Jump to content

வடக்கு, கிழக்கில் ஊழலற்ற அரசியலை முன்னெடுக்க நாங்கள் போராடுவோம் - கே.இன்பராசா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
28 SEP, 2024 | 05:59 PM
image

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள முன்னாள் போராளிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் ஆதரவாளர்கள் மக்களின் அனுசரணையுடன் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி சுயேட்சையாக வடக்கு, கிழக்கில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கே.இன்பராசா தெரிவித்தார்.

மன்னாரில் இன்று சனிக்கிழமை (28) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது அதிகூடிய சிங்கள மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியினர் சுயேட்சையாக போட்டியிடவுள்ளோம்.

தமிழ் மக்கள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இந்த தேர்தல் குறித்து நாங்கள் உங்களைத் தேடி வருவோம். எங்களுக்குப் பூரண ஆதரவை வழங்க வேண்டும். வடக்கு, கிழக்கு மக்களுக்காக நாங்கள் எங்கள் உயிரையே அர்ப்பணித்தோம். அங்கவீனமாக்கப்பட்டுள்ளோம். அனாதரவாக்கப்பட்டுள்ளோம். எனவே முன்னாள் விடுதலைப்புலிகள் ஆகிய நாங்கள் இத்தேர்தலில் களமிறங்கவுள்ளோம்.

தற்போதைய ஜனாதிபதியின் ஊழல் அற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை போல் வடக்கு, கிழக்கில் ஊழலற்ற அரசியலை முன்னெடுக்க நாங்கள் போராடுவோம்.

மன்னார் மாவட்ட முன்னாள் விடுதலைப்புலிகளும் எங்களுடன் இணைந்துள்ளனர். எனவே, தமிழ் மக்களும் எங்களுக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார். 

https://www.virakesari.lk/article/195010

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கருத்துக்களத்தில் உள்ள தமிழ்த்தேசிய தூண்கள் இவர்களுக்கு ஆதரவு அளிப்பார்களா என அறிய ஆவல்.

சுரேஸ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன் தொடக்கம் விநாயக மூர்த்தி முரளிதரன், பிள்ளையான் வரை அரசியலில் ஈடுபடலாம் என்றால் இவர்களுக்கு அரசியலில் கிடைக்கக்கூடிய இடம், பெறப்படக்கூடிய இடம் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நியாயம் said:

யாழ் கருத்துக்களத்தில் உள்ள தமிழ்த்தேசிய தூண்கள் இவர்களுக்கு ஆதரவு அளிப்பார்களா என அறிய ஆவல்.

சுரேஸ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன் தொடக்கம் விநாயக மூர்த்தி முரளிதரன், பிள்ளையான் வரை அரசியலில் ஈடுபடலாம் என்றால் இவர்களுக்கு அரசியலில் கிடைக்கக்கூடிய இடம், பெறப்படக்கூடிய இடம் என்ன?

தற்பொழுது உள்ள அரசாங்கத்திடம் இப்படியானவர்களின் செல்வாக்கு எடுபடுமா? நீங்கள் கூறிய யாவரும் அரசாங்கத்துடன் இணக்க அரசியல் செய்து , அரசுகள் தோல்வியடைந்த பின்பு தமிழ்மக்களின் வாக்கு அரசியலுக்கு வந்தவர்கள்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, putthan said:

தற்பொழுது உள்ள அரசாங்கத்திடம் இப்படியானவர்களின் செல்வாக்கு எடுபடுமா? நீங்கள் கூறிய யாவரும் அரசாங்கத்துடன் இணக்க அரசியல் செய்து , அரசுகள் தோல்வியடைந்த பின்பு தமிழ்மக்களின் வாக்கு அரசியலுக்கு வந்தவர்கள்

 

அரசாங்கத்தை விடுங்கள். மில்லியன் டொலர் கேள்வி என்ன என்றால் நமது தூண்கள் இவர்களை ஏற்றுக்கொள்ளுமா என்பதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

 

அரசாங்கத்தை விடுங்கள். மில்லியன் டொலர் கேள்வி என்ன என்றால் நமது தூண்கள் இவர்களை ஏற்றுக்கொள்ளுமா என்பதுதான்.

