Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் புதிய விதிகளால் தோனியின் ஊதியம் குறைய வாய்ப்பு - அடுத்த ஆண்டு விளையாடுவாரா?

ஐபிஎல் புதிய விதிகள், தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 39 நிமிடங்களுக்கு முன்னர்

2025ஆம் ஆண்டு தொடங்க இருக்கும் ஐபிஎல் டி20 தொடரின் 18வது சீசனுக்கான புதிய விதிகளை ஐபிஎல் நிர்வாகக் குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி ஒரு அணி எத்தனை வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம், சர்வதேச கிரிக்கெட் விளையாடாத வீரர்களின் நிலை, அவர்களின் ஊதியம், ஏலத்தில் பங்கேற்று தேர்வான பின் பங்கேற்காத வீரர்களுக்கு தண்டனை விவரம், வீரர்களுக்கான புதிய போனஸ், அணிகளின் கையிருப்பு தொகை அதிகரிப்பு, ஓய்வு பெற்ற வீரர்கள் மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க வாய்ப்பு என்பன உள்பட பல்வேறு மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஐ.பி.எல்.லில் வரும் புதிய விதிகள் சி.எஸ்.கேவைச் சேர்ந்த மூத்த வீரர் தோனிக்கு சாதகமா, பாதகமா? அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் அவர் விளையாடுவாரா?

ஐபிஎல் புதிய விதிகள் என்ன?

2025 - 2027 ஐபிஎல் சீசனுக்கான விதிகள் குறித்து முடிவு செய்ய பெங்களூருவில் நேற்று(செப்டம்பர் 28) ஐபிஎல் நிர்வாகக் குழுக் கூட்டமும், அணி உரிமையாளர்களுடன் ஐபிஎல் நிர்வாகிகள் ஆலோசனையும் நடந்தது. இந்த ஆலோசனைக்குப் பின் புதிய விதிகள் குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

1. ஐபிஎல் தொடரில் உள்ள 10 அணிகளும் தங்களின் அணி வீரர்கள் பட்டியலில் 6 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். அதனை தக்கவைப்பு அல்லது ஆர்டிஎம் விதியின் மூலம் நடைமுறைப்படுத்தலாம்.

2. இந்த தக்கவைப்பு பட்டியலில் அதிகபட்சமாக 5 சர்வதேச வீரர்கள் (உள்நாடு மற்றும் வெளிநாட்டு வீரர்கள்) இருக்கலாம். அதிகபட்சமாக 2 சர்வதேச கிரிக்கெட் ஆடியிராத (அன்கேப்டு) வீரர்கள் இருக்கலாம்.

3. ஐபிஎல்-2025 ஏலத்தின் போது அணிகளின் கையிருப்புத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. 2024 சீசனின் போது அணி ஏலத்தொகை மற்றும் ஊக்கத்தொகை என ரூ.110 கோடி இருந்தது. இனிவரும் சீசனில் ஏலத்தொகை, ஊக்கத்தொகை மற்றும் போட்டி ஊதியம் எனச் சேர்க்கப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டில் ரூ.146 கோடியும், 2026 சீசனில் ரூ.151 கோடியாகவும், 2027 சீசனில் ரூ.157 கோடியாகவும் உயர்த்தப்படும்.

4. ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக போட்டி ஊதியம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம்பாக்ட் ப்ளேயர் உள்பட விளையாடும் அனைத்து வீரர்களுக்கும் ஒவ்வொரு போட்டியின் போதும் ரூ.7.50 லட்சம் வழங்கப்படும். இந்தத் தொகை ஒப்பந்த தொகையுடன் சேர்த்து வழங்கப்படும்.

ஐபிஎல் புதிய விதிகள், தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா

5. வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க வேண்டுமானால் கட்டாயமாக தங்களைப் பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை வெளிநாட்டு வீரர் பதிவு செய்யாமல் இருந்தால், அந்த வீரர் நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாட தகுதியற்றவராக கருதப்படுவார்.

6. ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்த எந்த வீரரும், ஏலத்தில் ஒரு அணியால் வாங்கப்பட்டபின், சீசன் தொடங்குவதற்கு முன்பாக தங்களால் விளையாட முடியாத நிலை இருப்பதாக அறிவிக்க நேர்ந்தால், அந்த வீரர் அந்தத் தொடரும் அடுத்து வரும் 2 ஐபிஎல் சீசனிலும் ஏலத்தில் பங்கேற்கத் தடை விதிக்கப்படும்.

7. கேப்டு இந்திய வீரர் “அன்கேப்டு வீரராக” மாற முடியும். அதாவது சர்வதேச போட்டிகளில் பங்கேற்று அனுபவமுள்ள, ஓய்வு பெற்ற ஒரு வீரர் கடந்த 5 ஆண்டுகளாக இந்திய அணியின் டெஸ்ட், ஒருநாள், மற்றும் டி20 அணியில் பங்கேற்காமல் இருந்தால், பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்தில் இடம் பெறாமல் இருந்தால் அவர் “அன்கேப்டு வீரராக” மாறுவார். இந்த விதி இந்திய வீரர்களுக்கு மட்டுமே செல்லும்.

8. இம்பாக்ட் ப்ளேயர் விதிமுறை 2027 ஐபிஎல் சீசன் வரை தொடரும்.

 

புதிய விதிகள் தோனிக்கு சாதகமாக அமையுமா?

ஐபிஎல் புதிய விதிகள், தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2020ம் ஆண்டு இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார்

கேப்டு வீரர்களை “அன்கேப்டு வீரராக” கருதலாம் என்ற விதிமுறையை ஐபிஎல் நிர்வாகக் குழு கொண்டுவந்த போது அதை பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளதாக கிரிக்இன்போ இணையதளம் தெரிவித்துள்ளது. மூத்த வீரர்கள் ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆன பின் அவர்களை அன்கேப்டு வீரர்களாகக் கருதுவது அவர்களை அவமதிப்பு செய்வதாகும் என்று சன்ரைசர்ஸ் அணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

அது மட்டுமல்லாமல் கேப்டு வீரராக இருந்து அதிக ஊதியம் பெற்று ஐபிஎல் தொடரில் விளையாடிய மூத்த வீரர் அன்கேப்டு வீரராக குறைந்த ஊதியம் எவ்வாறு பெறுவார் என்றும் நிர்வாகிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனாலும் இந்த விதியை ஐபிஎல் நிர்வாகக்குழு மீண்டும் கொண்டு வந்துள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டு இந்த விதிமுறை கொண்டுவரப்பட்டது, ஆனால், இதில் எந்த வீரரும் தேர்ந்தெடுக்கப்படாததால் 2021-ஆம் ஆண்டு சீசனில் இந்த விதி நீக்கப்பட்டது. இப்போது 3 ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த அன்கேப்டு விதிமுறையால், கடந்த 5 ஆண்டுகளாக எந்த சர்வதேச போட்டியிலும், இந்திய அணியின் எந்தப் பிரிவிலும், மத்திய ஒப்பந்தத்திலும் இடம் பெறாத மூத்த வீரர் அன்கேப்டு வீரராகக் கருதப்படுவார். இந்த விதிமுறை முக்கியமாக சிஎஸ்கேயின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை தக்கவைக்கவே கொண்டுவரப்பட்டுள்ளதாக கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர்.

தோனி ஊதியம் குறைய வாய்ப்பு - அடுத்த ஆண்டு விளையாடுவாரா?

ஐபிஎல் புதிய விதிகள், தோனி

பட மூலாதாரம்,SPORTSPICZ

படக்குறிப்பு, கடந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டார்.

2022ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தின் போது ரூ.12 கோடிக்கு எம்எஸ் தோனியை சிஎஸ்கே அணி தக்கவைத்தது. 2020ம் ஆண்டு இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார், வரும் ஜூலை மாதத்தோடு அவருக்கு 43 வயது பிறக்கிறது. தோனி கடந்த 5 ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பெறாமல், மத்திய ஒப்பந்தத்திலும் இடம் பெறாமல் இருப்பதால் “அன்கேப்டு வீரராக” அவரை மாற்ற சிஎஸ்கே அணி முடிவு செய்யலாம்.

அன்கேப்டு வீரராக தோனியை சிஎஸ்கே நிர்வாகம் தேர்வு செய்தால் அவருக்கான அதிகபட்ச ஊதியம் ரூ.4 கோடியாகக் குறையும். ரூ.12 கோடி ஊதியத்திலிருந்து தோனிக்கு ரூ.8 கோடி குறையும். கடந்த 2023ம் ஆண்டு சீசனுக்கு பின் முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டு கடந்த சீசனில் தோனி விளையாடினார். சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டார்.

அப்போது தோனி அளித்த பேட்டியில் “என் எதிர்காலம் குறித்து முடிவு செய்ய ஐபிஎல் தக்கவைப்பு விதிமுறையில் செய்யப்படும் மாற்றத்தைப் பார்த்துவிட்டு முடிவு செய்யும்” எனத் தெரிவித்திருந்தார். இப்போது புதிய விதிகள் வந்துள்ளதால், தோனியை அன்கேப்டு வீரராக களமிறக்க சிஎஸ்கே முடிவு செய்யலாம்.

மேலும், கடந்த 5 ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பெறாமல், மத்திய ஒப்பந்தத்திலும் இல்லாத ஓய்வு பெற்ற பல இந்திய வீரர்கள் ஏலத்தில் இடம் பெறவும் வாய்ப்புண்டு. குறிப்பாக யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் மீண்டும் ஏலத்தில் எடுக்கப்படலாம்.

 
ஐபிஎல் புதிய விதிகள், தோனி

பட மூலாதாரம்,SPORTSPICZ

வீரர்கள் காயத்தால் விலகினால் என்ன ஆகும்?

ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் அவர் சார்ந்திருக்கும் அணி மாற்று வீரரை 7-வது போட்டி முடிவதற்குள் அறிவிக்கலாம் என்று கடந்த சீசன் வரை நடைமுறையில் இருந்தது. புதிய விதிமுறையின்படி, 2025 ஐபிஎல் சீசனில் மாற்று வீரரை 12வது போட்டி முடிவதற்குள் அறிவிக்க வேண்டும் என நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

தக்கவைப்பு முறையிலும் புதிய மாற்றம்

ஐபிஎல் புதிய விதிகள், தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2025 சீசனில் ஒரு அணி அதிகபட்சமாக 5 கேப்டு வீரர்களை தக்கவைக்கலாம் (புகைப்படத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் ஷர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா)

வீரர்களைத் தக்கவைப்பு முறையிலும் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. 2025 சீசனில் ஒரு அணி அதிகபட்சமாக 5 கேப்டு வீரர்களை தக்கவைக்கலாம், அதிகபட்சமாக 2 அன்கேப்டு வீரர்களைத் தக்கவைக்கலாம். இதில் முதல் 3 வீரர்களைத் தக்க வைக்கும்போது அந்த வீரர்களுக்கான தொகை ரூ.18, ரூ.14, ரூ.11 கோடி என ஏலத் தொகை இருப்பிலிருந்து (பர்ஸ்) கழிக்கப்படும். அதன்பின் அடுத்த 2 வீரர்களுக்கு ரூ.18 மற்றும் ரூ.14 என கழிக்கப்படும். அன்கேப்டு வீரர் ஒருவருக்கு ரூ.4 கோடி கழிக்கப்படும், 2 அன்கேப்டு வீரர்களைத் தக்கவைத்தால் ரூ.8 கோடி பர்ஸிலிருந்து கழிக்கப்படும்.

2025 சீசனில் ஊதிய முறை

ஐபிஎல் வரலாற்றில் வீரர்களுக்கு முதல்முறையாக ஊதிய முறையை ஐபிஎல் நிர்வாகம் 2025 ஐபிஎல் சீசனில் கொண்டு வருகிறது. இதன்படி ஒர் அணியில் உள்ள 12 வீரர்களுக்கும் போட்டி ஒவ்வொன்றுக்கும் ரூ.7.50 லட்சம் ஊதியமாக வழங்கப்படும். இந்த ஊதியத் தொகைக்காக ஒவ்வொரு அணிக்கும் தனித்தனியாக ரூ.12.60 கோடி வழங்கப்படும். ஒரு வீரர் சீசனில் உள்ள அனைத்துப் போட்டிகளிலும் விளையாடினால் ஒப்பந்த தொகையை விட கூடுதலாக ரூ.1.05 கோடி கிடைக்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • Replies 114
  • Views 4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    டூ பிலஸ்சிய‌ விட‌  தென் ஆபிரிக்காவில் ந‌ல்ல‌ இள‌ம் வீர‌ர்க‌ள் இருக்கின‌ம் அவ‌ர்க‌ளை ஏல‌த்தில் எடுக்க‌லாம்   40வ‌ய‌தை தாண்டின‌வ‌ர்க‌ள் ஓய்வை அறிவிப்ப‌து ந‌ல்ல‌ம் இள‌ம் வீர‌ர்க‌ளுக்க

  • ஏராளன்
    ஏராளன்

    சுனில் நரைன் பேட்டால் ஸ்டம்பை உரசியும் கூட அவுட் கொடுக்கப்படாதது ஏன்? முதல் ஆட்டத்திலேயே சர்ச்சை பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்க

  • ஏராளன்
    ஏராளன்

    ஒரேபோட்டியில் குவிக்கப்பட்ட 528 ரன்கள் ! இஷான் கிஷன் சதத்துடன் ஹைதராபாத் அமர்க்கள ஆரம்பம் பட மூலாதாரம்,SUNRISERSHYDERABAD/X PAGE படக்குறிப்பு, 45 பந்துகளில் முதல் ஐபிஎல் சதத்தை அடித்தார் இஷான் கிஷன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு போட்டியிலும் விளையாடும் வீரர்களுக்கு தலா ரூ 7.5 லட்சம் வழங்கப்படும்

2025ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் இந்திய வீரர்களுக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை போனஸ் தொகையாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜெய்ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஐபிஎலில் நிலைத்தன்மை மற்றும் சாம்பியன், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர்களை கொண்டாடும் ஒரு வரலாற்று நடவடிக்கையாக, கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு ஆட்டத்திற்கு 7.5 லட்ச ரூபாய் போட்டிக் கட்டணத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஒரு சீசனில் அனைத்து லீக் போட்டிகளிலும் விளையாடும் கிரிக்கெட் வீரர், அவர் ஒப்பந்தம் செய்த தொகைக்கு கூடுதலாக 1.05 கோடி ரூபாய் பெறுவார். ஒவ்வொரு அணியும் சீசனுக்கான போட்டிக் கட்டணமாக 12.60 கோடி ரூபாயை ஒதுக்கும். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் வீரர்கள் மற்றும் அணிகள் அதிக வருவாயை ஈட்டுவர்” என்று ஜெய்ஷா பதிவிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/310058

  • கருத்துக்கள உறவுகள்

ஜ‌பிஎல் செய்திக‌ள் அடிக்க‌டி போனுக்கு வ‌ந்திச்சு எல்லாத்தையும் வுலொக் ப‌ண்ணி விட்டேன்

 

ஒரு வ‌ருட‌த்தில் ஒருக்கா ந‌ட‌த்தும் தொட‌ருக்கு ஓவ‌ர் விள‌ம்ப‌ர‌ம்😁😛................................

 

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐ.பி.எல். 2025 வீரர்கள் ஏலத்திற்கு முன்பதாக தோனி, மதீஷ, ஜடேஜா, ருத்துராஜ், டுபே ஆகியோரை CSK தக்கவைக்கவுள்ளது

image

-நெவில் அன்தனி

ஐபிஎல் 2025 வீரர்களுக்கான மாபெரும் ஏலத்திற்கு முன்பதாக சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK) அணியால் தக்கவைக்கப்படும் ஐந்து வீரர்களில் எம்.எஸ். தோனி, இலங்கையின் இளம் வேகப்பந்துவீச்சாளர் மதீஷ பத்தரண ஆகியோர் அடங்குகின்றனர். 

அவர்களுடன அணித் தலைவர் ருத்துராஜ் கய்க்வாட், ரவீந்த்ர ஜடேஜா, ஷிவம் துபே ஆகியோரும் அடங்குகின்றனர்.

தக்கவைக்கப்பட்ட ஒவ்வொரு வீரருக்கும் சென்னை சுப்பர் கிங்ஸ் செலுத்தும் தொகை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் அவர்களுக்கான மொத்த விலையில் இந்திய ரூபா 120 கோடியில் இருந்து குறைந்தது இந்திய ரூபா 65 கோடியை சென்னை சுப்பர் கிங்ஸ் உரிமையாளர்கள் இழப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வருட ஐபிஎல் போட்டியில் தேசிய வீரர்கள் அல்லாத வீரராக 43 வயதான தோனி இடம்பெறவுள்ளார்.

ஐந்து வருடங்களுக்கு மேல் தேசிய அணிகளில் விளையாடாதவர்களை தேசிய வீரர்கள் அல்லாத வீரர்களாக கணிக்கப்படுவர் என்ற விதியை ஐபிஎல் முகாமைத்துவம் மீண்டும் கொண்டுவந்துள்ளது. 

இதன் காரணமாகவே தேசிய விரர்கள் அல்லாத பிரிவில் தோனி இடம்பெறுகிறார். 

ஐசிசி ஆடவர் உலகக் கிண்ணம் 2019க்குப் பின்னர் இந்தியாவுக்காக தோனி விளையாடவில்லை.

மாபெரும் ஏலத்திற்கு முன்பதாக பத்து அணிகளின் உரிமையாளர்களும் தங்களது தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை ஐபிஎல்-க்கு சமர்ப்பிக்க வேண்டிய காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.

இம் முறை ஆறு வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ள அணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் அதில் அதிகபட்சமாக ஐந்து பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடுபவர்களாக இருக்கவேண்டும். மற்றைய இருவர் தேசிய அணிகளில் இடம்பெறாதவர்களாக இருக்கலாம்.

கடந்த வருடம் அணித் தலைவர் பதவியிலிருந்து தோனி விலகிக்கொண்டதை அடுத்து அப் பதவி ருத்துராஜ் கய்க்வாடிடம் ஒப்படைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பிரதான விக்கெட்காப்பாளராக தோனி தொடர்ந்து விளையாடினார்.

ஆனால், துடுப்பாட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பங்களிப்பையே அவர் வழங்கினார்.

கடந்த வருடம் முதல் இரண்டு போட்டிகளில் துடுப்பெடுத்தாடாமல் இருந்த அவர், 11 போட்டிகளில் 73 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டார். 

நான்கு போட்டிகளில் 8ஆம், 9ஆம் இலக்க துடுப்பாட்ட வீரராக களம் இறங்கினார். அவற்றில் சில போட்டிகளில் சிக்ஸ்களை விளாசி இரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னர் தனது பணிச் சுமையை தோனி கட்டுப்படுத்திக்கொண்டார்.

'என்னால் முடிந்தவரை கடைசி சில வருடங்கள் முடிந்தளவு கிரிக்கெட் விளையாடி அனுபவிக்க விரும்புகிறேன்' என இந்த வார ஆரம்பத்தில் தோனி தெரிவித்திருந்தார்.

ஐபிஎல் முடிந்தவுடன்  ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் நடைபெறவிருந்ததால், ஷிவம் டுபே, ரவிந்த்ர ஜடேஜா ஆகியோருக்கு அதிக வாய்ப்பு கொடுப்பதற்காக சில பந்துகளை மாத்திரம் எதிர்கொள்ள தீர்மானித்ததாக தோனி கூறினார்.

இது அவரது பெருந்தன்மையையும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் எடுத்துக்காட்டுகிறது.

3110_ms_dhoni.png

3110_ms_dhoni_with_matheesha.png

https://www.virakesari.lk/article/197588

  • கருத்துக்கள உறவுகள்

IPL Retentions : ஒவ்வொரு அணியும் தக்கவைத்த வீரர்கள் யார் யார்? – முழு விவரம்!

christopherOct 31, 2024 19:07PM
IPL Retentions : Who are the players retained by each team? - Full details!

அடுத்த ஆண்டு ஐபிஎல் 2025 தொடருக்கு முன்னதாக வரும் டிசம்பர் மாதம் மெகா ஏலம் நடைபெற உள்ளது.

அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு அணியும் இன்று (அக்டோபர் 31)  மாலை 5 மணிக்குள் வெளியிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஒவ்வொரு அணியும் தங்கள் 2024 அணியில் இருந்து அதிகபட்சமாக ஆறு வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.

IPL Retentions : Who are the players retained by each team? - Full details!

சென்னை சூப்பர் கிங்ஸ் :

கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (ரூ.18 கோடி)  ரவீந்திர ஜடேஜா (ரூ.18 கோடி), மதீஷா பத்திரனா (ரூ.13 கோடி), சிவம் துபே (ரூ.12 கோடி) ஆகியோருடன் அன்கேப் வீரராக எம்.எஸ் தோனியை (ரூ.4 கோடி) சென்னை சூப்பர் கிங்ஸ் தக்கவைத்துள்ளது. வீரர்களை தக்கவைக்க 65 கோடி ரூபாய் செலவழித்துள்ள சென்னை அணி, மீதமுள்ள ரூ.55 கோடியுடன் ஏலத்திற்கு செல்கிறது.

IPL Retentions : Who are the players retained by each team? - Full details!

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்!

