Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
"தமிழர் சமயமும் அதன் வரலாறும் [ஒரு அலசல்]" / "An analysis of history of Tamil religion" - PART / பகுதி: 01
 
 
எப்படி முதலாவது சமயம் அல்லது மதம் உருவானது என்று ஒருவருக்கும் இன்னும் சரியாக தெரியாது. உலகில் எழுத்து உருவாகிய போது, பல சமயங்கள், பல ஆயிரம் ஆண்டுகளாக, ஏற்கனவே மக்களிடம் புழக்கத்தில் இருந்தன. என்றாலும், அவை எப்படி உருவாகியது என்பதை அவர்கள் மறந்தே விட்டார்கள். ஆகவே ஒரு ஊகத்தின் அடிப்படையில் தான் இதற்கு விடை தேட வேண்டியுள்ளது. கற்கால மனிதன் எவனுக்கும் மதம் என்ற ஒன்று இருக்கவில்லை. அந்த ஆதிகால மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தார்கள். அன்றைய காலத்தில் உலகம் மிகவும் பயம் நிறைந்ததாக இருந்திருக்கும். காடுகள், கொடிய மிருகங்கள், இடி, மின்னல், மழை, வெள்ளம், புயல் மற்றும் பூமி அதிர்ச்சி போன்ற ஆபத்து நிறைந்த இயற்கை அனர்த்தங்கள், சூழ ஆதி கால மனிதர்கள் வாழ்ந்தார்கள். பகலெல்லாம் சூரியனின் வெளிச்சம், இரவெல்லாம் பயமுறுத்தும் இருட்டு. அந்த கும்மிருட்டில் கொடிய மிருகங்கள் மூலம் ஆபத்து, இந்த பயத்தினால் இரவானால் குகைகளினுள் குடியிருப்பு. பகல் வந்த பின்பு தான் அவர்களுக்கு உலகமே மீண்டும் தெரியும். அப்பொழுது தான், அவன் வெவேறு இடங்களுக்கு சென்று, குழுவாக வேட்டையாடி, கிடைப்பதை ஒன்றாக பகிர்ந்து உண்டான். அவன் பயந்தது பெரும்பாலும் இயற்கைக்கு மட்டுமே. இந்த பயம் தான் முதலாவது சமயத்தை உருவாக்கியிருக்கும் என நாம் இலகுவாக ஊகிக்கலாம்.
 
இப்படியான பாதுகாப்பற்ற உலகில், மக்களுக்கு ஒரு பாதுகாப்பான உணர்வு ஒன்றை ஏற்படுத்தும் முகமாகவும் தமது கட்டுப்பாட்டில் அடங்காத சுற்றுப் புற சூழலையும் தம்மால் கட்டுப்படுத்த முடியும் என்ற ஒரு உணர்வை அவர்களிடம் ஏற்படுத்தவும், அந்த மனித இனக்குழுவில் ஒருவரோ அல்லது ஒரு சிலரோ - இவைகளை பார்த்து பார்த்து அவர்களின் இந்த பய உணர்வை போக்கி ஒரு ஆறுதல் அளிக்க, அதற்கு ஒரு விளக்கம் கொடுத்தார்கள். அந்த விளக்கமே கடவுளை, மதத்தை உண்டாக்கியது எனலாம்.
 
அந்த ஆதி மனிதனிடம் தன்னைப் பற்றியும் தான் வாழும் சூழ்நிலை பற்றியும் பல பல கேள்விகள் கட்டாயம் மனதில் எழுந்திருக்கும். எது இயற்கையின் பருவகால சுழற்சியை கட்டுப்படுத்துகிறது? - கதிரவனின் நாளாந்த அசைவா?, விண்மீன்களின் அசைவா?, கடந்து செல்லும் கால நிலைகளா? .... எது தமது சுற்றுப் புற சூழலை கட்டுப் படுத்துகிறது? - எது அல்லது யார் வெள்ளத்தை, மழையை, புயலை, வறட்சியை ஏற்படுத்துகிறது? / ஏற்படுத்துகிறார்கள்? ... எது கருவுறுதலை கட்டுப்படுத்துகிறது? - தமது இனத்தின்?, தமது வளர்ப்பு பிராணியின்?, தமது வளர்ப்பு பயிரின் செழிப்பை? ... தமது இனக் குழுவின் நிரந்தரத்தை அல்லது இருப்பை நிலை நாட்ட எப்படியான அற நெறி அல்லது ஒழுக்க நெறி தேவை? ... எல்லாத்திற்கும் மேலாக, முக்கியமான கேள்வி, ஒரு மனிதன் இறந்ததும் அவனுக்கு என்ன நடக்கிறது? 
 
விஞ்ஞான காலத்திற்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த இவர்களால் இவைகளுக்கு ஒரு விடை அல்லது தீர்வு காண முடியாது. ஏன்? இன்றும் கூட, கடைசிக்கு முதல் கேள்விக்கு - அறநெறி அல்லது ஒழுக்க நெறிக்கு - இன்னும் விவாதித்துக்கு கொண்டு இருக்கிறோம், கடைசி கேள்விக்கு - மறுமைக்கு - இன்னும் ஒரு ஒருமித்த தீர்மானத்திற்கு வரமுடியாமல் தத்தளித்துக் கொண்டு இருக்கிறோம். இந்த இரு கேள்விக்கும் [கட்டாயம் இறுதி கேள்வியான மறுமைக்கு] ஒரு ஊகத்தின் அடிப்படையிலாவது ஒரு முன் எச்சரிக்கையாக ஒரு பதில் வேண்டும். ஆதி மனித இனக் குழுவில் ஒரு சிலர் தமது தனிப்பட்ட அனுமானத்தின் அடிப்படையில் விடை கண்டார்கள். அதுவே, முதலாவது கடவுள் நம்பிக்கை அமைப்பு முறை தோன்றவும், முதலாவது சமய குருமார் அமைப்பு தோன்றவும், கடவுளை சாந்தப்படுத்த முதலாவது வழிபாட்டு சடங்குகள் தோன்றவும், கருவுறுதல் மற்றும் சுற்றுப்புற சூழல் அம்சங்களை கட்டுப்படுத்தும் முதலாவது சடங்குகள் தோன்றவும், இனக்குழு உறுப்பினர்களின் நடத்தை எதிர்பார்ப்புகளை விளக்கும் முதலாவது அறிவுறுத்தலும் அதற்கான ஒழுக்கநெறி தோன்றவும் வழிசமைத்தது.
 
எப்பொழுது மனிதன் முதல் முதல் ஆத்திகன் [கடவுள் உண்டு என்ற கொள்கை உடையவர்] ஆனான் என்பது ஒருவருக்கும் தெரியாது. ஆனால், மத நடத்தைகள் பற்றிய நம்பத் தகுந்த ஆதாரங்கள், மத்திய பழைய கற்காலம் சகாப்தத்தில் [Middle Paleolithic era] இருந்து, அதாவது 300–500 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து அல்லது அதற்கு முன்பே இருந்து எமக்கு கிடைத்துள்ளன. சில அறிஞர்கள், மனிதனின் மிக நெருங்கிய உறவினரான, சிம்பான்சிகள் [மனிதக்குரங்குகள்] மற்றும் பொனொபோ குரங்குகள் [chimpanzees and bonobos] போன்றவை, மனித கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்திற்கு முன்னோடிகளாக உள்ளன என்கின்றனர், உதாரணமாக, சில மனிதக் குரங்குகள் கடும் மழை தொடங்கியதும் அல்லது ஒரு நீர் வீழ்ச்சியை காணும் போதும் ஆடுகின்றன. இந்த, இவைகளின் அடிப்படை ஆடும் காட்சிகள், மத சடங்குகளுக்கு ஒரு முன்னோடி என்றும் எடுத்துக் கொள்ளலாம். பல மிருகங்கள் தம் உறவினரின் பிரிதலால் அல்லது இறப்பால் துக்கம் கொண்டாலும், அங்கு, மனிதர்கள் போல், இறுதி ஊர்வல சடங்குகள் நடைபெறுவதில்லை, எப்படியாயினும், யானையின் விரிவான புதைத்தல் நடத்தையை காணும் ஒருவர், அது கட்டாயம் ஒரு சடங்கு முறையின் அல்லது மத நடத்தையின் ஒரு அறிகுறி என்பதை நிராகரிக்க மாட்டார்கள். உதாரணமாக, யானை ஒன்று இன்னும் ஒரு யானையின் இறந்த உடலை காணும் போது, அது அந்த உடலை சேறு, மண் மற்றும் இலைகள் கொண்டு பெரும்பாலும் அடக்கம் செய்கின்றன. அது மட்டும் அல்ல, அவை தமது இறந்த உறவினரின் உடலை, அதிக அளவு பழங்கள், மலர்கள் மற்றும் வண்ணமயமான இலைத்தொகுதி அல்லது குழை கொண்டு புதைக்கின்றன. எனினும் மனிதனை தவிர்த்த மற்ற எந்த மிருகங்களும் கடவுள் நம்பிக்கை அல்லது கடவுள் பிரார்த்தனை, வழிபாடு மற்றும் இவைபோன்ற மனிதனுக்கே உரித்தான மத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான எந்த சான்றுகளும் இல்லை.
 
எது எப்படியாயினும், சில மனித குழுக்கள் அல்லது இனங்கள், தமது பண்டைய காவியங்கள் மற்றும் மதம் அல்லது கடவுள் கதைகளில் குரங்கு, யானைகளை இணைத்ததற்கு இந்த மிருகங்களின் இப்படியான நடவடிக்கைகளே காரணமாக இருந்திருக்கலாம். இவை பின் படிப்படியாக கடவுள் அந்தஸ்த்தை அல்லது தகுதியை பெற்றிருக்கலாம்? உதாரணமாக அனுமான், கணபதி அல்லது பிள்ளையார் ஆகும், மனிதனின் முந்தைய மத சிந்தனைக்கான சான்றாக, அவர்கள் தமது இறந்த உறவினர்களுக்கு செய்த சடங்கு முறை சாட்சியாகிறது. இந்த சடங்கு முறை அடக்கம், மனித நடத்தையில் ஒரு பெரும் திருப்பத்தை கொடுத்தது. அதாவது இது, வாழ்க்கை மற்றும் இறப்பு பற்றிய அவர்களின் விழிப்புணர்வை பிரதிநிதித்துவம் படுத்துவதுடன், அதிகமாக அவர்கள் மறுமை பற்றி அறிந்திருந்தார்கள் அல்லது அதில் நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பதையும் வெளிப்படுத்துகிறது.
 
