Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிஎஸ்கே ஆட்டங்கள் எப்போது? கேப்டன்கள், புதிய விதிகள் உள்பட ஐபிஎல் பற்றிய முழு விவரம்

IPL T20 2025, ஐ.பி.எல். போட்டிகள், முக்கிய செய்திகள், விளையாட்டு செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 15 மார்ச் 2025

    புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும், கோடைகால விளையாட்டுத் திருவிழா 2025ம் ஆண்டு சீசனுக்கான 18-வது ஐபிஎல் டி20 தொடர் இன்று தொடங்க இருக்கிறது.

கடந்த சீசனைப் போல் இல்லாமல் ஒட்டுமொத்த அணிகளிலும் உள்ள வீரர்கள் மாற்றப்பட்டு ஏராளமான புதிய வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஆர்சிபி, லக்னெள அணி ஆகியவற்றுக்கு புதிய கேப்டன்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நடப்புச் சாம்பியன் கொல்கத்தா அணி கோப்பையைத் தக்க வைக்குமா, நட்சத்திர வீரர் விராட் கோலியின் ஆர்சிபி அணி இந்த முறையாவது கோப்பையை வெல்லுமா, சிஎஸ்கே, மும்பை அணிகள் தங்களது வேட்டையைத் தொடருமா, புதிய அணிகள் ஏதேனும் கோப்பையை வெல்லுமா என்பன போன்ற பெரிய எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் தொடக்க விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் வருண் தவான், ஷ்ரதா கபூர், பாடகர் அர்ஜித் சிங் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

IPL T20 2025, ஐ.பி.எல். போட்டிகள், முக்கிய செய்திகள், விளையாட்டு செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 6 மணிக்கு தொடக்க நிகழ்ச்சி தொடங்குகிறது (கோப்பு புகைப்படம்)

ஐபிஎல் 2025

1. ஐபிஎல் டி20 போட்டித் தொடர் எந்த தேதியில் தொடங்குகிறது, எப்போது முடிகிறது?

18வது சீசன் ஐபிஎல் டி20 தொடர் இன்று (மார்ச் 22-ஆம் தேதி) தொடங்குகிறது. மே 25-ஆம் தேதி முடிகிறது. 65 நாட்களில் மொத்தம் 74 ஆட்டங்கள் நடக்கிறது.

2. 2025 ஐபிஎல் தொடரில் எத்தனை அணிகள் பங்கேற்கின்றன?

2025 ஐபிஎல் டி20 தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்ளென சூப்பர் ஜெயின்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

3. ஐபிஎல் டி20 போட்டியில் முதல் ஆட்டம் எப்போது? எந்தெந்த அணிகள் மோதுகின்றன?

மார்ச் 22-ஆம் தேதி நடைபெறும் இந்த ஐபிஎல் டி20 தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது.

4. 10 அணிகளின் கேப்டன்கள் யார்யார்?

  • ருதுராஜ் கெய்க்வாட் (சிஎஸ்கே)

  • ஹர்திக் பாண்டியா (மும்பை இந்தியன்ஸ்)

  • சஞ்சு சாம்ஸன் (ராஜஸ்தான் ராயல்ஸ்)

  • அக்ஸர் படேல் (டெல்லி கேபிடல்ஸ்)

  • சுப்மன் கில் (குஜராத் டைட்டன்ஸ்)

  • ஸ்ரேயாஸ் அய்யர் (பஞ்சாப் கிங்ஸ்)

  • ரிஷப் பந்த் (லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)

  • அஜிங்கயே ரஹானே (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)

  • ரஜத் பட்டிதார் (ராயல் சேலஞ்சர்ஸ்)

  • பேட் கம்மின்ஸ் (சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்)

டபுள் ஹெட்டர்ஸும், குவாலிஃபயர் போட்டிகளும்!

5. ஐபிஎல் தொடரில் மொத்தம் எத்தனை போட்டிகள் நடக்கின்றன?

2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 சீசனில் மொத்தம் 74 போட்டிகள் 65 நாட்களில் நடத்தப்படுகின்றன. இதில் 12 போட்டிகள் டபுள் ஹெட்டர்ஸ் முறையில் அதாவது ஒரே நாளில் இரு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

6. ஐபிஎல் போட்டிகள் எந்தெந்த நகரங்களில் நடக்கின்றன?

ஐபிஎல் டி20 போட்டிகள் இந்த முறை 13 நகரங்களில் நடக்கின்றன. சென்னை, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், விசாகப்பட்டிணம், லக்னெள, புதுடெல்லி, அகமதாபாத், முலான்பூர், ஜெய்பூர், தரம்சாலா, கெளஹாத்தி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் போட்டிகள் நடக்கின்றன.

7. ஒரே நாளில் 2 ஆட்டங்கள் (டபுள் ஹெட்டர்ஸ்) எந்தெந்த தேதியில் நடக்கின்றன?

2025 ஐபிஎல் சீசனில் மொத்தம் 12 டபுல் ஹெட்டர்ஸ் ஆட்டங்கள் நடக்கின்றன. முதல் டபுள் ஹெட்டர்ஸ் மார்ச் 23ம் தேதி நடக்கிறது. அதைத் தொடர்ந்து மார்ச் 30, ஏப்ரல் 5,6, 12,13 தேதிகளில் நடக்கிறது. அதன்பின 19,20, 27 தேதிகளில் டபுள் ஹெட்டர்ஸ் போட்டி நடக்கிறது. மே மாதத்தில் 4, 11 , 18 ஆகிய தேதிகளில் ஒரே நாளில் இரு ஆட்டங்கள் நடக்கின்றன.

8. ஐபிஎல் தொடரில் குவாலிஃபயர் 1 போட்டி எப்போது, எங்கு நடக்கிறது?

ஐபிஎல் தொடரில் குவாலிஃபயர் முதல் போட்டி மே மாதம் 20ம் தேதி, ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச அரங்கில் இரவு நடக்கிறது.

9. ஐபிஎல் தொடரில் குவாலிஃயர் 2 போட்டி எப்போது, எங்கு நடக்கிறது?

ஐபிஎல் தொடரில் குவாலிஃபயர் 2வது போட்டி மே மாதம் 23ம் தேதி, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது.

IPL T20 2025, ஐ.பி.எல். போட்டிகள், முக்கிய செய்திகள், விளையாட்டு செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஐபிஎல் டி20 தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது

18 சேனல்களில் நேரலை

10. ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் போட்டி எப்போது எங்கு நடக்கிறது?

ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் சுற்றுப் போட்டி மே மாதம் 21ம் தேதி, ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச அரங்கில் இரவு நடக்கிறது.

11. ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி எப்போது எங்கு நடக்கிறது?

ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி மே மாதம் 25-ஆம் தேதி, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது.

12. ஐபிஎல் போட்டியை எந்த சேனல் நேரலை செய்கிறது, எந்த செயலியில் பார்க்கலாம்?

2025 சீசனுக்கான ஐபிஎல் டி20 போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் நேரடியாக காணலாம். இது தவிர மொபைலில் ஜியோ சினிமாவில் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரடியாகப் போட்டியைப் பார்க்க முடியும்.

13. ஐபிஎல் தொடரில் டபுள் ஹெட்டர்ஸ் ஆட்டங்கள் பிற்பகலில் எத்தனை மணிக்குத் தொடங்கும்?

ஐபிஎல் டி20 தொடரில் மொத்தம் 12 டபுள்ஹெட்டர்கள் போட்டிகள் நடக்கின்றன. இதில் முதல் ஆட்டம் பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்கும், 2வது போட்டி இரவு 7.30 மணிக்குத் தொடங்கும்.

IPL T20 2025, சி.எஸ்.கே, சென்னை சூப்பர் கிங்க்ஸ், ஐ.பி.எல். போட்டிகள், முக்கிய செய்திகள், விளையாட்டு செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மார்ச் 23ம் தேதி தனது முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே மும்பை அணியுடன் மோதுகிறது

சென்னையில் நடக்கும் போட்டிகள் எத்தனை?

14. சிஎஸ்கே அணி எத்தனை லீக் ஆட்டங்களில் விளையாடுகிறது, தேதிகள் என்ன?

2025 ஐபிஎல் சீசனில் பங்கேற்கும் 10 அணிகளும் குரூப் ஏ, குரூப் பி என பிரிக்கப்பட்டுள்ளன. இதில் குரூப் ஏ பிரிவில் சிஎஸ்கே, கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடம் பெற்றுள்ளன.

குரூப் பி பிரிவில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்ளென சூப்பர் ஜெயின்ஸ்ட் அணிகள் உள்ளன.

இதில் குரூப் ஏ பிரிவில் உள்ள சிஎஸ்கே அணி தன்னுடைய குரூப்பில் உள்ள 4 அணிகளுடன் தலா 2 போட்டிகளும், பி குரூப்பில் உள்ள அணிகளுடன் மும்பை தவிர்த்து மற்ற 4 அணிகளுடன் தலா ஒரு போட்டி என 14 லீக் ஆட்டங்களில் மோதுகிறது.

மார்ச் 23ம் தேதி தனது முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே மும்பை அணியுடன் மோதுகிறது. அதைத் தொடர்ந்து மார்ச் 28 (ஆர்சிபி), மார்ச் 30 (ராஜஸ்தான்), ஏப்ரல் 5 (டெல்லி), ஏப்ரல்8 (பஞ்சாப்), ஏப்ரல்11 (கொல்கத்தா), ஏப்ரல் 14 (லக்னெள), ஏப்ரல்20 (மும்பை), ஏப்ரல்25 (சன்ரைசர்ஸ்), ஏப்ரல் 30 (பஞ்சாப்), மே3 (ஆர்சிபி), மே7 (கொல்கத்தா), மே12 (ராஜஸ்தான்), மே18 (குஜராத்) ஆகிய தேதிகளில் சிஎஸ்கே அணி விளையாடுகிறது.

15. சென்னை சேப்பாகத்தில் எத்தனை ஆட்டங்கள் நடக்கின்றன?

சென்னையில் 2025 ஐபிஎல் டி20 தொடரில் 7 ஆட்டங்கள் நடக்கின்றன. மார்ச் 23, மார்ச் 28, ஏப்ரல்-5, ஏப்ரல் 11, ஏப்ரல் 25, ஏப்ரல் 30,மே 12 ஆகிய தேதிகளில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கின்றன.

16. சென்னையில் இறுதிப்போட்டி, குவாலிஃபயர் ஆட்டங்கள் நடக்கிறதா?

இல்லை, சென்னையில் லீக் ஆட்டங்கள் மட்டுமே நடக்கின்றன. குவாலிஃபயர் ஆட்டங்களோ, இறுதிப்போட்டியோ நடக்காது.

17. ஐபிஎல் டிக்கெட் விற்பனை சென்னையில் எப்போது தொடக்கம்?

சென்னையில் நடக்கும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தேதி அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், ரீசெல் டிக்கெட் விற்பனை செய்யும் தளமான வியாகோகோவில் சிஎஸ்கே-மும்பை ஆட்டத்துக்கான டிக்கெட் விலை ரூ.1.23 லட்சத்துக்கு பேரம்பேசப்படுகிறது, குறைந்தபட்சமாக ரூ.17ஆயிரத்துக்கு பேரம் பேசப்படுகிறது.

18. சிஎஸ்கே-மும்பை அணி ஆட்டங்கள் எந்தெந்த தேதியில், எங்கு நடக்கின்றன?

2025 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே-மும்பை அணிகள் 2 முறை லீக்ஆட்டங்களில் மோதுகின்றன. முதல் ஆட்டம் மார்ச் 23ம் தேதி, சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது. 2வது ஆட்டம் ஏப்ரல் 20ம் தேதி மும்பை வான்ஹடே மைதானத்தில் நடக்கிறது.

19. சிஎஸ்கே-ஆர்சிபி ஆட்டங்கள் எப்போது, எங்கு நடக்கின்றன?

2025 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே-ஆர்சிபி அணிகள் 2 முறை லீக்ஆட்டங்களில் மோதுகின்றன. முதல் ஆட்டம் மார்ச் 28ம் தேதி, சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது. 2வது ஆட்டம் மே 3ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது.

IPL T20 2025, சி.எஸ்.கே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஐ.பி.எல். போட்டிகள், முக்கிய செய்திகள், விளையாட்டு செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

புதிய விதிகள்

20. ஐபிஎல் தொடரில் புதிய விதிகள் என்ன?

  • ஐபிஎல் அணிகளில் உள்ள வீரர்களின் ஓய்வறைக்குள் நண்பர்கள், சப்போர்ட் ஸ்டாப், குடும்ப உறுப்பினர்கள் செல்ல அனுமதியில்லை.

  • அணி வீரர்கள் அனைவரும் ஒரே பேருந்தில்தான் பயணிக்க வேண்டும், தனியாக காரில் பயணிக்கக் கூடாது.

  • போட்டி நடக்கும் நாட்களில் பயிற்சி கிடையாது. திறந்தவெளி வலைப்பயிற்சி இல்லை. அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் மட்டுமே வீரர்கள் ஓய்வறைக்குள் செல்ல முடியும்.

  • எல்இடி போர்டுகளில் வீரர்கள் பந்தை அடிப்பதைத் தவிர்க்க வேண்டும். எல்இடி போர்டுக்கு முன் வீரர்கள், அணியின் ஊழியர்கள் அமரக்கூடாது. அவர்களுக்கான இடத்தில்தான் அமர வேண்டும்.

  • ஆரஞ்சு, பர்ப்பிள் தொப்பி வாங்கிய வீரர்கள் அதனை குறைந்தபட்ச நேரம் அணிந்திருக்க வேண்டும்.

  • வீரர்கள் ப்ளாப்பி தொப்பி, ஸ்லீவ்லெஸ் ஜெர்ஸி அணிய அனுமதியில்லை. முதல் முறை தவறு செய்தால் எச்சரிக்கையும் 2வது முறை அபராதமும் விதிக்கப்படும்.

  • ஜெர்ஸியில் எண்கள் மாற்றப்படுவதற்கு 24 மணிநேரத்துக்கு முன்பாக ஓர் அணி தெரிவிக்க வேண்டும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx2g47xp5x6o

  • Replies 114
  • Views 4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    டூ பிலஸ்சிய‌ விட‌  தென் ஆபிரிக்காவில் ந‌ல்ல‌ இள‌ம் வீர‌ர்க‌ள் இருக்கின‌ம் அவ‌ர்க‌ளை ஏல‌த்தில் எடுக்க‌லாம்   40வ‌ய‌தை தாண்டின‌வ‌ர்க‌ள் ஓய்வை அறிவிப்ப‌து ந‌ல்ல‌ம் இள‌ம் வீர‌ர்க‌ளுக்க

  • ஏராளன்
    ஏராளன்

    சுனில் நரைன் பேட்டால் ஸ்டம்பை உரசியும் கூட அவுட் கொடுக்கப்படாதது ஏன்? முதல் ஆட்டத்திலேயே சர்ச்சை பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்க

  • ஏராளன்
    ஏராளன்

    ஒரேபோட்டியில் குவிக்கப்பட்ட 528 ரன்கள் ! இஷான் கிஷன் சதத்துடன் ஹைதராபாத் அமர்க்கள ஆரம்பம் பட மூலாதாரம்,SUNRISERSHYDERABAD/X PAGE படக்குறிப்பு, 45 பந்துகளில் முதல் ஐபிஎல் சதத்தை அடித்தார் இஷான் கிஷன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுனில் நரைன் பேட்டால் ஸ்டம்பை உரசியும் கூட அவுட் கொடுக்கப்படாதது ஏன்? முதல் ஆட்டத்திலேயே சர்ச்சை

RCB vs KKR, கோலி, சுனில் நரைன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆர்சிபி அணி.

முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது. ஆர்சிபி அணி 22 பந்துகள் மீதமிருக்கையில் 177 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ஆர்பிசி அணியின் வெற்றிக்கு பந்துவீச்சில் ஹேசல்வுட், க்ருணால் பாண்டியா, சூயஸ் சர்மா மூவரையும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும், இவர்கள் 3 பேரும் எடுத்த விக்கெட் ஆட்டத்தையே புரட்டிப்போட்டது. பேட்டிங்கில் அதிரடி வீரர் பில் சால்ட்(56), விராட் கோலி(59), பட்டிதார்(34) ஆகியோரின் ஆட்டம் வெற்றியை எளிதாக்கியது.

இந்த ஆட்டத்தில் சுனில் நரைன் தனது பேட்டால் ஸ்டம்பை உரசிய போதிலும் கூட நடுவர்கள் அவுட் கொடுக்க மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆர்சிபி ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இதுதொடர்பாக பதிவிட்டு வருகின்றனர்.

சுனில் நரைன் - ரஹானே அதிரடி

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு டீகாக் ஆட்டமிழந்தபின் புதிய கேப்டன் ரஹானே, சுனில் நரைன் இருவரும் சேர்ந்து அதிரடியாக ஆடினர். ரஹானே திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிஎஸ்கேயில் இருந்தபோது எந்தமாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்தினாரோ அதை போன்ற ஆக்ரோஷம் நேற்றும் இருந்தது.

ரஹானே, நரைன் இருக்கும் வரை பவர்ப்ளேயில் கொல்கத்தா ஒரு விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் சேர்த்தது, 9.3 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. ரஹானே 25 பந்துகளில் அரைசதம் அடித்தார். சுனில் நரைனும் தனது பங்குக்கு சிக்ஸர், பவுண்டரி என ஆர்சிபி பந்துவீச்சை சிதறவிட்டார். 10 ஓவர்கள் வரை ஆட்டம் கொல்கத்தாவின் கைகளில்தான் இருந்தது.

ஆனால், 10-வது ஓவரில் சுனில் நரேன், 11வது ஓவரில் ரஹானே ஆட்டமிழந்தபின் ஆட்டமே தலைகீழாகத் திரும்பியது. இருவரும் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்தனர். இந்த பார்ட்னர்ஷிப்பைத் தவிர்த்து வேறு எந்த பார்ட்னர்ஷிப்பும் கொல்கத்தாவில் அமையவில்லை. 107 ரன்களுக்கு ஒரு விக்கெட் என வலுவாக இருந்த கொல்கத்தா அணி, அடுத்த 67 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. 10-வது ஓவரில் இருந்து 16-வது ஓவர் வரை ஓவருக்கு ஒரு விக்கெட் வீதம் கொல்கத்தா இழந்தது தோல்விக்கு மிகப்பெரிய காரணம்.

அதிலும் நடுவரிசையில் வெங்கடேஷ் அய்யர்(6), ரிங்குசிங்(12), ரஸல்(4) என 3 முக்கிய பேட்டர்களும் ஏமாற்றியது, கொல்கத்தாவை தோல்வியில் தள்ளியது. ரஹானே, நரைன் இருந்தபோது, ஸ்கோர் 200 ரன்களைக் கடக்கும் என கணிக்கப்பட்டது, ஆனால், 174 ரன்களில் ஆட்டம் முடிந்தது. ரகுவன்ஷி 30 ரன்களை சேர்த்தார்.

ஹேசல்வுட் அபார பந்துவீச்சு

ஹேசல்வுட் மீது நம்பிக்கை வைத்து ஆர்சிபி வாங்கியதற்கு அவர் கைங்கர்யம் செய்துவிட்டார். பேட்டர்கள் ஆட முடியாத பவுன்ஸ், லைன் லெத்தில் மாறாத பந்துவீச்சு என திக்கமுக்காட செய்தார். ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொண்ட ஹேசல்வுட், பவுன்சர்களை வீசி கொல்கத்தா பேட்டர்களை திணறவிட்டார்.

ஹேசல்வுட் தனது 4 ஓவர்களில் 16 டாட் பந்துகளை வீசியதுடன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். முதல் ஓவரிலேயே குயின்டன் டீகாக் தூக்கி, கடைசி ஓவரில் ஹர்சித் ராணா விக்கெட்டையும் ஹேசல்வுட் வீழ்த்தினார்.

RCB vs KKR, கோலி, சுனில் நரைன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பேட்டர்கள் ஆடமுடியாத பவுன்ஸ், லைன் லெத்தில் மாறாத பந்துவீச்சு என திக்கமுக்காட செய்தார் ஹேசல்வுட்

நரைன் பேட்டால் ஸ்டம்பை உரசிய போதும் அவுட் இல்லை என்று அறிவிக்கப்பட்டது ஏன்?

சுனில் நரைன் - ரஹானே ஜோடி அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த வேளையில், 8-வது ஓவரை ராசிக் சலாம் வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தை ஆஃப் சைடுக்கு வெளியே, அதிக உயரத்தில் செல்ல அந்த பந்தை கள நடுவர் 'வைட்' என்று அறிவித்தார். அதேநேரத்தில், சுனில் நரைனின் பேட்டானது ஸ்டம்ப் மீது லேசாக உரசியதில் பெய்ல்ஸ்கள் கீழே விழுந்தன.

இதையடுத்து, ஹிட் விக்கெட் முறையில் நரைனுக்கு ஆர்சிபி அணி அவுட் கேட்டது. ஆனால், அதனை நடுவர் நிராகரித்துவிட்டார். இதனால் ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் அதிருப்தி அடைந்ததை அவரது முகம் வெளிக்காட்டியது. ஸ்டம்புகளை பேட்டால் உரசி பெய்ல்ஸ் கீழே விழுந்தும் கூட சுனில் நரைன் அவுட் இல்லை என்று நடுவர்கள் அறிவித்தது ஏன்?

எம்சிசி விதி 35.1.1-ன் படி, ஒரு பவுலர் அந்த பந்தை வீசத் தொடங்கிய பிறகோ அல்லது பந்தை எதிர்கொள்ளும் போதோ பேட்டர் தனது உடலாலோ, பேட்டாலோ ஸ்டம்பை உரசி பெய்ல்ஸ் கீழே விழுமானால் அவர் ஹிட் விக்கெட் முறையில் அவுட் என்று அறிவிக்கப்படுவார்.

சுனில் நரைனைப் பொருத்தவரை, பந்து வைட் என்று அறிவிக்கப்பட்டு விட்டதால் அதனை விளையாடுவதற்குரிய சரியான பந்தாக கணக்கில் கொள்ள முடியாது. ஆகவே, ஹிட் விக்கெட் முறையில் அவுட் என்ற விதி இதற்குப் பொருந்தாது.

RCB vs KKR, கோலி, சுனில் நரைன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கொல்கத்தா தவறவிட்ட பில்சால்ட்

தொடக்க ஆட்டக்காரர் பில்சால்ட்டை ஏலத்தில் தக்கவைக்க தவறிவிட்டோம் என்று கொல்கத்தா நிர்வாகம் நேற்று இவரின் அதிரடியைப் பார்த்த பின் உணர்ந்திருக்கும். கொல்கத்தா அணி கடந்த சீசனில் கோப்பையை வெல்ல பில்சால்ட் காரணமாக இருந்தார் என்று நம்பப்படும்போது, எப்படி இவரை ஏலத்தில் தக்கவைக்காமல் இருந்தது எனத் தெரியவில்லை. கொல்கத்தா அணியில் இருந்தபோது சால்ட்டின் ஸ்ட்ரைக் ரேட் 185, அவரின் சராசரி 58 ஆக இருந்தது. இப்படிப்பட்ட வீரரை கொல்கத்தா தக்கவைக்காமல் தவறுசெய்துவிட்டதாக பலரும் கருதுகின்றனர்.

கொல்கத்தாவின் பந்துவீச்சை முதல் பந்திலிருந்து பில் சால்ட் வெளுத்து வாங்கினார். வேகப்பந்துவீச்சை துவம்சம் செய்கிறார் என வருண் சக்ரவர்த்தியை கொண்டு வந்தால் முதல் ஓவரிலேயே சிக்ஸர், பவுண்டரி என 20 ரன்களை விளாசி வருணை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். விராட் கோலியும் சிக்ஸர், பவுண்டரி என துவம்சம் செய்யவே பவர்ப்ளேயில் ஆர்சிபி அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் சேர்த்தது, 3.4 ஓவர்களில் 50 ரன்களையும் எட்டியது.

அரோரா, ஜான்ஸன், ராணா என ஒருவரின் பந்துவீச்சையும் சால்ட் விடவில்லை. அதிரடியாகஆடிய சால்ட் 25 பந்துகளில் அரைசதம் எட்டினார். 36 பந்துகளில் 56 ரன்கள் (9பவுண்டரி, 2 சிக்ஸர்) சேர்த்திருந்த சால்ட், வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு கோலி, சால்ட் கூட்டணி 95 ரன்கள் சேர்த்தனர்.

RCB vs KKR, கோலி, சுனில் நரைன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

விராட் விளாசல்

விராட் கோலி கடந்த இரு ஐபிஎல் சீசன்களிலும் 500 ரன்களுக்கு மேல் குவித்து சிறப்பாக ஆடினாலும் அவரின் ஸ்ட்ரைக் ரேட் மீது தொடர்ந்து விமர்சனம் இருந்தது. அடித்து ஆட வேண்டிய இடத்தில் ஆடாமல், மெதுவாக பேட் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தது, ஸ்ட்ரைக் ரேட்டும் கடந்த இரு சீசன்களில் பெரிதாக இல்லை.

ஆனால், இந்த சீசனுக்கு கோலி தீர்மானத்துடனே களத்துக்கு வந்துள்ளார் எனத் தெரிந்தது. வைவப் அரோரா வீசிய ஓவரில் கோலி சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி விளாசினார். அதன்பின் ஸ்பென்சர் ஜான்ஸன் வீசிய ஓவரில் ஸ்ட்ரைட் திசையிலும், லாங்ஆனிலும் இரு சிக்ஸர்களை கோலி பறக்கவிட்ட போது, கோலி ஏதோ தீர்மானத்துடன் வந்துவீட்டார் எனத் தெரிந்தது.

அது மட்டுமல்லாமல் வருண் சக்ரவர்த்தி, நரேன் பந்துவீ்ச்சில் இரு ஸ்வீப் ஷாட்களில் பவுண்டரியும், ஒரு சிக்ஸரையும் கோலி விளாசினார்.

RCB vs KKR, கோலி, சுனில் நரைன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"சேஸிங் மாஸ்டர்" என்று கோலியை அழைப்பதுண்டு அதற்கு ஏற்றார்போல் நேற்று ஆர்சிபி அணியை வழிநடத்தினார். இந்த முறையாவது ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல வைக்க வேண்டும் என்ற தீர்மானம் கோலியின் ஆட்டத்தில் தெரிந்தது, 30 பந்துகளில் அரைசதம் அடித்த கோலி, 36 பந்துகளில் 56 ரன்களுடன்(4 பவுண்டரி, 3 சிக்ஸர்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் 163 ஸ்ட்ரைக் ரேட்டுடன் களத்தில் இருந்தார்.

கொல்கத்தா அணியைப் பொருத்தவரை, பந்துவீச்சில் நரைன், வருண் பந்துவீச்சுக்கு ஏற்றபடி எதிரணி பேட்டர்கள் நன்கு வியூகம் அமைத்து வந்ததை கொல்கத்தா அணி எதிர்பார்க்கவில்லை. ஆந்த்ரே ரஸலுக்கு கேப்டன் ரஹானே ஒரு ஓவர் கூட வழங்கவில்லை.

வைவப் அரோரா, ஜான்ஸன் இருவரும் சேர்ந்து 5 ஓவர்கள் வீசி 73 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினர் ஒவருக்கு 13 ரன்கள் வீதம் வாரி வழங்கினர்.

திருப்புமுனை நாயகன்

இந்த ஆட்டத்தின் ஆட்டநாயகன் விருது க்ருணால் பாண்டியாவுக்கு வழங்கப்பட்டது. 4 ஓவர்கள் 29 ரன்கள் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை க்ருணால் பாண்டியா வீழ்த்தினார். முதல் ஓவரில் 15 ரன்கள் வழங்கிய க்ருணால் பாண்டியா மனம் தளரவில்லை, நெருக்கடியாகப் பந்துவீசி அடுத்த 3 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்த 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா். கொல்கத்தா நடுவரிசையில் வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ரஹானே என முக்கியமான 3 விக்கெட்டுகளை வெளியேற்றி திருப்புமுனை ஆளித்தது க்ருணால் பாண்டியாதான்.

க்ருணால் பாண்டியா எடுத்துக் கொடுத்த இந்த 3 விக்கெட் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் ஆர்சிபியின் கரங்களில் ஒப்படைத்தது.11வது ஓவரில் ரஹானே, 13-வது ஓவரில் வெங்கடேஷ், 15-வது ஓவரில் ரிங்கு சிங் என க்ருணால் பாண்டியா தனது கடைசி ஒவ்வொரு ஓவரிலும் ஒரு விக்கெட்டைச் சாய்த்து திருப்புமுனை ஏற்படுத்தினார்.

ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி 107 ரன்களுக்கு ஒரு விக்கெட் என வலுவாக இருந்து, 200 ரன்களுக்கு மேல் ஸ்கோரை எட்டும் எனக் எதிர்பார்க்கப்பட்டது. ரஹானேவும், சுனில் நரைனும் சேர்ந்து ஆர்சிபி பந்துவீச்சை வறுத்து எடுத்தனர். முதல் 10 ஓவர்கள்வரை கொல்கத்தா கையில் இருந்த ஆட்டம் கடைசி 10 ஓவர்களில் தலைகீழாக மாறியது. க்ருணால் பாண்டியாவின் பந்துவீச்சில் கொல்கத்தா சிக்கியதையடுத்து, ஆட்டம் மொத்தமும் ஆர்சிபியின் பக்கம் சென்றது.

RCB vs KKR, கோலி, சுனில் நரைன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆட்டநாயகன் விருது க்ருணால் பாண்டியாவுக்கு வழங்கப்பட்டது

க்ருணால் பாண்டியா ஐபிஎல் டி20 தொடரில் "அன்டர்ரேட்டட்" பந்துவீச்சாளராகவே பார்க்கப்பட்டுள்ளார். இடதுகை சுழற்பந்துவீச்சாளரான க்ருணால் பாண்டியா பந்துவீச்சில் பெரிதாக டர்ன் இருக்காது என்பது உண்மைதான், ஆனால், பேட்டர்களை எவ்வாறு விளையாட விடாமல் செய்து பந்துவீசுவது என்பதை க்ருணால் நன்கு தெரிந்தவர். இவரின் பந்துவீச்சை கிராஸ்பேட் போட்டு அடிப்பது, இறங்கி வந்து தூக்கி அடிப்பதை பேட்டர்கள் செய்வது ஆபத்தானது.

ஏனென்றால் க்ருணால் பாண்டியா பந்துகள் பெரும்பாலும் ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப் என பிளாட்டாகவே வரும். இதில் சிறிய தவறு பேட்டர்கள் செய்தால்கூட விக்கெட்டை இழக்க நேரிடும். இந்த ஆட்டத்திலும் ரூ.23 கோடி வீரர் வெங்கடேஷ், ரூ.13 கோடி வீரர் ரிங்கு சிங் இருவரும் பந்தை இன்கட் செய்ய முயன்று போல்டாயினர். க்ருணால் பாண்டியாவை ரூ.5.75 கோடிக்கு வாங்கியது தகும் என நிரூபித்துவிட்டார்.

சூயஷ் சர்மா தொடக்கத்தில் ரன்களை வாரி வழங்கினாலும் அவருக்கு ஓவர் மறுக்கப்படவில்லை. ஆனால், இக்கட்டான நேரத்தில் லெக் ஸ்பின் மூலம் ரஸல் விக்கெட்டை வீழ்த்தி கொல்கத்தா அணியின் நம்பிக்கையை உடைத்தார் சூயஸ் ஷர்மா.

பட்டிதாருக்கு முதல் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல்முறையாக கேப்டன் பொறுப்பேற்ற பட்டிதாருக்கு அணியின் வீரர்கள் சேர்ந்து முதல் வெற்றியை பரிசளித்துள்ளார்கள் என்றுதான் கூற வேண்டும். புதிய கேப்டன்ஷி, புதிய வீரர்கள் சேர்ந்து வெற்றியை எளிதாக்கினர்.

RCB vs KKR, கோலி, சுனில் நரைன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பேட்டிங்கில் கேப்டனாக தன்னுடைய பணியை சிறப்பாகச் செய்தார் பட்டிதார். 16 பந்துகளில் 5 பவுண்டரி, ஒருசிக்ஸர் என 36 ரன்களில் சிறிய கேமியோ ஆடி வெற்றியை நெருங்கவைத்துவிட்டு சென்றார். விராட் கோலியுடன் சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 44 ரன்கள் சேர்த்து பட்டிதார் பிரிந்தார்.

'வெற்றிக்கு காரணம் இவர்கள்தான்'

முதல் வெற்றிக்குப் பின் ஆர்சிபி கேப்டன் ரஜப் பட்டிதார் கூறுகையில் " எனக்கு முதல் போட்டி என்பதால் அழுத்தம் இருந்தது ஆனால், சிறந்த நாளாக முடிந்தது. இதேபோல அடுத்தடுத்து இருக்கும் என நம்புகிறேன். சூயாஷ் குமார் ரன்கள் கொடுத்தாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புக் கொடுத்தோம். அந்த நம்பிக்கையை காப்பாற்றினார். க்ருணால் பந்துவீச்சு ஆட்டத்தை திருப்பிவிட்டது. இருவருக்கும்தான் வெற்றிக்கு முழுப்பங்கு இருக்கிறது. கேப்டன் கோலி எனக்கு தொடர்ந்து களத்தில் ஆதரவு அளித்தார் ஆலோசனை வழங்கினார் அவரிடம் இருந்த கற்று வருகிறேன்" எனத் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx20znedp30o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தில் இஷான் கிஷான் முதல் சதம் குவித்து அசத்தல்; RRஐ வென்றது SHR

Published By: VISHNU 23 MAR, 2025 | 09:38 PM

image

(நெவில் அன்தனி)

ஹைதராபாத், உப்பல் ராஜீவ் காந்தி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் (RR) அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இஷான் கிஷான் இந்த வருடத்திற்கான முதலாவது சதத்தைக் குவிக்க, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) 44 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 286 ஓட்டங்களைக் குவித்தது.

2303_travis_head_srh_vs_rr.png

ட்ரவிஸ் ஹெட் குவித்த அதிரடி அரைச் சதம், இஷான் கிஷான் ஆக்ரோஷமாகக் குவித்த ஆட்டம் இழக்காத சதம் என்பன சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் கணிசமான மொத்த எண்ணிக்கைக்கு பெரிதும் உதவின.

மேலும், ஐபிஎல் வரலாற்றில் ஓர் அணிக்கான இரண்டாவது அதிகூடிய மொத்த எண்ணிக்கையை இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் பதிவுசெய்தது.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் குவித்த 287 ஓட்டங்களே ஐபிஎல் இல் ஓர் அணி பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும்.

இன்றைய போட்டியில் அபிஷேக் ஷர்மா (24), ட்ரவிஸ் ஹெட் ஆகிய இருவரும் 19 பந்துகளில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்து அதிரடி ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

தொடர்ந்து ட்ரவிஸ் ஹெட், இஷான் கிஷான் ஆகிய இருவரும் 38 பந்துகளில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 130 ஓட்டங்களாக உயர்த்தினர்.

ட்ரவிஸ் ஹெட் 31 பந்துகளில் 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 67 ஓட்டங்களைக் குவித்தார்.

தொடர்ந்து மறுபக்கத்தில் அபார ஆற்றலை வெளிப்படுத்திய இஷான் கிஷான் 3ஆவது விக்கெட்டில் நிட்டிஷ் குமார் ரெட்டியுடன் 29 பந்துகளில் 72 ஓட்டங்களையும் 4ஆவது விக்கெட்டில் ஹென்ரிச் க்ளாசனுடன் 24 பந்துகளில் 56 ஓட்டங்களையும் பகிர்ந்தார்.

இஷான் கிஷான் 47 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள் உட்பட 106 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

நிட்டிஷ் குமார் ரெட்டி 30 ஓட்டங்களையும் ஹென்றிச் க்ளாசன் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் துஷார் தேஷ்பாண்டே 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

287 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 242 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

ராஜஸ்தான் றோயல்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது.

யஷஸ்வி ஜய்ஸ்வால் (1), அணித் தலைவர் ரெயான் பரக் (4) நிட்டிஷ் ராணா (11) ஆகிய மூவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர். (50 - 3 விக்.)

ஆனால், சஞ்சு செம்சன், த்ருவ் ஜுரெல் ஆகிய இருவரும் அற்புதமாகத் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 59 பந்துகளில் 111 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர்.

2303_sanju_samson_rr_vs_srh.png

2303_shubam_dubey_rr_vs_srh.png

சஞ்ச செம்சன் 37 பந்துகளில் 7 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 66 ஓட்டங்களையும் த்ருவ் ஜுவெல் 35 பந்துகளில் 5 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 70 ஓட்டங்களையும் குவித்தனர். அவர்கள் இருவரும் மொத்த எண்ணிக்கை 161 ஓட்டங்களாக இருந்தபோது ஆட்டம் இழந்தனர்.

மத்திய வரிசையில் ஷிம்ரன் ஹெட்மயர் 23 பந்துகளில் ஒரு பவுண்டறி, 4 சிக்ஸ்களுடன் 42 ஓட்டங்களையும் ஷுபம் டுபே 11 பந்துகளில் ஒரு சிக்ஸ், 4 பவுண்டறிகள் உட்பட ஆட்டம் இழக்காமல் 34 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்கள் இருவரும் 6ஆவது விக்கெட்டில் 33 பந்துகளில் 80 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

பந்துவீச்சில் ஹர்ஷால் பட்டேல் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சிமர்ஜீத் சிங் 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: இஷான் கிஷான்

https://www.virakesari.lk/article/210024

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரேபோட்டியில் குவிக்கப்பட்ட 528 ரன்கள் ! இஷான் கிஷன் சதத்துடன் ஹைதராபாத் அமர்க்கள ஆரம்பம்

ஐபிஎல், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 2025 , ராஜஸ்தான் ராயல்ஸ் , ஜோஃப்ரா ஆர்ச்சர் , இஷான் கிஷன், டிராவிஸ் ஹெட்

பட மூலாதாரம்,SUNRISERSHYDERABAD/X PAGE

படக்குறிப்பு, 45 பந்துகளில் முதல் ஐபிஎல் சதத்தை அடித்தார் இஷான் கிஷன்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 23 மார்ச் 2025

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2025 ஐபிஎல் சீசனையும் கடந்த சீசனைப் போல் அதிரடியாக தொடங்கி, சாதனை வெற்றியுடன் கணக்கைத் தொடங்கியுள்ளது.

ஹைதராபாத்தில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 2வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் சேர்த்தது. 287 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் சேர்த்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோரை சன்ரைசர்ஸ் அணி பதிவு செய்து வெற்றி பெற்றது. ஏற்கெனவே 287 ரன்கள் எனும் சாதனை ஸ்கோரையும் சன்ரைசர்ஸ் அணிதான் அடித்திருந்தது. இன்றைய போட்டியில் 300 ரன்களை எட்டுவதற்கு 14 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டநிலையில் சன்ரைசர்ஸ் ஆட்டம் முடிந்தது.

இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி 2 புள்ளிகளுடன் 2.200 என்ற வலுவான நிகர ரன்ரேட்டுடன் ஆர்சிபியை பின்னுக்குத் தள்ளி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

இந்த ஆட்டத்தில் மட்டும் இரு அணிகளிலும் சேர்த்து 51 பவுண்டரிகள், 30 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன, மொத்தம் 528 ரன்கள் சேர்க்கப்பட்டன. ஹைதராபாத்தில் ஆட்டத்தைக் காண வந்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் இரு அணியின் பேட்டர்களும் வானவேடிக்கை காண்பித்தனர்.

மோசமான சாதனை படைத்த பந்து வீச்சாளர்கள்

Instagram பதிவை கடந்து செல்ல

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Instagram பதிவின் முடிவு

பேட்டிங்கில் சாதனைகள் படைக்கப்பட்டதால், பந்து வீச்சாளர்களுக்கு சோதனையான ஆட்டமாக இருந்தது.

ராஜஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஆர்ச்சர், ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தவராக மாறினார்.

கடந்த 2019, 2020 சீசன்களில் ஆர்ச்சரின் பந்துவீச்சு மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது. 152 கி.மீ வேகத்தில் பந்துவீசி அச்சுறுத்தலாக திகழ்ந்த ஆர்ச்சர், இன்று 4 ஓவர்கள் வீசி 76 ரன்களை வாரிக்கொடுத்தார்.

மற்ற பந்துவீச்சாளர்களும் ஆர்ச்சருக்கு சற்றும் குறையவில்லை. தீக்சனா(52), பருக்கீ(49),சந்தீப் சர்மா(51), தேஷ்பாண்டே(44) என ரன்களை வாரிக்கொடுத்தனர்.

இவர்களில் 3 ஓவர்கள் மட்டுமே வீசிய பரூக்கி அரை சதம் ரன்களை வழங்குவதிலிருந்து 1 ரன்னில் தப்பினார். சன்ரைசர்ஸ் பேட்டர்கள் இந்த ஆட்டத்தில் 17 பந்துகளில் மட்டுமே ரன் ஏதும் எடுக்கவில்லை.

ஆட்டநாயகனாக ஜொலித்த இஷான் கிஷன்

ஐபிஎல், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 2025 , ராஜஸ்தான் ராயல்ஸ் , ஜோஃப்ரா ஆர்ச்சர் , இஷான் கிஷன், டிராவிஸ் ஹெட்

பட மூலாதாரம்,SUNRISERSHYDERABAD/X PAGE

45 பந்துகளில் ஐபிஎல் போட்டிகளில் முதல் சதம் அடித்த இஷான் கிஷன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். சன்ரைசர்ஸ் அணிக்காக களமிறங்கிய முதல் போட்டியிலேயே இஷான் கிஷன் ஆட்டநாயகன் விருது வென்றார்.

சன்ரைசர்ஸ் அணியில் ஏற்கெனவே டிராவிஸ், அபிஷேக் என அதிரடி ஆட்டக்காரர்கள் இருக்கும் நிலையில், அவர்களுக்குப் போட்டியாக இஷான் கிஷன் வந்துள்ளார்.

மைண்ட் கேமில் சன்ரைசர்ஸ்

X பதிவை கடந்து செல்ல, 1

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 1

287 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் பிரமாண்ட இலக்கோடு ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

இது போன்று இமாலய இலக்கை எடுத்துவிட்டாலே எதிரணி மனரீதியாக நம்பிக்கையிழந்து உடைந்து விடுவார்கள். இதன் பின்னர் எளிதாக பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தி ஆட்டமிழக்கச் செய்து, நிகர ரன்ரேட்டை உயர்த்திக்கொள்வது கிரிக்கெட்டின் "உளவியல் ஆட்டத்தில்" முக்கியமான அஸ்திரமாகும்.

ஒருவரை மனரீதியாக வீழ்த்திவிட்டாலே பாதி வெற்றி கிடைத்ததுபோன்றது. இந்த கலையை சன்ரைசர்ஸ் அணி கடந்த சீசனில் இருந்து சிறப்பாகச் செய்து வருகிறது.

சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் " 280 ரன்களுக்குமேல் அடிப்போம் என எதிர்பார்க்கவில்லை,வியப்பாக இருக்கிறது. ஏதாவது ஒரு அணி இதுபோன்று பெரிய ஸ்கோரை எடுத்துவிட்டாலே ஆட்டம் ஒருதரப்புதான் ரன்களை துரத்திச்செல்லும்போது, ஆட்டம் கடினமானதாக மாறிவிடும் .

இஷான் ஆட்டம் அற்புதமாக இருந்தது. முதல் ஆட்டத்துக்கு தயாரானதே பிரமிப்பாக இருந்தது, எங்களின் பயிற்சியாளர்களும் அற்புதமானவர்கள், அனைத்து வீரர்களும் தயாராக இருந்ததால், சரியான நேரத்தில் திறமையை வெளிப்படுத்த முடிந்தது" எனத் தெரிவித்தார்.

அதிரடித் தொடக்கம்

ஐபிஎல், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 2025 , ராஜஸ்தான் ராயல்ஸ் , ஜோஃப்ரா ஆர்ச்சர் , இஷான் கிஷன், டிராவிஸ் ஹெட்

பட மூலாதாரம்,SUNRISERSHYDERABAD/X PAGE

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். ஹைதராபாத் அணிக்காக கடந்த சீசனில் பல சாதனைகளைச் செய்த டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா கூட்டணி இந்த முறையும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

முதல் ஓவரிலிருந்து டிராவிஸ் ஹெட்டும், அபிஷேக் சர்மாவும் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை வெளுத்து கட்டினர்.

ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் பரூக்கி, சந்தீப் சர்மா ஓவர்களை அபிஷேக், ஹெட் என இருவரும் துவம்சம் செய்தனர். பவுண்டரி, சிக்ஸர் என ஓவருக்கு 10 ரன்ரேட்டில் ஸ்கோர் உயர்ந்தது.

இந்தப் போட்டியிலும் ஏதோ சம்பவம் செய்ய காத்திருக்கிறார்கள் என்று ரசிகர்கள் நினைத்தனர். 3.4 ஓவரில் சன்ரைசர்ஸ் அணி 50 ரன்களை எட்டியது.

இருவரின் பேட்டிங்கைப் பார்த்து மிரண்டு, சுழற்பந்துவீச்சாளர் தீக்சனாவை பந்துவீச அழைத்தார் ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக். இது கைமேல் பலன் கொடுத்தது அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 11 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்த நிலையில் தீக்சனா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். முதல் விக்கெட்டுக்கு 19 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

ஹெட் அரைசதம்

அடுத்ததாக சன்ரைசர்ஸ் அணிக்கு புதிதாக வந்துள்ள இஷான் கிஷன் களமிறங்கி டிராவிஸ் ஹெட்டுன் சேர்ந்தார். ஏற்கெனவே டிராவிஸ் ஹெட் ராட்சசத்தனமாக ஆடிவரும் நிலையில், அத்தோடு இஷான் கிஷனும் சேர்ந்து கொண்டு வெளுத்து வாங்கினார்.

ஆர்ச்சர் பந்துவீச அழைக்கப்பட்ட முதல் ஓவரிலேயே டிராவிஸ் ஹெட் சிக்ஸர், பவுண்டரி என 21 ரன்கள் சேர்த்தார். பவர்ப்ளே முடிவில் சன்ரைசர்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் சேர்த்து, ஐபிஎல் வரலாற்றில் 5வது அதிகபட்ச பவர்ப்ளே ரன்கள் என்ற சாதனை படைத்தது.

பவுண்டரிகளாகப் பறக்கவிட்ட டிராவிஸ் ஹெட் 21 பந்துகளில் அரைசதம் எட்டினார். தேஷ்பாண்டே வீசிய 10-வது ஓவரில் ஹெட்மயரிடம் கேட்ச் கொடுத்து 31 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்து(9பவுண்டரி, 3 சிக்ஸர்) ஹெட் ஆட்டமிழந்தார்.

இஷான், டிராவிஸ் கூட்டணி 38 பந்துகளில் 85 ரன்கள் சேர்த்து பிரிந்தனர். 10 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்தது.

இஷான் சரவெடி ஆட்டம்

X பதிவை கடந்து செல்ல, 2

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 2

அடுத்து வந்த நிதிஷ் குமார் ரெட்டி, இஷான் கிஷனுடன் சேர்ந்தார். ஹெட், அபிஷேக் ஆட்டமிழந்தால் என்ன நான் இருக்கிறேன் என்று ராஜஸ்தான் பந்துவீச்சை இஷான் கிஷன் வெளுக்கத் தொடங்கினார்.

ஆர்ச்சர் வீசிய 13வது ஓவரில் 3 சிக்ஸர்கள் உள்பட 22 ரன்கள் சேர்த்த இஷான் கிஷன் 25 பந்துகளில் அரைசதம் எட்டினார். தீக்சனா வீசிய 15-வது ஓவரில் நிதிஷ் குமார் 30 ரன்கள் சேர்த்தநிலையில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு இருவரும் 72 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்துவந்த கிளாசன், இஷானுடன் சேர்ந்தார். சந்தீப் சர்மா வீசிய 17-வது ஓவரில் சிக்ஸர் பவுண்டரி என 14 ரன்களை கிளாசன் எடுத்தார். ஆர்ச்சர் வீசிய 18-வதுஓவரை துவம்சம் செய்த கிளாசன் 4 பவுண்டரிகள் உள்பட 23 ரன்கள் சேர்த்தார்.

சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் ரியான் பராக்கிடம் கேட்ச் கொடுத்து கிளாசன் ஆட்டமிழந்தார். இவர் 14 பந்துகளில் 5 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 34 ரன்கள் சேர்த்திருந்தார். அதே ஓவரில் இஷான் கிஷன் 2 சிக்ஸர்களை விளாசி 45 பந்துகளில் ஐபிஎல் தொடரில் முதல் சதத்தை நிறைவு செய்தார். 225 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிய இஷான் கிஷன், 25 பந்துகளில் அரை சதம் அடித்தார். அடுத்த 50 ரன்களை வெறும் 20 பந்துகளில் விளாசி சதத்தைக் கடந்தார்.

தேஷ்பாண்டே வீசிய கடைசி ஓவரில் அங்கித்(7), அபினவ் மனோகர்(0) என விக்கெட்டை இழந்தனர். எனினும் இஷான் கிஷன் கடைசிப்பந்தில் பவுண்டரியுடன் இன்னிங்ஸை முடித்தார். 47 பந்துகளில் 106 ரன்களுடன்(11பவுண்டரி, 6 சிக்ஸர்) இஷான் கிஷன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இஷான் கிஷன் கடைசிவரை களத்தில் இருந்ததால்தான் சன்ரைசர்ஸ் அணியால் பெரியஸ்கோரைக் குவிக்க முடிந்தது. 20 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் சேர்த்தது.

ராஜஸ்தான் தரப்பில் தீக்சனா 52 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

விக்கெட் சரிவு

287 ரன்கள் என்ற பிரமாண்ட இலக்கு இருந்த போதும், ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சன் நம்பிக்கையளிக்கும் விதத்தில் பேட்டிங்கை தொடங்கினார்.

ஷமி வீசிய முதல் ஓவரிலேயே சாம்ஸன் சிக்ஸர், 2 பவுண்டரி என 16 ரன்கள் சேர்த்தார். சிமர்ஜித் வீசிய 2வது ஓவரில் ஜெய்ஸ்வால் ஒரு ரன்னில் மனோகரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்துவந்த கேப்டன் பராக், ஒரு பவுண்டரி அடித்தநிலையில் அதே ஓவரின் 5வது பந்தில் கம்மின்ஸிடம் கேட்ச் கொடுத்து 4ரன்னில் ஆட்டமிழந்தார்.

2வது ஓவரிலேயே ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 3வது விக்கெட்டுக்கு சாம்ஸன், நிதிஷ் ராணா சேர்ந்தனர். சாம்ஸன் வழக்கம்போல் சிக்ஸர், பவுண்டரி என விளாசியதால் ரன்ரேட் குறையாமல் சென்றது.

ராணா 11 ரன்னில் ஷமி பந்துவீச்சில் கம்மின்ஸிடம் விக்கெட்டை இழந்தார். அடுத்து ஜூரெல் களமிறங்கினார். கம்மின்ஸ் வீசிய 6வது ஓவரில் ஒரு சிக்ஸர் 3 பவுண்டரி என 20 ரன்கள் சேர்த்தார். பவர்ப்ளே முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் சேர்த்தது.

நம்பிக்கையளித்த சாம்ஸன், ஜூரெல்

X பதிவை கடந்து செல்ல, 3

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 3

சாம்ஸனும், துருவ் ஜூரெலும் இணைந்து அதிரடியாக ஆடி சன்ரைசர்ஸ் அணிக்கு சவால் விடுக்கம் வகையில் ஸ்கோரை உயர்த்தினர். 9-வது ஓவரிலேயே ராஜஸ்தான் அணியும் 100 ரன்களை எட்டியது. 10ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் சேர்த்தனர். சாம்ஸன் 25 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

சிமர்ஜித் வீசிய 13-வது ஓவரில் ஜூரெல் 3 சிக்ஸர்களும், சாம்ஸன் ஒருபவுண்டரி என 26 ரன்கள்சேர்த்தனர். 28 பந்துகளில் ஜூரெல் அரைசதம் எட்டினார். ஹர்சல் படேல் வீசிய 14வது ஓவரில் விக்கெட் கீப்பர் கிளாசனிடம் கேட்ச் கொடுத்து சாம்ஸன் 66 ரன்னில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 7பவுண்டரி, 4 சிக்ஸர்கள் அடங்கும்.

ஆடம் ஸம்பா வீசிய 15-வது ஓவரில் ஜூரெல் 35 பந்துகளில் 70 ரன்கள் (5பவுண்டரி, 6 சிக்ஸர்) சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து ஷுபம் துபே, ஹெட்மயர் அதிரடியால் ராஜஸ்தான் அணி 17.2 ஓவர்களில் 200 ரன்களை எட்டியது.

கடைசி இரு ஓவர்களில் ராஜஸ்தான் அணி வெற்றிக்கு 70 ரன்கள் தேவைப்பட்டது. ஹெட்மயர், ஷுபம் துபே இருவரும் கடைசிவரை போராடியும் தோல்வியில் முடிந்தது. ஹெட்மயர் 42 ரன்கள் சேர்த்து கடைசி ஓவரில் ஹர்சல் படேலிடம் விக்கெட்டை இழந்தார். ஷுபம் துபே 34 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் சேர்த்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஹர்ஷல் படேல், சிமர்ஜித் சிங் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cq6y38n212ro

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோனி மின்னல் வேக ஸ்டம்பிங்: சென்னையை திணறடித்த மும்பையின் இளம் சுழல் 'மாயாவி' விக்னேஷ் யார்?

CSK vs MI, ஐபிஎல்

பட மூலாதாரம்,X/CSK

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 3-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சிஎஸ்கே அணி. மிகவும் எதிர்பார்ப்புக்குரியதாக அமைந்த இந்த ஆட்டத்தில் எளிய இலக்கைத் துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை கடைசி ஓவர் வரை மும்பை அணி தள்ளிப்போட்டது.

சிஎஸ்கே கையில் எடுத்த அதே ஆயுதத்தை மும்பை இந்தியன்ஸும் எடுத்து கடைசிவரை போராடியது. சிஎஸ்கேவில் சுழற்பந்துவீச்சாளர் நூர் அகமது இருப்பதைப் போல், மும்பை இந்தியன்ஸில் இளம் அறிமுக வீரர் விக்னேஷ் புத்தூர் சிஎஸ்கே ரன் குவிப்பை கட்டுப்படுத்தியதில் முக்கியமானவர். இம்பாக்ட் பிளேயராக களமிறக்கப்பட்ட அவர் தனது மந்திர சுழலால் சென்னை அணியின் ரன் குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தினார்.

மும்பையின் டாப்ஆர்டரை காலி செய்த கலீல்

டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கை தொடங்கிய மும்பை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலேயே கலீல் பந்துவீச்சில் ஷிவம் துபேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ரிக்கெல்டனையும் கிளீன் போல்டு செய்து அவர் அசத்தினார்.

மறுபுறம் இளம் அதிரடி ஆட்டக்காரர் வில் ஜாக்ஸை சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் வெளியேற்றினார். இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி 4.4. ஓவர்களில் 36 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

CSK vs MI, ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மும்பையை திணறவைத்த நூர்அகமது

மும்பை அணிக்கு சூர்யகுமார், திலக்வர்மா இருவரும் சேர்ந்து ஓரளவு ஸ்கோரை நிலைப்படுத்தி பவர்ப்ளே முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் சேர்த்தனர். இருவரின் பார்ட்னர்ஷிப் 51 ரன்கள் சேர்த்து நங்கூரமிட்டநிலையில் அதை நூர் அகமது உடைத்தார்.

நூர் அகமதுவின் பந்துவீச்சில் சூர்யகுமார் இறங்கி அடிக்க முற்பட்டு பந்தை தவறவிட்ட 0.012 மைக்ரோ வினாடிகளில் ஸ்டெம்பிங் செய்தார் தோனி. அடுத்துவந்த புதிய பேட்டர் ராபின் மின்ஸ் சரியாகக் கணிக்காமல் நூர் அகமது வீசிய 13-வது ஓவரில் ஸ்லோ பாலை அடிக்க முற்பட்டு கேட்சாகி 3 ரன்னில் ஆட்டமிழந்தார், அதே ஓவரில் திலக் வர்மா கால்காப்பில் வாங்கி 31 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

மும்பை அணியின் ரன்ரேட் ஓரளவு உயர்ந்தநிலையில் அதற்கு நூர்அகமது வலுவான பிரேக்போட்டார். அடுத்துவந்த நமன்திர்(17), சான்ட்னர்(17) இருவரும் ஓரளவு பங்களிப்பு செய்தனர்.

சிஎஸ்கே அணியில் நீண்டகாலம் இருந்து, தற்போது மும்பைக்காக விளையாடும் தீபக் சஹர் தன்னாலும் பேட் செய்ய முடியும் என்பதை நேற்று வெளிப்படுத்தினார். கடைசி நேரத்தில் சிறிய கேமியோ ஆடிய தீபக் சஹர் 15 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தீபக் சஹரின் இந்த பங்களிப்பால்தான் மும்பை அணியால் 150 ரன்களைக் கடக்க முடிந்தது.

CSK vs MI, ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கெய்க்வாட், ரவீந்திரா சிறப்பான ஆட்டம்

156 ரன்கள் எளிதாக சேஸ் செய்யக்கூடிய ஸ்கோர் இல்லை என்பதை மும்பை அணி தொடக்கத்தில் இருந்து வெளிப்படுத்தியது. தொடக்கத்திலேயே திரிபாதி விக்கெட்டை தீபக் சஹர் வீழ்த்தி அதிர்ச்சியளித்தார்.

3வது வீரராக வந்த கெய்க்வாட், ரவீ்ந்திராவுடன் சேர்ந்து அதிரடியாக பேட் செய்தார். ரச்சின் ரவீந்திரா ஆங்கர் ரோலில் ஆட, கெய்க்வாட் வேகமாக ரன்களைச் சேர்த்தார். தீபக் சஹர், சான்ட்னர், ராஜீ பந்துவீச்சை வெளுத்துவாங்கவே பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு சிஎஸ்கே 62 ரன்கள் சேர்த்தது.

CSK vs MI, ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எளிதான வெற்றி கடினமானது

கடைசி 13 ஓவர்களில் சிஎஸ்கே வெற்றிக்கு 83 ரன் தேவைப்பட்டது. கெய்க்வாட், ரவீந்திரா இருந்த ஃபார்மில் விரைவாக எட்டிவிடுவார்கள் நிகர ரன் ரேட்டை உயர்த்திவிடுவார்கள் என்று ரசிகர்கள் கருதினர். ஆனால், சிஎஸ்கே எடுத்த அதே ஆயுதத்தை, அவர்களுக்கு எதிராக மும்பையும் பயன்படுத்தியது.

4 சுழற்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்திய கேப்டன் சூர்யகுமார், 13 ஓவர்களை சுழற்பந்துவீச்சாளர்களுக்கே வழங்கினார். பந்துவீச்சாளர்களை ரொட்டேட் செய்து சிறப்பாக கேப்டன்சியையும் ஸ்கை செய்தார்.

சிஎஸ்கேவை கட்டிப்போட்ட புத்தூர்

அறிமுக ரிஸ்ட் ஸ்பின்னர் விக்னேஷ் புத்தூர் பந்துவீச்சை சிஎஸ்கே பேட்டர்கள் எளிதாக எடை போட்டனர். இயல்புக்கும் குறைவான வேகத்தில் விக்னேஷ் பந்துவீசியதால் அவரின் பந்தில் பெரிய ஷாட்டுக்கு முயலும் போது கவனத்துடன் ஆட வேண்டும்.

கேப்டன் கெய்க்வாட் சிக்ஸர் அடிக்க முற்பட்டு, 53 ரன்னில் ஜேக்ஸிடம் கேட்சாகினார். அடுத்துவந்த ஷிவம் துபே(9), தீபக் ஹூடா(3) ஆகியோரும் புத்தூரின் ஸ்லோ ரிஸ்ட் ஸ்பின்னில் பெரிய ஷாட்டுக்கு முயன்று விக்கெட்டை பலிகொடுத்தனர். சாம்கரன் 4 ரன்னில் ஜேக்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

சிஎஸ்கேவின் வேகமான வெற்றிப் பயனத்துக்கு விக்னேஷ் புத்தூர், உள்ளிட்ட 4 சுழற்பந்துவீச்சாளர்களும் பிரேக் போட்டனர். நமன் திர், வில் ஜேக்ஸ், சான்ட்னர், புத்தூர் என பலமுனை தாக்குதல்களை சிஎஸ்கே பேட்டர்களால் சமாளிக்க முடியவில்லை. கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 37 ரன் தேவைப்பட்டது.

CSK vs MI, ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டென்ஷனைக் குறைத்த ரவீந்திரா

புத்தூர் வீசிய 18-வது ஓவரில் ரச்சின் ரவீந்திரா இரு சிக்ஸர்களை விளாசி வெற்றிக்கு தேவைப்படும் ரன்களைக் குறைத்தார். இடையே போல்ட் ஓவரில் ஜடேஜா பவுண்டரி அடித்ததும் சற்று பின்னடைவாக மும்பைக்கு அமைந்தது. கடைசி 2 ஓவர்களில் சிஎஸ்கே வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது, நமன்திர் வீசிய 19-வது ஓவரில் ஜடேஜா 17ரன்னில் ரன்அவுட்டாகினார்.

அரங்கமே அதிர்ந்தது

ரசிகர்கள் எதற்காக காத்திருந்தார்களோ அந்த சம்பவம் நடந்தது, தோனி களமிறங்கும்போது, அரங்கில்இருந்த "டீஜே" ஒலிக்கவிட்ட பாடல்கள், அரங்கை அதிர வைத்தன. அதைவிட ரசிகர்களின் கரஒலியும், விசில் சத்தமும் பெரிதாக இருந்தது.

தோனி கடைசி இரு பந்துகளைச் சந்தித்தும் ரன் சேர்க்கவில்லை. கடைசி ஓவரில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது. சான்ட்னர் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் ரவீந்திரா சிக்ஸர் அடிக்கவே சிஎஸ்கே வென்றது. ரவீந்திரா 65 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை தரப்பில் இளம் வீரர் புத்தூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

CSK vs MI, ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

13 ஆண்டாக தொடரும் சோகம்

மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2012ம் ஆண்டுக்குப்பின், ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் வெல்ல முடியாமல் தவிக்கிறது. இந்த போட்டியில் தோல்வியுடன் சேர்த்து 13 ஆண்டாக முதல் போட்டியில் தோற்று வருகிறது மும்பை அணி. அதிலும் சிஎஸ்கேவுக்கு எதிராக 2018, 2020 ஆகிய ஆண்டுகளில் முதல் போட்டியில் தோற்ற நிலையில் இந்த ஆட்டத்திலும் மும்பை தோற்றது.

ஆட்டத்தின் நாயகன்

சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு பந்துவீச்சில் இருவர் முக்கியக் காரணம். ஒருவர் வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது, மற்றொருவர் ஆப்கானிஸ்தான் இடதுகை ரிஸ்ட் ஸ்பின்னர் நூர் அகமது. இதில் 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்திய நூர் அகமது ஆட்டநாயகன் விருது வென்றார்.

நூர் அகமதுவுக்கு ஐபிஎல் வாழ்க்கையில் இதுதான் சிறந்த பந்துவீச்சாக அமைந்தது. இதற்கு முன் 3 விக்கெட் வீழ்த்தியிருந்த நிலையில் அதைவிட சிறப்பாக இந்தப் போட்டியில் பந்துவீசியுள்ளார்.

பேட்டிங்கில் கேப்டன் கெய்க்வாட்(53), ரச்சின் ரவீந்திரா(65) இருவரைத் தவிர சிஎஸ்கே அணியில் பெரிதாக யாரும் பங்களிப்பு செய்யவில்லை.

கேப்டனுக்குரிய பொறுப்புடன் ஆடிய கெய்க்வாட் 26 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்து பந்துக்கும், தேவைப்படும் ரன்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைத்துச் சென்றார். ஆங்கர் ரோல் எடுத்து ஆடிய ரச்சின் ரவீந்திரா கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

CSK vs MI, ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மின்னல் 'மகி'

சிஎஸ்கே அணியில் நேற்று 43 வயது இளைஞர் என செல்லமாக அழைக்கப்படும் தோனி களமிறங்கிய போது அரங்கமே கைதட்டலிலும், விசில் சத்தத்திலும் அதிர்ந்தது. எம்எஸ் தோனியின் விக்கெட் கீப்பிங்கைப் பார்த்தபோது அவருக்கு 43 வயதுபோன்று தெரியவில்லை. உடற்தகுதியை அற்புதமாக பராமரிக்கும் தோனி நேற்று செய்த ஸ்டெம்பிங் கவனத்தை ஈர்த்தது.

நூர் அகமதுவின் பந்துவீச்சில் சூர்யகுமார் இறங்கி அடிக்க முற்பட்டு பந்தை தவறவிட்ட 0.012 வினாடிகளில் ஸ்டெம்பிங் செய்துவிட்டு தோனி சிரித்துக்கொண்டே சென்றார். தோனியின் ஸ்டெம்பிங் வேகம் பற்றி அறிந்த ஸ்கை சிரித்துக்கொண்டே பெவிலியன் சென்றார். ஒரு பேட்டரின் பேட்டிங் ஆக்சன் கூட முழுமையாக முடியாத நிலையிலேயே, சில மைக்ரோ வினாடிகளில் இந்த ஸ்டெம்பிங்கை தோனி செய்துள்ளார். மின்னல் மகியின் ஆகச்சிறந்த ஸ்டெம்பிங் முதல் ஆட்டத்திலேயே தெரிந்தது.

CSK vs MI, ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தோனி குறித்து ருதுராஜ் கூறியது என்ன?

வெற்றிக்குப் பின் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில் " நான் ஆட்டமிழந்தவுடன் சிறிது பதற்றமாக இருந்தது. சில போட்டிகள் கடைசி ஓவர்வரை செல்லும், வெற்றிபெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் அப்படித்தான் உணர்கிறேன். அணியில் 3வது வீரராகக் களமிறங்க வேண்டிய தேவை இருந்ததால் நான் வந்தேன். புதிய அணிக்கு சமநிலையை ஏற்படுத்த வேண்டும். திரிபாதி தொடக்க வீரராக சிறப்பாக ஆடக்கூடியவர்.

எங்களின் சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். கடந்த சில ஆண்டுகளாகவே கலீல் அகமது சிறப்பாக விளையாடி வருகிறார், அனுபவம் அதிகம்வந்துவிட்டது. நூர் அகமதுதான் அணியின் துருப்புச்சீட்டு. தோனி இப்போதும் ஒரே மாதிரியான உடல்தகுதியுடன் இருக்கிறார், வலைப்பயிற்சியில் பல சிக்ஸர்களை விளாசினார், இந்த ஆண்டும் பல சிக்ஸர்களை விளாசுவதைப் பார்க்கலாம்" எனத் தெரிவித்தார்.

CSK vs MI, ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தோனி ஸ்டம்பிங் பற்றி நூர் அகமது கூறியது என்ன?

ஆட்டநாயகன் விருது பெற்ற நூர் அமகது பேசுகையில், இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தினா. எம்எஸ் தோனிக்கு நன்றி தெரிவித்த அவர், "ஐபிஎல்லில் இங்கு விளையாடுவது சிறப்பு வாய்ந்ததாக உணர்கிறேன். அணியில் வெற்றிக்கு பங்களித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். சரியான பகுதியில் பந்தை பிட்ச் செய்வதில் கவனம் செலுத்தினேன். சூர்யகுமாரின் விக்கெட் சிறப்பு வாய்ந்தது. தோனியின் ஸ்டம்பிங் ஆச்சர்யமானதாக இருந்தது. தோனி போன்ற ஒருவர் ஸ்டம்புகளுக்குப் பின்னால் இருப்பது ஒரு பவுலராக எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று அவர் கூறினார்.

CSK vs MI, ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

10 ஆண்டுகளுக்குப் பின் 'யெல்லோ அஸ்வின்'

10 ஆண்டுகளுக்குப்பின் அஸ்வின் நேற்று மீண்டும் மஞ்சள் ஆடை அணிந்து உற்சாகமாக, அதிலும் சொந்த மண்ணில் விளையாடினார். தான் இன்னும் ஃபார்மில் இருக்கிறேன் என்பதை உரக்கச் சொல்லிய அஸ்வின் முதல் ஓவரிலேயே வில் ஜேக்ஸ்(11) விக்கெட்டை வீழ்த்தினார்.

அஸ்வின் அதே கேரம்பால், ஸ்லோபால், பந்துவீச்சில் வேரியேஷன் என சரியான லென்த்தில் பந்துவீசி பேட்டர்களுக்கு வழக்கம்போல் சிம்மசொப்பனமாக திகழ்ந்தார். 4 ஓவர்கள் வீசிய அஸ்வின் 31 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

யார் இந்த விக்னேஷ் புத்தூர்?

CSK vs MI

பட மூலாதாரம்,GETTY IMAGES

எளிய இலக்கை துரத்திய சிஎஸ்கே அணியை திணறடித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் விக்னேஷ் புத்தூர் கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர். 23 வயதேயான இவரை 30 லட்ச ரூபாய் என்ற அடிப்படை விலையில் மும்பை அணி வாங்கியுள்ளது. கேரள கிரிக்கெட் லீக்கில் அலெப்பி ரிப்பிள்ஸ் (Aleppey Ripples) அணிக்காக அவர் விளையாடி வருகிறார். 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் முடிவில் இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் பரிச்சயமானவராக அவர் இருப்பார் என்று மும்பை இந்தியன்ஸ் அணி நம்புகிறது.

கேரளாவில் 14 வயதுக்குட்டோர் மற்றும் 19 வயதுக்குட்டோருக்கான அணிகளில் விளையாடியுள்ள இவர், கேரள சீனியர் அணியில் இன்னும் இடம் பிடிக்கவில்லை. கேரள கிரிக்கெட் லீக்கில் 3 ஆட்டங்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே அவர் எடுத்துள்ளார். ஆனாலும், அவரது சுழலில் இருந்த மாயாஜாலம் மும்பை இந்தியன்ஸ் அணியை கவர, 30 லட்ச ரூபாய் என்ற அடிப்படைய விலையில் அவரை வாங்கியுள்ளது.

தென் ஆப்ரிக்க டி20 கிரிக்கெட் லீக்கில் எம்ஐ கேப்டவுன் அணியின் பயிற்சியில் வலைப்பந்துவீச்சாளராக செயல்பட்ட பின்னர் ஐபிஎல் தொடரில் விக்னேஷ் புத்தூர் அறிமுகமாகியுள்ளார். முதல் போட்டியிலேயே ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, தீபக் ஹூடா ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அவர் கவனம் ஈர்த்துள்ளார் என்று ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ இணையதளம் கூறுகிறது.

நேற்றைய ஆட்டம் முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொண்ட வேளையில், விக்னேஷ் புத்தூரை முதுகில் தட்டிக் கொடுத்தார் தோனி. இந்த தருணத்தை விக்னேஷ் புத்தூர் தனது வாழ்நாளில் ஒருபோதும் மறக்கவே மாட்டார் என்று கூறியுள்ள வர்ணனையாளரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான ரவி சாஸ்திரி, இது விக்னேஷ் புத்தூருக்கு உற்சாகம் தரும் ஒன்றாக இருந்திருக்கும் என்று தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cjryx9r879zo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி அசாத்திய வெற்றி: சிக்ஸர், பவுண்டரிகளால் ஆட்டத்தையே தலைகீழாக மாற்றிய 'தனி ஒருவன்'

DC vs LSG, அசுதோஷ் சர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

டெல்லி - லக்னௌ போட்டி ஐபிஎல் ஆட்டம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று 4வது ஆட்டத்திலேயே ரசிகர்களுக்கு உணர்த்திவிட்டது. விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 4வது லீக் ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.

கடைசி ஓவர் வரை எந்த அணி வெல்லும் என்று யாராலும் கணிக்க முடியாத ஆட்டமாக இருந்தது. டெல்லி அணி வீரர் அசுதோஷ் ஷர்மா என்ற ஒற்றை பேட்டர்தான் சாத்தியமில்லாத வெற்றியை சாத்தியமாக்கினார். கடைசி ஓவரை அசுதோஷ் சந்திக்கும் வரை டெல்லி அணி பக்கம் வெற்றி இல்லை என்ற நிலைதான் இருந்தது. கடைசி ஓவரில் ஒரு பந்தை சந்தித்தவுடனே அசுதோஷ் வெற்றியை உறுதி செய்தார்.

லக்னௌ அதிரடி

டெல்லி அணியின் பந்துவீச்சை தொடக்கத்தில் மிட்ஷெல் மார்ஷ், நிகோலஸ் பூரன் இருவரும் சேர்ந்து வெளுத்து வாங்கினர் 4.5 ஓவர்களில் 50 ரன்களும், பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்களும் என லக்னெள வலுவாக இருந்தது. மார்ஷ் 19 பந்துகளிலும், பூரன் 24 பந்துகளிலும் அரைசதத்தைக் கடந்தனர். இவர்கள் அணியின் ஸ்கோரை 250 ரன்களுக்கு உயர்த்துவார்கள் என கணிக்கப்பட்டது.

ஆனால் மார்ஷ் 36 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்த நிலையில் முகேஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார், பூரன் 30 பந்துகளில் 75 ரன்களில் ஸ்டார்க் பந்துவீச்சில் க்ளீன் போல்டான பின் ஆட்டம் தலைகீழாக மாறியது.

DC vs LSG, அசுதோஷ் சர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

13-வது ஓவரில் லக்னெள அணி 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது, அடுத்த 7 ஓவர்களில் லக்னெள அணி எப்படியும் குறைந்தபட்சம் 70 ரன்கள் சேர்த்து 246 ரன்கள் ஸ்கோர் செல்லும் என கணிக்கப்பட்டது.

ஆனால், குல்தீப் யாதவ், மிட்ஷெல் ஸ்டார்க் இருவரும் சேர்ந்து லக்னெள பேட்டிங் வரிசையை சீர்குலைத்தனர். கேப்டன் ரிஷப் பந்த் டக்அவுட்டில் குல்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். குல்தீப் வீசிய 17வது ஓவரில் பதோனை சிக்ஸருக்கு முயன்று விக்கெட்டை இழந்தார், அதே ஓவரில் ஷர்துல் தாக்கூர் ரன்அவுட்டாகி வெளியேறினர். ஸ்டார்க் தனது கடைசி ஓவரில் ஷாபாஸ் அகமது, ரவி பிஸ்னோய் விக்கெட்டுகளை வீழ்த்தவே லக்னெள அணி 194 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது.

ஒரு கட்டத்தில் 162 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என வலுவாக இருந்த லக்னெள அடுத்த 32 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி ஓவரில் டேவிட் மில்லர் 2 சிக்ஸர்களை விளாசி ஸ்கோரை 200 ரன்களுக்கு மேல் உயர்த்தினார். மில்லருக்கு ஒத்துழைத்து எந்த பார்ட்னர்ஷிப்பும் அமையவில்லை. 20 ஓவர் முடிவில் லக்னெள அணி 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் சேர்த்தது.

DC vs LSG, அசுதோஷ் சர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி

கடினமான இலக்கைத் துரத்திய டெல்லி அணி முதல் ஓவரிலேயே மெக்ருக்(1), போரெல்(0), ரிஸ்வி(4) என 7 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. 13-வது ஓவரின் போது டெல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் என ஏறக்குறைய தோல்வியின் பிடியில் இருந்தது.

டெல்லி அணி வெற்றிக்கு கடைசி 7 ஓவர்களில் 94 ரன்கள் தேவைப்பட்டது. டெல்லி வெற்றி பெற 1.74 சதவீதமும், லக்னெள அணி வெல்ல 98.44 சதவீதமும் வாய்ப்பு இருப்பதாக கணினியின் கணிப்பு கூறியது. ஆனால், அனைத்துக் கணிப்புகளையும் தகர்த்து அசுதோஷ் ஷர்மா அறிமுக வீரராக வந்த விப்ராஜ் நிகம் ஆகியோர் போட்டியை வேறு திசையில் பயணிக்க வைத்தனர்.

5வது விக்கெட்டை டெல்லி அணி இழந்த போது அந்த அணி வெற்றி பெற 145 ரன்கள் தேவைப்பட்டன.

DC vs LSG, அசுதோஷ் சர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

திருப்பம் தந்த அசுதோஷ் ஷர்மா

டிரிஸ்டன் ஸ்டெப்ஸ், அசுதோஷ் ஷர்மா ஆகிய இருவரும் களத்தில் இருந்த வரை டெல்லி அணி சற்று நம்பிக்கையுடன் இருந்தது. இருவரும் ஓவருக்கு ஒரு பவுண்டரி, சிக்ஸர் விளாசினர். ஆனால் ஸ்டெப்ஸ் 34 ரன்னில் சித்தார்த் பந்துவீச்சில் ஆட்டமிழந்த பின் நம்பிக்கை குறையத் தொடங்கியது.

ஆனால், அதன் பிறகுதான் ஆட்டத்தின் முடிவையே மாற்றிய அந்த ஜோடி அமைந்தது அறிமுக வீரர் விப்ராஜ் நிகம் வந்து, அசுதோஷுடன் சேர்ந்தார். பிஸ்னாய் வீசிய 14வது ஓவரை விப்ராஜ் விளாசினார். அந்த ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 17 ரன்கள் குவித்த விப்ராஜ், ஷாபாஸ் அகமது ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்ஸர் என 15 ரன்களை சேர்த்தார். இதன் மூலம் டெல்லி அணிக்கு நெருக்கடியைக் குறைத்து அவர் நம்பிக்கை அளித்தார்.

15 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் என இருந்தது. கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 62 ரன்கள் தேவைப்பட்டன. பிரின்ஸ் வீசிய 16-வது ஓவரில் அசுதோஷ் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரி என 20 ரன்களைச் சேர்த்து ஆட்டத்தை பரபரப்பாக்கினார்.

திக்வேஷ் ரதி வீசிய 17-வது ஓவரின் முதல் பந்தில் விப்ராஜ் 39 ரன்னில் ஆட்டமிழக்க டெல்லி அணி மீண்டும் சிக்கலில் மாட்டியது. அடுத்து வந்த மிட்ஷெல் ஸ்டார்க் பெரிய ஷாட்டுக்கு முற்பட்டு பிஸ்னாய் ஓவரில் ஆட்டிமிழந்தார். பிஸ்னாய் வீசிய 18-வது ஓவரிலேயே 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியை அசுதோஷ் விளாசினார்.

DC vs LSG, அசுதோஷ் சர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

திக் திக் ஓவர்கள்

இதனால் கடைசி 2 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டன. டெல்லி வசம் கடைசி 2 விக்கெட்டுகள்தான் இருந்தன. பிரின்ஸ் வீசிய 19-வது ஓவரில் பவுண்டரி அடித்த குல்தீப், அடுத்த பந்தில் ரன்அவுட்டானார். 9-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய மோகித் சர்மா, அசுதோஷுடன் சேர்ந்தார். 4-வது பந்தில் 2 ரன்கள் சேர்த்து 28 பந்துகளில் அசுதோஷ் அரைசதத்தை நிறைவுசெய்தார். 5வது பந்தில் சிக்ஸரும், கடைசிப் பந்தில் பவுண்டரியும் அசுதோஷ் விளாச ஆட்டத்தில் உச்சக்கட்ட பரபரப்பு தொற்றிக் கொண்டது.

கடைசி ஓவரில் டெல்லி வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டன. ஷாபாஸ் அகமது வீசிய கடைசி ஓவரில் முதல் பந்தை தவறவிட்ட மோகித் சர்மா அடுத்து பந்தில் ஒரு ரன் எடுத்தார். ஸ்லாட்டில் வீசப்பட்ட 3வது பந்தை சந்தித்த அசுதோஷ் தூக்கி அடித்து சிக்ஸருக்கு அனுப்பவே டெல்லி அணி ஆர்ப்பரிப்பான வெற்றியைப் பெற்றது.

ஒரு கட்டத்தில் 19 பந்துகளில் 19 ரன் எடுத்திருந்த அசுதோஷ் ஆட்டத்தை முடிக்கும் போது 31 பந்துகளில் 66 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அசுதோஷ் சர்மா தான் சந்தித்த கடைசி 11 பந்துகளில் மட்டும் 46 ரன்கள் சேர்த்தார். அசுதோஷ் 31 பந்துகளில் 5 சிக்ஸர், 5 பவுண்டரி என 66 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருது வென்றார்.

DC vs LSG, அசுதோஷ் சர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

அசுதோஷ் ஷர்மா என்ன பேசினார்?

ஆட்ட நாயகன் விருது வென்ற டெல்லி வீரர் அசுதோஷ் ஷர்மா கூறுகையில் "பல போட்டிகளை என்னால் ஃபினிஷ் செய்ய முடியாமல் போனதால், ஃபினிஷ் எப்படி செய்வது என கடந்த ஆண்டிலிருந்துதான் நான் ஃபினிஷிங்கை கற்றுக்கொண்டேன். என் கவனத்தை ஃபினிஷிங்கில் செலுத்தினேன், உள்நாட்டுப் போட்டிகளிலும் இதில்தான் கவனம் செலுத்தினேன். என் மீது அளவு கடந்த நம்பிக்கையை நான் வைத்திருக்கிறேன், கடைசி ஓவர், கடைசிப் பந்து வரை நான் களத்தில் இருந்தால் ஏதாவது செய்ய முடியும் என்று நம்புகிறேன். அமைதியாக இருக்க வேண்டும், நம்ப வேண்டும், பயிற்சி எடுத்த ஷாட்கள் குறித்து சிந்தித்து அதை செயல்படுத்த முயற்சிக்க வேண்டும். இதைத்தான் இன்று நான் செய்தேன்.

விப்ராஜ் சிறப்பாக ஆடினார், நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். பந்து மட்டும் உனக்கு செட்ஆகிவிட்டால் உன்னால் பெரியஷாட்களுக்கு செல்ல முடியும் என்றேன். அமைதியாக இருந்தேன், அதிகமான அழுத்தத்தை நான் எனக்குக் கொடுக்கவில்லை. இந்த ஆட்டநாயன் விருதை என்னுடைய வழிகாட்டி ஷிகர் தவாணுக்கு அர்ப்பணிக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

DC vs LSG, அசுதோஷ் சர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

பஞ்சாபிலும் பட்டைய கிளப்பிய அசுதோஷ்

கடந்த 2024-ஆம் ஆண்டு சீசனில் பஞ்சாப் அணியில் இருந்த அசுதோஷ் ஷர்மா, பல சாத்தியமற்ற வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். குறிப்பாக மும்பை அணிக்கு எதிராகவும், சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராகவும் அசுதோஷ் அற்புதமாக ஆடி பஞ்சாப் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.

இந்த ஆட்டத்தில் டெல்லி அணி இம்பாக்ட் வீரராகவே அசுதோஷை களமிறக்கியது, ஆட்டத்தின் போக்கை மெல்ல உணர்ந்து ,அதற்கு ஏற்றார்போல் சென்று, ஆட்டத்தை தனது அணி பக்கம் திருப்பினார் அசுதோஷ்.

லக்னெள அணி செய்த தவறுகள்

லக்னெள அணிக்கு மிட்ஷெல் மார்ஷ்(72), நிகோலஸ் பூரன்(75) ஆகியோர் சேர்த்த ரன்கள்தான் பெரும்பகுதியாகும். லக்னெள அணியின் 22.97 சதவீத ரன்கள் கடைசி 7 ஓவர்களில் சேர்க்கப்பட்டவை. லக்னெள அணி 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் என இருந்தபின் அடுத்த 7 ஓவர்களில் 48 ரன்கள் மட்டுமே சேர்த்தது. நடுவரிசை பேட்டர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்தனர். கடைசியில் டேவிட் மில்லருக்கு ஒத்துழைத்து ஆட பார்ட்னர்ஷிப் இல்லை.

சேஸிங்கில் அசுதோஷ் வெறித்தனமாக பேட் செய்தபோது, பிரின்ஸ் யாதவ் 16-வது ஓவரையும், 19-வது ஓவரையும் பந்துவீச ரிஷப் பந்த் எடுத்த முடிவு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டிய ஒன்று. பிரின்ஸுக்கு ஓவர் வழங்குவதற்குப் பதிலாக ஷர்துல் தாக்கூருக்கு பந்துவீச வாய்ப்புக் கொடுத்திருக்கலாம்.

DC vs LSG, அசுதோஷ் சர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஏனென்றால் ஷர்துல் தாக்கூர் தனது முதல் ஓவரிலேயே டெல்லி அணியின் பிரேசர், போரெல் இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தி ஃபார்மில் இருந்தார். அவருக்கு கடைசி வரை 2 ஓவர்கள் மட்டுமே ரிஷப் பந்த் வழங்கியிருந்தார். ஆல்ரவுண்டர் மிட்ஷெல் மார்ஷ் அணியில் இருந்தும் அவரை பயன்படுத்தவே இல்லை. கடந்த காலத்தில், இதுபோன்ற தருணங்களில் மார்ஷ் பல முறை சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்.

கேப்டன்சியில் சில நுணுக்கமான அம்சங்களில் ரிஷப் பந்த் தவறவிட்டது தோல்விக்கு காரணமாக அமைந்தது.