விராட் கோலி (ரூ.21 கோடி), ரஜத் படிதார் (ரூ.11 கோடி) யஷ் தயாள் (ரூ.5 கோடி) ஆகிய மூவரை மட்டுமே ஆர்.சி.பி அணி தக்கவைத்துள்ளது. இதன்மூலம் 37 கோடியை செலவழித்துள்ள பெங்களூரு, மீதம் 83 கோடி ரூபாயை ஏலத்திற்காக கைவசம் வைத்துள்ளது.

IPL Retentions : Who are the players retained by each team? - Full details!

மும்பை இந்தியன்ஸ் :

மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை ஜஸ்பிரித் பும்ரா(ரூ.18 கோடி), சூர்ய குமார் யாதவ் (ரூ.16.35 கோடி), ஹர்திக் பாண்டியா(ரூ.16.35 கோடி), ரோஹித் சர்மா(ரூ.16.30 கோடி) மற்றும் திலக் வர்மா (ரூ.8 கோடி) ஆகியோரை தக்கவைத்துள்ளது. இதன்மூலம் வீரர்களை தக்க வைக்க 75 கோடி ரூபாய் செலவழித்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, ஏலத்திற்காக 45 கோடி ரூபாயை கைவசம் வைத்துள்ளது.

IPL Retentions : Who are the players retained by each team? - Full details!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :

நடப்பு சாம்பியன் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்கவைத்துள்ளது.  அதன்படி ரிங்கு சிங் (ரூ.13 கோடி) ஆண்ட்ரே ரசல் (ரூ.12 கோடி), சுனில் நரைன் (ரூ.12 கோடி), வருண் சக்ரவர்த்தி (ரூ.12 கோடி) ஆகியோருடன் அன்கேப் வீரர்களாக ஹர்ஷித் ராணா மற்றும் ரமன்தீப் சிங் ஆகிய இருவரும் தலா ரூ. 4 கோடிக்கு தக்கவைத்துள்ளது. மொத்தம் ரூ.69 கோடி செலவழித்துள்ள நிலையில் மீதம் ரூ.51 கோடியுடன் ஏலத்தில் பங்கேற்கிறது கே.கே.ஆர்.

IPL Retentions : Who are the players retained by each team? - Full details!

பஞ்சாப் கிங்ஸ் :

ஷஷாங்க் சிங் (ரூ.5.5 கோடி) மற்றும் பிரப்சிம்ரன் சிங் (ரூ.4 கோடி) ஆகிய இரு அன்கேப் வீரர்களை மட்டும் பஞ்சாப் கிங்ஸ் அணி தக்க வைத்துள்ளது.  இதன்மூலம் ரூ. 9.5 கோடி செலவழித்துள்ள நிலையில், அதிகபட்சமாக ஏலத்திற்கு  110 கோடி ரூபாயை கைவசம் வைத்துள்ளது.

IPL Retentions : Who are the players retained by each team? - Full details!

டெல்லி கேப்பிடல்ஸ் : 

அக்சர் படேல் (ரூ.16.5 கோடி), குல்தீப் யாதவ் (ரூ.13.25 கோடி), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (ரூ.10 கோடி), ஆகியோருடன் அன்கேப் வீரராக அபிஷேக் போரல் (4 கோடி) டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தக்கவைத்துள்ளது. இதன்மூலம் ரூ.43.75 கோடியை செலவழித்து, ஏலத்திற்காக 76.25 கோடி ரூபாயை கைவசம் வைத்துள்ளது.

IPL Retentions : Who are the players retained by each team? - Full details!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் :

எல்எஸ்ஜி அணியில் நிக்கோலஸ் பூரன் (ரூ.21 கோடி), ரவி பிஷ்னோய் (ரூ.11 கோடி), மயங்க் யாதவ் (ரூ.11 கோடி) ஆகியோருடன் அன்கேப் வீரர்களாக மோசின் கான் மற்றும் ஆயுஷ் படோனி தலா ரூ. 4 கோடிக்கு தக்கவைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் ரூ.51 கோடியை செலவழித்து, 69 கோடி ரூபாயை கைவசம் வைத்துள்ளது லக்னோ.

IPL Retentions : Who are the players retained by each team? - Full details!

ராஜஸ்தான் ராயல்ஸ் :

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் :

ஹென்ரிச் கிளாசென் (ரூ.23 கோடி), கேப்டன் பாட் கம்மின்ஸ் (ரூ.18 கோடி) , அபிஷேக் சர்மா (ரூ.14 கோடி) மற்றும் டிராவிஸ் ஹெட் (ரூ.14 கோடி) மற்றும் நிதிஷ் ரெட்டி (ரூ.6 கோடி) ஆகிய 5 வீரர்களுக்கு மொத்தம் ரூ.75 கோடி செலவழித்துள்ளது. இதன்மூலம் மீதமுள்ள 45 கோடியுடன் ஏலத்திற்கு செல்கிறது எஸ்.ஆர்.ஹெச்.

IPL Retentions : Who are the players retained by each team? - Full details!

குஜராத் டைட்டன்ஸ் : 

கேப்டன் ரஷித் கான் (ரூ.18 கோடி), சுப்மன் கில் (ரூ.16.5 கோடி),  சாய் சுதர்சன் (ரூ.8.5 கோடி) ஆகியோருடன் அன்கேப் வீரர்களாக ராகுல் தெவாடியா மற்றும் ஷாருக்கானை தலா ரூ.4 கோடிக்கு தக்கவைத்துள்ளது குஜராத் அணி. மொத்தம் 51 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள ஒரு ஆர்டிஎம் மற்றும் 69 கோடியுடன் ஏலத்திற்கு செல்கிறது ஜி.டி.
 

 

https://minnambalam.com/sports/ipl-retentions-who-are-the-players-retained-by-each-team-full-details/

  • கருத்துக்கள உறவுகள்

கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ்… ’கேப்டன்’களை அகற்றிய அணிகள் : காரணம் என்ன?

christopherOct 31, 2024 22:15PM
KL Rahul Rishabh Pant Shreyas are removed from their teams as 'captains': What is the reason?

ஐபிஎல் தொடரில் முக்கிய கேப்டன்களாக கருதப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் விடுவிக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

வரும் டிசம்பர் மாதம் ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 அணிகளும் இன்று (அக்டோபர் 31) தங்களது அணியில் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டன.

அதில் பல்வேறு ஆச்சரியங்கள் இருந்த போதிலும், 5 முக்கிய கேப்டன்களின் பொறுப்பு பறிக்கப்பட்டதுடன், அணியில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

அதன்படி கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயரை அந்த அணி நிர்வாகம் விடுவித்துள்ளது.

அதேபோன்று கடந்த நான்கு ஆண்டுகளாக டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்டை நீண்ட ஆலோசனைக்கு பிறகு விடுவித்துள்ளது.

கடந்த ஐபிஎல் தொடரில் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுடன் ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த கே.எல்.ராகுல் நீக்கப்பட்டுள்ளார்.

இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து ஷிகர் தவானும், பெங்களூரு அணியில் இருந்து ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளையில், சென்னை அணியில் ருத்துராஜ் கெய்க்வாட், மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா, குஜராத் அணியில் சுப்மன் கில், ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் ஹைதராபாத் அணியில் பாட் கம்மின்ஸ் ஆகியோர் மீண்டும் கேப்டன்களாக பெரும் தொகைக்கு தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் அதிகபட்சமாக ருத்துராஜ், சஞ்சு சாம்சன் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகியோர் தலா ரூ.18 கோடிக்கு தக்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் விடுவிக்கப்பட்ட கேப்டன்களான கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரை எடுக்க மற்ற அணிகள் இடையே ஐபிஎல் மெகா ஏலத்தில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

https://minnambalam.com/sports/kl-rahul-rishabh-pant-shreyas-are-removed-from-their-teams-as-captains-what-is-the-reason/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2025: சிஎஸ்கே அணியில் தோனி தக்கவைப்பு - புதிய விதிகள் என்ன?

2025 IPL, CSK, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • எழுதியவர், போத்திராஜ். க
  • பதவி, பிபிசி தமிழுக்காக

2025-ஆம் ஆண்டு ஐ.பி.எல் டி20 சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மகேந்திர சிங் தோனி விளையாடுகிறார் என்று அந்த அணி தற்போது அறிவித்துள்ளது. இது அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. ஆனால், அதில் புதிய சிக்கலும் ஏற்பட்டுள்ளது.

2025-ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடருக்காக அணிகளின் உரிமையாளர்கள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை அறிவித்து, மற்ற வீரர்களை விடுவிக்கும் காலக்கெடு இன்று (அக்டோபர் 31) முடிகிறது. இதன்படி, ஐ.பி.எல் தொடரில் இடம் பெற்றுள்ள 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை ஐ.பி.எல் நிர்வாகத்திடம் முறைப்படி அறிவித்தன.

இதைத் தொடர்ந்து நவம்பர் மாதத்தின் இறுதியில் அல்லது டிசம்பர் மாதத்தில் ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் நடத்தப்படும். அந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியிடம் இருக்கும் கையிருப்புத் தொகைக்கு ஏற்ப வீரர்களை ஏலத்தில் வாங்கும்.

இந்தத் தக்கவைப்புப் பட்டியல் மற்றும் விடுவிப்பு பட்டியலுக்குப்பின் ஒவ்வொரு அணியிலும் 6 கிரிக்கெட் வீரர்கள் மட்டும் தக்கவைக்கப்பட்டுள்ளனர். மற்ற வீரர்கள் அந்தந்த அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஐ.பி.எல் ஏலத்தில் புதிய வீரர்கள் வாங்கப்படுவார்கள்.

2025 ஐ.பி.எல் சீசனுக்கு புதிய விதிகள்

கடந்த 2024 சீசனைவிட 2025 ஐ.பி.எல் சீசனில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளன.

சர்வதேசக் கிரிக்கெட் விளையாடாத வீரர்களின் நிலை, அவர்களின் ஊதியம், ஏலத்தில் பங்கேற்று தேர்வான பின் பங்கேற்காத வீரர்களுக்கு தடை விவரம், வீரர்களுக்கான புதிய போனஸ், அணிகளின் கையிருப்பு தொகை அதிகரிப்பு, ஓய்வு பெற்ற வீரர்கள் மீண்டும் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க வாய்ப்பு என்பன உள்பட பல்வேறு மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தப் புதிய விதிகளின்படி ஐ.பி.எல் தொடரில் உள்ள 10 அணிகளும் தங்களின் அணி வீரர்கள் பட்டியலில் 6 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம். இந்த தக்கவைப்பு பட்டியலில் அதிகபட்சமாக 5 சர்வதேச வீரர்கள் (உள்நாடு மற்றும் வெளிநாட்டு வீரர்கள்) இருக்கலாம். அதிகபட்சமாக 2 சர்வதேச போட்டியில் விளையாடாத (uncapped) வீரர்கள் இருக்கலாம்.

2025 IPL, CSK, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

புதிய விதியும் சி.எஸ்.கே-வும்

கேப்டு (capped) இந்திய வீரர் 'அன்கேப்டு வீரராக' மாற முடியும் என்பதுதான் இந்த விதியின் உச்ச அம்சமாகும். இந்த விதி தோனிக்காகவே உருவாக்கப்பட்டது என்று விமர்சனங்கள் எழுந்தன.

அதாவது சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று அனுபவமுள்ள, ஓய்வு பெற்ற ஒரு வீரர் கடந்த 5 ஆண்டுகளாக இந்திய அணியின் டெஸ்ட், ஒருநாள், மற்றும் டி20 அணியில் பங்கேற்காமல் இருந்தால், பி.சி.சி.ஐ மத்திய ஒப்பந்தத்தில் இடம் பெறாமல் இருந்தால் இந்த விதிகளின்படி அவர் 'அன்கேப்டு வீரராக' மாறுவார். இந்த விதி இந்திய வீரர்களுக்கு மட்டுமே செல்லும்.

இந்த விதியின் கீழ்தான் சி.எஸ்.கே அணி எம்.எஸ்.தோனியை 2025-ஆம் ஆண்டு சீசனில் அன்கேப்டு வீரராகத் தக்கவைத்துள்ளது. ஆனால், கடந்த சீசனில் வாங்கிய அளவு தோனிக்கு ரூ.12 கோடிக்கும் அதிகமாக ஊதியம் நிர்ணயிக்கப்படாது, அன்கேப்டு வீரருக்கான ரூ.4 கோடி மட்டுமே வழங்கப்படும். இந்த விதியால் தோனியின் ஊதியம் குறைந்துள்ளது.

 
2025 IPL, CSK, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஷிவம் துபே

சி.எஸ்.கே தக்கவைப்பு, பர்ஸ் விவரம்

2025 -ஆம் ஆண்டு ஐ.பி.எல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வீரர்களை மட்டும் தக்கவைத்துள்ளது. இதன்படி, ருதுராஜ் கெய்க்வாட் (ரூ.18 கோடி), மதீஷா பதிரண (ரூ.13 கோடி), ஷிவம் துபே (ரூ.12 கோடி), ரவீந்திர ஜடேஜா (ரூ.18 கோடி) எம்.எஸ்.தோனி (ரூ.4 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

சி.எஸ்.கே அணியிடம் தக்கவைப்பு வீரர்கள் தவிர்த்து தற்போது ரூ.55 கோடி கையிருப்பு இருக்கிறது. ஆர்.டி.எம் விதியின்படி ஒரு அன்கேப்டு வீரர் அல்லது கேப்டு வீரரை ஏலத்தில் வாங்கலாம்.

டேவன் கான்வே, ரச்சின் ரவிந்திரா, தீபக் சஹர், ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே ஆகியோரை சிஎஸ்கே அணி நிர்வாகம் விடுவித்துள்ளது. ஆர்டிஎம் விதி மூலம் தீபக் சஹர், டேவன் கான்வே இருவரில் ஒருவரை சிஎஸ்கே நிர்வாகம் ஏலத்தில் எடுக்கலாம்.

 
2025 IPL, CSK, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டெல்லி கேபிடல்ஸ் அணியில் அக்ஸர் படேல் தக்கவைக்கப்பட்டுள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் தக்கவைப்பு, பர்ஸ் விவரம்

டெல்லி கேபிடல்ஸ் அணி அதன் கேப்டன் ரிஷப் பந்தை விடுவித்துள்ளது. புதிய கேப்டனை ஐ.பி.எல் ஏலத்துக்குப்பின் அறிவிக்கும் என்று தெரிகிறது. அந்த வகையில் அக்ஸர் படேல் (ரூ.16.50 கோடி), குல்தீப் யாதவ் (ரூ.13.50 கோடி), டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் (ரூ.10 கோடி), அபிஷேக் போரல் (ரூ.4 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் தற்போது ரூ.73 கோடி கையிருப்பு தொகையாக உள்ளது. இந்த தொகைக்கு ஏற்ப ஏலத்தில் புதிய வீரர்களை வாங்கும்.

கடந்த சீசனின் கேப்டனாக இருந்த ரிஷப் பந்த், டேவிட் வார்னர், ஆன்ரிச் நோர்க்கியா ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

 
2025 IPL, CSK, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா தக்கவைக்கப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் யார் தக்கவைக்கப்பட்டுள்ளனர்?

மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் மாற்றத்திலிருந்து பெரிய குழப்பத்தில் சிக்கி தவித்து வருகிறது. முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா அணி மாறுவாரா அல்லது தொடர்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வந்தது.

அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் ரோஹித் சர்மா(ரூ.16.30 கோடி), ஹர்திக் பாண்டியா (ரூ.16.35 கோடி), சூர்யகுமார் யாதவ் (ரூ.16.35கோடி), ஜஸ்பிரித் பும்ரா (ரூ.18 கோடி), திலக் வர்மா (ரூ.8 கோடி) ஆகிய வீரர்களைத் தக்கவைத்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திடம் தற்போது ரூ.45 கோடி மட்டுமே கையிருப்பு உள்ளது. இதற்கு ஏற்றார்போல் வீரர்களை வாங்கும். ஆர்.டி.எம் கார்டைப் பயன்படுத்தி ஒரு அன்கேப்டு வீரர்களை மட்டும் தக்கவைக்கலாம்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் நீண்டகாலம் இருந்த இஷான் கிஷன், டிம் டேவிட் ஆகியோர் தக்கவைக்கப்படாமல் விடுவிக்கப்பட்டனர்.

 
2025 IPL, CSK, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சஷாங் சிங் பஞ்சாப் கிங்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்

பஞ்சாப் கிங்ஸ் பல வீரர்களுக்கு கல்தா

பஞ்சாப் கிங்ஸ் அணி ஐ.பி.எல் தொடங்கிய சீசனில் இருந்து ஒவ்வொரு சீசனிலும் கேப்டனை மாற்றுவதும், ஏலத்தில் வீரர்களை புதிதாக விலைக்கு வாங்குவதும் என பெரிய எதிர்பார்ப்புடன் இயங்கும். அந்த வகையில் 2025 சீசனுக்கு 2 வீரர்களை மட்டுமே அந்த அணி தக்கவைத்துள்ளது.

கடந்த சீசனில் அதிரடியாக பேட் செய்த சஷாங் சிங் (ரூ.5.5 கோடி), பிரப்சிம்ரன் சிங் (ரூ. 4 கோடி) ஆகியோர் மட்டுமே தக்கவைக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகத்திடம் ரூ.110 கோடி கையிருப்பு உள்ளதால், ஏலத்தில் அதிகமான வீரர்களை விலைக்கு வாங்கலாம்

பஞ்சாப் அணியில் கடந்த சீசனில் இருந்த ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், சாம் கரன், ஜானி பேர்ஸ்டோ, லியாம் லிவிங்ஸ்டோன் போன்ற நட்சத்திர வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 
2025 IPL, CSK, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்த சீசனும் ஆர்சிபி அணியில் விளையாடுகிறார் விராட் கோலி

ஆர்.சி.பி அணிக்கு மீண்டும் கோலி கேப்டனா?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுகிறது ஆனால், இதுவரை அந்த கனவு நனவாகவி்ல்லை. ஆர்சிபி அணி பல முறை ஏலத்தில் வீரர்களை மாற்றினாலும் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

ஆர்.சி.பி அணிக்கு இந்த முறை விராட் கோலி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று பல்வேறு ஆங்கில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. அதற்கு ஏற்றார்போல் விராட் கோலி (ரூ.21 கோடி) தக்கவைக்கப்பட்டுள்ளார். ரஜத் பட்டிதர் (ரூ.11 கோடி), யாஷ் தயால் (ரூ.5 கோடி) தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஆர்சிபி அணியிடம் தற்போது ரூ.83 கோடி கையிருப்பு உள்ளதால், ஏலத்தில் புதிய வீரர்களை வாங்கும். ஆர்.டி.எம் வாய்ப்பு மூலம் 3 வீரர்களை எடுக்கவும் முடியும். 3 கேப்டு வீரர்கள், ஒரு அன்கேப்டு,2 கேப்டு வீரர்களை ஆர்டிஎம் மூலம் வாங்கலாம்.

ஆர்சிபி அணி தங்கள் அணியில் இருந்த மேக்ஸ்வெல், முகமது சிராஜ், கேமரூன் க்ரீன், டூப்பிளசி ஆகியோரை அந்த அணி விடுவித்துள்ளது. இதில் ஆர்டிஎம் மூலம் சிராஜ், டூப்பிளசி,மேக்ஸ்வெல் வரலாம்.

 
2025 IPL, CSK, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ராஜஸ்தான் அணியில் விளையாட இருக்கிறார் சஞ்சு சாம்சன்

அஸ்வின், சஹலுக்கே இந்த நிலையா?

ராஜஸ்தான் அணியும் பல அதிர்ச்சிக்குரிய முடிவுகளை வீரர்கள் தக்கவைப்பு, விடுவிப்பில் எடுத்துள்ளது. அந்த வகையில் அஸ்வின், சஹல், பட்லர், போல்ட் ஆகியோர் தக்கவைக்கப்படவில்லை.

மாறாக கேப்டன் சஞ்சு சாம்ஸன் (ரூ.18கோடி), ஜெய்ஸ்வால் (ரூ.18 கோடி), ரியான் பராக் (ரூ.14 கோடி), துருவ் ஜூரெல் (ரூ.14 கோடி), ஷிம்ரன் ஹெட்மயர் (ரூ.11 கோடி), சந்தீப் ஷர்மா (ரூ.4 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தற்போது ரூ.41 கோடி மட்டுமே கையிருப்பு உள்ளது. ஆர்டிஎம் மூலமும் எந்த வீரரையும் வாங்க முடியாது. இதனால் ஏலத்தில் புதிதாக வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சாளர்களை வாங்க வேண்டிய நிலையில் இருக்கிறது.

