Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
அந்தாதிக் கவிதை / "உயிரோடு இணைந்தவளே!"
 
 
"உயிரோடு இணைந்தவளே உடலோடு கலந்தவளே!
கலந்த காதலால் இதயத்தில் மலர்ந்தவளே!
மலர்ந்து மயக்கி இன்பம் கொட்டியவளே!
கொட்டிய தேளிலும் கொடுமை கூடியவளே!
 
 
கூடி மகிழ்ந்து பரவசம் தருபவளே!
தருவதும் எடுப்பதும் உனது உரிமையே!
 
 
உரிமை கொண்டு நெஞ்சில் உயர்ந்தவளே!
உயர்ந்த எண்ணங்களால் சிந்தனையைத் தூண்டியவளே!
தூண்டிய உணர்வுகள் எல்லையைத் தாண்டியும்
தாண்டாமல் பிரியாமல் இணைந்தாளே உயிரோடு!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
South Indian Couple PNG, Vector, PSD ...  Dall-E 3 : r/IndianArtAI


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.