அதேபோல ஷாபாஸ் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் மோகித் சர்மாவை ஸ்டெம்பிங் செய்யக் கிடைத்த வாய்ப்பையும் ரிஷப் பந்த் தவறவிட்டார். மாறாக மோகித் சர்மா கால் காப்பில் வாங்கியதற்காக அப்பீல் செய்து ரிஷப் பந்த் தவறு செய்தார். உச்சக்கட்ட பதற்றத்தில் ரிஷப் பந்த் இருந்த போதுதான் ஸ்டெம்பிங் வாய்ப்பை தவறவிட்டது நன்கு தெரிந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cgr28gnlgpvo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'என் மகனிடம் தோனி சொன்னது இதுதான்' - சிஎஸ்கே அணியை மிரட்டிய விக்னேஷ் புத்தூரின் தந்தை நெகிழ்ச்சி

விக்னேஷ் புத்தூர், தோனி, ஐபிஎல், சிஎஸ்கே, எம்.ஐ. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ்,  கேரளா, கேரள கிரிக்கெட் அகாடமி, சைனா மேன் பவுலர், இந்தியா , பிசிசிஐ , Who is Vignesh Puthur

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் போட்டிக்குப் பின்னர் விக்னேஷுடன் பேசிய தோனி

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சங்கரநாராயணன் சுடலை

  • பதவி, பிபிசி தமிழ்

  • 24 மார்ச் 2025

    புதுப்பிக்கப்பட்டது 46 நிமிடங்களுக்கு முன்னர்

"தோனி எனது மகனைப் பாராட்டியதைப் பார்த்துவிட்டு எனக்கு தூக்கம் வரவில்லை" என்று கூறுகிறார், மும்பை இந்தியன்ஸ் வீரர் விக்னேஷ் புத்தூரின் தந்தை சுனில் குமார்.

ஆட்டோ ஓட்டுநரின் மகனான விக்னேஷ் புத்தூர் மும்பை அணியின் இம்பாக்ட் பிளேயராக களமிறங்கி பலரின் பார்வையை ஈர்த்தார்.

சென்னை - மும்பை என இரு பெரும் சாம்பியன் அணிகள் மோதும் போட்டிகள் பொதுவாக "எல்கிளாசிகோ" அதாவது பெரும் எதிர்பார்ப்புக்குரிய போட்டியாக பார்க்கப்படுகிறது. நேற்றைய போட்டியில் இருதரப்பிலும் ஜாம்பவான் வீரர்கள் பலர் இருந்த நிலையில், இவர்கள் அனைவருக்கும் மத்தியிலும் 24 வயது இளைஞர் விக்னேஷ் தனது அழுத்தமான தடத்தை பதிவு செய்துள்ளார்.

பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக ஆடி 26 பந்துகளில் 53 ரன்களை அடித்திருந்த சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விக்னேஷின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

மெதுவாக வந்த பந்தை ஸ்ரெயிட் டிரைவ் ஆட முயல, பந்து பேட்டின் முனையில் பட்டதால் கேட்சாக மாறியது. அடுத்து ஷிவம் துபே, இதே போன்று ஃபுல்டாஸ் ஆக வந்த பந்தை சிக்ஸ் ஆக மாற்ற முயன்று ஆட்டமிழந்தார். இதிலிருந்து மீள்வதற்குள் தீபக் ஹூடாவின் விக்கெட்டையும் விக்னேஷ் வீழ்த்தியிருந்தார்.

விக்னேஷ் புத்தூர், தோனி, ஐபிஎல், சிஎஸ்கே, எம்.ஐ. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ்,  கேரளா, கேரள கிரிக்கெட் அகாடமி, சைனா மேன் பவுலர், இந்தியா , பிசிசிஐ , Who is Vignesh Puthur

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மந்திரப் பந்து வீச்சால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் விக்னேஷ்

'தோனி பாராட்டியதைப் பார்த்து தூக்கம் வரவில்லை'

விக்னேஷ் புத்தூர், தோனி, ஐபிஎல், சிஎஸ்கே, எம்.ஐ. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ்,  கேரளா, கேரள கிரிக்கெட் அகாடமி, சைனா மேன் பவுலர், இந்தியா , பிசிசிஐ , Who is Vignesh Puthur

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு,தந்தை சுனில் குமார் மற்றும் தாயார் பிந்துவுடன் விக்னேஷ்

நேற்றைய போட்டியில் மும்பை அணி தோற்ற போதிலும், அறிமுக போட்டியிலேயே 4 ஓவர்களில் 32 ரன்களை வழங்கி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியில் வளரும் நட்சத்திரமாக உருவெடுத்திருக்கிறார் விக்னேஷ் புத்தூர்.

விக்னேஷின் இந்த ஆட்டம் அவரது குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பிபிசி தமிழிடம் பேசிய அவரது தந்தை சுனில் குமார், போட்டிக்குப் பின்னர் தனது மகனை தோனி பாராட்டுவதைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியில் தனக்கு தூக்கம் வரவில்லை என்று கூறினார்.

"தோனி சார் எனது மகனை வெகுவாக பாராட்டினார். பெற்றோருக்கு வாழ்த்துக்களை கூறுமாறு தோனி எனது மகனிடம் கூறினார். இரவு 12 மணியளவில் போட்டி முடிவடைந்ததும், எனது மகன் எனக்கு போன் செய்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்" என்கிறார் சுனில்.

தோனி தன்னைப் பாராட்டிய புகைப்படத்தை தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் பதிவிட்டுள்ளார்.

கேரளாவில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வரும் சுனில் குமார், நேற்றும் வழக்கம் போல தனது ஆட்டோவை ஓட்டச் சென்றுவிட்டார்.

மாலை 5 மணியளவில் உறவினருக்கு போன் செய்த விக்னேஷ், இன்று தான் விளையாட வாய்ப்பிருக்கலாம் என கூறியிருக்கிறார்.

"உறுதியாகத் தெரியாவிட்டாலும், தன்னை நன்கு பயிற்சி எடுக்கச் சொன்னதால் விளையாடுவதற்கான வாய்ப்பு உள்ளது" என விக்னேஷ் கூறியிருக்கிறார்.

இதனால், ஆட்டோ ஓட்டும் பணியை முன்னமே முடித்துக் கொண்டு டிவி முன் அமர்ந்திருந்ததாக சுனில் கூறுகிறார்.

விக்னேஷ் புத்தூர், தோனி, ஐபிஎல், சிஎஸ்கே, எம்.ஐ. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ்,  கேரளா, கேரள கிரிக்கெட் அகாடமி, சைனா மேன் பவுலர், இந்தியா , பிசிசிஐ , Who is Vignesh Puthur

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,விக்னேஷின் வருகையால் சைனா மேன் வகை பந்து வீச்சில் மேலும் ஒருவர்

'மேலும் ஒரு சைனா மேன் பவுலர்'

10 வயதில் வீதியில் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியிருக்கிறார் விக்னேஷ் அவரிடம் தனித்தன்மை இருப்பதைப் பார்த்து விட்டு, மலப்புரத்தில் அகாடமி நடத்தி வரும் விஜய்குமார் பயிற்சிக்கு சேர்த்துக் கொண்டுள்ளார்.

விக்னேஷ்-க்கு இளம் வயதில் பயிற்சி அளித்த விஜய்குமார் பிபிசி தமிழிடம் பேசிய போது,"நேற்று மாலை வரை இந்தியாவுக்கு சர்வதேச தரத்திலான ஒரே ஒரு சைனா மேன் பவுலராக குல்தீப் யாதவ் மட்டுமே இருந்தார். ஆனால் நேற்று ஐபிஎல் போட்டிக்குப் பிறகு விக்னேஷும் அந்த பட்டியலில் இணைந்து கொண்டார்" எனக் கூறினார்

"கனவு போட்டியான இதில் பிரமாண்டத்தை நினைத்து அச்சப்படாமல் விக்னேஷ் செயல்பட்டார். ரன் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் பேட்டர்கள் இருந்தனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட விக்னேஷ், துல்லியமாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்தார்." என கூறும் விஜய்குமார், சைனா மேன் ஸ்டைல் பந்து வீச்சை துல்லியமாக வீசுவதுதான் விக்னேஷின் சிறப்பு எனக் கூறுகிறார்.

10 வயதில் தம்மிடம் பயிற்சிக்காக வந்தபோது, மிதவேகம், ரைட் ஆர்ம் ஸ்பின் என பல பந்து வீச்சுக்களை முயற்சி செய்து பார்த்து விக்னேஷுக்கான தேர்வை இறுதி செய்ததாகக் கூறும் விஜய்குமார், ''தொடக்கத்தில் விக்கெட் கீப்பராகவும் அவருக்கு பயிற்சி அளித்தோம்'' என்று கூறினார்.

உறுதுணையாக இருந்த பயிற்சி அரங்கங்கள்

Instagram பதிவை கடந்து செல்ல

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Instagram பதிவின் முடிவு

இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்ற பின்னர் கேரள கிரிக்கெட் அகாடமியின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, மாநில அணிக்காக அண்டர் 14, அண்டர் 19, அண்டர் 23 பிரிவுகளில் விளையாடியிருக்கிறார் விக்னேஷ்.

மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டவரான விக்னேஷ், யாரிடமும் பேச மாட்டார் எனக் கூறும் விஜய்குமார், ஆனால் சிறந்த கிரிக்கெட் திறமை அவரிடம் இருப்பதாகக் கூறுகிறார்.

"விக்னேஷ் பயிற்சியைத் தொடங்கிய 2010, 2011 கால கட்டத்திற்கு முன்பு வரை கேரளாவில் கிரிக்கெட் பயிற்சிக்கான உள்ளரங்கங்கள் ஏதும் இல்லை. பின்னர் கேரள கிரிக்கெட் அகாடமியின் மூலம் மாவட்டம் தோறும் கிரிக்கெட் பயிற்சிக்கான உள்ளரங்கங்கள் உருவாக்கப்பட்டன. கேரளாவைப் பொறுத்தவரையிலும் ஜூன் முதல் செப்டம்பர் வரை இடைவிடாத மழை பெய்யும்.

இதனால் விளையாட்டு வீரர்களை பயிற்சியை கைவிட வேண்டியது வரும். இந்த இடைவெளிக்குப் பின்னர் பேட்டர்கள் தங்கள் ஃபுட் மூவ்மெண்ட்டை சரி செய்வதற்கும், பவுலர்கள் சரியான ஆக்ஷன் வேகம் மற்றும் துல்லியத்தைப் பெறுவதற்கும் திணறுவார்கள், உள்ளரங்கங்கள் கிடைத்த பின்பு இந்த பிரச்னை தீர்ந்தது. குறிப்பாக விக்னேஷின் வசிப்பிடத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் கிரிக்கெட் உள்ளரங்கம் கிடைத்தது" என பயிற்சியாளர் விஜய்குமார் நினைவு கூர்கிறார்.

சைனா மேன் பவுலிங் என்றால் என்ன?

விக்னேஷ் புத்தூர், தோனி, ஐபிஎல், சிஎஸ்கே, எம்.ஐ. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ்,  கேரளா, கேரள கிரிக்கெட் அகாடமி, சைனா மேன் பவுலர், இந்தியா , பிசிசிஐ , Who is Vignesh Puthur

பட மூலாதாரம்,VIGNESH PUTHUR / INSTAGRAM

படக்குறிப்பு, ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் முடித்திருக்கிறார் விக்னேஷ்

இடக்கை சுழற்பந்து வீச்சாளர் தனது மணிக்கட்டை சுழற்றி பந்து வீசுவது சைனாமேன் பந்து வீச்சு என அழைக்கப்படுகிறது. பந்தின் சுழற்சிக்கு இடக்கையின் மணிக்கட்டில் கொடுக்கப்படும் மாறுபாடே காரணமாகிறது. 1920களில் முதன்முறையாக பயன்படுத்தப்பட்ட சைனாமேன் பவுலிங் எனப்படும் இந்த வார்த்தை ராய் கில்னர் என்ற பந்து வீச்சாளரை குறிப்பிட பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் குல்தீப் யாதவ் மிக அரிதான சைனா மேன் பவுலராக அறியப்படுகிறார். தற்போது விக்னேஷ் புத்தூரையும் சைனாமேன் பவுலராக பலரும் ஒப்பிடத் தொடங்கியுள்ளனர்.

விளையாட்டு , கல்வி என அனைத்திலும் ஒரே பாதையில் பயணிக்கும் தனது மகன், முதுகலை ஆங்கில இலக்கிய படிப்பை முடித்திருப்பதாக சுனில் கூறுகிறார்

இளங்கலை பட்டத்தில் நல்ல மதிப்பெண்களுடன் தனது மகன் தேர்ச்சியடைந்ததாக குறிப்பிடுகிறார் சுனில்.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8j0ddx30g1o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொல்கத்தாவை எளிதாக ஜெயிக்க வைத்த ராஜஸ்தான் அணி - கேப்டன் செய்த அந்த மிகப்பெரிய தவறு என்ன?

ஐபிஎல் 2025

பட மூலாதாரம்,X/@KKRIDERS

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 27 மார்ச் 2025, 01:55 GMT

அசாம் மாநிலம் குவாஹட்டியில் நேற்று (மார்ச் 26) நடைபெற்ற ஐபிஎல் டி20 போட்டியின் 6-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. 152 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 15 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

2025 ஐபிஎல் சீசன் தொடங்கியதிலிருந்து ராஜஸ்தான் அணி சேர்த்த ஸ்கோர்தான் மிகக்குறைவானதாகும்.

இந்த சீசனில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இந்த வெற்றி மூலம் கொல்கத்தா அணி 2 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட் இன்னும் மைனஸைவிட்டு மேலே வரவில்லை, மைனஸ் 0.308 என்ற ரீதியில்தான் இருக்கிறது. ஆனால் ராஜஸ்தான் அணி தொடர்ந்து இரு தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசியிலும் நிகர ரன்ரேட்டில் மைனஸ் 1.882 என்று மோசமான நிலையில் இருக்கிறது

ஐபிஎல் 2025

பட மூலாதாரம்,X/@KKRIDERS

படக்குறிப்பு, மொயின் அலி பந்துவீச்சில் 2 விக்கெட் எடுத்தாலும், பேட்டிங்கை மறந்துவிட்டதுபோல் செயல்பட்டு ஆட்டமிழந்தார்

வெற்றிக்கு காரணமான பந்துவீச்சாளர்கள்

கொல்கத்தா அணியில் வலிமையான சுழற்பந்துவீச்சாளர், ஆல்ரவுண்டர் சுனில் நரேன் நேற்று விளையாடாத நிலையிலும் ராஜஸ்தான் அணியை 151 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது பாராட்டுக்குரியது. சுனில் நரேனுக்குப் பதிலாக களமிறக்கப்பட்ட மொயின் அலி பந்துவீச்சில் 2 விக்கெட் எடுத்தாலும், பேட்டிங்கை மறந்துவிட்டதுபோல் செயல்பட்டு ஆட்டமிழந்தார்.

தமிழகத்தின் 'மிஸ்ட்ரி ஸ்பின்னர்' என அழைக்கப்படும் வருண் சக்கிரவர்த்தி வழக்கம்போல் சிறப்பாக விளையாடி, 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரு சுழற்பந்துவீச்சாளர்களும் சேர்ந்து 8 ஓவர்கள் வீசி 40 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். வேகப்பந்துவீச்சாளர்கள் ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தானைக் கட்டுப்படுத்தினர்.

கொல்கத்தா அணியின் வெற்றிக்கு பெரும்பகுதி காரணம் பந்துவீச்சாளர்கள். தங்களுக்கு இடப்பட்ட பணியை சிறப்பாகச் செய்து 151 ரன்களுக்குள் சுருட்டினர்.

டீகாக் மட்டுமே போதும்

இந்த இலக்கை எட்டுவதற்கு தொடக்க ஆட்டக்காரர் குவின்டன் டீகாக் சிறப்பாக பேட் செய்தார். நீண்ட காலத்துக்குப்பின் அற்புதமான ஆட்டத்தை டீ காக் வெளிப்படுத்தினார். மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தபோது இதுபோன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தியபின் இப்போது அதே வேகத்தில் நேற்று பேட் செய்தார்.

61 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் உள்பட 97 ரன்களுடன் இறுதிவரை குவின்டன் டீ காக் ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் ரஹானே (18), மொயின் அலி (5) ரன்கள் சேர்த்தனர். 'இம்பேக்ட் ப்ளேயர்' ரகுவன்ஷி 22 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்

ஐபிஎல் 2025

பட மூலாதாரம்,X/@KKRIDERS

படக்குறிப்பு, மொயின் அலி

மொயின் அலிக்கு எதிர்பாரா பணி

இங்கிலாந்து அணியில் இருந்தபோதுகூட மொயின் அலி தொடக்கவீரராக பெரும்பாலும் களமிறங்கியது இல்லை, நடுவரிசை, ஒன்டவுனில் களமிறங்கியுள்ளார். சிஎஸ்கே அணியில் இருந்தபோதும், ஆர்சிபியில் இருந்தபோதும் நடுவரிசைதான் இவருக்குரிய இடம். ஆனால், நேற்று தொடக்க வீரராக மொயின் அலிக்கு கொடுக்கப்பட்ட பணியால் அவர் தடுமாறியது போன்றே தெரிந்தது.

ஜோஃப்ரா ஆர்ச்சர் இந்த சீசனில் படுமோசமாக பந்துவீசும் பந்துவீச்சாளராக இருந்து வருகிறார். அவரின் பந்துவீச்சையே எதிர்கொள்ள மொயின் அலி தடுமாறினார். ஜோஃப்ரா ஆர்ச்சரின் பவுன்ஸருக்கும், ஷார்ட் பந்துக்கும் மொயின் அலி ரன்களைக் குவிக்க யோசித்தார். ஒரு கட்டத்தில் தூக்கி அடித்தாலும் யாரும் பிடிக்க முடியாத இடத்தில் விழுந்தது. களத்தில் இருந்த மொயின் அலி 12 பந்துகளில் 5 ரன்களுடன் ரன்அவுட்டாகி வெளியேறினார்.

டீகாக் அதிரடி ஆட்டம்

ஆனால், நிதானமாக ஆடத்தொடங்கிய டீகாக் வேகப்பந்துவீச்சையும், சுழற்பந்துவீச்சையும் வெளுத்து வாங்கினார். பவர்ப்ளேயில் கொல்கத்தா 40 ரன்களையும், 7.4 ஓவர்களில் 50 ரன்களையும் எட்டியது. டீ காக் 36 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். 12.1 ஓவர்களில் கொல்கத்தா அணி 100 ரன்களை எட்டியது.

கேப்டன் ரஹானே முதல் போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று சுழற்பந்துவீச்சுக்கு தடுமாறினார், கடைசியில் 18 ரன்னில் ஹசரங்கா விக்கெட்டை இழந்தார்.

குவாஹட்டியில் இரவில் பனிப்பொழிவு இருந்ததையடுத்து, 11வது ஓவரில் புதிய பந்து கொண்டுவரப்பட்டது. இந்த விதி இந்த சீசனில் கொண்டுவந்தபின முதல்முறையாக பந்து மாற்றப்பட்டது. பனிப்பொழிவு சற்று தொடங்கியபின் கொல்கத்தாவின் வெற்றி இன்னும் எளிதாகியது.

3வது விக்கெட்டுக்கு ரகுவன்ஷி, டீகாக் இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 44 பந்துகளில் 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். டீகாக் சதம் அடிக்க வாய்ப்பு இருந்தும், அதை அடிக்கவிடாமல் ஆர்ச்சர் தேவையின்றி இரு வைடு பந்துகளை வீசி டீகாக் சதம் அடிப்பதைத் தடுத்தார். இருப்பினும், கடைசியில் வின்னிங் ஷாட்டாக சிக்ஸர் விளாசி டீகாக்(97) ஆட்டத்தை முடித்தார்.

ஐபிஎல் 2025

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடைசியில் வின்னிங் ஷாட்டாக சிக்ஸர் விளாசி டீகாக்(97) ஆட்டத்தை முடித்தார்

ரஹானே என்ன கூறினார்?

முதல் வெற்றிக்குப்பின் கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே கூறுகையில், "முதல் 6 ஓவர்களில் சிறப்பாக பந்துவீசினோம், 2 விக்கெட்டுகளை வீழ்த்தினோம். நடுப்பகுதி ஓவர்களில் மொயின், வருண் அற்புதமாக செயல்பட்டனர். நரேன் இல்லாத நிலையில் மொயின் பந்துவீச்சில் நிரப்பினார். பந்துவீச்சாளர்களின் பணி சிறப்பாக இருந்தது வெற்றியை எளிதாக்கினர்.

விக்கெட் எடுக்க வேண்டும் என்று மொயினிடம் தெரிவித்தேன், அதை செய்துவிட்டார். மொயின் அலிக்கு முழு சுதந்திரம் அளித்தோம், ஆனால் பேட்டிங்கில் எதிர்பார்த்தவகையில் செயல்படவில்லை. ஆனால், பந்துவீச்சில் அற்புதமாக செயல்பட்டார்" எனத் தெரிவித்தார்

குழப்பத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தற்காலிகக் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரியான் பராக் நேற்று அபத்தமாக கேப்டன்சி செய்து வர்ணனையாளர்களின் விமர்சனத்துக்கு ஆளானார். சிறுவர்கள் விளையாடும் கிரிக்கெட் போன்று, கேப்டன்சி செய்கிறார் என்று வர்ணனையாளர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

எந்த பேட்டரை எந்த வரிசையில் களமிறக்குவது, எந்த பந்துவீச்சாளரை எப்படி பயன்படுத்துவது, எந்த பேட்டருக்கு எந்த பந்துவீச்சாளரைப் பயன்படுத்துவது என்பதன் அடிப்படை தெரியாமல் நேற்று ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் செயல்பட்டதை நேற்றைய ஆட்டத்தை பார்த்தவர்கள் புரிந்திருப்பார்கள்.

ரியான் பராக் வழக்கமாக நடுவரிசையில்தான் களமிறங்குவார் நேற்று ஒன்டவுனில் களமிறங்கினார். தொழில்முறை பேட்டர் இல்லாத ஹசரங்காவை நடுவரிசையில் களமிறக்கி, கடந்த ஆட்டத்தில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய துருவ் ஜூரெலை 6-வது பேட்டராகவும், அதிரடி பேட்டர் ஹெட்மெயரை 8-வது வரிசையில் களமிறக்கினார்.

ஹெட்மெயரை 4வது வீரராகவும், துருவ் ஜுரெலை 3வது வீரராகவும், ரியான் பராக் 6வது அல்லது 5வது வீரராக களமிறங்கி இருக்கலாம். ஷுபம் துபே சிறந்த பேட்டர், அவரை நடுவரிசையில் களமிறக்கியதற்குப் பதிலாக 3வது வரிசையில் களமிறக்கி இருக்கலாம்.

இங்கிலாந்து முன்னாள் வீரரும் வர்ணணையாளருமான நிக்நைட் கூறுகையில், "எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஹெட்மெயர் அணியில் இருந்தால் அவரை ஏன் விரைவாக களமிறக்கவில்லை. உலகளவில் டாப் குவாலிட்டி பேட்டர் ஹெட்மெயர் அதிரடி ஆட்டக்காரர். அவரை விரைவாக களமிறக்கி இருந்தால் ஆட்டம் மாறியிருக்கும், அதிக ரன்கள் கிடைத்திருக்கும், ஆட்டத்தைத் திருப்பத்தானே அவரை வைத்துள்ளீர்கள். ஹெட்மெயரை கடைசி வரிசையில் களமிறக்கி என்ன சாதிக்கப் போகிறீர்கள்?" என காட்டமாக விமர்சித்தார்.

இந்த ஐபிஎல் சீசன் தொடங்கியதிலிருந்து கடந்த 5 போட்டிகளிலும் ஒவ்வொரு அணியும் 200 ரன்களை இலக்காக வைத்து விளையாடுகின்றன. முடிந்தவரை பேட்டர்களை 8வது வரிசை அல்லது 9வது வரிசையில் வைத்துக்கொள்ள முயல்கிறார்கள். ஆனால், ராஜஸ்தான் அணியில் 8 பேட்டர்கள் வரை இருந்தும் குழப்பமான சூழலில் பேட்டர்கள் களமிறங்கியதால்தான் தங்களுக்குரிய ரோல் தெரியாமல் ஆட்டத்தைத் தவறவிட்டனர்.

ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மொயின் அலி பந்துவீச்சில் 29 ரன்கள் எடுத்து ஜெய்ஸ்வால் ஆட்டம் இழந்தார்

ஒரு அரைசதம் கூட இல்லை

ராஜஸ்தான் அணியில் சாம்ஸன்(13), ஜெய்ஸ்வால்(29), நிதிஷ் ராணா(8) ரியான் பராக்(25), ஹெட்மெயர்(7), துருவ் ஜூரெல்(33), ஷூபம் துபே(9) என இத்தனை பேட்டர்கள் இருந்தும் ஒருவர்கூட அரைசதம் அடிக்கவில்லை, எந்த பார்ட்னர்ஷிப்பும் அரைசதத்தை கடக்கவில்லை.

சாம்ஸன் அடித்து ஆடும் முயற்சியில் வைபவ் அரோரா பந்துவீச்சில் க்ளீன்போல்டானார். கேப்டன் ரியான் பராக் 3 சிக்ஸர்களை விளாசிவிட்டு வருண் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ஜெய்ஸ்வால் களத்தில் இருந்தவரை நம்பிக்கை இருந்தது. ஆனால், மொயின் அலி பந்துவீச்சில் 29 ரன்னில் ராணாவிடம் கேட்ச் கொடுத்தார். 2023 ஐபிஎல் தொடருக்குப்பின் ஜெய்ஸ்வால் சுழற்பந்துவீ்ச்சில் முதல்முறையாக விக்கெட்டை இழந்தார்.

கடந்த சீசனில் அஸ்வினை பயன்படுத்திய 5வது இடத்தில், ஹசரங்காவை பிஞ்ச் ஹிட்டராக பயன்படுத்த ராஜஸ்தான் அணி முயன்றது. ஆனால் முற்றிலும் தோல்வியாக முடிந்தது. வருண் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஹசரங்கா ஆட்டமிழந்தார்.

67 ரன்களுக்கு ஒருவிக்கெட்டை இழந்திருந்த ராஜஸ்தான் அணி 82 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஏறக்குறைய15 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. டாப்ஆர்டரின் 3 பேட்டர்கள் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்கள் சேர்த்தனர், மற்ற பேட்டர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

கேப்டன் ரியான் பராக் பேட்டிங்கிலும் 25 ரன்களைக் கடக்கவில்லை, பந்துவீச்சிலும் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் கொடுத்து ஒருவிக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை. சொந்த மண்ணில் ஆடியபோதும், ரியான் பராக்கால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cly2edp0je1o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

SRH-ஐ சிதைத்த ஷர்துலின் விஸ்வரூபம் - லக்னௌவின் ஆணிவேராக அமைந்த பூரன், மார்ஷ் ஜோடி

ஐ.பி.எல். 2025, சன்ரைசர்ஸ் ஹைதராபாத்,  லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஹைதரபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 7வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.

முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் சேர்த்தது. 191 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 23 பந்துகள் மீதம் இருக்கையில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ஹைதராபாத் மைதானத்தில் 190 ரன்கள் சேர்த்தால்கூட டிஃபென்ட் செய்ய முடியாது என்பதை நேற்றைய ஆட்டம் உணர்த்திவிட்டது.

கடந்த சீசனில் லக்னெள சேர்த்த 165 ரன்களை ஹெட், அபிஷேக் இருவரும் 9.5 ஓவர்களில் சேஸ் செய்து அவமானப்படுத்தியதற்கு பதிலடி கொடுத்தது லக்னெள அணி.

லக்னெள அணி இந்த சீசனில் முதல் வெற்றியைப் பெற்று 2 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட்டி 0.963 என்று 2வது இடத்துக்கு நகர்ந்துள்ளது. லக்னெள அணி ஒரு வெற்றி ஒரு தோல்வி பெற்றிருந்தாலும், நிகர ரன்ரேட்டில் வலுப்படுத்திக் கொண்டுள்ளது. சிஎஸ்கே, பஞ்சாப், டெல்லி அணிகள் தலா ஒரு வெற்றியுடன் இருந்தாலும் நிகர ரன்ரேட் சரிவால் பின்தங்கியுள்ளன.

விலை போகாத வீரர் விஸ்வரூபம்

IPL 2025 - SRH vs LSG

பட மூலாதாரம்,GETTY IMAGES

லக்னெள அணியின் வெற்றிக்கு 3 பேரை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். பந்துவீச்சில் ஷர்துல் தாக்கூர், பேட்டிங்கில் நிகோலஸ் பூரன், மிட்ஷெல் மார்ஷ் ஆகிய மூவரும்தான் லக்னெள வெற்றிக்கு மூலதாராமாக இருந்தவர்கள்.

அதிலும் ஐபிஎல் டி20 ஏலத்தில் விலை போகாத விரக்தியில் இங்கிலாந்தில் கவுண்டி தொடர்களில் விளையாட ஷர்துல் ஆயத்தமானார். காயம் காரணமாக மாற்று வீரர் தேவை என்றபோது ஷர்துல் தாக்கூரை லக்னெள வாங்கியது. தனது திறமையை எந்த அணியினரும் மதிக்கவில்லை என்ற ஆதங்கத்தை ஒவ்வொரு போட்டியிலும் ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் வெளிப்படுத்திச் சிறப்பாக ஆடி வருகிறார்.

முதல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிராக தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 36 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்த சீசனில் முன்னணி பந்துவீச்சாளர்கள் பலர் இருந்தபோதும் விலை போகாத வீரராக ஒதுக்கப்பட்ட ஷர்துல் தாக்கூர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி பர்பிள் தொப்பியுடன், ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

வெற்றியை பெரிதாக எடுக்கவில்லை

ஐ.பி.எல். 2025, சன்ரைசர்ஸ் ஹைதராபாத்,  லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,நிகோலஸ் பூரன், மார்ஷ் இருவரும் சேர்ந்து 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்

வெற்றிக்குப்பின் லக்னெள கேப்டன் ரிஷப் பந்த் கூறுகையில், "உண்மையாகவே பெரிய நிம்மதி கிடைத்துள்ளது. அணியாக சிறப்பாகச் செயல்பட்டோம். வெற்றி பெற்றவுடன் உயரத்தில் பறக்கவும் இல்லை. தோற்றவுடன் நம்பிக்கை இழக்கவும் இல்லை. அணியாக கட்டுப்படுத்த முடியாத விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்தவில்லை.

எங்களால் கட்டுப்படுத்தக்கூடிய அம்சங்களில் மட்டும் கவனம் செலுத்தினோம். ஆவேஷ், ஷர்துல் சிறப்பாகப் பந்துவீசினர். பூரனுக்கு முழு சுதந்திரம் அளித்துவிட்டோம். அந்தச் சுதந்திரம்தான் வெற்றியைக் கொடுத்துள்ளது. ஒவ்வொருவரும் சரியான திட்டமிடலுடன் வந்தோம், பயிற்சி எடுத்தோம், பின்னர் அதைச் செயல்படுத்தினோம்," என்று தெரிவித்தார்.

ரிஷப் பந்தை ஐபிஎல் ஏலத்தில் ரூ. 27 கோடிக்கு லக்னெள அணி வாங்கியது. முதல் வெற்றி கிடைக்காமலும், தன்னுடைய விலை அழுத்தத்தாலும், ரிஷப் பந்த் கடும் நெருக்கடியில் இருந்தார். இந்த வெற்றியால் ரிஷப் பந்த் நிம்மதி அடைந்தார் என்பதோடு, அணியின் நிர்வாகிகள் வெற்றிக்குப் பின் ஓடி வந்து ரிஷப் பந்தை கட்டியணைத்துப் பாராட்டியதன் மூலம் லக்னௌ அணிக்கு இந்த வெற்றியின் அவசியத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.

சன்ரைசர்ஸை சிதைத்த வீரர்கள்

நிகோலஸ் பூரனின் ஆட்டம் நேற்று மிரள வைத்துவிட்டது. இந்த ஐபிஎல் சீசனில் அதிவேகமாக 18 பந்துகளில் அரை சதத்தை நிறைவு செய்த வீரர் என்ற சாதனையை பூரன் படைத்தார்.

பூரன் 18 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதற்கு அடுத்த 8 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து 70 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரது கணக்கில் 6 சிக்ஸர், 6 பவுண்டரி என 269 ஸ்ட்ரைக் ரேட்டில் ருத்ரதாண்டவமாடினார்.

அதேபோல கடந்த சீசனில் டெல்லி அணிக்கு சரியாக ஆடாத மார்ஷ் நேற்று சன்ரைசர்ஸ் பந்துவீச்சை அநாயாசமாகக் கையாண்டார். 7 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 31 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த இருவரும் சேர்த்த ரன்கள்தான் லக்னெள வெற்றிக்கு ஆணிவேராக அமைந்தது.

குழம்பிய கம்மின்ஸ்

நிகோலஸ் பூரன், மார்ஷ் இருவரும் சேர்ந்து சன்ரைசர்ஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தபோது, கேப்டன் கம்மின்ஸ் எவ்வாறு இருவரையும் பிரிப்பது எனத் தெரியாமல் குழம்பினார்.

இரண்டாவது ஓவரில் ஜோடி சேர்ந்த இருவரும் 9வது ஓவருக்குள் 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துவிட்டனர். பவர்பளே ஓவர்களில் 77 ரன்களும், 7.3 ஓவர்களில் 100 ரன்களையும் லக்னெள எட்டியது.

நிகோலஸ் பூரன் 70 ரன்களில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தபோது லக்னெள வெற்றிக்கு 68 பந்துகளில் 71 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், லக்னெள அணி சிறிதுகூட பதற்றப்படாமல் இலக்கைத் துரத்தியது. டேவிட் மில்லருடன் ஜோடி சேர்ந்த அப்துல் சமது தனது பங்கிற்கு 8 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் என 22 ரன்கள் சேர்த்து வெற்றியை எளிதாக்கினார்.

பூரன், மார்ஷ் இருவரையும் பிரிக்கவும், லக்னெள பேட்டர்களை ஆட்டமிழக்கச் செய்யவும் கம்மின்ஸ் நேற்று 7 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் அனைவரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்ற ரீதியில் சராசரியாக ஓவருக்கு 12 என்ற ரன்ரேட்டில் ரன்களை வாரி வழங்கினர்.

சன்ரைசர்ஸை கட்டம் கட்டிய லக்னெள

ஐ.பி.எல். 2025, சன்ரைசர்ஸ் ஹைதராபாத்,  லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மிச்செல் மார்ஷின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு கொண்டாடிய சன்ரைசர்ஸ் அணி

சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்த தொடக்கத்திலயே விக்கெட் வீழ்த்துவதுதான் சரியானது என்பதை அறிந்த லக்னெள அணி அதற்குரிய திட்டமிடலுடன் களமிறங்கியது. ஆஸ்திரேலிய பேட்டர் டிராவிஸ் ஹெட்டுக்கு வைடர் யார்கர்களையும், அபிஷேக் சர்மாவுக்கு ஷார்ட் பந்துகளையும் ஆயுதமாகப் பயன்படுத்தியது.

ஷர்துல் தாக்கூர் வீசிய 2வது ஓவரிலேயே அதற்குரிய பலன் கிடைத்தது. அபிஷேக் ஷர்மா ஷார்ட் பந்தில் தூக்கி அடித்து 6 ரன்னில் பூரனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இஷான் கிஷன் வந்த வேகத்தில் கிளாசனிடம் கேட்ச் கொடுத்து டக்-அவுட்டில் விக்கெட்டை இழந்தார்.

டிராவிஸ் ஹெட்டுக்கும் குறிவைக்கப்பட்டது, ரவி பிஸ்னாய் பந்து வீச்சில் டிராவிஸ் ஹெட் அடித்த ஷாட்டில் கிடைத்த கேட்ச் வாய்ப்பை பூரன் தவறவிட்டார். ஆனால் ஹெட் 45 ரன்கள் சேர்த்திருந்தபோது, அவருக்கு வலுவான யார்கரை வீசி பிரின்ஸ் யாதவ் ஆட்டமிழக்கச் செய்தார். டாப் ஆர்டர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஆயுதங்களையும், திட்டங்களையும் லக்னெள வைத்திருந்தது.

கிளாசனுக்கு நேர்ந்த கொடுமை

கிளாசன் களத்துக்கு வந்தவுடன் சிக்ஸர், பவுண்டரி என விளாசி 22 ரன்களுடன் களத்தில் இருந்தார். 11வது ஓவரை பிரின்ஸ் யாதவ் வீசினார்.

நிதிஷ் ரெட்டி அடித்த பந்தை கேட்ச் பிடிக்க பிரின்ஸ் முயன்றபோது அவரின் கைகளில் பட்டு பந்து நான்-ஸ்ட்ரைக்கர் ஸ்டெம்பில் பட்டது.

அந்த நேரத்தில் கிளாசன் க்ரீஸைவிட்டு வெளியே நின்றிருந்தால் பரிதாபமாக ரன்-அவுட்டாகி வெளியேறினார். அடுத்த சிறிது நேரத்தில் நிதிஷ் ரெட்டியை 32 ரன்களில் ரவி பிஸ்னோய் வெளியேற்றினார்.

புதிய கண்டுபிடிப்பான அனிகேத் வர்மா

ஐ.பி.எல். 2025, சன்ரைசர்ஸ் ஹைதராபாத்,  லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சன்ரைசர்ஸ் அணியை எப்படி வீழ்த்துவது என்று மற்ற அணிகளுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்திருக்கிறது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்

சன்ரைசர்ஸ் அணி, இளம் வீரர் அனிகேத் வர்மாவை தனது புதிய கண்டுபிடிப்பாகப் பிடித்துள்ளது. 21 வயதாகும் அனிகேத் வர்மா, 13 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்து 36 ரன்கள் சேர்த்து பிஞ்ச் ஹிட்டராக மாறினார். இந்த ரன்களை அனிகேத் அடிக்காமல் இருந்திருந்தால், சன்ரைசர்ஸ் அணி 160 ரன்களில் சுருண்டிருக்கும் என்பதுதான் நிதர்சனம்.

அனிகேத் வர்மா ஆட்டமிழந்த பிறகு, பின்வரிசையில் வந்த பேட்டர்கள் யாரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கம்மின்ஸ் மட்டும் 3 சிக்ஸர்களுடன் 18 ரன்கள் சேர்த்தார். டெத் ஓவர்களையும் பயன்படுத்த சன்ரைசர்ஸ் அணியில் கடைசி வரிசையில் பேட்டர்கள் இல்லை.

ஒட்டுமொத்தத்தில் சன்ரைசர்ஸ் அணியை எப்படி காலி செய்வது என்று மற்ற அணிகளுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்திருக்கிறது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ். அதிரடி வீரர்களுக்கு யார்கர் ஆயுதம் என்பதை உணர்ந்து, நேற்று மட்டும் 16 ஓவர்களில் 14 யார்கர்களை லக்னெள பந்துவீச்சாளர்கள் வீசியுள்ளனர். அதிலும் பிரின்ஸ் யாதவ் தன்னுடைய 4 ஓவர்களிலும் யார்கர்களை திட்டமிட்டு வீசினார்.

ஒருதரப்பாக ஆட்டத்தை மாற்றிய பூரன்

லக்னெள அணி 190 ரன்களை துரத்தியது. ஆனால் மார்க்ரம் தொடக்கத்திலேயே ஏமாற்றினார். அடுத்து வந்த பூரன், பவுண்டரியுடன் கணக்கையும், அதிரடியையும் தொடங்கினார். பூரன் இடதுகை சுழற்பந்துவீச்சுக்குத் திணறுவார் என்று அபிஷேக் சர்மாவை பந்துவீச கம்மின்ஸ் அழைத்தார்.

ஆனால், அபிஷேக் பந்துவீச்சைத் துவைத்து எடுத்த பூரன் சிக்ஸர், பவுண்டரி எனச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆடம் ஸம்பா பந்துவீச்சை விட்டு வைக்காத பூரன், 2 சிக்ஸர்களை விளாசினார். பூரன் சந்தித்த முதல் 20 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் அடங்கும். 18 பந்துகளில் பூரன் அரைசதத்தை எட்டினார்.

பூரன் அதிரடியாக ஆடியபோது மார்ஷ் சிறிது பொறுமை காத்து 22 பந்துகளில் 37 ரன்களுடன் இருந்தார். பூரன் ஆட்டமிழந்தவுடன் மார்ஷ் அதிரடியாக ஆடத் தொடங்கி, ஷமி பந்துவீச்சில் 2 சிக்ஸர்கள், கம்மின்ஸ் பந்துவீச்சில் 2 பவுண்டரி என விளாசி 29 பந்துகளில் அரைசதம் எட்டினார். கடைசி 11 ஓவர்களில் லக்னெள வெற்றிக்கு 53 ரன்கள் தேவைப்பட்டது.

ரிஷப் பந்த்(15), பதோனி (6) விரைவாக விக்கெட்டை இழந்த நிலையில், மில்லர், அப்துல் சமது வெற்றியை உறுதி செய்தனர். அதிலும் சன்ரைசர்ஸ் அணியில் கடந்த சீசனில் இருந்த இளம் வீரர் அப்துல் சமது 2 சிக்ஸர், 2 பவுண்டரி என 8 பந்துகளில் 22 ரன்களுடன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். மில்லர் 13 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cedld161z54o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிஎஸ்கே வரலாற்றுத் தோல்வி: சிக்ஸர்களை விளாசியும் தோனியை ரசிகர்கள் விமர்சிப்பது ஏன்?

CSK vs RCB, தோனி, கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் 17 ஆண்டுகளுக்குப் பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றியைப் பதிவு செய்தது.

முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்தது. சிஎஸ்கே அணி 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன் மட்டுமே எடுத்து 50 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

சென்னை அணியின் இந்த வரலாற்றுத் தோல்விக்கு காரணம் என்ன? நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் தோனி சிக்ஸர், பவுண்டரிகளை விளாசியும் கூட சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவரை விமர்சிப்பது ஏன்?

சால்ட், படிக்கலின் அதிரடி

சிஎஸ்கே அணி கலீல் அகமதுவை வைத்து ஆட்டத்தை தொடங்கிய நிலையில் மற்றொருபுறம் அஸ்வினை பந்துவீசச் செய்தது. அவரின் முதல் ஓவரிலேயே பில் சால்ட் சிக்ஸர், பவுண்டரி என 16 ரன்களை விளாசினார். இதனால் வேறு வழியின்றி நூர் முகமதுவை பந்துவீச அழைத்தனர்.

சால்ட் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நூர் முகமது பந்துவீச்சில் தோனியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் சிறிய கேமியோ ஆடிக்கொடுத்தார். பவர்ப்ளேயில் ஆர்சிபி அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் சேர்த்தது. 10.3 ஓவர்களில் ஆர்சிபி அணி 100 ரன்களை எட்டியது.

ஜடேஜாவின் முதல் ஓவரை கட்டம் கட்டிய படிக்கல் சிக்ஸர், பவுண்டரி என 15 ரன்களை விளாசினார். படிக்கல் 27 ரன்கள் சேர்த்தபோது, அஸ்வின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ஆர்சிபி அணி 2 விக்கெட்டுகளை இழந்த போதும் விராட் கோலி நிதானமாக பேட் செய்தார்.

CSK vs RCB, தோனி, கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கோலி பேட்டிங்கில் தடுமாற்றம்

சிஎஸ்கே அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் கோலி அவரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பேட் செய்ய முடியவில்லை. நினைத்த ஷாட்களை அடிக்க முடியவில்லை.

தொடக்க ஆட்டக்காரராக வந்துள்ளதால் சிக்ஸர், பவுண்டரிக்கு பலமுறை கோலி முயற்சித்தார். பெரிதாக ஷாட்கள் அமையவில்லை. இதனால் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்து விளையாடினார்.