'கருப்பு குதிரைகளை' தக்கவைத்த சன்ரைசர்ஸ்

இளம் வீரர்களுக்கு அதிகமாக முக்கியத்துவம் அளிக்கும் சன்ரைசர்ஸ் அணி, கடந்த சீசனில் கலக்கலாகச் செயல்பட்டது. குறிப்பாக கிளாசன், அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட் கூட்டணி ஐ.பி.எல் தொடரில் சாதனைகளைக் குவித்தது. இந்த ஆண்டும் அதன் சாதனைகள் தொடர வேண்டும் என்பதால் அவர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, கிளாசன் (ரூ.23 கோடி), பாட் கம்மின்ஸ் (ரூ.18 கோடி), அபிஷேக் ஷர்மா (ரூ.14 கோடி), டிராவிஸ் ஹெட் (ரூ.14 கோடி), நிதிஷ் குமார் ரெட்டி(ரூ.6 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

சன்ரைசர்ஸ் அணியிடம் ரூ.45 கோடி கையிருப்பு உள்ளது. இந்த தொகைக்கு ஏற்றார்போல் வீரர்களை ஏலத்தில் எடுக்கும். ஆர்.டி.எம் கார்டு மூலம் ஒரு அன்கேப்டு வீரரை மட்டும் தக்கவைக்க முடியும்

புவனேஷ்வர் குமார் மற்றும் தமிழக வீரர்களான வாஷிங்டன் சுந்தர், நடராஜன் ஆகியோர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 
2025 IPL, CSK, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, குஜராத் அணியில் சுப்மான் கில்

குஜராத் அணியில் ஷமி இல்லை

கடந்த சீசனில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி 5 வீரர்களைத் தக்கவைத்துள்ளது. கேப்டன் சுப்மான் கில் (ரூ.16.50 கோடி), ரஷித் கான் (ரூ.18 கோடி), சாய் சுதர்ஷன் (ரூ.8.50 கோடி), ராகுல் திவேட்டியா (ரூ.4 கோடி), ஷாருக்கான் (ரூ.4 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் கையிருப்பாக ரூ.69 கோடி இருக்கிறது. ஆர்டிஎம் வாய்ப்பு மூலம் ஒரு அன்கேப்டு வீரரை வாங்கலாம்.

காயத்தால் கடந்த சீசனில் விளையாடாத வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அதிர்ச்சி

நடப்பு ஐ.பி.எல் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனையே தக்கவைக்காமல் விடுவித்து அதிர்ச்சியளித்துள்ளது. அந்த அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் அய்யரை விடுவித்துள்ளது கொல்கத்தா அணி. கடந்த 2014 சீசனில் இருந்து அணியில் நீடித்துவரும் ஆந்த்ரே ரஸல் விடுவிக்கப்படுவார் எனத் தகவல் வந்தநிலையில் அவர் தக்கவைக்கப்பட்டுள்ளார்.

மாறாக ரிங்கு சிங் (ரூ.13 கோடி), வருண் சக்ரவர்த்தி (ரூ.12 கோடி), சுனில் நரேன் (ரூ.12 கோடி), ஆந்த்ரே ரஸல் (ரூ.12 கோடி), ஹர்சித் ராணா (ரூ.4 கோடி), ராமன்தீப் சிங் (ரூ.4 கோடி).

கொல்கத்தா அணியிடம் இன்னும் ரூ.51 கோடி கையிருப்பு உள்ளது. இந்த தொகையை வைத்து ஏலத்தில் வீரர்களை வாங்கும்.

அந்த அணியில் இருந்து நட்சத்தி வீரர்கள் ஸ்ரேயாஸ் அய்யர், மிட்செல் ஸ்டார்க், பில் சால்ட், வெங்கடேஷ் அய்யர், நிதிஷ் ராணா ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஸ்டார்க் கடந்த சீசனில் பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை அதனால் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால், பில் சால்ட், வெங்கடேஷ் சிறப்பாக பேட் செய்த நிலையில் அவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 
2025 IPL, CSK, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் களமிறங்க இருக்கிறார் வருண் சக்ரவர்த்தி

லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ் நிலவரம்

லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி புதிய கேப்டனை அறிவிக்கும் எனத் தெரிகிறது. அந்த அணியின் கேப்டனாக நீடித்த கே.எல்.ராகுலை விடுவித்துள்ளது. அதேசமயம், நிகோலஸ் பூரன் (ரூ.21 கோடி), ரவி பிஸ்னோய் (ரூ.11 கோடி), மயங்க் யாதவ் (ரூ.11 கோடி), மோசின் கான் (ரூ.4 கோடி), ஆயுஷ் பதோனி (ரூ.4 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

லக்னெள அணியிடம் கையிருப்பாக ரூ.69 கோடி இருக்கிறது. அந்த அணியின் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், குயின்டன் டீ காக், க்ருனல் பாண்டியா ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மதீஷ பத்திரணவை பெரிய விலைக்கு சென்னை சுப்பர் கிங்ஸ் தக்கவைத்தது

image

(நெவில் அன்தனி)

இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் 2025 அத்தியாயத்தை முன்னிட்டு இலங்கையின் இளம் வேகப்பந்துவீச்சாளர் மதீஷ உட்பட 5 வீரர்களை பிரபல அணிகளில் ஒன்றான சென்னை சுப்பர் கிங்ஸ் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

மதீஷ பத்திரணவை இலங்கை நாணயப்படி 45 கோடி ரூபாவுக்கு (13 கோடி இந்தியா ரூபா) சென்னை சுப்பர் கிங்ஸ் தக்க வைத்துக்கொண்டுள்ளது.

அடுத்த வருடம் நடைபெறவுள்ள 18ஆவது இண்டியன் பிறீமியர் லீக் (ஐபிஎல்) அத்தியாயத்திற்கான வீரர்கள் ஏலம் இம் மாத இறுதியில் நடைபெறவுள்ளது.

அதற்கு முன்னர் 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தில் விளையாடும் பத்து அணிகளும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அக்டோபர் 31ஆம் திகதி மாலைக்குள் ஐபிஎல் நிருவாகத்திடம் அறிவிக்க வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.

இதற்கு அமைய பத்து அணிகளும் தங்களால் தக்கவைக்கப்படும் வீரர்களின் பெயர்களை நேற்று மாலை வெளியிட்டன.

சென்னை சுப்பர் கிங்ஸ் தனது ஐந்து வீரர்களை இந்திய நாணயப்படி 65 கோடி ரூபாவுக்கு (இலங்கை நாணயப்படி 226 கோடி ரூபா) தக்கவைத்துக்கொண்டது.

மதீஷ பத்திரணவை 13 கோடி இந்தியா ரூபாவுக்கு சென்னை சுப்பர் கிங்ஸ் தக்கவைத்துக்கொண்டது.

அவரை விட அணித் தலைவர் ரூத்துராஜ் கய்க்வாட், ரவிந்த்ர ஜடேஜா ஆகிய இருவரும் தலா 18 கோடி இந்திய ரூபாவுக்கும் ஷிவம் டுபே 12 கோடி இந்திய ரூபாவுக்கும் தக்கவைக்கப்பட்டனர்.

முன்னாள் அணித் தலைவர் எம்.எஸ். தோனி, தேசிய வீரரல்லாதவராக 4 கோடி இந்திய ரூபாவுக்கு தக்கவைக்கப்பட்டுள்ளார்.

ஏனைய அணிகளில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் (இந்திய நாணயப்படி)

மும்பை இண்டியன்ஸ்

ஜஸ்ப்ரிட் பும்ரா (18 கோடி ரூபா), ஹார்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் (இருவரும் தலா 16.35 கோடி ரூபா), ரோஹித் ஷ்மா (16.30 கோடி ரூபா), திலக் வர்மா (8 கோடி ரூபா)

லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ்

நிக்கலஸ் பூரண் (21 கோடி ரூபா), ரவி பிஷ்னோய், மயாங் யாதவ் (இருவரும் தலா 11 கோடி ரூபா), மோஷின் கான், ஆயுஷ் படோனி (இருவரும் தலா 4 கொடி ரூபா)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

ஹென்றிச் க்ளாசன் (23 கோடி ரூபா), பெட் கமின்ஸ் (18 கோடி ரூபா), அபிஷேக் ஷர்மா, ட்ரவிஸ் ஹெட் (இருவரும் தலா 14 கோடி ரூபா)

குஜராத் டைட்டன்ஸ்

ராஷித் கான் (18 கோடி ரூபா), ஷுப்மான் கில் (16.5 கோடி ரூபா), சாய் சுதர்சன் (8.5 கோடி ரூபா), ராகுல் தெவாட்டியா, ஷாருக் கான் (இருவரும் தலா 4 கோடி ரூபா)

பஞ்சாப் கிங்ஸ்

ஷஷாங் சிங் (5.5 கோடி ரூபா), பிரப்சிம்ரன் சிங் (4 கோடி ரூபா)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ரின்கு சிங் (13 கோடி ரூபா), வருண் சக்கரவர்த்தி, சுனில் நரேன், அண்ட்றே ரசல் (மூவரும் தலா 12 கோடி ரூபா), ஹர்சித் ராணா, ராமன்தீப் சிங் (இருவரும் தலா 4 கோடி ரூபா)

ராஜஸ்தான் றோயல்ஸ்

சஞ்சு செம்சன், யஷஸ்வி ஜய்ஸ்வால் (இருவரும் தலா 18 கோடி ரூபா), ரெயான் பரக், த்ருவ் ஜுரெல் (இருவரும் தலா 14 கோடி ரூபா), ஷிம்ரன் ஹெட்மயர் (11 கோடி ரூபா), சந்தீப் ஷர்மா (4 கோடி ரூபா)

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்

விராத் கோஹ்லி (21 கோடி ரூபா), ரஜாத் படிதார் (11 கோடி ரூபா), யாஷ் தயாள் (5 கோடி ரூபா)

டெல்ஹி கெப்பிட்டல்ஸ்

அக்சார் பட்டேல் (16.5 கோடி ரூபா), குல்தீப் யாதவ் (13.25 கோடி ரூபா), ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் (10 கோடி ரூபா), அபிஷேக் பொரெல் (4 கோடி ரூபா)

3101_ipl.png

https://www.virakesari.lk/article/197646

  • கருத்துக்கள உறவுகள்

கே கே ஆர் க‌ப்ட‌னை க‌ல‌ட்டி விட்டாச்சு ஹா ஹா😁......................

  • கருத்துக்கள உறவுகள்

டூ பிலஸ்சிய‌ விட‌ 

தென் ஆபிரிக்காவில் ந‌ல்ல‌ இள‌ம் வீர‌ர்க‌ள் இருக்கின‌ம் அவ‌ர்க‌ளை ஏல‌த்தில் எடுக்க‌லாம்

 

40வ‌ய‌தை தாண்டின‌வ‌ர்க‌ள் ஓய்வை அறிவிப்ப‌து ந‌ல்ல‌ம்

இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு வ‌ழி விட‌னும்

ப‌ல‌ கோடி காசு சாம்பாதிச்சாச்சு 

குடும்ப‌ம் ம‌னைவி பிள்ளைக‌ளுட‌ன் நேர‌த்தை ஒதுக்க‌லாம்.........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேப்டனை கைவிட்ட 5 அணிகள், இளம் வீரருக்கு 70 மடங்கு கூடுதல் ஊதியம் - ஐ.பி.எல்.லில் என்ன நடக்கிறது?

ஐபிஎல், தோனி, கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்த ஆண்டு ஐ.பி.எல்.லில் கொல்கத்தா அணிக்கு கோப்பை வென்று கொடுத்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை அந்த அணி தக்கவைக்கவில்லை.
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

2025ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடரில் இடம் பெற்றுள்ள 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை ஐபிஎல் நிர்வாகத்திடம் அளித்துள்ளன. இதில் இந்திய வீரர்கள், பேட்டர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

அதேசமயம், குறைந்த அளவு வெளிநாட்டு வீரர்கள், பந்துவீச்சாளர்கள், அன்கேப்டு வீரர்கள்(சர்வதேச போட்டியில் பங்கேற்காதவர்கள்) மட்டுமே தக்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

கடந்த ஐபிஎல் சீசனைவிட இந்த சீசனில் ஒவ்வொரு அணியின் பர்ஸ் தொகையும் ரூ.20 கோடி அதிகரிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகள் சர்வதேச போட்டியில் விளையாடாத கேப்டு வீரர் அன்கேப்டு வீரராக தேர்ந்தெடுக்கலாம் உள்ளிட்ட புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இருப்பினும், ஐபிஎல் டி20 தொடர் என்பது பேட்டர்கள் ஆதிக்கம் செய்யும் தொடர் என்பதை நிரூபிக்கும் விதத்தில் பேட்டர்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளித்து ஒவ்வொரு அணியும் தக்கவைத்துள்ளன. வெளிநாட்டு பேட்டர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதைவிட உள்நாட்டு வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் இந்த தக்கவைப்பில் அணி நிர்வாகங்கள் வழங்கியுள்ளன.

சில வீரர்கள் கடந்த ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட நிலையில் இந்த சீசனில் ஊதியத்தைக் குறைத்தும் அணியில் நீடிக்கிறார்கள். ஏனென்றால், ஏலத்துக்கு அனுப்பப்படாமல் தக்கவைப்பில் இருப்பதால் அணி நிர்வாகத்துக்காக இதனை அவர்கள் செய்துள்ளனர்.

அதேபோல, கடந்த ஐபிஎல் ஏலத்தில் குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட கேப்டு வீரர்கள், அன்கேப்டு வீரர்கள் சிலருக்கு ஜாக்பாட் அடிக்கும் வகையில் ஊதியம் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 2025ம் ஆண்டுக்கான ஏலம் குறித்த உறுதியான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. வீரர்கள் ஏலத்தில் இன்னும் பல சுவாரஸ்யங்கள் நடந்தேறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு வீரர்களுக்கு முக்கியத்துவம்

2025 ஐபிஎல் சீசனுக்காக வீரர்கள் தக்கவைப்பில் ஒவ்வொரு அணியும் உள்நாட்டு வீரர்களுக்கே அதிக முக்கியத்துவம் அளித்துள்ளன. 46 வீரர்கள் தக்கவைப்பு பட்டியலில் இருந்தாலும் அதில் 10 வீரர்கள் மட்டுமே வெளிநாட்டு வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு அணிகள் மட்டுமே 2 அல்லது அதற்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்களை தக்கவைத்துள்ளன. சன்ரைசர்ஸ் அணி 3 வெளிநாட்டு வீரர்களையும், கொல்கத்தா அணி 2 வீரர்களையும் தக்கவைத்துள்ளன. ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இந்திய வீரர்களை மட்டுமே தக்கவைத்துள்ளன.

பேட்டர்கள் ஆதிக்கம்

ஐபிஎல், தோனி, கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மும்பை அணி வீரர் பும்ரா

அதிகமான அளவு பேட்டர்கள் மட்டுமே தக்கவைக்கப்பட்டுள்ளன. இந்த தக்கவைப்பில் 28 பேட்டர்கள், 11 பந்துவீச்சாளர்கள்(இதில் 8 வேகப்பந்துவீச்சாளர்கள்), 7 ஆல்ரவுண்டர்கள் அடங்குவர்.

பந்துவீச்சாளர்களைத் தக்கவைப்பதில் வெளிநாட்டு வீரர்களுக்கே அணிகள் முக்கியத்துவம் அளித்துள்ளன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சந்தீப் சர்மாவை தக்கவைத்துள்ளது. இவர் அன்கேப்டு இந்திய வீரர் ஆவார், ராஜஸ்தான் அணி 6 வீரர்களைத் தக்கவைத்ததில் இவரும் ஒருவர். சன்ரைசர்ஸ் அணி கம்மின்ஸ்(வெளிநாட்டு வீரர்), மும்பை அணி பும்ரா, சிஎஸ்கே அணி மதிஷா பதிராணா என தலா ஒரு பந்துவீச்சாளருக்கே முக்கியத்துவம் அளித்துள்ளன.

லக்னெள அணி பந்துவீச்சாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து மயங்க் யாதவ், ரவி பிஸ்னோய், மோசின் கான் ஆகியோரைத் தக்கவைத்துள்ளது. கொல்கத்தா அணி ஹர்சித் ராணா, வருண் சக்ரவர்த்தி, ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஆந்த்ரே ரஸல், சுனில் நரைனைத் தக்கவைத்துள்ளது.

 
ஐபிஎல், தோனி, கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

அன்கேப்டு வீரர்கள் பக்கம் சாய்ந்த 8 அணிகள்

சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் இல்லாத அன்கேப்டு வீரர்களுக்கு 8 அணிகள் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளன. மும்பை மற்றும் சன்ரைசர்ஸ் ஆகிய 2 அணிகள் மட்டும் அன்கேப்டு வீரர்களை தக்கவைக்கவில்லை.

இதில் கடந்த 5 ஆண்டுகளாக சர்வதேச போட்டியில் விளையாடாத வீரரும் அன்கேப்டு வரிசையில் வருகிறார். அதன்படி எம்எஸ் தோனி அன்கேப்டு வீரராக சிஎஸ்கே அணியால் தக்கவைக்கப்பட்டுள்ளார்.

கொல்கத்தா, பஞ்சாப், குஜராத் டைட்டன்ஸ், லக்னெள அணிகள் தலா 2 உள்நாட்டு வீரர்களை தக்கவைத்துள்ளன. டெல்லி மற்றும் ஆர்சிபி அணிகள் ஒரு அன்கேப்டு வீரரை மட்டும் தக்கவைத்துள்ளன. இதன்படி 12 அன்கேப்டு வீரர்கள் ஐபிஎல் அணிகளால் தக்கவைக்கப்பட்டுள்ளன.

ஐபிஎல், தோனி, கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கொல்கத்தா அணி வீரர் வருண் சக்ரவர்த்தி

சுழற்பந்துவீச்சாளர்களின் நிலை என்ன?

ஐபிஎல் வீரர்கள் தக்கவைப்பில் ஸ்பெஷலிஸ்ட் சுழற்பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஸ்னோய் ஆகிய 3 பேர் மட்டுமே தக்கவைக்கப்பட்டுள்ளனர். சாஹல், அஸ்வின், தீக்சனா, ராகுல் சஹர் ஆகியோர் தக்கவைக்கப்படவில்லை.

சுனில் நரைன், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ரஷித் கான் ஆகியோர் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் வரிசையில் வருவார்கள் என்பதால் ஸ்பெஷலிஸ்ட் சுழற்பந்துவீச்சார்கள் பட்டியலில் இடம் பெறமாட்டார்கள். அந்த வகையில் முழுநேர சுழற்பந்துவீச்சாளர்களை தக்கவைப்பது குறைந்துள்ளது.

ஐபிஎல், தோனி, கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, லக்னெள அணியின் கேப்டனாக செயல்பட்ட கே.எல்.ராகுல்

தக்கவைப்பில் 5 கேப்டன்கள் இல்லை

அதிர்ச்சிக்குரிய வகையில் 5 அணிகளின் நிர்வாகங்கள் தங்களின் கேப்டன்களையே தக்கவைப்பு பட்டியலில் இருந்து நீக்கிவிட்டன. லக்னெள, டெல்லி கேபிடல்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் அணி, நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி ஆகியவை கேப்டன்களையே நீக்கிவிட்டன.

ஆர்சிபி அணி மீண்டும் விராட் கோலியை கேப்டனாக்க விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொல்கத்தா, டெல்லி, பஞ்சாப் அணிகள் ஏலம் முடிந்தபின் புதிய கேப்டன்களை அறிவிக்க உள்ளன. ரிஷப் பந்த், கே.எல்.ராகுல், டூப்பிளசிஸ், எய்டன் மார்க்ரம், ஸ்டீப் ஸ்மித், நிதிஷ் ராணா ஆகியோர் ஏலத்தில் மூலம் எடுக்கப்பட்டு கேப்டனாக்கப்பட்டால் அவர்களின் மதிப்பு அதிகரிக்கும். இவர்களுக்கு ஏற்கெனவே கேப்டன் அனுபவம் இருப்பது கூடுதல் மதிப்பாகும். இவர்கள்தவிர ஜாஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரும் ஏலத்தில் உள்ளனர்.

ஐபிஎல், தோனி, கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா

தோனி, ரோகித் ஊதியம் குறைப்பு

கடந்த ஐபிஎல் சீசனில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு, தக்கவைப்பு மூலம் சில வீரர்கள் ஊதியக் குறைப்பைச் சந்தித்துள்ளனர். கொல்கத்தா அணியில் கடந்த சீசனில் ரூ.16 கோடிக்கு வாங்கப்பட்ட ரஸலுக்கு ஊதியம் ரூ.12 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. ராகுல் திவேட்டியாவுக்கு ரூ.9 கோடியிலிருந்து ரூ.4 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. தமிழக வீரர் ஷாருக்கானுக்கு ரூ.7.40 கோடி ஊதியத்திலிருந்து ரூ.4 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த சீசனில் ரூ.12 கோடி ஊதியம் பெற்ற தோனி அன்கேப்டு வீரர் ஆக்கப்பட்டதால் அவரது ஊதியம் ரூ.4 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தவிர, ரோகித் சர்மா, சுனில் நரேன், அக்ஸர் படேல், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, கம்மின்ஸ் உள்ளிட்ட வீரர்கள் ஊதியக் குறைப்பை சந்தித்துள்ளனர்.

 
ஐபிஎல், தோனி, கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் துருவ் ஜூரெல்

ஜாக்பாட் அடித்த வீரர்கள்

தக்கவைப்பில் சில அன்கேப்டு வீரர்கள் மற்றும் கேப்டு வீரர்களின் ஊதியம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

குறிப்பாக துருவ் ஜூரெல் கடந்த சீசன் ஏலத்தில் ரூ.20 லட்சத்துக்கு வாங்கப்பட்டிருந்தார். அவரது ஊதியம் தக்கவைப்பில் ரூ.14 கோடியாக உயர்ந்துள்ளது. அவரது ஊதியம் ஏறக்குறைய 7000 சதவீதம் அதாவது 70 மடங்கு அதிகரித்துள்ளது.

