Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)
உண்மைக் கதை: "நிழலாக ஆடும் நினைவுகள்"
[எங்கள் சிறிய அண்ணாவின் மகளின் பிறந்தநாள் நினைவு இன்று, 03 அக்டோபர்]
 
 
இலங்கை தீவின், தலைநகரம் கொழும்பில், பொறளை என்ற இடத்தில் இருந்து நடக்கக் கூடிய தூரத்தில் அமைந்து இருந்த மன்னிங் டவுன் அரச விடுதியில் அண்ணா குடும்பம் இருந்த காலம் அது. நானும் பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வு எழுதி விட்டு, மறுமொழி வந்து, பின் வேலை எடுக்கும் வரை, அவர்களுடன் இருந்தேன்.
 
அந்த காலத்தில் தான் அண்ணாவின் கடைசி மகளாக 'கலைமதி' பிறந்தார். பிறந்ததில் இருந்து அவருடனே நான் இருப்பதாலும், மற்றும் அவரை தூக்கி திரிவதாலும், விளையாடுவதாலும், அவர் என்னுடன் மிகவும் பிரியமாகவும் ஒட்டியும் இருந்தார். அவர் என் அறையிலேயே என்னுடனே படுப்பார். நானும் அவருக்கு கதைகள் எல்லாம் சொல்லுவேன். இன்னும் என் மனதில் மறக்க முடியாமல், என் மேல் அவர் வைத்த அன்புக்கு அடையாளமாக நான் பலவற்றை சொல்லலாம் என்றாலும், நான் ஒன்றை மட்டும் இங்கே சொல்கிறேன்.
 
நான் உடுப்புகளை, அதிகமாக வார இறுதியில் தோய்த்து [கழுவி] நூல் கொடியில் காய்வதற்காக போடுவது வழமை. என்றாலும் இது வார இறுதி என்பதால், சிலவேளை வெளியே நடக்கப் போய்விடுவேன். அப்படியான ஒரு நாள் திடீரென மழை தூர தொடங்கிவிட்டது. கலைமதி, என் உடுப்புகளுடன், அவர்களின் உடுப்புகளும் ஈரமாவதை கண்டார். அவருக்கு ஒரே பதற்றம். என்ன செய்வது என்று புரியவில்லை. அவருக்கு இரண்டு அல்லது இரண்டரை வயது இருக்கும். தாயிடம் ஓடினார். மழையில் என் உடுப்புக்கள் நனைவதை சுட்டிக்காட்டி, அதை முதலில் எடுக்கும் படி அடம் பிடித்தார். இன்றும், அவரை பற்றி எண்ணும் பொழுது, நிழலாக ஆடும் நினைவுகளாக அண்ணி என்னிடம் அதை சொல்லுவார்.
 
எனக்கும் மறுமொழி வந்து, வேலைகளுக்கு விண்ணப்பித்து, முதல் நிரந்தர வேலையும் இலங்கை கடற்தொழில் பயிற்சி நிலையத்தில், எந்திரவியலாளர் விரிவுரையாளராக கொழும்பிலேயே கிடைத்தது. ஆகவே அண்ணாவின் வீட்டிலேயே தொடர்ந்து தங்கினேன்.
 
இப்ப வேலை முடிந்து, வீடுவந்தால் அவருடனும், மற்றும் அண்ணாவின் மூத்த பிள்ளைகளுடனுமே பொழுது போக்கு. நேரம் போவதே தெரியாது. அவருக்கு மூன்று வயது தாண்ட, எனக்கும் அரசாங்க கல்வி உதவி தொகை [Scholarship] கிடைத்து ஒரு ஆண்டு மேல் படிப்பிற்கு ஜப்பான் செல்ல வேண்டி வந்தது. அவரை விட்டு பிரிய மனமே இல்லை. அப்படியே அவருக்கும். என்றாலும், நான் விளையாட்டு சாமான்கள் எல்லாம் வாங்கி வர விமானத்தில் போவதாக கூறி, ஒருவாறு, அவரும் கட்டி பிடித்து முத்தம் தந்து விடை தந்தார்.
 
அப்பொழுது நான் யோசிக்கவில்லை, இது தான் அவரின் கடைசி முத்தம் என்று. இன்றும் என் மனதில், நிழலாக ஆடும் நினைவுகளாக அது இன்றுவரை ஆடிக்கொண்டுதான் இருக்கிறது.
 
நானும் எல்லோரிடமும் விடைபெற்று, முதல் முறையாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமனநிலையத்தின் ஊடாக பயணம் செய்தேன். என்றாலும் விமானத்தில் அயர்ந்து தூங்கும் பொழுது எல்லாம் அவரின் விடை தந்த முத்தம் தான் நிழலாக ஆடும்!!
 
கலித்தொகை 80 இந்த சில அடிகள் என் ஞாபகத்துக்கு வந்தன.
 
"கிளர் மணி ஆர்ப்ப ஆர்ப்பச் சாஅய்ச் சாஅய்ச் செல்லும்
தளர் நடை காண்டல் இனிது!"
"ஐய! காமரு நோக்கினை, 'அத்தத்தா' என்னும் நின்
தே மொழி கேட்டல் இனிது!"
"ஐய! 'திங்கட் குழவி, வருக!' என, யான் நின்னை
அம்புலி காட்டல் இனிது!"
 