சோசலிஸ்ட்கள் இன அடையாளத்தை பெரிதாக எடுக்க மாட்டார்கள் அவர்கள் அபிவிருத்தி,உற்பத்தி என்ற கோசத்தை முன் வைத்து அரசியல் செய்ய முயற்சிப்பார்கள்...அத்துடன் இனங்களின் தனித்துவத்தை அழிக்க முயற்சிப்பார்கள் ...ஆகவே தூண்கள் கொஞ்சம் யோசித்து செயல் பட வேண்டிய கால கட்டம் ..தமிழ்தேசியத்துடன் அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்க வேண்டிய காலம்...

இந்த சோசலிஸ்ட்கள் எவ்வளவு காலம் ஆட்சி செய்வார்களோ தெரியவில்லை...இதன் பின்பு 10 வருடங்களின் பின்பு மீண்டும் நாமல்,அல்லது வேறு யாராவது ஆட்சியை கைப்பற்றினால் எம் மக்களின் அடையாளம் கேள்விகுறியாகும்..

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌ ப‌திவு தாத்தா உண்மை தான் எங்க‌ட‌ போராட்ட‌த்தில் ஜாதி இருந்த‌தில்லை அதோட த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் ஜாதி மெது மெதுவாய் ஈழ‌ ம‌ண்ணில் அழிந்து கொண்டு வ‌ந்த‌து 2009க்கு பிற‌க்கு ஜாதி வ‌ள‌ந்து கொண்டு வ‌ருது த‌மிழ் தேசிய‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் சொகுசு வாழ்க்கை வாழ‌ ப‌ழ‌கின‌வை அவ‌ர்க‌ளுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ளின் நிலை தான் ப‌ரிதாவ‌ நிலை....................... எல்லாம் போலிக‌ள் த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் நேர்மையா செய‌ல் ப‌ட்ட‌வை பின்னைய‌ கால‌ங்க‌ளில் சிங்க‌ள‌வ‌ன் போடும் எலும்பு துண்டை ந‌க்கி கொண்டு வேச‌ம் போட்ட‌வை   என‌க்கு தெரிந்து  த‌மிழ் தேசிய‌ அர‌சிய‌ல் வாதிக‌ள்  எங்க‌ளுக்கு  இதை க‌ட்டி த‌ந்தவ‌ர்க‌ள்  எங்க‌ட‌ வாழ்வாதாரத்துக்கு இதை செய்து த‌ந்த‌வை என்று பொது ம‌க்க‌ள் சொல்லி  நான் கேள்வி ப‌ட‌ வில்லை   ஈழ‌ ம‌ண்ணில் வறுமையின் கீழ் வாழும் மக்களை தூக்கி விட்ட‌தே புல‌ம்பெய‌ர் நாட்டு எம் உற‌வுக‌ள் தான்.................த‌மிழ் தேசிய‌ அர‌சிய‌ல் வாதிக‌ளின் வீடுக‌ள் வாக‌ன‌ங்க‌ள் என்று அவை ந‌ல்ல‌ வ‌ச‌தியாக‌ வாழுகின‌ம்   அனுரா இப்ப‌ தானே ஆட்சிக்கு வ‌ந்து இருக்கிறார் ஊழ‌லை இல்லாம‌ செய்து அவ‌ர் சொன்ன‌ ப‌டியே செய்தால் அவ‌ருக்கு ம‌க்க‌ள் ம‌த்தியில் ஆத‌ர‌வு கூடும்..................நான் சோச‌ல் மீடியாவை அவ‌தானித்த‌ ம‌ட்டில் இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் அனுரா பின்னால் போவ‌த‌ பார்க‌ முடியுது........................   த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ளையும் ந‌ம்ப‌ முடியாது............ஈழ‌த்து அர‌சிய‌ல் வாதிக‌ளையும் ந‌ம்ம‌ முடியாது.............. எல்லாம் ஒட்டையில் ஊறிய மட்டையல்😁😛..........................கிழ‌டு க‌ட்டைய‌ல‌ வீட்டுக்கு அனுப்பி விட்டு😡 இளைஞ‌ர்க‌ளை ஈழ‌ ம‌ண்ணில் அர‌சிய‌லில் செய்ய‌ விட‌னும் அப்ப‌ தான் இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் த‌மிழ‌ர்க‌ளுக்கு ஏதேனும் விடிவு கால‌ம் பிற‌க்கும் தாத்தா🙏...............................
    • டெஸ்ட் வரிசையில்  சிறிலங்கா அணி 3 ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது.