சிஎஸ்கே வீரர் பதிரணாவின் ஊதியம் ரூ.20 லட்சத்தில் இருந்து, தக்க வைப்பின் மூலமாக ரூ.13 கோடியாக உயர்ந்துள்ளது. இது 65 மடங்கு அதிகம் ஆகும். ரஜத் பட்டிதர், மயங்க் யாதவ் ரூ.20 லட்சத்துக்கு வாங்கப்பட்டநிலையில் அவர்களின் ஊதியம் தக்கவைப்பில் ரூ.11 கோடியாக அதிகரித்துள்ளது.

தமிழக வீரர் சாய் சுதர்சன், சஷாங்க் சிங் ஆகியோர் ஏலத்தில் ரூ.20 லட்சத்துக்கு கடந்த சீசனில் வாங்கப்பட்ட நிலையில் தக்கவைப்பு மூலம் சுதர்சனுக்கு ரூ.8.50 கோடியும், சஷாங்க் சிங்கிற்கு ரூ.5.50 கோடியும் ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ ஜ‌பிஎல் ஏலாத்தால் சிற‌ப்பாக‌ விளையாடும் வீர‌ர்க‌ளுக்கு கூட‌ ம‌ன‌ உளைச்ச‌ல் வ‌ந்து விடும்🫤.........................

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சின்ன‌ ம‌லிங்காவை சென்னை ஏல‌த்தில் விட‌ வில்லை...............

 

சென்னை அணிக்காக‌ ஒரு குண்ட‌ன் ப‌ந்து போடுவார் அவ‌ரை சென்னை ஏல‌த்துக்கு விட்டு விட்ட‌து

 

அவ‌ர் சிற‌ந்த‌ வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர் கிடையாது

இந்திய‌ அணிக்கும் விளையாடின‌து கிடையாது அவ‌ருக்கு ப‌தில் ந‌ல்ல‌ வீர‌ரை ஏல‌த்தில் எடுக்க‌லாம்....................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

3 வருட ஐ.பி.எல் போட்டிகளுக்கான திகதி அறிவிப்பு

அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐ.பி.எல் (IPL) போட்டிகளின் 18ஆவது தொடர் அடுத்த வருடம் மார்ச் 14ஆம் திகதி ஆரம்பமாகி மே 25ஆம் திகதி இறுதிப் போட்டி நடைபெறுமென்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

2025ஆம் ஆண்டில் 74 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் போட்டிகளுக்கான திகதிகள் குறித்து இன்று (22) காலை அணி உரிமையாளர்களுக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிக்கான இடம் மற்றும் எந்த திகதிகளில் அணிகள் மோதுவது உள்ளிட்ட விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏலத்துக்கான இறுதிப் பட்டியல்

ஐபிஎல் வீரர்கள் ஏலத்துக்கான இறுதிப் பட்டியலில் 574 வீரர்கள் இடம் பெற்றுள்ளதோடு, இதில் 366 இந்தியர்களும் 208 வெளிநாட்டு வீரர்களும் உள்ளடங்குகின்றனர்.

3 வருட ஐ.பி.எல் போட்டிகளுக்கான திகதி அறிவிப்பு | Dates For Ipl Matches Announced

இம்முறை ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் 19  இலங்கை வீரர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். இலங்கை அணியின் நட்சத்திர வீரர்களான வனிந்து ஹசரங்க மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகிய இருவரும் இந்திய பெறுமதியில் அதிகபட்ச தொகையான 2 கோடி ரூபாய் அடிப்படை விலையில் ஏலத்தில் இடம்பெற்றுள்ளனர்.

இது தவிர, 75 இலட்சம் ரூபாய் அடிப்படை விலையில் 15 இலங்கை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.   

இலங்கை வீரர்கள்

இதில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த், குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, நுவன் துஷார, ஜெப்ரி வெண்டர்சே, பெத்தும் நிஸ்ஸங்க, பானுக ராஜபக்ஷ, கமிந்து மெண்டிஸ், துஷ்மந்த சமீர, சரித் அசலங்க, துனித் வெல்லாலகே, டில்ஷான் மதுஷங்க, துஷான் ஹேமன்த, தசுன் ஷானக மற்றும் லஹிரு குமார ஆகிய வீரர்கள் 75 இலட்சம் ரூபாய் அடிப்படை விலையில் ஏலத்தில் இடம்பெற்றுள்ளனர்.

3 வருட ஐ.பி.எல் போட்டிகளுக்கான திகதி அறிவிப்பு | Dates For Ipl Matches Announced

மேலும், 2026ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடர் மார்ச் 15ஆம் திகதி முதல் மே 31 ஆம் திகதி வரையிலும், 2027ஆம் ஆண்டுக்கான தொடர் மார்ச் 14ஆம் திகதி முதல் மே 30ஆம் திகதி வரையிலும் நடை பெறுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

https://tamilwin.com/article/dates-for-ipl-matches-announced-1732255790#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2025 ஏலத்தில் விற்கப்பட்ட வீரர்களின் முழுப் பட்டியல்!

Full list of players sold in the 2025 IPL mega auction!

IPL Auction : அடுத்தாண்டு நடைபெற உள்ள 18வது ஐபிஎல் தொடரை முன்னிட்டு சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உள்ள  அபாடி அல் ஜோஹர் அரங்கத்தில் ஐபிஎல் மெகா ஏலம் இன்றும் (நவம்பர் 24), நாளையும் நடைபெறுகிறது.

இதில் ரிஷப் பந்த், கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் போன்ற முன்னணி இந்திய வீரர்களுடன் மொத்தம் மொத்தமாக 577 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்றுள்ளனர்.

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் ஏலத்துக்காக 120 கோடி ரூபாய் செலவு செய்யலாம். இருப்பினும் அனைத்து அணிகளும் வீரர்களை தக்கவைத்துக் கொள்வதற்காக கணிசமான தொகையை ஏற்கனவே பயன்படுத்தி விட்டதால் மீதமுள்ள தொகையுடன் ஏலத்தில் பங்கேற்றுள்ளன.

இந்த நிலையில் இன்று மதியம் 4 மணிக்கு தொடங்கிய ஐபிஎல் மெகா ஏலத்தில் முதல் வீரராக இந்தியாவைச் சேர்ந்த இளம் (25 வயது) வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் ரூ. 18 கோடிக்கு ஆர்.டி.எம். முறையை பயன்படுத்தி பஞ்சாப் கிங்ஸ்  அணி.

அதிகப்பட்சமாக இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்தை ரூ. 27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஸ்ரேயாஷ் அய்யரை ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியும் வாங்கியுள்ளது.

ஐபிஎல் 2025 ஏலத்தில் விற்கப்பட்ட வீரர்களின் முழுப் பட்டியல் : 

அர்ஷ்தீப் சிங்: பஞ்சாப் கிங்ஸ் – ரூ 18 கோடி (ஆர்டிஎம்)

ககிசோ ரபாடா: குஜராத் டைட்டன்ஸ் – ரூ 10.75 கோடி

ஷ்ரேயாஸ் ஐயர்: பஞ்சாப் கிங்ஸ் – ரூ 26.75 கோடி

ஜோஸ் பட்லர்: குஜராத் டைட்டன்ஸ் – ரூ 15.75 கோடி

மிட்செல் ஸ்டார்க்: டெல்லி கேப்பிடல்ஸ் – ரூ 11.75 கோடி

ரிஷப் பந்த்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரூ 27 கோடி

முகமது ஷமி: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ரூ 10 கோடி

டேவிட் மில்லர்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரூ 7.5 கோடி

யுஸ்வேந்திர சாஹல்: பஞ்சாப் கிங்ஸ் – ரூ 18 கோடி

முகமது சிராஜ்: குஜராத் டைட்டன்ஸ் – ரூ 12.25 கோடி

லியாம் லிவிங்ஸ்டோன்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ரூ 8.75 கோடி

கேஎல் ராகுல்: டெல்லி கேப்பிடல்ஸ் – ரூ 14 கோடி

டெவான் கான்வே: சென்னை சூப்பர் கிங்ஸ் –  ரூ.6.25 கோடி

ஹாரி புரூக்: டெல்லி கேபிட்டல்ஸ்  – ரூ.11.75 கோடி

 

https://minnambalam.com/sports/full-list-of-players-sold-in-the-2025-ipl-mega-auction/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வனிதுவையும் ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான்!

Live Update - வனிதுவையும் ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான்!

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். ஏலத்தில் ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் ஆகிய இந்திய வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Live Update -  

அப்துல் சமத்தை ரூ.4.20 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ.

நமன் திர்ரை ரூ.5.25 கோடிக்கு ஏலம் எடுத்தது மும்பை.

சமீர் ரிஸ்வியை ரூ.95 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது டெல்லி.

நிஷாந்த் சிந்துவை ரூ.30 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது குஜராத்.

அபினவ் மனோகரை ரூ.3.20 கோடிக்கு ஏலம் எடுத்தது ஐதராபாத்.

கருண் நாயரை ரூ. 50 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது டெல்லி.

அங்கிரிஷ் ரகுவன்ஷிவை ரூ.3 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா.

நேஹால் வதேராவை ரூ.4.20 கோடிக்கு ஏலம் எடுத்தது ஐதராபாத்.

அடிப்படை விலை ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.4.20 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 

அதர்வ தைடேவை ரூ.30 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது ஐதராபாத்.

நூர் அகமதுவை ரூ.10 கோடிக்கு ஏலம் எடுத்தது சிஎஸ்கே.

அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.10 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 

ஆடம் சம்பாவை ரூ.2.40 கோடிக்கு ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.

ராகுல் சாஹரை ரூ.3.20 கோடிக்கு ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.

அடிப்படை விலை ரூ.1 கோடியில் இருந்து ரூ.3.20 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

டிரென்ட் போல்ட்டை ரூ.12.50 கோடிக்கு ஏலம் எடுத்தது மும்பை.

அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.12.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 

நடராஜன் ரூ.10.75 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி.

அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.10.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 

இலங்கை வீரர் வனிது ஹசரங்கவையும் ராஜஸ்தான் ரோயல் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ 5.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்ததுள்ளது ராஜஸ்தான் ரோயல் அணி

இலங்கை வீரர் மகேஷ் தீக்ஷனவை ரூ.4.40 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ரோயல் அணி

அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.4.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 

கலீல் அஹ்மத்தை ரூ.4.80 கோடிக்கு ஏலம் எடுத்தது சிஎஸ்கே.

அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.4.80 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 

ஆர்சரை ரூ.12.50 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான்.

அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.12.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 

அன்ரிச் நோர்ட்ஜேவை ரூ.6.50 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா.

அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.6.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 

ஆவேஷ் கானை ரூ.9.75 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ.

அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.9.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 

பிரசித் கிருஷ்ணாவை ரூ.9.50 கோடிக்கு ஏலம் எடுத்தது குஜராத்.

அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.9.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 

ஹேசில்வுட்டை ரூ.12.50 கோடிக்கு ஏலம் எடுத்தது ஆர்சிபி.

அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.12.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 

ஜிதேஷ் சர்மாவை ரூ.11 கோடிக்கு ஏலம் எடுத்தது ஆர்சிபி.

அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.11 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 

இஷான் கிஷனை ரூ.11.25 கோடிக்கு ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.

அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.11.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

குர்பாஸை ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா.

இங்கிலாந்து அணி வீரர் ஃபில் சால்ட் ரூ.11.50 கோடிக்கு ஏலம் எடுத்தது ஆர்சிபி.

அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.11.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 

கடந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஜோனி பேர்ஸ்டோவை எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை!

குவின்டன் டி கொக்கை ரூ.3.60 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா.

அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.3.60 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 

கிளென் மேக்ஸ்வெலை ரூ.4.2 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப்.

அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.4.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 

மிட்செல் மார்ஷை ரூ.3.4 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ.

அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.3.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 

மார்கஸ் ஸ்டோனிஸை ரூ.11 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப்.

அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.11 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 

வெங்கடேஷ் அய்யரை ரூ.23.75 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா.

ரவிச்சந்திரன் அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு ஏலம் எடுத்தது சிஎஸ்கே.

அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.9.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தமிழக வீரர் அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு சென்னை அணி ஏலம் எடுத்துள்ளது. அஷ்வினை வரவேற்கும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எக்ஸ் தள பதிவில், "திரும்ப வந்துடேன்னு சொல்லு", "நாயகன் மீண்டும் வரார்" என பதிவிட்டுள்ளது. 

ரச்சின் ரவீந்திராவை ரூ.4 கோடிக்கு ஏலம் எடுத்தது சிஎஸ்கே.

ஹர்சல் படேலை ரூ.8 கோடிக்கு ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.

அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 

ஜேக் ஃப்ரேஸர்-மெக்கர்க்கை ரூ.9 கோடிக்கு ஆர்டிஎம் முறையில் ஏலம் எடுத்தது டெல்லி.

ராகுல் த்ரிபாதி ரூ.3.40 கோடிக்கு ஏலம் எடுத்தது சிஎஸ்கே.

அடிப்படை விலை ரூ.75 லட்சத்தில் இருந்து ரூ.3.40கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 

டெவன் கான்வே ரூ.6.25 கோடிக்கு ஏலம் எடுத்தது சிஎஸ்கே.

அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.6.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 

தேவ்தத் படிக்கலை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. 

எய்டன் மார்க்ரமை அவரது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ.

ஹேரி ப்ரூகை ரூ.6.25 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி.

அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.6.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 

கே. எல். ராகுல் ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி.

அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 

லியம் லிவிங்ஸ்டனை ரூ.8.75 கோடிக்கு ஏலம் எடுத்தது ஆர்சிபி.

அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.8.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 

முகமது சிராஜ் ரூ.18 கோடிக்கு ஏலம் எடுத்தது குஜராத் அணி.

அடிப்படை விலை ரூ. 2 கோடியில் இருந்து ரூ.12.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

யுஸ்வேந்திர சாஹலை ரூ.18 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ்.

அடிப்படை விலை ரூ. 2 கோடியில் இருந்து ரூ.18 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

டேவிட் மில்லரை ரூ.7.5 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ.

அடிப்படை விலை ரூ. 1.5 கோடியில் இருந்து ரூ.7.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

முகமது சமியை ரூ.10 கோடிக்கு ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.

அடிப்படை விலை ரூ. 2 கோடியில் இருந்து ரூ.10 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

ரிஷப் பண்டை ரூ.27 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ.

ஸ்ரேயாஸ் ஐயரின் சாதனையை முறியடித்தார் ரிஷப் பண்ட்.

அடிப்படை விலை ரூ. 2 கோடியில் இருந்து ரூ.27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 

ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ரிஷப் பண்ட் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

மிட்செல் ஸ்டார்கை ரூ.11.75 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி.

அடிப்படை விலை ரூ. 2 கோடியில் இருந்து ரூ.11.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 

ஜாஸ் பட்லரை ரூ.15.75 கோடிக்கு குஜராத் அணி ஏலம் எடுத்தது.

அடிப்படை விலை ரூ. 2 கோடியில் இருந்து ரூ.15.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயரை ரூ.26.75 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ்.

அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.26.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை ஷ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா வீரர் ககிசோ ரபாடாவை ரூ. 10.75 கோடி தொகைக்கு ஏலத்தில் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.

அர்ஷ்தீப் சிங்கை பஞ்சாப் கிங்ஸ் ஆர்டிஎம் முறையில் ரூ.18 கோடிக்கு ஏலத்தில் தக்க வைத்தது. 

அடிப்படை விலை ரூ. 2 கோடியில் இருந்து ரூ.18 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

https://tamil.adaderana.lk/news.php?nid=196346

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் ஏலம்: சென்னை, மும்பை, பெங்களூரு அணிகள் யாரை வாங்கின? நடராஜன், அஸ்வின் எந்த அணிக்கு?

ஐபிஎல் மெகா ஏலம், நடராஜன், சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

2025-ஆம் ஆண்டு சீசனுக்கான ஐபிஎல் மெகா ஏலத்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை இதுவரை ஐபிஎல் வரலாற்றில் இல்லாத வகையில் ரூ.27 கோடிக்கு லக்னெள சூப்பர்ஜெயின்ட்ஸ் அணி வாங்கியது.

நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யரை ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது.

சிஎஸ்கே அணியில் தொடக்கத்தில் ஆடிய ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் சிஎஸ்கே அணிக்குத் திரும்பியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் நடராஜனை டெல்லி கேபிடல்ஸ் அணி வாங்கியுள்ளது.

ஐபிஎல் மெகா ஏலம்

2025 சீசனுக்கான ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜத்தா நகரில் நேற்று தொடங்கியது. இரு நாட்கள் நடக்கும் இந்த மெகா ஏலத்தில் ஐபிஎல் தொடரில் இருக்கும் 10 அணிகளும் தக்கவைத்துள்ள வீரர்களைத் தவிர்த்து மீதமுள்ள வீரர்களை ஏலத்தில் எடுக்க உள்ளது.

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மெகா ஏலம் நடக்கிறது. இந்த ஏலத்தில்தான் வீரர்கள் ஒட்டுமொத்தமாக கலைக்கப்பட்டு ஏலமிடப்படுகிறார்கள். இதில் 367 இந்திய வீரர்கள், 210 வெளிநாட்டு வீரர்கள் என 577 வீரர்கள் ஏலத்தில் கொண்டு வரப்படுகிறார்கள்.

இந்த ஏலத்தில் வீரர்களை விலைக்கு வாங்க ஒவ்வொரு அணியும் ரூ.120 கோடி செலவு செய்யலாம். இந்த தொகையில் தக்கவைப்பு வீரர்களுக்காக வழங்கப்பட்ட தொகையை கழித்தபின், மீதமுள்ள தொகைக்கு வீரர்களை ஒவ்வொரு அணியும் வாங்க முடியும்.

அணிகளின் கையிருப்பு எவ்வளவு?

பஞ்சாப் கிங்ஸ் அணி 2 வீரர்களை மட்டுமே தக்கவைத்து அதிகபட்சமாக ரூ.110.50 கோடி கையிருப்பு வைத்திருந்தது. அடுத்ததாக ஆர்சிபி அணி ரூ.83 கோடி, டெல்லி கேபிடல்ஸ் ரூ.73 கோடி, குஜராத் மற்றும் லக்னௌ அணிகள் தலா ரூ.69 கோடி கையிருப்பு வைத்திருந்தன.

சிஎஸ்கே அணி ரூ.55 கோடி, நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி ரூ.51 கோடி ரூபாயும், மும்பை, ஹைதராபாத் அணிகள் தலா ரூ.45 கோடி, ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 41 கோடி வைத்திருந்தன.

இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்கிய ஏலம், இரவு வரை நீடித்தது. முதல் நாள் ஏலத்தில் விக்கெட் கீப்பர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள், சுழற்பந்துவீச்சாளர்கள், பேட்டர்கள், அன்கேப்டு வீரர்கள், கேப்டு வீரர்கள், கேப்டு வெளிநாட்டு வீரர்கள், நட்சத்திர வீரர்கள் என பிரித்துப் பிரித்து ஏலம் விடப்பட்டனர். முதல் நாளில் மட்டும் ஒட்டுமொத்தமாக 72 வீரர்களை அணிகள் ஏலத்தில் எடுத்தன.

 
ஐபிஎல் மெகா ஏலம், நடராஜன், சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் அதிகபட்சம்

அதிகபட்சமாக இதுவரை ஐபிஎல் ஏலத்தில் இல்லாத வகையில் ரூ.27 கோடிக்கு ரிஷப் பந்தை லக்னெள அணி விலைக்கு வாங்கியது. கடந்த சீசனில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் ரூ.24 கோடிக்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது, அதைவிட ரிஷப் பந்த் விலைக்கு வாங்கப்பட்டார்.

ரிஷப் பந்த் ஏலத்தில் அறிவிக்கப்பட்டதும் அவரை வாங்க லக்னெள, ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணிகள் போட்டியிட்டன. ஒரு கட்டத்தில் சன்ரைசர்ஸ், லக்னெள அணிகள் கடுமையாக மோதின. முடிவில் ரூ.27 கோடிக்கு ரிஷப் பந்தை லக்னெள அணி வாங்கியது. இந்த சீசனுக்கு லக்னெள அணிக்கு கேப்டனாக ரிஷப் பந்த் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக ஸ்ரேயாஸ் அய்யரை ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி விலைக்கு வாங்கியது. ஸ்ரேயாஸ் அய்யரை வாங்க கொல்கத்தா அணி போட்டியிட்டாலும் ரூ.10 கோடிக்கு அதிகமாக ஏலம் கேட்கவில்லை. ஆனால், டெல்லி, பஞ்சாப் அணிகள் கடும் போட்டியிட்டன, இறுதியாக அவரை ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது.

ஐபிஎல் மெகா ஏலம், நடராஜன், சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

10 ஆண்டுகளுக்குப் பின் சிஎஸ்கே அணியில் அஸ்வின்

முதல்நாள் ஏலத்தில் சிஎஸ்கே அணி 7 வீரர்களை விலைக்கு வாங்கியது. ரவிச்சந்திரன் அஸ்வின் கடைசியாக 2015-ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியில் விளையாடிய நிலையில், 10 ஆண்டுகளுக்குப்பின் ரூ.9.75 கோடிக்கு சிஎஸ்கே வாங்கியது. அஸ்வின் ஐபிஎல் தொடரில் பெறும் அதிகபட்ச விலையாகும்.

ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் நூர் அகமதுவை ரூ.10 கோடிக்கும், நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திராவை ரூ.4 கோடிக்கும், டேவான் கான்வே ரூ.6.25 கோடிக்கும் சிஎஸ்கே அணி வாங்கியது. வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது ரூ.4.80 கோடி, ராகுல் திரிபாதி ரூ.3.40 கோடி, தமிழக ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் ரூ.1.20 கோடிக்கும் வாங்கப்பட்டனர்.

சிஎஸ்கே அணிக்கு தற்போது வலுவான வேகப்பந்துவீச்சாளர்கள், நடுவரிசை பேட்டர்கள் இல்லை. இதனால் இந்த தேவையை தீர்க்க 2வது ஏலத்தில் வீரர்களை எடுக்க முயலும். தற்போது சிஎஸ்கே அணியிடம் ரூ.15.60 கோடி கையிருப்பு இருக்கிறது, 13 வீரர்களை வாங்க முடியும்.

ஐபிஎல் மெகா ஏலம், நடராஜன், சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

மும்பை இந்தியன்சுக்கு என்ன தேவை?

மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைப்பில் பெரும்பகுதி பணத்தை செலவிட்டதால் முதல்நாள் ஏலத்தில் குறைந்த அளவே வீரர்களை வாங்கியது. வேகப்பந்துவீச்சாளர் டிரன்ட் போல்ட்டை மீண்டும் வாங்கியது மும்பை நிர்வாகம். போல்ட்டுக்கு ரூ.12.50 கோடி கொடுத்து அணிக்குள் மும்பை கொண்டு வந்தது. இது தவிர அன்கேப்டு வீரர் நமன் திர் ரூ.5.25 கோடி கொடுத்து மும்பை வாங்கியது.

மும்பை அணி தங்கள் அணியை பலப்படுத்த இன்னும் 9 வீரர்களை வாங்க வேண்டிய நிலையில் இருக்கிறது. குறிப்பாக ரோஹித் சர்மாவுடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்க வீரரைத் தேட வேண்டும். விக்கெட் கீப்பர், கீழ்வரிசை மிடில் ஆர்டர் பேட்டர், வேகப்பந்துவீச்சாளர்கள், சுழற்பந்துவீச்சாளர்களை வாங்க வேண்டிய நிலையில் இருக்கிறது. மும்பை அணியின் கையிருப்பாக ரூ.26.10 கோடி உள்ளது, 16 வீரர்களை வாங்கலாம்.

 
ஐபிஎல் மெகா ஏலம், நடராஜன், சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆர்சிபி என்ன செய்தது?

ஆர்சிபி அணி முதல்நாள் ஏலத்தில் வேகப்பந்துவீச்சாளர், ஆல்ரவுண்டர், விக்கெட் கீப்பர் என வகையாக வீரர்களைத் தேர்ந்தெடுத்தது. ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட்டை ரூ.12.50 கோடிக்கும், இங்கிலாந்து வீரர் பில் சால்ட் ரூ.11.50 கோடிக்கும், லிவிங்ஸ்டோன் ரூ.8.75 கோடிக்கும் ஆர்சிபி அணி வாங்கியது. விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மாவை ரூ.11 கோடிக்கு ஆர்சிபி வாங்கியது. ஆர்சிபி அணியில் தற்போது 9 வீரர்கள் மட்டுமே உள்ளனர்.

தொடக்க வீரர், நடுப்பகுதி பேட்டர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள், சுழற்பந்துவீச்சாளர்களை வாங்க வேண்டிய நிலையில் ஆர்சிபி அணி இருக்கிறது. ஆர்சிபி அணியிடம் ரூ.30.65 கோடி கையிருப்பு இருக்கிறது, 16 வீரர்களை வாங்கலாம், ஆர்டிஎம் வாய்ப்பை இதுவரை பயன்படுத்தவில்லை.

ஐபிஎல் மெகா ஏலம், நடராஜன், சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

8 வீரர்களை வாங்கிய சன்ரைசர்ஸ்

சன்ரைசர்ஸ் அணி முதல்நாள் ஏலத்தில் 8 வீரர்களை போட்டிபோட்டு வாங்கியது. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரருக்கு இஷான் கிஷனை ரூ.11.50 கோடிக்கும், வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியை ரூ.10 கோடிக்கும் சன்ரைசர்ஸ் வாங்கியது.

ஹர்சல் படேலை ரூ.8 கோடிக்கும், சுழற்பந்துவீச்சுக்கு ராகுல் சஹரை ரூ.3.20 கோடிக்கும், ஆடம் ஜம்பாவை ரூ.2.40 கோடிக்கும் சன்ரைசர்ஸ் வாங்கியது. அன்கேப்டு வீரர் அபினவ் மனோகரை ரூ.3.20 கோடிக்கும், சிமர்சிஜ் சிங்கை ரூ.1.20 கோடிக்கும் வாங்கியது.

முதல் நாளில் வலுவான விக்கெட் கீப்பர் பேட்டர், வேகப்பந்துவீச்சாளர்களை சன்ரைசர்ஸ் வளைத்துப் போட்டது. அந்த அணியிடம் ரூ.5.10 கோடி மட்டுமே இருப்பு உள்ளது, 12 வீரர்கள் வரை வாங்கலாம் என்பதால், உள்நாட்டு வீரர்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கும்,

ஐபிஎல் மெகா ஏலம், நடராஜன், சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெங்கடேஷுக்கு ஜாக்பாட்

கொல்கத்தா அணியால் விடுவிக்கப்பட்ட வெங்கடேஷ் அய்யர் மீண்டும் அந்த அணியால் வாங்கப்பட்டார். ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ரூ.23.75 கோடிக்கு வெங்கேடேஷை கொல்கத்தா அணி வாங்கியது. இது தவிர வேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியாவை ரூ.6.50 கோடிக்கும், குயின்டன் டீ காக்கை ரூ.3.60 கோடிக்கும், ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸை ரூ2 கோடிக்கும் வாங்கியது. அன்கேப்டு வீரர்கள் ரகுவன்சி(ரூ.3 கோடி), வைவப் அரோரா(ரூ.1.80கோடி), மயங்க் மார்கண்டேவை(ரூ.30லட்சம்) வாங்கியது.

கொல்கத்தா அணிக்கு தற்போது வலுவான நடுவரிசை பேட்டர்கள் தேவை. ரூ.10.05 கோடி கையிருப்பு இருப்பதால் அதற்கு முக்கியத்துவம் வழங்கும், 12 வீரர்களை வாங்க முடியும்.

ஐபிஎல் மெகா ஏலம், நடராஜன், சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரிஷப் பந்தை வாங்கிய லக்னெள

லக்னெள அணிக்கு இந்த சீசனுக்கு நல்ல கேப்டன் தேவை என்பதால், ரிஷப் பந்தை அதிகபட்சமாக ரூ.27 கோடிக்கு வாங்கியது. வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கானை ரூ.9.75 கோடிக்கும், டேவிட் மில்லர் ரூ.7.50 கோடிக்கும், மிட்ஷெல் மார்ஷ் ரூ.3.40 கோடிக்கும் வாங்கியது. மார்க்ரம் ரூ.2 கோடி, அப்துல்சமது ரூ.4.20 கோடிக்கும் விலைபோகினர்.

குஜராத் அணியிடம் தற்போது ரூ.14.85 கோடி கையிருப்பு இருக்கிறது, தொடக்க வீரர், வெளிநாட்டு வேகப்பந்துவீ்ச்சாளர்கள், கூடுதல் சுழற்பந்துவீச்சாளர்கள் தேவை என்பதால், 2வது நாள் ஏலத்தில் இதற்கு கவனம் செலுத்தும். இன்னும் 13 வீரர்களை ஏலத்தி்ல் எடுக்க முடியும்.

ஐபிஎல் மெகா ஏலம், நடராஜன், சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

கே.எல்.ராகுல், நடராஜனை வளைத்த டெல்லி

9 வீரர்களை டெல்லி கேபிடல்ஸ் அணி முதல் நாள் ஏலத்தில் வாங்கியது. அதில் குறிப்பாக கே.எல்.ராகுலை ரூ.14 கோடிக்கு வாங்கியது. இது தவிர மிட்ஷெல் ஸ்டார்க்கை ரூ.11.75 கோடிக்கு வாங்கியது. கடந்த சீசனில் ரூ.24 கோடிக்கு ஏலம் போகிய ஸ்டார்க் இந்தமுறை பாதிவிலைக்கே வாங்கப்பட்டார்.

தமிழக வீரர் டி நடராஜனை ரூ.10.75 கோடிக்கும், ஜேக்பிரேசர் மெக்ருக்கை ரூ.9 கோடிக்கும், ஹேரி ப்ரூக்கை ரூ.6.25 கோடிக்கும் வாங்கியது. சிஎஸ்கேயில் கடந்த முறை இருந்த சமீர் ரிஸ்வியை ரூ.95 லட்சத்துக்கும், மோகித் சர்மாவை ரூ.2.20 கோடிக்கும், கருண் நாயரை ரூ.50 லட்சத்துக்கும், அசுடோஷ் சர்மாவை ரூ.3.80 கோடிக்கும் வாங்கியது.

அதிரடி பேட்டர்கள், கேப்டன், நடுவரிசை பேட்டர்கள், வேகப்பந்துவீச்சாளர்களை நேற்று முதல்நாளில் டெல்லி அணி வாங்கியது. டெல்லி அணியிடம் தற்போது ரூ.13.80 கோடி கையிருப்பு இருக்கிறது, 12 வீரர்கள் வரை வாங்கலாம்.

ஐபிஎல் மெகா ஏலம், நடராஜன், சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

குழப்பத்தில் ராஜஸ்தான் அணி

ராஜஸ்தான் அணி நேற்றைய ஏலத்தில் குறிப்பிடத்தகுந்த வீரர்களை வாங்கவில்லை. ஜோப்ரா ஆர்ச்சரை மட்டும் ரூ.12.50 கோடிக்கு வாங்கியது. சுழற்பந்துவீச்சுக்காக தீக்சனா ரூ.4.40 கோடி, ஹசரங்கா ரூ.5.25 கோடிக்கு வாங்கியது. மும்பை அணியில் இருந்த ஆகாஷ் மத்வாலை ரூ.1.20 கோடிக்கும் வாங்கியது.

ராஜஸ்தான் இன்றைய ஏலத்தில் டாப்ஆர்டர் பேட்டர்கள், நடுவரிசை பேட்டர்கள், கூடுதல் வேகப்பந்துவீச்சாளர்களை எடுக்க கவனம் செலுத்தும். அந்த அணியிடம் ரூ.17.35 கோடி கையிருப்பு இருக்கிறது. 14 வீரர்களை வாங்கலாம்.

பெரிய மீன்களை எடுத்த குஜராத்

குஜராத் அணி முதல்நாள் ஏலத்தில் ஜாஸ் பட்லர்(ரூ.15.75 கோடி), முகமது சிராஜ் ரூ.12.25 கோடி, காகிசோ ரபாடா ரூ.10.75 கோடி, பிரசித் கிருஷ்ணா ரூ.9.50 கோடி ஆகிய முக்கிய வீரர்களை வாங்கியது.

இது தவிர மகிபால் லாம்ரோர், அனுஜ் ராவத் ஆகியோரையும் அந்த அணி வாங்கியது. நடுவரிசை பேட்டர்கள், தரமான சுழற்பந்துவீச்சாளர்கள் தேவை. இன்னும் ரூ.17.50 கோடி கையிருப்பு இருக்கிறது, 11 வீரர்களை வாங்கலாம்.

ஐபிஎல் மெகா ஏலம், நடராஜன், சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

சாஹலை வாங்கிய பஞ்சாப் அணி

பஞ்சாப் அணிக்கு சரியான கேப்டன் இந்த சீசனுக்குத் தேவை என்பதால் ஸ்ரேயாஸ் அய்யரை ரூ.26.75 கோடிக்கு வாங்கியது. சுழற்பந்துவீச்சாளர் சஹலை ரூ.18 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது. ஐபிஎல் வாழ்க்கையில் சஹல் பெறும்அதிகபட்ச விலையாகும்.

ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஸ்டாய்னிஷை ரூ.11 கோடிக்கும், மேக்ஸ்வெலை ரூ.4.20 கோடிக்கும், அர்ஷ்தீப் சிங்கை ரூ.18 கோடிக்கும் வாங்கியது. மும்பை அணியில் ஆடிய நேஹல் வதேராவை ரூ.4.20 கோடிக்கும், ஆர்சிபியில் ஆடிய விஜயகுமாரை ரூ.1.80 கோடிக்கும் வாங்கியது.

பஞ்சாப் அணிக்கு தற்போது தொடக்க ஆட்டக்காரர்கள், கூடுதல் வேகப்பந்துவீச்சாளர்கள், வெளிநாட்டு வீரர்கள் தேவை என்பதால் அதில் இன்றைய ஏலத்தில் கவனம் செலுத்தும். அந்த அணியிடம் இன்னும் ரூ.22.50 கோடி கையிருப்பு இருக்கிறது, 13 வீரர்களை வாங்கலாம்.

 
ஐபிஎல் மெகா ஏலம், நடராஜன், சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

வார்னருக்கு இந்த நிலையா?

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பியை பலமுறை பெற்ற டேவிட் வார்னர், தேவ்தத் படிக்கல், இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோ, மூத்த வீரர் பியூஷ் சாவ்லா, ஸ்ரேயாஸ் கோபால், வேகப்பந்துவீச்சாளர் கார்த்திக் தியாகி, யாஷ் துல் ஆகியோரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை.

இவருடன் சேர்த்து ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் நூர் அகமதுவையைும் சிஎஸ்கே வாங்கியுள்ளது.

கொல்கத்தா அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் அய்யர் ரூ.23.75 கோடிக்கு அந்த அணி மீண்டும் வாங்கியது. ஆல்ரவுண்டர்களில் அதிகபட்ச விலைக்கு வெங்கடேஷ் ஏலம் எடுக்கப்பட்டார்.

குஜராத் டைட்டன்ஸ் அணி, ஜாஸ் பட்லர், சிராஜ், ரபாடா, பிரசித் கிருஷ்ணா, மகிபால் லாம்ரோர் ஆகிய தரமான வீரர்களை முதல்நாளில் விலைக்கு வாங்கியது.

லக்னெள அணிக்கு சரியான கேப்டன் அமையாததால், கேப்டன் பதவிக்கு ரிஷப் பந்தை அதிகபட்ச விலைக்கு வாங்கியது. அதைத் தொடர்ந்து, டேவிட் மில்லர், ஆவேஷ் கான், மிட்ஷெல் மார்ஷ், மார்க்ரம், அப்துல் சமது ஆகியோரை வாங்கியது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல்நாள் ஏலத்தில் பெரிதாக வீரர்களை வாங்கவில்லை. கடந்த 4 சீசன்களுக்கு முன் ஆடிய வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரை வாங்கியது. சுழற்பந்துவீச்சுக்கு தீக்சனா, ஹசரங்கா, ஆல்ரவுண்டர் மத்வால் ஆகியோரை வாங்கியது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் ஏலம்: வீரர்கள் தேர்வில் வித்தியாசம் காட்டிய சிஎஸ்கே - அணியை ஆட்டிப்படைக்கும் மிகப்பெரிய குறை

ஐபிஎல் மெகா ஏலம், சிஎஸ்கே, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மகேந்திரசிங் தோனி
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பாணி ஐபிஎல் தொடரில் எப்போதுமே வித்தியாசமாக இருக்கும். தோனி கேப்டனாக இருந்தவரை, சாதாரண வீரரை அணிக்குள் கொண்டுவந்துகூட அவரை துருப்புச் சீட்டாக மாற்றிவிடுவார்.

மற்ற அணிகள் பந்துவீச்சாளர்கள் மீது கவனம் செலுத்தும் போது பேட்டர்கள் மீது சிஎஸ்கே கவனம் செலுத்தும், மற்ற அணிகள் பேட்டர்கள் மீது கவனம் செலுத்தும்போது ஆல்ரவுண்டர்களை சிஎஸ்கே அள்ளிவிடும், வெளிநாட்டு வீரர்களை வாங்கும் போது, உள்நாட்டு வீரர்களை தேர்ந்தெடுத்து சிஎஸ்கே வாங்கும். இதுபோன்ற வித்தியாசமான அனுகுமுறையுடன்தான் சிஎஸ்கே அணி ஏலத்தில் பங்கேற்கும்.

அந்த வகையில் 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 சீசனுக்கான மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி கடைபிடித்த அணுகுமுறை என்ன? சிஎஸ்கே அணி வாங்கிய வீரர்கள் யார், அணியின் பலம், பலவீனம், எதில் கோட்டைவிட்டது என்பது குறித்து பார்க்கலாம்.

5 வீரர்கள் தக்கவைப்பு

ஐபிஎல் ஏலம் தொடங்கிய போது சிஎஸ்கே அணி 5 வீரர்களைத் தக்கவைத்திருந்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மதீஷா பதிராணா, எம்.எஸ்.தோனி ஆகிய 5 வீரர்களை தக்கவைத்தது. அதற்கான தொகை போக சிஎஸ்கே அணியிடம் ஏலம் தொடங்கும் போது ரூ.55 கோடி கையிருப்பு இருந்தது.

வெளிநாட்டு வீரர்கள் யார்?

இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி 20 வீரர்களை விலைக்கு வாங்கியது. இதில் வெளிநாட்டு வீரர்களான டேவான் கான்வே(ரூ.6.25 கோடி), ரச்சின் ரவீந்திரா(ரூ.4 கோடி), நூர் அகமது(ரூ.10 கோடி), சாம் கரண்(ரூ.2.40கோடி), நாதன் எல்லிஸ்(ரூ.2 கோடி) ஜேமி ஓவர்டன்(ரூ.1.50கோடி) ஆகியோரையும் சிஎஸ்கே வாங்கியுள்ளது.

ஐபிஎல் மெகா ஏலம், சிஎஸ்கே, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ரவிச்சந்திரன் அஸ்வின்

உள்நாட்டு வீரர்கள் யார்?

14 உள்நாட்டு வீரர்களை சிஎஸ்கே அணி வாங்கியது. இதில் ரவிச்சந்திரன் அஸ்வின்(ரூ.9.75 கோடி), ராகுல் திரிபாதி(ரூ.3.40 கோடி), கலீல் அகமது(ரூ.4.80 கோடி), விஜய் சங்கர் (ரூ.1.20 கோடி), அன்சுல் கம்போஜ் (ரூ.3.40 கோடி) தீபக் ஹூடா(ரூ.1.70கோடி), ஆன்ட்ரே சித்தார்த்(ரூ.30 லட்சம்), வன்ஸ் பேடி(ரூ.55 லட்சம்), ஸ்ரேயாஸ் கோபால்(ரூ.30 லட்சம்), ராமகிருஷ்ணா கோஷ்(ரூ.30 லட்சம்), கமலேஷ் நாகர்கோட்டி(ரூ.30 லட்சம்), குர்ஜப்நீத் சிங் (ரூ.2.20 கோடி), முகேஷ் சவுத்ரி(ரூ.30லட்சம்), ஷேக் ரசீத்(ரூ.30 லட்சம்) ஆகியோர் அடங்குவர்.

சுழற்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம்

சிஎஸ்கே அணி இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் தரமான சுழற்பந்துவீச்சாளர்கள் மீது கவனம் செலுத்தியுள்ளது. முந்தைய சீசன்களில் ஜடேஜா, சான்ட்னர், தீக்சனா ஆகியோர் மட்டுமே சுழற்பந்துவீச்சாளர்களாக சிஎஸ்கே அணியில் இருந்தனர்.

ஆனால், இந்த முறை சுழற்பந்துவீச்சுப் படையை வலுவாக கட்டமைக்கும் வகையில் வீரர்கள் தேர்வில் முக்கியத்துவம் அளித்தது. ரவீந்திர ஜடேஜா இருக்கும் நிலையில் ஆஃப்-ஸ்பின்னர் ரவிச்சந்திர அஸ்வினை வாங்கியுள்ளது. 2015-ஆம் ஆண்டுக்குப்பின் அஸ்வின் மீண்டும் சிஎஸ்கே அணிக்குள் சென்றுள்ளார்.

 
ஐபிஎல் மெகா ஏலம், சிஎஸ்கே, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நூர் அகமது

அடுத்ததாக இடதுகை சினாமென் ஸ்பின்னர், ஆப்கானிஸ்தான் வீரர் நூர் அகமதுவை ரூ.10 கோடிக்கு சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்துள்ளது. அஸ்வினை விட நூர் அகமதுவுக்கு அனுபவம் குறைவுதான் இருப்பினும் அஸ்வினுக்குரிய விலையைவிட கூடுதலாக ரூ.25 லட்சம் கொடுத்து ஏலத்தில் வாங்கியது.