மத எண்ணங்களை குறியீட்டு மூலம் தெரிவிப்பது பெரும்பாலும் உலகளாவிய ஒரு முறையாகும். பொதுவாக மத நடவடிக்கைகளில் தெய்வீக அல்லது ஆவித்தொடர்புடைய சக்திகளையும் அதன் கருத்துகளையும் பிரதி நிதித்துவம் படுத்த படங்கள் மற்றும் சின்னங்கள் உருவாக்குவது ஒரு இயல்பான செயல் ஆகும். அப்படியான முன்னைய சான்று மத்திய கற்கால ஆப்பிரிக்கா பகுதியில் கிடைத்துள்ளது. குறைந்தது 100,000 ஆண்டுகளுக்கு முன்பு, சாயப் பொருளான [நிறமி] சிவப்பு காவிக்கல் [red ochre] பாவித்தது தெரிய வந்துள்ளது. இன்னும் உலகில் வாழும் வேடுவர்கள் மத்தியில், இந்த சிவப்பு காவிக்கல், சடங்குகளுக்கு பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக உலகளாவிய மனித பண்பாட்டில், சிவப்பு நிறம் - குருதி, பாலியல், வாழ்க்கை மற்றும் இறப்பு [blood, sex, life and death] போன்றவற்றை எடுத்துச் சொல்லும் அல்லது குறித்துக்காட்டும். எப்படியாயினும் இவையை தவிர, மனிதன் நவீன நடத்தையை [behavioural modernity] அடையும் முன்பு, அங்கு மதம் இருந்ததற்கான வேறு சான்றுகள் ஒன்றும் இல்லை. நடத்தை நவீனத்துவம் [behavioural modernity] என்பது பொருத்தமான நடத்தை மற்றும் அறிவாற்றல் பண்புகளால் தற்போதைய ஹோமோ சப்பியென்ஸ் ஆகிய தற்கால மனிதர், கிடத் தட்ட 200,000 ஆண்டுகளுக்கு முன்பு, புராதான மனிதரில் இருந்து உருவாகிய உள்ளமைப்புப்படி நவீன மனிதர் போன்ற மனிதரில் இருந்து வேறுபடுத்துவதை குறிக்கும். நவீன நடத்தை, மனிதனில் 50,000 ஆண்டளவில் வெளிப்படத் தொடங்கி, காலக் கிரமத்தில் முழுமை அடைந்து இருக்கலாம் என கருதப்படுகிறது.
 
சமயம் மற்றும் ஆவி உலகம் பற்றிய விழிப்புணர்வு பழங்கற்கால பகுதியில், அதிகமாக ஆரம்பித்து இருந்தாலும், அது மேலும், உலகளாவிய பொதுவான பண்பாடுகளான [cultural universals] கலை, இசை, மொழி இவைகளின் வளர்ச்சியுடன் சேர்ந்து தானும் விருத்தி அடைந்தது. வேடையாடி சேகரித்து வாழ்ந்த இந்த முன்னைய நாடோடி மக்கள்,அதிகமாக 10,000 ஆண்டுகளுக்கு முன், தேவையின் அடிப்படையில் அல்லது அன்று அவர்களுக்கு ஏற்பட்ட வசதி நிமித்தம், முதல் முதல் ஓர் இடத்தில் குடியேறி வேளாண்மை நுட்பத்தை கற்று, முதலாவது விவசாயி ஆகினான். இந்த விவசாய வாழ்க்கையே ஒழுங்கமைக்கப் பட்ட மதம் ஒன்றிற்கு அத்திவாரம் இட்டது. இதன் மூல தடயம் மைய கிழக்கு (Near East) நாடுகளில், குறிப்பாக மெசொப்பொத்தேமியாவில் காணலாம். என்றாலும், இப்படியான விவசாய வாழ்க்கை சுயாதீனமாக உலகின் பல பகுதிகளிலும் நடைபெற்று இருக்கலாம்?
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி 02 தொடரும்
 
"An analysis of history of Tamil religion" - PART: 01
 
 
Nobody knows with accuracy how the first religions evolved. By the time that writing had developed, many religions had been in place for many millennia and the details of their origins had been forgotten. However, there is speculation that the first religions were a response to human fear. They were created to give people a feeling of security in an insecure world, and a feeling of control over the environment where there was little control. During their evolution from proto-human to full human, they developed questions about themselves and their environment: What controlled the seasonal cycles of nature -- the daily motion of the sun; the motion of the stars, the passing of the seasons, etc. What controlled their environment -- what or who caused floods, rains, dry spells, storms, etc? What controls fertility -- of the tribe, its domesticated animals, and its crops. What system of morality is needed to best promote the stability of the tribe? And above all, what happens to a person after they die? Living in a pre-scientific society, people had no way to resolve these questions. Even today, with all of our scientific advances, we still debate about the second last question, and still have no way of reaching an consensus on the last. But the need for answers (particularly to the last question) were so important that some response was required, even if they were merely based on hunches. Some people within the tribe started to invent answers based on their personal guesses. Thus developed: The first religious belief system, The first priesthood, The first set of rituals to appease the Goddess, Other rituals to control fertility and other aspects of the environment, A set of behavioural expectations for members of the tribe, and a set of moral truths to govern human behaviour.
 
When humans first became religious remains unknown, but there is credible evidence of religious behaviour from the Middle Paleolithic era (300–500 thousand years ago) and possibly earlier. Though some scholars believe that, the closest Human Relatives, chimpanzees and bonobos may have the precursors for culture and spirituality, for example, some chimpanzees may “dance” at the onset of heavy rain or when they come across a waterfall, and this “elemental” displays may be precursors of religious ritual. While grief is common to many animals, funeral rituals are not. However, one cannot ignore the elaborate burying behaviour of elephants as a similar sign of ritualistic or even religious behaviour in that species. When encountering dead animals, elephants will often bury them with mud, earth and leaves and in addition, Elephants have [been] observed burying their dead with large quantities of food fruit, flowers and colourful foliage.
 
There is no evidence that any non-human animals believe in gods, pray, worship, or many other behaviours typical of human religion. However, These may be the reason why some ancient tribes or races includes these animals, chimpanzees or monkeys and elephants in their epics or religious or god stories and later promoted them as one of their gods, for example, Hanuman & Ganapathi or Pillaiyar.
 
The earliest evidence of religious thought of human is based on the ritual treatment of the dead. Ritual burial thus represents a significant change in human behaviour. Ritual burials represent an awareness of life and death and a possible belief in the afterlife. The use of symbolism in religion is a universal established phenomenon. It is common for religious practices to involve the creation of images and symbols to represent supernatural beings and ideas. Some of the earliest evidence of symbolic behaviour is associated with Middle Stone Age sites in Africa. From at least 100,000 years ago, there is evidence of the use of pigments such as red ochre. Among extant hunter gatherer populations around the world, red ochre is still used extensively for ritual purposes. It has been argued that it is universal among human cultures for the colour red to represent blood, sex, life and death. However, there is no other evidence that religion existed in human culture before humans reached behavioural modernity.
 
It is also interesting to note that, though the awareness of religion and the spirit world probably began at the time of the Palaeolithic Revolution, It would have developed further alongside other cultural universals that were also evolving at this time such as art, music and language which is key to the origin and development of all the cultural universals. The first farmers belief to began to cultivate crops over 10,000 years ago. Driven by necessity or just convenience, the nomadic hunter-gathers of the time began to settle in the one location and learn the art of farming. It is considered that Farming may have given us the building blocks of organised religion with the traces its roots in the Near East but may have occurred independently in several other locations around the world.
 
 
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
 
Part 02 Will follow
344549242_790034735973825_4686393302442216883_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=rGveOs-5jl8Q7kNvgGiKppr&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYCxPV8b55bl7UINS_TePEUkNcGOB6UMqdg5P4SHlLZjgw&oe=67004AB3 344538768_766547645082472_8391357919747034331_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=Pxu7e1AwedIQ7kNvgFzLg9P&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYChlQBUce_3qkurwbdaf1A7lv0laSu1guXIRBOG4ZZiUQ&oe=670040F7 
 
344539324_226142293356294_6660155699205817107_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=OTeJzFJdiUkQ7kNvgFbvMZd&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYAnB1xurvq5I-lpXCkUCPbdyjFqCCiw2lTtsQcO3c8iqQ&oe=670055D8 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"தமிழர் சமயமும் அதன் வரலாறும் [ஒரு அலசல்]" / "An analysis of history of Tamil religion" - PART / பகுதி: 02
 
 
மேல் பழைய கற்காலப் பகுதியில் [Upper Palaeolithic Revolution] தோன்றிய முதலாவது சமய அமைப்பு ஒரு வாய் வழியாக ஒவ்வொரு இனக் குழு உறுப்பினர்களிடமும் அவர்களின் புதிய தலைமுறைக்கும் பரப்பப் பட்டன. அதன் பின் பல காலங்கள் கடந்து, எழுத்து முறை கண்டு பிடிக்கப் பட்டதும் அவை முதலில் எழுத்துருவில் பதியப் பட்டன. இதனால் அவை கால, சூழ்நிலை மாற்றத்திற்கு ஏற்ப மாற்றம் அடையக் கூடிய நெகிழ்வுத் தன்மையை இழந்தன. பொதுவாக வாய்வழி மரபுகள் காலப் போக்கில் - அவர்களின் அறிவு அனுபவத்திற்கு ஏற்ப - விட்டுக் கொடுப்புகளுடன் விரிவு படுத்தக் கூடியவை, ஆனால் எழுத்துருவில் பதியப் பட்டவை அப்படியல்ல. இது ஒரு துரதிருஷ்டவசமே. ஏனென்றால், வெவேறு இடங்களில் அந்த அந்த கால, சூழ்நிலைக்கு ஏற்ப, அவர் அவர்களின் ஒரு ஊகத்தின் அடிப்படையில் ஏற்பட்ட வெவேறு சமயங்கள் தனித்துவமாக விட்டுக் கொடுப்பு செய்ய முடியாத நிலையில் அவை வெவ் வேறாகவே இருக்க வேன்டியதாயிற்று. அவைகளின் போதனைகள், சிந்தனைகள் மாறு பட்டவையாக இருந்தன. அது மட்டும் அல்ல, தமது மத அறிவுறுத்தல்கள், சடங்குகள், நம்பிக்கைகள் தமது ஆண்டவனே தமக்கு நேரடியாக தந்தவை என திடமாக நம்பினர். இதனால் இவை இலகுவில் விட்டுக் கொடுப்புடன் மாற்றக் கூடியவை அல்ல. ஆகவே வெவ்வேறு மதங்களுக்கிடையான சமரசம் அல்லது இணக்கம் அடைவது கடினமாகவும் அதிகமாக முடியாத ஒன்றாகவும் இருந்தது. இது, மதங்களுக்கு இடையேயான மோதலையும் சிலவேளை உள் - மத உட்பூசல்களையும் ஏற்படுத்தின.
 