பதிராணா வீசிய ஓவரில் கோலியின் ஹெல்மெட்டில் பந்துதாக்கியது. முதலுதவிக்குப்பின், ஒரு சிக்ஸர், பவுண்டரியை கோலி அடித்தார். இருப்பினும் சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் கோலியின் (31) பேட்டிங் எதிர்பார்ப்புக்குரிய வகையில் இல்லை. முதல் ஆட்டத்தில் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்த கோலி நேற்று 100 ஸ்ட்ரைக் ரேட்டிலும் ஒரு சிஸ்கர், 2 பவுண்டரி மட்டுமே அடித்தார்.

CSK vs RCB, தோனி, கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

பட்டிதார் களத்துக்கு வந்த பின் அவ்வப்போது பவுண்டரிகளும், சிக்ஸர்களும் பறந்தன. பட்டிதாருக்கு மட்டும் நேற்று 3 கேட்சுகளை சிஎஸ்கே வீரர்கள் கோட்டை விட்டனர். கை மேல் கிடைத்த கேட்சை தீபக் ஹூடாவும், கலீல் அகமதுவும், ராகுல் திரிபாதியும் கோட்டைவிட்டனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திய பட்டிதார், சுழற்பந்துவீச்சையும், வேகப்பந்துவீச்சையும் துவம்சம் செய்தார்.

விராட் கோலி ஆட்டமிழந்தபின் பட்டிதாருக்கு, சரியான பார்ட்னர்ஷிப் அமையவில்லை. லிவிங்ஸ்டோன் (10), ஜிதேஷ் ஷர்மா(12) என நூர் அகமது பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். ஆனால் மனம் தளராமல் ஆடிய பட்டிதார் 30 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

15.6 ஓவர்களில் ஆர்சிபி 150 ரன்களை எட்டியது. டெத் ஓவர்களில் ஆர்சிபி அணி சற்று தடுமாறியது. பதிராணா ஓவரை சமாளிக்க முடியாமல் பட்டிதார் விக்கெட்டையும், குர்னல் பாண்டியா விக்கெட்டையும் இழந்தது. ஆனால் சாம் கரன் வீசிய கடைசி ஓவரில் டிம் டேவிட் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி அணியை பெரிய ஸ்கோருக்கு எடுத்துச் சென்றார்.

CSK vs RCB, தோனி, கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹேசல்வுட், புவனேஷ் மிரட்டல்

ஆடுகளத்தில் சிறிய அளவு ஒத்துழைப்பு கிடைத்தாலும் பந்துவீச்சை எவ்வாறு மாற்ற முடியும் என்பதை புவனேஷ்வர் குமாரும், ஹேசல்வுட்டும் நேற்று செய்து காண்பித்தனர்.

புவனேஷ் 6-8 மீட்டர் லென்த்தில் பந்துவீசி சிஎஸ்கே பேட்டர்களை ஒருபுறம் திணறடிக்க, ஹேசல்வுட் 8-10 மீட்டர் லென்த்தில் பவுன்ஸரையும், சீமிங்கையும் அளித்து திக்குமுக்காடச் செய்தனர். தரமான வேகப்பந்துவீச்சுக்கு முன் சிஎஸ்கே பேட்டர்களின் திறமை என்ன என்பது நேற்று வெளிப்பட்டுவிட்டது.

காயத்திலிருந்து மீண்டு வந்திருந்த புவனேஷ்வரின் அவுட்ஸ்விங் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சிஎஸ்கே பேட்டர்கள் திணறினர்.

அதிலும் டெஸ்ட் பந்துவீச்சு போன்று ஹேசல்வுட் வீசியதை சிஎஸ்கே பேட்டர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ராகுல் திரிபாதி, ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டை தொடக்கத்திலேயே ஹேசல்வுட் எடுத்து அதிர்ச்சியளித்தார். புவனேஷ்வர் தனது பவர்ப்ளே ஓவரில் 73-வது விக்கெட்டாக தீபக் ஹீடாவின் விக்கெட்டை வீழ்த்தினார்.

CSK vs RCB, தோனி, கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

பவர்ப்ளே முடிவதற்குள் சிஎஸ்கே அணி 3 விக்கெட்டுகளை இழந்து 30 ரன்கள் மட்டுமே சேர்த்தது. சாம்கரனும் பெரிதாக ஸ்கோர் செய்யாமல் 8 ரன்னில் லிவிங்ஸ்டோன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ரச்சின் ரவீந்திரா, ஷிவம் துபே ஓரளவு பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் யாஷ் தயால் பந்துவீச்சில் இருவரின் விக்கெட்டும் வீழ்ந்தது. யாஷ் தயால் வீசிய 13-வது ஓவரில் ரவீந்திரா 41 ரன்னில் இன்சைட் எட்ஜில் போல்டாகினார். அதே ஓவரில் ஷிவம் துபேயும் 19 ரன்னில் இன்சைட் எட்ஜ் எடுத்து போல்டாகினார். இருவரும் ஆட்டமிழந்தபோதே சிஎஸ்கே அணியின் தோல்வி ஏறக்குறைய உறுதியானது.

வெற்றிக்கு தேவைப்படும் ரன்கள் அதிகம் இருந்தது. விக்கெட்டுகள் கைவசம் இல்லை. ஆடுகளம் ஆர்சிபி பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகி இருக்கிறது. ஸ்கோர் செய்வதும் கடினமாக இருக்கிறது என்பதை சிஎஸ்கே பேட்டர்கள் உணர்ந்தனர்.

அஸ்வின் 11 ரன்களில் லிவிங்ஸ்டோன் பந்துவீச்சிலும் , ஜடேஜா 25 ரன்களில் ஹேசல்வுட் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர்.

ரசிகர்களுக்கு விருந்தளிக்க 9-வது இடத்தில் களமிறங்கிய தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 30 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சிஎஸ்கேயின் தோல்வியை விரும்பாத ரசிகர்களுக்கு, தோனியின் பேட்டிங் ஆறுதலாக அமைந்தது. சொந்தமண்ணில் மோசமான தோல்வியை தவிர்க்கும் வகையில் தோனியும் அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்தார்.

CSK vs RCB, தோனி, கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கோலி கொண்டாட்டம்

ஆர்சிபி அணி தொடக்கத்திலிருந்து எடுத்த ஒவ்வொரு விக்கெட்டையும் கோலி ரசித்து கொண்டாடினார். தீபக் ஹூடா பேட்டில் பந்து உரசிச் சென்றது பந்துவீச்சாளர் புவனேஷுக்கு கூட தெரியவில்லை. ஆனால், கோலி விரலை உயர்த்திக்கொண்டே அவுட் என குரலை உயர்த்தி ஓடிவந்தார்.

அது மட்டுமல்லாமல் டிஆர்எஸ் எடுங்கள் என்று சைகையால், பட்டிதாரையும் வலியுறுத்தினார். மூன்றாவது நடுவர் கணிப்பில் பேட்டில் பந்து உரசியது தெரிந்தது. ஹூடா விக்கெட்டை வீழ்த்தியதில் பெரும்பங்கு கோலிக்கு உரியது.

சிஎஸ்கே தோல்விக்கு காரணம்

சிஎஸ்கே அணியின் தோல்விக்கு காரணமே மோசமான பீல்டிங்கும், இன்னும் வயதான வீரர்களை நம்பி இருப்பதும்தான். குறிப்பாக நேற்றைய ஆட்டத்தில் மட்டும் பட்டிதாருக்கு 3 கேட்சுகளை தீபக் ஹூடா,கலீல் அகமது, திரிபாதி ஆகியோர் கோட்டைவிட்டனர். தோனி ஒரு விக்கெட் கீப்பிங் கேட்சை கோட்டைவிட்டார்.

அடுத்தார்போல் ஜடேஜா, அஸ்வின், தோனி, சாம் கரன், ஷிவம் துபே என கடந்த பல சீசன்களாக ஆடிய வீரர்களை இன்னும் பயன்படுத்தும்போது, அவர்களுக்கு எவ்வாறு பந்துவீசுவது என எதிரணி எளிதாக ஹோம்ஓர்க் செய்துவரும்.

சிஎஸ்கே அணியில் இளம் வீரர்கள் பலர் இருந்தும் ஒருவருக்கு கூட பரிசோதனை அடிப்படையில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் மற்ற அணிகளில் ஒவ்வொரு ஆட்டத்திலும் ஏதேனும் புதிய வீரரை களமிறக்கி பரிசோதிக்கிறார்கள். சிலநேரம் அது வெற்றிக்கான வாய்ப்பாக மாறிவிடுகிறது.

CSK vs RCB, தோனி, கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிஎஸ்கே பந்துவீச்சு நேற்று படுமோசமாக இருந்தது. குறிப்பாக அஸ்வின், ஜடேஜா பந்துவீச்சு சராசரிக்கும் குறைவாக இருந்தது. நூர் அகமது மட்டும் தப்பினார். வேகப் பந்துவீச்சில் பதிராணா, கலீல் அகமது பந்துவீச்சில் வேகம் இருக்கிறதே தவிர துல்லியமான லென்த், பவுன்ஸ், ஸ்விங் இல்லை.

ஹேசல்வுட், புவனேஷ்வர் பந்துவீச்சில் ஈட்டிபோல் இறங்கிய துல்லியம், லென்த் சிஎஸ்கே பந்துவீச்சாளர்களிடம் இல்லை.

அடுத்ததாக 196 ரன்கள் எனும் பெரிய ஸ்கோர் மனரீதியாகவே வீரர்களுக்கு பதற்றத்தையும், ரன் சேர்க்கவேண்டி நெருக்கடியையும் ஏற்படுத்திவிட்டது. இதனால் விக்கெட் வீழ்ந்தவுடன் அழுத்தம் காரணமாக பெரிய ஷாட்டுக்கு முயன்று விக்கெட்டை இழந்தனர்.

CSK vs RCB, தோனி, கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

தோனியை ரசிகர்கள் விமர்சிப்பது ஏன்?

தோனி 16 பந்துகளில் 2 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 30 ரன் சேர்த்தாலும் கூட, பேட்டிங் வரிசையில் 9-வதாக அவர் களம் இறங்கியது விமர்சனங்களுக்கு வித்திட்டுள்ளது. 13 வது ஓவரில் ரச்சின் ரவீந்திரா, ஷிவம் துபே ஆகிய இருவரின் விக்கெட்டையும் யாஷ் தயால் வீழ்த்தினார்.

சிஎஸ்கே வெற்றி பெற ஓவருக்கு 16 ரன்கள் சராசரியாக தேவைப்பட்ட அந்த நேரத்தில் தோனி களமிறங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், அதற்கு மாறாக சிஎஸ்கே அணி ரவிச்சந்திரன் அஸ்வினை களமிறக்கியது. ஆட்டத்தின் 16-வது ஓவரில்தான் தோனி களமிறங்கினார். அந்த நேரத்தில், ஆட்டம் கிட்டத்தட்ட சிஎஸ்கே கையைவிட்டு போய்விட்டிருந்தது. இனி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்கிற கட்டத்தில், ஆட்டத்தின் கடைசி ஓவரில் 2 சிக்சர்களை விளாசி தனது ரசிகர்களை தோனி பரவசப்படுத்தினார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் சிஎஸ்கே அணி தோல்வியடைந்துள்ளது. ரசிகர்கள் பலரும், சேஸிங்கில் தோனி மிகவும் பின்வரிசையில் இறங்கியதை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

CSK vs RCB, தோனி, கோலி

பட மூலாதாரம்,X

சேஸிங்கில் அனுபவம் கொண்ட, பதற்றம் கொள்ளாமல் ரன் ரேட்டை பராமரிக்கும் திறன் கொண்ட தோனி அணிக்குத் தேவையான, இக்கட்டான நேரத்தில் களமிறங்காதது ஏன்? என்பது அவர்களின் கேள்வி.

சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர், 5 கோப்பைகளை பெற்றுக் கொடுத்த அனுபவமான வீரர், இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் தாமாக முன்னெடுத்து நடுவரிசையில் களமிறங்கி ஆட்டத்தை தங்கள் பக்கம் இழுத்து வந்திருக்க வேண்டும். ஆனால், டெய்லெண்டர்கள் போல் கடைசியில் 9-வது இடத்தில் களமிறங்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர்.

தோனியின் சிக்சர்களாலும் தடுக்க முடியாத சிஎஸ்கேயின் வரலாற்றுத் தோல்வி

SRH-ஐ சிதைத்த ஷர்துலின் விஸ்வரூபம் - லக்னௌவின் ஆணிவேராக அமைந்த பூரன், மார்ஷ் ஜோடி

'என் மகனிடம் தோனி சொன்னது இதுதான்' - சிஎஸ்கே அணியை மிரட்டிய விக்னேஷ் புத்தூரின் தந்தை நெகிழ்ச்சி

ஐபிஎல் வந்தாலே அதிகம் பேசப்படும் காவ்யா மாறன் யார்? இவரது பின்னணி என்ன?

ஆட்ட நாயகன் பட்டிதார்

ஆர்சிபி அணி வெற்றியுடன் ஐபிஎல் தொடரை 3-வது முறையாகத் தொடங்கியுள்ளது. 2014-வது சீசனில் அடுத்தடுத்து வெற்றிகளுடனும், 2021 ஐபிஎல் சீசனில் தொடர்ந்து 4 வெற்றிகளுடனும் ஐபிஎல் சீசனை ஆர்சிபி தொடங்கியது.

ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் வேகப் பந்துவீச்சாளர்களும், கேப்டன் பட்டிதார், சக வீரர்களான பில்சால்ட், கோலி, படிக்கல், டிம்டேவிட் ஆகியோரின் கூட்டு உழைப்புதான். 32 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்து நடுப்பகுதியில் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக இருந்த கேப்டன் ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

ஆர்சிபி எப்படி சிஎஸ்கே அணியின் 12 ஓவர்கள் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ளப்போகிறது என்று எதிர்பார்ப்பே ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் ஆர்சிபியின் ஹேசல்வுட், புவனேஷ்வரின் தரமான ஸ்விங், ஸீமிங்,எஸ்ட்ரா பவுன்ஸ் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தோற்றது சிஎஸ்கே. புவனேஷ்வர் குமார், ஹேசல்வுட் இருவரும் 7 ஓவர்கள் வீசி 41 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைச் சாய்த்தனர்.

சிஎஸ்கே அணியின் வலிமையே சுழற்பந்துவீச்சுதான் என்று கூறப்பட்டது. ஆனால், நேற்று அஸ்வின், ஜடேஜா பந்துவீச்சை பில்சால்ட், படிக்கல், கோலி வெளுத்து வாங்கினர். இதனால் அஸ்வினுக்கும், ஜடேஜாவுக்கும் 5 ஓவர்களே வழங்கப்பட்டது.

இருவரும் 5 ஓவர்கள் வீசி 59 ரன்களை வாரி வழங்கினர். சுழற்பந்து வீச்சாளர்கள் 9 ஓவர்கள் வீசிய நிலையில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி 95 ரன்களை வாரி வழங்கினர்.

CSK vs RCB, தோனி, கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆட்டத்தை மாற்றிய 6 ஓவர்கள்

மாபெரும் வெற்றிக்குப் பின் ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் பேசுகையில் " இந்த ஆடுகளத்தில் இது நல்ல ஸ்கோர். பந்து சிலநேரம் நின்று வந்தது, பேட்டிங் செய்வது எளிதாக இல்லை. பவுண்டரி, சிக்ஸர் அடிப்பதும் கடினமாக இருந்தது. சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவை வீழ்த்துவது சிறப்பானது.

ரசிகர்கள் சிஎஸ்கேவுக்கு ஆதரவாக இருக்கும்போது அதை மீறி சிஎஸ்கே அணியை வென்றோம். என்னுடைய பேட்டிங் முக்கியமானது. 200 ரன்கள் வரை எதிர்பார்த்தோம். களத்தில் நிலைத்து நின்றுவிட்டால் பெரிய ஸ்கோருக்கு இட்டுச் செல்ல திட்டமிட்டேன். ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சற்று ஒத்துழைத்ததால் எங்களின் பந்துவீச்சாளர்களும் நன்கு பந்துவீசினர்.

குறிப்பாக லிவிங்ஸ்டோன் சிறப்பாகப் பந்துவீசினார். ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் இருவரும் சேர்ந்து முதல் 6 ஓவர்களில் ஆட்டத்தை மாற்றிவிட்டனர். கடினமான லென்த்தில் பந்துவீசி, பேட்டர்களை திணறவிட்டனர்" எனத் தெரிவித்தார்.

3-வது முறை தோல்வி

50 ரன்களில் தோற்றது என்பது சிஎஸ்கே அணியைப் பொருத்தவரை மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் கிடைத்த தோல்வியாகும்.

இதற்கு முன் 50 ரன்கள் வித்தியாசத்துக்கு மேல் 2 முறை மட்டுமே சிஎஸ்கே தோற்றுள்ளது.

மும்பைக்கு எதிராக 2013ல் 60 ரன்கள் வித்தியாசத்திலும், 2022ல் பஞ்சாப் அணிக்கு எதிராக 54 ரன்கள் வித்தியாசத்திலும் சிஎஸ்கே தோற்றது. அதன்பின் இப்போது 50 ரன்களில் சிஎஸ்கே தோல்வி அடைந்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1mnm72eg17o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மும்பை மீண்டும் தோல்வி: ரோஹித்திடம் ஹர்திக் நடந்து கொண்ட விதம் பற்றி ரசிகர்கள் கூறியது என்ன?

MI vs GT, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 9 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆமதாபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் டி20 போட்டியின் 9-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.

முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்தது. 197 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்து 36 ரன்களில் தோல்வி அடைந்தது.

கடந்த 2023ம் ஆண்டிலிருந்து ஆமதாபாத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடந்த 4 ஆட்டங்களிலும் குஜராத் டைட்டன்ஸ் அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

குஜராத் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் இருவர் மட்டும்தான். முதலாமவர் தமிழக வீரர் சாய் சுதர்சன் 41 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்ததும், பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருவரின் முத்தாய்ப்பான ஆட்டம் வெற்றிக்கு துணையாக இருந்தது. ஆட்டநாயகன் விருது பிரசித் கிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்டது.

இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, அந்த அணிக்கு 5 முறை கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவிடம் நடந்துகொண்ட விதம் பற்றி அந்த அணி ரசிகர்கள் கூறியது என்ன?

MI vs GT, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

பவர்ப்ளேயை பயன்படுத்திய கில், சாய்

குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சிறப்பாகப் பயன்படுத்தி ரன்களைச் சேர்த்தனர். விக்கெட்டுகளை விடாமல் இருவரும் தலா 32 ரன்களைச் சேர்த்தனர். இருவரும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கி, 1,300 ரன்களுக்கு மேல் சேர்த்துவிட்டனர். பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி குஜராத் 66 ரன்களைச் சேர்த்தது. பீல்டிங் கட்டுப்பாடுகள் தளர்ந்தபின் 7-வது ஓவர் முதல் 10-வது ஓவர்கள் வரை மும்பை அணி பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்ததால் 13 ரன்கள் மட்டுமே குஜராத் சேர்த்தது.

சுப்மன் கில்லுக்கு ஏற்றார்போல் டீப் ஸ்குயர் லெக்கில் நமன்திரை நிறுத்தி ஹர்திக் பாண்டியா ஷார்ட் பந்து வீசினார். இதை கில் தூக்கி அடித்தபோது, நமன்திரிடம் கேட்சானது. ஹர்திக்கின் திட்டத்தால் சுப்மன் கில் 38 ரன்னில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 78 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்து வந்த ஜோஸ் பட்லர், அதிரடியாக பவுண்டரிகள், சிக்ஸரை விளாசி ரன்கள் சேர்த்தார். ஒருபக்கம் சுதர்சனும், மறுபுறம் பட்லரும் வேகமாக ரன்களைச் சேர்த்தனர். பட்லர் 39 ரன்கள் சேர்த்த நிலையில் முஜிபுர் ரஹ்மான் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

MI vs GT, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

விக்கெட் சரிவு

அடுத்து வந்த ஷாருக்கான் ஒரு சிக்ஸர் அடித்து 9 ரன்னில் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சிறப்பாக பேட் செய்த சுதர்சன் 33 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். அடுத்து களமிறங்கிய ரூதர்போர்ட் அதிரடியாக 2 சிக்ஸர்களை விளாசினார். 18-வது ஓவரிலிருந்து குஜராத்தின் கொலாப்ஸ் தொடங்கியது.

போல்ட் வீசிய 18-வது ஓவரின் கடைசிப்பந்தில் சுதர்சன் யார்கர் பந்துவீச்சில் காலில் வாங்கி 63 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து தீபக் சஹர் வீசிய 19-வது ஓவரில் ராகுல் திவேட்டியா ஒரு பந்துகூட சந்திக்காமல் ரன்அவுட் ஆகினார், 2வது பந்தில் ரூதர்போர்ட் 18 ரன்னில் சான்ட்னரிடம் கேட்ச் கொடுத்தார். சத்யநாரயண ராஜீ வீசிய கடைசி ஓவரில் ரஷித்கான் ஒரு சிக்ஸர் அடித்தநிலையில் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்தார், கடைசிப் பந்தில் சாய் கிஷோர் ஒரு ரன்னில் ரன்அவுட் ஆகினார்.

179 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்தது குஜராத் அணி, இதனால் எளிதாக 200 ரன்களை எட்டிவிடும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், கடைசி 17 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து குஜராத் அணி கொலாப்ஸ் ஆகியது. குஜராத் தரப்பில் ஹர்திக் 2 விக்கெட்டுகளையும், போல்ட், தீபக் சஹர், ராஜூ, ரஹ்மான் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

MI vs GT, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரோஹித் சர்மா ஏமாற்றம்

197 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. ரோஹித் சர்மா 2 பவுண்டரிகள் அடித்தநிலையில், சிராஜ் பந்துவீ்சில் சூட்சமத்தை அறியாமல் பேட் செய்தார். 2 பவுண்டரிகளை வழங்கிய சிராஜ் லென்த்தை சற்று இழுத்து இன்ஸ்விங் செய்தார், இதை கவனிக்காத ரோஹித் சர்மா வழக்கமான பந்து என நினைத்து ஆட முற்பட்டபோது க்ளீன் போல்டாகி வெளியேறினார். ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ரோஹித் விக்கெட்டை சிராஜ் வீழ்த்தினார். தொடர்ந்து 2வது ஆட்டத்திலும் ரோஹித் சர்மாவிடம் இருந்து பெரிய ஸ்கோர் வரவில்லை.

MI vs GT, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

பட்டைய கிளப்பிய ஸ்கை

அடுத்து வந்த திலக் வர்மா வந்த வேகத்தில் ரபாடா பந்துவீச்சில் 2 பவுண்டரிகள், சிக்ஸர் என பறக்கவிட்டார். மறுபுறம் ரிக்கெல்டன் தடுமாறினார். சிராஜ் பந்துவீச்சில் இன்சைட் எட்ஜில் ரெக்கில்டன் 6 ரன்னில் போல்டாகி வெளியேறினார். டாப் ஆர்டர் இருவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.

அடுத்துவந்த சூர்யகுமார், திலக்வர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் களத்தில் இருக்கும் வரை ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் மும்பை அணி 2 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் சேர்த்தது. சூர்யகுமார் அடிக்கத் தொடங்கியதும், திலக் வர்மா தனது வேகக்தைக் குறைத்துக்கொண்டார்.

சிராஜ் பந்துவீச்சில் சுப்லா ஷாட் அடித்து ஸ்கை சிக்ஸருக்கு பறக்கவிட்டார், இசாந்த் ஓவரிலும் இதேபோல சிக்ஸரை ஸ்கை விளாசினார். ஸ்கையின் அதிரடிக்கு சாய்கிஷோரும் தப்பவில்லை, கவர்திசையில் சிக்ஸர் உதை வாங்கினார். சூர்யகுமார், திலக் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 42 பந்துகளில் 62 ரன்களை எட்டியது. கடைசி 9 ஓவர்களில் மும்பை வெற்றிக்கு 100 ரன்கள் தேவைப்பட்டது.

MI vs GT, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆட்டத்தை மாற்றிய பிரசித் கிருஷ்ணா

பிரசித் கிருஷ்ணா பந்துவீச அழைக்கப்பட்டபின் மும்பை அணியின் ஸ்கோர் சரியத் தொடங்கியது. அதிகமான ஸ்லோவர் பந்துகளை வீசி மும்பை பேட்டர்களை பிரசித் கிருஷ்ணா திணறவிட்டார். திலக் வர்மா 39 ரன்னில் பிரசித் கிருஷ்ணா ஸ்லோவர் பந்துக்கு இரையாகினார். அடுத்துவந்த புதுமுக வீரர் ராபின் மின்ஸ் 3 ரன்னில் சாய் கிஷோர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

அரைசதம் நோக்கி நகர்ந்த ஸ்கை 48 ரன்களில் பிரசித் கிருஷ்ணாவின் 97 கிமீ ஸ்லோவர் பந்தில் சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்திக் பாண்டியா 11 ரன்கள் சேர்த்த நிலையில் ரபாடா பந்துவீச்சில் அப்பட் ஷாட் அடிக்க முற்பட்டு சிராஜிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 97 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்று வலுவாக இருந்த மும்பை அணி, அடுத்த 27 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து குலைந்தது.

ஹர்திக் பாண்டியா கடந்த சீசனுக்கு முன்பு வரை இதே மைதானத்தில் குஜராத் அணிக்காக ஆடியிருந்தாலும், இந்த ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப தனது பேட்டிங்கை மாற்ற முடியவில்லை. கடைசி 3 ஓவர்களில் மும்பை அணி வெற்றிக்கு 73 ரன்கள் தேவைப்பட்டது. இது சாத்தியமில்லாத இலக்கு எனத் தெரிந்தது.

சான்ட்னர் 18 ரன்களிலும், நமன் திர் 18 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே சேர்த்தது. குஜராத் அணி தரப்பில் சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளையும், ரபாடா, சாய் கிஷோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

MI vs GT, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

சாதகமாக அமைக்கப்பட்ட ஆடுகளம்

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆமதாபாத் ஆடுகளம் சாதகமாக அமைக்கப்பட்டதுதான் வெற்றிக்கு முக்கியக் காரணம். மும்பை அணி சிவப்பு மண் ஆடுகளத்தில் விளையாடிப் பழக்கப்பட்டது, இந்த ஆடுகளத்தில் பந்து பேட்டரை நோக்கி வேகமாக வரும், அடித்து ஆடுவது சுலபமாக இருக்கும்.

ஆனால், ஆமதாபாத்தில் நேற்றைய ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு போடப்பட்ட கருப்பு, களிமண் ஆடுகளம். இந்த ஆடுகளத்தில் பந்து மெதுவாகவும், சற்று நின்றும் வரும். புதிய பந்தில்தான் பெரிய ஷாட்களை அடிக்க முடியும், பந்து சற்று தேய்ந்துவிட்டால் பெரிய ஷாட்கள் அடிப்பது கடினம். இந்த ஆடுகளத்தில் 180 ரன்கள் சேர்த்தாலே சேஸிங் செய்வதற்கு எதிரணி சிரமப்பட வேண்டியதிருக்கும். இதில் 196 ரன்கள் இலக்கு என்பது சாத்தியமில்லாத இலக்காகும்.

MI vs GT, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆமதாபாத் மைதானத்தில் இதற்கு முன் 200 ரன்களுக்கு மேல்கூட ஸ்கோர் செய்யப்பட்ட ஆட்டங்கள் நடந்துள்ளன. அந்த ஆட்டங்கள் அனைத்தும் சிவப்பு மண் ஆடுகளத்தில் அடிக்கப்பட்டவை. ஆனால், நேற்றைய ஆட்டம் கருப்பு மண் ஆடுகளத்தில் விளையாடப்பட்டது.

சிவப்பு மண் ஆடுகளத்தில் ஒருவேளை நேற்று ஆட்டம் நடந்திருந்தால், புதிய பந்தில் டிரன்ட் போல்டின் ஸ்விங், லென்த் பந்தையும், தீபக் சஹரின் ஸ்விங் பந்துவீச்சையும் குஜராத் பேட்டர்கள் சமாளித்திருக்க மாட்டார்கள். ஆனால், இந்த அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்கும் வகையில் கருப்பு மண் ஆடுகளம் பயன்படுத்தப்பட்டது. இந்த ஆடுகளத்தில் போல்ட், தீபக் சஹர் பந்துவீசினாலும் எதிர்பார்த்த வேகம் கிடைக்கவில்லை, ஸ்விங் செய்வதும் கடினமாக இருந்தது.

ஆதலால் இந்த கருப்பு களிமண் ஆடுகளத்தை குஜராத் அணி கேட்டு வாங்கி ஆட்டத்தை நடத்தக் கோரியுள்ளது. தங்களுக்கு சாதகமான ஆடுகளத்தை நன்கு பயன்படுத்தி முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. கருப்பு மண்ணில் விளையாடி அனுபவம் இல்லாத மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சிலும் சொதப்பி, பேட்டிங்கிலும் தோல்வி அடைந்தது.

"களிமண் ஆடுகளத்தை விரும்பினோம்"

MI vs GT, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெற்றிக்குப்பின் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் கூறுகையில், "முதல் போட்டிக்கு முன்பாகவே இந்த கருப்பு களிமண் ஆடுகளத்தில் விளையாட விரும்பினோம். எதிரணி யார் என்பதைப் பொருத்தும் ஆடுகளம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதுபோன்ற ஆடுகளம் எங்களுக்கு சிவப்பு மண் ஆடுகளத்தைவிட பேட்டிங், பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும்.

கருப்பு மண் ஆடுகளத்தில் ஆடு ம்போது பவுண்டர்கள் அடிப்பது கடினமாக இருக்கும், பந்து தேயும் போது ஷாட்களை ஆடுவது இன்னும் கடினமாக இருக்கும்.

எங்களைப் பொருத்தவரை திட்டங்கள் அனைத்தையும் கலந்து பேசி செயல்படுத்துவோம், சில நேரங்களில் நினைத்ததுபோல் நடக்கும், சிலவை நடக்காது. ரஷித் கான் டி20 போட்டியி்ல் முதல் முறையாக 2 ஓவர்கள் மட்டுமே இந்த ஆட்டத்தில் வீசியுள்ளார் ஏன் எனக்குத் தெரியவில்லை. வழக்கமாக ரஷித்கானுக்கு கடைசி கட்டத்தில் ஓவர்களை வீச அழைப்பேன், ஆனால், வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசியதால், ஆட்டம் கையைவிட்டு செல்லக்கூடாது என்பதால் பந்துவீச்சை மாற்றவில்லை. பிரசித் கிருஷ்ணா அற்புதமாகப் பந்துவீசினார். அடுத்த ஆட்டம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணியுடன் இதே ஆடுகளத்தில்தான் விளையாடப் போகிறோம், சிறந்த சவாலாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.

ரோஹித்தை புகழ்ந்த ரசிகர்கள்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்த சீசனிலேயே கேப்டன் மாற்றப்பட்டுவிட்ட போதிலும், அந்த அணியின் சில ரசிகர்கள் அந்த மாற்றத்தை ஏற்க இன்னும் கூட தயாராக இல்லை என்பதை நேற்றைய ஆட்டம் முடிந்த பிறகான சில சமூக வலைதள பதிவுகள் உணர்த்துகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 முறை கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவை இன்னும் கொண்டாடும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களில் ஒரு பிரிவினர், நேற்றைய தோல்விக்குப் பிறகு அவரைப் புகழ்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

X பதிவை கடந்து செல்ல

Hardik pandya is coming again and again to get advice from leader Rohit Sharma 👏 #MIvsGT
pic.twitter.com/gPXD8llamf

— 𝐕𝐢𝐬𝐡𝐮 (@Ro_45stan) March 29, 2025

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

குறிப்பாக, குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங்கில் சிறப்பாக ஆடி ரன்களை குவித்துக் கொண்டிருந்த போது ரோஹித் சர்மாவிடம் ஹர்திக் பாண்டியா அடிக்கடி ஆலோசனை கேட்டதை பார்க்க முடிந்தது. அந்த வீடியோக்களையும், ஸ்கிரீன்ஷாட்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரோஹித் சர்மாவை 'கேப்டன் ஃபார் எவர்' என்று சில மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். குஜராத் அணிக்கு எதிராக ஹர்திக் பாண்டியா அமைத்த பீல்டிங் வியூகங்களையும், பவுலர்களை மாற்றிய விதத்தையும் அவர்கள் குறை கூறி பதிவிட்டுள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0kx4v0m37xo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவசரத்தால் வீழ்ந்த சன்ரைசர்ஸ்! டெல்லிக்கு வெற்றியளித்த ஸ்டார்க், குல்தீப்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடல்ஸ், மிச்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், டூப்ளசிஸ் , அனிகேத் வர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 43 நிமிடங்களுக்கு முன்னர்

விசாகப்பட்டிணத்தில் இன்று (மார்ச்30) நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 10-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.

முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி, 18.4 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 164 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 24 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

டெல்லி அணிக்கு முதல் வெற்றிய அசுதோஷ் ஷர்மா பெற்றுக் கொடுத்த நிலையில் இந்த போட்டியில் ஸ்டார்க், குல்தீப் இருவரும் பெற்றுக் கொடுத்தனர். 2 வெற்றிகளுடன் டெல்லி அணி 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் 1.320 நிகர ரன்ரேட்டில் வலுவாக இருக்கிறது. அடுத்தடுத்து 2 தோல்விகளால் சன்ரைசர்ஸ் அணி 2 புள்ளிகளுடன் மைனஸ் 0.871 நிகர ரன்ரேட்டில் 7வது இடத்துக்குச் சரிந்துள்ளது.

சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசையை உருக்குலைத்து 3.4 ஓவர்களில் 35 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மிட்ஷெல் ஸ்டார்க் ஆட்டநாயகன் விருது பெற்றார். அசராத ஃபார்மில் இருக்கும் குல்தீப் யாதவ் 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்டநாயகன் விருதுக்கு இணையான இடத்தில் இருக்கிறார்.

பேட்டிங்கில் எளிய இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு 40 வயதுக்கு மேலான டூப்பிளசிஸ் இந்த சீசனில் முதல் அரைசதத்தை தனக்கே உரிய ஸ்டைலில் பதிவு செய்தார். மற்ற வகையில் டெல்லி பேட்டர்கள் பெரிதாக பங்களிப்பு செய்யவில்லை.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடல்ஸ், மிச்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், டூப்ளசிஸ் , அனிகேத் வர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

சன்ரைசர்ஸை சிதைத்த ஸ்டார்க்

சன்ரைசர்ஸ் அணி என்றாலே அதிரடி ஆட்டம், பெரிய ஸ்கோர், சிக்ஸர், பவுண்டரி பறக்கும் ஆட்டம் என்ற எதிர்பார்ப்புடன் தான் பேட்டர்கள் களமிறங்கினர். ஆனால், மிட்ஷெல் ஸ்டார்க் அனைத்து நினைப்புகளையும் தவிடுபொடியாக்கினார். முதல் ஓவரிலேயே அபிஷேக் ஷர்மா சோம்பேறித்தனமாக ஓடி ரன்அவுட் ஆகினார்.

அடுத்துவந்த இஷான் கிஷனின் பலவீனத்தை நன்கு அறிந்த ஸ்டார்க் டீப் ஸ்குயரில் பீல்டரை நிறுத்தி சிறிது ஆப்சைடு விலக்கி ஷார்ட் பந்துவீசினார். சொல்லிவைத்தார்போல், இஷான் கிஷன் 2 ரன்னில் டிரிஸ்டன் ஸ்டெப்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஸ்டார்க் வீசிய அதே ஓவரில் வந்தவேகத்தில் நிதிஷ் குமார் ரெட்டி தேவையின்றி மிட்ஆன் திசையில் தூக்கி அடித்து படேலிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் ஆட்டமிழந்தார்.

ஓரளவுக்கு அதிரடியாக ஆடி வந்த டிராவிஸ் ஹெட்டும் நிலைக்கவில்லை. ஹெட் 22 ரன்கள் சேர்த்தநிலையில் ஸ்டார்க் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலிடம் கேட்ச்கொடுத்துவெளியேறினார். 5 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 37 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சன்ரைசர்ஸ் அணியின் பலமே டாப்ஆர்டர்தான் அந்த 4 பேட்டர்களும் பெவிலியன் சென்றபின் ஆட்டத்தில் என்ன ஸ்வாரஸ்யம் இருக்கப் போகிறது என்று ரசிகர்கள் எண்ணினர்.

ஆட்டத்தை மாற்றிய அனிகேத் வர்மா

சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடல்ஸ், மிச்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், டூப்ளசிஸ் , அனிகேத் வர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால், 5வது விக்கெட்டுக்கு கிளாசன், அனிகேத் வர்மா ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்தது. கடந்த போட்டியிலும் அதிரடியாக ஆடிய அனிகேத் வர்மா, இந்த ஆட்டத்திலும் கிடைத்த வாய்ப்பை வெளுத்து வாங்கினார். பவர்பளேயில் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் சேர்த்தது.

அனிகேத் வர்மா, கிளாசன் இருவரும் அதிரடிக்கு மாறியபின், டெல்லி பந்துவீச்சை துவம்சம் செய்தனர். 9.1ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 100 ரன்களை எட்டியது. இருவரும் டெல்லி பந்துவீச்சை சிக்ஸர், பவுண்டரி என ஓடவிட்டனர். சர்வதேச அனுபவமே இல்லாத அனிகேத் வர்மா 34 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

இருவரும் அணியை பெரிய ஸ்கோரை நோக்கி நகர்த்திய நிலையில் மோகித் சர்மா பந்துவீச்சில் 32 ரன்கள் சேர்த்தநிலையில் கிளாசன் விக்கெட்டை இழந்தார். இருவரும் 5வது விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அதிரடி ஆட்டம் மட்டும் போதுமா?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடல்ஸ், மிச்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், டூப்ளசிஸ் , அனிகேத் வர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

அடுத்துவந்த அபினவ் மனோகர்(4), கேப்டன் கம்மின்ஸ்(2) இருவரும் ஆங்கர்ரோல் எடுத்து விளையாட வேண்டும் என நினைக்கவில்லை, வந்தவுடன் பெரிய ஷாட்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்து தேவையின்றி விக்கெட்டுகளை இழந்தனர். இருவரின் விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் சாய்த்தார்.

விக்கெட் ஒருபுறம் வீழ்ந்தாலும் அனிகேத் வர்மா தனுது பேட்டால், டெல்லி பந்துவீச்சாளர்களை பந்துவீச்சை துவைத்து எடுத்தார். குல்தீப் யாதவ் வீசிய கூக்ளி பந்துவீச்சை சிக்ஸருக்கு அனிகேத் வர்மா விரட்டும்போது, பவுண்டரிஎல்லையில் மெக்ரூக்கால் அருமையாக கேட்ச் பிடிக்கப்பட்டார்.

அனிகேத் வர்மா 41 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் அடங்கும். அதன்பின் ஹர்சல் படேல்(5), இம்பாக்ட் ப்ளேயராக வந்த முல்டர்(9) ரன்னில் ஆட்டமிழந்தனர்.

இன்னும் 8 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் அதை விளையாடக்கூட பேட்டர்கள் இல்லாத நிலையில் சன்ரைசர்ஸ் ஆட்டமிழந்தது. இந்த சீசனில் ஓவர்கள் மீதமிருக்கும்போதே ஆல்அவுட் ஆகிய முதல் அணியாக சன்சைரஸ் மாறியது. ஸ்டார்க் 5 விக்கெட்டுகளையும், குல்தீப் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

164 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணி களமிறங்கியது. டூப்பிளசிஸ், ப்ரேசர் மெக்ருக் களமிறங்கினர். கடந்த ஆட்டத்தில் இருவருமே ஜொலிக்கவில்லை. இந்தஆட்டத்தில் டூப்பிளசிஸ் தனது கிளாசிக் பேட்டிங்கை வெளிப்படுத்திய நிலையில் மெக்ருக்கிற்கு பந்து பேட்டில் மீட்ஆகவில்லை பெரிய ஷாட்களுக்கு முயன்றும் கிடைக்கவில்லை.

ஆனால், டூப்பிளசிஸ் தனக்கே உரிய ஸ்டைலில் சன்ரைசர்ஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தார். 40 வயதிலும் டூப்பிளசிஸ் ஷாட்கள் ஒவ்வொன்றும் இடிபோல் இறங்கியது. பவர்ப்ளேயில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் சேர்த்தது. சன்ரைசர்ஸ் பந்துவீச்சை கிழித்தெறிந்த டூப்பிளசிஸ் 26 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதன்பின் நிலைக்காத டூப்பிளசிஸ் 50 ரன்னில் அன்சாரி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்தனர். அன்சாரி வீசிய அதே ஓவரின் கடைசிப்பந்தில் மெக்ருக்கும் 38 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

கே.எல்.ராகுல் வந்தவேகத்தில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரி அடித்து 15 ரன்னில் அன்சாரி பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். 4வது விக்கெட்டுக்கு அபிஷேக் போரெல்(34), ஸ்டெப்ஸ்(21)இருவரும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இரு இளம் முத்துக்கள்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடல்ஸ், மிச்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், டூப்ளசிஸ் , அனிகேத் வர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

சன்ரைசர்ஸ் அணி தோற்றாலும் இரு முத்துக்களை, கிரிக்கெட் உலகிற்கு அடையாளம் காண்பித்துள்ளது. இளம் பேட்டர் அனிகேத் வர்மா(74), சுழற்பந்துவீச்சாளர் ஜீசான் அன்சாரி ஆகிய இருவரையும் கிரிக்கெட் உலகிற்கு வெளிச்சம்பாய்ச்சிருக்கிறது. கடந்த சீசனில் நிதிஷ்குமார் ரெட்டியை அடையாளப்படுத்திய சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இருவருக்கும் வழங்கிய வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தினர்.

இதில் 23வயதான அனிகேத் வர்மா மத்தியப் பிரதேசம் போபால் நகரைச் சேர்ந்தவர். ஏற்கெனவே ரஜத் பட்டிதார், வெங்கடேஷ் அய்யர் கலக்கிவரும் நிலையில் அனிகேத் ஜொலிக்கிறார். மத்தியப்பிரதேச டி20 லீக்கில் 32 பந்துகளில் சதம் அடித்தவர் அனிகேத் வர்மா. இவரின் பேட்டிங்கைப் பார்த்து மெய்சிலிர்த்து சன்ரைசர்ஸ் அணி அனிகேத் வர்மாவை ஏலத்தில் அடிப்படை விலைக்கு ரூ.30 லட்சத்துக்கு எடுத்தது. ஆனால் இவரை சன்ரைசர்ஸ் வாங்கியது போனஸாக அமைந்துள்ளது.

மற்றொரு வீரர் 25வயதான உத்தரப்பிரதேச சுழற்பந்துவீச்சாளர் ஜீஸன் அன்சாரி. உ.பி. அணிக்காக ஒரு டி20 போட்டியில் மட்டுமே அன்சாரி விளையாடியுள்ளார். 2016ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இஷான் கிஷன், ரிஷப் பந்த், சர்பிராஸ் கான், கலீல் அகமதுவுடன் அன்சாரி விளையாடியவர். அவர்கள் மீது பட்ட வெளிச்சம் அன்சாரி மீது இப்போதுதான் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு டி20 லீக்கில் மீரட் மாவ்ரிக்ஸ் அணிக்காக ஆடிய அன்சாரி, 12 இன்னிங்ஸில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இருவீரர்களையும் சன்ரைசர்ஸ் அணி கண்டறிந்து இந்திய அணிக்கு அளித்துள்ளது.