சிஎஸ்கே அணியைப் பொருத்தவரை பவர்ப்ளே ஓவர்களை விட நடுப்பகுதியில்தான் வழக்கமாக எதிரணி விக்கெட்டுகளை வீழ்த்தி, அவர்களின் ரன்ரேட்டை கட்டுப்படுத்தும். அதற்காக அஸ்வின், ஜடேஜா, நூர் அகமது ஆகியோரை சிஎஸ்கே அணி வலுவாகப் பயன்படுத்தலாம். இதில் ரவீந்திரா அல்லது ஷிவம் துபே, அல்லது விஜய் சங்கர் ஆகியோர் இருந்தால் 5-வது பந்துவீச்சாளராக அணியில் பயன்படுத்தப்படுவார்கள்.

சுழற்பந்துவீச்சுக்கு அதிலும் மெதுவாக வீசப்படும் பந்துகளுக்கு நன்கு ஒத்துழைக்கும் விக்கெட்டுகளில் நூர் அகமது நன்கு பந்துவீசக்கூடியவர் என்பதால் இவரை சிஎஸ்கே தேர்ந்தெடுத்தது. இவர்கள் தவிர உள்நாட்டு வீரர் ஸ்ரேயாஸ் கோபால் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோரும் சுழற்பந்துவீச்சாளர்கள். இதில் ஜடேஜா, அஸ்வின் இருவரும் நடுவரிசை மற்றும் கீழ்வரிசையில் கடைசி நேரத்தில் நன்கு பேட் செய்யக்கூடியவர்கள் என்ற அம்சமும் இருக்கிறது.

ஐபிஎல் மெகா ஏலம், சிஎஸ்கே, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ரவீந்திர ஜடேஜா

வேகப்பந்துவீச்சில் பலவீனமா?

சிஎஸ்கே அணியில் வேகப்பந்துவீச்சுக்கு அதிகமான வீரர்கள் இருப்பதாக தோற்றம் அளித்தாலும் வலுவான பின்புலத்தைக் கொண்ட, இந்திய மண்ணிலும், வெளிநாட்டிலும் சிறப்பாக பந்துவீசிய பந்துவீச்சாளர்களைத் தேட வேண்டியுள்ளது.

ஆஸ்திரேலிய வீரர் நாதன் எல்லீஸ் ஒட்டுமொத்தமாக 150 டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளவர் என்றாலும், சர்வதேச அளவில் 20 டி20 போட்டிகளில் தான் விளையாடியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடக்கும் லீக் போட்டி, ஷெப்பீல்ட் தொடரில் விளையாடியவர் என்பதால் வலதுகை வேகப்பந்துவீச்சாளரான எல்லீஸை சிஎஸ்கே வாங்கியுள்ளது.

சி.எஸ்.கே. அணியில் கடந்த காலத்தில் விளையாடியுள்ள இங்கிலாந்தைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான சாம் கரண், பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டன் ஆகியோரை வாங்கியுள்ளது. இதில் ஜேமி ஓவர்டன் 7 சர்வதேச டி20 போட்டிகளில்தான் விளையாடியுள்ளார். ஆனால், கராச்சி கிங்ஸ், சோமர்செட், கல்ப் கிங்ஸ், சர்ரே போன்ற கிளப்களில் விளையாடிய அனுபவம் அவருக்கு பலம் சேர்க்கிறது.

உள்நாட்டு வீரர்களில் விஜய் சங்கர், கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ணா கோஸ், அன்சுல் கம்போஜ் , குர்ஜாப்நீத் சிங், முகேஷ் சவுத்ரி ஆகியோரும் உள்ளனர்.

இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல். தொடர்களில் வேகப்பந்துவீச்சு என்பது பவர்ப்ளே, டெத் ஓவர்கள் மட்டும்தான், மற்ற 10 ஓவர்களிலும் ஆட்டத்தைத் திருப்ப சுழற்பந்துவீச்சாளர்கள்தான் பயன்படுவார்கள் என்பதால், அதன் பலத்தை சிஎஸ்கே அதிகப்படுத்தியுள்ளது. வேகப்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் அளித்ததைப் போல் வெளித்தோற்றத்தில் இருந்தாலும், சிஎஸ்கே வேகப்பந்துவீச்சு என்பது காற்றடைத்த பலூன்தான்.

 
ஐபிஎல் மெகா ஏலம், சிஎஸ்கே, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சாம் கரண்

ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்திய வீரர்

இதில் ஹரியானா வேகப்பந்துவீச்சாளர் அன்சுல் கம்போஜ் எனும் வீரரை ஏலத்தில் ரூ.3.40 கோடிக்கு சிஎஸ்கே வாங்கியது. சமீபத்தில் ரஞ்சிக் கோப்பையில் கேரள அணிக்கு எதிராக கம்போஜ் ஒரே இன்னிங்ஸில் 49 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை எடுத்ததால் அவரை போட்டிபோட்டு வாங்கியுள்ளது.

ரஞ்சிக் கோப்பையில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது வீரர், 39 ஆண்டுகளுக்குப் பின் சாதனை செய்தவர் எனும் பெருமையை கம்போஜ் பெற்றவர். கம்போஜ் அடிப்படை விலை ரூ.30 லட்சமாக இருந்த நிலையில், இவர் பெயர் அறிவிக்கப்பட்டதும் பஞ்சாப், டெல்லி அணிகள் போட்டியிட்டன. ஆனால் சிஎஸ்கே அவரை வாங்கிவிட்டது.

ஐபிஎல் மெகா ஏலம், சிஎஸ்கே, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அன்சுல் கம்போஜ்

தமிழக அணியிலும் டிஎன்பிஎல் தொடரில் மதுரை பேந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் குர்ஜப்நீத் சிங்கை ரூ.2.20 கோடிக்கு சிஎஸ்கே வாங்கியது. இடதுகை வேகப்பந்துவீச்சாளரான குர்ஜப்நீத் சிங் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடவில்லை, முதல்தரப் போட்டிகளிலும் 10 ஆட்டங்களுக்குள்தான் பங்கேற்றுள்ளார் ஆனால் இவர் மீது நம்பிக்கை வைத்து சிஎஸ்கே வாங்கியுள்ளது.

ரஞ்சிக் கோப்பையில் சவுராஷ்டிரா அணிக்கு எதிரான முதல் ஆட்டத்திலேயே குர்ஜப்நீதி சிங் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார், புஜாராவை டக்அவுட்டில் வெளியேற்றினார் 4 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை அறிமுக சீசனிலேயே எடுத்தார் என்பதால் இவரை வாங்கியுள்ளது.

ஏலத்தில் குர்ஜப்நீத் சிங்கிற்கு ரூ.30 லட்சம் அடிப்படை விலையாக இருந்தது. ஆனால், பஞ்சாப், குஜராத் அணிகள் போட்டியிட்டதில் சிஎஸ்கே அணி இறுதியாக வென்றது. டெத் ஓவர்கள், பவர்ப்ளே ஓவர்களில் பந்துவீச குர்ஜப்நீத் சிங்கை சிஎஸ்கே பயன்படுத்தும். அஸ்வின், யோமகேஷ் ஆகியோரின் வழிகாட்டலில் குர்ஜப்நீத் சிங் தனது கிரிக்கெட் வாழ்க்கையை வளர்த்தவர் என்பதால் அவர் மீது சிஎஸ்கே கவனம் திரும்பியது.

இவர்கள் தவிர நாகர்கோட்டி, விஜய் சங்கர், கலீல் அகமது, ராமகிருஷ்ணா கோஷ் என வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். சர்வதேச போட்டிகளில் பெரிதாக ஆடிய அனுபவம் அவர்களுக்கு இல்லை. இதில் விஜய் சங்கர், கலீல் அகமது ஆகிய இருவரும் உள்நாட்டில் அதிகம் விளையாடியிருந்தாலும் ஐபிஎல் களம் என்பது வேறு. விஜய் சங்கர், கலீல் அகமது ஆகிய இருவரும் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் என்று சர்வதேச தளத்தில் அங்கீகாரம் பெறவில்லை.

மதீஷா பதிராணாவை சிஎஸ்கே அணி தக்கவைத்துள்ளது என்றாலும், ஐபிஎல் போன்ற அதிரடியான களத்தில் பதிராணாவின் பந்துகளும் பறக்கவிடப்படும். ஐபிஎல் தொடரில் டெத் ஓவர்களிலும், பவர்ப்ளேயில் பந்துவீசிய பதிரணா சர்வதேச தளத்துக்கு இலங்கை அணியில் விளையாடிய போது பெரிதாக ஜொலிக்க முடியவில்லை.

சிஎஸ்கே அணியில் சர்வதேச தரத்துக்கு வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லை என்பது மிகப்பெரிய குறையாகும். அனுபவம் குறைந்த, உள்நாட்டில் மட்டும் விளையாடிய இளம் வீரர்களை மட்டும் வைத்துக்கொண்டு களத்தில் இறங்குகிறது.

பதிரணா, நாதன் எல்லீஸ், எவர்டன் போன்றோர் எந்த அளவுக்கு டெத் ஓவர்களிலும், பவர்ப்ளேயிலும் திறமையாகப் பந்துவீசுவார்கள் என்பது சந்தேகம்தான்.

ஐபிஎல் மெகா ஏலம், சிஎஸ்கே, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மதீஷா பதிராணா

ஆல்ரவுண்டர்களை அள்ளிய சிஎஸ்கே

கடந்த 2008-ஆம் ஆண்டு ஏலத்தில் இருந்தே சிஎஸ்கே அணி ஏலத்தில் ஆல்ரவுண்டர்களுக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கும். அதுபோல் இந்த முறையும் 10 ஆல்ரவுண்டர்களை சிஎஸ்கை வைத்துள்ளது.

ஜடேஜா, ஷிவம் துபே, அஸ்வின், சாம் கரண், ரச்சின் ரவீந்திரா, விஜய் சங்கர், கம்போஜ், ஓவர்டன், நாகர்கோட்டி, ராமகிருஷ்ணா கோஷ் என பட்டியல் பெரிதாக இருந்தாலும் நெருக்கடி நேரத்தில் ஆல்ரவுண்டர்களாக ஜொலிப்பது சிலர் மட்டும்தான்.

ஆல்ரவுண்டர்கள் வரிசையிலும் பலர் இருந்தாலும் இதில் ஓரளவுக்கு அனுபவம் இருக்கும் ஜடேஜா, அஸ்வின், ரவீந்திரா, சாம் கரண், விஜய் சங்கர் ஆகியோர் தான் இக்கட்டான நேரத்தில் கைகொடுக்கக் கூடியவர்கள்.

ஐபிஎல் மெகா ஏலம், சிஎஸ்கே, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ரச்சின் ரவீந்திரா

சிஎஸ்கே பேட்டிங் வரிசை எப்படி?

கடந்த சீசன்களில் தொடக்க வீரராக ரச்சின் ரவீந்திராவை களமிறக்கி பல போட்டிகளில் சிஎஸ்கே அணி கையைச் சுட்டுக்கொண்டது. ஆதலால் கெய்க்வாட்டுடன் சேர்ந்து டேவன் கான்வே களமிறங்கலாம். காயத்தால் கான்வே கடந்த சீசனில் விளையாடவில்லை.

வரும் சீசனில் ரவீந்திரா 3வது வீரராக களமிறக்கப்படலாம். நடுவரிசையைப் பலப்படுத்த அம்பதி ராயுடு இடத்தில் ராகுல் திரிபாதி, ஷிவம், ஜடேஜா, ஆகியோரும் கீழ்வரிசைக்கு தோனி, சாம் கரண், அஸ்வின் ஆகியோரும் இருக்கிறார்கள்.

பேட்டர்களைப் பொருத்தவரை சிஎஸ்கே அணியில் வலுவான வீரர்கள் இருக்கிறார்கள். 8வது வீரர் வரை அதிரடியாக விளையாடக் கூடியவர்கள் என்பதால், பெரிய ஸ்கோர் சேர்க்கும் திட்டத்துடன் சிஎஸ்கே செயல்படும். ஐபிஎல் தொடரில் 200 ரன்களுக்கு மேல் அடித்துவிட்டாலே எதிரணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி எளிதாக வென்றுவிடலாம் என்ற உத்தியை வெற்றிகரமாக செயல்படுத்தவே சிஎஸ்கே அணி ஆல்ரவுண்டர்களை அதிகம் எடுத்து, கடைசி வரிசை வரை பேட்டிங்கை பலப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு ஐ.பி.எல் ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்வதில் சென்னை அணி அதற்கேற்ற அணுகுமுறையையே கடைபிடித்தது.

 
ஐபிஎல் மெகா ஏலம், சிஎஸ்கே, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ருதுராஜ் கெய்க்வாட்

இம்பாக்ட் ப்ளேயர்

கடந்த இரு சீசன்களிலும் இம்பாக்ட் ப்ளேயர் விதி பலதாக்கங்களை ஒவ்வொரு அணியிலும் ஏற்படுத்தி வருகிறது ஆட்டத்தை திருப்பும் கருப்பு குதிரைகளாக இவர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் சிஎஸ்கே அணியில் கடந்த சீசன்களில் ஷிவம் துபே இருந்து வந்தார், இந்த முறை அவருடன் சேர்ந்து விஜய் சங்கர், நூர் அகமது, அன்சுல் கம்போஜ், அதிரடி பேட்டிங்கிற்கு தீபக் ஹூடா ஆகியோர் பயன்படுத்தப்படலாம்.

சிஎஸ்கே உத்தேச அணி

கெய்க்வாட்(கேப்டன்),டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, ஷிவம் துபே, எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், ஓவர்டன் அல்லது நாதன் எல்லீஸ் அல்லது கலீல் அகமது, பதிரணா

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிசயம் ஆனால் உண்மை; ஐபிஎல் இல் 13 வயது சிறுவனை 1.1 கோடி ரூபா ஏல விலையில் வாங்கியது RR

26 NOV, 2024 | 01:33 AM
image

(நெவில் அன்தனி)

இண்டியன் பிறீமியர் லீக் வரலாற்றில் 13 வயதுடைய சிறுவன் ஒருவனை ராஜஸ்தான் றோயல்ஸ் (RR) ஏலத்தில் எடுத்துள்ளது.

சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் இன்று நிறைவுக்கு வந்த 18ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்திற்கான வீரர்கள் ஏலத்தின்போது 13 வயதுடைய வைபவ் சூர்யாவன்ஷியை ஒரு கோடியே 10 இலட்சம் ரூபா ஏல விலையில் ராஜஸ்தான் றோயல்ஸ் தனது அணியில் இணைத்துக்கொண்டுள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதுடைய கிரிக்கெட் வீரர் ஒருவர் ஏலத்தில் விடப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.

அவரது அடிப்படை விலை 30 இலட்சம் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அந்த இளஞ் சிங்கத்தை எப்படியாவது ஏலத்தில் வாங்கி விட வேண்டும் என்ற பேரவாவுடன் ராஜஸ்தான் றோயல்ஸும் டெல்ஹி கெப்பிட்டல்ஸும் ஏலப் போட்டியில் இறங்கின. இறுதியில் ராஜஸ்தான் றோயல்ஸ் ஒரு கோடியே 10 இலட்சம் ரூபாவுக்கு அந்த சிறுவனை தனதாக்கிக்கொண்டது.

இந்தியாவின் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான ரஞ்சி கிண்ண கிரிக்கெட் போட்டியில் தனது 12ஆவது வயதில் விளையாடிய இடதுகை துடுப்பாட்ட வீரரான வைபவ் சூர்யாவன்ஷி, மிக அண்மையில் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் இடம்பிடித்தார்.

சென்னையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4 நாள் இளையோர் டெஸ்ட் கிரிக்கெட்  போட்டியில் 58 பந்துகளில் சதம் குவித்து பலத்த பாராட்டைப் பெற்றார்.

அவர் 62 பந்துகளில் 104 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ரன் அவுட் ஆனார்.

பிஹாரில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான ரந்திர் வர்மா கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் முச்சதம் குவித்து அசத்தியிருந்தார்.

வைபவ் சூர்யாவன்ஷி, இடதுகை சுழல்பந்துவீச்சாளருமாவார்.

இரண்டாம்  நாள் அதிக விலைக்கு வாங்கப்பட்டார் புவ்ணேஷ்வர்

இரண்டாம் நாள் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்டவர் வேகப்பந்துவீச்சாளர் புவ்ணேஸ்வர் குமார் ஆவார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தினால் கடந்த வருடம் 4.2 கோடி ரூபாவுக்கு வாங்கப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் புவ்ணேஸ்வர் குமாரை இந்த வருட ஏலத்தில் 6 கோடி ரூபா அதிகமாக செலுத்தி 10.75 கோடி ரூபாவுக்கு றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் வாங்கியுள்ளது.

கடந்த வருடம் ஏலத்தில் விடப்படாமல் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய வீரர் ஜேக் ப்ரேஸர் மெக்கேர்க்கை இந்த வருடம் அதே அணி 9 கோடி ரூபாவுக்கு ஏல விலைக்கு தக்கவைத்துக்கொண்டது.

இலங்கை வேகப்பந்துவீச்சாளர் நுவன் துஷாரவை 1.6 கோடி ரூபாவுக்கு றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மற்றொரு இலங்கையரான ஏஷான் மாலிங்கவை ஒரு கோடியே 20 இலட்சம் ரூபாவுக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இலங்கையின் சாதனை வீரர் கமிந்து மெண்டிஸை 75 இலட்சம் ரூபா அடிப்படை ஏல விலைக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இதே அடிப்படை விலைக்கு துஷ்மன்த சமீரவை டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியும் இணைத்துக்கொண்டுள்ளன.

இங்கிலாந்தின் சகலதுறை வீரர் சாம் கரன், தென் ஆபிரிக்காவின் முன்னாள் அணித் தலைவர் பவ் டு ப்ளெசிஸ் ஆகியோர் உட்பட இன்னும் சில முன்னணி வீரர்களின் ஏல விலைகள் கடந்த வருடத்தை விட சரிவடைந்திருந்தது.

வியாஸ்காந்த் விலைபோகவில்லை

5_vijaykanth_viyaskanth.png

இலங்கையின் யாழ். மைந்தன் சுழல்பந்துவீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த், இலங்கையின் ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க, வேகப்பந்துவீச்சாளர் டில்ஷான் மதுஷன்க, நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன், டெரில் மிச்செல், இந்தியாவின் மயான்க் அகர்வால், ப்ரித்வி ஷோ இரண்டாம் நாளன்று விலைபோகவில்லை.

2_buwneshwar_kumar.png

4_kamindu_mendis.png

3_nuwan_thushara.png

https://www.virakesari.lk/article/199683

  • கருத்துக்கள உறவுகள்

ப‌ழைய‌ ப‌டி சென்னை அணியில் த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ள்

 

அஸ்வினுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து அடுத்த‌ இர‌ண்டு ஜ‌பிஎல் தொட‌ரில் விளையாடி விட்டு தினேஸ் கார்த்திக்கை போல‌ அஸ்வினும் ஓய்வை அறிவித்து இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு வ‌ழி விட‌னும்..............................

  • கருத்துக்கள உறவுகள்

சில‌ ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை அடுத்த‌ ஜ‌பிஎல் சீச‌னில் எடுக்க‌ வில்லை..................தொட‌ர்ந்து ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில்சுத‌ப்பும் வீர‌ர்க‌ளை எடுக்கின‌ம்

 

யாழ்க‌ள‌ போட்டிக்காக‌ தான் என‌க்கு ஜ‌பிஎல் பார்க்க‌ பிடிக்கும்

ம‌ற்ற‌ம் ப‌டி ஜ‌பிஎல் மீது பெரிய‌ ஆர்வ‌ம் கிடையாது..............................

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜாம்பவான்கள் அடங்கிய ஆர்சிபி அணிக்கு இளம் வீரர் 'ரஜத் பட்டிதார்' கேப்டனாக தேர்வானது எப்படி?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ரஜத் பட்டிதார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், போத்தி ராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 15 பிப்ரவரி 2025

ஐபிஎல் 20 ஓவர் தொடரில் இதுவரை 17 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் 8 கேப்டன்கள், 7 தலைமைப் பயிற்சியாளர்கள், 5 முறை லோகோ மாற்றம், 2 முறை பெயர்மாற்றம் என இவ்வளவு செய்தும் இன்னும் ஒரு முறை கூட அந்த அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை.

இந்த முறையாவது கோப்பையை கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கையில் புதிய வீரர்கள் மற்றும் புதிய கேப்டன் ரஜத் பட்டிதாருடன் ஐபிஎல் தொடரை எதிர்கொள்ள இருக்கிறது ஆர்சிபி அணி.

2025 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணியை வழிநடத்த ரஜத் பட்டிதாரை கேப்டனாக நியமித்துள்ளது அந்த அணியின் நிர்வாகம். கடந்த 2 சீசன்களிலும் தென் ஆப்பிரிக்க அணியை சேர்ந்த டூப்பிளசி கேப்டனாக ஆர்சிபி அணியை வழிநடத்திய நிலையில், இந்த சீசனுக்கு விராட் கோலி கேப்டனாக மீண்டும் வருவார் என்று பல்வேறு ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது.

ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக இளம் வீரர் ரஜத் பட்டிதாரை கேப்டனாக ஆர்சிபி நிர்வாகம் நியமித்துள்ளது. அவருக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் பெரிதாக இல்லை, மேலும் அவர் 100 உள்நாட்டு போட்டிகளில் கூட விளையாடியாதில்லை.

