Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பான கலந்துரையாடல்கள்

Published By: VISHNU   02 OCT, 2024 | 09:26 PM

image

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் எதிர்கால செயற்திட்டம் குறித்து ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக் குழுவொன்று புதன்கிழமை (02) இலங்கைக்கு விஜயம் செய்தது.

WhatsApp_Image_2024-10-02_at_20.59.00_d2

IMF திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் 2.9 பில்லியன் டொலர் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் நான்காவது தவணையை பெறுவது பற்றி ஆராய்வதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

WhatsApp_Image_2024-10-02_at_20.59.01_57

இதன்படி,  IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் புதிய அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள  பொருளாதாரக் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

WhatsApp_Image_2024-10-02_at_20.59.01_58

சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான வேலைத்திட்டம் தொடர்பில் இதன் போது இருதரப்பும்  மீளாய்வு செய்ததோடு அதன்  எதிர்கால செயற்பாடுகளுக்கான திட்டங்கள் குறித்தும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இலங்கை தொடர்பான சாதகமான அணுகுமுறையை அதிகரித்து தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய சீர்திருத்தங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பாராட்டுத் தெரிவித்தனர்.  பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான இலங்கையின் அர்ப்பணிப்பு மற்றும் சர்வதேசத்தின் தொடர்ச்சியான ஆதரவை நோக்கி ஒரு தீர்க்கமான முன்னெடுப்பும் இங்கு கோடிட்டுக் காட்டப்பட்டது.

IMF தூதுக்குழுவில் சிரேஷ்ட தூதுக் குழு தலைவர் டொக்டர் பீட்டர் ப்ரூவர், வதிவிடப் பிரதிநிதி கலாநிதி சர்வத் ஜஹான் மற்றும் பொருளாதார நிபுணர் மானவி அபேவிக்ரம ஆகியோர் இடம்பிடித்ததோடு இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஹர்சன சூரியப்பெரும, பொருளாதாரக் கொள்கைப் பேரவையின் தலைவரும் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான டொக்டர் அனில் ஜெயந்த, பொருளாதாரக் கொள்கை தொடர்பான பேரவையின் பிரதான உறுப்பினர்களான சுனில் ஹந்துன்நெத்தி, பேராசிரியர் சீதா பண்டார ரணதுங்க, சுனில் கமகே, ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, கலாநிதி நந்தசிறி கிஹிம்பியஹெட்டி, பேராசிரியர் ஓ.ஜி.தயாரத்ன பண்டா, அமரசேன அத்துகோரள ஆகியோர் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/195351

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு வரி நிவாரணங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது – சர்வதேச நாணயநிதியத்தின் அதிகாரிகளிடம் ஜனாதிபதி

03 OCT, 2024 | 09:47 PM
image

இலங்கை அரசாங்கம் வற், வருமானவரி நிவாரணங்களை மக்களிற்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.

பொருளாதார ரீதியில் நெருக்கடிகளை சந்தித்துவரும் மக்களிற்கு வரி நிவாரணங்களை வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடனான சந்திப்பில் ஆராய்ந்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின்  நோக்கங்கள் குறித்த கொள்கையளவிலான அரசாங்கத்தின் பரந்துபட்ட உடன்பாட்டை மீள வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி இந்த நோக்கங்களை மக்களின் சுமைகளை குறைக்கும் மாற்றுவழிகள் ஊடாக அடையவேண்டிய தேவையை வலியுறுத்தியுள்ளார்.

https://www.virakesari.lk/article/195431

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி - சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் இரண்டாவது நாளாகவும் கலந்துரையாடல் 

Published By: DIGITAL DESK 3  04 OCT, 2024 | 12:49 PM

image

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ணா ஸ்ரீநிவாஸ், சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி பீற்றர் ப்ரூயர் உட்பட நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும், இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையிலான இரண்டாவது நாளாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

இந்த கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (04) ஜனாதிபதி செயலகத்தில் இன்று  நடைபெற்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீநிவாசன், (Krishna Srinivasan) சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீற்றர் ப்ரூயர் (Dr. Peter Breuer) உள்ளிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுவினர் மற்றும்  IMF பேச்சுவார்த்தைகளுக்கான நியமிக்கப்பட்ட இலங்கையின் பிரதிநிதிகள் குழுவினரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.  