    • சோசலிஸ்ட்கள் இன அடையாளத்தை பெரிதாக எடுக்க மாட்டார்கள் அவர்கள் அபிவிருத்தி,உற்பத்தி என்ற கோசத்தை முன் வைத்து அரசியல் செய்ய முயற்சிப்பார்கள்...அத்துடன் இனங்களின் தனித்துவத்தை அழிக்க முயற்சிப்பார்கள் ...ஆகவே தூண்கள் கொஞ்சம் யோசித்து செயல் பட வேண்டிய கால கட்டம் ..தமிழ்தேசியத்துடன் அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்க வேண்டிய காலம்... இந்த சோசலிஸ்ட்கள் எவ்வளவு காலம் ஆட்சி செய்வார்களோ தெரியவில்லை...இதன் பின்பு 10 வருடங்களின் பின்பு மீண்டும் நாமல்,அல்லது வேறு யாராவது ஆட்சியை கைப்பற்றினால் எம் மக்களின் அடையாளம் கேள்விகுறியாகும்..
    • ஜே.வி.பி காய்ச்சலால் பீடிக்கப்பட்ட  தமிழ் இளைஞர்கள் அவர்களின் இனவாத வரலாற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் சாடல் ------------------------------------------------------ கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் NPP (JVP) ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க வெற்றிபெற்றிருந்த நிலையில் வடக்கில் உள்ள அரசியல் புரிதலற்ற இளைஞர்கள் பலருக்கு ஜே.வி.பி காய்ச்சல் தொற்றியுள்ளமை  குறித்து கவலை வெளியிட்டுள்ள தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் 2000 ஆம் ஆண்டுகளுக்குப் பின் பிறந்த இளைஞர்கள் ஜே.வி.பி  யின் கடந்த கால கசப்பான இனவாத வரலாற்றைக் கற்றறிய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் வெளியிட்டுள்ள வாராந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, 2022 ஆம் ஆண்டு சிறீலங்காவின் ஜனாதிபதியாக இருந்த கோத்தபாய ராஜபக்சவின் தவறான கொள்கைகயைால் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட குழப்பங்களைத் தனக்குச் சாதகமாக்கிய ஜே.வி.பி நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றோம் எனும் கோசத்தோடு தனது கட்சிப் பெயரை தேசிய மக்கள் சக்தி என உருமாற்றம் செய்து மக்கள் மத்தியில் கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டுவந்ததோடு 2024 செப்ரெம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றது. இதன் மூலம் பாாரளுமன்றத்தில் வெறும் மூன்று உறுப்பினர்களை மட்டும் கொண்டிருந்த ஜே.வி.பி கட்சி மாபெரும் வெற்றி பெற்றது. தேர்தலில் வெற்றியடைந்து அனுரகுமார திசாயநாயக்க ஜனாதிபதியாகிய ஒரு சில தினங்களில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தலிற்கு திகதியிடப்பட்டது.  இந்நிலையில் தான் வடக்கு இளைஞர்கள் பலருக்கு ஜே.வி.பி காய்ச்சல் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அரசியல் கட்சிகள் யாவும் பிழையான வழி நோக்கிச் சென்று விட்டதாகவும் அனுரகுமார திசாநாயக்கவே தங்களது மீட்பர் என கூறும் அளவிற்கு 2000 ஆம் ஆண்டுகளுக்குப் பின் பிறந்த இளைஞர்களின் மூளையில் ஜே.வி.பி காய்ச்சல் கடுமையாக தொற்றியிருக்கிறது.  இந்த ஜே.வி.பி காய்ச்சலில் இருந்து 2000 ஆம் ஆண்டுகளுக்குப் பின் பிறந்த இளைஞர்கள் விடுபடவேண்டும் எனில் ஜே.