இருப்பினும் இந்த சீசனில் விராட் கோலி, மேக்ஸ்வெல், டிம் டேவிட், ஹேசல்வுட், பில் சால்ட், லிவிங்ஸ்டோன், புவனேஷ்வர் குமார் போன்ற அனுபவம் மிக்க வீரர்கள் இருக்கும் இந்த அணியை எவ்வாறு வழிநடத்தப் போகிறார், யாருக்கு முக்கியத்துவம் தரப்போகிறார் என்பதில்தான் ரஜத் பட்டிதாரின் வெற்றி இருக்கிறது.

நனவாகாத கனவு

ஆர்சிபி அணிக்கும், ஐபிஎல் டி20 சாம்பியன் பட்டத்துக்கும் எட்டாப் பொருத்தமாகவே இருக்கிறது.

இதுவரை 17 சீசன்களில் 3 முறை இறுதிப்போட்டிவரை சென்ற ஆர்சிபி அணி, கடந்த 5 சீசன்களில் 4 முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்றுள்ளது, ஒருமுறைகூட சாம்பியன் பட்டத்தை அந்த அணியால் வெல்ல முடியவில்லை.

தொடக்கத்தில் இருந்து தற்போதுவரை ராகுல் டிராவிட், கெவின் பீட்டர்ஸன், அணில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி, விராட் கோலி, ஷேன் வாட்ஸன், டூப்பிளசி உட்பட பல ஜாம்பவான்கள் கேப்டனாக இருந்தபோதிலும் அந்த அணியால் அதிகபட்சமாக பைனல் செல்ல முடிந்ததே தவிர சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற முடியவில்லை.

அதேசமயம், தொடக்கத்திலிருந்து பல முன்னணி வீரர்களையும் பயிற்சியாளர்களாக மாற்றிப்பார்த்தது ஆர்சிபி அணி. வெங்கடேஷ் பிரசாத், ரே ஜென்னிங்ஸ், டேனியல் வெட்டோரி, சைமன் கேடிச், கேரி கிறிஸ்டன், சஞ்சய் பங்கர், ஆன்டி பிளவர் ஆகியோரை அணியில் நியமித்து பார்த்தாலும் ஒரு முறைகூட கோப்பையை வெல்ல முடியவில்லை.

ஆனால், 2025 ஐபிஎல் சீசனில் 3 வீரர்களை மட்டுமே தக்கவைத்த ஆர்சிபி அணி, முற்றிலும் புதிய வீரர்களுடன் களம் காண இருக்கிறது. கேப்டனாகவும் யாரும் எதிர்பாரா வகையில் இளம் வீரரை அறிமுகப்படுத்துகிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ரஜத் பட்டிதார்

பட மூலாதாரம்,RAJATPATIDAR/INSTAGRAM

8ஆம் வகுப்பு பாஸ் செய்ய திணறியவர்

ஆர்சிபி அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் ரஜத் பட்டிதார் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 1993 ஆம் ஆண்டு ஜூன் 1ம் தேதி அன்று பிறந்தார்.

பட்டிதாரின் தந்தை மனோகர் பட்டிதார் பெரிய வர்த்தகர் என்பதால் செல்வச் செழிப்பான சூழிலில் ரஜத் பட்டிதார் வளர்ந்தார். சிறுவயதிலிருந்து ரஜத் பட்டிதார் கிரிக்கெட்டில் ஆர்வமாக இருந்ததால், அவருக்கு 8 வயது ஆகும்போதே அவர் கிரிக்கெட் பயிற்சிக்கான வகுப்புகளில் குடும்பத்தினர் சேர்த்தனர்.

இந்தூரில் உள்ள நியூ திகம்பர் பள்ளியில் படித்து முடித்த பிறகு, அவர் குரு வஷிஸ்டா கல்லூரில் கல்லூரிப்படிப்பையும் முடித்தார்.

ரஜத் பட்டிதார் குறித்து அவரின் தந்தை மனோகர் பட்டிதார் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், "சிறுவயதில் இருந்தே ரஜத் பட்டித்தாருக்கு படிப்பின் மீது துளி கூட கவனம் இருந்தது இல்லை, 8-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறவே அவர் கடுமையாக சிரமப்பட்டார். கிரிக்கெட் பயிற்சிக்குச் சென்றபின் படிப்பின் மீது அவரது ஆர்வம் இன்னும் மோசமானது", என்றார்.

"கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, ரஞ்சிக் கோப்பைக்கு ரஜத் பட்டிதார் தேர்வானபின் அவருக்கு முழுசுதந்திரம் அளித்தோம், முழுமையாக கிரிக்கெட்டில் கவனம் செலுத்த அனுமதித்தோம். கிரிக்கெட் விளையாடுவதற்காக குடும்ப நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்க மாட்டார்", என்றார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ரஜத் பட்டிதார்

பட மூலாதாரம்,RAJATPATIDAR/INSTAGRAM

ரஞ்சிகோப்பைத் தொடரில் அறிமுகம்

2015-16 ஆம் ஆண்டு நடந்த ரஞ்சிக் கோப்பைத் தொடரில்தான் மத்திய பிரதேச அணிக்காக விளையாட ரஜத் பட்டிதார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் மண்டல அளவிலான டி20 தொடருக்கும் பட்டிதார் தேர்ந்தெடுக்கப்பட்டு அவரின் கிரிக்கெட் வாழ்க்கை மெல்ல வளர்ந்தது.

2018-19 ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பை தொடரில் மத்திய பிரதேச அணிக்காக ஆடிய ரஜத் பட்டிதார் 8 போட்டிகளில் 713 ரன்கள் சேர்த்து முன்னணி வீரராக வலம்வந்தார். 2019 ஆம் ஆண்டில் இந்திய அணியின் ப்ளூ அணியிலும் பட்டிதாருக்கு இடம் கிடைத்தது.

இதுவரை 68 முதல் தரப் போட்டிகளில் விளையாடிய ரஜத் பட்டிதார் 13 சதங்கள் 24 அரைசதங்கள் உட்பட 4738 ரன்கள் சேர்த்துள்ளார். 64 லிஸ்ட் ஏ போட்டிகளில் பங்கேற்றுள்ள பட்டிதார் 4 சதங்கள், 13 அரைசதங்கள் உள்பட 2211 ரன்கள் சேர்த்துள்ளார். 75 டி20 போட்டிகளில் ஆடி 2463 ரன்களையும் அவர் சேர்த்துள்ளார்.

சமீபத்தில் நடந்த சையத் முஷ்டாக் அலி கோப்பைத் தொடரிலும் மத்திய பிரேதச அணியின் கேப்டனாக ரஜத் பட்டிதார் நியமிக்கப்பட்டார். 2024-25 சயத் முஸ்தாக் அலி கோப்பைத் தொடரில் மத்திய பிரதேச அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச்சென்றார் பட்டிதார்.

சையத் முஷ்டாக் அலி தொடரில் 9 இன்னிங்ஸில் 428 ரன்கள் குவித்து 2வது அதிகபட்ச ரன் குவித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றார். அதன்பின் விஜய் ஹசாரே கோப்பைத் தொடரிலும் மத்திய பிரதேச அணியின் கேப்டனாக பட்டிதார் நியமிக்கப்பட்டு 226 ரன்கள் குவித்தார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ரஜத் பட்டிதார்

பட மூலாதாரம்,RAJATPATIDAR/INSTAGRAM

ஐபிஎல் தொடரில் அறிமுகம்

2021-ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஆர்சிபி அணி முதல்முறையாக ரஜத் பட்டிதாரை ஏலத்தில் ரூ.20லட்சத்துக்கு வாங்கியது. இந்தத் தொடரில் பட்டிதாருக்கு பெரிதாக வாய்ப்புக் கிடைக்கவில்லை, 4 போட்டிகளில் 71 ரன்கள் மட்டுமே பட்டிதாரால் சேர்க்க முடிந்தது.

2022-ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ரஜத் பட்டிதாரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. ஆனால், ஆர்சிபி அணியில் இடம் பெற்றிருந்த லிவித் சிசோடியா என்ற வீரர் காயத்தால் தொடரின் பாதியிலேயே விலகியதால், ரூ.20 லட்சத்துக்கு ரஜத் பட்டிதாரை ஆர்சிபி அணி மீண்டும் வாங்கி வாய்ப்பளித்தது.

ஆனால், இந்த முறை தனக்குக் கிடைத்த வாய்ப்பை பட்டிதார் தவறவிடவில்லை. எலிமினேட்டர் சுற்றில் லக்னெள அணிக்கு எதிரான ஆட்டத்தில் பட்டிதார் 54 பந்துகளில் 112 ரன்கள் குவித்து மாபெரும் வெற்றியை ஆர்சிபிக்கு பெற்றுக்கொடுத்தார். 8 போட்டிகளில் பட்டிதார் 333 ரன்கள் குவித்து தன்னுடைய திறமையை நிரூபித்தார். இந்த சீசன் பட்டிதாருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தவே 2023 சீசனில் ஆர்சிபி அணி பட்டிதாரை தக்கவைத்து, 2024 ஏலத்திலும் பட்டிதாரை தக்கவைத்து, கேப்டனாக்கியுள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ரஜத் பட்டிதார்

பட மூலாதாரம்,RAJATPATIDAR/INSTAGRAM

ஆர்சிபிக்காக திருமணம் தள்ளிவைப்பு

ஆர்சிபி அணியில் விளையாடுவதற்காகவே தனக்கு நடக்க இருந்த திருமணத்தையே ஒத்திவைத்தவர் ரஜத் பட்டிதார். ரஜத் பட்டிதாருக்கும், குஞ்சன் பட்டிதார் என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது.

2022 ஐபிஎல் ஏலத்தில் ரஜத்பட்டிதாரை எந்த அணியும் வாங்கவில்லை. இதனால் ஐபிஎல் நடக்கும் மே மாதம் 9ம் தேதி ரஜத் பட்டிதார் திருமணம் நடத்த முடிவுசெய்யப்பட்டது. ஆனால், ஆர்சிபி அணியில் சிசோடியா காயத்தால் பாதியிலேயே விலகியதால் அவருக்குப் பதிலாக பட்டிதாரை ஆர்சிபி அணி அழைத்தது.

இதற்காக அவர் தனக்கு நடக்க இருந்த திருமணத்தை தள்ளி வைத்தார். திருமணத் தேதியை ஐபிஎல் தொடர் முடிந்தபின் வைத்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்து ஐபிஎல் போட்டிகளில் விளையாட சென்றுவிட்டார். ஐபிஎல் தொடர் முடிந்தபின்புதான் ரஜத் பட்டிதார் குஞ்சன் பட்டிதாரை திருமணம் செய்துகொண்டார். இதை பட்டிதாரின் தந்தை மனோகர் பட்டிதார் "தி இந்தியன் எக்ஸ்பிரஸ்" நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ரஜத் பட்டிதார்

பட மூலாதாரம்,RAJATPATIDAR/INSTAGRAM

பட்டிதாரின் ப்ளேயிங் ஸ்டைல், வலிமை

ரஜத் பட்டிதார் ஸ்ட்ரோக் ப்ளே மற்றும் பேட்டிங்கில் நல்ல ஷாட்களை ஆடக்கூடியவர். குறிப்பாக சுழற்பந்துவீச்சுக்கு எதிராக பலவிதமான ஷாட்களை அற்புதமாக பட்டிதார் ஆடக்கூடியவர். அணியில் தேவைப்படும் போது ஆங்கர் ரோலிலும், தொடக்க வீரராக களமிறங்கும்போது ஆக்ரோஷமான அதிரடி பேட்டிங்கையும் பட்டிதார் வெளிப்படுத்தக்கூடியவர்.

வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சை எளிதாக சமாளித்து பேட் செய்யக்கூடிய திறமை படைத்தவர். உள்நாட்டுப் போட்டிகள், ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சிறப்பாக விளையாடக் கூடியவர். 2022 ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் பட்டிதாரின் சதம், கடுமையான நெருக்கடியிலும் தன்னால் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையை வெளிப்படுத்தியது. அதுவே அவருக்கான திருப்புமுனையாகவும் அமைந்தது.

ஆர்சிபி கேப்டனாக ரஜத் பட்டிதார் தேர்வானது எப்படி?

ஆர்சிபி அணியின் தலைமைப்பயிற்சியாளர் ஆன்டி பிளவர் கிரிக்இன்போ இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், ஆர்சிபி அணியின் கேப்டனாக பட்டிதாரை ஏன் தேர்வு செய்தனர் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில்," ரஜத் பட்டிதாரைப் பற்றி என்னால் நீண்டநேரம் பேச முடியும். பகிர்ந்து கொள்ள ஸ்வாரஸ்யமாக இருக்கும் என்று நான் நினைத்த மூன்று முக்கிய விஷயங்களை கூறுகிறேன். முதலாவதாக பட்டிதாரின் அமைதி மற்றும் எளிமை. இதுதான் அவருக்குரிய கேப்டன் பதவியை வழங்க பிரதான காரணமாக இருந்தது. ஒரு கேப்டனாக ஐபிஎல் அணிக்கு வரும்போது மிகவும் நிதானமாக, பதற்றமின்றி, எந்த சூழலையும் அமைதியாக கையாளும் திறமை இவருக்கு இருந்தது.

அது மட்டுமல்லாமல் மத்திய பிரதேச அணிக்காக சையத் முஷ்டாக் அலி தொடரில் கேப்டனாக பட்டிதார் செயல்பட்டதை நான் கூர்ந்து கவனித்திருக்கிறேன். அவரது முடிவு எடுக்கும் திறன், கிரிக்கெட் களத்தில் அவரின் அர்ப்பணிப்பு, வீரர்களுக்கு வழங்கும் ஆலோசனைகள் இவர் கேப்டனாக தகுதியானவர் என்பதை எனக்கு உணர்த்தின.

இரண்டாவது விஷயம், அவர் இயல்பாகவே மிகவும் அமைதியானவர், தன்னை கவனித்துக்கொள்வது, அவரைச் சுற்றியுள்ளவர்களின் மேல் அவர் காண்பிக்கும் அக்கறை, அவருடன் விளையாடும் சகவீரர்கள் குறித்த அக்கறை, டிரஸ்ஸிங் ரூமில் அவரின் போக்கு அனைத்தும் எனக்கு பிடித்திருந்தது. சக வீரர்களுக்கு அளிக்கும் மரியாதை, அக்கறை அவரின் முக்கிய தகுதிகளாக எனக்குத் தெரிந்தது. ஒரு கேப்டனுக்கு இந்த தகுதிகள் முக்கியமானவை, அப்போதுதான் சகவீரர்கள் கேப்டனை பின்பற்றி நடக்க முடியும்.

மூன்றாவதாக, ரஜத் பட்டிதாரின் உத்வேகம். அணியில் ஏற்ற, இறக்கங்கள் வரும்போது அதீத வலிமையுடன், எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதில் பட்டிதார் சிறந்தவர். அதனால்தான் பட்டிதாரை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தியுள்ளோம்" எனத் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

ஜாம்பவான்கள் அடங்கிய ஆர்சிபி அணிக்கு இளம் வீரர் 'ரஜத் பட்டிதார்' கேப்டனாக தேர்வானது எப்படி?

  • கருத்துக்கள உறவுகள்
On 29/9/2024 at 12:30, ஏராளன் said:

ஐபிஎல் புதிய விதிகளால் தோனியின் ஊதியம் குறைய வாய்ப்பு - அடுத்த ஆண்டு விளையாடுவாரா?

ஐபிஎல் புதிய விதிகள், தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 39 நிமிடங்களுக்கு முன்னர்

2025ஆம் ஆண்டு தொடங்க இருக்கும் ஐபிஎல் டி20 தொடரின் 18வது சீசனுக்கான புதிய விதிகளை ஐபிஎல் நிர்வாகக் குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி ஒரு அணி எத்தனை வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம், சர்வதேச கிரிக்கெட் விளையாடாத வீரர்களின் நிலை, அவர்களின் ஊதியம், ஏலத்தில் பங்கேற்று தேர்வான பின் பங்கேற்காத வீரர்களுக்கு தண்டனை விவரம், வீரர்களுக்கான புதிய போனஸ், அணிகளின் கையிருப்பு தொகை அதிகரிப்பு, ஓய்வு பெற்ற வீரர்கள் மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க வாய்ப்பு என்பன உள்பட பல்வேறு மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஐ.பி.எல்.லில் வரும் புதிய விதிகள் சி.எஸ்.கேவைச் சேர்ந்த மூத்த வீரர் தோனிக்கு சாதகமா, பாதகமா? அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் அவர் விளையாடுவாரா?

ஐபிஎல் புதிய விதிகள் என்ன?

2025 - 2027 ஐபிஎல் சீசனுக்கான விதிகள் குறித்து முடிவு செய்ய பெங்களூருவில் நேற்று(செப்டம்பர் 28) ஐபிஎல் நிர்வாகக் குழுக் கூட்டமும், அணி உரிமையாளர்களுடன் ஐபிஎல் நிர்வாகிகள் ஆலோசனையும் நடந்தது. இந்த ஆலோசனைக்குப் பின் புதிய விதிகள் குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

1. ஐபிஎல் தொடரில் உள்ள 10 அணிகளும் தங்களின் அணி வீரர்கள் பட்டியலில் 6 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். அதனை தக்கவைப்பு அல்லது ஆர்டிஎம் விதியின் மூலம் நடைமுறைப்படுத்தலாம்.

2. இந்த தக்கவைப்பு பட்டியலில் அதிகபட்சமாக 5 சர்வதேச வீரர்கள் (உள்நாடு மற்றும் வெளிநாட்டு வீரர்கள்) இருக்கலாம். அதிகபட்சமாக 2 சர்வதேச கிரிக்கெட் ஆடியிராத (அன்கேப்டு) வீரர்கள் இருக்கலாம்.

3. ஐபிஎல்-2025 ஏலத்தின் போது அணிகளின் கையிருப்புத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. 2024 சீசனின் போது அணி ஏலத்தொகை மற்றும் ஊக்கத்தொகை என ரூ.110 கோடி இருந்தது. இனிவரும் சீசனில் ஏலத்தொகை, ஊக்கத்தொகை மற்றும் போட்டி ஊதியம் எனச் சேர்க்கப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டில் ரூ.146 கோடியும், 2026 சீசனில் ரூ.151 கோடியாகவும், 2027 சீசனில் ரூ.157 கோடியாகவும் உயர்த்தப்படும்.

4. ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக போட்டி ஊதியம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம்பாக்ட் ப்ளேயர் உள்பட விளையாடும் அனைத்து வீரர்களுக்கும் ஒவ்வொரு போட்டியின் போதும் ரூ.7.50 லட்சம் வழங்கப்படும். இந்தத் தொகை ஒப்பந்த தொகையுடன் சேர்த்து வழங்கப்படும்.

ஐபிஎல் புதிய விதிகள், தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா

5. வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க வேண்டுமானால் கட்டாயமாக தங்களைப் பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை வெளிநாட்டு வீரர் பதிவு செய்யாமல் இருந்தால், அந்த வீரர் நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாட தகுதியற்றவராக கருதப்படுவார்.

6. ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்த எந்த வீரரும், ஏலத்தில் ஒரு அணியால் வாங்கப்பட்டபின், சீசன் தொடங்குவதற்கு முன்பாக தங்களால் விளையாட முடியாத நிலை இருப்பதாக அறிவிக்க நேர்ந்தால், அந்த வீரர் அந்தத் தொடரும் அடுத்து வரும் 2 ஐபிஎல் சீசனிலும் ஏலத்தில் பங்கேற்கத் தடை விதிக்கப்படும்.

7. கேப்டு இந்திய வீரர் “அன்கேப்டு வீரராக” மாற முடியும். அதாவது சர்வதேச போட்டிகளில் பங்கேற்று அனுபவமுள்ள, ஓய்வு பெற்ற ஒரு வீரர் கடந்த 5 ஆண்டுகளாக இந்திய அணியின் டெஸ்ட், ஒருநாள், மற்றும் டி20 அணியில் பங்கேற்காமல் இருந்தால், பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்தில் இடம் பெறாமல் இருந்தால் அவர் “அன்கேப்டு வீரராக” மாறுவார். இந்த விதி இந்திய வீரர்களுக்கு மட்டுமே செல்லும்.

8. இம்பாக்ட் ப்ளேயர் விதிமுறை 2027 ஐபிஎல் சீசன் வரை தொடரும்.

 

புதிய விதிகள் தோனிக்கு சாதகமாக அமையுமா?

ஐபிஎல் புதிய விதிகள், தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2020ம் ஆண்டு இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார்

கேப்டு வீரர்களை “அன்கேப்டு வீரராக” கருதலாம் என்ற விதிமுறையை ஐபிஎல் நிர்வாகக் குழு கொண்டுவந்த போது அதை பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளதாக கிரிக்இன்போ இணையதளம் தெரிவித்துள்ளது. மூத்த வீரர்கள் ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆன பின் அவர்களை அன்கேப்டு வீரர்களாகக் கருதுவது அவர்களை அவமதிப்பு செய்வதாகும் என்று சன்ரைசர்ஸ் அணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

அது மட்டுமல்லாமல் கேப்டு வீரராக இருந்து அதிக ஊதியம் பெற்று ஐபிஎல் தொடரில் விளையாடிய மூத்த வீரர் அன்கேப்டு வீரராக குறைந்த ஊதியம் எவ்வாறு பெறுவார் என்றும் நிர்வாகிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனாலும் இந்த விதியை ஐபிஎல் நிர்வாகக்குழு மீண்டும் கொண்டு வந்துள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டு இந்த விதிமுறை கொண்டுவரப்பட்டது, ஆனால், இதில் எந்த வீரரும் தேர்ந்தெடுக்கப்படாததால் 2021-ஆம் ஆண்டு சீசனில் இந்த விதி நீக்கப்பட்டது. இப்போது 3 ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த அன்கேப்டு விதிமுறையால், கடந்த 5 ஆண்டுகளாக எந்த சர்வதேச போட்டியிலும், இந்திய அணியின் எந்தப் பிரிவிலும், மத்திய ஒப்பந்தத்திலும் இடம் பெறாத மூத்த வீரர் அன்கேப்டு வீரராகக் கருதப்படுவார். இந்த விதிமுறை முக்கியமாக சிஎஸ்கேயின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை தக்கவைக்கவே கொண்டுவரப்பட்டுள்ளதாக கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர்.