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் இலக்குகளை அடைந்துகொள்ளும் அதேநேரம், மக்கள் சுமைகளை குறைப்பதற்கான மாற்று வழியில் செல்வதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் நோக்கமாகும். 

https://www.virakesari.lk/article/195461

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடின முயற்சிகளின் ஊடாக வென்றெடுக்கப்பட்ட அடைவுகளை பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை இலங்கை ஏற்றுக்கொண்டது; மறுசீரமைப்புக்களைத் தொடர்வதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதையிட்டு மகிழ்ச்சி - ஐ.எம்.எப் 

05 OCT, 2024 | 04:35 PM
image

(நா.தனுஜா) 

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்சிப் பாதையில் கொண்டுசெல்வதற்கு உதவிய, மிகக் கடினமான முயற்சிகளின் ஊடாக வென்றெடுக்கப்பட்ட அடைவுகளைத் தொடர்ந்து பாதுகாப்பதுடன், அவற்றை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசெல்லவேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய, பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன், மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்வதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதனையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்திருக்கிறார்.  

நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், கடந்த 21ஆம் திகதி நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பதாக சுமார் ஒரு மாதகாலம் நாடளாவிய ரீதியில் சகல வேட்பாளர்களாலும் முன்னெடுக்கப்பட்ட பிரசாரங்களின் பிரதான பேசுபொருளாக பொருளாதார மீட்சியும், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளுமே காணப்பட்டன.

இவ்வாறானதொரு பின்னணியில் நாட்டின் சமகால பொருளாதார மேம்பாடுகள் மற்றும் விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்றிட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுவரும் பொருளாதார மறுசீரமைப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடனும், அவர் தலைமையிலான புதிய அரசாங்கத்துடனும் பேச்சுவார்த்தைகளை நடாத்தும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய, பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தலைமையில் நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்றிட்டப் பிரதானி பீற்றர் ப்ரூவர் முதலான அதிகாரிகள் குழுவினர் கடந்த புதன்கிழமை (2) நாட்டை வந்தடைந்தனர்.

இதன்போது அவர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் புதிய அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் உள்ளடங்கலாக பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தனர்.

இச்சந்திப்புக்களின் முடிவில் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன், 'இலங்கை பொருளாதாரம் முகங்கொடுத்துவரும் பொருளாதார மற்றும் நிதியியல் சவால்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடனும், அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர் குழுவினருடனும் செயற்றிறன்மிக்க பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தோம். இதன்போது 2022ஆம் ஆண்டு மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் வீழ்ந்ததன் பின்னர், நாட்டை மீண்டும் பொருளாதார மீட்சிப்பாதையில் கொண்டுசெல்வதற்கு உதவிய, மிகக் கடினமான முயற்சிகளின் ஊடாக வென்றெடுக்கப்பட்ட அடைவுகளைத் தொடர்ந்து பாதுகாப்பதுடன், அவற்றை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசெல்லவேண்டியதன் அவசியத்தை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டோம்' என அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

அத்தோடு, மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்வதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாகவும், இலங்கை அதன் பொருளாதார மறுசீரமைப்பு இலக்குகளை அடைந்துகொள்வதற்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் தயாராக இருப்பதாகவும் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்திருக்கிறார்.

மேலும், 'சர்வதேச நாணய நிதியத்தினால் அனுசரணை அளிக்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்றிட்டம் தொடர்பான மூன்றாம் கட்ட மீளாய்வுக்கான திகதியொன்றை நிர்ணயிப்பதற்குரிய நடவடிக்கைகளை சர்வதேச நாணய நிதியமும் இலங்கையின் பொருளாதாரக் குழுவும் இணைந்து முன்னெடுக்கும்' எனவும் அவர் அறிவித்திருக்கிறார். 

https://www.virakesari.lk/article/195548

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.