அன்சாரியை அடிப்படை விலையான ரூ.40 லட்சத்துக்கு சன்ரைசர்ஸ் ஏலத்தில் எடுத்தது. இவர் கிடைத்தது சன்ரைசர்ஸ் அணிக்கு 2வது போனஸாகும். இருவரும் அடுத்துவரும் லீக் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணிக்கு கருப்பு குதிரைகளாக இருப்பார்கள்.

சன்ரைசர்ஸ் சறுக்கியது எங்கே?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடல்ஸ், மிச்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், டூப்ளசிஸ் , அனிகேத் வர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

சன்ரைசர்ஸ் அணியின் வீரர்கள் அனைவருமே ஒரே சிந்தனையோடு களத்துக்கு வந்ததுதான் ஆட்டத்தில் தோல்விக்கு காரணமாகும். சன்ரைசர்ஸ் அடித்தால் 200 ரன்களுக்க மேல் ஸ்கோர் செய்வது, இல்லாவிட்டால் அனைத்து பேட்டர்களும் பிளாப் ஆவது. இதை ஃபார்முலாவாக வைத்துள்ளது.

டாப்ஆர்டர் பேட்டர் ஒருவர் கூட இன்று மாற்றியோசிக்கவில்லை. விக்கெட்டுகள் மளமளவென சரிந்து வரும் நிலையில், களத்தில் ஆங்கர் ரோல் எடுத்து விளையாட வேண்டும் என்று எந்த பேட்டரும் நினைக்கவில்லை. இதில் அனிகேத் வர்மாதான் விதிவிலக்கு.

சன்ரைசர்ஸ் பேட்டர்கள் அனைவரும் களத்துக்கு வந்து பெரிய ஷாட்களை ஆட வேண்டும், சிக்ஸர், பவுண்டரிகளாக குவிக்கவேண்டும் என்ற நோக்கில் வந்ததுதான் விரைவாக விக்கெட்டுகளை இழக்க காரணம். அனிகேத் வர்மா மட்டும் இல்லாவி்ட்டால் சன்ரைசர்ஸ் அணி மோசமான தோல்வியை சந்தித்திருக்கும்.

சன்ரைசர்ஸ் அணியில் இருக்கும் டாப்ஆர்டர் பேட்டர்கள் மெக்ருக், ஹெட், இஷான் கிஷன், நிதிஷ் ரெட்டி ஆகிய 4 பேருமே அதிரடிக்கு பெயரெடுத்தவர்கள். இவர்கள் குறைந்த பந்துகளில் அதிக ரன்களை சேர்த்துக்கொடுத்து புறப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அணியின் சூழலுக்கு ஏற்ப இவர்களால் ஆடமுடியாதது அணியின் பின்னைடைவுக்கு காரணம்.

அணியின் சூழலைப் பார்த்து எவ்வாறு ஆட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையுள்ள பேட்டர்களை சன்ரைசர்ஸ் ஏலத்தில்வாங்கவில்லை. அந்த அணி அதிரடிக்கு முக்கியத்துவம் கொடுத்து பேட்டர்களை வாங்கியதுதான் இதுபோன்ற சரிவுக்கு காரணமாகியது.

கடந்த போட்டியில் கேப்டன் கம்மின்ஸ் அளித்த பேட்டியில் " நாங்கள் ஆடும் ஆட்டம் சில நேரங்களி்ல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தரும், சிலநேரங்களில் பெரிய தோல்வியையும் சந்திக்க வேண்டியதிருக்கும். ஆனால் தயாராக இருக்கவேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

அனிகேத்துக்கு புகழாரம்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடல்ஸ், மிச்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், டூப்ளசிஸ் , அனிகேத் வர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

தோல்விக்குப்பின் சன்ரைசர்ஸ் கேப்டன் பாட்கம்மின்ஸ் கூறுகையில் " அனிகேத் மூலம்தான் ரன்கள் கிடைத்தது. விரைவாகவே முக்கிய விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். மோசமான ஷாட்கள் மட்டுமல்ல ரன்அவுட்டிலும் விக்கெட்டை இழந்தோம்.

இது நடக்கத்தான் செய்யும். இதுதான் எங்கள் எல்லை என்று நான் நினைக்கவில்லை. கடந்த 2 போட்டிகளிலும் அனைத்தும் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. ஒரு சில விஷயங்கள் வித்தியாசமாக அமைந்து முடிவை மாற்றியிருக்கலாம்.

அனிகேத் அதிகம் தெரியாத பேட்டர்தான், ஆனால், இந்த சீசன் அவருக்கு அருமையாக இருக்கப் போகிறது. இவரின் ஆட்டம் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தது. வீரர்கள் தங்களால் முடிந்த முயற்சியை அளித்துள்ளனர், அதிகமாக மாற்றத்தை அளிப்போம் என நினைக்கவேண்டாம்" எனத் தெரிவித்தார்.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c705j9vw2jlo

  • கருத்துக்கள உறவுகள்

CSK VS RR

கொஞ்சம் முன்னமே 3,4 இல் இறங்கியாவது அவுற் ஆகி தொலையண்டா..

dkdk.jpg

* * தோனி

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிஎஸ்கே மீண்டும் தோல்வி: பேட்டிங்கில் தோனி எப்போதும் தாமதமாக களமிறங்குவது ஏன்? பயிற்சியாளர் பிளமிங் விளக்கம்

CSK vs RR, தோனி, ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

சிஎஸ்கே அணி விளையாடும் போட்டியென்றாலே கடைசி ஓவர், கடைசிப்பந்துவரை ரசிகர்களை அமரவைப்பது, ரசிகர்களின் ரத்தக்கொதிப்பை எகிறவைப்பது, எளிய இலக்கை துரத்தக்கூட அதிக ஓவர்கள் எடுத்துக்கொள்வது போன்றவை இந்த சீசனிலும் தொடர்கிறது.

குவஹாட்டியில் நேற்று (மார்ச் 30) நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 போட்டியின் 11-வது ஆட்டமும் இதுபோன்றுதான் இருந்தது.

கடைசிஓவர், கடைசிப் பந்து வரை ரசிகர்களின் பொறுமையையும், ரத்திக்கொதிப்பையும் எகிறவைத்தனர்.

குவஹாட்டியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் சேர்த்தது. 183 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்து 6 ரன்னில் தோல்வி அடைந்தது.

பேட்டிங்கின் போது சிஎஸ்கே அணி இக்கட்டான நேரத்தில் இருக்கும் போது களமிறங்காமல், மிகவும் தாமதமாக தோனி களமிறங்குவது ஏன் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வரும் கேள்விகளுக்கு பயிற்சியாளர் பிளமிங் பதிலளித்துள்ளார்.

CSK vs RR, தோனி, ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ராணா 36 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்தார்.

ராணாவின் அதிரடி ஆட்டம்

ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்கார்ரான ஜெய்ஸ்வால் 3வது போட்டியாக ஏமாற்றி முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். நிதிஷ் ராணா, சஞ்சு சாம்ஸன் கூட்டணி ஆட்டத்தை கையில் எடுத்து ஸ்கோரை படுவேகமாக உயர்த்தினர்.

சாம்ஸன் நிதானமாக ஆட, நிதிஷ் ராணா சிஎஸ்கே பந்துவீச்சை சிக்ஸர், பவுண்டரி என தெறிக்கவிட்டார். ராணாவின் அதிரடியைக் கட்டுப்படுத்த பல பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் முடியவில்லை. அஸ்வின் வீசிய முதல் ஓவரிலேயே 2 சிக்ஸர்கள் பவுண்டரி பறந்தது.

வழக்காக 3வது வீரராக ரியான் பராக் களமிறங்குவார், ஆனால், ராணாவை களமிறக்கியதற்கு நல்ல பலன் கிடைத்தது. பவர்ப்ளேயில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் சேர்த்தது. சாம்ஸன் 20 ரன்னில் நூர் முகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 82 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்துவந்த கேப்டன் ரியான் பராக், ராணாவுடன் சேர்ந்தார். அதிரடியாக ஆடிய ராணா 21 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதுவரை ஐபிஎல் தொடர்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழக்காத ராணா, 36 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் முதல்முறையாக தோனியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். ராணா கணக்கில் 5 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் அடங்கும்.

சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம்

அதன்பின் ஆட்டத்தை சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் கையில் எடுத்தனர். ராணா இருக்கும் வரை ஸ்கோர் எப்படியும் 200 ரன்களைக் கடந்துவிடும் என்று கருதப்பட்டது.

ஆனால், துருவ் ஜூரெல் 3 ரன்னில் நூர் முகமது பந்துவீச்சிலும், ஹசரங்கா 4 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர்.

அதன்பின் கீழ்வரிசை பேட்டர்கள் ஹெட்மெயர்(19 ரன்கள்), ஆர்ச்சர்(0 ரன்), ரியான் பராக்(37 ரன்கள்) என வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர்.

182 ரன்களை மட்டுமே ராஜஸ்தான் அணியால் சேர்க்க முடிந்தது, ராஜஸ்தான் பேட்டிங் வரிசைக்கு கூடுதலாக இன்னும் 20 ரன்கள் சேர்த்திருக்கலாம். ஆனால், நடுவரிசை பேட்டர்கள் ஏமாற்றினர்.

CSK vs RR, தோனி, ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,நிதிஷ் ராணா சிஎஸ்கே பந்துவீச்சை சிக்ஸர், பவுண்டரி என தெறிக்கவிட்டார்.

வீணடிக்கப்படும் ஹெட்மெயர்

7-வது வீரராக ஹெட்மெயரை களமிறக்கி ராஜஸ்தான் அவரின் திறமையை குறைக்கிறது, ஹெட்மெயரை 4வது வீரராக நடுவரிசையில் களமிறக்கியிருந்தால் அவர் ஆங்கர் ரோல் எடுத்து சிறப்பாக பேட் செய்திருப்பார். ஆனால் அவரை சரியாக பயன்படுத்தாமல் வீணடிக்கிறது ராஜஸ்தான் அணி.

124 ரன்கள் வரை 2 விக்கெட்டுகளை இழந்திருந்த ராஜஸ்தான் அணி அடுத்த 52 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. சிஎஸ்கே தரப்பில் நூர் அகமது, பதிராணா, கலீல் அகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

படம் காண்பித்த ஆர்ச்சர்

183 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சிஎஸ்கே அணி களமிறங்கியது. ஆர்ச்சர் வீசிய மின்னல் வேக பவர்ப்ளே ஓவரில் தொடக்கத்திலேயே ரச்சின் ரவீந்திரா ரன் சேர்க்காமல் ஆட்டமிழந்தார்.

பவர்ப்ளேயில் சிஎஸ்கே அணியை ஆர்ச்சர் தண்ணி குடிக்கவைத்தார். ஆர்ச்சரின் ஒவ்வொரு பந்தும் 145 கி.மீ வேகத்தில் கத்தி போல களத்தில் இறங்கியது. வேகப்பந்துவீச்சில் ஹார்டு லென்த்தில் பந்துவீசி, டெஸ்ட் பந்துவீச்சை சிஎஸ்கே பேட்டர்களுக்கு ஆர்ச்சர் காண்பித்தார்.

உண்மையாகவே இதுதான் ஆர்ச்சரின் தனித்தன்மையான பந்துவீச்சு இதுதான். ஆர்ச்சரின் பந்துவீச்சை சிஎஸ்கே பேட்டர்களால் தொடக்கூட முடியவில்லை.

மறுபுறம் தேஷ்பாண்டே தனது பவுன்ஸரால் கெய்க்வாட்டின் முழங்கையில் காயத்தை ஏற்படுத்தினார். சிஎஸ்கே அணி பவர்ப்ளேயில் ஒட்டுமொத்தமாக கோட்டைவிட்டது. சந்தீப் சர்மா வீசிய 6-வது ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் அடித்ததால் 42 ரன்களை பவர்ப்ளேயில் சேர்த்தது. முதல்3 ஓவர்களில் சிஎஸ்கே அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 5 ரன்கள் மட்டுமே சேர்த்து விழிபிதுங்கி இருந்தது.

காமெடியாக மாறிய திரிபாதி

திரிபாதி பேட் செய்யும்போது தோள்பட்டையை குலுக்கி, குலுக்கி பேட் செய்யும் காட்சியையும், ஆர்ச்சரின் பந்துவீச்சில் பலமுறை "பீட்டன்" ஆனதையும் பார்த்த வர்ணனையாளர்கள் கிண்டல் செய்தனர், சமூக வலைத்தளங்களிலும் திரிபாதியின் தோள் குலுக்கல் ஸ்டைல் உடனடியாக மீம்ஸாக மாறியது. 2 போட்டிகளிலும் சொதப்பிய திரிபாதி 23 ரன்களில் ஹசரங்கா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

CSK vs RR, தோனி, ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

திருப்புமுனை விக்கெட்

அடுத்துவந்த ஷிவம் துபே, வந்தவேகத்தில் சிக்ஸர்களை விளாசி ரன்ரேட்டை உயர்த்தினார். ஆனால் துபே நீண்டநேரம் நிலைக்கவில்லை, ஹசரங்கா பந்துவீச்சில் அடித்த ஷாட்டை ரியான் பராக் அற்புதமாக கேட்ச் பிடிக்கவே 18 ரன்னில் ஆட்டமிழந்தார். இதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது, சிஎஸ்கேயின் நம்பிக்கை பேட்டரை வெளியேற்றியது ராஜஸ்தானுக்கு பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது.

அடுத்துவந்த தமிழக வீரர் விஜய் சங்கர் ஒரு சிக்ஸர் உட்பட 9 ரன்களுடன் ஹசரங்காவின் கூக்ளி பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். நிதானமாக ஆடிய கெய்க்வாட் 37 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஜடேஜா, கெய்க்வாட் கூட்டணி மெல்ல அணியை வெற்றி நோக்கி நகர்த்தினர்.

ஆனால், ஹசரங்கா பந்துவீச்சில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து கெய்க்வாட் 63 ரன்னில் ஆட்டமிழந்தார். இவர் ஆட்டமிழந்தாலும் தோனி இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு ரசிகர்கள் இருந்தனர். கடந்த போட்டியில் 9-வது வீரராக தோனி களமிறங்கியது கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில் இந்த போட்டியில் அவர் 7-வது வீரராக் களமிறங்கினார்.

பரபரப்பை ஏற்படுத்திய தோனி

கெய்க்வாட் ஆட்டமிழந்த போது சிஎஸ்கே வெற்றிக்கு 25 பந்துகளில் 54 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், தோனி, ஜடேஜா கூட்டணி அதை 12 பந்துகளில் 39 ரன்களாகக் குறைத்தனர்.

18-வது ஓவரை வீசிய தீக்ஷனா பவுண்டரி இல்லாமல் பந்துவீசி சிஎஸ்கேவுக்கு சிக்கலை ஏற்படுத்தினார் ஆனால், தேஷ்பாண்டே வீசிய 19வது ஓவரில் தோனி 2 சிக்ஸர் பவுண்டரி என 19 ரன்கள் சேர்த்து ஆட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தினார்.

கடைசி ஓவரில் சிஎஸ்கே வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா கடந்த சீசனில் சிஎஸ்கே அணியை டிபெண்ட் செய்ததால் அவரே இந்தமுறையும் பந்துவீசினார். அது மட்டுமல்லாமல் வேகப்பந்துவீச்சை தோனி எளிதாக ஆடிவிடுவார் என்பதால் சந்தீப் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.

சந்தீப் வீசிய 2வது பந்தில் தோனி அடித்த ஷாட்டை ஹெட்மெயர் கேட்ச் பிடிக்கவே 16 ரன்கள் எடுத்து அவர் வெளியேறினார். அடுத்துவந்த ஓவர்டன் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்கவே, அதன்பின் அடிக்க முடியாமல் சிஎஸ்கே 6 ரன்னில் தோல்வி அடைந்தது. ஜடேஜா 32 ரன்களிலும், ஜேமி ஓவர்டன் 11 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

CSK vs RR, தோனி, ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

முதல் வெற்றிக்காக காத்திருந்தோம்

வெற்றிக்குப்பின் ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் கூறுகையில் " இந்த வெற்றிக்காக நீண்டநேரம் காத்திருந்தோம். 20 ரன்கள் குறைவாகவே சேர்த்தோம். நடுப்பகுதியில் விரைவாக விக்கெட்டை இழந்ததுதான் இதற்கு காரணம். ஆனால் பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டோம்,. கடந்த 2 ஆட்டங்களும் எங்களுக்கு கடுமையானதாக இருந்தது, ஆனால்,அந்தத் தோல்விகளை மறந்துவிட்டு, புத்துணர்ச்சியுடன் இந்த ஆட்டத்தை எதிர்கொண்டோம், அனைவரின் கூட்டுழைப்பால் வெற்றி கிடைத்தது. சூழலுக்கு ஏற்ப பந்துவீச்சை மாற்றினோம், ஆர்ச்சர் சிறப்பாக பந்துவீசினார், பீல்டிங்கும் எங்களிடம் இன்று சிறப்பாக இருந்தது, எங்களின் பீல்டிங் பயிற்சியாலர் திஷாந்துடன் நீண்ட பயிற்சி எடுத்ததற்கு பலன் கிடைத்தது" எனத் தெரிவித்தார்.

ஐபிஎல் 2025

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஒவ்வொரு விக்கெட் வீழ்த்தும்போது, "புஷ்பா" படபாணியில் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி ஹசரங்கா ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

இதுதான் உண்மையான ஆர்ச்சர்

இந்த சீசன் தொடங்கியதிலிருந்து அதிகமாக ரன் கொடுக்கப்பட்டு பந்துவீச்சில் வறுத்தெடுக்கப்பட்டவர் ஜோப்ரா ஆர்ச்சர். ஒருகாலத்தில் தனது மின்னல்வேகப்பந்துவீச்சால் உலக அணிகள அலறவிட்ட ஆர்ச்சரை இந்த சீசன் தொடக்கத்தில் அவரை கண்ணீர்விட வைத்தனர்.

ஆனால், நேற்றைய ஆட்டத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் தன்னுடைய பந்துவீச்சு தரம் என்ன என்பதையும், கிளாசிக் ஆர்ச்சர் யார் என்பதையும் வெளிப்படுத்தினார். ஆர்ச்சர் வீசிய 3 ஓவர்களும் அவரின் பந்துவீச்சு வேகம் சராசரியாக மணிக்கு 145கி.மீக்கு குறையவில்லை.

ஆர்ச்சரின் டெஸ்ட் பந்துவீச்சு துல்லியம், ஹார்டு லென்த்தை சமாளிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், திரிபாதி இருவருமே திணறினர். ஆர்ச்சர் பந்துவீசியது மட்டும்தான் தெரிந்தது, ஆனால், பேட்டில் படாமல் விக்கெட் கீப்பரிடம் சென்றுவிடும், சிஎஸ்கே பேட்டர்கள் இருவரும் வேடிக்கை பார்க்க வேண்டும் அல்லது டிபெண்ட் செய்ய வேண்டிய நிலைதான் இருந்தது.

தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா தரமான வேகப்பந்துவீச்சுக்கு இணைகொடுக்காமல் ஆட்டமிழந்தார். பவர்ப்ளேயில் ஆர்ச்சரின் பந்துவீச்சு சிஎஸ்கே பேட்டர்களுக்கு வேடிக்கை காட்டியது. ஆனால், ஆர்ச்சருக்கு நேற்று முழுமையாக ஓவர்களும் கொடுக்காமல் 3 ஓவர்கள் மட்டுமே வழங்கப்பட்டது, 3 ஓவர்கள் வீசிய ஆர்ச்சர் ஒரு மெய்டன் 13 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.

சிஎஸ்கே தோல்விக்கான காரணங்கள்

  • சிஎஸ்கே அணியின் நேற்றைய தோல்விக்கு முக்கியமான காரணம் அணியின் தேர்வுதான். குறிப்பாக திரிபாதிக்குப் பதிலாக டேவான் கான்வேயை தொடக்க வீரராக களமிறக்கி இருக்கலாம்.

  • வேகப்பந்துவீச்சில் எதிரணியை மிரட்டும் அளவுக்கு நல்ல தரமான வேகப்பந்துவீச்சாளர்களை சேர்க்க வேண்டும். அன்சுல் கம்போஜ் உள்நாட்டில் சிறப்பாக பந்துவீசியவர் அவருக்கு இன்னும் வாய்ப்பளிக்கவில்லை.

  • ராஜஸ்தான் அணியில் நேற்று இருந்த பீல்டிங் தரம் சிஎஸ்கேயிடம் இல்லை. இதைத்தான் கேப்டன் ருதுராஜும் பேட்டியில் குறிப்பிட்டார்.

  • நடுப் பகுதியில் ஷிவம் துபே என்னும் ஒற்றை பேட்டரை மட்டுமே பெரிய ஷாட்களுக்கு சிஎஸ்கே நம்பி இருக்கிறது.

  • சன்ரைசர்ஸ் அணியில் அனிகேத், அன்சாரி என இரு முத்துகளை கண்டெடுத்துள்ளது. அதுபோல் சிஎஸ்க அணியும் இளம் வீரர்களை கண்டுபிடிக்க வாய்ப்பளிக்கலாம்.

  • சிஎஸ்கே அணி தொடர்ந்து அஸ்வின், ஜடேஜா, ஷிவம் துபே, பதிராணா, என்று ஒரு மாதிரியான வீரர்களையே களமிறக்குவது எதிரணியின் வெற்றியை மிகவும் எளிதாக்கிவிடும். இந்த பேட்டர்களுக்கு எவ்வாறு பந்துவீசி விக்கெட் வீழ்த்தலாம் என்பதும், இவர்களின் பந்துவீச்சை எவ்வாறு விளையாடலாம் என்றும ஹோம்ஓர் செய்வது எதிரணிக்கு எளிது. எதிரணி ஊகிக்க முடியாத வகையில் பேட்டிங் வரிசையையும், பந்துவீச்சாளர்களையும் பயன்படுத்த வேண்டும்.

CSK vs RR, தோனி, ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2018 முதல் 180 ரன்னுக்கு மேல் சிஎஸ்கே சேஸ் செய்ததில்லை

கடந்த 2018 ஆம் ஆண்டுக்குப்பின் சிஎஸ்கே அணி சேஸிங்கில் 180 ரன்களுக்கு மேல் சேஸ் செய்ததில்லை என்பது நேற்று உறுதியானது. 180 ரன்களுக்கு மேல் உள்ள இலக்குகளை சேஸிங் செய்த கடைசி 9 போட்டிகளிலும் சிஎஸ்கே அணி தோற்றுள்ளது.

இந்த சீசனில் சிஎஸ்கே அணி 3 போட்டிகளில் சந்தித்கும் 2வது தோல்வி, புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்துக்குச் சரிந்துள்ளது. ராஜஸ்தான் அணி இந்த சீசனில் பெறும் முதல் வெற்றியாகும், இருப்பினும் 8வது இடத்தில் இருக்கிறது.

CSK vs RR, தோனி, ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தோனி தாமதமாக களமிறங்குவது ஏன்?

இந்த ஐபிஎல் சீசனில் தொடக்கம் முதலே, பேட்டிங்கில் தோனி மிகவும் தாமதமாக களமிறங்குவது விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. ஆர்சிபிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 13-வது ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்த போது, ரவிச்சந்திரன் அஸ்வினை களமிறக்கிவிட்டு தோனி 9வது வீரராக களமிறங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. நேற்றைய ஆட்டத்திலும் கூட, 12-வது ஓவரில் விஜய்சங்கர் 4-வது விக்கெட்டுக்கு ஆட்டமிழந்த போது தோனி களமிறங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ரவீந்திர ஜடேஜா களமிறங்கி கேப்டன் ருதுராஜூடன் ஜோடி சேர்ந்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த ஃபினிஷர், மேட்ச் வின்னர் என்று பெயரெடுத்த தோனி, சிஎஸ்கே அணிக்குத் தேவையான நேரத்தில் களமிறங்காமல் கடைசி நேரத்தில் களம் காண்பது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. இதற்கு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய தோல்விக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் விடை கிடைத்தது.

CSK vs RR, தோனி, ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் பிளமிங், தோனி தாமதமாக களமிறங்குவது குறித்து விளக்கம் அளித்தார். அவர் பேசுகையில், "அவரது உடலும் முழங்கால்களும் முன்பு போல் இல்லை. அவரால் நன்றாக நகர முடிகிறது. ஆனால், அவரால் தொடர்ந்து 10 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்ய முடியாது. எனவே அவர் நமக்கு என்ன கொடுக்க முடியும் என்பதை அன்றைய தினம் மதிப்பிடுவார். ஆட்டம் சமநிலையில் இருந்தால், அவர் சற்று முன்னதாகவே செல்வார். மற்ற சமயங்களில் அவர் மற்ற வீரர்களுக்கு ஆதரவாக இருப்பார்." என்றார்.

அதற்காக, 43 வயதான தோனியை அணியில் தொடர்ந்து தக்க வைப்பதற்கான வழிகளை சிஎஸ்கே நிர்வாகம் கண்டுபிடித்து வருகிறது என்று அர்த்தமல்ல என்றார் ஃப்ளெமிங். "கடந்த ஆண்டும் நான் சொன்னேன், அவர் எங்களுக்கு மிகவும் மதிப்பு மிக்க ஒரு வீரர். தலைமைத்துவம் மற்றும் விக்கெட் கீப்பிங் திறன் கொண்ட அவர் சிறப்பானவர். 10 ஓவர்கள் களத்தில் பேட்டிங் செய்வது என்பதை அவர் ஒருபோதும் செய்ததில்லை. சுமார் 13-14 ஓவர்களில் ஆட்டத்தின் நிலைமையைப் பொருத்து அவர் களமிறங்க விரும்புகிறார்" என்று பிளமிங் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cwyn3kxz3nzo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொல்கத்தா அணியை துவம்சம் செய்த அஸ்வனி குமாரை மும்பை கண்டுபிடித்ததன் பின்னணி

KKR vs MI: மும்பையின் அறிமுக வீரர் அஸ்வனி குமார் கொல்கத்தாவை துவம்சம் செய்தது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ரஹானேவை மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர் அஸ்வனி குமார் வீழ்த்தினார்.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 1 ஏப்ரல் 2025, 02:10 GMT

    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

மும்பை வான்ஹடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 12வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்.

முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 16.2 ஓவர்களில் 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 117 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 43 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியைப் பெற்றது. கொல்கத்தாவுக்கு எதிராக பிரம்மாண்ட வெற்றி என்பதால், மைனஸ் நிகர ரன்ரேட்டில் இருந்த மும்பை இந்தியன்ஸ் 2 புள்ளிகளுடன் 6வது இடத்துக்கு முன்னேறியது.

வான்ஹடே மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக 12 போட்டிகளில் விளையாடி, அதில் 10வது வெற்றியை மும்பை அணி பதிவு செய்துள்ளது. எந்தவொரு அணிக்கு எதிராகவும் ஒரே மைதானத்தில் 10 வெற்றியை எந்த அணியும் ஐபிஎல் தொடரில் பதிவு செய்யவில்லை.

கொல்கத்தா அணி 3 போட்டிகளில் ஒரு வெற்றி பெற்றாலும் 2 தோல்விகள் மோசமானதாக அமைந்ததால் நிகர ரன்ரேட்டில் மிகவும் பின்தங்கி கடைசி இடத்தில் இருக்கிறது. ஐபிஎல் சீசனில் பங்கேற்கும் 10 அணிகளும் குறைந்தபட்சம் ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன. ஆர்சிபி, டெல்லி அணி மட்டுமே 2 வெற்றிகளுடன் உள்ளன. இனிமேல்தான் ஒவ்வோர் ஆட்டத்திலும் சூடு பிடிக்கும்.

அறிமுக ஆட்டநாயகன்

மும்பை அணியின் வெற்றிக்கு மூலகாரணமாக இருந்தது அறிமுக வேகப்பந்துவீச்சாளர் அஸ்வனி குமார்தான். ஐபிஎல் அறிமுகத்திலேயே 3 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஐபிஎல் தொடரில் அறிமுக ஆட்டத்தில் அமித் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுதான் அதிகபட்சமாக இருந்தது. ஆனால் அஸ்வனி குமார் அவரின் சாதனையை முறியடித்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

பேட்டிங்கில் குறைவான ஸ்கோர் என்பதால், கடந்த 2 போட்டிகளிலும் ஃபார்மின்றி தவித்த தென் ஆப்பிரிக்க பேட்டர் ரெக்கில்டன் இந்தப் போட்டியில் வெளுத்து வாங்கி, அரைசதம் அடித்து 62 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்கை தனக்குரிய ஸ்டைலில் 9 பந்துகளில் 27 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

'மதியம் சாப்பிடாமல் இரவு களமிறங்கினேன்'

KKR vs MI: மும்பையின் அறிமுக வீரர் அஸ்வனி குமார் கொல்கத்தாவை துவம்சம் செய்தது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அறிமுக வேகப்பந்துவீச்சாளர் அஸ்வனி குமார் மும்பை அணியின் வெற்றிக்கு மூலகாரணமாக இருந்தார்.

ஆட்டநாயகன் விருது வென்ற அஸ்வனி குமார் பேசுகையில், "எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததும், இந்த விருது கிடைத்ததும் மிகப்பெரிய விஷயம். இதை ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

மொஹாலி மாவட்டம், ஹான்ஜேரி எனும் சிறிய கிராமத்தில் இருந்து வந்துள்ளேன். என்னுடைய கடின உழைப்பு, கடவுளின் அருளால் இங்கு வந்தேன். என்னால் சிறப்பாகப் பந்துவீச முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் பதற்றமாகவும் இருந்தது" என்றார்.

என்ன நடக்குமோ என்ற பதற்றத்தோடு இருந்ததாகவும், இதனால் மதியம் சாப்பிடக்கூட இல்லை என்றும் கூறிய அவர், "ஆனால் அனைவரும் பெருமைப்படும் வகையில் வெற்றி கிடைக்க உழைத்துள்ளதாகவும்" தெரிவித்தார்.

கொல்கத்தாவின் மோசமான பேட்டிங்

கொல்கத்தா அணியின் பேட்டிங் இந்தப் போட்டியில் மோசமாக இருந்தது. ரமன்தீப் சிங் தவிர அணியில் உள்ள மற்ற எந்த வீரரும் 20 ரன்களைக்கூட எட்டவில்லை. 20 ஓவர்களைக்கூட ஆட முடியாத நிலையில் 16 ஓவர்களிலேயே ஆட்டத்தை முடித்துக்கொண்டனர்.

கொல்கத்தா அணி, ஏலத்தில் நம்பிக்கை வைத்து ரஸல், சுனில் நேரேன், வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங் எனப் பலரையும் தக்கவைத்தது. ஆனால், ஒருவர்கூட சிறப்பாக பேட் செய்யவில்லை. அதிலும் ஆண்ட்ரே ரஸல் 3 போட்டிகளாகியும் ஒரு போட்டியில்கூட இன்னும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.

ரூ.23 கோடிக்கு வாங்கப்பட்ட வெங்கடேஷ் அய்யரும் 3 போட்டிகளாக மோசமாக ஆடி வருகிறார். கேப்டன் ரஹானே முதல் போட்டியோடு சரி, அதன் பின் நிலையற்ற ரீதியில் பேட் செய்து வருகிறார். ரிங்கு சிங் தொடர்ந்து இதேபோன்று ஆடினால், விரைவில் இந்தியாவின் டி20 அணியில் சேர்க்கப்படாமல் போகலாம்.

முதல் ஓவரில் 30வது முறையாக விக்கெட் வீழ்த்திய போல்ட்

டிரன்ட் போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே யார்கரில் சுனில் நரேன் டக்-அவுட்டில் வெளியேறினார். ஐபிஎல் தொடரில் 30வது முறையாக போல்ட் முதல் ஓவரில் விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

போல்ட் பந்துவீச்சை ஐபிஎல் தொடரில் 5 முறை சந்தித்த நரேன், 5 முறையும் அவரிடமே ஆட்டமிழந்துள்ளார். போல்டின் 19 பந்துகளைச் சந்தித்த நரேன் 23 ரன்களை சேர்த்துள்ளார்.

தீபக் ஹசர் வீசிய 2வது ஓவர் முதல் பந்தில் டீகாக் ஒரு ரன்னில் அஸ்வனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 3வது ஓவரை அறிமுக வீரர் அஸ்வனி வீசி, முதல் பந்திலேயே ரஹானே(11) விக்கெட்டை சாய்த்தார்.

ரூ.23 கோடி மதிப்பு வீரர்

KKR vs MI: மும்பையின் அறிமுக வீரர் அஸ்வனி குமார் கொல்கத்தாவை துவம்சம் செய்தது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நேரேன்

அடுத்து வந்த வெங்கடேஷ் அய்யர் 3 ரன்னில் தீபக் சஹர் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ரெக்கல்டனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பவர்ப்ளே ஓவர்கள் முடியும்போது கொல்கத்தா அணி 41 ரன்களுக்கு டாப்-ஆர்டர் விக்கெட்டுகள் உள்பட 4 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலைக்குச் சென்றது. ஹர்திக் பாண்டியா வீசிய ஓவரில் ரகுவன்ஸி 26 ரன்னில் நமன்திரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பல சீசன்களாக ஃபார்மின்றி, எந்த அணியாலும் பெரிதாக கவனிக்கப்படாமல் இருந்த மணிஷ் பாண்டேவை கொல்கத்தா ஏலத்தில் எடுத்து பெரிதாக எதிர்பார்த்தது. ஆனால் மணிஷ் பாண்டேவும் ஏமாற்றினார்.

ரிங்கு சிங் 17 ரன்னிலும், மணிஷ் பாண்டே 19 ரன்னிலும் அஸ்வனி குமார் பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஆண்ட்ரே ரஸல் 5 ரன்னில் அஸ்வனி பந்துவீச்சில் க்ளீன் போல்டானார். அதன்பின் கடைசி வரிசை வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

கொல்கத்தா அணியில் ஒரு பார்ட்னர்ஷிப்கூட 50 ரன்களை எட்டவில்லை. 74 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த கொல்கத்தா அணி, அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்தது. 20 ஓவர்களைக்கூட முழுமையாக ஆடாத கொல்கத்தா அணி 16.2 ஓவர்களில் 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஃபார்முக்கு வந்த ரெக்கில்டன்

KKR vs MI: மும்பையின் அறிமுக வீரர் அஸ்வனி குமார் கொல்கத்தாவை துவம்சம் செய்தது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெங்கடேஷ் அய்யர் 3 ரன்னில் ஆட்டமிழந்தார்.

மும்பை அணி, 117 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கியது. ரெக்கெல்டன் தான் சந்தித்த முதல் 4 பந்துகளும் பீட்டன் ஆகிய நிலையில் எட்ஜ் எடுத்து பவுண்டரியும், சிக்ஸரும் சென்றபின் நம்பிக்கையுடன் ஆடினார். கொல்கத்தா பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை வெளுத்த ரெக்கில்டன் விரைவாக ரன்களை சேர்த்தார்.

ரோஹித் சர்மா ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்த நிலையில் 13 ரன்னில் ரஸல் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 3வது போட்டியிலும் ரோஹித் சர்மா பேட்டிங் எடுபடவில்லை. முதல் விக்கெட்டுக்கு 46 ரன்கள் சேர்த்தனர். பவர்ப்ளேவில் மும்பை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் சேர்த்தது.

அடுத்து வந்த வில் ஜேக்ஸ், ரெக்கில்டனுடன் சேர்ந்தார். வில் ஜேக்ஸ் பெரிய ஷாட்டுக்கு முயன்றும் பெரிதாகப் பயனிக்கவில்லை. ஆனால் ரெக்கில்டன் சிக்ஸர், பவுண்டரி என துவம்சம் செய்து 33 பந்துகளில் அரைசதம் எட்டினார். ஷாட்கள் பெரிதாக அமையாமல் விரக்தியுடன் ஆடிய வில் ஜேக்ஸ் 18 ரன்னில் ரஸலிடம் விக்கெட்டை இழந்தார்.

KKR vs MI: மும்பையின் அறிமுக வீரர் அஸ்வனி குமார் கொல்கத்தாவை துவம்சம் செய்தது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மும்பை இந்தியன்ஸ் அணியின் ரெக்கெல்டன்

ஸ்கை புதிய மைல்கல்

அடுத்து களமிறங்கிய 360 டிகிரி பேட்டர் சூர்யகுமார் யாதவ், தொடக்கம் முதலே சிக்ஸர், பவுண்டரி என ரசிகர்களுக்கு விருந்தளித்தார். 9 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரி என 27 ரன்களுடன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ரெக்கில்டன் 62 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சூர்யகுமார் யாதவ் டி20 போட்டியில் 8,000 ரன்களை கடந்துள்ளார். இந்த எட்டாயிரம் ரன்களை கடக்க 5,256 பந்துகளை ஸ்கை சந்தித்து, 2வது அதிகவேக 8 ஆயிரம் ரன்களை குவித்த பேட்டர் என்ற பெருமையைப் பெற்றார்.

ஆண்ட்ரே ரஸல் 4,749 பந்துகளில் அதை எட்டி வேகமாக எட்டாயிரம் ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

KKR vs MI: மும்பையின் அறிமுக வீரர் அஸ்வனி குமார் கொல்கத்தாவை துவம்சம் செய்தது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ்

யார் இந்த அஸ்வனி குமார்?

பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டம் ஹான்ஜேரி எனும் சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் அஸ்வனி குமார். இடதுகை வேகப்பந்துவீச்சாளரான அஸ்வனி குமாரின் குடும்பம் ஏழ்மையானது. ஆகையால், கிரிக்கெட் பயிற்சிக்குப் பணம் செலுத்தக்கூட முடியாத நிலையில் இருந்தார். பஞ்சாபின் பல்வேறு மாவட்டங்களிலும் சென்று கிரிக்கெட் ஆடி 18 வயதில் அஸ்வனி குமார் முதல் தரப் போட்டியில் விளையாடத் தொடங்கினார்.

அதன் பிறகு பஞ்சாப் அணிக்காக ஒரு ஆட்டத்தில் ரஞ்சிக் கோப்பையிலும், 50 ஓவர் விஜய் ஹசாரே கோப்பைத் தொடரின் ஒரு ஆட்டத்திலும் அஸ்வனி ஆடினார். பஞ்சாப் அணியில் 2022-23 சீசனில் ஏராளமான திறமையான வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்ததால் அஸ்வனிக்கு இடம் கிடைக்கவில்லை. அதுமட்டுமின்றி பந்துவீச்சாளர்கள் உடல்ரீதியாகவும் வலுவாக இருந்தநிலையில் அஸ்வனி குமார் சாதாரன உடல்வாகுடன் இருந்ததால் யாரும் இவரைப் பெரிதாக நினைக்கவில்லை.

கடந்த 2023 சண்டிகரில் பேட் கிரிக்கெட் அகாடெமியில் அஸ்வனி குமார் சேர்ந்த பிறகு அவரின் திறமை மெருகேறியது. 2024-25 சயத் முஸ்டாக் அலி கோப்பைக்காக, அர்ஷ்தீப் சிங்குடன் இணைந்து பந்துவீசும் வாய்ப்பு அஸ்வனி குமாருக்குக் கிடைத்தது.

ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் முன்பே பல போட்டிகளில் இவரின் பந்துவீச்சைப் பார்த்த சிஎஸ்கே நிர்வாகம் அஸ்வனி குமாரிடம் ஏதோ திறமை இருப்பதைக் கண்டறிந்தது. 2024 ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ், சிஎஸ்கே அணியினர் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக அஸ்வனி குமாரை சேர்த்தபோது இவரின் திறமையைக் கண்டு வியந்தனர்.

அதிலும் அஸ்வனி குமாருக்கு தனிப்பட்ட முறையில் கால் செய்த பஞ்சாப் நிர்வாகம் தங்களுக்கு வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக வர வேண்டும், சிஎஸ்கே முகாமுக்கு செல்லக்கூடாது என்று தெரிவித்ததாக கிரிக்இன்போ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

KKR vs MI: மும்பையின் அறிமுக வீரர் அஸ்வனி குமார் கொல்கத்தாவை துவம்சம் செய்தது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அஸ்வனி குமார் ஒரு விக்கெட் எடுத்த பிறகு அவரை சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா கொண்டாடுகின்றனர்.

சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் பயிற்சிக்காக, 2025 ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாகவே அஸ்வனி குமார் சென்றார். அப்போது அஸ்வனி குமாரிடம் ஏதோ திறமை இருப்தைக் கண்டறிந்த மும்பை அணி நிர்வாகம், அவரைக் கவனித்தது. பந்துவீச்சில் அதிகமான வேகம் இல்லை, சராசரியாக 135 கி.மீ வேகம்தான். ஆனால் பேட்டர்கள் விளையாட முடியாத அளவுக்குச் சரியான லென்த், ஸ்விங் செய்தல், பல்வேறு வேரியேஷன்களுடன் வீசுவதைப் பார்த்து ஏலத்தில் ரூ.30 லட்சத்துக்கு எடுத்தனர்.

ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்ட பிறகு, சண்டிகரில் தனது பயிற்சியாளர் வீரேந்திர சிங்கிடம் சென்று தனிப்பட்ட முறையில் உடல் தகுதி மேம்பட அஸ்வனி குமார் பயிற்சி எடுத்து, பந்துவீச்சு பயிற்சி எடுத்து தவறுகளைத் திருத்தினார். மும்பை அணிக்குள் அஸ்வனி வந்தபின் அவரின் பந்துவீச்சு திறமை இன்னும் சிறப்பாக மாறியது.

பஞ்சாப் அணிக்காக அஸ்வனி குமார் ஆடியபோது அவரின் பயிற்சியாளராக இருந்தது இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர்தான். கிரிக்இன்போ தளத்துக்கு ஜாபர் அளித்த பேட்டியில் "அஸ்வனி குமார் கடின உழைப்பாளி, எப்போது பார்த்தாலும் வலைப் பயிற்சியில்தான் இருப்பார், அவரை மேம்படுத்திக் கொள்வதில் ஆர்வமாக இருந்தார். அவரால் 140 கி.மீ வேகத்தில் பந்துவீச முடியும், யார்கர், பவுன்சர், ஸ்லோவர் பந்துகளைச் சிறப்பாக வீச முடியும். சரியான இடத்துக்கு அஸ்வனி சென்றது மகிழ்ச்சி" எனத் தெரிவித்துள்ளார்.

மும்பை அணி நிர்வாகம் கொல்கத்தா அணிக்காக களமிறங்கப் போகிறீர்கள் என்று அஸ்வனி குமாரிடம் கூறியதில் இருந்து பதற்றத்துடன் இருந்துள்ளார். இதனால் நேற்றைய மதிய உணவைக்கூட சாப்பிடாமல், வாழைப்பழம் மட்டுமே சாப்பிட்டு இரவு ஆட்டத்தில் அஸ்வனி விளையாடியுள்ளார்.

கேப்டன் ஹர்திக் பாண்டியா, அஸ்வனியிடம் பந்தை கொடுத்துவிட்டு "எஞ்சாய் யுவர்செல்ஃப்" என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு உற்சாகமடைந்த அஸ்வனி குமார் முதல் ஓவர் முதல் பந்திலேயே ரஹானே விக்கெட்டை சாய்த்தார். ஆண்ட்ரே ரஸுலுக்கு 140 கி.மீ வேகத்தில் பந்துவீசிய அஸ்வனி அவரை க்ளீன் போல்டாக்கினார்.