வி.பியின் கடந்த கால வராலற்றைப் படிப்பதன் மூலமே அதிலிருந்து அவர்கள் விடுபட முடியும்.  2001 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறீலங்கா அரசாங்கத்தின் அப்போதய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் போர்நிறுத்த இணக்கப்பாடு ஏற்பட்டு 2002 ஆம் ஆண்டு போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அப்போது போர்நிறுத்தத்தையும் போர் நிறுத்த உடன்படிக்கையையும் கடுமையாக எதிர்த்த ஜே.வி.பி உடனடியாக போர்நிறுத்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்துவிட்டு போரைத் தொடங்கவேண்டும் என வலியுறுத்தி தொடர்ச்சியாக நான்கு நாட்கள் தென்னிலங்கையில் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நடாத்தியது. அந்த ஆர்ப்பாட்டங்களுக்கு வடக்கு இளைஞர்களுக்கு ஜே.வி.பி காய்ச்சல் தொற்றக் காரணமாக இருந்த அனுரகுமார திசாநாயக்கதான் தலைமை தாங்கியிருந்தார் என்பது 2000 ஆம் ஆண்டுகளுக்குப் பின் பிறந்த இளைஞர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தன்னை இடதுசாரித்துவக் கட்சியாகக் காட்டிக்கொண்ட ஜே.வி.பி 1971 ஆம் ஆண்டு கிளர்ச்சியின்போது ஆயுதங்களை மறைத்துவைக்கும் இடங்களாக பௌத்த பிக்குகளில் மடாலயங்களைத் தெரிவுசெய்ததோடு பௌத்த தேசியத்தை வளர்ப்பதன் மூலம் பௌத்த பீடங்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ள முனைந்தது. அத்தோடு சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராக இனவாத அரசியலை வளர்த்ததன் மூலம் சிங்கள இனவாத பௌத்த துறவிகளினது ஆதரவினையும் பெறவும் முனைந்தது.  சர்வதேச நிதி நிறுவனங்களையும், நோர்வேயின் மத்தியஸ்த பாங்கினையும் கடுமையாக விமர்சித்ததோடு சமாதானக் கொள்கைக்கு எதிராக யுத்தத்தினை நடாத்துவதற்கு தனது முழுமையான ஆதரவினை வழங்கியதோடு  2004 ஆம் ஆண்டு சுனாமியினால் ஏற்பட்ட தாக்கத்தினை வைத்தது அரசியல இலாபங்களைப் பெறமுனைந்தது. சுனாமி மீள் கட்டமைப்பிற்காக விடுதலைப் புலிகளுடன் இணைந்து இடைக்காலக் கட்டமைப்பு ஒன்றினை மேற்கொள்ள அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க ஆர்வம் காட்டிய நிலையில் அதனைக் கடுமையாக எதிர்த்து அந்தக் கட்டமைப்பை இல்லாது ஒழித்தது.  கொழும்பில் 1983 ஜூலையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இனக்கலவரத்தினை அடுத்து அக்கலவரத்திற்கு ஜே.வி.பியினரே காரணமெனக் கூறி சிறீலங்கா அரசால் இரண்டாவது தடவையாக ஜே.வி.பி தடைசெய்யப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியினுடைய அரசியற் கொள்கை ஏனைய இடதுசாரிக் கட்சிகளின் அரசியற் கொள்கைகளோடு  ஒத்திருக்கவில்லை.  அவர்கள் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஏனைய இடதுசாரிக் கட்சிகள் முன்வைத்த சமஷ்டிக் கொள்கையினை ஏற்றுக் கொள்ளவில்லை. சமஷ்டிக் கொள்கை நாட்டின் பிரிவினைக்கே வழிவகுக்கும் எனக்  குறிப்பிட்டனர்.  