 
உதாரணமாக, யாழ்ப்பாணத்தை போர்த்துக்கேயர் கைப்பற்றி ஆண்ட காலத்தில், கிராமவாசிகளை ஓர் இடத்தில் கூடச் சொல்லி, பின் கிறிஸ்தவ மதப் போதகர், உங்கள் பொய் கடவுளான சிவன் முருகன் போன்றோரை நீங்கள் நிராகரித்து எங்கள் உண்மைக் கடவுளான ஜேசுவை ஏற்றுக் கொள்ளுங்கள் என கேட்டனர். இது ஒரு வேண்டுகோள் அல்ல, இது ஒரு போர்த்துக்கேய அரசாங்கத்தின் அதிகாரம் பெற்ற ஒரு கட்டளை. - பைபிளுடன் தொடங்கு, அது வெற்றி தரவில்லை என்றால், வாளை பாவி என்பதாகும்- அபராதம் அல்லது உடல் ரீதியான தண்டனை போன்றவற்றுக்கு எதிரான பயம், அந்த கிராமவாசிகளை, ஞாயிற்றுக் கிழமைகளிலும் கொண்டாட்ட நாட்களிலும் ஒழுங்காக கிறிஸ்தவ ஆலயங்களுக்கு போகவைத்தது. இப்படித்தான் தமிழர் மதம் மாற்றப்பட்டார்கள். விரும்பியோ அல்லது ஒருவரின் தனிப்பட்ட சம்மதத்துடனோ அல்லது இரு சமயத்தையும் ஒப்பிட்டு பார்த்தோ இது
நடைபெற வில்லை. முழுக்க முழுக்க பணத்தாலும் பதவியாலும் அதிகாரத்தாலும் இது நடந்தது.
 
 
எது எப்படியிருப்பினும் முதலாவது மதம் கருவுறுதல் அல்லது வளத்தை [செழிப்பை] அடிப்படையாக அமைந்ததாக இருந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. ஆகவே அவர்கள் தமது கவனத்தை பெரிய பெண் தெய்வம் ஒன்றை வழிபடுவதில் முதலில் கவனம் செலுத்தினர். பின்னர் கருவுறுதலில் ஆணின் பங்கை உணர்ந்தது ஆண் தெய்வங்களும் தோன்ற வழிசமைத்தது. இந்த ஆண் தெய்வங்களுக்கு, பின்னர் மத குருமார்களால் படிப்படியாக அதிகரித்த முக்கியத்துவம் கொடுக்கப் பட்டன. இந்த நவீன் உலகத்தில் சமயம் பெரும்பாலும் மனித பயத்திற்கும், இந்த பாதுகாப்பற்ற உலகில் இயற்கையின் அனர்த்தங்களால் அல்லது மனித வெறுப்புகளால் அல்லது சகிப்புத் தன்மை இன்மையால் எந்த நேரமும் ஏற்படும் காயங்கள், உயிர் பலிகள், கொலைகள் போன்ற பாதுகாப்பு அற்ற மனிதனுக்கு ஒரு பாதுகாப்பான உணர்வு ஒன்றை ஏற்படுத்தாவும் இன்னும் சமயம் ஒரு பதிலாகவே இருக்கிறது. அதில் ஒரு மாற்றமும் இல்லை!
 
 
உணவை தேடி சேகரிப்பதை விட, எப்படி உணவு உற்பத்தியை தாமே செய்யலாம் என்பதை மனிதன் அறிந்தது, அதாவது, விவசாயம் அறிமுகமாகியது, மனித வரலாற்றில் ஒரு பெரிய திருப்பம் என பரவலாக கருதப்படுகிறது. இந்த மாற்றம் உலகின் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு கால கட்டங்களில் நடை பெற்றது. எப்படியாயினும், அதி நவீன மேம்பட்ட விவசாய தொழில் நுட்பம் கொண்ட இன்றும், அப்படியான எந்த வசதியும் அற்ற 10,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட அன்றும், நல்ல அறுவடையை கொடுக்க, பிரகாசித்த சூரியனும் மழை வீழ்ச்சியும் எமக்கு தேவைப்படுகிறது. ஆகவே, பண்டைய மனிதன் தமக்கும் இயற்கைக்கும் இடையில் ஒரு உறவை ஏற்படுத்தியது புதுமையல்ல. எனவே அவன் இயற்கை கடவுளை மழை, வெயில் வேண்டி கெஞ்சினான் அல்லது பிராத்தனை செய்தான். என்றாலும் காலம் செல்ல, வேலை நாட்களை தவிர்த்து, அதற்கென கிழமையில் ஒரு நாளை பிரத்தியேகமாக ஒதுக்கினான். அப்படி ஒரு வழிபாடு செய்ய தனிப்பட்ட இடமும், அந்த வழிபாட்டை நிர்வாகம் செய்ய, திறமை வாய்ந்த தனி நபரும் தேவைப் பட்டனர். இந்த வகையில் தான், பெரும்பாலும் வழிபாடு செய்ய சிறப்பு தினம் அல்லது புனித நாளும் [ஓய்வு நாள்], அந்த வழிபாடு செய்ய ஒரு தனிப்பட்ட இடம் அல்லது ஆலயமும், அந்த வழிபாட்டை முன்னின்று நடத்த ஒரு பூசாரி அல்லது மத குருவும் தோன்றியிருக்கலாம்? இவற்றிற்கான பல பண்டைய கால தடையங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. உலகம் முழுவதும் வரலாற்றுக்கு முற்பட்ட, மேற் பழைய கற்காலக் குகை ஓவியம் அல்லது பாறை ஓவியத்தை, உதாரணமாக, 27,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிரான்ஸ் கர்காஸ் குகைகள் [Gargas caves] போன்றவற்றை நாம் காண்கிறோம். இந்த ஓவியங்களுக்கு மதத்தின் தாக்கம் இருப்பதை காண்கிறோம். இப்படியான, இந்த குகைகளே மனித இனத்தின் முதல் ஆலயமாக இருந்திருக்கும் என கருதப்படுகிறது. இது மதத்தின் வரலாற்றை 30,000 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு செல்கிறது.
 
 
மேலும், பழநி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பிரான்ஸ், தென்னாப்பிரிக்கா, சிம்பாப்வே, இந்தோனேஷியா [South Africa, zimbabwe, France and Indonesia] ஆகிய நாடுகளில் இருப்பதைப் போன்ற நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இரத்த சிவப்பு நிறத்தில் வரையப் பட்ட இந்த ஓவியங்களில், ஒரு ஓவியத்தில் ஒரு நீண்ட கோட்டின் இருபுறமும் சூலம் வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியம் மிக முக்கியமானது. சூலம் என்பது சைவ வழிபாடு தொடர்பான சின்னமாகும். இவ்வகை சூல ஓவியங்கள் மேலும் இரத்த சிவப்பு நிறத்தில் உள்ளன. தற்போதுவரை ஊரின் எல்லையில் சூலக்கல் நடும் பழக்கம் தமிழர்களிடையே உள்ளது. இந்த ஓவியம் பழங்குடி மக்களின் பாதுகாப்பு சடங்கை குறிப்பிடுவதற்காக வரையப் பட்டுள்ளது போல் தெரிகிறது. இன்னொரு ஓவியத்தில் ஒரு மனிதன் வலது கையில் ஒரு கைக்கோடாரியை ஏந்திய நிலையில் உள்ளான். இந்த மனிதனின் காலடியில் ஒரு மனிதன் வீழ்ந்து கிடப்பதைப் போல ஓவியம் வரையப் பட்டுள்ளது. மற்றொரு ஓவியம் ஒரு மனிதனின் கை ஓவியமாகும். இது, செங்காவி குழம்பில் கையைத் தோய்த்து அதை பாறையில் அச்சு பதிக்கும் விதமாக அழுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்த கை ஓவியங்களை தமிழகம் மட்டுமின்றி தென்னாப்பிரிக்கா, சிம்பாப்வே, பிரான்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் காணலாம். அது மட்டும் அல்ல, ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவில் காணப்பட்ட பண்டைய கல்லறைகளில் இருந்து, 50,000 ஆண்டுகளுக்கு முன்பே, தமது இறந்த உறவினரை அடக்கம் செய்த முதல் மனித இனம் நியண்டர்தால் மனிதன் என அறிகிறோம். சில கல்லறைகளில் இறந்தவரின் உடலுடன் மாமிச விலங்குகளின் எலும்புகளும் சேர்ந்து காணப்படுகின்றன. வேறு சில கல்லறைகளில், மலர்களும், சிலவேளை, மனிதனுக்கு பயன்படும் கருவிகளும் காணப்படுகின்றன. இது சில நியண்டர்தால் [Neanderthals] மனித குழுவிடம் ஒரு வித மறுமையில் நம்பிக்கை இருந்ததை காட்டுகிறது. இது அவர்கள், இன்று உள்ள பல மத குழுக்கள் போல், இறப்பு மனிதனின் முடிவு அல்ல, அடுத்த பிறப்பின் ஆரம்பம் என நம்பியதை எடுத்து காட்டுகிறது. ஆகவே, நியண்டர்தால் மனிதன் கடவுள், மதம், மறுமை போன்றவற்றை அறிந்திருந்தான் என நாம் இலகுவாக
ஊகிக்கலாம்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
 
பகுதி 03 தொடரும்
 
"An analysis of history of Tamil religion" - PART : 02
 
The first religious belief system which was formed as an oral tradition during the Upper Palaeolithic Revolution, was disseminated among the members of the tribe and was taught to each new generation. Much later, after writing was developed, the beliefs were generally recorded in written form. A major loss of flexibility resulted. Oral traditions can evolve over time; written documents tend to be more permanent. Unfortunately, because these belief systems were based on hunches, the various religions that developed in different areas of the world were, and remain, all different. Their teachings were in conflict with each other. Because the followers of most religions considered their beliefs to be derived directly from God, they cannot be easily changed. Thus, inter - religious compromise is difficult or impossible. Also, because religious texts are often ambiguous, divisions developed within religions. Different denominations, schools, or traditions have derived different meanings from the same religious texts. Thus were laid the foundations for millennia of inter -
religious and intra - religious conflict.
 