அஸ்வனி குமாரின் பந்துவீச்சில் அதிவேகமும் இல்லை, குறைந்த வேகமும் இல்லை, சராசரியாக 130 கி.மீ வேகத்தில்தான் வீசுகிறார். பந்துவீச்சில் வேரியேஷன் செய்யும்போது மட்டும் 140 கி.மீவேகத்துக்கு பந்தை அஸ்வனி வீசுகிறார். பஞ்சாபில் கடந்த ஆண்டு நடந்த ஷெர் இ பஞ்சாப் டி20 தொடரில் டெத் ஓவர்களை அஸ்வனி சிறப்பாக வீசியுள்ளார். அதிமான நெருக்கடி நேரத்தில்கூட, அஸ்வனி நிதானமாக, லென்த்தை கட்டுக்குள் வைத்தே பந்துவீசினார்.

இந்த சீசனில் மும்பை அணி சுழற்பந்தவீச்சாளர் விக்னேஷ் புத்தூர், வேகப்பந்துவீச்சாளர் ராஜூ, அஸ்வனி குமார் ஆகியோரைக் கண்டறிந்து திறமையைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c98g197d1l4o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாப் கிங்ஸ் வெற்றிக்கு உதவிய பிரப்சிம்ரன், வதேராவின் அதிரடியில் தடுமாறிய லக்னௌ

பிரப்சிம்ரன் பவர்! பஞ்சாப் கிங்ஸ் வெற்றி: லக்னெள ஓனர்களை டென்ஷனாக்கும் ரிஷப் பந்த்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோற்கடித்தது.

முதலில் பேட் செய்த லக்னெள அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது. 172 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்கோடு களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 22 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

பஞ்சாப் அணி 2 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. லக்னெள அணி 3 போட்டிகளைச் சந்தித்து இரண்டில் தோல்வியடைந்துள்ளது. இரண்டு புள்ளிகளுடன் பட்டியலில் 6வது இடத்தில் இருக்கிறது.

ஆட்டநாயகன் பிரப்சிம்ரன்

பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றி, பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் பவர்ப்ளேவிலேயே முடிவானது. பந்துவீச்சு பவர்ப்ளேவில் லக்னெளவின் டாப் ஆர்டர்கள் உள்பட 3 விக்கெட்டுகளை எடுத்தது, பேட்டிங்கில் பிரப்சிம்ரன் சிங் பவர்ப்ளேவில் வெளுத்து வாங்கி 23 பந்துகளில் அரைசதம் அடித்தது ஆகியவை வெற்றிக்குக் காரணமாகின.

பஞ்சாப் அணியின் பதற்றத்தைக் குறைத்து, 34 பந்துகளில் 69 ரன்கள் (3 சிக்சர், 9 பவுண்டரி) சேர்த்த பிரப்சிம்ரன் சிங் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். லக்னெள அணியின் அப்துல் சமது, ஆயுஷ் பதோனி கடைசி நேரத்தில் ஓரளவு நிலைத்து ஆடாமல் இருந்திருந்தால், லக்னெள அணி 150 ரன்களுக்குள் சுருண்டிருக்கும்.

லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ஐ.பி.எல். போட்டிகள், ஐ.பி.எல். 2025,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,34 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்த பிரப்சிம்ரன் சிங் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

லக்னெள அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்கரம் (28), மார்ஷ் (0), ரிஷப் பந்த் (2), மில்லர் (19) எனப் பலரும் சொற்ப ரன்களில் வெளியேறி ரசிகர்களை ஏமாற்றினர். அதிலும் கேப்டன் ரிஷப் பந்த் 3 போட்டிகளிலும் சேர்த்து 17 ரன்கள் மட்டுமே சேர்த்து அணியின் உரிமையாளர்களை அதிருப்தியில் வைத்துள்ளார்.

பஞ்சாப் அணியின் வெற்றிக்கு பிரப்சிம்ரன் சிங் தவிர கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 30 பந்துகளில் 52 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து கேப்டனுக்குரிய பொறுப்புடன் செயல்பட்டார்.

இம்பாக்ட் ப்ளேயராக களமிறங்கிய நேகல் வதேரே அதிரடியாக ஆடி 25 பந்துகளில் 43 ரன்கள்(4 சிக்ஸர்கள், 3பவுண்டரிகள்) சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ஐ.பி.எல். போட்டிகள், ஐ.பி.எல். 2025

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெற்றியின் மந்திரம்

பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் "இது போன்ற தொடக்கம்தான் தேவைப்பட்டது. ஒவ்வொரு வீரரும் தங்கள் பங்கை உணர்ந்து விளையாடினர். தங்களால் முடிந்த அளவைவிட சிறப்பாகப் பங்களித்தனர்.

திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தினார்கள். என்னைப் பொருத்தவரை இதுதான் சரியான வீரர்கள் தேர்வு. கலவை என்று இல்லை. சரியான நேரத்தில் சரியான வீரர்கள் விளையாடுவார்கள்.

ஒவ்வோர் அணியும் வெற்றி பெறுவதற்குத் திறமையும், சக்தியும் இருக்கிறது. வெற்றி தேவை என்ற மனநிலையோடு போட்டியை அணுக வேண்டும். இதைத்தான் எப்போதுமே வீரர்களிடம் கூறுவேன். என்னால் முடிந்த பங்களிப்பை அளிக்க முயற்சி செய்வேன். அடுத்த போட்டி குறித்து இப்போதே சிந்தனை வந்துவிட்டது" எனத் தெரிவித்தார்.

தடுமாறிய லக்னெள அணி

லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ஐ.பி.எல். போட்டிகள், ஐ.பி.எல். 2025,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஒவ்வொரு வீரரும் தங்கள் பங்கை உணர்ந்து விளையாடினர் என கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பாராட்டு

பவர்ப்ளே ஓவர்களிலேயே லக்னெள அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அர்ஷ்தீப் வீசிய முதல் ஓவரில் மார்ஷ் பேட்டில் எட்ஜ் எடுத்து யான்செனிடம் கேட்சானது. கடந்த இரு போட்டிகளிலும் அரைசதம் அடித்த மார்ஷ், இந்த முறை ரன் சேர்க்காமல் ஆட்டமிழந்தார்.

பெர்குஷனை நியூசிலாந்து அணியினர் பந்து தேய்ந்த பின்புதான் பந்துவீச அழைப்பார்கள். ஐபிஎல் தொடரிலும் பல அணிகளிலும் நடுப்பகுதியில்தான் பெர்குஷன் பந்துவீசியுள்ளார். ஆனால், நேற்று தொடக்கத்திலேயே பெர்குஷனை பஞ்சாப் அணி பயன்படுத்தியது. பூரனை 4 முறை பெர்குஷன் ஆட்டமிழக்கச் செய்திருப்பதால் விரைவாக பெர்குஷன் அழைக்கப்பட்டார்.

ஆனால், பெர்குஷன் பந்துவீச்சில் பூரன் ஆட்டமிழப்பதற்குப் பதிலாக மார்க்ரம் விக்கெட்டை இழந்தார். சிக்சர், பவுண்டரி என அதிரடியாகத் தொடங்கிய மார்க்ரம் 28 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.

ரிஷப் பந்த், சுழற்பந்துவீச்சில் பலவீனம் என்பதை அறிந்து அவர்கள் களமிறங்கியதும் மேக்ஸ்வெலை பந்துவீச அழைத்தனர். எதிர்பார்த்தது போலவே ரிஷப் பந்த் 2 ரன்னில் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் சஹலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் விக்கெட்டை 3வது முறையாக மேக்ஸ்வெல் சாய்த்தார். ரூ.27 கோடிக்கு வாங்கப்பட்ட ரிஷப் பந்த் 3 போட்டிகளிலும் சேர்த்து எடுத்த ரன்கள் 17 மட்டுமே.

லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ஐ.பி.எல். போட்டிகள், ஐ.பி.எல். 2025

பட மூலாதாரம்,GETTY IMAGES

நீயா நானா போட்டியில் சஹல், பூரன்

ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நிகோலஸ் பூரன் நிதானமாக பேட் செய்து தன்னால் ஆன பங்களிப்பை அணிக்கு அளித்தார். மேக்ஸ்வெல் வீசிய 7வது ஓவரில் 2 பவுண்டரிகளை பூரன் விளாசினார். நீயா, நானா என்ற போட்டியில் சஹலும், பூரனும் மோதினர்.

சஹல் பந்துவீச்சில் பலமுறை பீட்டன் ஆகிய பூரன், சிக்சர், பவுண்டரி என விளாசினார். இறுதியில் இருவருக்குமான போட்டியில் சஹல் வென்றார். பூரன் 30 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்த நிலையில் அவரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதிரடி ஆட்டக்காரரான டேவிட் மில்லர் 19 ரன்கள் சேர்த்த நிலையில் யான்சென் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். லக்னெள அணி 16வது ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் சேர்த்தது. ஆனால், 7வது விக்கெட்டுக்கு ஆயுஷ் பதோனி, அப்துல் சமது இருவரும் சேர்ந்து ஆட்டத்தின் போக்கை மாற்றினர்.

இருவரும் 21 பந்துகளில் 47 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். யான்சென் வீசிய ஓவரில் முதல் பந்தில் ஒரு சிக்சரையும், அர்ஷ்தீப் வீசிய 18வது ஓவரில் ரிவர்ஸ் ஸ்கூப்பில் ஒரு சிக்சரையும் சமது விளாசினார்.

அந்த ஓவரில் லக்னெள 20 ரன்கள் சேர்த்தது. அர்ஷ்தீப் வீசிய கடைசி ஓவரிலேயே பதோனி 33 பந்துகளில் 41 ரன்களிலும், சமது 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். லக்னெள அணி 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

பிரப்சிம்ரன், வதேரா அதிரடி

லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ஐ.பி.எல். போட்டிகள், ஐ.பி.எல். 2025,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கேப்டன் ரிஷப் பந்த் 3 போட்டிகளிலும் சேர்த்து 17 ரன்கள் மட்டுமே எடுத்து அணியின் உரிமையாளர்களை அதிருப்தியில் வைத்துள்ளார்

பஞ்சாப் அணி, 172 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கியது. பிரப்சிம்ரன் சிங் அதிரடியாகத் தொடங்கினாலும், சகவீரர் பிரயான்ஸ் ஆர்யா 9 ரன்னில் திக்வேஷ் ரதி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ், பிரப்சிம்ரனுடன் ஜோடி சேர்ந்தார். ஸ்ரேயாஸ் நிதானமாக ஆட, பிரப்சிம்ரன் சிங் வெளுத்து வாங்கினார். ஷர்துல் தாக்கூர், ஆவேஷ் பந்துவீச்சில் முதல் இரு ஓவர்களிலும் சிக்சர், பவுண்டரி எனத் துவைத்து எடுத்தார். பவர்ப்ளேவில் பஞ்சாப் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் சேர்த்தது.

திக்வேஷ் ரதி பந்துவீச்சில் பிரப்சிம்ரன் அடித்த ஷாட் ஸ்லிப்பில் கேட்சாக வந்ததை மார்ஷ் பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்சை தவறவிட்டதற்கு லக்னெள அணி பிரப்சிம்ரனிடம் பெரிய விலை கொடுத்தது.

ரவி பிஸ்னோய், மணிமாறன் சித்தார்த் இருவரின் பந்துவீச்சையும் வெளுத்த பிரப்சிம்ரன் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். 9.1 ஓவர்களில் பஞ்சாப் அணி 100 ரன்களை எட்டியது.

பிரப்சிம்ரன் சிங் 34 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்த நிலையில் ரதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ், பிரப்சிம்ரன் இருவரும் 84 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய நேகல் வதேரா, ஸ்ரேயாஸுடன் சேர்ந்தார். மிகுந்த பொறுப்புடன், நிதானமாக ஆடிய ஸ்ரேயாஸ் அவ்வப்போது பவுண்டரி, சிக்சர் அடிக்கவும் மறக்கவில்லை.

பஞ்சாப் வெற்றிக்கு 36 பந்துகளில் 29 ரன்கள் தேவைப்பட்டன. ஆவேஷ் கான் வீசிய 15வது ஓவரில் ஸ்ரேயாஸ் பவுண்டரி, சிக்சர் என 12 ரன்களும், ஷர்துல் வீசிய 16வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி என நேஹல் வதேரா 16 ரன்களும் சேர்த்து வெற்றியை எளிதாக்கினர்.

அப்துல் சமது வீசிய 17வது ஓவரில் ஸ்ரேயாஸ் சிக்சர் விளாசி வெற்றியை உறுதி செய்தார். ஸ்ரேயாஸ் 30 பந்துகளில் அரைசதம் அடித்து 52 ரன்களுடனும் வதேரா 43 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

மோசமான பந்துவீச்சு

லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ஐ.பி.எல். போட்டிகள், ஐ.பி.எல். 2025,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,லக்னெள அணி சேர்த்த 171 ரன்களை நிச்சயமாக டிபெண்ட் செய்திருக்க முடியும். ஆனால் அதற்குரிய வலுவான பந்துவீச்சாளர்கள் அந்த அணியில் களமிறக்கப்படவில்லை.

லக்னெள அணி சேர்த்த 171 ரன்களை நிச்சயமாக டிபெண்ட் செய்திருக்க முடியும். ஆனால் அதற்கான வலுவான பந்துவீச்சாளர்கள் அந்த அணியில் களமிறக்கப்படவில்லை.

மயங்க் யாதவ் உடல்நிலை இன்னும் சரியாகவில்லை. மிட்ஷெல் மார்ஷ் நன்றாகப் பந்துவீசக்கூடியவர். ஏன் ரிஷப் பந்த் அவருக்கு பந்துவீச வாய்ப்புத் தரவில்லை என்று கேள்விகள் எழுகின்றன.

வேகப்பந்துவீச்சில் 145 கி.மீ வேகத்தில் பந்துவீசக்கூடிய ஷமர் ஜோஸப் இருக்கிறார். அவரைக் களமிறக்கி இருக்கலாம். மற்ற வகையில் லக்னெள அணியில் தேடினாலும் வேகப்பந்துச்சாளர்கள் இல்லை.

சுழற்பந்துவீச்சிலும் ரிவி பிஸ்னோய், திக்வேஷ் ரதி பந்துவீச்சில் பெரிதாக டர்ன் இல்லை. கடந்த போட்டியில் பந்து வீசிய பிரின்ஸ் யாதவை ஏன் அமர வைத்தார்கள் என்றும் கேள்விகள் எழுகின்றன.

அணியில் இளம் ஆல்ரவுண்டர்கள் ராஜ்யவர்தன் ஹங்கரேகர், யுவராஜ் சௌத்ரி, அர்ஷின் குல்கர்னி இருந்தும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் லக்னெள இருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் பஞ்சாப் அணியை மிரட்டும் அளவுக்கும், விக்கெட் எடுக்கும் அளவுக்கு லக்னெள பந்துவீச்சில் பலமில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4g25n0x8e5o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரை சகலதுறைகளிலும் விஞ்சிய குஜராத் டைடன்ஸ் 8 விக்கெட்களால் அபார வெற்றி

Published By: VISHNU 03 APR, 2025 | 02:43 AM

image

(நெவில் அன்தனி)

பெங்களூரு எம். சின்னசுவாமி விளையாட்டரங்கில் புதன்கிழமை (02) நடைபெற்ற 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் 14ஆவது போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சகலதுறைகளிலும் அபரிமிதமாக விஞ்சிய குஜராத் டைட்டன்ஸ் 8 விக்கெட்களால் அபார வெற்றியை ஈட்டியது.

0204_mhd_siraj_gt_vs_rcb.png

தனது முதல் இரண்டு போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸையும் சென்னை சுப்பர் கிங்ஸையும் இலகுவாக வெற்றிகொண்ட றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு இந்தப் போட்டியில் தனது முதலாவது தோல்வியைத் தழுவியது.

0204_liam_livingstone_rc_vs_gt.png

அதேவேளை தனது முதலாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸிடம் தோல்வி அடைந்த குஜராத் டைட்டன்ஸ், அதனைத் தொடர்ந்து மும்பை இண்டியன்ஸ், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய இரண்டு அணிகளையும் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிகொண்டது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிரணியின் துல்லியமான பந்துவீச்சுக்களில் சிரமத்தை எதிர்கொண்டு 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது.

முன்வரிசை வீரர்களான பில் சோல்ட் (14), விராத் கோஹ்லி (7), தேவ்டத் படிக்கல் (4), அணித் தலைவர் ரஜாத் பட்டிடார் (14) ஆகிய நால்வரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். (42 - 4 விக்.)

மத்திய வரிசையில் லியாம் லிவிங்ஸ்டோன், 33 ஓட்டங்களைப் பெற்ற ஜித்தேஷ் ஷர்மா ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

ஜித்தேஷ் ஷர்மா ஆட்டம் இழந்த பின்னர் க்ருணல் பாண்டியா 5 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். (104 - 6 விக்),

லியாம் லிவிங்ஸ்டோன், டிம் டேவிட் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 46 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சுமாரான மொத்த எண்ணிக்கையைப் பெற உதவினர்.

லியாம் லிவிங்ஸ்டோன் 40 பந்துகளில் ஒரு பவுண்டறி, 5 சிக்ஸ்களுடன் 54 ஓட்டங்களையும்  டிம் டேவிட் 18 பந்துகளில் 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மொஹம்மத் சிராஜ் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சாய் கிஷோர் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

170 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் 17.5 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 170 ஓட்டங்களைப் பெற்று வெற்றீட்டியது.

அணித் தலைவர் ஷுப்மான் கில் (14), சாய் சுதர்ஷன் ஆகிய இருவரும் 28 பந்துகளில் 32 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஷுப்மான் கில் ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து ஜொஸ் பட்லருடன் 2ஆவது விக்கெட்டில் மேலும் 75 ஓட்டங்களைப் பகிர்ந்த சாய் சுதர்ஷன் 49 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் ஜொஸ் பட்லர், ஷேர்ஃபேன் ரதர்ஃபர்ட் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 32 பந்துகளில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை வெற்றி அடையச் செய்தனர்.

ஜொஸ் பட்லர் 39 பந்துகளில் 5 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள் உட்பட 73 ஓட்டங்களுடனும் ஷேர்ஃபேன் ரதர்ஃபர்ட் 18 பந்துகளில் ஒரு பவுண்டறி, 3 சிக்ஸ்கள் உட்பட 30 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் புவ்ணேஷ்வர் குமார், ஜொஷ் ஹேஸ்ல்வூட் ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

ஆட்டநாயகன்: மொஹம்மத் சிராஜ்.

https://www.virakesari.lk/article/210969

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரோரா, வெங்கடேஷ் அபாரம் - கொல்கத்தாவின் பந்துவீச்சில் சிதைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

IPL 2025 - KKR vs SRH

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஏப்ரல் 3 அன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 15வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டம் கடைசியில் ஒருதரப்பாக முடிந்தது. சன்ரைசர்ஸ் அணியின் சேஸிங் தொடங்கியது முதல் கொல்கத்தா அணியின் ஆதிக்கமே இருந்தது. முழுமையாக 20 ஓவர்கள்கூட ஆடாமல் சன்ரைசர்ஸ் அணி மோசமான தோல்வியை சந்தித்தது.

முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் சேர்த்தது. 201 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 16.4 ஓவர்களில் 120 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 80 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியைச் சந்தித்தது.

தடுமாறி வரும் சன்ரைசர்ஸ் அணி

IPL 2025 - KKR vs SRH

பட மூலாதாரம்,GETTY IMAGES

சன்ரைசர்ஸ் அணி விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோல்வியடைந்து, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட்டும் பாதளத்தில் இருக்கிறது. கடந்த முறை 2வது இடம் பிடித்த சன்ரைசர்ஸ் அணிக்கு இந்த முறை தொடக்கம் தடுமாற்றமாக அமைந்துள்ளது.

அதேநேரம் கொல்கத்தா அணி கடந்த போட்டியில் மும்பையிடம் 116 ரன்களுக்கு சுருண்ட நிலையில் மீண்டு வந்து 200 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றுள்ளது.

வருண், அரோரா அமர்க்களம்

சன்ரைசர்ஸ் அணியின் டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், கிளாசன் ஆகிய 3 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் வைபவ் அரோரா ஆட்டநாயகன் விருது பெற்றார். 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன், 29 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அற்புதமாகப் பந்துவீசினார். அரோரா எடுத்த ஒவ்வொரு விக்கெட்டும் ஆட்டத்தில் அடுத்தடுத்த திருப்பத்தை ஏற்படுத்தின.

தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகனுக்கு இணையாகப் பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

மீண்டு வந்த வெங்கடேஷ் அய்யர்

கொல்கத்தா அணியின் துணை கேப்டன் வெங்கடேஷ் அய்யர் மீதான ஐபிஎல் விலை பெரிய அழுத்தமாக இருந்து வந்த நிலையில் நேற்று இயல்பான ஆட்டத்திற்குத் திரும்பி நெருக்கடியிலிருந்து மீண்டார்.

ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி 200 ரன்களை எட்டுமா என்ற சந்தேகம் எழுந்தநிலையில், 29 பந்துகளில் 60 ரன்கள் என்று வெங்கடேஷ் அதிரடியாக ஆடியது, ரிங்கு சிங் 17 பந்துகளில் 32 ரன்கள் என கேமியோ ஆடியது, அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தியது. கடைசி 5 ஓவர்களில் கொல்கத்தா அணி 78 ரன்கள் சேர்த்தது.

கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நரேன், டீகாக் விரைவாக விக்கெட்டுகளை இழந்த பிறகு, ரஹானே, ரகுவன்ஷி ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது. இருவரும் 3வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்தனர். இந்த இரு பார்ட்னர்ஷிப்களும் தான் கொல்கத்தா அணியின் ஸ்கோர் உயரக் காரணமாக அமைந்தன. ரஹானே மற்றும் ரகுவன்ஷி தலா 38, 50 ரன்கள் சேர்த்துப் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

13 பந்துகளில் சன்ரைசர்ஸின் டாப்ஆர்டர் காலி

IPL 2025 - KKR vs SRH

பட மூலாதாரம்,GETTY IMAGES

சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங் நேற்று பொறுப்பற்ற வகையில் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. ஒவ்வொரு பந்தையும் பெரிய ஷாட்டாக மாற்ற நினைத்து பேட்டர்கள் விக்கெட்டுகளை இழந்தனர். முதல் 13 பந்துகளிலேயே டாப்ஆர்டரில் இருந்த டிராவிஸ் ஹெட்(4), அபிஷேக் சர்மா(2), இஷான் கிஷன்(2) ஆகியோர் விக்கெட்டுகளை இழந்தனர். வைபவ் அரோரா பந்துவீச்சில் பெரிய ஷாட்டுக்கு முயன்று டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்தார். கடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியிலும் இதேபோன்று அரோரா பந்துவீச்சில்தான் ஹெட் விக்கெட்டை இழந்தார்.

டாப் ஆர்டரில் இருந்த 3 பேட்டர்களும் மொத்தமாக 8 ரன்கள் மட்டுமே சேர்த்து வெளியேறினர். இந்தச் சரிவிலிருந்து மெல்ல மீண்டு வந்த சன்ரைசர்ஸ் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 66 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும், அடுத்த 55 ரன்களுக்குள் மீதமிருந்த வி்க்கெட்டுகளையும் இழந்தது.

கொல்கத்தா ஆடுகளம் நேற்று பேட்டர்களுக்கு நன்கு ஒத்துழைத்தது. பேட்டர்கள் விளையாட முடியாத அளவுக்கு வீசப்படும் பவுன்ஸர்களுக்கும், ஸ்விங்கிற்கும் ஒத்துழைக்கவில்லை. இந்நிலையில், பேட்டர்களுக்கு சாதகமான ஆடுகளத்திலும் சன்ரைசர்ஸ் பேட்டர்களால் விளையாட முடியவில்லை, தவறான ஷாட்கள்தான் தோல்விக்கு காரணம் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

கொல்கத்தா அணியில் நேற்று மிட்ஷெல் ஸ்டார்கிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது. அவரும் வேகப்பந்துவீச்சில் இருந்திருந்தால், சன்ரைசர்ஸ் அணியின் நிலைமை பரிதாபமாக மாறியிருக்கும். டிராவிஸ் ஹெட், அபிஷேக், இஷான் ஆகியோர் ஆட்டமிழந்த 3 பந்துகளும் சாதாரண பந்துகளே. அவற்றில் தவறான ஷாட்களை அடிக்க முயன்று அவர்கள்தம் விக்கெட்டை இழந்தனர்.

அரோராவின் பந்தில் பெரிய ஷாட்டுக்கு முயன்று டிராவிஸ் ஹெட் பேட்டில் எட்ஜ் எடுத்து விக்கெட்டை இழந்தார். ரானாவின் ஸ்லோவர் பந்தில் அபிஷேக் விக்கெட்டை இழந்தார். இஷான் சாதாரண பந்தில் ரஹானேவிடம் கையில் கேட்ச் கொடுத்தார்.

நடுப்பகுதியில் நிதிஷ் ரெட்டி(19), கமிந்து மெண்டிஸ்(27), கிளாசன்(33) ஆகியோர் மட்டுமே ஓரளவு பேட் செய்தனர். ஆனாலும் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் அளவுக்கு அவர்களால் போராட முடியவில்லை.

சுனில் நரேன், வருண் சக்ரவர்த்தி பந்துவீச வந்த பிறகு சன்ரைசர்ஸ் அணியின் ரன்வேகம் படுத்துக்கொண்டது. இறுதியாக இருந்த 2 விக்கெட்டுகளையும் இழந்தனர். வருண் சக்ரவர்த்தி 16வது ஓவரில் கம்மின்ஸ், சிமர்ஜித் சிங் ஆகிய இருவரின் விக்கெட்டுகளையும் ஒரே ஓவரில் வீழ்த்தினார். சன்ரைசர்ஸ் 120 ரன்களுக்கு ஆட்டமிழந்தது அந்த அணியின் பேட்டிங் மீது கேள்வியை எழுப்பியுள்ளது.

நரேன், டீகாக் ஏமாற்றம்

IPL 2025 - KKR vs SRH

பட மூலாதாரம்,GETTY IMAGES

கொல்கத்தா அணி பேட்டர்களுக்கு ஏதுவாக நேற்று இருந்த போதிலும், தொடக்க ஆட்டக்கார்கள் நரேன்(7), டீ காக்(1) இருவரும் கம்மின்ஸ், ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். 3 ஓவர்களில் 17 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா தடுமாறியது.

ரஹானேவும் ரகுவன்ஷியும் ஜோடி சேர்ந்து அணியை மீட்டனர். பவர்ப்ளேவை பயன்படுத்த இருவரும் தவறவில்லை. பவர்ப்ளேயில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் சேர்த்தனர். ரஹானே பவர்ப்ளேயில் பவுண்டரி, சிக்ஸர்களை விளாச, ரகுவன்ஷியும் ஷமி, கம்மின்ஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார்.

இருவரின் அதிரடி ஆட்டத்தைக் குறைக்க லெக் ஸ்பின்னர் அன்சாரி வரவழைக்கப்பட்டார். அதற்குப் பலன் கிடைத்து, கொல்கத்தா ரன்ரேட் திடீரென குறைந்தது. அன்சாரி பந்துவீச்சுக்குத் திணறிய ரஹானே 38 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ரகுவன்ஷி நிதானமாக பேட் செய்து 30 பந்துகளில் ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது அரைசதத்தை நிறைவு செய்தார்.

வெங்கடேஷ், ரிங்கு ஜோடி சேர்ந்த பிறகு, கொல்கத்தா அணியின் ரேன்ரேட் உயரத் தொடங்கியது. ரிங்கு தொடர்ந்து 3 பவுண்டரிகளை ஹர்சல் படேல் பந்துவீச்சில் அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார். கம்மின்ஸ் பந்துவீச்சில் 3 பவுண்டரி, 6 சிக்ஸர் அடித்து வெங்கடேஷ் 25 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

ஹர்சல் வீசிய கடைசி ஓவரையும் விட்டு வைக்காத வெங்கடேஷ் சிக்ஸர், பவுண்டரி என வெளுத்தார். வெங்கடேஷ் 60 ரன்களில் ஹர்சல் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரிங்கு சிங் 32 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஒரே ஓவரில் இரு கைகளிலும் பந்துவீச்சு

IPL 2025 - KKR vs SRH

பட மூலாதாரம்,GETTY IMAGES

சன்ரைசர்ஸ் அணியில் இடம் பெற்ற இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் நேற்று ஒரே ஓவரில் இரு கைகளிலும் பந்துவீசினார். ஐபிஎல் வரலாற்றில் இதுபோன்று ஒரே ஓவரில் இரு கைகளிலும் பந்துவீசியது இதுதான் முதல்முறை. 13வது ஓவரை வீசிய கமிந்து மெண்டிஸ், முதல் 3 பந்துகளை இடது கையில் லெக் ஸ்பின்னாகவும், அடுத்த 3 பந்துகளை வலது கையில் ஆஃப் ஸ்பின்னாகவும் வீசினார்.

கிரிக்கெட்டில் ஒரு பந்துவீச்சாளர் ஒரே ஓவரில் இரு கைகளாலும் பந்து வீசுவது ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், பந்துவீச்சை வேறு கைக்கு மாற்றும் போதெல்லாம் நடுவரிடம் தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயம். மெண்டிஸ் வலது கையில் வீசும் ஆஃப் ஸ்பினைவிட இடதுகையில் வீசும் லெக் ஸ்பின் ஓரளவுக்கு சிறப்பாக இருந்தது.

சர்வதேச கிரிக்கெட்டில் இதற்கு முன் இலங்கை வீரர் ஹசன் திலகரத்னே, பாகிஸ்தானின் ஹனிஃப் முகமது ஆகியோர் இதுபோன்று பந்துவீசியுள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ce82n96dy56o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லக்னௌ த்ரில் வெற்றி: ஹர்தித் சாதனை வீண் - திலக் வர்மாவை 'ரிட்டயர்ட் அவுட்' செய்த முடிவால் சர்ச்சை

MI vs LSG, ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 5 ஏப்ரல் 2025, 02:34 GMT

லக்னெளவில் ஏப்ரல் 4 அன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 16-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.

முதலில் பேட் செய்த லக்னெள அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் சேர்த்தது. 204 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் மட்டுமே சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய லக்னெள அணி இதுவரை 6 ஆட்டங்களில் வென்று 6-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

லக்னெள அணி கேப்டன் ரிஷப் பந்த் தனது அணிக்கு 2-வது வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார். லக்னெள அணி 4 போட்டிகளில் 2 வெற்றிகள் என 4 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருக்கிறது, மும்பை அணி 4 போட்டிகளில் 3 தோல்விகள், ஒரு வெற்றியுடன் 7வது இடத்தில் இருக்கிறது.

திலக் வர்மாவை ரிட்டயர்ட் அவுட் முறையில் வெளியேற்றிய மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

MI vs LSG, ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

லக்னெள அதிரடித் தொடக்கம்

லக்னெள அணிக்கு மிட்ஷெல் மார்ஷ், எய்டன் மார்க்ரம் நல்ல தொடக்கத்தை அளித்தனர். இருவரும் பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் சேர்த்தனர். மார்ஷ் 27 பந்துகளில் அரைசதம் அடித்து, 60 ரன்களில் புத்தூர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்தனர். இந்த சீசனில் நல்ல ஃபார்மில் இருக்கும் பூரன் (12) ரன்னில் பாண்டியா பந்து வீச்சில் விக்கெட்டை இழந்தார். ரிஷப் பந்த் (2) 4வது முறையாக சொற்ப ரன்னில் ஹர்திக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மார்க்ரம் நிதானமாக ஆடி 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஆயுஷ் பதோனி (30), மில்லர் (27) கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர். லக்னெள அணிக்கு தொடக்க வீரர்கள் அமைத்துக் கொடுத்த அடித்தளம் தான் பெரிய ஸ்கோருக்குச் செல்ல உதவியது.

ஹர்திக் பாண்டியா, பும்ரா இல்லாத குறையைத் தீர்த்து 5 விக்கெட்டுகளைச் சாய்த்தாலும் அவருக்கு ஈடு கொடுத்து மற்ற பந்துவீச்சாளர்கள் பந்து வீசவில்லை.

தீபக் சஹர், அஸ்வானி குமார், சான்ட்னர் ஆகியோர் ஓவருக்கு 11 ரன்ரேட்டில் ரன்களை வாரி வழங்கினர். விக்னேஷ் புத்தூர் 4 ஓவர்கள் வீசி 31 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி கட்டுக்கோப்பாக பந்துவீசினார்.

MI vs LSG, ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

மும்பைக்கு டாப்ஆர்டர் ஏமாற்றம்

ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்குப் பதிலாக வில் ஜேக்ஸ் சேர்க்கப்பட்டு ரிக்கிள்டனுடன் சேர்ந்து ஆட்டத்தைத் தொடங்கினார். ரிக்கிள்டன்(10), ஜேக்ஸ் (5) இருவருமே சொற்ப ரன்களில் பவர்ப்ளே ஓவருக்குள் ஆட்டமிழந்தனர்.

3-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார், நமன் திர் சேர்ந்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினர். இருவரும் வழக்கம் போல் அதிரடியாக ஆடியதால் விக்கெட்டுகளை இழந்தபோதும் மும்பை அணி பவர்ப்ளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் சேர்த்தது.

நமன் திர் முதல் 9 பந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என விளாசி 30 ரன்கள் சேர்த்த இருவரும் அருமையான ஃபார்மில் இருந்தனர். 3வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்திருந்தபோது, பார்ட்னர்ஷிப்பை திக்வேஷ் ராதி பிரித்தார்.

MI vs LSG, ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

திக்வேஷ் ராதி வீசிய 9-வது ஓவரில் நமன் திர் 46 ரன்கள் சேர்த்த நிலையில் க்ளீன போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்து திலக் வர்மா களமிறங்கினார். ஆனால் சூர்யகுமார் தொடர்ந்து தனது இயல்பான ஷாட்களை ஆடி ரன்களைச் சேர்த்து 31 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

ஆனால் மறுபுறம் திலக் வர்மா பேட்டிங்கில் தொடக்கத்தில் இருந்தே தடுமாறினார். பெரிய ஷாட்களுக்கு முயன்றும் அவரால் அடிக்க முடியவில்லை. நடுப்பகுதி ஓவர்களில் மும்பை அணி ஒரு விக்கெட்டை இழந்து 88 ரன்கள் சேர்த்தாலும், அதில் ஒரு சிக்ஸர் கூட இல்லை.

சூர்யகுமர், திலக் வர்மா என பெரிய ஹிட்டர்கள் இருந்த போதிலும் சிக்ஸர் அடிக்க முடியாத அளவில்தான் லக்னெள பந்துவீச்சாளர்கள் பந்துவீசினர்.

4-வது விக்கெட்டுக்கு திலக் வர்மா, சூர்யகுமார் ஜோடி 64 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அதன்பின் ஹர்திக் பாண்டியா, திலக் வர்மாவால் வெற்றிக்கு தேவையான ரன்களை அடிக்க முயன்றும் லக்னெள பந்துவீச்சு முன் தோல்வி அடைந்தனர்.

MI vs LSG, ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெற்றியை கோட்டைவிட்ட மும்பை

கடைசி 4 ஓவர்களில் மும்பை அணியின் வெற்றிக்கு 52 ரன்கள் தேவைப்பட்டது. மும்பை அணி வெற்றிக்கு 36% வாய்ப்பு இருந்ததாகக் கணிக்கப்பட்டது. சூர்யகுமார், திலக் வர்மா களத்தில் இருந்தனர். ஹர்திக் பாண்டியா களத்துக்கு வரவேண்டியிருந்தது. 3 பெரிய பிக் ஹிட்டர்கள் இருந்தும் வெற்றியை மும்பை அணியால் வசப்படுத்த முடியவில்லை.

இதற்கு முக்கியக் காரணம் டெத் ஓவர்களை வீசிய ஆவேஷ் கான், ஷர்துல் தாக்கூர், திக்வேஷ் ராதி ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சு தான்.

17-வது ஓவரில் ஆவேஷ் கான் வீசிய பந்தில் சூர்யகுமார் ஸ்வீப் ஷாட்டில் பவுண்டரி அடிக்க முற்பட்டு 67 ரன்னில் அப்துல் சமதிடம் டீப் ஸ்குயர் லெக்கில் கேட்ச் கொடுத்தார்.

ஷர்துல் வீசிய 18-வது ஓவரில் திலக் வர்மா ரன்சேர்க்கத் திணறினார். வைடு யார்கர்களை பெரிய ஷாட்களுக்கு திலக் வர்மாவால் மாற்ற முடியவில்லை.

MI vs LSG, ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

அது மட்டுமல்லாமல் திக்வேஷ் ராதி பந்துவீச்சிலும் பெரிதாக ரன்கள் குவிக்க முடியாமல் மும்பைக்கு நெருக்கடி அதிகரித்தது. கடைசி 7 பந்துகளில் மும்பை வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. ஃபார்மில் இல்லாத திலக் வர்மாவை ரிட்டயர்ட் அவுட் ஆகக் கூறி சான்ட்னரை கொண்டு வந்தார் பாண்டியா.

திலக் வர்மா சிறந்த ஹிட்டர். அவரை ரிட்டயர்ட் அவுட் ஆகக் கூறி, பேட்டர் இல்லாத சான்ட்னரை கொண்டு வந்தது எந்த விதத்தில் வெற்றியைப் பெற்றுத் தரும். கடைசி நேரத்தில் பெரிய ஷாட்களை ஆடும் திறமை திலக் வர்மாவுக்கு இருக்கும்போது, சான்ட்னரை கொண்டு வந்தது ஹர்திக்கின் கேப்டன்ஷிப் மீது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக வர்ணனையாளர்கள் விமர்சித்தனர்.

கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. ஆவேஷ் கான் வீசிய ஓவரில் ஹர்திக் பாண்டியா முதல் பந்தில் சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்தடுத்து யார்கர்களாக ஆவேஷ்கான் வீச 3 ரன்களை மட்டுமே ஹர்திக்கால் எடுக்க முடிந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொருத்தவரை கைக்கு கிடைத்த வெற்றியை லக்னெளவின் டெத் பந்துவீச்சாளர்களிடம் கோட்டைவிட்டது என்றுதான் கூற முடியும்.

MI vs LSG, ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெற்றியின் நாயகன் ராதி

லக்னெள அணியின் வெற்றிக்கு நடுப்பகுதியில் பந்துவீசிய சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ராதி முக்கியக் காரணம். 4 ஓவர்கள் வீசிய திக்வேஷ் 21 ரன்கள் கொடுத்து முக்கியமான நமன்திர் விக்கெட்டை சாய்த்தார்.

ஒரு பவுண்டரி கூட தனது ஓவரில் பேட்டர்களால் அடிக்க விடாமல் ராதி பந்துவீசினார். நடுப்பகுதியில் ராதி வீசிய 4 ஓவர்கள் தான் மும்பை அணியின் வெற்றி ஓட்டத்துக்கு பெரிய பிரேக் போட்டது. இவரின் பந்துவீச்சு ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, சூர்யகுமார், நமன் திர் என யாராலும் பெரிய ஷாட்களுக்கு ஆடமுடியாத அளவுக்கு மிககடினமான லைன் லென்த்தில் இருந்தது.

லக்னெள அணி 200 ரன்கள் வரை சேர்க்க மிட்ஷெல் மார்ஷ், மார்க்ரம் ஆகியோரின் அரைசதம், வெற்றிக்கு காரணமாகக் கூறப்பட்டாலும், திக்வேஷ் ராதி பந்துவீச்சுதான் ஆட்டத்தின் கருப்புக்குதிரை.

ஏனென்றால், திக்வேஷ் தவிர லக்னெள அணியில் மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் சராசரியாக ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். ஆதலால், ராதி இல்லாமல் இருந்தால் நிச்சயம் வெற்றி மும்பையின் பக்கம் சென்றிருக்கும்.

MI vs LSG, ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹர்திக் பாண்டியா புதிய சாதனை

ஹர்திக் பாண்டியா இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி 36 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவே ஒட்டுமொத்த டி20 போட்டிகளிலும் அவரது சிறந்த பந்துவீச்சாகும். இதற்கு முன்பு, 2023-ஆம் ஆண்டு ஆமதாபாத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 16 ரன்களுக்கு 4 விக்கெட் வீழ்த்தியதே அவரது சிறந்த பந்துவீச்சாக இருந்தது.

அதுமட்டுமின்றி, ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியின் கேப்டன் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இதுவே முதன் முறையாகும். அந்த வகையில், ஆர்சிபி கேப்டனாக இருந்த போது அனில் கும்ப்ளே 4 விக்கெட் வீழ்த்தியிருந்ததை முந்தி, ஹர்திக் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல்லில் ஒரு கேப்டனாக ஷேன் வார்னே மட்டுமே ஹர்திக்கை விட அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்திய வார்னே 57 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட்ட போது 30 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

MI vs LSG, ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

"நானே பொறுப்பு"

மும்பையின் தோல்வி குறித்தும், திலக் வர்மா ரிட்டயர்ட் அவுட் குறித்தும் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் " தோல்வி அடையும்போது விரக்தியாக இருக்கும். நேர்மையாகக் கூறினால் நாங்கள் 10 முதல் 12 ரன்களை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும்.

பீல்டிங்கில் சரியாகச் செயல்படவில்லை, ரன்களை கோட்டைவிட்டோம். நான் பந்துவீச்சை அனுபவித்து வீசுவேன். எனக்கு பந்துவீச்சில் அணியில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை என்பதால், நானே பொறுப்பேற்க வேண்டியதிருந்தது. நான் விக்கெட் எடுக்க முயவில்லை. பேட்டர்களை தவறு செய்ய வைக்க முயன்றேன். விக்கெட் கிடைத்தது. பேட்டிங் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் அணியாகத் தோல்வி அடைந்தோம். இந்த தோல்விக்கு நானே பொறுப்பு.

திலக் வர்மாவை ரிட்டயர்ட் அவுட் ஆக்கியது என்பது கிரிக்கெட்டில் இயல்பாக நடப்பதுதான். எங்களுக்கு பெரிய ஷாட்கள் தேவைப்பட்டன, ஆனால் அதை அடிக்கும் நிலையில் திலக் இல்லை. கிரிக்கெட்டில் நமக்கு நல்ல நாட்கள் வரும், மோசமான நாட்களும் வரும்.

திலக் பெரிய ஷாட்களுக்கு முயன்றார் பேட்டில் மீட் ஆகவில்லை. ஆதலால் ரிட்யர்ட் அவுட் ஆகக் கூறினோம். ஸ்மார்ட்டாக பந்துவீச வேண்டும், பேட்டிங்கில் வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும் இதுதான் எனக்குப் பிடிக்கும். இது பெரிய தொடர், இன்னும் 2 வெற்றிகள்தான் ரேஸில் தொடர்ந்து ஓட வைக்க உற்சாகம் அளிக்கும்," எனத் தெரிவித்தார்.