தமது கொள்கையான சோசலிச அரசு என்பது நடைமுறைக்கு வரும் போது எல்லா இன மக்களும் சமத்துவமாக மதிக்கப்படுவதால் இனப்பிரச்சினை என்பதே இல்லாமல் போய்விடும் என இவர்கள் குறிப்பிட்டனர். இதன் அடிப்படையில் ஆட்சிக்குவந்த ஒவ்வொரு அரசாங்கத்தினாலும் முன்வைக்கப்பட்ட தீர்வு யோசனைகளை  அவர்கள் எதிர்த்து வந்தனர்.  இலங்கையில் மிக நீண்டகாலமாக நிலவிவரும் இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள்ளான தீர்வைக்கூட ஏற்க மாட்டோம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறியிருக்கிறார். தமிழ் மக்கள் இந்த நாட்டில் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைப் பிரச்சினையை தன்னுடைய இனவாத ஆதிக்க சிந்தனையின் அடிப்படையில்தான் எல்லாக் கட்சிகளைப் போலவும் ஜே.வி.பி நோக்குகிறது என்பதையும் இன்னும் அந்த நிலைப்பாட்டில்தான் அக்கட்சி இருக்கிறது என்பதையும் இந்தக் கருத்து தெளிவுபடுத்துகிறது. தமிழ் மக்களை இரண்டாம்தரப் பிரசைகளாக நடாத்தி அவர்களுக்கான சம உரிமையை மறுக்கும் சிறீலங்கா ஆட்சி முறையைப் பாதுகாக்கும் ஜே.வி.பி தமிழ் மக்களின் தீர்வு தொடர்பான சிறு முயற்சிகளையையே ஏதாவது காரணம் சொல்லி நிராகரிக்க முயல்வது புதிய விடயமல்ல. “13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு இந்தியா கோரி வருவது தமிழ் மக்களின் நலனை கருத்திற்கொண்டல்ல. இந்தியாவின் பொருளாதார நலன்களை உறுதி செய்து கொள்ளும் நோக்கிலாகும் எனக் கூறிய மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) 2006 ஆம் ஆண்டில் அந்தச் சட்டத்தையும் அதன்பால் இணைக்கப்பட்ட வடகிழக்கையும் நீதிமன்றத்தை நாடி பிரித்தது. அண்மைய காலத்தில் மக்கள் விடுதலை முன்னணி தமிழ் மக்களின் பிரச்சினை, தீர்வு உள்ளிட்ட விடயங்களில் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருவது அக்கட்சி தமது அரசியல் நோக்கங்களுக்காக மாத்திரமே தமிழ் மக்களின் பிரச்சினையை அணுகுகிறது என்பதையும் தொடர்ந்தும் அக்கட்சி இனவாத அடிப்படையில் செயற்படுகிறது என்பதையும் புலப்படுத்துகிறது.  “தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காவிட்டால் மீண்டும்  ஆயுதப் போராட்டம் உருவெடுக்கலாம். ஆனால் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டதால் மீண்டும் ஆயுதப் போராட்டம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை. எனவே நாங்கள் அச்சப்படத் தேவையில்லை ” என தற்போதைய ஜனாதிபதியான மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க 24 அக்டோபர் 2015 நாடாளுமன்றில் நடைபெற்ற ஜெனீவா பிரேணை விவாத்தில் கூறினார். இவ்வாறான நிலைப்பாடுடைய இனவாதம் கக்கும் ஜே.வி.பியைத்தான் மாற்றத்தின் நாயகர்கள் எனக் கொண்டாட முயல்வதோடு தமிழ்த் தேசிய அரசியலில் எழுந்துள்ள குழப்பங்களுக்கு ஜே.வி.பி தான் மாற்றுத் தீர்வு என சிந்திக்க முற்படுவது கோமாளித்தனம் மட்டுமல்ல கோளைத்தனம் என்றும் தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் தனது வாராந்த அறிகையில் கடுமையாகச் சாடியுள்ளது. நன்றி - உரிமை மின்னிதழ் இந்த திரி யுடன் தொடர்புடையது என்பதால் இங்கே பதிகிறேன்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.