தோனி ஊதியம் குறைய வாய்ப்பு - அடுத்த ஆண்டு விளையாடுவாரா?

ஐபிஎல் புதிய விதிகள், தோனி

பட மூலாதாரம்,SPORTSPICZ

படக்குறிப்பு, கடந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டார்.

2022ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தின் போது ரூ.12 கோடிக்கு எம்எஸ் தோனியை சிஎஸ்கே அணி தக்கவைத்தது. 2020ம் ஆண்டு இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார், வரும் ஜூலை மாதத்தோடு அவருக்கு 43 வயது பிறக்கிறது. தோனி கடந்த 5 ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பெறாமல், மத்திய ஒப்பந்தத்திலும் இடம் பெறாமல் இருப்பதால் “அன்கேப்டு வீரராக” அவரை மாற்ற சிஎஸ்கே அணி முடிவு செய்யலாம்.

அன்கேப்டு வீரராக தோனியை சிஎஸ்கே நிர்வாகம் தேர்வு செய்தால் அவருக்கான அதிகபட்ச ஊதியம் ரூ.4 கோடியாகக் குறையும். ரூ.12 கோடி ஊதியத்திலிருந்து தோனிக்கு ரூ.8 கோடி குறையும். கடந்த 2023ம் ஆண்டு சீசனுக்கு பின் முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டு கடந்த சீசனில் தோனி விளையாடினார். சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டார்.

அப்போது தோனி அளித்த பேட்டியில் “என் எதிர்காலம் குறித்து முடிவு செய்ய ஐபிஎல் தக்கவைப்பு விதிமுறையில் செய்யப்படும் மாற்றத்தைப் பார்த்துவிட்டு முடிவு செய்யும்” எனத் தெரிவித்திருந்தார். இப்போது புதிய விதிகள் வந்துள்ளதால், தோனியை அன்கேப்டு வீரராக களமிறக்க சிஎஸ்கே முடிவு செய்யலாம்.

மேலும், கடந்த 5 ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பெறாமல், மத்திய ஒப்பந்தத்திலும் இல்லாத ஓய்வு பெற்ற பல இந்திய வீரர்கள் ஏலத்தில் இடம் பெறவும் வாய்ப்புண்டு. குறிப்பாக யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் மீண்டும் ஏலத்தில் எடுக்கப்படலாம்.

 

ஐபிஎல் புதிய விதிகள், தோனி

பட மூலாதாரம்,SPORTSPICZ

வீரர்கள் காயத்தால் விலகினால் என்ன ஆகும்?

ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் அவர் சார்ந்திருக்கும் அணி மாற்று வீரரை 7-வது போட்டி முடிவதற்குள் அறிவிக்கலாம் என்று கடந்த சீசன் வரை நடைமுறையில் இருந்தது. புதிய விதிமுறையின்படி, 2025 ஐபிஎல் சீசனில் மாற்று வீரரை 12வது போட்டி முடிவதற்குள் அறிவிக்க வேண்டும் என நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

தக்கவைப்பு முறையிலும் புதிய மாற்றம்

ஐபிஎல் புதிய விதிகள், தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2025 சீசனில் ஒரு அணி அதிகபட்சமாக 5 கேப்டு வீரர்களை தக்கவைக்கலாம் (புகைப்படத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் ஷர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா)

வீரர்களைத் தக்கவைப்பு முறையிலும் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. 2025 சீசனில் ஒரு அணி அதிகபட்சமாக 5 கேப்டு வீரர்களை தக்கவைக்கலாம், அதிகபட்சமாக 2 அன்கேப்டு வீரர்களைத் தக்கவைக்கலாம். இதில் முதல் 3 வீரர்களைத் தக்க வைக்கும்போது அந்த வீரர்களுக்கான தொகை ரூ.18, ரூ.14, ரூ.11 கோடி என ஏலத் தொகை இருப்பிலிருந்து (பர்ஸ்) கழிக்கப்படும். அதன்பின் அடுத்த 2 வீரர்களுக்கு ரூ.18 மற்றும் ரூ.14 என கழிக்கப்படும். அன்கேப்டு வீரர் ஒருவருக்கு ரூ.4 கோடி கழிக்கப்படும், 2 அன்கேப்டு வீரர்களைத் தக்கவைத்தால் ரூ.8 கோடி பர்ஸிலிருந்து கழிக்கப்படும்.

2025 சீசனில் ஊதிய முறை

ஐபிஎல் வரலாற்றில் வீரர்களுக்கு முதல்முறையாக ஊதிய முறையை ஐபிஎல் நிர்வாகம் 2025 ஐபிஎல் சீசனில் கொண்டு வருகிறது. இதன்படி ஒர் அணியில் உள்ள 12 வீரர்களுக்கும் போட்டி ஒவ்வொன்றுக்கும் ரூ.7.50 லட்சம் ஊதியமாக வழங்கப்படும். இந்த ஊதியத் தொகைக்காக ஒவ்வொரு அணிக்கும் தனித்தனியாக ரூ.12.60 கோடி வழங்கப்படும். ஒரு வீரர் சீசனில் உள்ள அனைத்துப் போட்டிகளிலும் விளையாடினால் ஒப்பந்த தொகையை விட கூடுதலாக ரூ.1.05 கோடி கிடைக்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c625w7xdzpeo

பாருங்கோ வெளி நாட்டு வீர‌ர்க‌ளுக்கு எவ‌ள‌வு கெடுபிடி கொடுக்கின‌ம்

என‌க்கு ஜ‌பிஎல் விளையாட்டின் மீது ஆர்வ‌ம் இல்லை............ஜ‌பிஎல் தொட‌ங்க‌ப் ப‌ட்ட‌ 2008க‌ளில் இருந்து 2011வ‌ரை குட்ட‌ த‌ட்ட‌ ப‌ல‌ விளையாட்டுக்க‌ள் பார்த்தேன்

இப்ப‌ பார்ப்ப‌து மிக‌ மிக‌ குறைவு........................................

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்க‌ன‌வே பாக்கிஸ்தான் வீர‌ர்க‌ளை த‌ள்ளி வைச்சாச்சு

இப்போது வெளி நாட்டு வீர‌ர்க‌ளுக்கு மிர‌ட்ட‌ல்

வெளி நாட்டு வீர‌ர்க‌ள் இல்லை என்றால் ஜ‌பிஎல்லுக்கு வ‌ர‌வேற்ப்பு இருக்காது....................

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2025: சிஎஸ்கே ஆட்டங்கள் எப்போது? கேப்டன்கள், தொடக்க விழா, மாறும் விதிகள் உள்பட முழு விவரம்

IPL T20 2025, ஐ.பி.எல். போட்டிகள், முக்கிய செய்திகள், விளையாட்டு செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 9 மணி நேரங்களுக்கு முன்னர்

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும், கோடைகால விளையாட்டுத் திருவிழா 2025ம் ஆண்டு சீசனுக்கான 18-வது ஐபிஎல் டி20 தொடர் இந்த மாதம் தொடங்க இருக்கிறது.

ஒவ்வொரு அணி வீரர்களுடன் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த சீசனைப் போல் இல்லாமல் ஒட்டுமொத்த அணிகளிலும் உள்ள வீரர்கள் மாற்றப்பட்டு ஏராளமான புதிய வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஆர்சிபி, லக்னெள அணி ஆகியவற்றுக்கு புதிய கேப்டன்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நடப்புச் சாம்பியன் கொல்கத்தா அணி கோப்பையைத் தக்க வைக்குமா, நட்சத்திர வீரர் விராட் கோலிpயன் ஆர்சிபி அணி இந்த முறையாவது கோப்பையை வெல்லுமா, சிஎஸ்கே, மும்பை அணிகள் தங்களது வேட்டையைத் தொடருமா, புதிய அணிகள் ஏதேனும் கோப்பையை வெல்லுமா என்பன போன்ற பெரிய எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் தொடக்க விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் வருண் தவான், ஷ்ரதா கபூர், பாடகர் அர்ஜித் சிங் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

IPL T20 2025, ஐ.பி.எல். போட்டிகள், முக்கிய செய்திகள், விளையாட்டு செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மார்ச் 22 மாலை 6 மணிக்கு தொடக்க நிகழ்ச்சி தொடங்குகிறது (கோப்பு புகைப்படம்)

ஐபிஎல் 2025

1. ஐபிஎல் டி20 போட்டித் தொடர் எந்த தேதியில் தொடங்குகிறது, எப்போது முடிகிறது?

18வது சீசன் ஐபிஎல் டி20 தொடர் மார்ச் 22-ஆம் தேதி தொடங்குகிறது. மே 25-ஆம் தேதி முடிகிறது. 65 நாட்களில் மொத்தம் 74 ஆட்டங்கள் நடக்கிறது.

2. 2025 ஐபிஎல் தொடரில் எத்தனை அணிகள் பங்கேற்கின்றன?

2025 ஐபிஎல் டி20 தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்ளென சூப்பர் ஜெயின்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

3. ஐபிஎல் டி20 போட்டியில் முதல் ஆட்டம் எப்போது? எந்தெந்த அணிகள் மோதுகின்றன?

மார்ச் 22-ஆம் தேதி நடைபெறும் இந்த ஐபிஎல் டி20 தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது.

4. 10 அணிகளின் கேப்டன்கள் யார்யார்?

  • ருதுராஜ் கெய்க்வாட் (சிஎஸ்கே)

  • ஹர்திக் பாண்டியா(மும்பை இந்தியன்ஸ்)

  • சஞ்சு சாம்ஸன் (ராஜஸ்தான் ராயல்ஸ்)

  • அக்ஸர் படேல் (டெல்லி கேபிடல்ஸ்)

  • சுப்மன் கில் (குஜராத் டைட்டன்ஸ்)

  • ஸ்ரேயாஸ் அய்யர் (பஞ்சாப் கிங்ஸ்)

  • ரிஷப் பந்த் (லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)

  • அஜிங்கயே ரஹானே (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)

  • ரஜத் பட்டிதார் (ராயல் சேலஞ்சர்ஸ்)

  • பேட் கம்மின்ஸ் (சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்)

டபுள் ஹெட்டர்ஸும், குவாலிஃபயர் போட்டிகளும்!

5. ஐபிஎல் தொடரில் மொத்தம் எத்தனை போட்டிகள் நடக்கின்றன?

2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 சீசனில் மொத்தம் 74 போட்டிகள் 65 நாட்களில் நடத்தப்படுகின்றன. இதில் 12 போட்டிகள் டபுள் ஹெட்டர்ஸ் முறையில் அதாவது ஒரே நாளில் இரு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

6. ஐபிஎல் போட்டிகள் எந்தெந்த நகரங்களில் நடக்கின்றன?

ஐபிஎல் டி20 போட்டிகள் இந்த முறை 13 நகரங்களில் நடக்கின்றன. சென்னை, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், விசாகப்பட்டிணம், லக்னெள, புதுடெல்லி, அகமதாபாத், முலான்பூர், ஜெய்பூர், தரம்சாலா, கெளஹாத்தி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் போட்டிகள் நடக்கின்றன.

7. ஒரே நாளில் 2 ஆட்டங்கள் (டபுள் ஹெட்டர்ஸ்) எந்தெந்த தேதியில் நடக்கின்றன?

2025 ஐபிஎல் சீசனில் மொத்தம் 12 டபுல் ஹெட்டர்ஸ் ஆட்டங்கள் நடக்கின்றன. முதல் டபுள் ஹெட்டர்ஸ் மார்ச் 23ம் தேதி நடக்கிறது. அதைத் தொடர்ந்து மார்ச் 30, ஏப்ரல் 5,6, 12,13 தேதிகளில் நடக்கிறது. அதன்பின 19,20, 27 தேதிகளில் டபுள் ஹெட்டர்ஸ் போட்டி நடக்கிறது. மே மாதத்தில் 4, 11 , 18 ஆகிய தேதிகளில் ஒரே நாளில் இரு ஆட்டங்கள் நடக்கின்றன.

8. ஐபிஎல் தொடரில் குவாலிஃபயர் 1 போட்டி எப்போது, எங்கு நடக்கிறது?

ஐபிஎல் தொடரில் குவாலிஃபயர் முதல் போட்டி மே மாதம் 20ம் தேதி, ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச அரங்கில் இரவு நடக்கிறது.

9. ஐபிஎல் தொடரில் குவாலிஃயர் 2 போட்டி எப்போது, எங்கு நடக்கிறது?

ஐபிஎல் தொடரில் குவாலிஃபயர் 2வது போட்டி மே மாதம் 23ம் தேதி, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது.

IPL T20 2025, ஐ.பி.எல். போட்டிகள், முக்கிய செய்திகள், விளையாட்டு செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஐபிஎல் டி20 தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது

18 சேனல்களில் நேரலை

10. ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் போட்டி எப்போது எங்கு நடக்கிறது?

ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் சுற்றுப் போட்டி மே மாதம் 21ம் தேதி, ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச அரங்கில் இரவு நடக்கிறது.

11. ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி எப்போது எங்கு நடக்கிறது?

ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி மே மாதம் 25-ஆம் தேதி, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது.

12. ஐபிஎல் போட்டியை எந்த சேனல் நேரலை செய்கிறது, எந்த செயலியில் பார்க்கலாம்?

2025 சீசனுக்கான ஐபிஎல் டி20 போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் நேரடியாக காணலாம். இது தவிர மொபைலில் ஜியோ சினிமாவில் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரடியாகப் போட்டியைப் பார்க்க முடியும்.

13. ஐபிஎல் தொடரில் டபுள் ஹெட்டர்ஸ் ஆட்டங்கள் பிற்பகலில் எத்தனை மணிக்குத் தொடங்கும்?

ஐபிஎல் டி20 தொடரில் மொத்தம் 12 டபுள்ஹெட்டர்கள் போட்டிகள் நடக்கின்றன. இதில் முதல் ஆட்டம் பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்கும், 2வது போட்டி இரவு 7.30 மணிக்குத் தொடங்கும்.

IPL T20 2025, சி.எஸ்.கே, சென்னை சூப்பர் கிங்க்ஸ், ஐ.பி.எல். போட்டிகள், முக்கிய செய்திகள், விளையாட்டு செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மார்ச் 23ம் தேதி தனது முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே மும்பை அணியுடன் மோதுகிறது

சென்னையில் நடக்கும் போட்டிகள் எத்தனை?

14. சிஎஸ்கே அணி எத்தனை லீக் ஆட்டங்களில் விளையாடுகிறது, தேதிகள் என்ன?

2025 ஐபிஎல் சீசனில் பங்கேற்கும் 10 அணிகளும் குரூப் ஏ, குரூப் பி என பிரிக்கப்பட்டுள்ளன. இதில் குரூப் ஏ பிரிவில் சிஎஸ்கே, கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடம் பெற்றுள்ளன.

குரூப் பி பிரிவில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்ளென சூப்பர் ஜெயின்ஸ்ட் அணிகள் உள்ளன.

இதில் குரூப் ஏ பிரிவில் உள்ள சிஎஸ்கே அணி தன்னுடைய குரூப்பில் உள்ள 4 அணிகளுடன் தலா 2 போட்டிகளும், பி குரூப்பில் உள்ள அணிகளுடன் மும்பை தவிர்த்து மற்ற 4 அணிகளுடன் தலா ஒரு போட்டி என 14 லீக் ஆட்டங்களில் மோதுகிறது.

மார்ச் 23ம் தேதி தனது முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே மும்பை அணியுடன் மோதுகிறது. அதைத் தொடர்ந்து மார்ச் 28 (ஆர்சிபி), மார்ச் 30 (ராஜஸ்தான்), ஏப்ரல் 5 (டெல்லி), ஏப்ரல்8 (பஞ்சாப்), ஏப்ரல்11 (கொல்கத்தா), ஏப்ரல் 14 (லக்னெள), ஏப்ரல்20 (மும்பை), ஏப்ரல்25 (சன்ரைசர்ஸ்), ஏப்ரல் 30 (பஞ்சாப்), மே3 (ஆர்சிபி), மே7 (கொல்கத்தா), மே12 (ராஜஸ்தான்), மே18 (குஜராத்) ஆகிய தேதிகளில் சிஎஸ்கே அணி விளையாடுகிறது.

15. சென்னை சேப்பாகத்தில் எத்தனை ஆட்டங்கள் நடக்கின்றன?

சென்னையில் 2025 ஐபிஎல் டி20 தொடரில் 7 ஆட்டங்கள் நடக்கின்றன. மார்ச் 23, மார்ச் 28, ஏப்ரல்-5, ஏப்ரல் 11, ஏப்ரல் 25, ஏப்ரல் 30,மே 12 ஆகிய தேதிகளில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கின்றன.

16. சென்னையில் இறுதிப்போட்டி, குவாலிஃபயர் ஆட்டங்கள் நடக்கிறதா?

இல்லை, சென்னையில் லீக் ஆட்டங்கள் மட்டுமே நடக்கின்றன. குவாலிஃபயர் ஆட்டங்களோ, இறுதிப்போட்டியோ நடக்காது.

17. ஐபிஎல் டிக்கெட் விற்பனை சென்னையில் எப்போது தொடக்கம்?

சென்னையில் நடக்கும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தேதி அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், ரீசெல் டிக்கெட் விற்பனை செய்யும் தளமான வியாகோகோவில் சிஎஸ்கே-மும்பை ஆட்டத்துக்கான டிக்கெட் விலை ரூ.1.23 லட்சத்துக்கு பேரம்பேசப்படுகிறது, குறைந்தபட்சமாக ரூ.17ஆயிரத்துக்கு பேரம் பேசப்படுகிறது.

18. சிஎஸ்கே-மும்பை அணி ஆட்டங்கள் எந்தெந்த தேதியில், எங்கு நடக்கின்றன?

2025 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே-மும்பை அணிகள் 2 முறை லீக்ஆட்டங்களில் மோதுகின்றன. முதல் ஆட்டம் மார்ச் 23ம் தேதி, சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது. 2வது ஆட்டம் ஏப்ரல் 20ம் தேதி மும்பை வான்ஹடே மைதானத்தில் நடக்கிறது.

19. சிஎஸ்கே-ஆர்சிபி ஆட்டங்கள் எப்போது, எங்கு நடக்கின்றன?

2025 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே-ஆர்சிபி அணிகள் 2 முறை லீக்ஆட்டங்களில் மோதுகின்றன. முதல் ஆட்டம் மார்ச் 28ம் தேதி, சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது. 2வது ஆட்டம் மே 3ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது.

IPL T20 2025, சி.எஸ்.கே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஐ.பி.எல். போட்டிகள், முக்கிய செய்திகள், விளையாட்டு செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

புதிய விதிகள்

20. ஐபிஎல் தொடரில் புதிய விதிகள் என்ன?

  • ஐபிஎல் அணிகளில் உள்ள வீரர்களின் ஓய்வறைக்குள் நண்பர்கள், சப்போர்ட் ஸ்டாப், குடும்ப உறுப்பினர்கள் செல்ல அனுமதியில்லை.

  • அணி வீரர்கள் அனைவரும் ஒரே பேருந்தில்தான் பயணிக்க வேண்டும், தனியாக காரில் பயணிக்கக் கூடாது.

  • போட்டி நடக்கும் நாட்களில் பயிற்சி கிடையாது. திறந்தவெளி வலைப்பயிற்சி இல்லை. அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் மட்டுமே வீரர்கள் ஓய்வறைக்குள் செல்ல முடியும்.

  • எல்இடி போர்டுகளில் வீரர்கள் பந்தை அடிப்பதைத் தவிர்க்க வேண்டும். எல்இடி போர்டுக்கு முன் வீரர்கள், அணியின் ஊழியர்கள் அமரக்கூடாது. அவர்களுக்கான இடத்தில்தான் அமர வேண்டும்.

  • ஆரஞ்சு, பர்ப்பிள் தொப்பி வாங்கிய வீரர்கள் அதனை குறைந்தபட்ச நேரம் அணிந்திருக்க வேண்டும்.

  • வீரர்கள் ப்ளாப்பி தொப்பி, ஸ்லீவ்லெஸ் ஜெர்ஸி அணிய அனுமதியில்லை. முதல் முறை தவறு செய்தால் எச்சரிக்கையும் 2வது முறை அபராதமும் விதிக்கப்படும்.

  • ஜெர்ஸியில் எண்கள் மாற்றப்படுவதற்கு 24 மணிநேரத்துக்கு முன்பாக ஓர் அணி தெரிவிக்க வேண்டும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx2g47xp5x6o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.