ஆமாம் நீ அணிந்திருக்கும் ஒளி திகழும் மணியொலி கேட்கும்படிச் சாய்ந்து சாய்ந்து தளர் நடை போட்டு நீ செல்வதைக் காணும்போது எனக்கு இனிமையாக இருக்கிறது. என் ஐயனே! அன்பு ததும்ப நீ பார்க்கிறாய். "அத்தா அத்தா" என்று அழைக்கிறாய். இந்தத் தேன் மொழியைக் கேட்க இன்பமாக இருக்கிறது. என் ஐயனே வருக! பிறை நிலாவே என் ஐயனிடம் வருக! என்று நான் அழைத்து உனக்கு அம்புலி காட்டுவது இனிமையாக இருக்கிறது.
 
என் செல்லக் குழந்தை கலைமதியை வர்ணிக்க கலித்தொகை போதாது! என்றாலும் அவளின் குறு குறு நடை நடந்து மழலை மொழி பேசி இதயம் கவரும் அழகும் அம்புலிகாட்டி நிலா சோறு ஊட்டிய நினைவுகளும் என் மனதில் இன்னும் புதைந்து இருப்பதை காண்கிறேன்!
 
"காற்று வீசுது காகம் பறக்குது
காலைப் பொழுது இருளாய் மாறுது
காடைக் கோழி எட்டிப் பார்க்குது
காவி வருகிறேன் அன்னம் உனக்கு!"
 
என நிலாவைக் காட்டி கதை சொல்லி, சோறு தீத்தியது
 
"சின்ன பூவே சிங்கார பூவே
சிஞ்சிதம் காதில் தேனாய் விழ
சித்திரம் பேசும் கண்ணும் ஓய
சிந்தை நிறுத்தி இமைகள் மூடாயோ ?"
 
என துயிலவைத்தது எல்லாம் எப்படி மறக்கமுடியும்?
 
எதோ ஜப்பானில் படிப்புடன் காலம் உருள, ஒரு ஆண்டு நிறைவுற்றதே தெரியாமல் போய்விட்டது. அவசரம் அவசரமாக அவளுக்கு சில மின்னணு பொருட்களும் பொம்மைகளும், உடுப்புகளும் மற்றவர்களுக்கும் சேர்த்து வாங்கிக்கொண்டு டோக்கியோவில் இருந்து இலங்கை திரும்பினேன். கட்டாயம் இன்னும் ஒரு பெரிய முத்தம் கிடைக்கும் என்ற பெருமிதத்தில்!
 
ஆனால் கொழும்பு விமான நிலையத்தில் என்னை அக்கா குடும்பமே வரவேற்றது. அவர்கள் கண்கள் ஈரமாக இருந்தது. அக்கா மெல்ல என் காதில், அண்ணா குடும்பம், ஒரு திருமண கொண்டாட்டத்திற்காக இடைக்காட்டுக்கு போனதாகவும், நேற்று அங்கு எல்லோரும் கல்யாண விழாவுக்கு தேவையான முன் ஏற்பாட்டு அமளியில் இருக்கும் பொழுது, அது மாரி காலம் என்பதால் கிணறு முட்டி இருந்ததாகவும், கலைமதி அவர்களிடம் இருந்து நழுவி, தனிய வீட்டிற்கு பின் பக்கம் போய், தவறுதலாக யாரும் காணாமல் கிணற்றில் விழுந்து இறந்து விட்டார் என கூறினார்.
 
எனக்கு, என் மனதில் இடி முழங்கிய மாதிரி இருந்தது. அந்த கடைசி முத்தம், அவளின் குறும்புகள், அவளின் மழலை பேச்சு, என் நெஞ்சில் படுக்கும் அழகு, சித்தப்பா என்று பின்னால் ஓடிவரும் காட்சி .... எல்லாமே நிழலாக ஒன்றின் பின் ஒன்றாக வந்தவண்ணம் இருந்தன. அந்த நாலுவயது குழந்தை என்னை மீண்டும் காணாமலே கண் மூடிவிட்டது!!
 
"மஞ்சள் முகத்தாளே குதலை மொழியாளே
மடியில் தவழ்ந்து நெஞ்சை கவர்ந்தவளே
மவுனமாய் இன்று உறங்குவது ஏன் ?
மகிழ்வு தரும் முத்தங்கள் எங்கே ?"
"மயக்கம் தரும் அழகு அழிந்ததோ ?
மனதை கவரும் குறும்பு மறைந்ததோ ?
மரண தேவதைக்கு இரக்கம் இல்லையோ?
மதியென்று இனி யாரை கூப்பிடுவேன்!"
 
முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டியவளே, எல்லாமே இனி நிழலாக ஆடும் நினைவுகள் தானோ ??
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
286684424_10221152336180788_3015205952918991556_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=Y9stmfy0b94Q7kNvgF2Vi5V&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=APp4rHMxHuJng2UomxegoCc&oh=00_AYAMJ3-EdGJzjxh8DgYUPY9UzLrUdvi6J6OtOAk4w_JjLA&oe=67040224  286265802_10221152337100811_2182669857911808837_n.jpg?stp=dst-jpg_p180x540&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=OAbDfsAOBAsQ7kNvgH8hPuJ&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=APp4rHMxHuJng2UomxegoCc&oh=00_AYC3lv7FB0uBVs1K6EsbThZfXAUwV0IecoPN9i3WGXOamQ&oe=670407EF  286655338_10221152336740802_5822306402765073063_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=_LsinvxeJfgQ7kNvgHnTJqt&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=APp4rHMxHuJng2UomxegoCc&oh=00_AYDjCyCzI-cbzaTwbY2vv7DVsnFkP6On3Rb3nCCSDB-T0Q&oe=67042814 
 
No photo description available.
 
 
Edited by kandiah Thillaivinayagalingam
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மனது கனத்துப் போனது.

  • Like 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.