை மாணவிகள் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

வினாத்தாள் மீள்திருத்த விண்ணப்பம் 

பரீட்சார்த்திகள் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை நிகழ்நிலை முறைமை ஊடாக மீள் திருத்தத்துக்கு விண்ணப்பிக்க முடியும்.

https://www.virakesari.lk/article/195080

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். இந்து கல்லூரியில் 52 மாணவர்களுக்கு 9A

2023 ஆம் ஆண்டுக்கான ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 52 மாணவர்கள் 9 பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர்.

தமிழ் மொழி மூலம் 28 மாணவர்களும், ஆங்கில மொழி மூலம் 24 மாணவர்களும் இவ்வாறு ‘A’ சித்தி பெற்றுள்ளனர்.

அத்துடன் 62 மாணவர்கள் 8 பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர்.

அதேவேளை, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் 32 மாணவர்கள் 9 பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர்.

தமிழ் மொழி மூலம் 17 மாணவர்களும், ஆங்கில மொழி மூலம் 15 மாணவர்களும் இவ்வாறு ‘A’ சித்தி பெற்றுள்ளனர்.

அத்துடன் 28 மாணவர்கள் 8 பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர்.

பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையில் 26 மாணவிகள் 9 பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர்.

இந்தப் பாடசாலையில் 19 மாணவிகள் 8 பாடங்களிலும் Aசித்தி பெற்றுள்ளனர்.

https://thinakkural.lk/article/310094

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேம்படியில் 114 மாணவிகளுக்கு 9A சித்திகள்

30 SEP, 2024 | 12:17 PM
image

வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் 114 மாணவிகள் ஒன்பது பாடங்களிலும் A தர சித்தி பெற்றுள்ளனர். 

அதேவேளை, யாழ். இந்துக் கல்லூரியில் 52 மாணவர்களும், யாழ். இந்து மகளிர் கல்லூரியில் 17 மாணவிகளும், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் 08 மாணவர்களும், உடுவில் மகளிர் கல்லூரியில் 06 மாணவிகளும், யாழ் . மத்திய கல்லூரியில் 02 மாணவர்களும் 9A தர சித்தி பெற்றுள்ளனர். 

யாழ்ப்பாணத்தில் மேலும் பல பாடசாலைகளிலும் மாணவர்கள் 9A தர சித்திகளை பெற்றுள்ளனர்.

https://www.virakesari.lk/article/195115

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாதாரண தர பரீட்சை : தேசிய மட்டத்தில் சாதனை படைத்த கிழக்கு மாகாணம்

2023ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் வரலாற்றில் முதல் முறையாக கிழக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் 2ம் இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.

தேசிய மட்டத்தில் 6ஆம் இடத்தில் இருந்து 2ஆம் இடத்திற்கு முன்னேறியமை வரலாற்று சாதனை என்பதோடு இதற்கு மாணவர்களின் கடின உழைப்பும் கிழக்கு மாகாணத்தின் புதிய சிறந்த கல்விக் கொள்கையுமே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையில் 58 மாணவர்கள் 9 பாடங்களிலும் விசேட சித்திகளைப் பெற்றுள்ளனர்.

சிறந்த பெறுபேறு 

இந்த மாவட்டத்தில் அதிகமான 9 விசேட சித்தி பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கொண்ட பாடசாலையாக மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை பாராட்டைப் பெற்றுள்ளது.

சாதாரண தர பரீட்சை : தேசிய மட்டத்தில் சாதனை படைத்த கிழக்கு மாகாணம் | Gce Ol Exam Results 2024 Eastern Province 2Nd Plac

அத்துடன் இந்தப் பாடசாலையில் 25 மாணவர்கள் 8 பாடங்களில் விசேட சித்தி பெற்றுள்ளதோடு 13 மாணவர்கள் 7 பாடங்களில் விசேட சித்திகளையும் பெற்றுள்ளனர்.

கௌரவிப்பு நிகழ்வு

இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும், வின்சென்ட் மகளிர் கல்லூரிக்கும் பெருமை தேடித்தந்த மாணவிகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு  பாடசாலை அதிபர் உதயகுமார் தவத்திருமகளின் தலைமையில் இடம்பெற்றது.

சாதாரண தர பரீட்சை : தேசிய மட்டத்தில் சாதனை படைத்த கிழக்கு மாகாணம் | Gce Ol Exam Results 2024 Eastern Province 2Nd Plac

இக்கௌரவிப்பு நிகழ்வில் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் பாரதி கென்னடி, மட்டக்களப்பு கல்வி வலய நிர்வாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் சாமினி ரவிராஜ், கல்வி அபிவிருத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான நிதர்ஷனி மகேந்திரகுமார், மற்றும் பாடசாலை பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Gallery

Gallery

https://ibctamil.com/article/gce-ol-exam-results-2024-eastern-province-2nd-plac-1727774428

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.