 
For example, During the Portuguese rule in Jaffna, The villagers asked to assemble and then a missionary ask them to reject their "God Shiva" ["false" gods as per Catholic priest] and accept "one true God" [Jesus]. "It was not a request; It was almost a command backed by the authority of the Portuguese government" - Begin by Bible, if unsuccessful then use the Sword -". Fear of a fine or corporal punishment with cane and stock ensured their regular attendance at church on Sundays and feast days. This is the way Tamils were converted to Christianity during the Portuguese rule, not by willingness or one's own consent or Comparing shaivism vs Christianity, But by means of money or power.
 
 
However, The first organized religions appear to have been based on fertility. They were focused on the worship of the great Earth Goddess. Religion evolved to include male Gods who were gradually given increased importance by the priests. This development may have been caused by developing knowledge of the male's involvement in the process of reproduction. Some observers believe that modern - day religions remain largely a response to human fear. Their main function is to provide their followers with a feeling of security while living in a dangerous environment in which a person can be injured, killed or murdered at any time due to natural causes, accidents or human hatred and intolerance.
 
 
The introduction of farming, when people learned how to produce rather than acquire their food, is widely regarded as one of the biggest changes in human history. This change happened at various times in several different places around the world. However, at the end of the each day both with the advanced farming technology we have today and as far back as 10,000 years ago we still need the sun to shine and rain to fall to produce a good harvest. And throughout the world today many farmers pray for a good harvest. It's not difficult to see that ancient man may too have carried out this practice, and a relationship developed between man and nature, man and God, a sort of unwritten agreement, a contract, where man pleads with God or prays to God for sunshine and rain. And as time moved forward it came to pass that this contract required a special day of the week, separate from work days, when prayer could take place. Also required was a special place where the contract could be honoured along with skilled people who would administer the carrying out of the
contract. From this idea probably we can see where the apparatus of organised religion, Such as special or Holy day for worship or prayer [Sabbath], the temple, and the priest, may have stemmed from.
 
 
Throughout the world we find Palaeolithic Cave Art and in many of these caves, such as the Gargas caves in France, there appears to be a religious influence behind the art. Some of these caves could be regarded as mankind's first temples. So there appears to be evidence of religion stretching back to almost 30,000 years ago. Further, A team of Indian archaeologists also discovered ancient rock paintings in a dilapidated cave near a Paliyar tribal habitation at Kombaikadu village situated 1,000 metres above sea level on Palani - Kodaikanal Road, Tamil Nadu, India in mid 2015. In one of the paintings, A holy lance was drawn on the cave wall, The picture of holy lance showed prevalence of shaivite culture in ancient times, Another picture depicts a person holding an axe in his hand with a dead body lying near his feet and Hand symbol was also painted on these rock. This type of hand symbol was present in many rock paintings throughout the world, such as South Africa, zimbabwe, France and Indonesia. Also the ancient artists used red colour to draw these paintings. All these paintings are at least 4000 years old. Not only that, Graves from Europe and western Asia give a strong indication that the Neanderthals were the first hominoids to bury their dead perhaps as long as 50,000 years ago. In some cases the buried bodies were accompanied with meaty animal bones. Other times with flowers, and in some cases useful objects such as tools suggesting that some Neanderthal groups may have had a belief in some kind of an afterlife. They, like so many religions of today saw death as not the end, but merely the beginning of a new cycle of existence. So, we can easily assume that, the Neanderthals the first hominoids, Also may be aware of God, religion and an afterlife.
 
 
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
 
 
Part 03 Will follow
345445375_1452720608797373_4237165155268342108_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=O5WXJijm2WgQ7kNvgH4H5gd&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=A_-xp8UkyKhsPLrBrzkbmWz&oh=00_AYAjxwFPGgfVVyDpYihADYLUFLrk3Rnq8PTYZuBw1LV2-g&oe=6701AC0B 344428953_1050977449209592_7881878629113616032_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=eyfjTbWMAnAQ7kNvgFBffjh&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=A_-xp8UkyKhsPLrBrzkbmWz&oh=00_AYANmFR72VvA1NDJ8RJHz_iDqxY6Nyh1rtJ4aU-VIgVBcA&oe=6701A3BB 
 
344594958_3595123427477712_3868066504869353489_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=6Mmyz5MwJ2AQ7kNvgGpRZVu&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=A_-xp8UkyKhsPLrBrzkbmWz&oh=00_AYBq9RJnbB6wFMqK7d9LS3zroIqYzKuxgOWxCnDaeGT99w&oe=67018850 345220812_917219656203033_4453583907368379161_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=POulPy0i-ysQ7kNvgGuXUS6&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=A_-xp8UkyKhsPLrBrzkbmWz&oh=00_AYDBKNIEWz4gRp20yc2X1kteXVjwVCE-C3wM9bdAEECr8Q&oe=67019EC4
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"தமிழர் சமயமும் அதன் வரலாறும் [ஒரு அலசல்]" / "An analysis of history of Tamil religion" - PART / பகுதி: 03
 
 
சைவ சித்தாந்தம் பண்டைய தமிழர்களுடைய மதமும் தத்துவமும் ஆகும். டாக்டர் போப் [Dr.Pope] "சைவம் தென் இந்தியாவில், சரித்திரத்திற்கு முற் பட்ட மதமாக, முக்கியமாக ஆரியர் வருகைக்கு முன் இருந்து, தமிழ் மக்களின் மனதை கவர்ந்த ஒன்றாக காணப் பட்டது என்று கூறியுள்ளார். தமிழர்களின் படிப்படியான சிந்தனையின் வளர்ச்சியால் மட்டுமே சைவ சித்தாந்தம் உருவானதாக எமக்கு தோன்றுகிறது. ஆகம கொள்கைகளை அடிப் படையாகக் கொண்ட இந்த சமய நெறி, அதன் கட்டமைப்பாலும் அதன் சிந்தனையாலும், நான்கு வேதங்களின் சிந்தனைகளாலும் அதன் நடை முறைகளாலும் கட்டமைக்கப் பட்ட சமய நெறியில் இருந்து இயல்பாகவே முற்றிலும் வேறுபட்டது. ஆகவே இந்த இரண்டும் கட்டாயம் ஒரே தேசிய இனத்திற்கு உரியது என கருத முடியாது. பிந்தியது ஆரியருக்கு உரித்தேனின், முந்தியது திராவிட குழுவினருக்கு [தமிழருக்கு] உரியது ஆகும். திராவிட குழுக்களிலும் தமிழரே, வேத காலத்திற்கு முன்னமே நாகரிகம் அடைந்தவர்கள் ஆவார்கள். ஆகவே தமிழரே சைவ ஆகமத்தை ஏற்படுத்தியவர்கள் என்பது சரியான காரணத்துடன் எடுத்த அநுமானம் ஆகும். எனவே, சைவ சித்தாந்தம் தமிழருடையதே என்பதை எந்த சந்தேகமும் இல்லாமல் இது காட்டுகிறது. எடுத்ததற்கெல்லாம் "சைவமும் தமிழும். சைவமும் தமிழும்" என்று நம்மவர்கள் கூறுவதும் இதனால் போலும். ஆகவே பண்டைய தமிழ் இலக்கியம், பெருந்திரளானவை சைவ சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டவையாக இருக்கலாம் என யாரும் எதிர்பார்க்கலாம். ஆனால் இது ஏமாற்றத்தையே கொடுக்கிறது.
 
தமிழரின் இந்த வரலாற்று காலத்தில் அல்லது சங்க இலக்கிய காலத்தில், பண்டைய தமிழர்கள் மத்தியில் வாழ்ந்த கற்றறிவாளர்கள், தத்துவ மற்றும் மத ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுத தமிழை தேர்ந்தெடுக்கவில்லை. கி பி பதின்மூன்றாம் நூற்றாண்டிலேயே, தமிழ் நாட்டில் அன்று நிலவிய சமூக எழுச்சி மற்றும் மத கொந்தளிப்பு காரணமாக, மெய்கண்ட தேவர் என்பவர், முன்னைய அனைத்து மரபுகளையும் தாண்டி, 'சிவஞான போதம்' என்ற சைவ சித்தாந்த சாத்திரத்தை தமிழில் தந்தார். அதற்கு முன், திருவுந்தியார், திருக்களிற்றுப் படியார் ஆகிய இரு சிறு படைப்புகளை தவிர மற்ற எல்லா தத்துவ மற்றும் சமய நூல்கள் சமஸ்கிரத மொழியிலேயே எழுதப் பட்டன. அன்று இப்படி சமஸ்கிரதத்தில் எழுதுவது ஒரு நாகரிகமாக தமிழர் மத்தியில் இருந்தது. இவைகளுடன், இன்னும் ஒரு இலக்கியம், பக்தி பாடல்களை கொண்டவையாக, ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து வரத்தொடங்கின. இவையும் சைவ சித்தாந்தம் போல், மிகவும் முக்கியமானவை ஆகும். இந்த நூல்களின் தொகுப்பை பன்னிரண்டு திருமுறைகள் என அழைக்கப் படுகின்றன. இதில் பத்தாவது திருமுறையான திருமூலரின் திருமந்திரம் சிறப்பு கவனத்திற்கு உரியது ஆகும். இது மிக உயர்ந்த கருத்துக்களும், மறைபொருட்களும் கொண்ட, ஒரு சைவ ஆகமம் நூல் என்றும் போற்றப்படுகிறது. அது மட்டும் அல்ல, இது தீர்க்கதரிசி மற்றும் துறவிகளின் ஆன்மீக அனுபவங்களை கொண்டுள்ளதே. மற்றவைகளை விட மிகவும் முக்கியமானது ஆகும். இது, அறிவாளர்களை அன்றும் இன்றும் வியப்பில் ஆழ்த்துக்கிறது. இது பல புதிர்களைக் கொண்டுள்ளது. இதன் நூல் ஆசிரியர்,இந்த புதிர்களை,இன்னும் ஒரு புதிர் மூலம் தீர்க்க முயற்சிக்கிறார். உதாரணமாக, திருமூலரின் எட்டாம் தந்திரத்தில், ஒரு பாடலை பாருங்கள். எப்படி இது புதிர் மூலம் புதிரை தீர்க்கிறது என்பது உங்களுக்கு புரியும்.
 
"மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே"
 
ஒரு கோயிலுக்கு யானை வாகனம் செய்தான் ஒரு மரத்தச்சன். அதைப் சோதனையிடுவதற்க்காக இன்னொரு தச்சன் போனான். அவன் தன்னோடு தன் குழந்தையையும் கூட்டிக் கொண்டு போனார். மர யானையைப் பார்த்ததும் குழந்தை பயந்தது.மர யானையைப் சோதிப்பதற்காக அவன் அப்பாவான தச்சன் நெருங்கிய போது குழந்தை, "அப்பா யானைக்கு கிட்டப் போக வேண்டாம் அது முட்டி மோதும்" என்று கத்தியது. தச்சன் குழந்தையிடம், "இது மரப் பொம்மைதான்; முட்டாது, மோதாது" என்று சொல்லிச் சமாதானம் செய்து குழந்தையையும் யானைக்குப் பக்கத்தில் அழைத்துப் போனான். குழந்தைக்கு அந்த வாகனம் உண்மையான யானையாகவே இருந்தது. அது, மரம் என்கிற உண்மையை குழந்தையிடமிருந்து மறைத்தது. அதே சமயத்தில், அது யானை மாதிரி இருந்தும், தச்சன் பயப்படாததற்குக் காரணம், அது மரம்தான் என்கிற அறிவு அவனிடம் இருந்ததேயாகும். யானை வேறு,மரம் வேறு இல்லை என்பது போல் பரமாத்மா வேறு,உலகம் வேறு இல்லை என்று இப்படி எடுத்துக் காட்டி விளக்குகிறார் திருமூலர்.
 
என்றாலும் சைவ சித்தாந்தம் ஒரு தத்துவப் பிரிவாக உருவானது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டளவிலேயே என்று கருதப் படுகின்றது. நான் யார்? கடவுள் இருக்கிறாரா? கடவுள், உயிர், அண்டம், இவைகளின் இயல்பு என்ன ? உலகத்துடனும், கடவுளுடனும் எனது தொடர்பு என்ன? ஒருவரால் கட்டுப் படுத்த முடியாத ஒரு சம்பவம், எம் வாழ்வில் நிகழ்வதற்கு காரணம் என்ன? எந்த தத்துவ அமைப்பிலும் இப்படியான கேள்விகள் அடிக்கடி எழுகின்றன. சைவ சித்தாந்தம் இவைகளுக்கு எளிதில் நம்பத்தக்க, வாத வகையில் நேர்மையாக விடையையும் காரணத்தையும் கொடுக்கிறது. மக்களின் சுதந்திரம், விடுதலை, உரிமை போன்றவற்றில் தலையிடுவதையும், இயற்க்கைக்கு எதிராக செயல் படுவதையும் இந்த தத்துவம் ஆலோசனை கூறவில்லை. மூட நம்பிக்கையிற்கும், கண்மூடித் தனமான விசுவாசத்திற்கும் இங்கு இட மில்லை. கடவுளினதும் மதத்தினதும் பெயரால் மக்களை இது பிரிக்கவோ அல்லது கூறு செய்யவோ இல்லை. சைவ சமயத்தையும் தத்துவத்தையும் நிருவியவர்களும் அதை பிரச்சாரம் செய்பவர்களும் பரந்த நோக்குடையவர்களாகவும் மேன்மை பொருந்திய இதயம் படைத்தவர்களாகவும் இருந்தார்கள். "அன்பே சிவம்", "தென்னாடுடைய சிவனே போற்றி; என்னாட்டவர்க்கும் இறைவ போற்றி" என்று அது எங்களுக்கு போதிக்கிறது. அதாவது ஆண்டவனும் அன்பும் வேறு வேறு இல்லை. இரண்டும் ஒன்றே! இந்த முது மொழி, தமிழ் இலக்கியத்திலும் சமுதாய எண்ணங்களிலும் பொசிந்து புகுந்து எல்லா இடங்களிலும் பரவி இருப்பதுடன், இது அன்பே கடவுளை அடையும் மார்க்கம் என்ற தற்கால சிந்தனையில் இருந்து வேறுபடுகிறது. அதாவது அன்புதான் கடவுள் என்று இது போதிக்கிறது.
 
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, வாழ்வைப் பற்றிய எமது சைவ நோக்கம் உலகளாவியன. கணியன் பூங்குன்றனார் எனும் கவிஞன் புறநானூறு- 192 இல் "யாதும் ஊரே, யாவரும் கேளீர்" என்று அறைகூவல் ஒன்றை விடுகிறான். நிறைகுடமாய்த் திகழும் தன் நெஞ்சத்தைத் திறந்து காட்டி விரிகடல்சூழ் உலக முழுதும் நம் ஊரே என்றும், விழியும் ஒளியும் போல் மக்கள் எலாம் நம் உறவே என்றும் - புதிய வெளிச்சத்தால் பொல்லாத இருள் கிழித்து வேற்றுமையின் வேரறுத்துப் புரட்சி செய்தான் அந்த கவிஞன்!
 
"யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னாது என்றலும் இலமே; "மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆறாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம்" என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே."
 
அது மட்டுமா, விதிப்பயனே எல்லாம் என்றுரைத்துச் சோர்ந்து கதியற்றுக் கன்னத்தில் கைவைப்போர்தனைப் பார்த்து; "நன்மைக்கும் தீமைக்கும் காரணங்கள் நமது செயல்களேயன்றி பிறரல்ல" என்று நயம்படி உரைக்கின்றான் அந்த நற்றமிழ்ப் புலவன்! மேலும் சைவ சித்தாந்தம் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று எம்மை அது வழி காட்டுகின்றது. எமது திருக்குறள், மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) எம்மை அறிவுறுத்துகிறது. என்றாலும் அவர், வாழ்வில் நிறைவு அடைதல் பற்றி ஒன்றும் கூறவில்லை. முப்பாலையும் கடந்தவன் தானாகவே தனது வாழ்வில் நிறைவு காண்பான் என்பதால் அதை சொல்லாமலே விட்டு இருக்கலாம்? இப்படி நாலு வாழ்க்கை நிலையைத்தான் சைவம் எமக்கு போதிக்கிறது. இங்கு கருத்து அற்ற சடங்குகளுக்கும் கண்மூடித்தனமான நம்பிக்கைகளுக்கும் இடம் இல்லை. "வையத்து வாழ்வாங்கு" வாழவேண்டியதன் தேவையை வலியுறுத்துகிறது. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அன்றி வேறொன்றும் அறியேன் என்று திரும்ப திரும்ப சைவ சமயம் எதிர் ஒலிக்கிறது. "என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே" என்கிறார் இக்காலப் பகுதியில் வாழ்ந்த திருமூலர். இவரே சைவ சித்தாந்தத்தின் சாரம் என்றும் கருதப்படும் திருமந்திரம் என்னும் நூல் தந்தவர் ஆவார். இந்த நூலிலேயே சைவ சித்தாந்தம் என்ற சொற்பயன்பாடு முதல் முதலில் செய்யுள் வரி-1421 யில்
 
"கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம், முற்பத ஞான முறைமுறை நண்ணியே, சொற்பத மேவித் துரிசற்று மேலான, தற்பரங் கண்டுளோர் சைவசித்தாந்தரே."
 
என்று காணப்படுகிறது. சித்தாந்தம் என்பது சிந்தித்துக் கண்டறிந்த முடிவான உண்மை எனப்பொருள்படும். (அந்தம் - முடிவு). எனவே ஆன்மீகம் தொடர்பான பல்வேறு கருத்துக்களையும் ஆராய்ந்து சிந்தித்து முடிந்த முடிவாகக் காணப் பட்டது இந்த சைவசித்தாந்தம் ஆகும், மேலும் இதன் சிறப்பு என்ன வென்றால், இது பொதுவாக, தர்க்க ரீதியானது (Logic), அறிவியற் பூர்வமானது (Scientific), வரலாற்றுத் தொன்மையுடையது (Historic), நடைமுறைக்கு இயைந்தது (Easy to Adapt), உலகளாவியது (Universal) மற்றும் முற்போக்குச் சிந்தனைகளை உடையது (Optimistic) ஆகும்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி 04 தொடரும்
 
 
"An analysis of history of Tamil religion" - PART: 03
 
 
The Saiva Siddhanta System [சைவ சித்தாந்தம்] is the most elaborate, influential, and undoubtedly the most intrinsically valuable of all the religions of India. It is peculiarly the South Indian and the religion and philosophy of the Tamil people. Dr.Pope says: "Saivism is the old pre-historic religion of South India, essentially existing from pre-Aryan times, and holds sway over the hearts of the Tamil people. "The Saiva Siddhanta as it appears to be, is solely a product of the evolution of thought of the Tamils. It is a well known fact that the agamic [tradition or "that which has come down"] principles and the religion that is associated with are intrinsically different from the vedic thought and practices, So-much-so the two cannot be conceived to belong to the same nationality. If the latter belongs to the Aryans. the former falls to the lot of the Dravidians [Tamils]: Of the Dravidians too, the Tamils only seem to have had a culture which extends back wards even before the vedic period. Therefore the presumption that the Tamils are responsible for the production of the Saiva agamas is not without force or truth, and this presumption leads us to the logical conclusion that Saiva Siddhanta belongs to the Tamils. Hence, Since Saiva Siddhanta is belonged to be a system built up by the Tamils, One would expect a host of Tamil literature on the subject.
 
Disappointment will be starting in the face, If anyone looks for early Tamil work on philosophy & religion. The learned among the ancient Tamils of the historical period did not choose to write philosophic and religious treatises in Tamil. It was only in the thirteenth century AD, When there was a social upheaval and religious turmoil in the Tamil nadu that Meykanda Thevar broke off all traditions and appeared with his Siva Gnana Potham [சிவஞான போதம்] in Tamil, indicating among other things the culmination of the Tamilian genius in speculative philosophy; for before his time it was the fashion of the Tamils except for two minor works, thiruvunthiyar & thirukkalirrup padiyar, [திருவுந்தியார், திருக்களிற்றுப் படியார்] to write philosophic and religious works in Sanskrit language. In addition to the above, there is another class of literature of a devotional kind which are as important as the Saiva Siddhanta. These books form what are called 'The twelve Thirumurai' [திருமுறை], All belongs to fifth to seventh century AD. The 5th century AD, Thirumoolar's Thirumanthiram [திருமந்திரம்] recognized as the tenth Thirumurai, deserved special attention. It is important not because it has a high literary merit, but since it contains a record of the spiritual experiences of a seer and a saint. It has puzzled and is puzzling many an intelligent reader; for it is full of riddle and author tries to solve for us the riddle of existence by means of riddles. As an example, We are giving below a poem from his eighth thanthiram [தந்திரம்], which deals with the experience stages of soul.
 
["மரத்தை மறைத்தது மாமத யானை" ]
"Think of wood
Image of toy-elephant recedes;
Think of toy-elephant
Image of wood recedes;
Think of elements five
Thought of Param recedes
Think of Param
Thought of elements recedes."
 
