Jump to content

ஜனாதிபதியின் தீர்மானத்த‍ை இடைநிறுத்திய தேர்தல்கள் ஆணைக்குழு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Anura-Kumara-DailyCeylon-5.jpg?resize=68

ஜனாதிபதியின் தீர்மானத்த‍ை இடைநிறுத்திய தேர்தல்கள் ஆணைக்குழு!

நெற்செய்கையாளர்களுக்கு உயர் பருவத்தில் 25,000 ரூபா கொடுப்பனவும், மீனவ மக்களுக்கு எரிபொருள் மானியமும் வழங்குவதற்கான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது.

பொதுத்தேர்தல் அறிவிக்கப்படும் போது இவ்வாறான மானியத்தை வழங்க தீர்மானித்ததன் மூலம் ஏனைய வேட்பாளர்களின் பாதகத்தை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

இதன்படி, பொதுத் தேர்தலின் பின்னர் உரிய பொதுக் கொள்கைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.

ஆணைக்குழு நேற்று கூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1401702

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

461594612_936518945179745_32732358679698

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அண்ணா  நீங்கள் சொல்வது கேட்க பார்க்க பரவசமாகத்தான் இருக்கிறது. பல்லக்கில் தூக்கப்பட்டவன் தூக்கியவனிடம் கையேந்தி நிற்கும் போது இனவாதம் எங்கேயிருந்து தொடங்கியது என்று நாங்கள் சொல்லித் தான் உங்களுக்கோ அல்லது இங்குள்ளோருக்கோ புரியணும் என்று இல்லை. ஆனால் இங்கே பேரினவாத சிங்களத்தில் ஒருவர் நல்லவர் அவரால் அனைத்தும் மாறும் என்கிற விசத்தை விதைக்கும் போது அவரது கட்சி மற்றும் அவரது தோழர்கள் தான் கிடைக்க இருந்த ஆகக் குறைந்த பாதுகாப்பை கூட அறுத்து எறிந்தனர் என்கிற வரலாற்று எச்சரிக்கை மட்டுமே பதியப்பட்டுள்ளது. அதைக் கூட பதியக்கூடாது பார்க்கக்கூடாது என்பது தான் இனவாத உச்சம்.  இது தான் அநுர செய்ய விரும்புவதும்.  இதுவரை செய்யப்பட்ட எந்த அழிவுகள் மற்றும் கொடூரங்களுக்கும் எந்த தீர்வோ விசாரணையோ மன்னிப்போ தரமுடியாது. எல்லாவற்றையும் மறந்து விட்டு அதைப்பற்றி பேசுவதையும் விட்டு விட்டு இலங்கையில் வாழ முயலுங்கள். அவ்வளவு தான். 
    • சனத் ஜெயசூரிய இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமனம் 29 SEP, 2024 | 12:21 PM இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக முன்னாள் அணித்தலைவர் சனத்ஜெயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இடைக்கால பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய அவர் சமீபத்தைய வெற்றிகளை தொடர்ந்து தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நியுசிலாந்து அணியுடனான சமீபத்தைய தொடரில் ஆரம்பித்து ஒரு வருடகாலத்திற்கு அவர் தலைமை பயிற்றுவிப்பாளராக பணியாற்றுவார். அவரது அணுகுமுறை குறித்து நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளோம், அவர் வீரர்களின் திறமையை ஆகக்கூடியளவிற்கு பயன்படுத்தியுள்ளார், ஒழுக்கத்தை நிலைநாட்டியுள்ளார், என  ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஸ்லி டிசில்வா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/195040
    • நியூஸிலாந்தை இன்னிங்ஸால் வென்று தொடரை முழுமையாகக் கைப்பற்றியது இலங்கை 29 SEP, 2024 | 06:13 PM (நெவில் அன்தனி) நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 154 ஓட்டங்களால் இலங்கை அமோக வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இலங்கை முழுமையாக கைப்பற்றியது. கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இந்தப் போட்டி நான்காம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை பகல்போசன இடைவேளைக்குப் பின்னர் முடிவுடைந்தது. முதலாவது இன்னிங்ஸ் நிறைவில் 514 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்தவாறு பலோ ஒன் முறையில் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 360 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. முதலாவது இன்னிங்ஸைவிட இரண்டாவது இன்னிங்ஸில் நியூஸிலாந்தின் துடுப்பாட்டம் திறமையாக இருந்தபோதிலும் தோல்வியைத் தவிர்ப்பதற்கு போதுமானதாக இருக்கவில்லை. நியூஸிலாந்தின் 2ஆவது இன்னிங்ஸில் டெவன் கொன்வே, டொம் ப்ளண்டெல், க்லென் பிலிப்ஸ், மைக்கல் சென்டனர் ஆகியோர் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் பெற்றனர். போட்டியின் நான்காம் நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை 5 விக்கெட் இழப்புக்கு 195 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த நியூஸிலாந்து நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்றைய தினம் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து கடைசி 5 விக்கெட்களில் மேலும் 165 ஓட்டங்களைப் பெற்றது. க்லென்  பிலிப்ஸ், டொம் ப்ளண்டெல் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 95 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுத்தனர். டொம் ப்ளண்டெல் 60 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் அணித் தலைவர் டிம் சௌதீயுடன் 7ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்த க்ளென் பிலிப்ஸ் 78 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். டிம் சௌதீ 10 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார். தொடர்ந்து மிச்செல் சென்ட்னர், அஜாஸ் பட்டேல் ஆகிய இருவரும் 9ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். எனினும் இருவரும் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழக்க இலங்கையின் வெற்றி உறுதியாயிற்று. அஜாஸ் பட்டேல் 22 ஓட்டங்களைப் பெற்றதுடன் கடைசியாக ஆட்டம் இழந்த மிச்செல் சென்ட்னர் 67 ஓட்டங்களைப் பெற்றார். நேற்றைய தினம் க்ளென் பிலிப்ஸ் 61 ஓட்டஙகளையும் கேன் வில்லியம்சன் 46 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். பந்துவீச்சில் அறிமுக வீரர் நிஷான் பீரிஸ் 170 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் ப்ரபாத் ஜயசூரிய 139 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். இப் போட்டியில் இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 602 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டிருந்தது. கமிந்து மெண்டிஸ் ஆட்டம் இழக்காமல் 182 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 116 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் ஆட்டம் இழக்காமல் 106 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ் 88 ஓட்டங்களையும் திமுத் கருணாரட்ன 46 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 44 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் க்லென்  பிலிப்ஸ் 141 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 88 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. மிச்செல் சென்ட்னர் (29), டெரில் மிச்செல் (13), ரச்சின் ரவிந்த்ரா (10) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய 42 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் நிஷான் பீரிஸ் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: கமிந்து மெண்டிஸ் (182 ஆ.இ.), தொடர் நாயகன்: ப்ரபாத் ஜயசூரிய (18 விக்கெட்கள்) https://www.virakesari.lk/article/195065
    • ஒவ்வொரு போட்டியிலும் விளையாடும் வீரர்களுக்கு தலா ரூ 7.5 லட்சம் வழங்கப்படும் 2025ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் இந்திய வீரர்களுக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை போனஸ் தொகையாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெய்ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஐபிஎலில் நிலைத்தன்மை மற்றும் சாம்பியன், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர்களை கொண்டாடும் ஒரு வரலாற்று நடவடிக்கையாக, கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு ஆட்டத்திற்கு 7.5 லட்ச ரூபாய் போட்டிக் கட்டணத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஒரு சீசனில் அனைத்து லீக் போட்டிகளிலும் விளையாடும் கிரிக்கெட் வீரர், அவர் ஒப்பந்தம் செய்த தொகைக்கு கூடுதலாக 1.05 கோடி ரூபாய் பெறுவார். ஒவ்வொரு அணியும் சீசனுக்கான போட்டிக் கட்டணமாக 12.60 கோடி ரூபாயை ஒதுக்கும். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் வீரர்கள் மற்றும் அணிகள் அதிக வருவாயை ஈட்டுவர்” என்று ஜெய்ஷா பதிவிட்டுள்ளார். https://thinakkural.lk/article/310058
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.