ஹர்திக் பாண்டியா முடிவால் சர்ச்சை

திலக் வர்மாவை ரிட்டயர்ட் அவுட் முறையில் வெளியேறச் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியின் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மட்டுமல்லாது, முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களும் கூட ஹர்திக் பாண்டியா முடிவு குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

"சாண்ட்னரை களமிறக்க திலக் வர்மாவை ரிட்டயர்ட் அவுட் செய்வதா? குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஹர்திக் இதேபோல் ரன் எடுக்க திணறிய போது ரிட்டயர்ட் முறையில் வெளியேறினாரா? திலக் வர்மாவுக்கு மட்டும் ஏன்?" என்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட் ஸ்பெஷலிஸ்டாக இருந்த ஹனுமான் விஹாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

"திலக்கை விட சாண்ட்னர் மிகப்பெரிய ஷாட்களை அடிக்கக் கூடியவரா? பொல்லார்ட் போன்ற மிகப்பெரிய ஹிட்டரை களமிறக்கவே இந்த முடிவு என்றால் புரிந்து கொள்ள முடியும். ஆனால், இந்த முடிவு ஏற்கக் கூடியது அல்ல" என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

ராபின் சிங், இர்பான் பதான் போன்ற இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் திலக் வர்மாவை வெளியேற்றும் முடிவை விமர்சித்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx20n979y3ro

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

CSK vs DC: தடுமாறும் சென்னை அணி - அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழப்பு

சிஎஸ்கே, டெல்லி கேபிடல்ஸ், ஐபிஎல் 2025 , சென்னை சூப்பர் கிங்ஸ் , எம்எஸ் தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

5 ஏப்ரல் 2025, 09:49 GMT

புதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர்

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 17வது லீக் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றுவரும் போட்டியில் சென்னை அணிக்கு 184 ரன்களை வெற்றி இலக்காக டெல்லி நிர்ணயித்த நிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்து சென்னை அணி தடுமாறி வருகிறது.

10 ஓவர்களில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் சேர்த்தது. விஜய் ஷங்கர் தவிர்த்து வேறு யாருமே 20 ரன்களைத் தாண்டவில்லை. இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய ஷிவம் துபே இந்த போட்டியிலும் ஏமாற்றம் அளித்தார். 15 பந்துகளை சந்தித்த அவர் 18 ரன்களை எடுத்து நிகம் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

சிஎஸ்கே, டெல்லி கேபிடல்ஸ், ஐபிஎல் 2025 , சென்னை சூப்பர் கிங்ஸ் , எம்எஸ் தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டெவோன் கான்வே ஆட்டமிழந்து வெளியேறுகிறார்

டாஸ் வென்று டெல்லி அணி பேட்டிங்கை தொடங்கிய நிலையில் முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கலீல் அகமது வீசிய முதல் ஓவரில் ஜேக் ஃப்ரேசரின் விக்கெட் வீழ்ந்தது. இரண்டாவது ஓவரை முகேஷ் சவுத்ரி வீசிய நிலையில் அபிஷேக் பொரல் இந்த ஓவரில் 3 பவுண்டரி ஒரு சிக்சரை விளாசினார். பவர் பிளே முடிவில் டெல்லி அணி 1 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்திருந்தது.

சிஎஸ்கே, டெல்லி கேபிடல்ஸ், ஐபிஎல் 2025 , சென்னை சூப்பர் கிங்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,விக்கெட் வீழ்த்திய கலீல் அகமதுவை சகவீரர்கள் பாராட்டுகின்றனர்

7வது ஓவரை வீசிய ரவீந்திர ஜடேஜா 20 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்திருந்த அபிஷேக் பொரல் விக்கெட்டை வீழ்த்தினார். 10 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 2 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் சேர்த்திருந்தது.

இதன் பின்னர் ஒரு புறம் விக்கெட்கள் விழுந்தாலும் கேஎல் ராகுல் நங்கூரம் போல நிலைத்து நின்று ஆடினார். 51 பந்துகளை சந்தித்த அவர் 77 ரன்களைக்கு குவித்தார். கடைசி ஓவர் வரை களத்தில் நின்ற அவர் பதிரானா பந்து வீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

சிஎஸ்கே, டெல்லி கேபிடல்ஸ், ஐபிஎல் 2025 , சென்னை சூப்பர் கிங்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அபாரமாக ஆடிய கேஎல் ராகுல்

இதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் அக்சர் படேல் 21 ரன்களிலும் , சமீர் ரிஸ்வி 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

5வது விக்கெட்டுக்கு களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 12 பந்துகளில் 24 ரன்கள் அடித்து 200 ஸ்ரைக் ரேட்டுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேனான அசுதோஷ் ஷர்மா கடைசி ஓவரில் களமிறங்கிய நிலையில், அதே வேகத்தில் ரன் அவுட் செய்யப்பட்டார்.

சிஎஸ்கே, டெல்லி கேபிடல்ஸ், ஐபிஎல் 2025 , சென்னை சூப்பர் கிங்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வழக்கம் போல சிறப்பான விக்கெட் கீப்பிங் பங்களிப்பை அளித்த தோனி

இரண்டாவது ரன் ஓட முயற்சித்த போது, ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தை தோனி லாவகமாக பிடித்து மின்னல் வேகத்தில் ரன் அவுட் செய்தார்.

20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் சேர்த்தது.

சென்னை தரப்பில் கலீல் அகமது சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரவீந்திர ஜடேஜா, நூர் அகமது, மதீஷா பதிரானா ஆகியோ தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

சிஎஸ்கே, டெல்லி கேபிடல்ஸ், ஐபிஎல் 2025 , சென்னை சூப்பர் கிங்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சிறப்பான அரைசதம் அடித்த கேஎல் ராகுல்

20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் சேர்த்தது. இதனால் சென்னை அணிக்கு 184 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கிபேட்டிங் செய்து வருகிறது.

சிஎஸ்கே, டெல்லி கேபிடல்ஸ், ஐபிஎல் 2025 , சென்னை சூப்பர் கிங்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,க்ளீன் போல்டு ஆன டெல்லி கேப்டன் அக்சர் படேல்

நடப்பு தொடரில் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி இரண்டிலுமே வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்புடன் உள்ளது.

மறுபுறம் சென்னை அணி தொடரில் மும்பைக்கு எதிரான போட்டியை வெற்றியுடன் தொடங்கினாலும், அடுத்து பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுடனான போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியடைந்துள்ளது. அணியின் பேட்டிங் லைன் அப் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. இவற்றில், பெங்களூரு அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அணியின் மிகப்பெரிய தோல்வியும், சென்னை ரசிகர்களை சோர்வுக்குள்ளாக்கியிருக்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிரான போட்டியில் சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயமடைந்திருக்கும் நிலையில், சிஎஸ்கே அணிக்கு தோனி மீண்டும் தலைமையேற்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ருதுராஜ் மீண்டும் களமிறங்கியுள்ளார்.

சிஎஸ்கே, டெல்லி கேபிடல்ஸ், ஐபிஎல் 2025 , சென்னை சூப்பர் கிங்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,நூர் முகமதுவுக்கு ஆலோசனை வழங்குகிறார் தோனி

களத்தில் விளையாடுவது யார்?

சென்னை அணியின் பிளேயிங் லெவன்

ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), விஜய் ஷங்கர், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அகமது, முகேஷ் சவுத்ரி, கலீல் அகமது, மதீஷா பதிரானா.

டெல்லி அணியின் பிளேயிங் லெவன்

ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், கேஎல் ராகுல், அபிஷேக் போரல், அக்சர் படேல், டிரிஸ்டான் ஸ்டப்ஸ் , சமீர் ரிஸ்வி, அசுதோஷ் ஷர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மொகித் ஷர்மா,

மைதானத்தின் நிலை என்ன?

சிஎஸ்கே, டெல்லி கேபிடல்ஸ், ஐபிஎல் 2025 , சென்னை சூப்பர் கிங்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பவர் பிளேயில் சிறப்பாக ஆடிய அபிஷேக் பொரல்

இன்றைய போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. பொதுவாக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானதாக கருதப்படும் இந்த மைதானம் , இயல்புக்கு மாறாக இருப்பதாக சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கருத்து தெரிவித்திருந்ததார்.

சிஎஸ்கேவின் டாப் ஆர்டர் இன்னமும் தெளிவற்றதாகவே உள்ளது. ராகுல் திரிபாதி, விஜய் ஷங்கர், தீபக் ஹூடா என யாரும் சிறப்பாக ஆடவில்லை.

சுழற்பந்திலும் பலம் வாய்ந்த டெல்லி அணி

அக்சர் படேல் தலைமையில் களம் காணும் டெல்லி அணி முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று உற்சாகமாக களமிறங்குகிறது. அணியில் ஃபாஃப் டூப்ளசிஸ், மிட்செல் ஸ்டார்க் போன்ற அனுபவம் மிக்க வீரர்களையும் விப்ராஜ நிகம், அசுதோஷ் ஷர்மா போன்ற அதிரடியான இளம் வீரர்களையும் கொண்ட கலவையாக உள்ளது. இவர்கள் கடந்த போட்டிகளில் அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டதை மறக்க முடியாது. இன்றைய போட்டியில் டூப்ளசிஸ் களம் காணவில்லை.

சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டாலும் அக்சர் படேல், குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம் என சுழற்பந்து வரிசையையும் டெல்லி கொண்டுள்ளது.

மேலும் சேப்பாக்கம் மைதானத்தில் 2010ம் ஆண்டுக்குப் பின்னர் டெல்லி அணி , சிஎஸ்கே-வை வென்றதில்லை. அப்போது சிஎஸ்கே அணிக்காக விளையாடிய ஹேமங் பதானி தற்போது டெல்லி அணியின் பயிற்சியாளராக இருக்கிறார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c2lzd4klxqxo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோனியும் காலாவதி ஃபார்முலாவும்: சிஎஸ்கே அணியை ஆட்டிப் படைக்கும் பிரச்னைகள் என்ன?

CSK vs DC, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 6 ஏப்ரல் 2025, 03:29 GMT

"சேப்பாக்கத்துக்கு டி20 மேட்ச் பார்க்க வந்தோமா இல்லை, டெஸ்ட் மேட்ச் பார்க்க வந்தோமானு சந்தேகம் வந்துவிட்டது. ஹைலைட்ஸ் போட முடியாத அளவுக்கு சிஎஸ்கே மோசமாக பேட் செய்தார்கள், வெற்றிக்காக முயற்சிக்கவில்லை. தோனி ஓய்வு அறிவித்துவிட்டு இளம் வீரருக்கு வாய்ப்புத் தரலாம்"

சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே-டெல்லி கேபிடல்ஸ் ஆட்டம் நேற்று முடிந்த பின் ரசிகர் ஒருவர் இவ்வாறு பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்த விதம் அந்த அணி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

சேப்பாக்கத்திலிருந்து போட்டி முடிந்து சென்ற ரசிகர்கள் அனைவரும் இந்த ஆட்டத்தைப் பார்க்கவா இவ்வளவு பணம் கொடுத்து டிக்கெட் வாங்கினேன் என்று கடுமையான விமர்சனங்களை சாலையெங்கும் விதைத்துவிட்டு சென்றனர்.

CSK vs DC, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

சொந்த மண்ணில் கோட்டை விட்ட சிஎஸ்கே

சேப்பாக்கம் என்பது சிஎஸ்கே அணியின் கோட்டையாக ஐபிஎல் தொடரில் கருதப்பட்டது, இங்கு வந்து சிஎஸ்கே அணியை சாய்ப்பது என்பது அரிதாக இருந்தது. ஆனால், இந்த சீசனின் தொடக்கத்திலேயே 17 ஆண்டுகளுக்குப் பின் சிஎஸ்கேவை புரட்டி எடுத்து ஆர்சிபி வென்றது. நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 15 ஆண்டுகளுக்குப் பின் டெல்லி கேபிடல்ஸ் அணி வென்றுள்ளது. இந்த சீசனில் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்ற சிஎஸ்கே அணி அதன் பின்னர் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ளது.

ஐபிஎல் தொடக்க சீசன்களில் "சேஸிங் கிங்" என்று வர்ணிக்கப்பட்ட சிஎஸ்கே அணி, கடந்த 2019-ஆம் ஆண்டுக்குப் பின் 180 ரன்களை சேஸ் செய்ததே கிடையாது என்ற மோசமான வரலாற்றை கொண்டுள்ளது.

அதாவது, இலக்கைத் துரத்துகையில் அழுத்தத்தை சமாளித்துக் கொண்டு களத்தில் திறம்பட செயல்படும் பேட்டர்கள் மற்றும் பிக் ஹிட்டர்கள் யாரும் அணியில் இல்லை என்பதையே இது மறைமுகமாக உணர்த்துகிறது. 180 ரன்களுக்கு மேல் குவித்துவிட்டால் சிஎஸ்கே அணியை வென்றுவிடலாம் என்ற தார்மீக நம்பிக்கையை எதிரணிக்கும் சிஎஸ்கே வழங்கியிருக்கிறது.

ஒரு காலத்தில் அழுத்தம், நெருக்கடி மிகுந்த நேரத்தில் அமைதியாக செயல்படுவது, திடீரென மீண்டுவருவது, திட்டங்களை சரியாகச் செயல்படுத்துவது, சேஸிங்கில் மாஸ்டர்ஸ் என்றெல்லாம் சிஎஸ்கே புகழப்பட்டது.

ஆனால், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தைப் பார்த்த பின் சிஎஸ்கே அணி வெற்றிக்காக சிறிதுகூட முயற்சிக்கவில்லை என்று ரசிகர்கள் குறைபட்டுக் கொள்கின்றனர். சிஎஸ்கே அணியின் எந்த பேட்டரிடமும் "இன்டென்ட்" என்று ஆங்கிலத்தில் சொல்லக்கூடிய "வெற்றிக்கான திண்ணிய எண்ணம்" இல்லை என்பது நேற்றைய ஆட்டத்தில் புலப்பட்டது.

CSK vs DC, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

தோனியும் காலாவதி ஃபார்முலாவும்

சிஎஸ்கே அணி, இந்த ஐபிஎல் சீசனுக்காக வீரர்களைத் தேர்வு செய்தது என்பது புதிய பாட்டிலில் பழைய மது என்ற ரீதியில்தான் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், கடந்த 2011-ஆம் ஆண்டு கடைபிடித்த அதே ஃபார்முலாவை இன்னும் கடைபிடிப்பது இன்றைய சூழலுக்கு சரிவராது. எந்த ஸ்கோராக இருந்தாலும் கடைசிவரை இழுத்தடிப்பது, மெதுவாக சேஸிங்கை நகர்த்துவது ஆகியவை காலாவதியான ஃபார்முலாக்கள்.

கடந்த இரு சீசன்களாக பல்வேறு அணிகளும் இளம் வீரர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து புதிய அணியை உருவாக்கி வரும் போது, கண்ணை மூடிக் கொண்டு இந்த குறிப்பிட்ட சிலவீரர்கள் சிஎஸ்கே அணியில் இருப்பார்கள் என்று சொல்லிவிடும் அளவிலான அணியாகவே சிஎஸ்கே உள்ளது.

சிஎஸ்கே அணியில் இந்த சீசனில் உள்ள பேட்டர்களிடம் அச்சப்படாமல் ஆடக்கூடிய மனப்போக்கு இல்லை. ஒரு ரன், 2 ரன்கள் சேர்ப்பது, சாஃப்ட் டிஸ்மிஸல் ஆவது என பழைய பாணியிலேயே இன்னும் ஆட்டம் நகர்கிறது.

CSK vs DC, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

"ஆங்கர் ரோல்" செய்ய பேட்டர்கள் இல்லை

சிஎஸ்கே அணியின் நடுவரிசை பார்ப்பதற்கு வேண்டுமானால் 9வது வரிசை வரை பேட்டர்கள் இருப்பதாக தெரியலாம். ஆனால் அணி சிக்கலான நேரத்தில் இருக்கும் போது ஆங்கர் ரோல் எடுத்து விளையாட ஒரு சிறந்த பேட்டர், பிக் ஹிட்டர் யாருமில்லை. டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் விஜய் சங்கர் ஆங்கர் ரோல் எடுக்க முயற்சி செய்து, ஒட்டுமொத்த கப்பலையும் கடலில் மூழ்கடித்துவிட்டார்.

விஜய் சங்கர் நேற்று அடித்த 54 பந்துகளில் 69 ரன்கள் என்பது காகிதத்தில் வேண்டுமென்றால் கவுரவமாக இருக்கலாம் ஆனால், ஆட்டத்தை கடைசி வரை கொண்டு செல்கிறேன் என டி20 ஆட்டத்தை டெஸ்ட் போட்டியாக மாற்றிவிட்டார்.

CSK vs DC, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிக் ஹிட்டர்கள் இருக்கிறார்களா?

சிஎஸ்கே அணியில் இக்கட்டான சூழலில் பெரிய ஷாட்கள் அடித்து அணியை வெற்றி பெறச் செய்யும் பிக் ஹிட்டர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்றால் ஷிவம் துபே பெயரை மட்டும்தான் ரசிகர்கள் சொல்வார்கள். ஏனென்றால், சிஎஸ்கே அணியால், இம்பாக்ட் ப்ளேயராக களமிறக்கப்பட்ட பின்புதான் ஷிவம் துபே பிக் ஹிட்டராக அறியப்பட்டார்.

ஷிவம் துபே பிக் ஹிட்டராக அறியப்படுகிறாரே தவிர, இன்னும் முழுமையாக அவர் அந்த ரோலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. பிக் ஹிட்டர்கள் என்பவர்கள் ஆட்டத்தை எந்த நேரத்திலும் மாற்றக்கூடிய ஸ்கோரை அடித்து, திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடியவர்கள். அவ்வாறு, தடாலடியாக சிக்ஸர், பவுண்டரிகளை விளாசும் வீரர்களை சிஎஸ்கே இன்னும் அணியில் அடையாளப்படுத்தவில்லை. நடுவரிசையில் ஜடேஜா, ஷிவம் துபே, தீபக் ஹூடா ஆகியோர் இந்த சீசனில் கைகொடுக்கத் தவறிவிட்டனர்.

CSK vs DC, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இளைஞர்களுக்கு மறுக்கப்படும் வாய்ப்பு

சர்வதேச கிரிக்கெட்டில், இந்திய அணிக்கு கேப்டனாக பல இளம் வீரர்களை வளர்த்துவிட்ட தோனி, இன்று சிஎஸ்கே அணியில் அதனைச் செய்ய தவறிவிட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒவ்வொரு ஐபிஎல் சீசன் ஏலத்திலும் இளம் வீரர்கள், அன்கேப்டு வீரர்கள் பலரையும் வாங்கும் சிஎஸ்கே அணி அவர்களில் பலரை வாய்ப்பே வழங்காமல் வெளியேற்றியுள்ளது.

இந்த சீசனில் சிஎஸ்கே அணியில் தமிழக வீரர் ஆந்த்ரே சித்தார்த், விக்கெட் கீப்பர் வனிஷ் பேடி, ஆல்ரவுண்டர்களாக அன்சுல் கம்போஜ், ராமகிருஷ்ணா, வேகப்பந்துவீச்சில் குர்ஜப்நீத் சிங், ஷேக் ரஷீத் என இளம் வீரர்கள் இருந்தும் இதுவரை யாருக்கும் ஆடும் லெவனில் வாய்ப்பு தரப்படவில்லை.

ஓர் அணியில் இளம் வீரர்கள்தான் வெளிச்சம் பாய்ச்சக் கூடியவர்கள், பயமில்லாதவர்கள், பாதுகாப்பானவர்கள். ஆனால், இந்த வெற்றி ஃபார்முலா தெரிந்திருந்தும் சிஎஸ்கே இந்த விஷயத்தை வெளிப்படையாக கையாள்வதில்லை.

ஆனால் ஐபிஎல் தொடரில் உள்ள சன்ரைசர்ஸ், மும்பை, கொல்கத்தா, பஞ்சாப், டெல்லி, குஜராத் அணிகள் அன்கேப்டு வீரர்கள் பலருக்கும் வாய்ப்பளித்து அவர்களின் திறமையை பயன்படுத்திக் கொண்டன. ஆனால், சிஎஸ்கே அணி வழக்கமான ஃபார்முலாவுடன் அனுபவமான சர்வதேச வீரர்களைத் தேர்வு செய்கிறேன் என்ற ரீதியில் வீரர்களை தேர்வு செய்வதும், குறிப்பிட்ட வீரர்களை தக்க வைப்பதும் தோல்விக்கு மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாகும்.

CSK vs DC, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

தவறுகளில் இருந்து பாடம் கற்கவில்லை

ருதுராஜ், கான்வே ஜோடி சிறப்பான தொடக்கத்தை கடந்த சீசனில் வழங்கி 849 ரன்கள் குவித்து சிறந்த தொடக்க ஜோடியாக பெயரெடுத்தது. இவர்கள் இருவரும் பவர்ப்ளேயில் மட்டும் 619 ரன்களை சிஎஸ்கேவுக்கு சேர்த்துள்ளனர்.

ஆனால் இந்த சீசனில் நிலைமை அப்படியே தலைகீழாக இருக்கிறது. இந்த சீசனில் சிஎஸ்கேயின் பவர்ப்ளே ரன்ரேட் 10 அணிகளின் ரன்ரேட்டில் கடைசி இடத்தில் ஓவருக்கு 7 ரன் ரேட்டில் இருக்கிறது. தொடக்க ஆட்டக்காரராக ரவீந்திராவையும், திரிபாதியையும் களமிறக்கியது பலனளிக்கவில்லை.

இந்த சீசனில் நேற்றைய ஆட்டத்தில் முதன் முறையாக ஆடும் லெவனில் வாய்ப்புப் பெற்ற கான்வே தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார். அவருடன், முந்தைய சீசனில் கலக்கிய கேப்டன் ருதுராஜ் அல்லாமல் ரச்சின் ரவீந்திராவே தொடக்க வீரராக தொடர்ந்தார். சிஎஸ்கே அணியின் இந்த முயற்சி எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.

CSK vs DC, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஃபார்மில் இல்லாத வீரர்கள்

சிஎஸ்கே அணி இந்த ஐபிஎல் ஏலத்தில் 5 வீரர்களைத் தக்க வைத்து 10 அன்கேப்டு வீரர்கள், 6 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 20 பேரை வாங்கியது. புதிதாக சிஎஸ்கே அணிக்குள் வந்தவர்களில் பல வீரர்கள் கடந்த சீசன்களாகவே ஃபார்மில் இல்லாதவர்கள், உள்நாட்டுப் போட்டிகளிலும் பெரிதாக ரன் சேர்க்காதவர்கள்.

சாம் கரன், நேதன் எல்லீஸ், ஓவர்டன், திரிபாதி, தீபக் ஹூடா, விஜய் சங்கர், முகேஷ் சவுத்ரி ஆகியோரின் கடந்த சீசன்களின் ஃபார்மை ஆய்வு செய்தால் ஏன் இப்படிப்பட்ட வீர்ரகளை தேர்ந்தெடுத்தார்கள் என்ற கேள்வி எழும்.

சாம்கரனுக்கு இங்கிலாந்து அணியிலேயே வாய்ப்பு இல்லை, நேதன் எல்லீஸ் ஆஸ்திரேலிய அணியின் பேக்அப் பந்துவீச்சாளர், ஓவர்டன் இங்கிலாந்து அணியில் சமீபத்தில்தான் அறிமுகமாகியுள்ளார்.

திரிபாதி, தீபக் ஹூடா, விஜய் சங்கர், முகேஷ் சவுத்ரி ஆகியோரின் உள்நாட்டுப் போட்டியில் ஆடிய விதம், ஃபார்ம் ஆகியவற்றை ஆய்வு செய்தால் படுமோசமாக இருக்கிறது.

CSK vs DC, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கோட்டையில் அடிவாங்குவது சரியல்ல

சிஎஸ்கேயின் கோட்டையாக இருந்தது சேப்பாக்கம் மைதானம். இங்கு சிஎஸ்கே அணியை வெளியில் இருந்து ஓர் அணி வந்து தோற்கடிப்பது சுலபமல்ல. ஆனால், இந்த முறை 2008க்குப் பின் ஆர்சிபி வென்றுவிட்டது, 2010க்குப் பின் டெல்லி அணியும் சிஎஸ்கேவைபுரட்டி எடுத்துவிட்டது.

இந்தத் தோல்விகள் அனைத்தும், சிஎஸ்கே அணியில் ஏதோ தீவிரமான தவறு இருக்கிறது என்பதையும், அணியில் ஒட்டுமொத்த மாற்றம் செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

பழைய ஃபார்முலா இனியும் கைகொடுக்காது

சிஎஸ்கே அணியின் கடந்த கால ஃபார்முலா என்பது, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் 6 அல்லது 7 லீக் ஆட்டங்களை வென்றுவிடலாம். அதன்பின் வெளி மைதானங்களில் ஏதேனும் சில போட்டிகளில் வென்று ப்ளே ஆஃப் சென்றுவிடலாம். அதன்பின் அரையிறுதி, இறுதிப்போட்டிக்குள் நுழையும் ஃபார்முலாவையே சிஎஸ்கே பின்பற்றி வந்தது.

ஆனால், இந்த பழைய ஃபார்முலா இனிமேல் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்காது, அதற்குரிய சூழலையையும் எதிரணிகள் வழங்காது என்பதுதான் நிதர்சனம். சேப்பாக்கம் மைதானத்தில் ஆடுகளங்கள் மாற்றப்பட்டு, தன்மை மாறியுள்ளதால், எந்த நேரத்தில் ஆடுகளம் எப்படி செயல்படும் என்பது கணிக்க முடியாததாகியுள்ளது. ஆனால், இன்னும் சிஎஸ்கே அணி பழைய ஃபார்முலாவை கையில் வைத்திருப்பது வெற்றிக்கு உதவாது.

அது மட்டுமல்லாமல், சிஎஸ்கேஅணியில் எந்தெந்த வீரர்கள் வழக்கமாக களமிறங்குவார்கள் எனத் தெரிந்து அதற்கேற்றபடி தனித்தனியாக திட்டத்துடன் எதிரணியினர் களமிறங்கி விக்கெட்டை வீழ்த்துகிறார்கள். ஆதலால், சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றிகளை அள்ளிவிடலாம் என்று சிஎஸ்கே நினைப்பது கடந்த காலம்.

CSK vs DC, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

தோனி பற்றி ரசிகர்கள் கருத்து

சிஎஸ்கே அணிக்காக 5 கோப்பைகளைப் பெற்றுக் கொடுத்தவர், ஜாம்பவான் என்பதை ஒப்புக்கொண்டாலும், வயது மூப்பு என்பது அவரையும் அறியாமல் பேட்டிங்கில் ஒருவிதமான மந்தத்தன்மையை ஏற்படுத்துகிறது. பரபரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனியை பார்த்த ரசிகர்கள் நேற்று ஆடிய தோனியின் பேட்டிங்கை கண்கொண்டு பார்க்க முடியாமல் மனம் குமுறினர்.

இதனால் போட்டி முடிந்தவுடன் "தோனி ரிட்டயர்மென்ட்" என்ற ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் டிரண்டாகியது. தோனி நேற்றைய ஆட்டத்தில் 19 பந்துகளைச் சந்தித்த பின்புதான் முதல் பவுண்டரியே அடித்தார். ஆட்டத்தின் சூழல் தெரிந்தும், தன்மை அறிந்தும் பிஞ்ச் ஹிட்டர் போல் அதிரடியாக ஆட முயலாமல் ஆமை வேகத்தில் பேட் செய்து தோல்வி கிட்டத்தட்ட உறுதியான பிறகே கடைசி ஓவரில் சிக்ஸ, பவுண்டரி அடித்து ரசிகர்களை தோனி வெறுப்பேற்றினார்.

தோனி ஓய்வு பற்றி ஃபிளமிங் கூறியது என்ன?

தோனியின் ஓய்வு குறித்து சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில் "தோனியிடம் ஓய்வு குறித்து பேசுவது என் வேலையல்ல. எனக்கு அது குறித்து ஏதும் தெரியாது. அவர் அணியில் இருக்கும்வரை அவருடன் சேர்ந்து பணியாற்றுவதை விரும்புகிறேன். தோனி இன்னும் வலிமையாக இருக்கிறார், நான் கூட இதுவரை தோனியிடம் ஓய்வு குறித்து கேட்டதில்லை, நீங்கள்தான் (ஊடகங்கள்) கேட்கிறீர்கள்" எனத் தெரிவித்தார்.

CSK vs DC, தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிஎஸ்கேவுக்கு எச்சரிக்கை மணி

கிரிக்இன்போ தளத்துக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் அளித்த பேட்டியில் " டாப் ஆர்டர் ஃபயர் ஆகாமல் துபேயும் விரைவாக ஆட்டமிழந்துவிட்டால் சிஎஸ்கே அணி அவ்வளவுதான். சிஎஸ்கே அணியில் உள்ள பேட்டர்கள் வெற்றிக்காக முயற்சி கூட செய்வதில்லை, இதுபோன்ற அணுகுமுறை எனக்கு வியப்பாக இருக்கிறது. ஒருமுறை அல்ல இருமுறை சிஎஸ்கே இந்த சீசனில் மோசமாக ஆடி விரைவாக விக்கெட்டுகளை இழந்துள்ளது நல்ல அறிகுறியல்ல. சிஎஸ்கே அணி இந்த சீசனில் இதுவரை 17 வீரர்களை மாற்றிப் பயன்படுத்தியும் எந்த பலனும் இல்லை. இதற்கு முன் 2015ல் 14 வீரர்கள், 2021-ல் 16 வீரர்களை மாற்றியது" எனத் தெரிவித்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c89g7gejv2lo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சன்ரைசர்ஸ் 4-வது தோல்வி: குஜராத் அணிக்காக பேட்டிங், பவுலிங்கில் ஜொலித்த தமிழக வீரர்கள்

ஐபிஎல் 2025, GT vs SRH

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 7 ஏப்ரல் 2025, 02:06 GMT

ஹைதராபாத்தில் நேற்று (ஏப்ரல் 6) நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 19-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.

முதலில் பேட்செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை சேர்த்தது. 153 ரன்கள் என்னும் இலக்கைத் துரத்திய குஜராத் அணி 16.4 ஓவர்களில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் குஜராத் அணி 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது. சன்ரைசர்ஸ் அணி 5 போட்டிகளில் 4 தோல்விகளுடன், ஒரு வெற்றியுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.

ஒருதரப்பாக மாறிய ஆட்டம்

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒருதரப்பாகவே அமைந்தது. கடந்த சீசனில் இருந்து அதிரடி ஃபார்முலாவை கையில் எடுத்து ஆடிவரும் சன்ரைசர்ஸ் அணிக்கு இந்த சீசனில் அந்த ஃபார்முலா வெற்றியைத் தரவில்லை.

பந்துவீ்ச்சிலும், பேட்டிங்கிலும் சன்ரைசர்ஸ் அணியினர் சராசரிக்கும் குறைவாகவே செயல்பட்டனர். சன்ரைசர்ஸ் அணியில் ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்கவில்லை. அந்த அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி (31), கிளாசன்(27), கம்மின்ஸ் (22) ஆகியோர் மட்டுமே ரன்கள் சேர்த்தனர்.

ஆனால் குஜராத் அணியினர் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் அற்புதமாகச் செயல்பட்டனர். பவர்ப்ளேயில் விக்கெட் வீழ்த்தி நெருக்கடியளித்தது, நடுப்பகுதியில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசியது, டெத் ஓவர்களை சிறப்பாக வீசியது, பேட்டிங்கிலும் 2வது விக்கெட்டுக்கு பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தது என குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிக்கு உரியதாகவே இருந்தது.

ஐபிஎல் 2025, GT vs SRH

பட மூலாதாரம்,GETTY IMAGES

தலை நிமிர வைத்த தமிழக வீரர்கள்

இந்த ஐபிஎல் தொடரில் அதிக எண்ணிக்கையில் தமிழக வீரர்கள் இருக்கும் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணிதான். இந்த அணியில் தமிழக வீரர்கள் சாய் கிஷோர், சுதர்சன், வாஷிங்டன் சுந்தர், ஷாருக்கான் ஆகியோர் உள்ளனர். ஒவ்வொரு போட்டியிலும் தமிழக வீரர்கள் தங்கள் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் குஜராத் வெற்றியில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள் என்பது மறுப்பதற்கில்லை.

கடந்த சில போட்டிகளாக பேட்டிங்கில் சாய் சுதர்சன் ஆதிக்கம் செலுத்திய நிலையில் இந்த ஆட்டத்தில் பந்துவீச்சில் சாய் கிஷோரும், பேட்டிங்கில் வாஷிங்டன் சுந்தரும் சிறப்பாக செயல்பட்டனர். வாஷிங்டன் சுந்தர் 29 பந்துகளில் 49 ரன்கள் (2சிக்ஸர், 5பவுண்டரி) விளாசி வெற்றிக்கு துணையாகினார்.

இதுநாள்வரை ஐபிஎல் தொடர்களில் கடைசிவரிசையில் களமிறங்கி வந்த வாஷிங்டன் சுந்தரை குஜராத் அணி நேற்றைய ஆட்டத்தில் 4வது வீரராகக் களமிறக்கியது.

சிறந்த ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சன்ரைசர்ஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். சிமர்ஜித் சிங் ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என சுந்தர் விளாசவே, அத்தோடு சிமர்ஜித்துக்கு ஓவர் நிறுத்தப்பட்டது. கம்மின்ஸ் பந்துவீச்சில் பவுண்டரி, ஷமி பந்துவீச்சில் பவுண்டரி என சுந்தர் விளாசினார். 168 ஸ்ட்ரைக் ரேட்டில் சுந்தர் அதிரடியாக பேட் செய்து வியக்க வைத்தார்.

பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தருக்கு குஜராத் அணி வாய்ப்புக் கொடுக்காவிட்டாலும் பேட்டிங்கில் தன்னால் சிறப்பாக 4வது வரிசையில் விளையாட முடியும் என்பதை சுந்தர் நிரூபித்துவிட்டார்.

சுப்மன் கில்லுடன் 3வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த வாஷிங்டன் சுந்தர் 90 ரன்கள் சேர்த்தார். குஜராத் அணியில் 3வது விக்கெட்டுக்கு சேர்க்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுவாகும். பந்துவீச்சில் சாய் கிஷோர் 4 ஓவர்கள் வீசிய 24 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

தமிழக வீரர்கள் 4 பேரில் வாஷிங்டன் சுந்தர் மட்டுமே கேப்டு (capped) வீரர், சர்வதேச அனுபவம் கொண்டவர். ஆனால் மற்ற 3 வீரர்களும் அன்கேப்டு (uncapped) வீரர்கள், சர்வதேச அனுபவம் இல்லாத நிலையிலும் இவர்களின் ஆட்டம் தமிழகத்தை தலைநிமிர வைக்கிறது.

இன்னும் இந்திய அணியின் கதவுகள் சாய் சுதர்சனுக்கும், கிஷோருக்கும் ஏன் திறக்கப்படவில்லை என்ற கேள்வியை இந்த ஆட்டம் விட்டுச் செல்கிறது.

ஐபிஎல் 2025, GT vs SRH

பட மூலாதாரம்,GETTY IMAGES

யார் வெற்றியாளர்கள்?

வெற்றிக்குப்பின் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பேசுகையில் "பந்துவீச்சாளர்கள்தான் ஆட்டத்தை மாற்றியவர்கள். ஏராளமானோர் டி20 குறித்தும், பேட்டிங், பந்துவீச்சு குறித்துப் பேசுகிறார்கள். எங்களைப் பொருத்தவரை போட்டியில் வெற்றி பெற செய்வது பந்துவீச்சாளர்கள்தான். அதனால்தான் எங்கள் அணியில் பந்துவீ்ச்சுக்கு முக்கியத்துவம் அளிப்போம். பவர்ப்ளேயில் டெஸ்ட் போட்டி நுட்பத்தை பயன்படுத்தினோம். பேட்டிங் செய்யும் வாஷிங்டனும், நான் பேசிக்கொண்டு பேட் செய்தோம், சுந்தர் அடித்த பல ஷாட்களும் அற்புதமானவை.

முன்பு மும்பைக்கு எதிரான போட்டி கடும் நெருக்கடியானதாக இருந்தது, வாஷிங்டன் கால்காப்பு கட்டி தயாராகஇருந்தாலும் இம்பாக்ட் விதியால் அவரால் களமிறங்க முடியவில்லை. இந்த ஆட்டத்தில் கூடுதல் சுழற்பந்துவீச்சாளராகவும், பேட்டராகவும் சுந்தரைக் காண முடிந்தது. இருவருக்கும் இடையே நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்தது இதனால், அணியை வெற்றிக்கு கொண்டு சேர்க்க முடிந்தது. சிராஜ் பந்துவீச்சு அருமையாக இருந்தது, அவரின் பந்துவீ்ச்சில் புதிய உத்வேகம், காணப்படுகிறது" எனத் தெரிவித்தார்.

ரஷித்கானை ஓரங்கட்டிய சாய் கிஷோர்

குஜராத் அணியில் இருக்கும் ரஷித் கான் இந்த சீசன் தொடங்கியதிலிருந்தே மோசமாகப் பந்துவீசி வருகிறார். இந்த ஆட்டத்தில் கூட 4 ஓவர்கள் வீசி 31 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டைக்கூட வீழ்த்தவில்லை. சிறப்பாக தொடங்கினாலும் ரஷித்தான் 3வது போட்டியாக விக்கெட் வீழ்த்தாமல் ஃபார்மின்றி இருக்கிறார்.

ஆனால், தமிழகத்தன் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் சாய் கிஷோர், ரஷித்கான் பந்துவீச்சைவிட குறைந்த வேகத்தில் பந்துவீசியதால், பந்து நன்றாக டர்ன் ஆகியது, பந்துவீச்சிலும் பல்வேறு வேரியேஷன்களை கிஷோர் வெளிப்படுத்தினார். இதனால் மிகப்பெரிய விக்கெட்டான கிளாசனையும்(27), நிதிஷ் குமார் (31)விக்கெட்டையும் சாய் கிஷோர் எளிதாக வீழ்த்தினார். ரஷித் கான் பந்துவீச்சை கையாள்வதில் சன்ரைசர்ஸ் பேட்டர்கள் சிரமப்பட்டதைவிட, சாய் கிஷோர் பந்துவீச்சை ஊகித்து ஆடுவதில்தான் பெரும் சிரமப்பட்டனர்.

ஐபிஎல் 2025, GT vs SRH

பட மூலாதாரம்,GETTY IMAGES

வியக்க வைத்த 'வாஷி'

குஜராத் அணியால் வாங்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர் முதல்முறையாக இந்த ஆட்டத்தில் களமிறங்கினார். தன்னுடைய சிறுவயது பள்ளி தோழன் சாய் சுதர்சன் ஆட்டமிழந்தபின் வாஷிங்டன் சுந்தர் 4வது வீரராக களமிறங்கினார். இதற்கு முன் ஐபிஎல் தொடரில் எந்த அணியும் வாஷிங்டனை 4வது இடத்தில் களமிறக்கியதில்லை என்ற நிலையில் அவரை துணிந்து குஜராத் அணி களமிறக்கியது.

பவர்ப்ளேயின் கடைசி ஓவரைச் சந்தித்த வாஷிங்டன் சுந்தர், சிமர்ஜித் சிங் ஓவரில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளை விளாசினா். 2016 ஆம் ஆண்டு டிஎன்பிஎல் தொடரில் அபினவ் முகுந்துடன் சேர்ந்து தொடக்க ஆட்டக்காரராக வாஷிங்டன் சுந்தர் களமிறங்கி வெளுத்து வாங்கிய அதே நினைவுகளை சுந்தர் கண்முன் நிறுத்தினார். அதிரடியாக பேட்செய்த வாஷிங்டன் 168 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி ஒரு ரன்னில் அரைசதத்தை தவறவிட்டார். ஆனால், அரைசதத்தை தவறவிட்டாலும் வாஷிங்டன் பேட்டிங் அரைசதத்துக்கும் மேலானது என்று வர்ணனையாளர்கள் தெரிவித்தனர்.

தொடக்கத்திலேயே குஜராத் அணி சாய் சுதர்சன், பட்லர் இருவரின் விக்கெட்டை இழந்து தடுமாறினாலும், கேப்டன் கில், வாஷிங்டன் கூட்டணி அணியைதூக்கி நிறுத்தியது. பவர்ப்ளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள்ச சேர்த்தது.

கேப்டனுக்குரிய பொறுப்புடன் பேட் செய்த சுப்ம ன் கில் 36 பந்துகளில் அரைசதம் அடித்து 61 ரன்களிலும், ரூதர்போர்ட் கேமியோ ஆடி 35 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

ஐபிஎல் 2025, GT vs SRH

பட மூலாதாரம்,GETTY IMAGES

சன்ரைசர்ஸ் அணியின் சறுக்கல்

ஹைதராபாத்தில் வழக்கமான பேட்டிங் பிட்சாக இருந்திருந்தால் ஆட்டம் இன்னும் ஸ்வரஸ்யமாக இருந்திருக்கும். ஆனால், நிதானமாக பேட் செய்யக்கூடிய, சற்று மந்தமான ஆடுகளத்தை, பொறுமையாக ஆடக்கூடிய ஆடுகளத்தை அமைத்தது.

இதனால் பேட்டர்களை நோக்கி பந்து வேகமாக வருவதுபோல் தெரிந்தாலும் பிட்சில் பந்துபட்டவுடன் நின்று மெதுவாகவே பேட்டரை நோக்கி வரும்போது எதிர்பார்த்த ஷாட்ளை பேட்டர்களால் ஆட முடியவில்லை. இதனால் டிராவிஸ் ஹெட், அபிஷேக், இஷான் கிஷன் ஆகிய 3 அதிரடி பேட்டர்களும் சொற்பரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர்.

கடந்த 5 போட்டிகளாக சன்ரைசர்ஸ் அணி பவர்ப்ளேயில் விக்கெட்டுகளை இழந்ததுதான் தோல்விக்கு முக்கியக் காரணமாகும். இந்த 5 போட்டிகளில் மட்டும் பவர்ப்ளேயில் மட்டும் சன்ரைசர்ஸ் அணி 12 விக்கெட்டுகளை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பவர்ப்ளே ஓவர்களை பந்துவீச்சிலும்,பேட்டிங்கிலும் பயன்படுத்திக்கொண்ட அணி, சிறப்பான வெற்றியைப் பெறுகிறது என்பது புள்ளிவிவரங்கள் மூலம் அறியலாம்.

டிராவிஸ் ஹெட், அபிஷேக் இருவருமே கடந்த சீசன்களில் அதிரடியான தொடக்கத்தை அளித்து எதிரணிகளை கதிகலங்க வைத்தவர்கள். ஆனால் இருவரும் இந்த ஆட்டத்தில் பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்தனர். முதல் சிக்ஸரை சன்ரைசர்ஸ் அணி 13வது ஓவரில்தான் அடித்தது.

சன்ரைசர்ஸ் அணியில் டாப்ஆர்டர் 3 பேட்டர்களைத் தவிர்த்து கிளாசன், நிதிஷ் குமார் ரெட்டி, அனிகேத் வர்மா, மெண்டிஸ், கம்மின்ஸ் என வீரர்கள் இருந்தும், ஒரு வீரர்கூட அரைதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கம்மின்ஸ் கடைசி நேரத்தில் கேமியோ ஆடி 22 ரன்களைச் சேர்த்ததால் ஸ்கோர் 150 ரன்களைக் கடந்தது இல்லாவிட்டால் மோசமாகியிருக்கும்.