If there is an elephant wooden statue, for the one who sees the beauty of the elephant carving it does not appear as a log of wood, Whereas for the one who looks at the material of the make the elephant form does not catch the attention as much as the fact that it is made of wood. Similarly all these manifestations we see in the world conceal the presence of God. Whereas the enlightened one sees the Supreme in all the things !
 
Saiva Siddhanta, as a system of philosophy, first assumes a palpable form in Tirumantiram, composed by Saint Tirumular of 5th century AD, who said: "The Lord made me, my task assigned, In sweetest Tamil His Glory to expound ./ "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே". The term Siddhantam also was first used by this great Saint / Saiva mystic (சித்தர்) Tirumular [திருமூலர்] in his great work, Tirumantiram [திருமந்திரம்] verse 1421.["தற்பரங் கண்டுளோர் சைவசித்தாந்தரே."]
 
“Having learned all that learned must be.
Having practised all yoga that have to be,
They, then, pursue the path of Jnana in graduation sure,
And so pass into the world of Formless Sound beyond;
And there, rid of all impurities,
Envision the Supreme, the Self-created;
They, forsooth, are the Saiva Siddhantis true."
 
It is stated here that the goal of Saiva Siddhantam is to get rid of all impurities. Who am I? Is there a God? What are the natures of God, Soul and the cosmos? What is my relationship with God and the worldly things? What is the reason for happenings in life over which one has no control? Such questions often arise in any philosophical system. Saiva Siddhanta gives plausible answers and explanations to them. This philosophy does not advise us to practice anything against nature or interfere with freedom and liberty of people. There is no place for superstitions and blind faith. In the name of God and religion, it does not divide or dissect people. The founders and propagators of the Saiva religion and philosophy are broad minded and noble hearted. They taught us that "God is LOVE and LOVE is God" ["அன்பே சிவம்" "ANBE SIVAM." -"தென்னாடுடைய சிவனே போற்றி; என்னாட்டவர்க்கும் இறைவ போற்றி" / "Thennadudaiya Sivane potri; Ennattavarkkum iraiva potri"] ie God and Love are not two, but identical! This saying, which permeates Tamil literary and social thought, is a revolutionary statement that departed from the contemporary opinion that love was a means to God (but not God itself, by implication).Our Saiva view of life is universal even 2000 years ago. The Tamils, as a race, have always evinced a broad outlook on life and have set a high premium for all humane virtues. They were basking in the sunshine of culture and civilisation when more than half the globe was completely enveloped in darkness and weltering in savagery. Here is a poem by Kaniyan Pungundranar, from our Sangam Tamil classic Puranaanooru, long before Julius Caesar had crossed the Rubicon in 49 B.C., which will testify to you the clarity of expression, the universality of views and a comprehensive range of vision about the very fundamentals of life, enjoyed by this ancient race in that remote past: "யாதும் ஊரே, யாவரும் கேளீர்" / “Yaathum Uure, Yaavarum Keelir” - words fit enough to be engraved in gold at the portals of the United Nations in New York today.
 
"All places are ours, all our kith and kin;
Good and evil come, not caused by others;
Pain and relief are brought likewise, not by others;
Dying is not new; nor living gave us joy;
Misery we hated out. As in the flood,
Caused by clouds that poured in torrents
On a mountain top with lightning flash.
A raft goes in the direction of the stream,
So the swarm of lives move onward
In the way of destiny. This we have discerned
From the teachings of sages strong in wisdom
So we admire not the great; nor scoff at the churl."
(Purananuru-192)
 
So, this says "every country is my own and all the people are my kinsmen." & also it is guided by the universal concepts ["ஒன்றே குலம் ஒருவனே தேவன்"/ “Onre Kulam Oruvane Thevan”] "All humanity is one family, and God is but one!". Our Thirukkural [திருக்குறள்], outlined a four fold path of positive life-affirmation based on Aram [அறத்துப்பால் / righteousness,] Porul [பொருட்பால் / wealth], Inpam [காமத்துப்பால் / pleasure] and fulfillment [வாழ்வில் நிறைவு அடைதல்] leading to a Saiva religious way of life without recourse to meaningless rituals and foolish blind faith. Though Thiruvalluar specifically not mentioned about fulfillment, He could have simply assumed that, If any one who followed the first three paths successfully will automatically fulfill his life. "வையத்துவாழ்வாங்கு" / "Vaiathu valvangu" living well the earthly life is the aim. And Saivism has echoed and re-echoed the sentiments of well-being of all ."எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே" / "ellorum inbutrirukka ninaippathuve..." Let there be prosperity for all!. In brief, Saiva Siddhantam is Logic, Scientific, Historic, Easy to Adapt, Universal as well as Optimistic.
 
 
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
 
Part 04 Will follow
345197718_544838307725737_5910948825511892557_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=3v9RvB0QO0EQ7kNvgGwvty-&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=AmgrG6_DluJzq-AEN5WpnIr&oh=00_AYBMGQdHnKoAScbkPerb5aKEm8bvEgUovCAftWLD5yN8AQ&oe=670870A0 346842731_1251406859102075_1379094224354679796_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=JplrYHzBvI4Q7kNvgFQZz8o&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=AmgrG6_DluJzq-AEN5WpnIr&oh=00_AYBMFImqjiKOSiDFjcPQh4PdfnruYLgE8ujzQl_U-yOgpg&oe=6708941E 346951957_1022732578706809_3036868978401678230_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=IOsdoDICLgoQ7kNvgE3Xnh8&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=AmgrG6_DluJzq-AEN5WpnIr&oh=00_AYDb-PG8aBN-STeU-HdWDZy8H4a802htwRdo1q8LdX8OTg&oe=67086AE0 346057022_753938746517018_280984084230114728_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=qxVd9cQRulkQ7kNvgF3awSC&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=AmgrG6_DluJzq-AEN5WpnIr&oh=00_AYAtQfjMW-7MAfCmlT7fWpiS4QanYzYgc7IvIdOkNrQ16w&oe=67088F25
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"தமிழர் சமயமும் அதன் வரலாறும் [ஒரு அலசல்]" / "An analysis of history of Tamil religion" - PART / பகுதி: 04
 
 
சைவ நாயன்மார்களில் / சித்தர்களில் திருமூலர் ஒரு முக்கியமானவர். இவர் இயற்றிய திருமந்திரம் 3027 பாடல்களைக் கொண்டுள்ளது. இதுவே சைவ சைவ சித்தாந்த தத்துவத்தின் அடிப்படையாகும். "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று இவர் தனது திருமந்திரம் 2104 இல் கூறுகிறார்.
 
"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகும்கதி யில்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்மினே"
[திருமந்திரம் 2104]
 
படைக்கப் பட்ட அனைத்து உயிர்களும் ஒரே தன்மையை உடையன என்றும் இவை அனைத்துக்கும் ஒருவனே இறைவன் என்றும் சமரசம் காணுகிறார். இது சைவ சித்தாந்தத்தின் மையக் கருத்தாக அமைகின்றது. அது மட்டும் அல்ல, சைவ சித்தாந்த நெறியின் தாரக மந்திரமாகச் திருமந்திரம் 2962 "ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும் ஒன்றுகண் டீர் உல குக்குயி ராவது" என்று கூறுகிறது. அதாவது உலக இயக்கத்துக்கு பேரொளிப் பிழம்பான ஒரு தெய்வம் உண்டு என்பதை அறிந்தீர். அந்த ஆண்டவன் உலகத்தை உயிர் போன்று இருந்து இயக்குவதையும் அறிந்தீர் என்கிறது. வேறு எந்த சமயத்திலும் இப்படி பொதுவாக சமரசமாக கூறியது உண்டா? இதனால் சைவம் எந்த வேறு பாடும் காட்டாமல் மக்களை
இணைத்தது. இதை, இந்த தத்துவத்தை எந்த முற்போக்கு சிந்தனையாளனும் / பகுத்தறிவாளனும் எந்தவித தயக்கமும் இன்றி ஏற்றுக் கொள்வான்.
 
மேலும் அன்பே கடவுள் என திருமந்திரம் போதிக்கிறது. “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்” என்பது லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) என அழைக்கப்படும் லெவ் நிக்கலாயெவிச் டால்ஸ்டாயின் (Lev Nikolayevich Tolstoy) பிரபலமான வாசகம். நம்மாலான உதவியை அன்புடன் செய்திடும் பொழுது அவர்கள் உள்ளம் நிறையும், அப்போது நன்றிப் பெருக்கினால் அவர்களின் முகத்தில் சிரிப்பு தெரியும். அந்த வகையில் அன்பின் பெருமையை உலகுக்குச் சொன்ன வாசகம் இது. அந்த அன்பின் மகத்துவத்தினை திருமூலர் ’’அன்பு சிவம் இரெண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவதொரு மறிகிலார்’’ என்று எவரும் இலகுவாக விளங்கக் கூடியதாக கூறுகிறார்.
 
அன்பும், சிவமும் வெவ்வேறு என பிரித்துப் பார்ப்பவர்களை அறிவே இல்லாதவர்கள் என்றும் அன்பும், சிவமாகிய இறை நிலையம் பிரிக்கவே முடியாதது என்றும், அன்புதான் சிவம் என ஆணித்தரமாக கூறுகிறார் திருமூலர். ஆகவே "அன்பே சிவம்", அதாவது அன்பு தான் கடவுள் என்பது, திருமூலர் விவரித்தவாறு, சைவ சமயத்தின் மையக் கருவாக உள்ளது.
 
அது மட்டும் அல்ல, 'உள்ளது அழியாது, இல்லது தோன்றாது' என்ற விஞ்ஞான அடிப்படையில் தான் சைவசித்தாந்த தத்துவம் தனது கொள்கைகளை நிலைநிறுத்துகிறது. அத்துடன் உயிர்களை யாரும் தோற்றுவிக்கவில்லை. அவை தோற்றமில் காலந்தொட்டே [அநாதியாகவே, ஆதி அற்று] இருப்பவை என்றும் சைவசித்தாந்தம் தெளிவாக விளக்குகிறது.
 
மேலும் சுவாமி தாயுமானவர் "கங்குல்பக லற்றதிருக் காட்சியர்கள் கண்டவழி, எங்கும் ஒருவழியே எந்தாய் பராபரமே", அதாவது மறப்பும் நினைப்புமாகிய கங்குல் பகலற்று எல்லா இடத்திலும் நின்திருவடிக் காட்சியே கண்டு கொண்டிருப்பர்; அத்தகையோர் யாவருங் கண்ட நன்னெறி யொன்றேயாம் என்றும், சுவாமி சுந்தரர் "அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்" என்றும், சுவாமி மாணிக்கவாசகர் "அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி" என்றும் கூறியதையும் நோக்குக. சைவ சமயம் உண்மை ஒன்று என்றும், பாதைகள் பல என்றும் ஏற்றுக் கொள்கிறது.
 
ஒவ்வொரு மதத்தின் உள்நோக்கமும் மனிதனை மீண்டும் கடவுளுடன் இணைப்பது என்பதால், ஒரு உண்மையான சைவன் எவரினதும் நம்பிக்கையிலோ அல்லது மத நடை முறையிலோ தலையிடுவதில்லை. கடவுளை அடைய எந்த ஒரு பிரத்தியேக வழிமுறையும் இல்லை என அது நம்புகிறது. எல்லா மக்களும் ஆறுதல், சமாதானம் மற்றும் விடுதலை காணும் முழுமுதற் பொருள் ஒன்றே என்கிறது. எனவே சைவன் எல்லா மத மரபுகளையும் எல்லா மதத்தவரையும் மதிக்கிறான். அது எல்லா சைவனுடனும் எல்லா அந்நியனுடனும் இணங்குகிறது. ஒவ்வொருவரும் அவர் அவர் வழியில் கடவுளை உணரலாம் என்பதால், எம் வழியே ஒரே வழி என்றோ அதுவே சிறந்த வழி என்றோ அது ஆலோசனை கூறவில்லை. ஆகவே கட்டாய மத மாற்றத்தை அது எதிர்க்கிறது.
 
போர்துக்கேயர் இலங்கை இந்தியாவில் செய்த கட்டாய மத மாற்றம் அல்லது இன்னும் சில குழுவினர் இன்றும் செய்யும் இப்படியான செயல்கள் போன்றவற்றை அது கடைப்பிடிக்க வில்லை. அப்படி செய்யுமாறு ஆலோசனையும் கூறவில்லை.
 
பரவலாக உலகம் முழுவதும் கிட்டத் தட்ட 250 மில்லியன் மக்கள் சைவ சமயத்தை பின்பற்றுகிறார்கள் என்றாலும், இதன் பாரம்பரிய தளங்கள் இந்தியாவிலேயே, குறிப்பாக தென் இந்தியாவிலேயே உள்ளன. வரலாற்று சான்றுகள் சிவா அல்லது சிவலிங்க வழிபாடு கி மு 2500 ஆண்டு நாகரிகமான சிந்து சம வெளியில் அல்லது அதற்கு முற் பட்ட காலத்தில் இருந்து தொடர்வதாக சாட்சி பகிர்கின்றன. அண்மைக் காலங்களில், சுமேரிய இலக்கியங்களில், ஆழமான மொழியியல் ஆராய்ச்சி செய்த, மலேசியாவை சேர்ந்த முனைவர் கி.லோகநாதன் [Malaysian professor, Dr. K. Loganathan], சுமேரு மொழி பழந் தமிழ் என்றும், சுமேரியன் ஆலயங்களில் சைவ ஆகம மரபு சார்ந்த காட்சிகள் அல்லது நிகழ்வுகள் நடப்பில் இருந்துள்ளன என்றும் பல சான்றுகளுடன் எடுத்துக் காட்டியுள்ளார்.
 
எனவே, இந்த சான்றுகள் அல்லது கண்டு பிடிப்புகள், எம் சைவ-தமிழ் [திராவிட] பாரம்பரியத்தை, பாபிலோனிய மற்றும் பண்டைய மத்திய கிழக்கு பண்பாட்டுடன் சமகாலத்துக் குரியதாக அல்லது அதற்கு முன்னோடியாக எடுத்துக் காட்டுகிறது. ஆகவே, எம் பண்டைய பாரம்பரியத்தையிட்டு நாம் பெருமை படுவதுடன், உலகம் முழுவதும் பரந்து வாழும் அறிஞர்களுக்கு, குறிப்பாக இலங்கை அல்லது தென் இந்தியா திராவிட அறிஞர்களுக்கு, இவ்வாறான ஆய்வில் மேலும் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
 
இது வருங்கால சைவ சந்ததிக்கு உற்சாகமளிப்பதாக இருக்கும். உலக வரலாற்றில் எம்முடைய சரியான பங்கை அல்லது அந்தஸ்த்தை நிலை நாட்ட, சுமேரு - திராவிட ஆய்வு முக்கியமாகும். மேலும் புனிதமான, பெருமைக்குரிய எம் தாய் மொழியில் நாம் பிரார்த்தனை அல்லது வழிபாடு செய்தல் எமது பிறப்புரிமையும் ஆகும். இந்த அறப்போர் பிராமணருக்கு எதிரானது அல்ல, ஆனால் பிராமணியத்துக்கு மட்டுமே எதிரானது என்பதை தெளிவாக்குவோம்.
 
பிரித்தானிய [பிரிட்டிஷ்] ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மகாத்மா காந்தி போராடி வெற்றி கொண்டவாறு, மற்றும் தென் ஆப்பிரிக்காவின் நிறவெறி அமைப்பிற்கு எதிராக நெல்சன் மண்டேலா போராடி வெற்றி கொண்டவாறு, சமஸ்கிருதம், அந்நிய பண்பாடு மற்றும் பிராமணியம் திணித்த சாதி, நிற வேறுபாடுகளுக்கும் எதிராக 1500 - 1300 ஆண்டுகளுக்கு முன் எமது நாயன்மார்கள் அப்பரும் சுந்தரரும் மற்றும் எமது மற்ற சைவ நாயன்மார்களும் தமது அறப்போரை ஆரம்பித்தார்கள். அது இன்னும், இன்றும் தொடர்கிறது. நீண்டகால பக்தி மரபும், உலகளாவிய சைவ கோட்பாடான ஒன்றே குலம் என்ற மனித சமத்துவத்தையும், அன்பே கடவுள் என்ற சைவ வாழ்வையும் நாம் இன்னும் தொடர்ந்து பாதுகாத்து வருவதும், வரலாற்றில் மிகவும் எம்முடன் சம்பந்தப்பட்டவை ஆகும்.
 
இது இயற்கைக்கு எதிராக எதையும் செயலாற்ற எமக்கு ஆலோசனை கூறவில்லை. சில மதம், சிறுவர்களை துறவிகள் ஆக்க வலியுறுத்தி மக்களை கட்டாயப் படுத்துகிறது. வேறு சில இசை, பாட்டு, நடனம் மற்றும் பிற நுண்கலைகளை, சரீர அல்லது உடல் இன்பத்தை அவை தூண்டுகிறது என்று தடுக்கிறது. அதே போல, இன்னும் சில, காட்டுக்கு போதல், குகையில் வாழ்தல், நிர்வாணமாய் இருத்தல், சொந்த பந்தங்களை வெறுத்து ஒதுக்குதல் போன்றவைகளை பெரிய உன்னத தவம் என்கிறது. ஆனால் சைவம் அப்படியான எதையும் ஆதரித்து பரிந்துரைக்கவில்லை. இது மிகவும் பரந்த கொள்கையடையது, எளிமையானது மற்றும் இது எந்த உலக இயற்கைக்கும் எதிரானதும் அல்ல.
 
என்னினும் நாம் தமிழரின் வரலாற்றை, அவனின் தோற்றுவாயை சரியாக அறிவோமாயின் இந்த பெருமை பெற்ற தமிழரின் சமயத்தையும் அதனின் தோற்றுவாயையும் கூட நாம் முழுமையாக, விரிவாக அறியலாம் என கருதுகிறேன். ஆகவே அதை முதற்கண் சுருக்கமாக அடுத்த பகுதியில் தருகிறேன்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி 05 தொடரும்
 
"An analysis of history of Tamil religion" - PART: 04
 
Among the Tamil saints / Saiva mystic (சித்தர்siddhars- "perfected ones"] Thirumoolar a great Saivite saint, Thirumoolar's treatise, Thirumanthiram is a collection of 3027 hymns. This is the Basic for the Saiva Siddhanta Philosophy. Thirumoolar has written in his thirumanthiram 2104- "ஒன்றே குலம் ஒருவனே தேவன் / There is only one Human Sect and there is only one God" ie "one caste and one God only" or oneness of God and oneness of all creeds in the whole world and again in thirumanthiram 2962- "ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும் ஒன்றுகண் டீர்உல குக்குயி ராவது / One the God for worlds all, One is He, the life of worlds all " & by this he united all Tamilians without caste discrimination. Any rationalist will accept it without any hesitation. Further, The concept of the Divine as Love or Love as God is clearly stated, In the following thirumanthiram: Here, Thirumular states that:
 
"only the ignorant will think that love and Sivan are two different things;
only few really understand that Sivan is nothing but love;
once everyone understands that Sivan is nothing but love,
everyone will become saintly."
 
Hence, "அன்பே சிவம்" “Anbe Sivam” - “Love itself is God Siva” is the central theme of Saivism as elaborated in Thirumular’s THIRUMANTHIRAM. Further St. Thayumanavar says: The path proclaimed by all saints who have had the true vision, is the same everywhere "கங்குல்பக லற்றதிருக் காட்சியர்கள் கண்டவழி, எங்கும் ஒருவழியே எந்தாய் பராபரமே." and St. Sundarar says: I am the servant of those devotees even of other lands, who have reached the feet of God. "அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்" and St. MANIVACAKAR says: "By means of the creator’s grace, one sees the Lord and is freed from sorrow. "அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி".
 
Saivites wholeheartedly respect and encourage all who believe in god. They honour the fact that truth is one, paths are many. Since the inner intent of all religions is to bind man back to god, Shaivite seek not to interfere with anyone's faith or practice. They believe that there is no exclusive path, no one way for all. Shaivites profoundly know that god Shiva is the same supreme being in whole people of all faiths, who find solace, peace, and liberation. Shaivites respect all religious traditions and the people within them. It says 'Let is have concord with our own people and concord with people who are strangers to us.' It believe that every one of us can realize god in their own way, then we also have to accept that our way to god can not be the only way or the best way.
 
Hence, It is not right to force one beliefs on another. It did not encourage or support any activities of forced conversion like, portuguese in India & Srilanka or some religious group still doing.
 
Saivism is a living and popular faith followed by more than 250 million people around the world today but its traditional bases are in India, particularly in South India. But historical fact shows that Siva & linga worship goes back to the period of Indus civilization 2500 B.C and even beyond.
 
Dr. K. Loganathan more recently, through careful linguistic research of Sumerian literature has noted a close affinity so that not only Sumerian the proto - Tamil language but also the repertoire of Saiva Agamic traditions then in vogue in the Sumerian Temples. This important discovery makes our Saiva - Tamil [Dravidian] heritage almost contemporaneous or forerunners to the Babylonian and other ancient cultures in ancient Middle East, considered the cradle of human civilization.
 