இங்கிலாந்து அணி கடைபிடிக்கும் பாஸ்பால் ஃபார்மெட்டையே சன்ரைசர்ஸ் அணியும் கையில் எடுத்துள்ளது. அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்குவது, எதிரணி பந்துவீச்சை துவம்சம் செய்து மனரீதியாக குழப்பி அவர்களை வெல்வது, பெரிய ஸ்கோரை அடித்து, எதிரணிகளை எளிதாக வீழ்த்துவது என்ற அதிரடி ஃபார்முலாவை சன்ரைசர்ஸ் கையாண்டது.

ஆனால், கடந்த சீசனில் அந்த அணிக்கு சிறப்பாக செயல்பட்ட இந்த அதிரடி ஃபார்முலா இந்த சீசனுக்கு எடுபடவில்லை, 5 போட்டிகளிலும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் சன்ரைசர்ஸ் அணி 4 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது.

பந்துவீச்சில் 7 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் குஜராத் அணியில் பெரிதாக விக்கெட் வீழ்த்தவில்லை. மென்டிஸ், அபிஷேக், சிமர்ஜித் சிங் ஆகியோர் தலா ஒரு ஓவர் வீசிய 20ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். ஷமி, கம்மின்ஸ், ஜீசன் அன்சாரி ஆகிய 3 பந்துவீச்சாளர்கள் மட்டுமே கட்டுக்கோப்புடன் பந்துவீசினர். ஷமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஐபிஎல் 2025, GT vs SRH

பட மூலாதாரம்,GETTY IMAGES

மிரள வைத்த முகமது சிராஜ்

சாம்பியன்ஸ் டிராபிக்கு இந்திய அணியில் தேர்ந்தெடுக்காதது, ஆர்சிபி அணி ஏலத்தில் சிராஜை கழற்றிவிட்டது ஆகியவற்றால் விரக்தியில் இருந்த முகமது சிராஜ் தனது பந்துவீச்சால் பதில் அளித்தார். தன்னை தவறவிட்டது தவறு என்பதை பிசிசிஐக்கும், ஆர்சிபி அணிக்கும் பந்துவீச்சு மூலம் சிராஜ் உணர்த்தினார்.

கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சிராஜ்-ஹெட் உரசிக்கொண்ட நிலையில் இந்த ஆட்டத்தில் முதல் ஓவரிலேயே டிராவிஸ் ஹெட் விக்கெட்டை சிராஜ் வீழ்த்தினார். அதன்பின் அபிஷேக் சர்மா(18), அனிகேத் வர்மா(18), சிமர்ஜித் சிங் ஆகியோரின் விக்கெட்டுகளை சிராஜ் வீழத்தினார். சிராஜின பந்துவீச்சு நேற்று சன்ரைரசர்ஸ் பேட்டர்களுக்கு உண்மையில் சிம்மசொப்னமாகத்தான் இருந்தது, ஒரு சிக்ஸர் கூட அடிக்கவிடாத சிராஜ், 3 பவுண்டரிகள் உள்பட 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார். சிராஜ் வீசிய 4 ஓவர்களில் 17 டாட் பந்துகள் அடங்கும்.

பிரசித் கிருஷ்ணா தனக்குரிய பங்களிப்பை சரியாகச் செய்து 4 ஓவர்களில் 25 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆனால் இஷாந்த் சர்மா மட்டுமே விக்கெட் இன்றி 54 ரன்களை வாரிவழங்கினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cyvq4znvq98o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோலி புதிய மைல் கல்: பரபரப்பான மும்பை - பெங்களூரு ஆட்டத்தில் திருப்பம் தந்த 3 ஓவர்கள்

MI vs RCB, கோலி - ரோஹித்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 20-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 12 ரன்களில் தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் சேர்த்தது. 222 ரன்கள் எனும் மிகப்பெரிய ஸ்கோரை துரத்திய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் சேர்த்தது.

இந்த போட்டியின் மூலம் விராட் கோலி புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். இந்த போட்டியில் திருப்புமுனையாக அமைந்த 3 ஓவர்களில் என்ன நடந்தது?

கோலி அதிவேக அரைசதம்

ஆர்சிபி அணி தொடக்கத்திலேயே பில் சால்ட் விக்கெட்டை இழந்தாலும், சால்ட் களத்தில் இல்லாத குறை தெரியாமல் ரசிகர்களை கோலி கவனித்துக்கொண்டார். பும்ரா ஓவரில் மிட்விக்கெட்டில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்ட கோலி, வில் ஜேக்ஸ் ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசினார். மும்பை பந்துவீச்சை தெறிக்கவிட்ட கோலி 18 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்து, அடுத்த 11 பந்துகளில் 15 ரன்கள் சேர்த்து 29 பந்துகளில் அரைசதம் அடித்தார். கடந்த 2018ம் ஆண்டுக்குப்பின் இந்த ஆட்டத்தில்தான் கோலி அதிக வேகமாக 30 பந்துகளுக்குள் அரைசதம் அடித்துள்ளார்.

MI vs RCB, கோலி - ரோஹித்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பட்டிதார், ஜிதேஷ் பங்களிப்பு

ஆர்சிபி ஸ்கோர் உயர்ந்ததில் ஜிதேஷ் சர்மா, கேப்டன் பட்டிதாரின் பங்களிப்பு முக்கியமானது. 5-வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 69 ரன்கள் சேர்த்தனர். 19 பந்துகளைச் சந்தித்த ஜிதேஷ் சர்மா 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 40 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பட்டிதார் மும்பை பந்துவீச்சாளர்களில் ஜேக்ஸ், ஹர்திக், போல்ட், தீபக் சஹர் பந்துவீச்சை உரித்தெடுத்துவிட்டார். இவர்களின் பந்துவீச்சில் சிக்ஸர், பவுண்டரி என பட்டிதார் பறக்கவிட்டு 25 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்து கேப்டனுக்குரிய பொறுப்புடன் பேட் செய்தார். இருவரின் ஆட்டம் ஆர்சிபி பெரிய ஸ்கோரை எட்டகாரணமாக இருந்தது.

ஏனென்றால் இதற்கு முந்தைய 6 ஆட்டங்களிலும் 190வரை ஸ்கோர் செய்தும் ஆர்சிபியால் டிபெண்ட் செய்ய முடியவில்லை என்பதால், 200 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் ஸ்கோர் செய்தனர்.

MI vs RCB, கோலி - ரோஹித்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பும்ரா வருகை தாக்கம் ஏற்படுத்தியதா?

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஜஸ்பிரித் பும்ரா வருகை தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கணிக்கப்பட்டது. ஆனால், பும்ரா வீசிய முதல் ஓவரிலேயே விராட் கோலி, சிக்ஸருக்கு பறக்கவிட்டு, கிங் கோலி என்பதை நிரூபித்தார். 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்த பும்ரா விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை,

MI vs RCB, கோலி - ரோஹித்

பட மூலாதாரம்,GETTY IMAGES

திக் திக் ஆட்டம்

ஐபிஎல் டி20 போட்டியில் "ரைவலரி வாரம்" என்று அடையாளப்படுத்தப்பட்டு போட்டிகள் நடக்கைகயில் முதல் ஆட்டமே ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிறச் செய்தது. ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, நமன்திர் களத்தில் இருக்கும்வரை வெற்றி யாருக்கு என்பது உறுதியில்லாமல் இருந்தது, ஆட்டம் மும்பை அணி பக்கமோ அல்லது ஆர்சிபி பக்கமோ சாயலாம் என்ற ரீதியில் இருந்தது.

ஆனால், புவனேஷ்வர் வீசிய 18வது ஓவர், ஹேசல்வுட் வீசிய 19வது ஓவர், க்ருணால் பாண்டியா வீசிய 20-வது ஓவர் ஆகியவை வெற்றியை ஆர்சிபி பக்கம் மாற்றியது. இந்த 3 ஓவர்கள்தான் ஆர்சிபிஅணிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக மாறின.

மும்பை அணியின் முயற்சியையும் குறைத்து மதிப்பிடக்கூடாது. 99 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மும்பை தடுமாறியது. வெற்றிக்கு 8 ஓவர்களில் 122 ரன்கள் தேவைப்பட்டது.

ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா கூட்டணி ஆட்டத்தின் போக்கையே மாற்றி, 34 பந்துகளில் 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தினர். 4வது விககெட்டுக்கு188 ரன்களுடன் மும்பை வலுவாகஇருந்தது, ஆனால், கடைசி 21 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை மும்பை அணி இழந்தது, அதிலும் க்ருணால் பாண்டியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை இழந்தது மும்பை அணி.

MI vs RCB, கோலி - ரோஹித்

பட மூலாதாரம்,GETTY IMAGES

போராடிய மும்பை அணி

மும்பை அணியின் கரங்களில் இருந்த வெற்றியை ஆர்சிபியின் ஹேசல்வுட், புவனேஷ்வர், க்ருணால் பாண்டியா சேர்ந்து பறித்துவிட்டார்கள் என்றுதான் கூற முடியும். ஒருவேளை ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா களத்தில் இருந்திருந்தால், நிச்சயம் மும்பை அணி வெற்றி பெற்றிருக்கும்.

ஏனென்றால், நேற்று ஹர்திக் பாண்டியா "வின்டேஜ் வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்கள்" போல் விளாசினார், அவரின் பேட்டிலிருந்து சிதறிய ஷாட்கள் ஒவ்வொன்றும் மின்னல் வேகத்தில் பவுண்டரி, சிக்ஸரை அடைந்தன, ராட்சதனைப் போல் பேட் செய்த ஹர்திக் கண்களில் வெற்றி தீப்பொறி பறந்தது. 15 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் என 42 ரன்களில் ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தார்.

கிரிக்இன்போ கணிப்பின்படி, 47 பந்துகளில் மும்பை வெற்றிக்கு 123 ரன்கள் தேவை என்றபோது அதன் வெற்றி சதவீதம் 1.89 என இருந்தது. ஆனால், திலக் வர்மா 18-வது ஓவரில் ஆட்டமிழந்தபோது மும்பை வெற்றி சதவீதம் 48.42 சதவீதமாக உயர்திருந்து வெற்றிக்கு அருகேதான் இருந்தது.

கடந்த ஆட்டத்தில் ரிட்டயர் அவுட் மூலம் திலக் வர்மாவை மும்பை அணி அழைத்துக்கொண்ட நிலையில் இந்த ஆட்டத்தில் திலக் வெளுத்து வாங்கினார். 29 பந்துகளில் 4 சிக்ஸர், 4பவுண்டரி என 56 ரன்கள் சேர்த்தார். ஹர்திக், திலக் வர்மா கூட்டணிதான் ஆட்டத்தின் போக்கை மாற்றி, ஸ்வரஸ்யத்தைச் சேர்த்தது.

MI vs RCB, கோலி - ரோஹித்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹேசல்வுட், சூயஷ் கட்டுக்கோப்பு

மும்பை அணியின் வெற்றியை பறித்ததில் ஹேசல்வுட்டின் துல்லியமான லென்த் பந்துவீச்சும், சூயஷ் சர்மாவின் சுழற்பந்துவீச்சும் முக்கியக் காரணம். சூயஷ் விக்கெட் ஏதும் வீழ்த்தாவிட்டாலும் அவரின் 4 ஓவர்களில் மும்பை பேட்டர்கள் 32 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. ஹேசல்வுட் பந்துவீச்சில் ரிக்கெல்டன் விக்கெட்டை வீழ்த்தி 37 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

சூர்யகுமார் அடித்த ஷாட்களில் இரு கேட்சுகளை நேற்று ஆர்சிபி அணியினர் தவறவிட்டனர். முதல் கேட்சை சூயஷ் சர்மாவும், 2வது கேட்சை யாஷ்தயாலும், விக்கெட் கீப்பர் சர்மாவும் பிடிக்க முயன்று மோதிக்கொண்டு கேட்சைவிட்டனர். ஆனால், இந்த வாய்ப்பை பயன்படுத்தாத சூர்யகுமார் 12வது ஓவரில் யாஷ் தயாலிடம் விக்கெட்டை இழந்தார்.

MI vs RCB, கோலி - ரோஹித்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெற்றியைத் தீர்மானித்த கடைசி 3 ஓவர்கள்

கடைசி 18 பந்துகளில் மும்பை வெற்றிக்கு 41 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா இருந்தனர். புவனேஷ்வர் வீசிய 18-வது ஓவரில் ஹர்திக் புவுண்டரி அடிக்கவே, அதே ஓவரில் திலக் வர்மா ஆப்சைடில் சென்ற பந்தை சிக்ஸருக்கு அடிக்க முயன்று சால்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்துவந்த நமன்திர் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி பதற்றத்தைக் குறைத்தார்

19-வது ஓவரை ஹேசல்வுட் வீசினார். மும்பை வெற்றிக்கு 12 பந்துகளி்ல் 28 ரன்கள் தேவைப்பட்டது. ஹேசல்வுட் வீசிய முதல் பந்திலேயே ஹர்திக் பாண்டியா மிட்விக்கெட்டில் அடித்த ஷாட்டை லிவிங்ஸ்டோன் கேட்ச் பிடிக்கவே ஆட்டத்தில் பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. அடுத்துவந்த சான்ட்னர் சிக்ஸர் விளாசி ஆட்டத்தை நெருக்கமாகக் கொண்ட சென்றார்.

கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. க்ருணால் பாண்டியா பந்துவீசினார். களத்தில் சான்ட்னர், நமன்திர் இருவரும் இருந்தனர். க்ருணால் வீசிய முதல் பந்து சிக்ஸருக்கு செல்லும் என எதி்பார்த்தபோது, லாங் ஆப் திசையில் உயரமான பீல்டர் டிம் டேவிட் அற்புதமான கேட்சைப் பிடித்தார்.

அடுத்துவந்த தீபக் சஹர் வந்தவுடன் சிக்ஸருக்கு பந்தை விரட்டமுயன்றார். ஆனால், பவுண்டரி எல்லையில் கேட்ச் பிடித்த சால்ட், பவுண்டரி கோட்டுக்குள் செல்ல முயன்றபோது டிம் டேவிட்டிடம் பந்தை தூக்கிவீசினார். தொடர்ந்து இருவிக்கெட்டுகளை மும்பை இழந்தது. அதன்பின் நமன்திர் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார். 5வது பந்தில் நமன்திர் லெக்திசையில் யாஷ் தயாலிடம் கேட்ச் கொடுக்கவே மும்பையின் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த 3 ஓவர்கள்தான் வெற்றி யார் பக்கம் என்பதை தீர்மானித்தது.

MI vs RCB, கோலி - ரோஹித்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வேற லெவலில் ஆர்சிபி

கடைசியாக 2015ம் ஆண்டு வான்ஹடே மைதானத்தில் மும்பை அணியை 39 ரன்களில் ஆர்சிபி வென்றிருந்தது. அதன்பின் சரியாக 10 ஆண்டுகளுக்குப்பின் இதே வான்ஹடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை நேற்று ஆர்சிபி அணி வீழ்த்தியுள்ளது. இதற்கு முன் 6 முறை மும்பையுடன் மோதியும் ஒருமுறைகூட ஆர்சிபி வெல்லவில்லை. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி சேர்த்த ஸ்கோரும் மும்பை அணிக்கு எதிராகச் சேர்த்த 2வது அதிகபட்ச ஸ்கோராகும்.

ஏற்கெனவே சென்னையில் சிஎஸ்கே அணியை 17ஆண்டுகளுக்குப்பின் வெற்றி கண்டு வரலாறு படைத்த ஆர்சிபி, இப்போது மும்பை இந்தியன்ஸுக்கு எதிராகவும் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது.

ஆர்சிபி அணியின் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக இருந்த கேப்டன் ரஜத்பட்டிதாருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இவர் 32 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இது தவிர விராட் கோலியின் 42 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்த அற்புதமான ஆட்டம், தேவ்தத் படிக்கலின் (37) கேமியோ, கடைசி நேரத்தில் மும்பை பந்துவீச்சை வெளுத்துவாங்கி 19 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்த ஜிதேஷ் சர்மா ஆகியோரும் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக்காரணமாகும்.

MI vs RCB, கோலி - ரோஹித்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"பந்துவீச்சாளர்கள்தான் ஆட்டநாயகர்கள்"

வெற்றிக்குப்பின் ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் பேசுகையில் " அற்புதமான ஆட்டம், வெற்றிக்கு கடினமாக உழைத்தோம். பந்துவீச்சாளர்கள்தான் உண்மையான ஆட்டநாயகர்கள், அவர்களுக்கு என் விருதை சமர்ப்பிக்கிறேன். அவர்களின் துணிச்சலை வெளிப்படுத்தி கடைசி 3 ஓவர்களில் ஆட்டத்தை மாற்றினர். இந்த மைதானத்தில் ரன்களைக் கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை, அதைசெய்துள்ளோம். வேகப்பந்துவீச்சாளர்கள் தங்கள் திட்டத்தை துல்லியமாக செயல்படுத்தினர். க்ருணால் பாண்டியா வீசிய கடைசி ஓவர் ஆட்டத்தை திருப்பியது. சூயஷ் சர்மா எங்களின் துருப்புச்சீட்டு,விக்கெட் டேக்கிங் பந்துவீச்சாளர். அவர் விக்கெட் எடுக்காவிட்டாலும் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தினார். இந்த வெற்றி பந்துவீச்சாளர்களுக்குரியது" எனத் தெரிவித்தார்.

ரோஹித்தை துரத்தும் துயரம்

முந்தைய ஆட்டத்தில் விளையாடாத ரோஹித் சர்மா நேற்றைய ஆட்டத்தில் மீண்டு வந்தாலும் அவரது ஆட்டத்தில் பழைய வேகத்தை காண முடியவில்லை. ஐபிஎல் பவர்பிளே ஓவர்களில் அவரது ஆட்டம் மோசமாகவே இருப்பதாக தரவுகள் கூறுகின்றன. 2023-ம் ஆண்டுக்குப் பிறகு பவர் பிளே ஓவர்களில் (குறைந்தது 200 பந்துகளை சந்தித்த பேட்டர்கள்) ரோஹித்தின் சராசரி ரன் 24.59 ஆக இருக்கிறது.

அந்த வகையில் விரித்திமான் சாஹா மட்டுமே ரோஹித்தை விட குறைந்த சராசரியை வைத்திருக்கிறார். அதுவே, 2024-ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டால் குறைந்தது 180 பந்துகளை சந்தித்த பேட்டர்களில் ரோஹித்தின் 27.90 என்ற சராசரியே மிகவும் குறைவாகும்.

MI vs RCB, கோலி - ரோஹித்

பட மூலாதாரம்,GETTY IMAGES

புதிய மைல்கல்லை எட்டிய விராட் கோலி

விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ரன்களை நேற்று கடந்தார். டி20 ஃபார்மெட்டில்13 ஆயிரம் ரன்களைக் கடந்த 5வது வீரர் எனும் பெருமையை கோலி பெற்றார். 386 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை அதிவேகமாக எட்டிய 2வது வீரராக கோலி இருக்கிறார். கிறிஸ் கெயில் 381 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cgkgmrlyjn8o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னையை கலங்கடித்த 'தனி ஒருவன்': ஹாட்ரிக் சிக்சர், பவுண்டரியுடன் சதம் தொட்ட 'இடது கை சேவாக்' யார்?

CSK vs PBKS, பிரியன்ஸ் ஆர்யா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பிரியன்ஸ் ஆர்யா மற்றும் தோனி

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 9 ஏப்ரல் 2025, 03:01 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஐபிஎல் டி20 போட்டியின் 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி. இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யாவின அதிரடி சதம், சஷாங் சிங்கின் அரைசதம் ஆகியவை பஞ்சாப் அணி வெல்லக் காரணமாக அமைந்தன.

முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் சேர்த்தது. அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் சேர்த்து 18 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியால் பஞ்சாப் அணி 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று 4வது இடத்துக்கு முன்னேறியது. சிஎஸ்கே அணி 5 போட்டிகளில் ஒரு வெற்றி 4 தோல்விகளுடன் 9வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணி சந்திக்கும் தொடர் 4வது தோல்வியாகும்.

வெறும் 39 பந்துகளில் சதம் அடித்து சாதனை ஏடுகளில் இடம் பிடித்த இளம் வீரரான பிரியான்ஷ் ஆர்யா யார்? சிஎஸ்கே தோல்விக்கு என்ன காரணம்?

ஆர்யா தனி ஆவர்த்தனம்

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியில் விக்கெட்டுகள் ஒருபக்கம் சரிந்தநிலையில் பிரியான்ஷ் ஆர்யா மட்டும் தனது பேட்டிங் ஸ்டைலையும், அதிரடியையும் குறைக்கவில்லை.

தொடக்கத்திலேயே ஆர்யா ஆட்டமிழக்க வேண்டிய நிலையில் கலீல் அகமது கேட்சை தவறவிட்டார், 35 ரன்களில் இருந்தபோது விஜய் சங்கர் கேட்சை கோட்டைவிட்டார். இதை சரியாகப் பயன்படுத்திய ஆர்யா சிஎஸ்கே பந்துவீச்சை காலி செய்தார். அஸ்வின் பந்துவீச்சையும் ஆர்யா விட்டுவைக்கவில்லை. பொதுவாக இடதுகை பேட்டர்களுக்கு அஸ்வின் பந்துவீச்சை ஆடுவது கடினம் . ஆனால், நேற்று அஸ்வின் ஓவரில் 10 பந்துகளில் 28 ரன்களை ஆர்யா விளாசினார்.

பவர்ப்ளேயில் பஞ்சாப் அணியின் ஸ்கோரை 3 விக்கெட்டுகளுக்கு 75 ரன்கள் வரை ஆர்யா உயர்த்தினார். பஞ்சாப் அணி 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த போது ஆர்யா அரைசதம் அடித்திருந்தார்.

5-வது விக்கெட்டுக்கு சஷாங் சிங்குடன் சேர்ந்து ஆர்யா அமைத்த 67 ரன் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. சிஎஸ்கே பந்துவீச்சை விளாசித் தள்ளிவிட்டார் ஆர்யா.

குறிப்பாக சிஎஸ்கே அணியின் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 310 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ஆர்யா பேட் செய்தார். சிஎஸ்கே வேகப்பந்துவீச்சாளர்களின் 20 பந்துகளைச் சந்தித்து 62 ரன்களை ஆர்யா குவித்தார். அதிலும் பதிராணாவின் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள், பவுண்டரி அடித்து சதத்தை ஆர்யா நிறைவு செய்தார்.

CSK vs PBKS, பிரியான்ஷ் ஆர்யா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சதம் அடித்த மகிழ்ச்சியில் பிரியான்ஷ் ஆர்யா

19 பந்துகளில் அரைசதத்தை எட்டிய ஆர்யா, அடுத்த 20 பந்துகளில் சதத்தை எட்டினார், அதாவது 13-வது ஓவரில் பஞ்சாப் அணி 150 ரன்களைத் தொட்டபோது, ஆர்யா சதம் அடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடரில் 5வது விக்கெட் விழுந்தபின் பஞ்சாப் அணி 136 ரன்கள் சேர்த்தது. ஐபிஎல் தொடரில் 5வது விக்கெட்டுக்குப் பின் சேர்க்கப்பட்ட 4வது அதிகபட்ச ஸ்கோராக இருந்தாலும், சிஎஸ்கேவுக்கு எதிராக இதுதான் அதிகபட்சமாகும்.

ஆர்யா ஆட்டமிழந்தபின் சஷாங் சிங் ஆட்டத்தை கையில் எடுத்து, யான்செனுடன் சேர்ந்து சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்துவாங்கினார். 36 பந்துகளில் அரைசதம் அடித்த சஷாங் சிங் 52 ரன்களுடனும், யான்சென் 34 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் அணி 200 ரன்களுக்கு மேல் சேர்க்க இருவரின் அதிரடி பேட்டிங் முக்கியக் காரணமாக இருந்தது.

பஞ்சாப் அணியில் ஆர்யா(103), சஷாங் சிங்(52), யான்சென்(34) ஆகியோர் சேர்த்ததுதான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற பேட்டர்கள் ஸ்ரேயாஸ்(9), பிரப்சிம்ரன்(0), ஸ்டாய்னிஷ்(4), நேஹல் வதேரா(9), மேக்ஸ்வெல்(1) ஆகியோர் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

CSK vs PBKS, பிரியான்ஷ் ஆர்யா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சஷாங் சிங்

சிஎஸ்கே ஆட்டம் எப்படி?

சிஎஸ்கே அணியைப் பொருத்தவரை கடந்த 4 போட்டிகளுடன் ஒப்பிடுகையில் பவர்ப்ளேயில் கான்வே, ரவீந்திரா இருவரும் விக்கெட்டை இழக்காமல் ஓரளவு நல்ல தொடக்கத்தை அளித்தனர். பவர்ப்ளேயில் சிஎஸ்கே விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் சேர்த்தது.

சிஎஸ்கேவுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு என்ன, ஓவருக்கு எத்தனை ரன்கள் சேர்க்க வேண்டும், ரன்ரேட் என்ன என்பது குறித்து எந்த புரிதலும் இல்லாமல் ரவீந்திரா, கான்வே இருவரும் ஆடியது போல் இருந்தது. அதனால்தான் 10-வது ஓவர் வரை சிஎஸ்கே அணி ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. ஷிவம் துபே களத்துக்கு வந்த பின்புதான் சிஎஸ்கே அணி முதல் சிக்ஸரை அடித்தது.

ரச்சின் ரவீந்திரா 36 ரன்களில் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் ஆகவே, அடுத்துவந்த கேப்டன் ருதுராஜ், ஒரு ரன்னில் பெர்குஷன் பந்துவீச்சில் மிட் விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பெர்குஷன் பந்துவீச்சில் 42 ரன்னில் துவே க்ளீன் போல்டாகினார். நடுப்பகுதியில் சிஎஸ்கே அணிக்கு ஓவருக்கு 17 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நெருக்கடி ஏற்பட்டது.

கான்வே களத்தில் 49 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தாலும், கடைசி நேரத்தில் அவரால் ரன்ரேட்டை உயர்த்தும் வகையில் பெரிய ஷாட்களை ஆடமுடியவில்லை. இதனால் ரிட்டயர் அவுட் முறையில் கான்வேயை 69 ரன்னில் சிஎஸ்கே வெளியேற்றியது.

தோனி 18-வது ஓவரில் வந்து 3 சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தினார். யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் பைன் லெக் திசையில் சஹலிடம் கேட்ச் கொடுத்து தோனி 27 ரன்னில் ஆட்டமிழந்தவுடன் சிஎஸ்கே வெற்றிக் கனவு கலைந்தது.

CSK vs PBKS, பிரியான்ஷ் ஆர்யா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கான்வே

சிஎஸ்கேவும், சிக்ஸரும்

பஞ்சாப் அணியில் மட்டும் நேற்று 16 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன, அதாவது 16 பந்துகளில் 96 ரன்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் சிஎஸ்கே அணி 10-வது ஓவரில்தான் முதல் சிக்ஸரை விளாசியது, ஒட்டுமொத்தமாக 8 சிக்ஸர் மட்டுமே அடித்தது அதாவது 48 ரன்கள் சேர்த்தது.

சிஎஸ்கே அணியில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசும் பிக்ஹிட்டர்கள் யாரும் இல்லை. 200 ரன்களுக்கு மேல் சிஎஸ்கே அணி கடந்த காலங்களில் சேஸ் செய்திருந்தது, அதற்கு அப்போது சுரேஷ் ரெய்னா, ஹேடன், வாட்ஸன், ஹசி போன்ற பெரிய ஹிட்டர்கள் இருந்ததால், இலக்கை எளிதாக அடைந்தது.

ஆனால், இப்போதிருக்கும் சிஎஸ்கே பேட்டர்களை வைத்து இதுபோன்ற பெரிய ஸ்கோரை இந்த சீசனில் சேஸ் செய்வதை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

CSK vs PBKS, பிரியான்ஷ் ஆர்யா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தோனி

சிஎஸ்கேவும் 180 ரன்கள் இலக்கும்

180 ரன்களுக்கு மேல் எதிரணி இலக்கு வைத்துவிட்டாலே சிஎஸ்கே சேஸ் செய்ய இயலாது என்பது இந்த முறையும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டுக்குப்பின் 11 முறை 180 ரன்களுக்கு மேல் சேஸ் செய்ய முடியாமல் சிஎஸ்கே தோல்வி அடைந்துள்ளது.

போட்டி நாயகன் ஆர்யா

பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முழுமையான காரணம் அன்கேப்டு வீரர் பிரியான்ஷ் ஆர்யாவின் அச்சமில்லா, அற்புதமான ஆட்டம்தான். பிரியான்ஷ் ஆர்யாவின் பேட்டிங்கை நேற்று பார்த்தபோது, "வின்டேஜ் சேவாக்", இடதுகையில் பேட் செய்வது போல் இருந்தது. பஞ்சாப் கிங்ஸ் வெற்றிக்கு காரணமாக இருந்த பிரியன்ஸ் ஆர்யாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஆர்யா 42 பந்துகளில் 103 ரன்கள் சேர்த்து (9 சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) ஆட்டமிழந்தார். 245 ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் பேட் செய்தார்.

19 பந்துகளில் அரைசதம் அடித்த பிரியான்ஷ் ஆர்யாஸ், 39 பந்துகளில் சதம் அடித்து, ஐபிஎல் வரலாற்றில் அதிகவேகமாக சதம் அடித்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். யூசுப் பதான் 37 பந்துகளில் சதம் அடித்து முதலிடத்தில் உள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்தமாக அதிவேகமாக சதம் அடித்தவர்கள் பட்டியலில் கெயில்(30பந்து), யூசுப் பதான்(37), டேவிட் மில்லர்(38) ஆகியோருக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் ஆர்யா வருகிறார்.

CSK vs PBKS, பிரியான்ஷ் ஆர்யா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பிரியான்ஷ் ஆர்யா

யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?

ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே பௌலர்கள் வயிற்றில் புளியை கரைத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இடம்பெற்று விட்டார் பிரியான்ஷ் ஆர்யா. அவருக்கு வயது வெறும் 24 தான்.

இன்று நடைபெற்ற ஆட்டத்தின் முதல் ஓவர் முதல் பந்தை டீப் பாக்வேர்டு பாயிண்டில் ஒரு அபாரமான சிக்ஸர் வைத்து ஆட்டத்தை துவங்கினார் பிரியான்ஷ் ஆர்யா.

அவரை கட்டுப்படுத்த அடுத்த பந்தே வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கோட்டை விட்டது சென்னை சூப்பர் கிங்ஸ். அதன் பின்னர் பிரியான்ஷ் ஆர்யா ஆடிய ஆட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மற்றும் அந்த அணி நிர்வாகம் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விடவே முடியாது. அவர் ஆடிய ஆட்டம் கிட்டதட்ட 11 ஆண்டுகளுக்கு முன்பு வான்கடே மைதானத்தில் பிளேஆஃபில் சிஎஸ்கேவின் கனவை சேவாக் நொறுக்கிய ஆட்டத்தை நினைவு படுத்தியது.

ஆர்யா பேட்டிங் ஸ்டைலைப் பார்த்தால் சேவாக் இடதுகையில் பேட்டிங் செய்ததுபோல்தான் இருந்தது, அதாவது சேவாக் அதிரடியைப் போன்று ஆர்யாவின் அதிரடி ஆட்டமும் இருந்தது. பதிராணா வீசிய வைடு யார்கர், புல்டாஸ் என எது வீசினாலும் பந்து சிக்ஸருக்கு பறந்தவாறு இருந்தது. சிஎஸ்கே அணியில் நேற்று ஒரு பந்துவீச்சாளரையும் ஆர்யா விட்டுவைக்கவில்லை. பிரியான்ஷ் ஆர்யாவை எவ்வாறு அவுட் ஆக்குவது என தெரியாமல் சென்னை அணியினர் திணறி வந்தனர்.

பிரியான்ஷ் ஆர்யா டெல்லியைச் சேர்ந்தவர். அவரது பெற்றோர்கள் டெல்லியில் அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிகிறார்கள். கௌதம் கம்பீரின் முன்னாள் பயிற்சியாளரான சஞ்சய் பரத்வாஜிடம் பயிற்சி அவர் பெற்றார். டெல்லி பல்கலைகழகத்தில் பிஏ பட்டம் பெற்றுள்ளார்.

ஐபிஎல் டி20 வலைதள தகவல்படி, ஆர்யா 19 வயதுக்குட்பட்டோருக்கான டெல்லி அணியை வழிநடத்துகையில் தனது சிக்ஸர் அடிக்கும் திறனுக்காக பெரிதும் அறியப்பட்டவர்.

கடந்த ஆண்டு டெல்லி பிரிமியர் லீக்கில் அவர் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டினார். குறிப்பாக, தெற்கு டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடிய அவர் வடக்கு டெல்லிக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் மனன் பரத்வாஜ் எனும் இடது கை சுழற்பந்து வீச்சாளரின் ஓவரில் ஆறு பந்துகளையும் சிக்ஸர்களுக்கு விரட்டி மிரட்டினார். அதனாலேயே ஆர்யாவை ஸ்பெஷல் ப்ளேயர் என்று பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அழைத்துள்ளார். அந்த ஆட்டத்தில் அவரது அணி 20 ஓவர்களில் 308 ரன்கள் குவித்தது.

அந்த போட்டியின் மூலம் கவனம் பெற்றவருக்கு சையது முஷ்டாக் அலி கோப்பையில் டெல்லி அணி சார்பாக விளையாட இடம் கிடைத்தது. அதில் உத்தரப் பிரதேசத்துக்கு எதிராக ஒரு மிரட்டல் ஆட்டம் ஆடினார்.

புவனேஷ்வர் குமார், பியூஷ் சாவ்லா உள்ளிட்ட நட்சத்திர பந்துவீச்சாளர்கள் இருந்த அந்த அணிக்கு எதிராக, 43 பந்துகளில் 10 சிக்ஸர்கள் ஐந்து பவுண்டரிகளை அடித்து 103 ரன்கள் எடுத்தார்.

கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு ஆட்டத்தை சென்னை அணிக்கு எதிராக தற்போது பிரியான்ஷ் ஆர்யா விளையாடியுள்ளார்.

உள்ளூர் போட்டிகளில் அநாயசமாக சிக்ஸர்களை விளாசி அதீத ஸ்டிரைக் ரேட்டில் ரன்களைக் குவித்து ஆர்யா கவனம் ஈர்த்தார். இதன் மூலம் ஐபிஎல் அணிகளின் பார்வை பட, கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஏலத்தில் பிரியான்ஷை எடுக்க டெல்லி, பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. 3 கோடியே 80 லட்சம் கொடுத்து அவரை ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி.

பிரியான்ஷுக்கு ஐபிஎல் தொடரில் ஜஸ்ப்ரீத் பும்ராவை எதிர்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

சிஎஸ்கே தோல்விக்கான காரணங்கள் என்ன?

  • சிஎஸ்கே அணியில் பெரிய இலக்கை துரத்திச் செல்லும்போது, அதிரடியாக பெரிய ஷாட்களை அடிக்கும் பிக் ஹிட்டர்கள் யாருமில்லை. ஷிவம் துபே தவிர மற்ற யாரையும் பிக்ஹிட்டர்கள் வரிசையில் சேர்க்கமுடியாது.

  • பீல்டிங், பந்துவீச்சு, பேட்டிங் படுமோசமாக இருந்தது. 200 ரன்களை சிஎஸ்கே தொட்டது பெரிதாக இருந்தாலும், கடந்த போட்டிகளைவிட இதில் பரவாயில்லை என ஆறுதல்படலாம். மற்றவகையில் சிஎஸ்கே பந்துவீச்சும், பீல்டிங்கும் சுமார் ரகத்துக்கும் குறைவுதான் என்று பயிற்சியாளர் பிளெம்மிங் ஒப்புக்கொண்டுள்ளார்.

  • இந்த ஆட்டத்தில் மட்டும் நேற்று 9 கேட்சுகளை இரு அணி வீரர்களும் நழுவவிட்டனர். கேட்சை நழுவவிட்டாலும் பஞ்சாப் வெற்றியை தவறவிடவில்லை. ஆனால் சிஎஸ்கே அணி 5 கேட்சுகளை தவறவிட்டு ஆட்டத்தையும் கோட்டைவிட்டது. குறிப்பாக பிரியான்ஷ் ஆர்யாவுக்கு கலீல் அகமது, ரவீந்திரா, கேட்ச் பிடித்திருந்தாலே ஆட்டம் மாறியிருக்கும்.

CSK vs PBKS, பிரியான்ஷ் ஆர்யா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தோனி, ரவீந்திர ஜடேஜா

  • சிஎஸ்கேஅணியில் ஃபார்மில் இல்லாத வீரர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். இவர்கள் ஏதேனும் ஒருபோட்டியில் சிறப்பாக ஆடினாலும், பல போட்டிகளில் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிடுவார்கள்.

  • மோசமான கேப்டன்சியும், பேட்டிங்கும் தோல்விக்கு முக்கியக் காரணம். ஏனென்றால் சிஎஸ்கே அணி 180 ரன்களுக்கு மேல் சேஸ் செய்யாமல் போன பல போட்டிகளில் ருதுராஜ் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். அந்த போட்டிகளில் ருதுராஜ் பேட்டிங் சராசரி 13 ரன்களுக்கும் குறைவாக இருக்கிறது, இந்த ஆட்டத்திலும் ருதுராஜ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அதுமட்டுமல்லாமல் அதிகமான அழுத்தம், நெருக்கடியில் கேப்டன்சி பொறுப்பை ருதுராஜால் சரிவர செய்ய முடியவில்லை.

  • சிஎஸ்கே பந்துவீச்சு நேற்று படுமோசமாக இருந்தது. ஜடேஜா மட்டும் 6 ரன்ரேட்டில் பந்துவீசியுள்ளார். ஆனால் மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 10 ரன்களுக்கும் குறைவில்லாமல் ரன்களை வாரி வழங்கி மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினர்

CSK vs PBKS, பிரியான்ஷ் ஆர்யா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,யான்சென்

ஆட்டத்தை மாற்றிய 3 சிக்ஸர்கள்

சிஎஸ்கே அணியின் தோல்வி குறித்து பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில் " இந்த ஆட்டத்தில் பேட்டிங் மட்டுமே சற்று நேர்மறையாக இருந்தது. டாப் ஆர்டர் வலுவாகஇருந்த போதிலும் அதிலும் சின்ன தவறு நடந்தது. இந்த ஸ்கோரை சேஸ் செய்வதற்கான கட்டமைப்பை உருவாக்க முடியவில்லை. குறிப்பாக ரன்ரேட்டை சரியாகக் கொண்டு சென்றிருந்தாலே போட்டியை இன்னும் நெருக்கமாக வந்திருக்கலாம்.

களத்தில் நாங்கள் பீல்டிங், பந்துவீச்சில்தான் ஆட்டத்தை இழந்தோம். குறிப்பாக மந்தமான பீல்டிங், பந்துவீச்சில் பலமுறை லென்த்தை தவறவிட்டோம். ஆர்யாவின் அதிரடி ஆட்டம் பந்துவீச்சாளர்களுக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி தவறான லென்த்தில் பந்துவீச வைத்தது. அப்போதே ஆட்டம் எங்களைவிட்டு சென்றது.

பெரிய ஸ்கோரை சேஸ் செய்யும் இந்த ஆட்டத்தில் 18 ரன்களில் தோல்வி அடைந்தோம், அதாவது 3 சிக்ஸர்கள். இந்த 3 சிக்ஸர்களை பேட்டர்கள் கூடுதலாக அடித்திருந்தால் ஆட்டம் வேறுமாதிரியாக இருக்கும், இந்த சீசன் மிகவும் வெறுப்படைய வைக்கிறது. கேட்ச் பிடிப்பது மோசமாக இருக்கிறது, பஞ்சாப் தரப்பிலும் பல கேட்சுகளை நழுவவிட்டனர். மின் ஒளியில் கேட்சை தவறவிட்டார்கள் என்று நான் நழுவவில்லை, உண்மையில் நாங்கள் பலவீனமாக இருக்கிறோம். அது கவலைக்குரியதுதான்.

ஐபிஎல் போட்டியில் வெல்ல வேண்டுமென்றால், டாப்3 பேட்டர்கள் பெரிய ஸ்கோர் செய்ய வேண்டும். ஆனால் நாங்கள் அவ்வாறு இல்லை. இன்னும் வலுவான தொடக்கத்தை எதிர்பார்க்கிறோம். அதே ஆட்டத்தை நடுப்பகுதிவரை கொண்டு வர வேண்டும். நல்ல பந்துவீச்சு இருந்தாலே பேட்டர்களுக்கு சுமை குறைந்துவிடும். அனைத்தையும் மறுஆய்வு செய்வோம். ஆனால் இது மோசமான ஆட்டமாக சேஸிங்காக இல்லை. 3 சிக்ஸர்கள்தான் எங்களை தோல்வியில் தள்ளியது" எனத் தெரிவித்தார்

இன்றைய ஆட்டம்

  • குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்

  • இடம் - ஆகமதாபாத்

  • நேரம் - இரவு 7.30 மணி

சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம்

  • சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

  • நாள் - ஏப்ரல் 11

  • இடம் - சென்னை சேப்பாக்கம்

மும்பையின் அடுத்த ஆட்டம்

  • மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்

  • நாள் - ஏப்ரல் 13

  • இடம் - டெல்லி

ஆர்சிபி அணியின் அடுத்த ஆட்டம்

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேபிடல்ஸ் அணி

  • நாள் - ஏப்ரல் 10

  • இடம் - பெங்களூரு

CSK vs PBKS

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,நிகோலஸ் பூரன்

ஆரஞ்சு தொப்பி யாருக்கு?

  • நிகோலஸ் பூரன் (லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) - 288 (5 போட்டிகள்)

  • மிட்ஷெல் மார்ஷ் (லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) - 265 (5 போட்டிகள்)

  • சூர்யகுமார் யாதவ் (மும்பை இந்தியன்ஸ்) - 199 (5 போட்டிகள்)

நீலத் தொப்பி

  • நூர் அகமது (சிஎஸ்கே) - 11 விக்கெட் (5 போட்டிகள்)

  • கலீல் அகமது (சிஎஸ்கே) - 10 விக்கெட் (5 போட்டிகள்)

  • ஹர்திக் பாண்டியா (மும்பை இந்தியன்ஸ்) - 10 விக்கெட் (5 போட்டிகள்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c39jjkydlxdo

  • கருத்துக்கள உறவுகள்

சென்னைக்கு விசில் போட்ட‌ கூட்ட‌ம் இப்போது புல‌ம்ப தொட‌ங்கிட்டின‌ம்.....................

அணியின் க‌ப்ட‌ன்

டோனி , அஸ்வின் , நியுசிலாந் தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் தான் கார‌ண‌ம்..................வேக‌மாய் ப‌ந்தை அடிச்சு ஆடி விளையாடுகின‌ம் இல்லை

எல்லாத்திலும் சுத‌ப்ப‌ல்...............................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.