Let us all be proud of our ancient heritage and we appeal to scholars everywhere, particularly the Srilankan tamils and South Indians to continue their research into these areas which will be a source of encouragement to Saiva posterity, the world over.
 
To recover our rightful place in world history Sumero - Dravidian studies is a must. Our freedom to pray in our sacred mother tongue is our birthright. Let us make it crystal clear that our crusade is not against our Brahmin friends but it is against Brahmanism - just as our Saints Appar and Sambanthar fought against the imposition of Sanskrit and the caste system; just as Mahatma Gandhi fought and won against British Imperialism and just as Nelson Mandela fought and won against the Apartheid system in South Africa.
 
Our Saiva Saints initiated the1500 -1300 year old crusade against Sanskrit and foreign culture as well as against the degrading system of caste, colour and creed imposed by Brahminism, a crusade that is still going on even today .
 
What is historically relevant is that the long standing Tamil Bhakti tradition, and maintaining our Saiva universal concepts of human equality (onre kulam) and God is love. It does not advise us to practice anything against nature.
 
Some religions insisted and compelled people to become monks, even from the childhood. Some others, decried music, dance and other fine arts as well, saying that would tend to induce and stimulate carnal or physical pleasure and sexual passions. Going to forest, living in caves, keeping nude, hating and avoiding one’s near and dear relatives etc, were taught to be great noble austerities by some other religions and philosophies.
 
But Saiva religion does not advocate such crude modes of self modifications. We cannot find any such teachings in Saiva religion and philosophy. It is very liberal, simple and does not go against nature.
 
However, If we know the origin of Tamils or where they come from?, Then, We can also know the origin, and development of Siddhanta Philosophy or the origin & history of Tamil religion. Hence we are giving brief analysis of history of Tamils in next chapter.
 
 
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
 
Part 05 Will follow
348453704_159236650258479_7987792988170416221_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=rY54H4gT9UYQ7kNvgHlIeKb&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=A5vVIg0est5qS4G3_SO9GnL&oh=00_AYB1I55wMv7uLjtmSWzVHbZfN3pxxeZmcD4YUUb3jHPFdQ&oe=670EC7E6 348430100_262414526295371_7234424178358847425_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=ysDesLTJ-gQQ7kNvgGcN2vc&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=A5vVIg0est5qS4G3_SO9GnL&oh=00_AYBUECsVTN-FzxaTglPoBROXaGL89pccBJbMVUonZXFbDg&oe=670EC683 348571343_638982204319855_527618365668119209_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=6di_BRKmh8kQ7kNvgGjS-rp&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=A5vVIg0est5qS4G3_SO9GnL&oh=00_AYD0-koVS9sxRUIpDK9m4ni7fKFfSw-e34uqyJz1BGgnaQ&oe=670E99A1 
 
348438554_1004916267161214_2994759296528605022_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=106&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=2n02GDSs9_EQ7kNvgEcucDZ&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=A5vVIg0est5qS4G3_SO9GnL&oh=00_AYCyfkaBUVZP4vPTjGq8W1Z4YKefBcOMxLgoNssNF7VybA&oe=670EBFC5
 
 
 
 
  • நியானி changed the title to "தமிழர் சமயமும் அதன் வரலாறும் [ஒரு அலசல்]" / "An analysis of history of Tamil religion"


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி கிருபன்,  யாம் ஒன்றும் சிறுவன் இல்லையே,..விடயங்களை கிரகிக்கும் ஆற்றல் எமக்கும் உண்டு.  🤣
    • மற்றைய உறுப்பினர்களை புலிகள் தேடி தேடி வேட்டையாடியது உண்மைதான், ஆனால் குடும்பத்தோடு இரவிரவாக எங்கே எப்போது கைது செய்யப்பட்டார்களென்பது கடஞ்சா தெளிவு படுத்தினாலே உண்டு.  ஏனென்றால் ஏனைய இயக்கங்களை புலிகள் தடை செய்தபோது தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பூரண புலிகள் கட்டுப்பாட்டு பகுதியிலேயே இருந்தன, அப்படியிருக்க புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த குடும்பங்களை  எதுக்கு கைது செய்துகொண்டுபோய் விசாரிக்கணூம் எனும் சந்தேகம்தான். புலிகள் ஏனைய இயக்க உறுப்பினர்களை அழித்த விதம் ஏற்றுக்கொள்ள முடியாததுதான்,  அதுவும் கிட்டர் ரெலோ இயக்க போராளிகளை டயர் போட்டு கொளுத்தியதும் கொத்து கொத்தாக போட்டு தள்ளியதும் கொடூரத்தின் உச்சம் அதை மறுப்பதற்கில்லை. அது தவறு என்று இயக்கமே உணர்ந்தது, அதனால்தான் ஈபி ஆர் எல் எவ்வை தடை செய்தபோது அதே வேகத்திலான அழித்தொழிப்பு நடக்கவில்லையென்பதே வரலாற்று பதிவு. பின்னாட்களில் கொடூரமாக அழிக்கப்பட்ட ரெலோவைவிட, ஈபி இந்தியாவுடன் சேர்ந்து சொந்த மக்கள் போராளிகளை எப்படியெல்லாம் நரபலி எடுத்தது என்பது எவருக்கும் தெரியாத ஒன்றல்ல, அத்தோடு இவர்கள் அன்றே முற்றாக அழிக்கப்பட்டிருக்க வேண்டியவர்கள் என்று இன்றுவரை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டே வருகிறது.,அதற்கு கண்முன்னால் உள்ள உதாரணம் சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்தியா இலங்கையென்று மாறி மாறி ஒட்டி பிழைத்து பின்னாளில் புலிகளுடன் நல்லுறவாக முயற்சித்து கூட்டமைப்பில் இணைந்து பன் முகங்கள் காட்டினாலும், அந்நாளைய மண்டையன் குழு தலைவர் இவர் என்பதை எந்த மக்களும் மறப்பதற்கு தயாரில்லை. அதனால்தான் இவர்கள் அழிவுகளை அவர்கள் இயக்கத்தை சேர்ந்த ஆதரவாளர்களை  தவிர எந்த பொதுமக்களாலும் நினைவுகூரபடுவதில்லை.  புலிகள் சக இயக்கங்களை அழித்தது தமது தலைமையை பாதுகாக்கவல்ல, அவர்கள் களத்திலிருந்து அவர்களை முற்றாக அப்புறபடுத்தியதற்கு காரணம், போராடட்ம் என்பதை முற்றுமுழுதாக புலிகளுடன் சொறிவதையும், வெறும் மது சிகரெட் வாகனங்கள் என்று விலாசம் காட்டுவதையும், அனைத்துக்கும் மேலாக வெறும் பேச்சுக்கு தனியரசு என்று அமைக்க புறப்பட்டு முற்றுமுழுதாக இந்தியாவின் வருகைக்கும் அவர்கள் கையில் எம் போராட்ட சக்திகளை சரணாகதி அடைய வைக்கவும் காத்திருந்த ஒரு காரணமே. அது உண்மையென்பதை நிரூபிக்க அவர்களே பின்னாளில் இலங்கை வந்த இந்திய படைகளுடன் தேனிலவு கொண்டாடி மகிழ்ந்தார்களென்பது காலத்தின் பதிவு. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இந்த விஷயத்தில் எதற்கு என்னையும் ரஞ்சித்தையும் மென்ஷன் பண்ணினீர்கள் கோசான்? நாங்கள் இருவர் மட்டுமே புலிகள் பக்க நியாயத்தை பேசுகிறவர்களா? அலல்து புலிகள் அமைப்பும் அதன் கொள்கை விசுவாசம் போராட்ட உறுதி, தன்மானம் எல்லாம் ஓரிருவர்களுக்குரியதா? சரி , இந்த விஷயத்தில் கடஞ்சாபோல தனது கருத்தை சொல்லலாம்,  அல்லது நீங்கள் கேட்டதற்காக எனது பக்க கருத்தை நான் சொல்லலாம், ஆனால் இடையில் நின்று மறுத்துரைக்க யாருமில்லையா என்று குரலெழுப்பும் நீங்கள் எந்த பக்கத்திலிருந்து  என்று அறிய மிகுந்த ஆவல். பொதுமக்களில் ஒருவரென்று சொல்லி தப்பிவிடாதீர்கள், புலிகள் போராடியதே பொதுமக்களுக்காகதான், புலிகளுக்கெதிரான இயக்க ஆதரவாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் என்று புலிகள் எதிர்ப்பு  பொதுமக்களும் இருந்தார்கள் , இந்த இருபக்கத்தில் கோஷான் எந்த பக்கமிருந்து ஆரவாரிக்கிறீர்கள்?
    • பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள், வேர்த்த அன்ரியைப் பார்த்து அர்ச்சுனா இரங்கியது குற்றமா????? அதுவும் அர்ச்சுனா ஒரு வைத்தியர், வேர்வையைக்கண்டு எலிக்காச்சல் அறிகுறியோ என்றும் அவர் எண்ணியிருக்கலாம்.🤔
    • பைடன் தன் மகனுக்கு முற்றான ஒரு பொதுமன்னிப்பு வழங்கியதை நியாயப்படுத்தும் முகமாக இப்பொழுது இப்படி பெரிய அளவில் செய்கின்றாரோ என்றும் தோன்றுகின்றது............... திருந்தியவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதில் தப்பேதும் இல்லை. ஆனால் மன்னிப்பு என்பது அவர்களையும், அவர்களின் செயல்களையும் சட்டத்திடம் இருந்து மறைப்பதற்காக அல்லது காப்பாற்றுவதற்காக என்னும் போது நீதி செத்துவிடுகின்றது.
    • அவசரமாக வாசிக்காமல் ஆறுதலாக கிரகித்து வாசிக்கவேண்டும் @Kapithan. நான் அசாத்தை விரட்டிய இஸ்லாமியத் தீவிரவாதிகளை நல்லவர்கள் என்று சொல்லவில்லை! அவர்கள் கொடுங்கோலன் அசாத்தைவிட பரவாயில்லை. அதனால்தான் சிரிய மக்கள் அசாத்தின் வீழ்ச்சியை நாடு முழுவதும் கொண்டாடுகின்றார்கள். இஸ்லாமியத் தீவிரவாதிகள் பயங்கரவாதிகளாக மாறவும், தலிபான் போன்று ஷரியாச் சட்டங்களை  நடைமுறைப்படுத்தவும் முயலலாம். எப்படி என்று பொறுத்துத்தான் பார்க்கவேண்டும்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.